Jump to content

Recommended Posts

ஒரு அமெரிக்க கணவன் மனைவி ஒரு ஞாயிற்று கிழமை வீட்டில் குளிப்பதற்கு தயாராகின்றார்கள். மனைவி முதலில் குளித்து முடியவும் கணவன் குளிக்க தயாராகும் போது வீட்டு மணியடிக்கவும் சரியாக இருந்தது.கணவன் மனைவியிடம் யார் என்று பார்க்க சொல்லி விட்டு குளிக்க தயாராகின்றார்.மனைவி அவசர அவசரமாக துவாயை சுற்றி கட்டியபடி மேல் வீட்டிலிருந்து படி வழியாக கீழிறங்கி வாசல் கதவை திறந்த போது பக்கத்து வீட்டு பொப் நின்று கொண்டிருந்தார்.மனைவி வாய் திறக்க முதல் பொப் சொல்கிறார் "உந்த துவாயை ஒரு கணம் களற்றி விடுங்கள் $800 தருகின்றேன் என்று".மனைவியும் ஒரு கணம் யோசித்து விட்டு துவாயை களற்றி பிறந்த மேனியாக நிற்க ,பொப்

$800 கொடுத்து விட்டு நன்றி கூறிவிட்டு சென்று விடுகிறார்.மனைவியும் மனதுக்குள் ஒரு வித சந்தோசத்துடன் மேலெ கணவர் குளிக்கும் அறைக்கு செல்ல கணவர் வந்தது யாரென வினவ மனைவி அது பக்கத்து வீட்டு பொப் என கூறினார்.

உடனே கணவர் "பொப் என்னிடம் வாங்கிய $800 பற்றி ஏதாவது கூறினாரா " என்று கேட்டார்.

Link to post
Share on other sites
 • Replies 373
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

டீச்சர்: "நீ பெரியவனாகி என்ன பண்ண போற?.." மாணவன்: "கல்யாணம்.." டீச்சர் : "அது இல்ல.. நீ என்னவா ஆகா விரும்புற?.." மாணவன்: "புருஷன்.." டீச்சர் : "நோ நோ.. ஐ மீன், உனக்கு வாழ்கையில் என்ன க

ஆண்களே உங்கள் கவனத்திற்கு.! மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.... ஒரு கணவனும்

Posted Images

அப்பா: (அந்தப் பெண்ணிடம்) உனக்கு ரோஜாப்பூ வாசனை பிடிக்குமா? அல்லது மல்லிகைப்பூ வாசனை பிடிக்குமா?

அந்தப் பெண்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனைப் பிடிக்கும்.

***

டாக்டர்: இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க.

அவன்: ஸ்பூன் ரொம்ப நீளமா இருக்குமே டாக்டர், எப்படி முழுங்கறது?

***

எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கு, ஸார்!

எங்கேயிருந்து?

பழனிலேர்ந்து!

***

இனிமே கட்சிக்கு நாய்போல உழைப்பவன் நான் தான் என்று அடிக்கடி சொல்லாதீங்க

ஏன்?

தலைவர் 'வாள்'க 'வாள்'க என்று தொண்டர்கள் கத்தறாங்க!

***

ஏன் கால்குலேட்டருடன் அந்தப் பெண் பின்னாலே சுத்தறே?

கணக்கு பண்ணிக்கிட்டு இருக்கேன்

***

எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார்

ஏன், ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே?

எங்க ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே!

***

என் அப்பா ஒரு சங்கீத வித்வான்,அம்மாவும் பாடுவாள், அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத்தெரியும், அண்ணி வீணை வாசிப்பா---

சரி, நீ என்ன பண்றே

வேறென்ன பண்றது, தனிக்குடித்தனம் பண்றேன்!

Link to post
Share on other sites

டாக்டர்: இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க.

அவன்: ஸ்பூன் ரொம்ப நீளமா இருக்குமே டாக்டர், எப்படி முழுங்கறது?

:wub::rolleyes: அறிவாளிகள்

Link to post
Share on other sites

முட்டாள்கள் எல்லாம் எந்திரிச்சி நில்லுங

ஆசிரியர் : முட்டாள்கள் எல்லாம் எந்திரிச்சி நில்லுங்க.

(ஒரு மாணவன் மட்டும் எழுந்து நிற்கிறான்)

ஆசிரியர் : என்ன நீ மட்டும் நிற்கிறாய்?

மாணவன் : உங்களுக்குத் துணையாகத்தான், சார்

--------------------------------------------------------------------------------

ஆசிரியர்

ஆசிரியர் : எந்த ஒருவனுக்கு ஒரு விஷயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையோ, அவன் ஒரு முட்டாள். புரிகிறதா?

மாணவர்கள் (கோரஸாக) : புரியவில்லை சார்...

------------------------------------------------------------------------------------------------------

பணக்கார மாமியார்

என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க.

அப்படியா... என்ன பண்ணினாங்க?

எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்

------------------------------------------------------------------------------------------------------

டார்ச்லைட் வச்சுக்குங்க...

நோயாளி : டாக்டர்..அடிக்கடி ஒரு இருட்டான காட்டுக்குள்ளே போகிறமாதிரி கனவு வருது. என்ன செய்யலாம்?

டாக்டர் : படுக்கும்போது பக்கத்துல டார்ச்லைட் வச்சுக்குங்க...

Link to post
Share on other sites

நிலா அக்கா கூல்டவுன் என்ன குடிக்க போறீங்க நிலா அக்கா!! :rolleyes:

:lol::D

Link to post
Share on other sites

தொண்டர் 1:எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ?

தொண்டர் 2:ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்

---------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :மழைக்கு போடற ஷு இருக்கா...

மற்றவர்:இல்லைங்க... மனுஷங்களுக்குப் போடற ஷுதான் இருக்கு

------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :அவர் ரொம்ப சிக்கன பேர்வழினு எப்படிச் சொல்ற ?

மற்றவர்:உட்காரக்கூட நாற்காலிக்குப் பதில் முக்காலிதான் யூஸ் பண்ணுவார் ?

--------------------------------------------------------------------------------------------------

தொண்டர் 1:தலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு ?

தொண்டர் 2:தன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம்

-------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?

மற்றவர்:நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்

---------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்

மற்றவர்:அப்புறம் ?

ஒருவர் :களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்

Link to post
Share on other sites

:lol::lol:

ஈழதிருமுருகன் மாமா எப்படு சுகம் எங்கே உங்களை காணவே கிடைக்குதில்லை!! :o இல்லாட்டி சங்ககடைக்கு போயிட்டீங்களோ மறுபடி என்று நினைத்துவிட்டேன் மாமா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to post
Share on other sites

ஒருவர் :இப்பவெல்லாம் ஆபீசுல தூங்கமாட்டேங்கறீங்களே... ஏன் ?

மற்றவர்:நீங்க தூங்கறதாலதான் ஆபீசுல உங்களுக்கு லஞ்சம் கிடைக்க மாட்டேங்குதுன்னு பொண்டாட்டி சரமாரியா திட்டுறா

--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :திருடன், நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?

மற்றவர்:சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா

---------------------------------------------------------------------------------------------------------------------------

திருடன் 1: நீ ஏன் பட்டப்பகல்ல திருடினே ?

திருடன் 2: எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல வெளியில போகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு..

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :வீட்டுல உள் வேலையெல்லாம் என் மனைவி பார்த்துப்பா... வெளி வேலையெல்லாம் நான் பார்த்துப்பேன்.. .

மற்றவர்:அதுக்குன்னு தினமும் நீங்க வீட்டு வாசல்ல கோலம் போடறது நல்லாயில்லை

-------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :மாப்பிள்ளை அரசியல்ல இருக்கலாம் அதுக்காக இப்படியா ?

மற்றவர்:என்னவாம் ?

ஒருவர் :பெண் பார்க்க வந்த இடத்துல பெண் வாயால வாழ்க கோஷம் போடச் சொல்றார்

Link to post
Share on other sites

நகைசுவை துணுக்கு எல்லாம் நல்லா இருக்கு நுணாவிலன் அண்ணா!! :lol:

Link to post
Share on other sites

சாவி

அவர்: உங்க வீட்டுக் குழந்தை, வாசற் கதவு சாவியை முழுங்கிடுச்சா? அப்புறம் என்ன செஞ்சீங்க?

இவர்: (வருத்தத்துடன்)

ஜன்னல் வழியா ஏறிக் குதிச்சுத்தான் உள்ளே போனேன்

-------------------------------------------------------------------------

புகையிலை போடுற பழக்கம் உண்டா ?

சில நோயாளிங்க டாக்டர் என்ன சொல்றக்ருங்கிறதை சரியாப் புரிஞ்சிக்கிறது இல்லை. ஒரு நோயாளியைப் பரிசோதனை செய்துக்கிட்டிருந்த டாக்டர், உங்களுக்கு புகையிலை போடுற பழக்கம் உண்டா ?ன்னு கேட்டார். உண்டுங்க என்னோட நாலு ஏக்கர் நிலத்துலேயும் புகையிலைதான் போட்டிருக்கேன்-னாரு நோயாளி. இப்போ டாக்டருக்குத் தலை சுத்திருச்சி

-------------------------------------------------------------------------------

எடை மிஷின்

ரொம்பக் குண்டா இருக்கிற ஒரு அம்மா எடை மிஷின்லே ஏறி நின்னுது. அட்டை வந்தது. தயவு செய்து கூட்டம், கூட்டமாக ஏறி நிற்காதீர்கள். சே இந்த மிஷின் ரொம்ப மோசம்னு அந்தம்மா சலிச்சிக் கிட்டாங்க.

Link to post
Share on other sites

ஒருவர் :பெண் பார்க்க வாசல் வரை வந்துட்டு திடீர்னு திரும்பிப் போறீங்களே... ஏன் ?

மற்றவர்:உள்ளே டிபன் வாசமே வரலியே

--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :கதாசிரியரை உயில் எழுதச் சொன்னது தப்பாயிடுச்சா ?

மற்றவர்:மேற்கண்ட பெயர்கள் யாவும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல-னு கடைசியிலே எழுதி முடிச்சிட்டாரு

---------------------------------------------------------------------------------------------------------------------------------

மனைவி:என்னங்க.. . ஆபீஸ் லேர்ந்து தினமும் கலகலப்பா வர்ற நீங்க இன்னைக்கு ரொம்ப வாட்டமா வர்றீங்களே, சம்திங் நிறைய வரலையா...?

கணவன்:சம்திங் வாங்கி மாட்டிக்கிட்டேன் சரசு.. .

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :உங்க அப்பாவோட நிதி வர்ற அன்னைக்கெல்லாம் உங்க அம்மா ஏன் கேவிக்கேவி அழறாங்க ?

மற்றவர்:அவுங்களுக்கு பயந்து நடந்து, மரியாதை கொடுத்திட்டிருந்த ஒரே ஆசாமி போயிட்டாரேங்கிற வருத்தம்தான்

----------------------------------------------------------------------------------------------------------------------

தயாரிப்பாளர்:உங்களை வச்சு படம் எடுத்ததுலே என்னோட சொத்துல பாதி அழிஞ்சு போச்சு சார்...

நடிகர்:கவலைப் படாதீங்க. உங்களுக்கு இன்னொரு படத்தக்கு நான் கால்ஷீட் தர்றேன்

Link to post
Share on other sites

ஒருவர் :பஸ்லே பெரியவங்க நிக்கிறதைப் பார்த்தா என்னாலே தாங்க முடியாது.

மற்றவர்:உடனே எழுந்து இடம் கொடுத்துடுவியா ?

ஒருவர் :கண்ண இறுக மூடிக்கிட்டு தூங்குற மாதிரி பாவனை பண்ணிடுவேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

டாக்டர்:தூக்கத்துல நடக்கிற வியாதிக்கு மருந்து, கொடுத்தேன். இப்ப தேவலையா...?

நோயாளி:தேவலை டாக்டர் முன்பெல்லாம் வேகவேகமா நடந்து கிட்டிருந்த நான் இப்ப மெள்ளமா நடக்கிறேன்..

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :ஏம்ப்பா இப்படி பிக்பாக்கெட் தொழில் பண்ணறே ? ஏதாவது ஒரு லட்சியத்தை வெச்சுக்கிட்டு உழைக்க வேண்டியதுதானே ?

மற்றவர்:என்னங்கையா இப்படிக் கேட்கறீங்க ? ஒரு நாளைக்குக் குறைஞ்சது அஞ்சு பர்சையாவது அடிக்கணும்ங்கறதுதானே என்னோட லட்சியமே

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ?

மற்றவர்:மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :உங்க அப்பா ரொம்பவும் பணக்காரராக இருக்கலாம்... அதுக்காக கடிதம் கூட இப்படியா எழுதறது ?

மற்றவர்:அப்படி என்ன எழுதியிருக்கிறார் ?

ஒருவர் :பணம்... பணமறிய ஆவல்-னு எழுதியிருக்கிறார்

Link to post
Share on other sites

நையாண்டி : பாட்டுக்கு பாட்டு (பின் பாட்டு)

- கோவி.கண்ணன் [geekay@singnet.com.sg]

தேர்தல், தேர்தல் ! சோர்ந்து போய், நம் அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே இடத்தில் தற்செயலாக சந்தித்துக் கொள்கிறார்கள். ஆவலுடன் பார்த்த திருவாளர் பொதுஜெனங்கள் எல்லோரும், கூட்டாக சேர்ந்து, அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார்கள். அதாவது,

திருவாளர் பொதுஜெனம்: அன்பார்ந்த அரசியல்வியாதி, மண்ணிக்கவும் அரசியல்வாதி தலைவர்களே, உங்களையும் உங்கள் கூத்தணியையும், மறுபடியும் மண்ணிக்கவும் கூட்டணியையும் நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறேம், வரும் தேர்தலுக்கும் பின் உங்களில் யார் சிரிப்பீர்கள், யார் அழுவீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது, அதனால் இன்று நீங்களும் மகிழ்ந்து, எங்களையும் மகிழ்விக்க வேண்டுமென்பது எங்களின் விருப்பம். அதற்கு ஒரு யேசனையை முன்வைக்கிறோம் என்று நிறுத்துகிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெ: என் ரத்திதின் ரத்தமான, என் அன்பு செல்வங்களே, உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவிடம் உங்களுக்கு தயக்கம் வேண்டாம், அதைப்பார்த்து தாங்காது இந்த தாய் மனசு, உடனடியாக சொல்லுங்கள்.

கலைஞர்: கடந்த ஆட்சியின் வேதனையை மறந்து சிரிப்பதற்கு ஒரு வாய்பு கேட்கிறீர்கள். எங்களுக்கு புரிகிறது, சொல்லுங்கள் தமிழ்தாயின் செல்வங்களே, நானும், கழகத்தாரும் காத்திருகிறோம்.

புரட்சிகலைஞர்: காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒவ்வொரு இந்தியனும் தலை நிமிரனும், அதற்கு இந்த கேப்டனின் தலை குனிந்தாலும் அது தாழ்வில்லை, உங்கள் யோசனையை சொல்லுங்கள் எதுவானாலும் தயங்காமல் சொல்லுங்கள்

திருவாளர் பொதுஜெனம்: நன்றி அன்புத்தலைவர்களே, இங்கு இப்பொழுது அனைத்துக்கட்சி பாட்டுக்கு பாட்டு போட்டி நடைபெறும், உங்களில் ஒவ்வொருவராக பாட்டை தொடங்கவேண்டும், முதல்வர் என்ற முறையில், முதலில் முதல்வர் ஜெ. அவர்கள் தொடங்கட்டம்.

எல்லோரும் கைதட்டுகிறார்கள்

உடனே முதல்வர் ஜெ, வைகோவை பார்த்தபடி, பாட ஆரம்பிக்கிறார்.

ஜெ: அடிக்கிற கைதான் அணைக்கும் ... கசக்குற வாழ்வே இனிக்கும், அடிக்கிற கைதான் அ...

'அ' என நிறுத்த, வைகோ தொடர்கிறார்

வைகோ: அண்ணன் காட்டிய வழியம்மா, இது அன்பால் விளைந்த பழியம்மா ... இது அன்பால் விளைந்த ப....

கலைஞர்: பாலுட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்து பார்த்த கிளி, நான் வளர்த்த பச்சை கிளி நாளை வரும் கச்சேரிக்.. என நிறுத்த

விஜயகாந்தை பார்த்தபடி,

மருத்துவர் ராமதாஸ்: கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், உன்னை ஏமாற்றும் நீ கானும் தோற்றம் ... க...பதிலுக்கு,

புரட்சிகலைஞர்: கலக்க போவது யாரு .. நான் தான்... ஜெயிக்க போவது யாரு நான் தான் ... டாக்டர் ஒழிக ... ராஜா வசூல் ராஜா..

திருமாவளவன்: ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை, நான் தாண்ட என் மனசுக்கு ராஜா வாங்குகடா வெள்ளியில் கூஜா, ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எ..

இல.கனேசன்: எங்கே செல்லும் எங்கள் பாதை யாரோ யார் அறிவார்கள்... காலம் காலம் செல்ல வேண்டும் யாரோ யார் அறிவார்கள், எங்கே செல்லும் எங்கள் பாதை யாரோ யார் அ..

வாசன்: அன்னையை போல் ஒரு தெய்வமில்லை அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை, மன்னில் மனிதரில்லை, அன்னையை போல் ஒரு தெய்வமில்லை. அவர் அடி தொழ மறுப்ப..

தன்னையே நினைத்தபடி,

கார்த்திக்: பாடி திறிந்த கிளி பாதை மறந்ததடி பூமானே, ஆத்தாடி உன்னால கூத்தடி நின்னே, கேட்காத மெட்டெடுத்து பாடு பாடு, பஞ்சு வெடிச்சா அது காயம் காயம், நெஞ்சு வெடிச்சா அது தா...

திண்டிவனம் ராமமூர்த்தி : தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா, இன்று நீ தந்த பிச்சையிலே வளர்வேனம்மா, தாய் த...

இல.கனேசனைப் பார்த்து..

தமிழக முதல்வர் ஜெ : தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே தனிமையிலே...

இல.கனேசன் : லேசா லேசா நீ இல்லாமல வாழ்வது லேசா, நீண்ட கால உறவிது லேசா, லேசா லேசா நீ இல்லாமல வா..

வைகோ : வானத்தை பார்தேன் பூமியை பார்தேன் மனுசன இன்னும் பார்க்கலெயே, நான் 'பல நாள் இருந்தேன் உள்ளே', அந்த நிம்மதி இங்கில்ல, உள்ள போன அனைவருமே குற்றவாளி இல்லேங்க, வெளிய உள்ள அ...

வைகோவை பார்த்து நொந்து போய்,

கலைஞர் : அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, ஆசைகொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் கட்சியிலே.. அண்ணன் என்னடா, தம்பி என்னடா ...

திருவாளர் பொதுஜெனம் : போதும் போதும் நிறுத்துங்க, ஏதோ சந்தோசமா பாடுவிங்கன்னு பார்த்தால், லாவனி பாடிடிங்களே.

நொந்து கொண்டு கலைந்து செல்கிறார்கள்

Link to post
Share on other sites
 • 3 weeks later...

பெரிய முட்டாள்

ஒரு முறை விஜயநகர பேரரசர் தன் அமைச்சரவையில் கூடி இருக்கும் போது, அரேபிய வியாபாரி வந்தார், தன்னிடம் விலை உயர்ந்த குதிரை இருப்பதாகவும், அதை அரசருக்கு பரிசாக கொடுக்க இருப்பதாகவும் சொன்னார்.

அரசரும் அதை ஏற்றுக் கொண்டு, குதிரையை பார்வையிட்டு, அதன் மீது ஏறி சவாரி செய்தார், மிகவும் பிடித்து விட்டது, அத்தனை கம்பீரமான வெள்ளைக்குதிரை.

அரசரும் வியாபாரிக்கு தன் பரிசுகளை கொடுத்து, வியாபாரம் செய்ய அனுமதி கொடுத்தார். அமைச்சர் ஒருவர் அரசரிடம் "அரசே! குதிரை நன்றாக இருக்கிறது, இதன் விலை 1000 தங்க நாணயங்கள் தான், இது மாதிரி 100 குதிரைகள் வாங்க, நாம் இப்போவே பணத்தை கொடுத்தால், அடுத்த முறை கொண்டு வந்துவிடுவார்" என்று கூற, அரசரும் உங்கள் விருப்பம் போல் செய்யுங்க என்று சொல்லிவிட்டார்.

சில நாட்களுக்குப் பின்பு அரசர் தெனாலிராமனை அழைத்து, நம் நாட்டிலேயே பெரிய முட்டாள் யார் என்று கண்டுபிடித்து, நாளைக்குள் சொல் என்றார்.

அடுத்த நாள் தெனாலி ராமன் அரசனிடம் போய் தன்னுடைய கண்டுபிடிப்பை சொல்ல, அரசனுக்கு சரியான கோபம். எப்படி நீ அமைச்சரை பெரிய முட்டாள் என்று சொல்கிறாய் என்று கேட்டார்.

தெனாலிராமன்: அரசே! அரேபிய வியாபாரிக்கு குதிரைகள் வாங்கும் முன்பே 1 இலட்சம் பொன் கொடுத்தாரே அமைச்சர், அந்த வியாபாரி குதிரையோடு வருவானா, கண்டிப்பாக வர மாட்டான்" என்றார்.

அரசர் : ஒருவேளை அந்த வியாபார் குதிரைகளை கொண்டு வந்து கொடுத்தால்..

தெனாலி: அரசே! ஒரு சின்ன மாற்றம் தான் செய்ய வேண்டும், மிகப் பெரிய முட்டாள் அந்த வியாபாரி என்று மாற்ற வேண்டியது தான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

_________________

Link to post
Share on other sites
 • 2 weeks later...

மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத அண்டார்டிகா பகுதியில் தன்னந்தனியாக உலாவிக் கொண்டு ஒரு பெரிய ஜஸ் கட்டியை ஆராய்ந்து கொண்டு இருந்தார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி. அவரை நமது அண்டார்ட்டிக் பகுதி அதி சிறப்பு நிருபரான பண்டாரம் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று பேட்டி எடுத்தார். அப்பேட்டியில் சுப்பிரமணிய சுவாமி பல திடுக்கிடும் தகவல்களை அள்ளி விசினார். இதோ அவரது பேத்தலின் ஸாரி பேட்டியின் முழு விபரம். (இது ஒரு கற்பனைன்னு தனியா உங்களுக்கு சொல்லனுமா ?)

பண்டாரம்: என்ன சார் ரொம்ப நாளாக தமிழ் நாட்டுல நீங்க இல்லை. மக்கள் நகைச்சுவை கருத்துக்கள் இல்லாம தவிக்கிறாங்களாமே?

சுப்பிரமணியசுவாமி: எந்த மடையன் தமிழ்நாட்டுல இருப்பான். எங்க போனாலும் வெயில் கொளுத்துது. யாரைக் கேட்டாலும் தண்ணியில்லனு சொல்லுறானுங்க. ஒரு பக்கம் வை.கோ. விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்க தேவையில்லாமல் நடைபயணம் போறாரு. மற்றொரு பக்கம் கருணாநிதி ஏ.சி. அறையில உட்கார்ந்துக்கிட்டு தனது மகன், பேரன் சோடப்பூட்டி தயாநிதி நடத்துற சைக்கிள் பயணத்தை டி.வியில பார்த்துண்டு சேலத்துல மண்டல மாநாடு போடறாரு. இந்தக் கொடுமைய எதிர்த்து மாட்டு வண்டி பயணம் போகும் படி ஜெயலலிதாவுக்கு லெட்டர் போட்டேன். ஈமெயில் அனுப்பினேன். யாரும் கேட்கல, உருப்படாத ஆளுங்களா இருக்காங்க என்னத்த சொல்ல. அது தான் கோபத்துல இந்தப்பக்கம் நடந்தே வந்துட்டேன். ஆனா இங்க வந்தப்புறம் தான் தெரியுது. இத்தாலிக்கு சோனியா காந்தி இங்கு இருந்தும் பனிக்கட்டி கடத்தி இருக்காங்கன்னு ஒரு குரங்கு சொன்னது. எனக்கு எப்படி எல்லாம் ஆதாரம் சிக்குதுனு பாருங்க. இந்தியா போன உடனே கேஸ் போட்டு கலக்கப் போகிறேன் பாருங்கள்.

பண்டாரம்: பாராளுமன்றத்துல பாரதீய ஜனதா கட்சி இப்படி அமளி பண்ணிக்கிட்டு இருக்காங்களே இதுக்கு எல்லாம் என்ன காரணம். நீங்க இல்லாத காரணமா சார்........?

சுப்பிரமணியசுவாமி: பாராளுமன்றத்துல அமளி நடக்குறதுக்குக் காரணமே பாரதீய ஜனதாவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையில ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்குது. பாரதீய ஜனதா கட்சி கம்யூனிஸ்ட் காரங்களுக்கு ஏகப்பட்ட பணம் லஞ்சமா கொடுத்து இருக்காங்கனு எனக்கு செக் குடியரசு நாட்டில் இருந்து ஒரு தகவல் வந்து இருக்குது. இது ஒரு கூட்டு சதி. இந்த விஷயத்தை சொல்லலாமுனு சோனியா காந்திக்கு போன் செய்தேன். ஆனால் அவருக்குப் பதில அவரோட பேரன் போனை எடுத்து என்னிடம் பேசுகிறார். இந்த கூத்த யாரிடம் சொல்ல. அது தவிர நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் பொழுது வாஜ்பாய் எப்படி எல்லாம் மறைமுக சைகை செய்யுறாருனு கூர்ந்து பார்த்தாலே தெரியும். இத எல்லாம் யாரு பார்க்குற. எல்லாம் செம்பறியாட்டுக் கூட்டம் மாதிரி கேண்டினில் ஓசியில பிரியாணி சாப்பிட்டுட்டு வர்றாங்க. இதுக்காகவே பெரிய போராட்டம் நடத்தலாமுனு யோசிக்கிறேன். கூட்டம் சேருமா என்பது தான் என்னோட கவலை. இது தவிர பாராளுமன்றத்துல நான் இல்லாத காரணத்தினாலும் அதிகமா சத்தம் போடுறாங்க என்ற உண்மைய சொன்ன உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பண்டாரம்: தமிழ் சினிமா பற்றி என்ன நினைக்கிறீங்க? ஆபாசமாக அதிக படம் வருதே இது எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா?

சுப்பிரமணியசுவாமி: நான் சின்னப்பையனாக இருக்கும் பொழுதே தமிழ் சினிமாவை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுத்துக் கிட்டு இருக்கேன். ஆனால் அதை யாரு கேட்குறா சொல்லுங்கள். கருணாநிதியை கேட்டால் நான் வசனம் எழுதுறதால தான் ஆட்சியைப் பிடிக்க முடியுதுனு சொல்றாரு. ஜெயலலிதாவைக் கேட்டால் சசிகலாவை விட்டு துளைத்து விடுவேன் என்று என்னோட பி.ஏ சந்திரலேகவுக்கு மிரட்டல் விடுறாங்க. ஆனால் தரமணியில எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் மாற்றப்பட்டதற்கு நான் தான் காரணம். அதே மாதிரி ரஜினி தன்னோட ஜக்குபாய் படத்தை நிறுத்தி வைத்து இருப்பதற்கும் நான் தான் காரணம். படத்தை எடுத்தா முத்திரைத் தாள் மோசடியில் ரஜினியைப் பற்றி உலக நாடுகள் விசாரிக்க வேண்டும் என்று ஜா.நா சபையில மனு கொடுக்கப் போறாத ஒரு கடிதம் போட்டேன். அதனால தான் ரஜினி பயந்து போய் ஜக்குபாயை எடுக்காம போட்டு இருக்காரு. இப்படி என்னால முடிந்த சமூக சேவைகளை யாருக்கும் தெரியாம செய்து கொண்டு தான் இருக்கிறேன். கேப்டன் விஜயகாந்த ஏதோ அரசியலுக்கு வரப் போறதா சொன்னாரு என்ன ஆச்சுனு தெரியல. அவரு அரசியலுக்கு வந்து புது கட்சி ஆரம்பிக்குறதுக்குப் பதில என்னோட ஜனதா கட்சிக்கு தலைவராக வரலாம். ஏன் என்றால் என் கட்சிக்கு செலவு செய்ய காசு இல்லை.

பண்டாரம்: இந்தியாவுக்கு ஒலிம்பிக்குல முதல் வெள்ளி பதக்கம் கிடைச்சு இருக்குதே அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?

சுப்பிரமணியசுவாமி: துப்பாக்கி சுடுவதில் இந்தியா பதக்கம் வாங்கி இருக்குறது எல்லாம் என்னைய மாதிரி ஆளுங்க இருக்குறதுனால தான். ஆனால் மத்த போட்டியில பாருங்க எல்லாம் மண்ணக்கவ்வுறானுங்க. சின்ன நாடான கியூபா கூட பதக்கத்தை அள்ளுது. ஆனால் நம்ம ஆளுங்க நல்லா சாம்பார் வடையை சாப்பிட்டுட்டு பதக்கம் வாங்காம சோகமாக இருக்காங்க. இதுக்கு இரண்டு பேர் காரணம். ஒன்று மத்திய அரசு நிலையில்லாதது. மற்றொன்னறு என்னிடம் ஆலோசனை கேட்காதது. என்னிடம் ஆலோசனை கேட்டு இருந்தால் பின்லேடனிடம் சொல்லி நான்கு பதக்கம் வாங்கிக் கொடுத்து இருப்பேன்.

பண்டாரம்: தமிழ்நாட்டுல அ.தி.மு.க அரசைக் கவிழ்க்க சதி நடக்குதாமே உண்மையா? உங்களுக்கு தெரியாம இருக்காதே?

சுப்பிரமணியசுவாமி: கவிழ்க்க அது என்ன கப்பலா? கருணாநிதி தன்னையே அதி புத்திசாலியா நினைக்குறாரு. பிகாருல ஆட்சிய கவிழ்க்கப் போன முந்தைய அரசுகளை குறை சொல்லிக்கிட்டு இருந்தாரு. இப்போ தமிழ்நாட்டுல ஆட்சியக் கவிழ்க்கனுமுனு எல்லா ஏற்பாடும் செய்து கொண்டு இருக்காரு. ஆட்சிய கவிழ்க்க அவரு எல்லாரிடமும் யோசனை கேட்டுக்கிட்டு இருக்காரு. என்னிடம் சொன்னால் ஒரு டீ பார்ட்டி வைத்து ஒரு நிமிடத்தில் கவிழ்த்தி விடுவேன். ஆனால் என்னிடம் யோசனை கேட்டு அடுத்து வருகின்ற தேர்தலில் எனக்கு 3 தொகுதி ஒதுக்கச் சொல்லுங்க, தமிழக அரசை கவிழ்த்தி விடலாம். இல்லாவிட்டால் சர்பத் பார்ட்டி வைத்து மத்திய அரசை கவிழ்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். என்னை யாரும் குறை சொல்லக் கூடாது.

பண்டாரம்: ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் நலனுக்காக போராட்டம் எதாவது நடத்துற எண்ணம் இருக்கிறதா?

சுப்பிரமணியசுவாமி: ஒட்டு மொத்த தேசத்துக்கும் போராட்டம் நடத்த நான் என்ன காந்தியடிகள் இல்லை. ஆனால் என்னால் சிங்கப்பூராக மாற்றப்பட்ட மதுரை தொகுதியில் இட்லிக் கடை வைக்கக் கூடாதுன்னு அடாவடி பண்ணுதாங்கனு இப்ப கூட புறாவிடம் தூது அனுப்பியுள்ளனர். மதுரைக்குப் போன உடனே பெரிய அளவில இட்லிக் கடைகளை திறந்து போராட்டம் நடத்தப் போகிறேன். முடிந்தால் நியூஸ் கலெக்ஷனுக்கு வந்து சப்போர்ட் பண்ணுங்க. சாப்பிட இட்லி தர்றேன்.

சரி சார் உங்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

செய்தியை அனுப்பிட்டு உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆனார் பண்டாரம்.

Link to post
Share on other sites

நாய் வாடகைக்கு கிடைக்குமா?

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,

“இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”

“முதலில் செல்வது எனது மனைவி.”

“என்ன ஆயிற்று அவருக்கு?”

“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”

“இரண்டாவது பிணம்?”

“அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், “இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”

அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய் நில்லுங்கள்”

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெருசலேத்தில் மனைவி

ஒரு கணவனும், மனைவியும் ஜெருசலேத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் இருந்தபோது, மனைவி இறந்துவிட்டாள். அங்கிருந்த ஒருவர், ‘உனது மனைவியை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், 5,000 டாலர் செலவாகும். இங்கேயே அடக்கம் செய்துவிட்டால் 150 டாலர் மட்டும்தான் செலவாகும்” என்றார்.

ஆனால் கணவன் சொந்த ஊருக்கே கொண்டு செல்லப்போவதாகக் கூறினான்.

“மனைவி மீது அவ்வளவு பாசமா?”

“இல்லே, ரொம்ப நாளைக்கு முன்பு இங்க ஒருத்தரை (யேசு) புதைச்சாங்க. அவர் 3 நாள் கழிச்சி உயிரோடு வந்துட்டாரு. அந்த ரிஸ்க்கை எடுக்க நான் விரும்பலை”

Link to post
Share on other sites

மீண்டுமொரு தென்னாலிராமன் கதை!!!

கூன் வண்ணான்

ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள்.

இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான்.

இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான்.

போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன்.

இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார்.

உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார்.

அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர்.

அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான்.

ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான்.

அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான்.

அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான்.

உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னா பின்னமாகியது.

அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர்.

தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மன¢னர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே........ பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார்.

அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார்.

Link to post
Share on other sites

பாடல்களும் அதன் நையாண்டி பதில்களும்

நான் யாரு எனக்கேதும் தெரியலையே!

முதல்ல ஆடியன்ஸுக்கே தெரியலை. முன்னாலே வா..

ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்

அய்யோ பாவம்! திக்கு வாய் போலிருக்குது!

காலங்களில் அவள் வசந்தம்

அப்போ கோலங்களிலே யாரு தேவயானியா?

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா

உங்கப்பா என்ன கேஸ் கம்பேனிலியா வேலை செய்றாரு?

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்டேன்

மத்தவங்களுக்கெல்லாம் என்ன மூக்கிலுயா கேக்கும்?

மரத்தை வச்சவன் தண்ணீ ஊத்துறான்

மத்தவங்களேல்லாம் என்ன மண்ணெண்ணையா ஊத்துறாங்க?

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ?

அவரை இப்ப யாசர்பாடிக்கு ட்ரான்ஸ்வர் பண்ணிட்டாங்க

தூது வருமா தூது வருமா

முன்னாடியிருந்து ரெண்டு தொடப்பம் வருமா? வேற பாட்டு பாடு

நேத்து ராத்திரி யம்மா

இன்னைக்கு ராத்திரு உங்கப்பாவா??

தகடுன்னா தமிழ்நாட்டுக்கு தெரியும்

அப்போ அலுமினியம் ஆந்த்ரா வரைக்கும் தெரியுமா?

மே மாசம் தொண்ணுதெட்டில் மேஜர் ஆனேனே!

அப்போ எப்போ சுந்தர்ராஜன் ஆனீங்க?

ஒளியிலே தெரிவது தேவதையா?

டேய் நல்லா பாரு அது குண்டு பல்ப்பு

என்ன சத்தம் இந்த நேரம்?

அது ஒன்னும் இல்லை. வயிறு கொஞ்சம் சரியில்லை

Link to post
Share on other sites
 • 2 weeks later...

பாண்டு : ஜோ, நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே?

ஜோ : ம்ம்ம்….ஏழு சாப்பிடுவேன்.

பாண்டு : அட மக்கு, முதல் சப்பாத்தி சாப்பிட்டப் பிறகு, அத வெறும் வயிறுன்னு சொல்ல முடியாதே!! அப்புறம் எப்படி ஏழுன்னு சொல்லுவ!!!

ஜோ : அதானே!!!!

(வீட்டுக்குச் சென்றவுடன், மனைவியிடம்…)

ஜோ : நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே?

மனைவி : அதுக்கென்ன….அஞ்சு சாப்பிடுவேன்.

ஜோ : ஓ!!! நீ மட்டும் ஏழுன்னு சொல்லிருந்தா உனக்கு ஒரு சூப்பர் பதில் சொல்லிருப்பேன். சே!

***

நேர்காணல் அதிகாரி : நீங்கள் எங்கே பிறந்தீர்கள்?

ஜோ : செக்கோஸ்லேவேகியா சார்.

அதிகாரி : அதற்கு ஆங்கிலத்தில் கரெக்ட் ஸ்பெல்லிங் சொல்லுங்கள்.

ஜோ : ஓ..சாரி சார்….மறந்துட்டேன். நான் கோவாவில பிறந்தேன்.

***

அலெக்ஸாண்டர் : என்னோட அகராதியில "முடியாது" என்ற வார்த்தையே இல்லை.

ஜோ : அகராதியை வாங்கும்போதே பார்த்து வாங்க வேணாமா? இப்போ சொல்லி என்ன பண்றது!

***

நிருபர் : ஜாலியன் வாலாபாக் பத்தி என்ன நினைக்கிறீங்க?

அரசியல்வாதி ஜோன்ஸ் : ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, கொட்டப் பாக்கு போட்டிருக்கேன். இந்த ஜாலியன் வாலாபாக்கைப் போட்டதே இல்லியே!

***

டிரைவர் : சாரி சார்…பெட்ரோல் உறைஞ்சு போச்சு. இனிமேல் வண்டி முன்னாடி ஒரு அடிகூட நகராது.

ஜோ : அப்படியா.. பரவால்ல.. ரிவர்ஸ் எடு.. வீட்டுக்காவது போய்ச் சேரலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிதியடிச் சடங்கு.

ஒருமுறை அரசர் கி. தே. ராயர்( கிருஷ்ணதேவராயர் என எழுத அலுப்பாக இருக்கு. அதனால் இனி கிருஷ்ணதேவராயரின் முழுப் பெயரையும் கிருஷ்ணதேவராயர் என்று எழுதாமல் கி. தே. ராயர் என்றே குறிப்பிடுகிறேன். நீங்கள் அலுப்புப் படாமல் கிருஷணதேவராயர் என்றே வாசிக்கவும்.) தெனாலிராமனை வெகு அலட்சியமாகப் பேசிவிட்டார். ராமனும் மிக மனம் வருந்தினான்.

அரசர்: என்ன நீ பெரிசாக உன் புத்திசாலித் தனத்தைக் காட்டுகிறாய்? என்னைச் சிரிக்க வைக்க அந்த நேரத்தில ஏதோ சேட்டைகள் செய்கிறாய். நாங்களும் சிரித்து வைக்கிறோம்.

தெ.ராமன்: அரசே நீங்கள் சொல்வது எனக்கு வேதனையாக இருக்கிறது. சரி! இனி நீங்களே அசந்து போகிற அளவுக்கு என்னால செய்ய முடியும்! அதற்கு தாங்கள் சம்மதித்தால் இதை ஒரு சவாலாகவே செய்கிறேன். ஆனால் இவ் விடயம் நம் இருவருக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றான்.

அரசர்: என்ன செய்வாய் முன்பு என்னையும் ராஜகுருவையும் ஒன்றாக அடைத்து வைக்க ஏதோ செய்தாயே அப்படியா?

தெ.ராமன்: இல்லையில்லை! நான் ஒருமுறை செய்வது போல் மறுமுறை செய்வதில்லை.

அரசர்: அப்படியாயின் சரி! எங்கே உன் திறமையைக் காட்டலாம்.

தெ.ராமன்: சரி! வெகு சீக்கிரமே செய்து காட்டுகிறேன்.

அரசர்: என்ன செய்யப் போகிறாய்? நீ பெரிய யுக்திக்கரெனாச்சே! முடிந்தால் முன்கூட்டியே என்னிடம் சொல்லிவிட்டுத்தான் செய்யேன் பார்க்கலாம்? ம்...ம் அதுதான் உன்னால் முடியாதே! என நகைத்தார்.

தெ. ராமன்: ஏன் முடியாது. இம்முறை சொல்லிவிட்டே செய்கிறேன். என்ன செய்வது என யோசிக்கக்கூட தாங்கள் அவகாசம் தரவில்லை! இருந்தாலும் பரவாயில்லை. திடீரென ஒரு யோசனை இப்போதுதான் வந்தது. அதைச் சொல்லிவிட்டே செய்கிறேன்.

அரசர்: சொல்...சொல்..'ஆர்வமுடன்"

தெ.ராமன்: மகாமன்னரே! தங்களது விருப்பத்துக்குரிய யாராதது ஒருவர், உங்களைத் தன் மிதியடியால்(செருப்பால். கொஞ்சம் மரியாதையாக மிதியடி) மூன்றுமுறை அடிக்கும்படி செய்கிறேன். தவறினால் எனக்குச் சரியான தன்டனை தாங்கள் தரலாம்.

அரசர்: என்ன! நீ சொல்வதைப் பார்த்தால் எனக்கு வேண்டியவரைக் கொன்டே என்னைச் செருப்பால் அடிப்பிக்கப் போவதாகச் சொல்கிறாய்! அப்படித்தானே?

தெ. ராமன்: தாங்கள் அடியேனை மன்னிக்க வேண்டும். நான் அப்படித்தான் சொன்னேன். அது என்னால் முடியும் என்றே நினைக்கின்றேன். என்றான் பணிவாக... .

அரசர்: என்னது? முடியுமா உன்னால்? முடிப்பாயா? ... எங்கே செய் பார்ப்போம். அப்படிச் செய்யாவிட்டால் உன்னைத் தொலைத்துவிடுவேன் தொலைத்து...

தெ.ராமன்: அரசே! இது நமக்குள் இருக்கட்டும். ஒரு மூன்றுமாதகால அவகாசம் கொடுங்கள். சில சமயம் நான் தோற்று என்னைத் தன்டிக்கும் நிலைவந்தால்கூட இது வெளியே வர வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

அச் சமயத்தில் அரசருக்கும் மலைநாட்டரசன் மகளுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. ராமன் அந்த அரசனிடம் சென்றான்.

தெ.ராமன்: மலைநாட்டுமன்னா! எங்கள் அரசர் கி.தே. ராயர் சாத்திர சம்பிரதாயப்படி எல்லாம் நடக்க வேண்டுமென்பதில்பெருவிருப்ப

Link to post
Share on other sites
 • 1 month later...

செவிடா, இல்லையா?

ஒரு மனிதருக்கு கொஞ்ச நாளாகவே ஒரு சந்தேகம்.. தன் மனைவிக்கு சரியாக காது கேட்கவில்லையோ என்று. அதை நேரடியாக அவளிடம் கேட்பதற்கும் அவருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால்தானே அதற்கு ஏற்ற வைத்தியம் பார்க்க முடியும் என்றும் அவருக்கு குழப்பமாக இருந்தது.

ஒன்றும் புரியாமல் தனது குடும்ப டாக்டரிடம் ஆலோசனை கேட்டு போனார் அந்த மனிதர். டாக்டர் ஒரு எளிய பரிசோதனை செய்து பார்க்கும்படி அவரிடம் சொன்னார். “உங்க மனைவியிடமிருந்து சுமார் 50 அடி தூரத்தில் நின்று சாதாரண குரலில் அவரிடம் ஏதாவது பேசுங்கள். அதை அவர் காதில் வாங்கிக் கொண்டு பதில் சொல்கிறாரா என்று பாருங்கள். இல்லையென்றால், 10 அடி நெருங்கி 40 அடி தூரத்தில் நின்று பேசுங்கள். அதற்கும் பதில் இல்லை என்றால், இன்னும் 10 அடி நெருங்கி சென்று பேசுங்கள். இப்படியாக தூரத்தை குறைத்துக் கொண்டே சென்று, எவ்வளவு தூரத்தில் இருக்கும்போது அவர் பதில் சொல்கிறார் என்பதை கவனித்து, என்னிடம் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

அன்று மாலை அந்த மனிதர் வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்’ என்று நினைத்த அவர், 50 அடி தூரத்தில் நின்று, சாதாரணமாக பேசும் குரலில், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை.

40 அடி தூரத்திற்கு நெருங்கி சென்று, மீண்டும், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை.

30 அடி தூரத்திலும் அதே கேள்விக்கு பதிலில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிச் சென்று, அவர் மனைவியின் முதுகிற்கு பின் நின்று கொண்டு “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார்.

கோபத்துடன் திரும்பிய அவரது மனைவி சொன்னாள், “இதோட அஞ்சு தடவை சொல்லிட்டேன், கோழிக்கறி சாப்பாடு என்று. என்னாச்சு உங்களுக்கு?”

இதனால் அறியப்படும் நீதி யாதெனில், மத்தவங்க கிட்ட குறை கண்டுபிடிக்க போகுமுன்னாலே நம்ம கிட்டே அதே குறை இருக்கா என்று பார்த்துக் கொள்வது நல்லது.

Link to post
Share on other sites
 • 2 weeks later...

பல் மருத்துவர்

.

பல் மருத்துவர் அறையில் பெண்மணி ஒருவர் சிகிச்சைக்காக காத்திருந்தார். அவருடை முறை வந்ததும், மருத்துவரை பார்க்கச் சென்றார்.

.

மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது கைக் கடிகாரத்தை பார்த்த டாக்டர், அந்த பெண்மணியிடம் வழக்கமாக பல்லை நான் பிடுங்கும் போது, பலமாக கத்துவீர்களே அதுபோல கத்துவீர்களா எனக் கேட்டார்.

உடனே அந்த பெண்மணி, இந்த சிகிச்சை எனக்கு பழகிவிட்டது. இப்போது பல்வலி அதிகம் இல்லை எனவே கத்தமாட்டேன் என்றார்.

அதைக் கேட்ட டாக்டர் இல்லை இல்லை இந்த முறை நீங்கள் தயவு செய்து அதுபோல் கத்துங்கள் என்றார்.

அந்த பெண்மணி புரியாமல் ஏன் என்று கேட்க, டாக்டர் எனக்கு அவசரமாக வேலை இருக்கிறது. வெளியே நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர். உங்கள் சத்தத்தை கேட்டு பாதிபேர் ஓடி விடுவார்கள் என்று பதில் அளித்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாபக மறதி .

.

நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஞாபக மறதி நோயால் அவதிப் பட்டு வந்தார். இந்த பிரச்சனைக் காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. .

.

இதனையடுத்து அவரது மனைவி டாக்டரைச் சென்று பார்க்குமாறு அவரிடம் கூறினார். அவரும் அதுபோல, டாக்டரை பார்க்க சென்றிருந்தார்.

நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் டாக்டரை பார்க்கச் சென்றார். அங்கே இருந்தவர் அவரைப் பார்த்து வியப்படைந்து, என்ன பிரச்சனை என்னை தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர், எனக்கு கொஞ்ச நாட்களாக ஞாபக மறதி பிரச்சனை இருக்கிறது அதனால்தான் வந்தேன் என்று கூறினார்.

உடனே, அந்த நபர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் டாக்டர் இல்லை உங்கள் வழக்கறிஞர் என்று பதில் அளித்தார்

Link to post
Share on other sites

கை நடுக்கம்

.

நடுத்தர வயது மனிதர் ஒருவர் மருத்துவரை பார்க்க சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் மருத்துவ அறைக்கு சென்றார். மருத்துவர் அவரை பற்றி பொதுவான தகவல்களை விசாரித்து விட்டு உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார்.

.

அதற்கு நடுத்தர வயது மனிதர், எந்த வேலையையும் தன்னால் சரியாக செய்ய முடிவதில்லை என்று கூறினார். ருத்துவர் உடனே, ஏன் அப்படி என்று கேட்டார்.

அதற்கு அவர், எனது கை எப்போதும் நடுங்கிக் கொண்டிருப்பதால்தான் பிரச்சனை என்று கூறினார்.

மருத்துவர், உங்களுக்கு குடிபழக்கம் உண்டா? நீங்கள் நிறைய குடிக்கிறீர்களா? என்று கேட்டார். தற்கு அவர், நானே நினைத்தாலும் நிறைய குடிக்க முடிவதில்லை. கிளாசில் இருக்கும் மது கை நடுக்கத்தால் கொட்டி விடுகிறது என்றார். :icon_mrgreen:

Link to post
Share on other sites
 • 2 weeks later...

குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. ..

நீதிபதி : ஆமா .. ..

குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. ..

------------------------------------------------------

தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.

சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?

------------------------------------------------------

சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.

பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.

சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.

------------------------------------------------------

சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.

நண்பர்: ஏன்?

சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது

நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?

சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே.

------------------------------------------------------

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.