Jump to content

அதிசயக்குதிரை


Recommended Posts

  • 2 weeks later...

(கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர், மனைவி: பக்கா குடும்ப விளக்கு)

கணவன்: அன்பே, வந்துட்டேன்

மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?

கணவன்: BAD COMMAND OR FILE NAME.

மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?

கணவன்: ABORT,RETRY,IGNORE.

மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?

கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.

மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.

கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.

மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.

கணவன்: DATA TYPE MISMATCH.

மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.

கணவன்: BY DEFAULT.

மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?

கணவன்: HARD DISK FULL.

மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?

கணவன்: UNKNOWN VIRUS DETECTED.

மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?

கணவன்: TOO MANY PARAMETERS.

மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.

கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.

மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!

கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.

மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.

கணவன்: SHUT DOWN THE COMPUTER.

மனைவி: நான் போறேன்.

கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR COMPUTER

Link to comment
Share on other sites

சிக்கன் சிரிப்பு !

ராமு: ஏன்டா, இவன் பல்லி விழுந்த குருமா சாப்பிட்டமாதிரி இப்படி பதறுகிறான் ?

சோமு: அதுகூட பரவாயில்லடா, குருமாவுல சின்னதா சிக்கனோட லெக் பீசு இருந்துச்சாம், அதான் கால நீட்டிடுவோமோன்னு பதறுறான்

----------------------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: ஏங்க உங்களுக்கு பிடிச்ச சிக்கன் செஞ்சி வச்சிருக்கேன், வந்து ஆசையா சாப்பிடுங்க !

கணவன்: ஏன்டி, கொலையும் செய்வாள் பத்தினிங்கறது சரியா தான் இருக்கு, அவன், அவன் சிக்கன பாத்தாலே காணமல் போயிடுறான், நீ சீரியல மட்டும் நல்லா பாரு, நாட்டு நடப்ப புரிஞ்சிக்காதே !

-----------------------------------------------------------------------------------------------------------------

கஸ்டமர்: என்ன பாய், சீக்கு வந்த கோழி மாதிரி டல்லா இருக்க ?

கறிக்கடை பாய்: ஓசில லெக் பீஸ்கேப்பியே, முழு கோழி இருக்கு வாங்க்கிருயா?

கஸ்டமர் ஓட்டமெடுக்கிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

நோயாளி: டாக்டர், சிக்கன் லெக் சாப்டதுலேர்ந்து, கலுத்தெல்லாம் நீண்டு ஒரு கொக்கரக்கோவா வருது டாக்டர்.

டாக்டர்: நீங்க வெட்னரி டாக்டரைதான் பார்க்கனும், பயப்படத்தேவையில்லை, தொடைய சுத்தி சுத்தி தொன்னூறு ஊசி போடுவாங்க

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

முனியான்டி விலாஸ் ஓனர்: எதுக்கு என்னை அரஸ்ட் பண்ணுரிங்க சார் ?

போலிஸ்: ஏன்யா, சிக்கன பார்த்து ஊரே ஓடிக்கிட்டு இருக்கு, நீ என்ன தெனாவட்டா, இங்கு சிக்கன் சிக்ஸிடி பைவ் கிடைக்கும்னு போர்ட மாட்டிவைச்சிருப்ப !

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மந்திரி: எங்கள் தலைவர், ஒரு லட்சம் கோழிகளை அழித்து சிக்கன நடவடிக்கை எடுத்திருக்கிறார், தலைவர் வாழ்க.

உதவியாளர் மெதுவாக: தலைவா சொதப்பிட்டியே, அது சிக்கன நடவடிக்கை இல்ல தலைவா, சிக்கன் மீது நடவடிக்கை !

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கோழி 1: ஏன்டா, ரொம்ம சந்தோசமா கூவுர ?

கோழி 2: நம்ப கண்ணு முன்னேடியே, நம்ம ளுங்கள அறுப்பாங்கல்ல, இனி கொஞ்ச நாள், புள்ள குட்டியோட சந்தோசமா இருக்கலாம்

------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாரி: ஏன்டா, கோழி வருத்துன்னு கோட்வேர்ட்ல சொன்ன ஜொள்ளுவடிய நிப்பானே, நம்ம சுந்தர் ஏன்டா, அவுங்க அப்பனா பாத்தாப்பல ஓடுறான் ?

மாரி: முன்னடி, கோழின்னு பிகருங்களைத்தான் சொல்லுவோம், இப்ப கோர்டு வேர்டு, பேர்ட் வோர்டா மாறிடுச்சி, அதான் புளு வந்துடுமே பயந்து ஓடுறான்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாத்தியார்: பசங்களா, 'கூறை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் ...' எங்க பழமொழியை முடிங்க பார்க்கலாம்..

சுட்டி பையன்: சார், கோழிய புடிச்சா உடனே வைகுண்டம் தானாம், எங்க அப்பா சொன்னாரு !

---------------------------------------------------------------------------------------------------------------------------------

கமலா: விமலா, என்ன ஒங்க மாமியாரு, திடீர்னு போய்டாங்களா, எப்படிடி ?

விமலா: இதான் சரியான சமயம்னு, சிக்கன் வருவல் செஞ்சிபோட்டேன், அவுங்க சை சையா சாப்பிட்டு போய்டாங்க!

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புறா: எறும்பு நண்பா, எப்படி நீ வேடனை கடிக்காமல், என்னை காப்பாற்றினாய் ?

எறும்பு: உனக்கு பறவை காய்சல் இருக்குன்னு சொன்னேன், அதான் தலை தெறிக்க ஓடிட்டான்.

Link to comment
Share on other sites

பில் கேட்சுக்கு(Bill Gates) சர்தாஜி எழுதிய கடிதம்

ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

Link to comment
Share on other sites

இந்த உலகத்துலேயே பாவப் பட்ட ஜீவன்கள் யாருன்னா அது இந்திய பஸ் பயணிகள்தான்..!

பாருங்களேன்.. நாம பஸ் ஏற நின்னா, ஒன்னும் வராது..ஆனா எதிர் திசையிலே 100 பஸ் போகும். அதுவும் அரைவாசி காலியா..!

இன்னொரு அநியாயமும் இருக்கு.. வீட்டிலே பழய சாதத்தை தின்னு, வெட்டியா கொட்டாவி வுட்டுட்டு உக்காந்து இருக்கறப்போ பாருங்க.. எல்லா வண்டியும் காலியா போகும்..என்னைக்காவது அவசரமா, அவசியமா நாம பிரயாணம் கெளம்புனோமுன்னா..அன்னிக்கு உலகச் சனத்தொகையே ஒன்னா கெளம்பும்..நம்மளோட..!! தொண்டு கிழம் கூட தொங்கிக்கிட்டு வரும்..பொம்பளப்புள்ளைங்க கூட புட் போர்டு அடிக்கும்..!

இது இப்புடியா..? ஒரு வழியா உள்ளே சொர்க்க வாசல்லே புகுந்துட்டோம்ன்னு வைங்க.. எல்லா சீட்டும் காலியா இருக்கும்..ஆனா இட ஒதுக்கீடு நடந்து முடிஞ்சிருக்கும்..பை..குடை..கை

Link to comment
Share on other sites

நூறு தேங்காய் உடைக்கிறேன்

2008 ஜூலை

------------

இது வரை காவல் நிலையத்தின் வாசலையே மிதித்திராத பழனி, இன்று முதன் முறையாக அதை செய்ய வேண்டியதாகி விட்டது. தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து, முதன் வரிசையில் அமர்ந்திருந்தவரின் அருகில் நடுக்கத்துடன் சென்று, தனக்குக் கூட கேட்காத வகையில்

"சார்", என்று அழைத்தான்.

"இம்..."

""

"என்ன விசயம்?"

"சார்... கிட்னி ஆப்பரேஷன் பண்ணனும்...."

"கிட்னி ஆபரேஷனா? அந்த செக்ஷன் போ...."

பத்தடி நடந்து, பக்கத்தில் காவலர் காட்டிய பகுதிக்கு சென்றான் பழனி..

"சார்..."

"என்ன விசயம்?"

"சார், கிட்னி ஆப்பரேஷன் பண்ணனும்...."

"கிட்னி ஆப்பரேஷனா? யாருக்கு?"

"எங்க அப்பாவுக்கு..."

"எந்த ஆஸ்பிட்டல்?"

"கிட்னி கேர் ஆஸ்பிட்டல் சார்..."

"கிட்னி கேர் ஆஸ்பிட்டல். இம். என்னைக்கு ஆப்பரேஷன்?"

"அடுத்த வாரம் சார்..."

"அடுத்த வாரமா? அடுத்த வாரம் ஆப்பரேஷனை வச்சுக்கிட்டு சாவகாசமா வர்ற?"

"சார் போன வாரம் தான் ஆப்பரேஷன் பண்ணுறதா முடிவெடுத்தோம்.... இப்ப தான் டோனர் கிடைச்சாங்க...."

"யாரு டோனர்?"

"என்னோட பிரண்டுக்கு தெரிஞ்சவங்க..."

"தெரிஞ்சவங்கன்னா? யாரு.. அவர் பொண்டாட்டியா?"

"இல்ல சார்... அவனோட சொந்தக்காரங்க..."

"என்ன சொந்தம்? அவர் ஏன் உங்களுக்கு டொனேட் பண்ணனும்..."

"அவர் எங்களுக்கு ரொம்ப நாள் பழக்கம்.. எங்கப்பாவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். அதனால அவரே கொடுக்குறதா சொல்லியிருக்கார்."

"சரி சரி... இந்த பார்மை பில்லஃப் பண்ணிக் கொடுத்துட்டு அடுத்த வாரம் வா."

"சார் அடுத்த வாரமா? புதன்கிழமை ஆப்பரேஷன் சார்..."

"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிக்க ஒரு வாரம் ஆகுமே..."

"சார் நீங்க கொஞ்சம் மனசு வச்சா?"

"உங்கப்பா ஒருத்தர் தான் பேசண்டா? ஊர்ல எத்தனை பேசண்ட் இருக்காங்க.. அவங்க எல்லாரையும் பார்க்க வேண்டாமா? "

"சார் வேணும்னா, டோனரை இங்கேயே கூட்டிட்டு வர்றேன் சார்..."

"இது என்ன ஸ்கூல் பசங்ககிட்ட, யார் மிட்டாயை தின்னான்னு கேட்குற சமாச்சாரமா? உயிர் சமாச்சாரம்... அதுவும் இல்லாம, நீ கூட்டிட்டு வர்றவர் தான் அந்த ஆளுன்னு

எப்படி எனக்கு தெரியும்? நாங்க என்கொயரி எல்லாம் பண்ணி முடிக்க ஒரு வாரம் என்ன ரெண்டு வாரமே ஆகும்... அதனால நீ போய்ட்டு அடுத்த வாரம் வா..."

"சார்..."

"சுந்தரம்...", என்று அந்த அதிகாரி அருகில் இருந்த நபரை அழைத்தார்.

"சார்", என்று வந்து நின்றார் ஓர் கான்ஸ்டபிள்...

"இந்த ஆளை கூட்டிட்டு போங்க..."

சுந்தரத்துடன் சென்ற பழனி மீண்டும் திரும்ப அதே அதிகாரியிடம் வந்தான்..

"என்ன பேசுனீங்களா"

"பேசுனேன் சார். சார்... பத்தாயிரம் கொஞ்சம் ஜாஸ்தி தான் சார்"

"பத்தாயிரம் ஜாஸ்தியா? கிட்னி ஆப்பரேஷன் என்ன கவர்ண்ட்மெண்ட் ஆஸ்பிட்டல்லயா பண்ணுறீங்க? 'கிட்னி கேர்' ஆஸ்பிட்டல்ல தானே? அங்க என்ன ஓசிக்கா பண்ணுறாங்க?".

யோசித்தபடியே நின்றான், பழனி.

"அதுவுமில்லாம இதுல எவ்வளவு சட்ட சிக்கல்கள் இருக்கு. ஒழுங்கா என்கொயரி முடியனும்னா ஒரு மாசம் கூட ஆகலாம். அது வேற என்கொயரி ரிசல்ட் பாசிட்டிவா வரும்னு கூட சொல்ல முடியாது"

"சார்"

"கிட்னி கொடுக்குறதுக்கு பெரிய மனசு வேணும். சும்மா, வேண்டப்பட்டவங்க, பிரண்டோட பிரண்டு எல்லாம் யாருங்க இங்க கிட்னி கொடுக்குறாங்க? சொந்த புள்ளை கூட கொடுக்க மாட்டான். அதனால சும்மா கதையடிக்கிறத விட்டுட்டு காசை கொடுத்திட்டு போங்க"

"சரி சார்", என்று மண்டையை ஆட்டி, காசை கட்டி விட்டு வந்தான், பழனி.

2008 டிசம்பர்:

-----------

'இம் என்ன கேசு?'

'ஆப்பரேஷன்'

'இம்.. என்ன கிட்னியா, ஹார்டா, லிவரா?'

'கிட்னி சார்...'

'வாங்குறீயா, கொடுக்குறீயா?'

'வாங்குறேன் சார்...'

'இம்.. கிட்னின்னா 20000 ரூபாய் ஆகும்..'

'சரி சார், ஏற்பாடு பண்ணிடலாம் சார்... '

'சரி போய்ட்டு, அப்புறம் டோனரை வரச்சொல்லுங்க.. அவர்ட்ட என்கொயர் பண்ணிட்டு சைன் போட்டு அனுப்புறேன்..'

'ரொம்ப நன்றி சார்...'

மாலை

------

"நீங்க தான் பழனி அப்பாவுக்கு கிட்னி கொடுக்குறீங்களா?"

"ஆமா சார்..."

"பத்து ரூபா கொடுத்துடுங்க"

"சார்."

"என்ன யோசிக்குறீங்க?"

"பத்தாயிரத்து நான் எங்க சார் போவேன்"

"சும்மாவா கிட்னிய நீ கொடுக்க?. காசு வாங்குறேல?"

"சார்.. என் கடனை அடைக்கிறேன்னு சொல்லியிருக்காங்க"

"அது மட்டுமா? கைல 50000 ரூபாய் தர்றேன்னு சொல்லியிருக்கார்ல"

"சார்.."

"ரொம்ப யோசிக்காத... நான் என்ன எல்லா பணத்தையுமா கேட்டேன். 10 ரூபாயை கொடுத்திடு.. மிச்சத்தை நீயே வச்சுக்க... எல்லாரும் நல்லா இருக்கலாம்.. "

""

2009 டிசம்பர்

-------------

காவல் நிலைய வளாகத்தின் இடது புறத்தில் தனது ஸ்விஃப்ட் காரை நிறுத்தி விட்டு, காரில் இருந்து இறங்கினான், மாதவன்.

அப்போது, இருவர் அவன் அருகில் வந்து.

"சார் எதுவும் ஆப்பரேஷன்?"

"ஆமா, என் அண்ணனுக்கு. கிட்னி ஆப்பரேஷன்", என்றான் மாதவன்.

"ஒண்ணும் கவலைப்படாதீங்க சார். மொத்தமா 30000 ரூபாய் கொடுத்திடுங்க.. சாயங்காலமே எல்லாத்தையும் முடிச்சிடுலாம். நீங்க யார்கிட்டேயேயும் போய் அலைய

வேண்டாம். நாங்களே எல்லாம் பார்த்துக்குறோம்"

2010 ஜூலை

-----------

ஒரு போலீஸ்காரர், வீட்டிற்கு அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில்...

'கணேஷா. உன்னை தான் மலை போல் நம்பியிருக்கேன். இந்த வருஷமாவது என் வாழ்க்கையில கண்ணை துறப்பா... இந்த குற்றப்பிரிவில இருந்து எப்படியாவது உடல்

உறுப்பு தானம் பிரிவுக்கு எப்படியாது Transfer வாங்கி கொடுத்துடுப்பா. உனக்கு 100 தேங்காய் உடைக்கிறேன்'

====================================================

செய்தி: கிட்னி தானம் போலீஸ் அனுமதி கட்டாயமாகிறது.

குறிப்பு: போலீஸ் துறையினரில் பலர் கடமை தவறாமல் பணி புரிகிறார்கள் என்பதனை அறிவேன். இது நகைச்சுவைக்காக(?) மட்டும் எழுதப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது போன்ற ஓர் நிலைமை வந்து விடக்கூடாது என்பதே எனது ஆவல்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்

அக்பருக்கும் பீர்பாலுக்குமமடிக்கடி ஏற்படும் மனவேறு அன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல... பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார்.

"இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது. எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் நீர் நடமாடுவதை குற்றமாக நான் கருதுகிறேன். அதனால் என் மண்ணணவிட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார்.

"சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!" என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்கு சென்றார். சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்!

ப்பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலைஉடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார்.

பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார்.

"இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே?" என்று கேட்டார் அந்த அமைச்சர்.

"இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்!" என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பிந்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார்.

செல்லும் வழியில்... "இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??" என்று கேட்டார் அந்த அமைச்சர்.

"எல்லாம் காரணமாகத்தான்!" என்று பதில் அளித்தார் பீர்பால்.

அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால்.

"என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னுடடய உத்தரவை அலட்சியம் செய்கிறீர்! என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டார் அக்பர்.

"மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்!" என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக.

"எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?" என்றார் அக்பர் சினத்துடன்.

"தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால் தங்களின் மண்ணில் நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள். அவரே என் வீட்டுக்கு வந்து பார்த்தாரே!" என்றார் பீர்பால்.

அக்பர் அமைச்சரை நோக்கினார்... உடனே அமைச்சர் பதில் அளித்தார்..

"மன்னர் அவர்களே! பீர்பால் தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக் கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!"

அப்போது பீர்பால், "மன்னர் பிரான் அவர்களே,"என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான் கொட்டி பரவி இருப்பது சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண். அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?" என்று அப்பாவி போல் பதில் சொன்னார்.

பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. வாய்விட்டுச் சிரித்தவாறே, "உம்மை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர்.

Link to comment
Share on other sites

Bush - All mixed up

In case you don't know the new leader of China is called Hu He. Read

on..............

George: Condi! Nice to see you. What's happening?

Condi: Sir, I have the report here about the new leader of China.

George: Great. Lay it on me.

Condi: Hu is the new leader of China.

George: That's what I want to know.

Condi: That's what I'm telling you.

George: That's what I'm asking you. Who is the new leader of China?

Condi: Yes.

George: I mean the fellow's name.

Condi: Hu.

George: The guy in China.

Condi: Hu.

George: The new leader of China.

Condi: Hu.

George: The Chinaman!

Condi: Hu is leading China.

George: Now whaddya' asking me for?

Condi: I'm telling you Hu is leading China.

George: Well, I'm asking you. Who is leading China?

Condi: That's the man's name.

George: That's who's name?

Condi: Yes.

George: Will you or will you not tell me the name of the new leader of China?

Condi: Yes, sir.

George: Yassir? Yassir Arafat is in China? I thought he was in the Middle East.

Condi: That's correct.

George: Then who is in China?

Condi: Yes, sir.

George: Yassir is in China?

Condi: No, sir.

George: Then who is?

Condi: Yes, sir.

George: Yassir?

Condi: No, sir.

George: Look, Condi. I need to know the name of the new leader of China.Get me the Secretary General of the U.N. on the phone.

Condi: Kofi?

George: No, thanks.

Condi: You want Kofi?

George: No.

Condi: You don't want Kofi.

George: No. But now that you mention it, I could use a glass of milk.And then get me the U.N.

Condi: Yes, sir.

George: Not Yassir! The guy at the U.N.

Condi: Kofi?

George: Milk! Will you please make the call?

Condi: And call who?

George: Who is the guy at the U.N?

Condi: Hu is the guy in China.

George: Will you stay out of China?!

Condi: Yes, sir.

George: And stay out of the Middle East! Just get me the guy at the U.N.

Condi: Kofi.

George: All right! With cream and two sugars. Now get on the phone.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மரியாதை ராமன் கதைகள் - நேர்மை கொண்ட உள்ளம்

மரியாதை ராமன் தெனாலி ராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவங்களுக்கு புலப்படாத நுணுக்கமான விசயங்களையும் எளிதில் விடுவிப்பார்.

மரியாதை ராமனின் தீர்ப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கதைகளாக மக்களிடம் பேசப்பட்டு வருகிறது, அதில் ஒன்று இதோ.

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து

அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.

Link to comment
Share on other sites

பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?

விழுந்தது பலாப்பழம் ஆச்சே

ஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற?

எங்க அப்பாவுக்கு வேகமாக படிக்க வராது, அதான்.

உங்க வீட்டுல மொத்தமா எத்தனை பேரு?

எங்க வீட்டுல மொத்தமா யாருமே இல்லைங்க எல்லோரும் ஒல்லி தான்.

நகை கடைக்காரனுக்கு பிடித்த சோப்?

பொன் வண்டு.

ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன்.. ஆசீர்வாதம் பண்ணு பாட்டி.

பார்த்து மெதுவா ஓடிப்போ, வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்கிடாதே.

டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்?

ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

நீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க?

நான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான்.

அந்த ஆள் புத்தகத்்தை தின்கிறார் ஏன்?

அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு.

கி.பி. 5000ல் உலகம் எப்படியிருக்கும்?

உருண்டையாகத்தான்...

ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான்.

என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.

உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா

ஆமாம்

எங்கே தொலைத்தாய்?

அடுத்த தெருவில் தொலைத்தேன்.

அதை இங்கே ஏன் தேடுகிறாய்?

அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்.

அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?

அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.

குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?

நாம கேட்டா கொடுப்பாரா...

உங்க வீட்டில் இன்று சாம்பாரா?

எப்படி கண்டுபிடித்தீர்கள்?

நான் மூக்காலும் உணர்ந்தவன்.

வருடத்தில் எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது?

எல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது.

கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்?

இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள்.

மிகவும் மக்கான ஊர் எது?

மாமண்டூர்.

நம்ம கபாலி ரொம்ப சின்சியர்

எப்படி சார்?

நேத்து நைட் 12 மணிக்கு திருடிட்டு, ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமூல் கொடுத்துட்டு போறான்.

ஒவ்வொரு விரல்லியும் ஒரு சிகெரட் வெச்சு பிடிக்கிறாரே?

நிறைய சிகெரட் பிடிப்பாருன்னு சொன்னனே அது இவர்தான்.

நேற்று அவனை ஒன்றுக்குமூ லாயக்கில்லை என்று கூறிய பிறகு எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும்படி ஒரு காரியம் செய்து விட்டான்.

அப்படி என்ன காரியம் செய்தான்?

கால்வாயை குச்சியால் கலக்கி விட்டான்.

மெக்கானிக்கு பிடித்த சோப் எது?

வீல் சோப்.

நாய் கடிக்கு முதலில் என்ன செய்யனும்?

நாய்கிட்டே போய் காலை கொடுக்கனும்.

வயதான பாட்டி வீட்டிற்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிந்தார். அங்கு வந்தவர் என்ன தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றார்? வீட்டிற்கு உள்ளே போட்ட நைகைய தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார் பாட்டி?

ஏன் வெளியே தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றர் அவர் ? உள்ளே மின்சாரம் கட் அதான் வெளியே தேடுகிறேன் என்றாராம்.

உள்ளாடை அணியும் ஊர் எது?

வாணியம் பாடி

சாப்பிடக்கூடிய ஆணி எது?

பிரியாணி

ஒரே வீட்ல பத்து தடவைக்கு மேலே திருடியிருக்கியே ஏன்?

நான் அவங்க பேமிலி திருடன் எஜமான்.

உங்க வீட்டு கதவுல ராமசாமி இன் அவுட்னு போர்டு வெச்சிருக்கீங்கேள, அவர் ரொம்ப பிஸியா?

ம்ஹும் கடன்காரங்களுக்கு உதவியா இதை வெச்சிருக்கார்.

உங்க வீடு எங்கே இருக்கு ஸார்?

அடமான பேங்க்ல இருக்கு ஸார்?

அந்த கடையில் குடை வாங்காதீங்க அது ராசில்லாத கடை

வாங்கினா என்ன ஆகும்?

மழையே வராது.

எதுக்கு வேலைக்காரியை எட்டு மணிக்கு வரச் சொல்ற?

ஏழு மணிக்கு தலைப்பு செய்திகள் சொல்லுவா எட்டு மணிக்கு பக்கத்து வீட்டுச் செய்தியெல்லாம் விரிவா சொல்லுவா.

நான் நீச்சல் கத்துக்கேறன்

எங்கே...?

தண்ணியிலதான்...!

தாத்தா இனிமே கம்பியூட்டர் படிச்சாத்தான் வேலை கிடைக்கும்.

அப்படி நீ படிச்சா கிடைக்காதா?

நான் ஹார்லிக்சை அப்படியே சாப்பிடுவேன்?

முட்டாள் பாட்டில் எப்படி ஜீரணமாகும்.

கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது?

ஏன்?

கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்கடி முடியாதே.

இவருக்கு நான் பொண்ணுதர்றேன். நீ பொண்ணு தர்றேன்னு பயங்கர போட்டி

அப்படி என்ன வேலை செய்றாரு?

தண்ணீர் லாரி வச்சிருக்காரு.

குடி குடியை கெடுக்கும் படம் என்னாச்சு?

ஊத்திக்கிச்சு

டி.வி. வாங்கினால் 20 கைக்குட்டைகள் இலவசமாக கொடுக்கிறா ர்களே ஏன்?

மெகா சீரியல் பார்க்கும் போது வரும் கண்ணீரை துடைக்கதான்.

ஆட்டோவில் பயணம் செய்த கிராமவாசி மீட்டரில் 30ரூ காட்டிய போதும் 15ரூ தான் தந்தார் ஏன்?

டிரைவரும் ஆட்டோவில் வந்ததால் 50-50 பாதி பாதி.

உன் பல்லழகைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல் இருக்குன்னு என் காதலிகிட்டே சொன்னது தப்பாப் போச்சு

என்னவாம்?

பார்த்துகிட்டே இருங்கன்னு சொல்லி பல்செட்டை கழட்டி என் கையில கொடுத்துக்கிட்டு போயிட்டார்.

குடி குடியைக் கெடுக்குமாடா?

நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும் நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும்.

100 வயதுவரை வாழ்வது எப்படிங்கற புத்தகத்தை கொடுத்தவரை திட்றாரே ஏன்?

அவர்க்கு வயது 102.

எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்

எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக் கும்.

இங்கே ஒருத்தன் நாயா கத்திக்கிட்டிருக்கேன் எங்கடிபோன?

உங்களுக்கு பிஸ்கட் வாங்க தாங்க போனேன்.

என்னால் என் நண்பர்கள் துன்பபப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

உடனே அவர்களுக்கு உதவி செய்வாயா?

நான் கண்ணை மூடிக் கொள்வேன். இல்லாவிட்டால் அந்த இடத்தை விட்டு ஓடிடுவேன்.

குழந்தையை ஏன் பிரிட்ஜில் வைத்து பூட்ரீங்க

வெளிய விட்டா கெட்டுப்போயிடும் அதான்.

மறதிக்கு பெயர் போன புகழ் பெற்ற ஓர் அறிஞர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் சோதனையாளர் பயணிகளிடம் டிக்கெட்டைக் வாங்கி பார்த்து விட்டு அந்த அறிஞரிடம் வந்து அவருடைய டிக்கெட்டை கேட்டார். அறிஞர் அதை வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார்.

அவர் யார் என்பதை அறிந்திருந்த டிக்கெட் சோதனையாளர் பரவாயில்லை நான் உங்களிடம் வார்த்தைகளை நம்புகிறேன். டிக்கெட் தேட வேண்டாம் என்று சொன்னார். அதற்கு அறிஞர் எனக்கு தற்போது பரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. நான் இப்பொழுது எந்த ஊருக்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்பது தெரியவோ அந்த டிக்கெட் எனக்கு இப்பொழுது தேவைப்படுகிறது.

பால் எப்போது வெட்கப்படும்?

அதன் ஆடையை எடுத்தப்பின்.

காலில் சுத்தின பாம்பு கடிக்குமா? கடிக்காதா?

ஏன் கேட்கிறே?

உங்க கால்ல ஒரு பாம்பு சுத்தியிருக்கேன்னு கேட்டேன்...!

இந்த காலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு

ஆமா சரியா சொன்னீங்க...

தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வெச்சீங்க...!

நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ற?

பாபுஸ் பேஸ்ட்

நீ என்ன சோப் யூஸ் பண்ற?

பாபுஸ் போப்

அது என் புது பிராண்டா?

அட பாபுன்றது என் ரூம் மேட்டோட பேருப்பா.

ஜோதிடம் சொல்பவர், ஐந்து ரூபாய் தந்தால் 2 கேள்விகள் கேட்கலாம். என்று சொனார்.

இரண்டு கேள்விகளுக்கு ஐந்து ரூபாயா? என்று வந்தவர் கேட்டார் ஆமாம் உங்கள் இரண்டாவது கேள்வி என்ன? என்றார் ஜோதிடம் சொல்பவர்.

கோயில் உண்டியலை திருடியது உண்மையா?

உண்மைதான் ஜட்ஜ் ஐயா, ஆனா அதுல இருந்த பணத்தை எடுத்துகிட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்.

ஹேலா நான் குமார் பேசுகிறேன். என் கடனை எப்ப திருப்பி தருவீங்க?

சீத்தோட்ல மூன்று குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். ஈரே ரட்டுல 3 குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். பெருந்துறையில் 6 குமார்கிட்டே கடன் வாங்கியிருக்கேன். யாரே இருந்தாலும், தெளிவா விபரமா பேசுங்க குழப்பாதீங்க.

ராமு - 10 ரூபாய் இருந்தா கொடு

சோமு - என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை

ராமு - பரவாயில்லை, கொடு நான் சுத்தம் செய்து கொள்கிறேன்.

பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?

முதல்ல பூட்டை பூட்டணும்...!

சாப்பிட முடியாத மீன் எது?

விண்மீன்

அதென்ன மாடில மேகக்கூட்டம் மாதிரி மேடை செட் அப்?

அது நிச்சயதார்த்தமேடை. கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்டுவது இல்லையா.

பிக்பாக்கெட் ரங்காவின் கல்யாண வீட்டில் ஒரு சௌகரியம் இருக்கு?

என்னது?

மொய்ப்பணத்தை அவங்களே எடுத்துப்பாங்க.

ஒரு பெண் குளத்தில் நீர் எடுப்பதற்காக 4 தெரு தாண்டி வந்து கொண்டிருக்கிறாள்.

திடீரென்று வீட்டிற்கு திரும்புகிறாள் ஏன்?

குடத்தை கொண்டு போகவில்லை.

டைம் இஸ் கோல்டுன்னு சொன்ன, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?

அதை அடமானம் வைக்க முடியாதே

அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு?

ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே?

அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?

கணவன் : ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?

****

ராமு : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..

வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.

ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.

****

தபால்காரர் : என்னய்யா இது..பின்கோடு போடவேண்டிய இடத்தில் "சரோஜா சாமான் நிக்கோலா" அப்படின்னு எழுதியிருக்கே?

வெங்கட்பிரபு : ஹி..ஹி..சென்னை - 600028 தான் அப்படி எழுதி இருக்கேன்.

*****

வாத்தியார் : உனக்குப் பக்கத்துல ஒரு பையன் தூங்கிக்கிட்டு இருக்கான். அவனை எழுப்பிவிடு.

மாணவன் : அட போங்க சார். தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது மட்டும் நானா?

*****

டைரக்டர் : இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.

நடிகர் : எனக்கு நீச்சல் தெரியாதே.

டைரக்டர் : கவலைப்படாதீங்க சார்ஸகுளத்துல தண்ணியே இருக்காது.

*****

நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பாத கணவன் மீது கோபத்தில் இருக்கிறாள் மனைவி. கணவன் தொலைபேசுகிறான்.

கணவன் : டியர் இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?

மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம்

கணவன் : ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ. :huh::wub:

*****

நபர் : மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?

ஜோன்ஸ் : டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு.

நபர் : ??!!

****

மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர்(exam register number) என்ன?

ஆசிரியர் : 148766

மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி(fancy) நம்பரா குடுங்க சார்.

****

இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.

Link to comment
Share on other sites

''ரொம்ப வருஷமா பொண்ணு தேடி, போன மாசம்தான் என் ஃப்ரெண்ட்ஒருத் தனுக்குக் கல்யாணமாச்சு. ஆனதேலேட் மேரேஜ். ஃபுல் காதல்ல நண்பன் புழுதி கிளப்பறதுக்குள்ள பொசுக்குனு ஆடி வந்து, அவன் மனைவியைப் பொறந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. மாமனார் வீட்டுல ஓவர் ஆச்சாரம். போன்ல பேசுறதுக்கே பூனையா அலை யுற நிலைமை. இந்த டென்ஷன் சிச்சுவேஷன்ல நண்பனும் நானும் ஆளுக்கொரு பீரைப் போட்டு மார்க்கெட்ல உலாத்துனப்ப, 'சார்... ஆடித் தள்ளுபடி அள்ளுங்க... அள்ளுங்க!'ன்னு துணிக் கடை வாசல்லேருந்து ஒரு பையன் எங்களை இழுத்தான்.

அப்போ ஒரு ஆவேசத்துல நண்பன் விட்டான் பாருங்க ஒரு சவுண்டு.... 'ஆடித் தள்ளுபடியா? முதல்ல ஆடியையே தள்ளுபடி பண்ணுங்கடா!'ன்னு!''

சுட்டது விகடனில்

Link to comment
Share on other sites

சேப்பலின் பராசக்தி

இந்திய அணியின் கோச் சேப்பல் மீது வரும் ஆறாம் தேதி விசாரனை நடக்க இருக்கிறதாம்.அப்போது அவர் வீராவேசமாக பராசக்தி வசனம் பேசினால் எப்படி இருக்கும்?

இதோ இப்படித்தான் இருக்கும்....

23para.jpg

-------------

நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.ஆகவே, இவ்வழக்கு விசித்திரமுமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன் தான். இந்திய அணியிலே குழப்பம் விளைவித்தேன். கங்கூலியை அணியை விட்டு தூக்கினேன் . குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன், இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.

அணியிலே குழப்பம் விளைவித்தேன். கிரிக்கட் அணியே கூடாது என்பதற்காக அல்ல. இந்திய கிரிக்கட் அணி கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக. கங்கூலியை அணியை விட்டு தூக்கினேன். அவன் கேப்டன் என்பதற்காக அல்ல. கேப்டன்ஷிப் பகல் வேஷமாகிவிட்டதைக் கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கரை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை? என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் - அதைப் போல. என்னைக் குற்றவாளி குற்றவாளி என்கிறார்களே,இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்சதூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில். படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்.

கேளுங்கள் என் கதையை, நீதிபதி அவர்களே, தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவுசெய்து கேளுங்கள். ஆஸ்திரேலியாவில் க்வீன்ஸ்லாண்டில் பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. கிரிக்கட் கோச்சகளின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? சிட்னி அது என் கிட்னியை வளர்த்தது. என்னை உயர்ந்தவனாக்கியது. இந்திய அணீயை உயர்த்த வந்தேன். அதில் தோல்வியுற்று உங்கள் முன் நிற்கிரேன். இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறானே இந்த ஜாலக்காரன் டெண்டுல்கர். இவன் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். டெண்டுல்கரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக்கினேன். அடாது மழையிலும் விடாது டக் அடித்தபோதும் உலக கோப்பையை நம்பி அவனை விட்டுவைத்திருந்தேன். கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த கிரிக்கட் நங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம், ஜான் ரைட்டை இழந்த அணியாக. அணியின் பெயரோ இந்திய அணி. மங்களகரமான பெயர். ஆனால்,வெற்றிதான் எப்போதும் பெற்றதில்லை. செழித்து வளர்ந்த அணி சீரழிந்துவிட்டது. துப்புகெட்ட கேப்டன். கண்களிலே நீர். இந்திய அணி அலைந்தது. இந்திய அணிக்காக நானும் அலைந்தேன். இந்திய அணிக்கு கருணை காட்டினர் பலர். அவர்களிலே புக்கிகள் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். சூதாட்ட வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் ஜடேஜா. இவன் சூதாட்டத்தால் என் அணியை விற்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் இந்திய அணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருக்கும். ஸ்பான்சர்களும் அணிக்கு கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக டீவி உரிமையைக் கேட்டனர். ஸ்பான்சர்களின் வலையில் விழுந்த வீரர்களும் அணிக்கு துரோகம் செய்தனர். அதில் தலையானவன் இந்த கங்கூலி. ஜென்மஜென்மத்துக்கும் கேப்டனாக இருக்கும் உரிமையைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான். வங்கத்தின் பெயரால், ரவீந்திரநாத் தாகுரின் பெயரால். இந்திய அணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருக்கும். அந்த அணியை ஜிம்பாப்வேயிடம் கூட தோற்க தூண்டியது இந்த கங்கூலிதான். இந்திய அணியை இரக்கமற்ற கேப்டனிடம் விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை. என் அணி ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண நான் விரும்பவில்லை. நானே கங்கூலியைத் துரத்தி விட்டேன்.

கேப்டனைத் துரத்துவது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர். அவரே நேதாஜியை காங்கிரஸ் தலைமையை விட்டு நீக்கியிருக்கிறார். காங்கிரஸ் கஷ்டப்படுவதைக் காணச் சகியாமல்..அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறேன் நான். இது எப்படி குற்றமாகும்?

வெளிநாட்டிலிருந்து பிறந்த நாட்டுக்கு வந்த கோச்க்கு தக்க பாதுகாப்பில்லை. ஆனால் இந்திய அணி விட்டுக் கொடுத்திருந்தால், புக்கிகளின் பள்ளியறையிலே ஒரு நாள் மானத்தை விலை கூறியிருந்தால் - ஸ்டார்டீவியின் மடியிலே ஒரு நாள் - இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.இதைத் தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது? சூதாட்டம் என் அணியை மிரட்டியது. பயந்து ஓடினாள். ஸ்பான்ஷர்ஷிப் பணம் என் அணியைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். கங்கூலி ரசிகர்களின் வங்கபக்தி என் அணியைத் துரத்தியது. மெக்ராத்தின் பவுன்சர் என் அணியைத துரத்தியது. ஓடினாள் ஓடினாள் வெஸ்ட் இண்டீசின் வெஸ்ட் எண்டுக்கே ஓடினாள். வெஸ்ட் எண்டிலே கியூபா இருந்ததால் திரும்பி வந்துவிட்டாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர் செய்தார்களா? வாழவிட்டார்களா என் இந்திய அணியை?

சரத்பவார்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

யார் வழக்கிற்குமில்லை. அதுவுமென் வழக்குதான். என் அணியின் வழக்கு. அணியின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்குப் புத்தி புகட்ட கோச் வாதிடுவதிலென்ன தவறு?

கங்கூலியை அணியை விட்டு தூக்க முயன்றது ஒரு குற்றம். ஷேவாக்கை தூக்காமல் விட்டது ஒரு குற்றம்.நான் கங்கூலியை அறிக்கையால் தாக்கியது ஒரு குற்றம்.

இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்?

ரஞ்சிகோப்பையை கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்?

விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா?

பணம் பறிக்கும் புக்கிகளின் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்?

பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சககர்களின் குற்றமா?

கிரிக்கட்டின் பெயரால் நடிகைகளுடன் காமலீலைகள் நடத்தும் போலிவீரர்களை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கிரிக்கெட்டின் குற்றமா? அல்லது கிரிக்கெட்டின் பெயரைச் சொல்லி போர்டு நடத்தும் கயவர்களின் குற்றமா?

இக்குற்றங்கள் களையப்படும்வரை சேப்பல்களும், திராவிட்களும் குறையப்போவதில்லை.

இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம்.

பகுத்தறிவு.

பயனுள்ள அரசியல் தத்துவம்.

Link to comment
Share on other sites

பெண்மொழி'கள்!

பெண்களுக்காக செலவு செய்யாத ஆண்கள் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்?

ஆம்பிள்ளை என்று நிரூபிக்க உன்னிடம் வேறு எதுவுமே இல்லையா?

பெட் காஃபி வேண்டும் என்றால் சமையல் அறையில் தூங்கு!

தீய்ந்த வாசனை வருகிறதா? சமையல் ரெடி என்று அர்த்தம்!

ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டுதான். ஆனால் அது அவர்கள் பிரச்னை!

நீ போய்த் தொலைந்தால்தானே நான் உன்னைப் பிரிந்து ஏங்க முடியும்?

செத்த பிறகு ஆண்கள் எல்லாரும் சொர்க்கத்துக்கும் பெண்கள் எல்லாரும் நரகத்துக்கும் போனால் என்ன ஆகும்? சொர்க்கம் நரகமாகும், நரகம் சொர்க்கமாகும்! :lol:

புத்திசாலி ஆண்கள் முட்டாள் பெண்களைக் காதலிப்பதுண்டு. ஆனால் புத்திசாலிப் பெண்கள் முட்டாள் ஆண்களைக் காதலிப்பதில்லை.

ஆண்கள் ஏன் பெண்களின் கண்ணைப் பார்த்து பேசுவதில்லை? ஏனென்றால் அவர்கள் பார்க்கும் இடத்தில் இருப்பவை கண்கள் இல்லை! <_<

என் சமையலைக் குறை சொல்லாதே! அப்புறம் நான் உன்னிடம் `வேறு எதிலாவது' குறை சொல்வேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாயிருக்கிறது. தொடருங்கள் வாழ்த்துக்கள் நுனா!!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நன்றி சுவி அண்ணா.

சாபமாகிப் போன வரம்

60 வயது நிறைந்த ராமுவும், சீதாவும் தங்களது 35வது திருமண நாளைக் கொண்டாடினர். வானத்தில் பறந்துசென்ற ஒரு தேவதை இறங்கிவந்து அவர்களை வாழ்த்தினாள்.

தேவதை : உங்கள் விருப்பத்தைக் கேளுங்கள். நிறைவேற்றுகிறேன்.

சீதா : நான் இந்த உலகத்தைச் சுற்றிப்பார்க்கவேண்டும்.

தேவதை : அப்படியே ஆகட்டும்.

(ஒரு மணிநேரத்தில் உலகத்தை சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்பினார் மனைவி)

ராமு : எனக்கு என்னைவிட 30 வயது குறைந்த பெண் மனைவியாக வேண்டும்.

தேவதை : அப்படியே ஆகட்டும். (கூறிவிட்டு மறைந்தாள்.)

அய்யோ! அந்தோ பரிதாபம்! ராமு 90 வயது குடு குடு கிழவராக மாறி நின்றார்.

****

நான்கு கல்லூரி மாணவர்கள்

கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்களுக்கு அடுத்த நாள் காலையில் வகுப்புத் தேர்வு இருக்க, முதல்நாள் முழுவதும் ஊர் சுற்றிவிட்டு அடுத்த நாள் எப்படி தேர்விலிருந்து எஸ்கேப் ஆவது எனத் திட்டம் போட்டனர்.

அடுத்தநாள் உடல் முழுவதைம் அழுக்காக்கிக்கொண்டு சட்டைகளில் கார் கிரீஸைத் தடவிக்கொண்டு ஆசிரியர் முன் ஆஜராகினர்.

"சார் நேற்று ஒரு திருமண விழாவிற்குப் போய்விட்டு பின்னிரவில் வரும் வழியில் கார் டயர் வெடித்து ரிப்பேர் ஆகிவிட்டதால் இறங்கி சரி செய்ய முயற்சி செய்தோம். சரியாகாததால் இவ்வளவுநேரம் தள்ளிக்கொண்டு வந்தோம். எங்களால் தேர்வு எழுத முடியாது" எனத் தெரிவித்தான் ஒருவன்.

ஆசிரியர் "பரவாயில்லை. இன்று ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் மூன்று நாட்கள் கழித்து தனித்தேர்வு எழுதிக்கொள்ளலாம்" எனக் கூற, நால்வரும் சந்தோஷமாய்ச் சென்றனர், அதற்குள் படித்துவிடலாம் என நினைத்துக்கொண்டு.

மூன்று நாட்கள் கழித்து, தனித்தனியே தேர்வு எழுத அமர்ந்தனர். நால்வருக்கும் தனித்தனியே கேள்வித்தாள் வழங்கப்பட்டது. 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டிருந்தது. கேள்விகள் இதோ :

1. உங்கள் பெயர் ______________ (2 மார்க்)

2. மூன்று தினங்களுக்கு முன் காரில் எந்த டயர் வெடித்தது? (98 மார்க்)

*******

Link to comment
Share on other sites

குண்டக்க மண்டக்க

கேட்கப்பட்ட கேள்வி

ஒருவர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு போகும் போது, நிதானம் தவறி தடுமாறுனார். அதே வேளையில் அந்த சாலையில் மற்றொருவர் வந்துகொண்டே இருந்தார். விழப்போகும் சூழ்நிலையிலிருக்கும் அந்த சைக்கிளோட்டி, பாதசாரியிடம் என்ன சொல்வார்?

அதை ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் பார்ப்போம்!!

நேயர்களின் பதில்கள்

- sorry

- brake

- go

- help

- balance

- crash

- oh my GOD.. ஒரு வார்த்தையின்னு சொன்னேன்

- hi

- catch

- mango.. இப்படியா விழப்போகும் போது சொல்வார்கள்?

- oooooooo

- aiyo.. இது ஆங்கில வார்த்தையே இல்லை

பதில் : EN-CYCLO-PEDIA

:D

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஜார்ஜ் புஷ்ஷின் கேள்வி நேரம்

ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும், ‘கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்’ என்றார். ஒரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார்.

உன் பெயர் என்ன?

டேவிட்

கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன?’

3 கேள்விகள் கேட்கப்போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே?”

அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று புஷ் அறிவித்தார். இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும் வகுப்புக்கு வந்தார். “கேள்விகள் கேட்கலாம்” என்றார்.

வேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார்.

ராபர்ட்

உன் கேள்விகள் என்ன?

5 கேள்விகள் கேட்கப் போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே? வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது? முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே?



Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தங்க கைக்கடிகாரம்

நீதிமன்றத்தில் ஒரு வழக்கில், பரப்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. போலீசாரிடம் வாக்குமூலம் அளிப்பவர்கள் நீதிமன்றத்தில் அதை மாற்றிச் சொன்னால் தவறு ஒன்றும் இல்லை என்று வழக்கறிஞர்களிடம் கூறிய நீதிபதி, இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

.

இன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டபோது, எனது தங்க கைக் கடிகாரம் பாக்கெட்டில் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அதை வீட்டிலேயே படுக்கையறையில் வைத்துவிட்டது பின்னர்தான் நினைவுக்கு வந்தது என்றார்.

அன்று மாலை நீதிபதி வீட்டுக்கு சென்றபோது, அவரிடம் மனைவி, உங்கள் தங்க வாட்சை வாங்கிச் செல்வதற்காக ஏன் மூன்று பேரை அனுப்பி வைத்தீர்கள் என்று கேட்டார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, நீ என்ன செய்தாய்? என்றார். முதலில் வந்த நபரிடம் அதைக் கொடுத்து விட்டேன் என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை தெனாலிராமன் சோமுவின் கடைக்குப் பழங்கள் வாங்கச் சென்றிருந்தான். சோமுவும் எப்படியாவது தெனாலிராமனை மடக்கச் சந்தர்ப்பம் பார்த்திருந்தான். அது தானாகவே வந்து வாய்த்தது.

தெ.ராமன் சோமுவிடம் என்ன சோமு நலமா உன் வியாபாரம் எப்படிப் போகிறது எனக் கேட்டான்.

உடனே சோமுவும் அது பரவாயில்லை ராமா. ஏதோ நடக்கிறது, உனக்கு ஏதாவது வேண்டுமா எனக் கேட்டான்.

ராமனும் ஆம் எனக்குச் சில பழங்கள் வேண்டும். இந்த வாழைப்பழம் என்ன விலை யெனக் கேட்டான்.

இதுதான் சமயம் என நினைத்த சோமுவும் இந்தப் பழங்களா? இவற்றுக்கு விலை ஒன்றுமில்லை உனக்கு எவ்வளவு தேவையோ எடுத்துக்கொள் என்றான்.

ராமனும் உடனே இது என்ன அதிசயமாய் இருக்கு! இப்ப எனக்குப் பசிக்கிறது எனக்கூறிச் சில பழங்களைப் பறித்துச் சாப்பிட்டான். ஆகா மிகவும் ருசியான பழங்கள். சரி சோமு நான் சென்று வருகிறேன் எனக் கூறிக்கொண்டு கிளம்பினான்.

உடனே சோமுவும் கொஞ்சம் நில் ராமா, நீ எனக்குப் பணம் தர வேண்டும். நான் இவற்றின் விலை ஒன்றுமில்லை என்றேன். அந்த 'ஒன்றுமில்லை" யை நீ எனக்குத் தர வேண்டும். என்றான்.

அப்போதுதான் தெனாலிராமனுக்கு சோமுவின் தந்திரம் பிடிபட்டது. உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னிடமிருந்த வெறும் பையை சோமுவிடம் கொடுத்தான்.

சோமுவும் அப்பையைக் கவிழ்த்துப் பார்த்து என்ன ராமா பகிடி விடுகிறாயா? இதற்குள் ஒன்றுமில்லை என்றான்.

உடனே ராமனும் அந்த 'ஒன்றுமில்லை" தான் உன்னுடைய பழங்களின் விலை என்று சொல்லிவிட்டு தன் பாட்டில்நடந்து சென்றான்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பில் கிளிண்டனும் ஜப்பான் பிரதமரும்

சில வருடங்களுக்கு முன், ஜப்பானிப் பிரதமர் மோரி அமெரிக்கப் பயணம் செல்ல வேண்டியிருந்தது. அங்கு போனால், அமெரிக்க அதிபர் கிளிண்டனிடம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஏதுவாக மோரிக்கு அடிப்படை ஆங்கிலம் கற்றுத் தரப்பட்டது.

பயிற்சியாளர் மோரியிடம் சொன்னார். கிளிண்டனின் கையைக் குலுக்கும்போது, ‘How are you?’ என்று கேட்க வேண்டும். அதற்கு கிளிண்டன் ‘I am fine and you?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘me too’ என்று பதில் சொல்ல வேண்டும். அதற்குப் பின் நடைபெறும் உரையாடல்களை மொழிபெயர்ப்பாளர்கள் கவனித்துக் கொள்வார்கள்” என்றார்.

மோரியும் சரி என்று கேட்டுக் கொண்டார். ஆனால் வாஷிங்டனில் கிளிண்டனைச் சந்திக்கும்போது, தவறுதலாக இப்படித் தொடங்கினார்.

Who are you?

அதிர்ந்து போனார் கிளிண்டன். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், Well, I'm Hillary's husband, என்று பதில் சொன்னார்.

அதற்கு மோரி சொன்னார், me too

---------------------------------------------------------------------------------------------------------------------------------

சொர்க்கத்தில் காந்தி

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் இறந்து சொர்க்கத்திற்கு சென்றனர். ஒவ்வொருவரையும் கடவுள் தனியே சந்தித்து, அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டார். குறைவான குழந்தை உடையவர்களுக்கு அதிகமான பரிசும், அதிகமான குழந்தை பெற்றவர்களுக்கு குறைவான பரிசும் கொடுத்தார். காந்தியும் கடவுளை சந்திக்க உள்ளே சென்றார். ஆனால் வெளியே வரும்போது வெறுங்கையுடன் வந்தார். என்னவென்று மற்றவர்கள் விசாரித்தபோது காந்தி கோபமுடன் சொன்னார்.

யாரோ ஒரு முட்டாள் கடவுளிடம் 'நான் தான் இந்தியாவின் தந்தை' என்று சொல்லியிருக்கிறான்

Link to comment
Share on other sites

நாய் வாடகைக்கு கிடைக்குமா?

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,

இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?

முதலில் செல்வது எனது மனைவி.

என்ன ஆயிற்று அவருக்கு?

எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது

இரண்டாவது பிணம்?

அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?

அதற்கு அவர் சொன்னார், வரிசையில் போய் நில்லுங்கள்

Link to comment
Share on other sites

srangeevijoke01dv7.png

srangeevijoke02xh0.png

சுட்டது விகடனில்

:D :D :blink:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.