• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
nunavilan

அதிசயக்குதிரை

Recommended Posts

எல்லாம் அசத்தலான காமெடிகள் , தொடருங்கள்...! :)

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

கணவன்: அடியேய் உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு என் புத்தியைச் செருப்பால அடிக்கனும்.

 

மனைவி: அதுக்கென்ன  செருப்பு இங்க  கிடக்கு , புத்திக்கு எங்க போவீங்க...!  :)

 

fb..

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

13346538_1009528492435586_27412217981327

காலேல எந்திரிச்ச உடனே ஃபேஸ்புக் போலாமா வாட்சப் போலாமானுதான் தோனுது..
வேலைக்கு போகனுமேன்னு தோனவே மாட்டீங்குது..!!

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

CmJCm7ZUkAA21SO.jpg

ஏலே மாப்பிள்ளை ஹை ஹீல்ஸ் அடிபோல பயங்கரமா விழுந்து பல்லு போயிருக்கு ....

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இசைக்கலைஞர்களின் அங்க சேஷ்டைகள்

 

கருநாடக இசைக்கலைஞர்கள் சிலர் பாடும்போது அங்க சேஷ்டைகள் செயவதைப் பார்த்திருப்பீர்கள். அவைகளில் சில ரசிக்கக் கூடியதாக இருக்கும். சில அளவுக்கதிகமாகப் போய் விடும். அனேகமாக சகிக்கவே முடியாதபடி இருக்கும். பெரிய வைத்தியநாத ஐயர் என்னும் பிரபல கருநாடகப் பாடகர் ஒருவர் சிவகெங்கைச் சமஸ்தானத்தில் வித்துவானாக இருந்தவர். இவரைப் பற்றி உ. வே. சாமிநாதையர் அவர்கள் மிகவும் சுவையான தகவல்களைத் தருகிறார். தமக்கே உரிய நடையில் நகைச்சுவையும் கலந்து எழுதியுள்ளார்.


Uvesaa.jpg

 

பெரிய வைத்தியநாதையரின் சங்கீதத் திறமை மிக்க வன்மையானது. இவருக்குக் கனத்த சாரீரம் அமைந்திருந்தது. அது மூன்று ஸ்தாயியிலும் தடையின்றிச் செல்லும். பாடும்போது அவ்வொலி கால் மைல் தூரம் கேட்குமாம்.

பாடும்போது பல வகையான அங்க சேஷ்டைகள் செய்வது இவருக்கு இயல்பு. எத்தனை விதமாகச் சரீரத்தை வளைத்து ஆட்டி முறுக்கிக் குலுக்கிக் காட்டலாமோ அத்தனை விதங்களையும் இவர் செய்வார். ஊக்கம் மிகுதியாக ஆக அந்தச் சேட்டைகளும் அதிகரிக்கும்.

நீண்ட குடுமியை யுடையவராதலின் இவர் பாடுப்போது குடுமி அவிழ்ந்துவிடும்; தலையைப் பலவிதமாக ஆட்டி அசைத்துப் பாடுகையில் அந்தக் குடுமி மேலும் கீழும் பக்கத்திலும் விரிந்து சுழலும். இவர் அதை எடுத்துச் செருகிக் கொள்வார்; அடுத்த கணத்திலேயே அது மீண்டும் அவிழ்ந்து விடும். கழுத்து வீங்குதல், கண்கள் பிதுங்குதல், முகம் கோணுதல், கைகள் உயர்த்தல் முதலிய செயல்கள் இவருடைய உற்சாகத்தின் அறிகுறிகள்.

வாயைத் திறந்தபடியே சிறிது நேரம் இருப்பார். ஸ்வரம் பாடும்போதும், மத்தியம காலம் பாடும்போதும் இவருக்குச் சந்தோஷம் வந்துவிட்டால், அருகில் யாரேனும் இருப்பாராயின் அவர் துடையிலும், முதுகிலும் ஓங்கி அடித்துத் தாளம் போடுவார்.

இப்படி ஆடி ஆடிப் பாடுவதோடு நில்லாமல் முழங்காலைக் கீழே ஊன்றி எழும்பி எழும்பி நகர்ந்து கொண்டே செல்வார். பாட்டு ஆரம்பித்த காலத்தில் இவர் இருந்த இடத்திற்கும், அது முடிந்த பிறகு இருக்கும் இடத்திற்கும் இடையில் உள்ள தூரத்தைக் கொண்டே இவருக்கு இருந்த உற்சாகத்தின் அளவை மதிப்பிடலாம். இவர் பாடும்போது தாம் நகர்ந்து செல்வதல்லாமல் தம்முடைய கையடிக்கும், மயிர்வீச்சிற்கும் மற்றவர்கள் அகப்படாமல் இருக்கும் வண்ணம் அடிக்கடி அவர்களையும் நகர்ந்து செல்லும்படி செய்வார்.

இவருக்குப் பொடி போடும் வழக்கம் உண்டு. பாடிக்கொண்டே வருகையில் இவருடன் இருப்பவர் இடையிடையே பொடி டப்பியை எடுத்து நீட்டுவார். இவர் இரண்டு விரல்களால் எடுத்துக் கொண்டு போடுவார். பின்பு கையை உதறுவார். அப்பொடி அருகிலுளவர்கள் கண்களிலும் வாய்களிலும் விழும். இந்தக் காரணங்களாலும் இவருக்கு அருகில் இருந்து கேட்கவேண்டுமென்ற அவா ஜனங்களுக்கு உண்டாவதில்லை. அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு தூரத்திலிருந்து கேட்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு நன்றாகவும், அமைதியாகவும் இவருடைய பாட்டின் இனிமையை அனுபவித்து வருவார்கள்.

இப்படியாக ஒரு நாள் எட்டயபுரம் ஜமீனில் ஒரு பெரிய விருந்து நிகழ்ந்தது. பல சங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். அவர்களுள் பெரிய வைத்தியநாதையரைப் பாடும்படி செய்தார்கள். இவருடைய சங்கீத சாமர்த்தியம் எவ்வளவுக்கெவ்வளவு மிகுதியாக வெளிப்பட்டதோ, அவ்வளவுக்கவ்வளவு இவருடைய அங்கசேஷ்டைகளும் வெளிப்பட்டன.

அங்கே வந்திருந்த ஜில்லா சர்ஜன் ஒரு வெள்ளைக்காரர். அவருக்கு நம்முடைய தேசத்துச் சங்கீதம் விளங்கவில்லை. அதனால் காது அப்பொழுது பயன்படவில்லை. ஆயினும் வைத்தியநாதருடைய தேகத்தில் உண்டாகும் சேஷ்டைகளை அவர் கண்கள் கூர்ந்து கவனித்தன. நேரம் ஆக ஆக அந்தச் சேஷ்டைகள் அதிகப்பட்டன. சர்ஜனுடைய கவனமும் அதிகமாயிற்று.

வைத்தியநாதருடைய குடுமி அவிழ்ந்து நான்கு புறமும் விரிந்து பரவியது; கண்கள் பிதுங்குவதுபோல் இருந்தன; வாய் ஆவெனத் திறந்தது; கைகளோ தரையிலும் துடையிலும் பளீர் பளீரென்று அறைந்தன; அருகிலுள்ளவர்கள் விலகிக் கொண்டார்கள்; இவற்றையெல்லாம் சர்ஜன் பார்த்தார்; "சரி, சரி, இவர் பாடவில்லை; மத்தியிலே இவருக்கு ஏதோ வலிப்பு வந்துவிட்டது; இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் இதைச் சங்கீதமென்று எண்ணி இந்த மனுஷனைச் சாவ அடித்து விடுவார்களென்று தோற்றுகிறது" என்று எண்ணினார்.

வித்துவான் துள்ளித் துள்ளி நான்கு புறமும் திரும்பித் திரும்பிச் செய்யும் சேஷ்டைகளை மட்டும் கவனித்த அவருக்கு இரக்கம் உண்டாயிற்று. அவற்றோடு மிக்க உச்சஸ்தாயியில் வித்துவான் பல்லவியை ஏகாரத்துடன் முடிக்கும் போது, அந்தக் கோஷம் வலிப்பு வந்தவன் உயிருக்கு மன்றாடிக் கத்துவதைப்போல சர்ஜனுக்குத் தோற்றியது. அதற்கு மேல் அவராற் பொறுக்க முடியவில்லை. தம் கைக்கடியாரத்தை எடுத்தார். கலெக்டரை நோக்கினார். "ஐயா, இந்த மனுஷர் இன்னும் ஐந்து நிமிஷம் இப்படியே கத்தினால் நிச்சயமாக உயிர் போய்விடும். நிறுத்தச் சொல்ல வேண்டும். இப்போது இவருக்கு வலிப்பு ஏதோ கண்டிருக்கிறது" என்று வேகத்தோடு சொன்னார். அதிகாரி என்ன செய்வார் பாவம்! ஜில்லாவுக்கே வைத்திய அதிகாரியாக இருப்பவர் வலிப்பென்று சொல்லும்பொழுது அதை மறுத்துப் பேச அவருக்குத் துணிவு உண்டாகவில்லை.

அதிகாரி மெல்ல வித்துவான் அருகில் சென்று பக்குவமாக, இன்னும் சில வித்துவான்கள் பாடவேண்டும். அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். உயர்ந்த சன்மானத்தையும் அளித்தார். ஐயரும் ஒருவாறு தமது பாட்டை முடித்துக் கொண்டு மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்.

Baleypandiya06.jpgபெரிய வைத்தியநாதையருடைய குறைகள் பல; இவருடைய வித்தை பெரிது. அந்த வித்தையின் பிரகாசம் சில காலம் வீசியது; பிறகு இவருடைய குறைகளால் அது மங்கியது. அதுவே இவர் ஜாதகமாக அமைந்து விட்டபோது நாம் என்ன செய்யலாம்!

இவ்வாறு குறிப்பிடுகிறார் உ. வே. சாமிநாதையர் அவர்கள்.

http://srinoolakam.blogspot.ca/2006/12/blog-post_15.html

Share this post


Link to post
Share on other sites

Job application
 

This is an actual job application that a 17-year-old boy submitted at a McDonald's restaurant in Florida....and they hired him because he was so honest and funny.


NAME: Greg Bulmash
SEX: Not yet. Still waiting for the right person.tw_blush:

DESIRED POSITION: Company's President or Vice President. But seriously, whatever's available. If I was in a position to be picky, I wouldn't be applying here in the first place.
DESIRED SALARY: $185,000 a year plus stock options and a Michael Ovitz style severance package. If that's not possible, make an offer and we can haggle.

EDUCATION: Yes.

LAST POSITION HELD: Target for middle management hostility.

SALARY: Was less than I'm worth.

MOST NOTABLE ACHIEVEMENT: My incredible collection of stolen pens and 'post-it' notes.

REASON FOR LEAVING: It sucked.
AVAILABLE FOR WORK: Of course. That's why I'm applying.
PREFERRED HOURS: 1:30 – 3:30pm., Monday, Tuesday and Thursday.

DO YOU HAVE ANY SPECIAL SKILLS?: Yes, but they're better suited to a more intimate environment.
MAY WE CONTACT YOUR CURRENT EMPLOYER?: If I had one, would I be here?
DO YOU HAVE ANY PHYSICAL CONDITIONS THAT WOULD PROHIBIT YOU FROM LIFTING UPTO 50lbs?: 50lbs. of what?
DO YOU HAVE A CAR?: I think the appropriate question here would be "Do you have a car that runs?"
HAVE YOU RECEIVED ANY SPECIAL AWARDS OR RECOGNITION? : I may already be the winner of the Publishers Clearinghouse Sweepstakes.

DO YOU SMOKE?: On the job, no, on my breaks, yes.

WHAT WOULD YOU LIKE TO BE DOING IN FIVE YEARS?: Living in the Bahamas with a fabulously wealthy dumb blond supermodel who thinks I'm the greatest thing since sliced bread. Actually, I'd like to be doing that now.
DO YOU CERTIFY THAT THE ABOVE IS TRUE AND COMPLETE TO THE BEST OF YOUR KNOWLEDGE?: Yes. Absolutely.

SIGN HERE: Aries. tw_yum:

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

1.
கணவன் – “இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள் பார்த்தா சிரிப்பாங்க... தெரியுமா?“
மனைவி – “அப்போ நாம போடுற சண்டை அவ்வளவு தமாஷாவா இருக்கு!“

2.
கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“
மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?“
கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“

3.
மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“
கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“
மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“

4.
கணவன் – “என்ன இது மிக்ஸி, கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட வேன்ல வந்து இறங்கிறே....!“
மனைவி – “நீங்க தானே சொன்னீங்க.... பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டை குளோஸ் பண்ணனும்ன்னு. அதைத் தான் செய்துட்டு வர்றேன்.“

5.
கணவன் – “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?“
மனைவி – “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“

6.
மனைவி – “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க பேசாம நிக்கிறீங்களே....“
கணவன் – “திரும்பி வரட்டும்.... பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“

7.
மனைவி – “வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க“
கணவன் – “நிஜமாவா சொல்லற?“
மனைவி – “ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிண்டு இருக்கிறது.....“

8.
கணவன் – “இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?“
மனைவி – “சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.“

9.
கணவன் – “வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது“
மனைவி – “அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?“
கணவன் – “வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்“
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்.....

10.
மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“
கணவன் – “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“

11.
கணவன் – “அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?“
மனைவி – “எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.“

Share this post


Link to post
Share on other sites

 

வாரத்தில் மூன்று முறை உடலுறவு !
ஒரு கணவனும் மனைவியும் மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றனர் . அவரது மனைவியின் இதயத்தை பரிசோதித்த மருத்துவர் “உங்களுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது ,அதனால் வாரத்தில் முன்று நாட்களேனும் தாங்கள் உடலுறவில் ஈடுபடுவது தங்களுக்கு நல்லது “என்றார்

அந்தப் பெண் மிகவும் வெட்க்கப்பட்டு பின் “இதை நீங்களே எனது கணவரிடம் சொல்லிவிடமுடியுமா ? “ எனக் கேட்டார்

உடனே மருத்துவர் வெளியில் வந்து அவளது கணவனை அழைத்து “உங்களுடைய மனைவிக்கு வாரத்தில் மூன்று நாட்களேனும் உடலுறவு அவசியம் “என்றார்.

அந்த கணவர் “ எந்தெந்த நாட்களில் டாக்டர் ? “ என்றார்

அதற்க்கு மருத்துவர் “ திங்கள் , புதன் மற்றும் வெள்ளி சரியாக இருக்கக்கூடும் “ எனச் சொன்னார்

அந்த அப்பாவி கணவரோ “ திங்கள் மற்றும் புதன் அவளை நான் இங்கு அழைத்து வரமுடியும் , ஆனால் வெள்ளிக்கிழமை அவள் தான் பேருந்தில் வந்துகொள்ள வேண்டும் “என்றார்

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nunavilan said:

 

அந்த அப்பாவி கணவரோ “ திங்கள் மற்றும் புதன் அவளை நான் இங்கு அழைத்து வரமுடியும் , ஆனால் வெள்ளிக்கிழமை அவள் தான் பேருந்தில் வந்துகொள்ள வேண்டும் “என்றார்

இந்தக் கணவர்... என்ன இழவுக்கு, கலியாணம் கட்டினவர்,
ரொம்ப... அப்பாவியானவர் போல கிடக்கு. :grin:

Share this post


Link to post
Share on other sites

வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு? 'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு!
குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்? குன்னக்குடி-வயலினிஸ்ட்! காந்திஜி-non வயலினிஸ்ட்!!
தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? தெரியவில்லையேதிரவப்பொருள்!' அதெப்படி? கொட்டுமே!

மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமிழ் தெரியாதே!
கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!
என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!
என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!
எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு...எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.
உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்? அது 'ஈஸி' சேராச்சே!
உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? படுத்த படுக்கையாக...

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது?தலையிலே முடி இருக்கிறது தான்...!

இந்த ரோடு எங்கே போகிறது? எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது.
எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே? எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.... என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

16649478_1909221359306980_44779785849586

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.