Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தைக்கட்டும் தைக்கட்டும், நன்றாக தைச்சுக் கிழிக்கட்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

சுமதி பாஸாகி விட்டாள்  போல உள்ளது…!

தொடருங்கள் சுவியர்…!

 

Suvar llatha Chithirangal - 1979 - Sudhakar - Sumathi - Movie in Part 10/14  - YouTube

சுவியர் எங்களுக்கும் சேர்த்து  தைக்கிறார்.....தைக்கட்டும்....தைக்கட்டும் :beaming_face_with_smiling_eyes:

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று  தான் முழுமையாக வாசிக்க  நேரம்  கிடைத்தது

உங்கள்  எழுத்துக்களை  புகழ்வது போற்றுவதென்பது  எம்மால் முடியாதது

நன்றயண்ணா

(கபே பாரத்  விளம்பரத்துக்கும் நன்றிகள்)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இவளவும் நடந்திருக்கு.சுமதியின் அனுபவம் எனக்கும் நடந்திருக்கு.கதைக்கு வாழ்த்துக்கள் சுவியர்.அது சரி அந்த புரியானி விருந்து என்ன என்று ஒரே குழப்பமாக இருக்கு.🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

அட இவளவும் நடந்திருக்கு.சுமதியின் அனுபவம் எனக்கும் நடந்திருக்கு.கதைக்கு வாழ்த்துக்கள் சுவியர்.அது சரி அந்த புரியானி விருந்து என்ன என்று ஒரே குழப்பமாக இருக்கு.🤣

என்னமா வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் அப்பா.🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

அட இவளவும் நடந்திருக்கு.சுமதியின் அனுபவம் எனக்கும் நடந்திருக்கு.கதைக்கு வாழ்த்துக்கள் சுவியர்.அது சரி அந்த புரியானி விருந்து என்ன என்று ஒரே குழப்பமாக இருக்கு.🤣

                                                             சுவைப்பிரியன்

உங்களின் அவதாரைப் பார்க்கும்போதே எனக்குத் தெரியும் நீங்கள் அதில்தான் குழம்புவீர்கள் என்று......!  😂

7 hours ago, விசுகு said:

இன்று  தான் முழுமையாக வாசிக்க  நேரம்  கிடைத்தது

உங்கள்  எழுத்துக்களை  புகழ்வது போற்றுவதென்பது  எம்மால் முடியாதது

நன்றயண்ணா

(கபே பாரத்  விளம்பரத்துக்கும் நன்றிகள்)

சே....சே.....இதுக்கெல்லாம் நன்றி அதிகம் ........ காணும்போது ஒரு கபேயும் சிறு உரையாடலும் போதும்......!  👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

  

சே....சே.....இதுக்கெல்லாம் நன்றி அதிகம் ........ காணும்போது ஒரு கபேயும் சிறு உரையாடலும் போதும்......!  👍

கதவு திறந்தே இருக்கிறது 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........( 11).

 

                           அப்போது அங்கு கபிரியேல் வருகிறான். என்ன நீங்கள் இருவரும் சிரிக்கிறீர்கள், சொன்னால் நானும் சிரிப்பேன். மிருதுளா அவனிடம் சீ .....போடா அதெல்லாம் லேடீஸ் மேட்டர் என்கிறான். அவனும் பதிலுக்கு அவளிடம் நீ போடி என்று சொல்லி விட்டு அவர்களை பார்த்து அங்கு ஒரு லூசு லூசு என்று வந்திருக்கு வந்து பாருங்கோ என்று சொல்லி மேலே போகிறான்.இருவரும் வரும்போது சுமதி மிருதுளாவிடம் என்னடி இவன் போடி என்கிறான், லூசு என்கிறான் என்று கேட்க, அதொன்றுமில்லை மேடம் ரேணுகாதான் அவனுக்கு தமிழ் டீச்சர்.தமிழில் இருக்கும் தூய தமிழ் வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி.முகபாவத்துடன் சொல்லுவான்.இப்ப நிறைய தமிழும் கதைக்கிறான். பிரேமாவுடன் பிரெஞ் கதைப்பதைவிட தான் தமிழ் படிச்சு தமிழில் கதைப்பது பெட்டராம். சுமதி சிரித்துக் கொண்டே வருகிறாள்.

                                  மேலே ஒரு வாடிக்கையாளர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் ஓ......நீங்களா வாங்கோ என்ன விடயம் ....அது வந்து சுமதி நாளைக்கு மாலை ஒரு பிறந்தநாள் விழாவுக்கு போக வேண்டும், இந்த ப்ளவுசை கொஞ்சம் லூசாக்கித் தரவேண்டும், அத்துடன் இந்த சாறிக்கு ஏற்றதுபோல் ஒரு உள் பாவாடையும் தைத்துத் தரவேண்டும். சரியென்று மிருதுளா அவரைக் கூட்டிச்சென்று அளவுகள் எடுத்து விட்டு "நாளை மதியத்துக்கு பின் வாங்கோ" என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். பின் சுமதியிடம் இது இரு மாதங்களுக்கு முன் நாங்கள் தைத்துக் கொடுத்த சட்டைதான் மேடம். இப்போது கொஞ்சம் சதை போட்டு குண்டாகி இருக்கிறாள். நான் அப்பவே உள்ளே சிறிது துணி கூட விட்டுத்தான் தைத்தது.கெதியா சரிபண்ணிடலாம் என்கிறாள். அப்ப இவன் லூசு என்று சொன்னது இந்த லூசைத்தான் போல. இதையாடா லூசு என்று சொன்னனி என்று அவனிடம் கேட்க அவனும்  ம்....என்று தலையாட்டுகிறான்.

                                                      கபிரியேலையும் கூட்டிக்கொண்டு தனது அறைக்கு வந்த சுமதி அவனிடம் கபிரியேல் இந்த வாரத்துடன் உனது வேலை ஒப்பந்தம் முடிவடைகிறது. இது உனது புது ஒப்பந்தம் படித்துப் பார்த்துவிட்டு உன் அபிப்பிராயத்தை சொல்லு. கடிதத்தை வாங்கிப் படித்த கபிரியேல் தனது வேலை ஒப்பந்தம் மேலும் ஆறு மாதங்கள் நீட்டித்திருப்பதை பார்த்து விட்டு சுமதியிடம் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை சுமதி ஆனால் நான் சமீபத்தில் இரண்டு லொறிக்  கம்பெனிகளில் சாரதிக்கான நேர்காணலுக்குப் போயிருந்தேன். அவர்கள் எந்நேரத்திலும் எனக்கு பதில் அனுப்புவார்கள் என்று காத்திருக்கிறேன்.அப்படி அழைப்பு வந்தால் நான் உங்களிடம் சொல்லி விட்டு அங்கு செல்லலாம் என்றிருக்கிறேன்.

--- ஏன் கபிரியேல் உனக்கு இந்த வேலை பிடிக்கவில்லையா, அல்லது சம்பளம் குறைவு என்று நினைக்கிறாயா, அல்லது நிரந்தரமான வேலை ஒப்பந்தம் போட்டுத் தரவா என்று சொல்கிறாள்.

--- ஓ......நோ .....அப்படியொன்றும் இல்லை மேடம். லாரிகள் ஓட்டுவதென்பது ஒரு ஜாலியான வேலை. 1000 / 1500 கி.மீ. லாரி ஒட்டிக் கொண்டு போவதும் வழியில் ஏனைய லாரி சாரதிகளுடன் வயர்லெஸ்சில் உரையாடிக் கொண்டு செல்வதும் இடத்துக்கு இடம் வித விதமான உணவுகள் தங்கும் ஹோட்டல்கள் எல்லாம் சொல்லி வேல இல்லை சுமதி, அந்த சுகம் அனுபவிக்கனும் அப்ப புரியும். கதைக்கும் போதே கனவுகளில் மிதக்கிறான்.பிரெஞ் இளைஞன் அல்லவா அவனது உணர்வுகள் அவளுக்குப் புரிகிறது.

--- சரி கபிரியேல் நீ விரும்பியதுபோல் எப்போது வேண்டுமானாலும் போகலாம், வரலாம். ஒரு நல்ல நண்பர்களாக உன்னுடன் வேலை செய்யும் இந்த நாட்கள் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை.இருவரும் படியேறி மேலே கடைக்கு வருகிறார்கள்.

                                                            சரி .....மிருதுளா நாளைக்கு நீ எட்டரைக்கு வந்து கடையை திறந்து விடு. அந்நேரம் கதீஜாவும் வந்து விடுவாள். இருவருமாக கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள். வழக்கம்போல் 13:00 மணிக்கு கபிரியேல் வரட்டும் சரியா.....!

--- சரி மேடம். உங்களுக்கு மிக்க நன்றி.

--- ம்....இன்னும் ஒன்று, இப்ப வேலைகள் நிறைய வருகின்றன, கதீஜாவும் இருப்பதால் ஆபிரிக்கன்ஸ் அல்ஜீரியன்ஸ் ஓடர்களும் கொஞ்சம் வரலாம் அதனால் நான் வேறு ஆட்களை எடுக்கும் வரை நீயும் அவளும் விரும்பினால் வேலை அதிகம் இருக்கும் நாட்களில் கூடுதலாக இரண்டு மணித்தியாலங்கள் வேலை செய்து விட்டுப் போகலாம். அதற்குரிய பணத்தை நான் தனியாக உங்களின் கைகளில் தந்து விடுகிறேன்.

--- சரி மேடம்.

 

                                                 ஆறுமாதங்கள் பின் கடை ஒரு பிரச்சனையும் இல்லாமல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கு. கபிரியேல் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு ஒரு டிரான்ஸ்போர்ட் கொம்பனியில் வேலை எடுத்துக் கொண்டு போய் விட்டான். கடைக்கு மேலும் ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு ஆட்களை மூன்று மாத ஒப்பந்தத்தில் வேலைக்கு எடுத்திருந்தார்கள். கதீஜாவுக்கு கீழ் அறையில் ஒரு பக்கம் ஒதுக்கிக் கொடுத்திருக்கு. அங்கு அவள்  ஆபிரிக்கன் பெண்களுக்கு தலை அலங்காரம் ஒப்பனைகள் செய்வதுடன் மேலே கடையில் குறிப்பாக ஆபிரிக்கன் ஆடைகள் விற்கும் பகுதியிலும்  அவர்களுக்குரிய ஸ்பெஷல் திருமண ஆடைகள் போன்றவை தைத்துக் கொடுப்பதிலும் தகுதி பெற்றவளாக சிறப்பாக வேலை செய்து கொண்டு இருக்கிறாள். மேலும் சிறுமிகளுக்கும் குமரிகளுக்கும்  தலை பின்னுவதில் கிடைக்கும் பணத்தை கதீஜாவே எடுத்துக் கொள்ளுமாறு சுமதி சொல்லியிருந்ததால் அவளுக்கு அந்தப் பணத்துடன் சுமதி தரும் சம்பளப்பணமும் கிடைப்பதால் மிகுந்த மகிழ்ச்சி.

 

                                                          அன்று "லக்கி டெய்லரிங் & டெக்ஸ்டைல்ஸ்"  மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கு. அப்போது அங்கு சேகர் வருகிறான்.சுமதி அவனை வரவேற்று என்ன சேகர் இந்தப் பக்கம், நீ சும்மா வரமாட்டாயே என்கிறாள்.

--- அதொன்றுமில்லை அக்கா, வாரமாதம் ஒரு புது சீட்டு ஒன்று தொடங்கிறன். இந்தமுறை தொகையும் கொஞ்சம் அதிகம். அதுதான் ஒரு சீட்டுக்கு உங்களையும் சேர்க்கலாம் என்று சொல்ல ...... சுமதிக்கு "இனிமேல் நீ சீட்டுகள் போடக் கூடாது என்று சுரேந்தர் சொன்னது ஞாபகத்தில் வந்து போகுது. ஆனாலும் மனம் இந்த சீட்டைப் போட்டு கழிவு குறைவாய் வரும்போது எடுத்தால் " லா கூரினேவிலும்" (தமிழர்களும், ஆபிரிக்கங்களும் செறிந்து வாழும் ஒரு இடம்) ஒரு தையல் கடை திறக்கலாம்   என்று கணக்குப் போடுது. சரி சேகர் என்னையும் ஒரு சீட்டுக்கு சேர்த்துக்கொள் என்று சொல்கிறாள். சேகர் போகிறான்.

 ---    மனம்  சொல்லுது,    நீ பாட்டுக்கு சீட்டுக்கு சொல்லி விட்டாய், நாளைக்கு சுரேந்தர் கேடடால் என்ன செய்வாய்.

--- நீ சும்மா இரு, எனக்கெல்லாம் தெரியும். அந்தாளுக்கு  சமயம் பார்த்து சூடாக ஒரு பிரியாணி போட்டு விட்டால் எல்லாம் சரியாயிடும்.........!

                                                            சுபம்.

 

யாவும் கற்பனை.....!

யாழ் அகவை 25 க்காக ........!

ஆக்கம் சுவி........!  🙏  🙏  🙏

  • Like 7
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தையல்  கடை தைப்பதில்   தொடங்கி  மேக் அப்     ஹேர்ஸ்டைல் என்று விரிவடைந்துள்ளது. சுமதி காட்டில நல்ல மழைதான்.   இரண்டாவது சீட்டு எடுத்து அபிரிக்கன்ஸ் தொகுதியில்  கடையோ   ? அது கள்ளர் கூட்ட்மெல்லோ ? நல்லா மட்டுப்படப்போகிறா ?  "சீட்டுக்கு கட்டி வாழ்ந்தவர்கள் சீரழிந்துபோனவர்கள்" என்று தான் கேள்வி ...என்றாலும் கதாநாயகி வலு கெட்டிக் காரி .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சதைய நச்த்திரத்துக்கு நல்ல காலம் போல.நம்பி பெருப்பிக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2023 at 04:33, suvy said:

நான் கடை திறந்தது உங்களுக்கு தெரியும்தானே,அங்கு நாலுபேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் வேலைக்கு எந்தெந்த நேரம் வருகினம், எப்பப்ப வெளியே போக்கினம் என்றெல்லாம் ஒரு இரண்டு கிழமை வேவு பார்த்து எனக்கு அப்பப்ப தெரிவிக்க வேண்டும். நீங்கள் கடைப்பக்கம் வந்தாலும் என்னை தெரிந்தமாதிரி  காட்டிக் கொள்ளக் கூடாது. சரியா ....!

துப்பறியும் வேலையும் நடக்குதோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா நானும் பயந்துபோய் இருந்தனான்! ஏழரை அலுப்புக் குடுக்குமோ என்று, சுபமாய் கதை முடிந்ததில் மகிழ்ச்சி. ஆனாலும் சீட்டுத் தொடர்வது தான் ஏழரையோ?

45 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்ப சதைய நச்த்திரத்துக்கு நல்ல காலம் போல.நம்பி பெருப்பிக்கலாம்.

என்னத்தை பெருப்பிக்கப் போறியள் என்று சொன்னால் ....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம முதலாளிகள் எப்படி கடை திறக்கினம்

எப்படி  நடாத்தினம்

என்பது  தொடக்கம் சீட்டுக்காசு  வரை அலசி  ஆராய்ந்ததை  பார்த்தால்

நன்றாக அடி  வாங்கியிருப்பீர்கள்  போல...☺️

நானும் ஒருமுறை இப்படி  சீட்டு  ஒன்று  போட்டு

அந்தாள்  காசு  தரும்போது குப்பை போட்டெறியும்  சாக்கில் கட்டி தந்தது

இதைக்கொண்டு போய் நான் என்ன  செய்ய என்று  விட்டு

அன்றுடன் விட்ட சீட்டுத்தான்  தொடுவதே இல்லை

இப்பவும்  சீட்டுக்காறன் சொல்லுவார்

காசைக்கொண்டு போய் என்ன செய்ய என்று கேட்ட முதலாவது  ஆளும் கடைசி  ஆளும்  நான் தான் என்று.

நன்றியண்ணா கதைக்கும் நேரத்துக்கும்

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விசுகு said:
20 hours ago, suvy said:

சே....சே.....இதுக்கெல்லாம் நன்றி அதிகம் ........ காணும்போது ஒரு கபேயும் சிறு உரையாடலும் போதும்......!  👍

கதவு திறந்தே இருக்கிறது

 ஓஓ கடைச் சொந்தக்காரன் நீங்களோ?

8 hours ago, suvy said:

கபிரியேல் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு ஒரு டிரான்ஸ்போர்ட் கொம்பனியில் வேலை எடுத்துக் கொண்டு போய் விட்டான்.

கபிரியேலை வேற மாதிரி கணக்கு போட்டேன்தப்பித்தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி தொடக்கத்திலிருந்து கடைசிவரை எங்குமே தொய்வில்லாமல் எழுதியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

 ஓஓ கடைச் சொந்தக்காரன் நீங்களோ?

கபிரியேலை வேற மாதிரி கணக்கு போட்டேன்தப்பித்தான்.

என் பெறாமகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

என் பெறாமகன்

தகவலுக்கு நன்றி விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீட்டும் கூட ஒரு போதை தான் போல் உள்ளது. கதை கடைசி வரையும் தொய்வே இல்லாமல் சென்றது…! இந்தச் சுடச் சுட பிரியாணி இல்லாவிட்டால், உலகமே இயங்காது போல…!

அவனின்றி ஒரு அணுவும் அசையாது…!

அவளின்றி ஒரு அவனும் அசையாது..!

நன்றி, சுவியர்…!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

சுபம்.

 

யாவும் கற்பனை.....!

யாழ் அகவை 25 க்காக ........!

ஆக்கம் சுவி........!  🙏  🙏  🙏

என்ன கெதியாய் முடிச்சிட்டியள்..... :beaming_face_with_smiling_eyes:  இன்னும் பக்கத்து கடைக்காரர்,பக்கத்து வீட்டுக்காரரையும் நைசாய் இழுத்து வைச்சு தைச்சிருக்கலாம்.:rolling_on_the_floor_laughing:

ஒரு அம்சமான கதைக்கு நன்றி. :folded_hands:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா கதையை  முழு மூச்சாக வாசித்து முடித்தேன்...இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்.
எனக்கு ஒரு சந்தேகம் பிரான்சில் தமிழ் உணவங்களில் தமிழ் பெண்கள் தனியாய் போய் சாப்பிடுவார்களா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

சுவி அண்ணா கதையை  முழு மூச்சாக வாசித்து முடித்தேன்...இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்.
எனக்கு ஒரு சந்தேகம் பிரான்சில் தமிழ் உணவங்களில் தமிழ் பெண்கள் தனியாய் போய் சாப்பிடுவார்களா?

இதென்ன அனியாயம் அவரவர் தன்ட வயித்துக்கு சாப்பிடுறதும் தப்பா...😀

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, யாயினி said:

இதென்ன அனியாயம் அவரவர் தன்ட வயித்துக்கு சாப்பிடுறதும் தப்பா...😀

 

அதில்லை யாயினி பல வருடங்களுக்கு முன்பு நானும் எனது நண்பியும், அவரது தமக்கையின் சிறு குழந்தைகளும் லா சப்பலால் போகும் போது அங்கிருந்த அண்ணாமார் ,தம்பிமார் ,அங்கிள்மார் எல்லோரும் ஆவென்று பேயை பார்த்த மாதிரி பார்த்தார்கள்...இப்ப நிலமை என்ன மாதிரி என்று தெரியாது 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சுவி அண்ணா கதையை  முழு மூச்சாக வாசித்து முடித்தேன்...இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்.
எனக்கு ஒரு சந்தேகம் பிரான்சில் தமிழ் உணவங்களில் தமிழ் பெண்கள் தனியாய் போய் சாப்பிடுவார்களா?

ஓம்.......தனியாகவும் சென்று சாப்பிடுவார்கள்......அவரவர்கள் தங்களுக்கென்று வாடிக்கையாய் போகும் கடைகளுக்கு போய் வருவார்கள்........உங்களின் அண்ணரும் கதை கெதியாய் முடிந்து போட்டுதென்றுதான் சொல்கிறார்........!  👍

56 minutes ago, ரதி said:

அதில்லை யாயினி பல வருடங்களுக்கு முன்பு நானும் எனது நண்பியும், அவரது தமக்கையின் சிறு குழந்தைகளும் லா சப்பலால் போகும் போது அங்கிருந்த அண்ணாமார் ,தம்பிமார் ,அங்கிள்மார் எல்லோரும் ஆவென்று பேயை பார்த்த மாதிரி பார்த்தார்கள்...இப்ப நிலமை என்ன மாதிரி என்று தெரியாது 

அப்ப ஆவென்று பார்த்தவர்கள் எல்லாம் இப்ப பேரன் பேத்தியோடும் இனிப்புடன் (டயபீடீஸ்) வாழ்கிறார்கள்....இப்ப பொடியள்  அப்படியல்ல அநேகமானோருக்கு ஆளுக்கு ஒரு சோடி இருக்கு.......!

நன்றி சகோதரி வருகைக்கும் கருத்துக்கும்.........!  😁

1 hour ago, யாயினி said:

இதென்ன அனியாயம் அவரவர் தன்ட வயித்துக்கு சாப்பிடுறதும் தப்பா...😀

 

அதுதானே........நன்றி யாயினி.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை @suvy அண்ணா. எனக்கு கதை தேவையான அளவு இருந்ததாகவே தோன்றுகிறது.

இப்படி கோர்வையாக, கனமாக, நீளமாக, ஆனால் விறுவிறுப்பு குறையாமல் எழுதுவதெல்லாம் ஒரு வரம்.

# தையல்கடை

# தொய்வில்லாத தையல் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2023 at 13:48, suvy said:

                                                                                        தையல்கடை.

  தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(1).

சீட்டுக்காசு, கடைதிறத்தல், நிர்வகித்தல், ஊழியர்களின் செயற்பாடு, மேலாடையை எப்படி அளவெடுக்கும் தொழில் நுட்பம், ஊடல் கூடல் என ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பதுபோல் நகர்த்தியமை சிறப்பு. சுவியவர்களே பாராட்டுகள். யாழினது எழுதாற்றல் கொண்டோரில்,நீங்கள் மக்களது வாழ்வியலை படைப்பதில் தனித்தன்மையுடையவர்.  
நன்றி
 

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.