Jump to content

அதிசயக்குதிரை


Recommended Posts

கவுண்டமணி, விஜய டீ.ராஜேந்தர் பங்கு பெறும் டெவில் ஷோ.

டெவில் ஷோவுக்கு வர அனைத்து நடிகர், நடிகைகளும் பயந்து கொண்டிருக்கும்

வேளையில் அதை அறிந்த டீ.ஆர் தான் அதில் கலந்துகொண்டால் வீராச்சாமிக்கு

இலவசமாக பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற நப்பாசையில் கவுண்டருக்கு போனை

போடுகிறார்.

கவுண்டரின் போன் அலறுகிறது.

இந்த போன எடுத்தா நச்சு நச்சுன்னு இவனுங்க தொல்ல தாங்கமுடியலப்பா! எந்த

பன்னிக்குட்டி ராமசாமி லைன்ல இருக்கானோ என்று

கவுண்டர்: ஹலோ

டீ.ஆர்: "தூங்கும்போது ஆட்டணும்டா காலு காலு

இல்லாட்டி விடிஞ்சிபுட்டா ஊத்திடுவான் பாலு பாலு"

கவுண்டர்: டேய் யார்ரா நீ பேர கேட்டா ஊள உடற? மரியாதையா பேர சொல்லு

இல்லாட்டி படுவா படுக்க பேன் பாத்துபுடுவேன்.

டீ.ஆர்: அழகுக்கு ஒரு அரவிந்தசாமின்னா வீரத்துக்கு இந்த வீராச்சாமி வெற்றிகரமா

ஓடிட்டு இருக்கற வீராச்சாமி ஹீரோ சார். டெவில் ஷோல என்னையும் சேத்துக்குங்க சார்.

கவுண்டர்: ஆஹா ஏழரை போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் கேக்குதே, இத

சேக்கலாமா வேணாமா என்று கலவரமாகிறார். நம்ம திரையுலக வாழ்க்கைல இவன

மாதிரி எத்தனை பேர பாத்திருப்போம். வா மகனே இன்னிக்கு உனக்கு மொத்தமா

கஞ்சி ஊத்தறேன். உடனே கெளம்பி வா.

டேய் பசங்களா செட் ரெடி பண்ணுங்க, லைட்டு ஆன் பண்ணுங்க ஒரு வெயிட்டான

பார்ட்டி வந்துகிட்டு இருக்கு.

டேய் இங்க இருந்த ஆடியன்ஸ் எங்கடா ஒருத்தனையும் காணும். யாருமே இல்லன்னா

ரொம்ப கேவலமா போயிடுமே. எவனாச்சும் நாலு பேரை கூப்பிடுங்கடா...

சார் நீங்க போன் பேசிட்டு இருக்கும்போதே இன்னிக்கு யார் இன்னிக்கு கெஸ்ட்னு

தெரிஞ்சி போச்சு அப்பவே எல்லாரும் எகிறி குதிச்சி ஓடி போயிட்டாங்க சார்.

அப்ப நான் தனியா மாட்டிகிட்டனா... என்று யோசித்துக்கொண்டிருக்கும்போ

Link to comment
Share on other sites

உலகப் போர்

ஆசிரியர்: 2ம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?

மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஈ மொ‌ய்‌க்கறது

டாக்டர் என் நெத்தியில ஈ ஒண்ணு வந்து உக்காந்துட்டு போக மாட்டேங்குது!

அது செத்த ஈ. ஒண்ணும் தொந்தரவு பண்ணாதே?

அது தொந்தரவு பண்ணல்ல டாக்டர், அத மொய்க்கறதுக்கு ஒரு 200 ஈ வருது பாருங்க அதுதான் பிரச்சனையா இருக்கு!

டாக்டர்:?1?1

----------------------------------------------------------------------------------------------------------------------------

செட் பல்

உங்க பல் சுத்தமா டேமேஜ் ஆகியிருக்கு. செட் பல்தான் வைக்கணும், அதுக்கு 10000 ரூபா ஆகும்.

10000 ரூபா ஆகும்னா அதுக்கு நான் ஒரு நல்ல நெக்லஸ் எடுத்துடுவேனே டாக்டர்.

ஆனா உங்க சிரிப்பே போயிடுமே.

நெக்லஸ் போட்டுகிட்ட அப்புறம் யார் என்னோட பல்ல பாக்கப்போறாங்க டாக்டர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------

மும்தாஜ்

ஷாஜகான் மும்தாஜ் நினைவாக தாஜ்மகால் கட்டினான்....

மடப்பய... நானா இருந்தா மும்தாஜ் நினைவாக அவ தங்கச்சிய கட்டியிருப்பேன். :rolleyes:

Link to comment
Share on other sites

கந்தப்புவும் - சோமண்ணையும்

கந்தப்பு: சுந்தரத்தானின் மனுசிக்கு கழுத்து வலியென்று டாக்குத்தரிட்டபோனால். அவர் "வெயிற்றை" குறைக்கச்சொல்லி சொல்லுகிறாராம்

சோமண்ணை: சுந்தரத்தானின் மனுசி ஓல்லித்தடி மாதிரி. அதிலையும் இன்னம் வெயிற்றை குறைச்சால் எப்பிடியிருக்கும்?

கந்தப்பு: டொக்டர் சொன்னது மனுசியின்ற வெயிற்றை இல்லையாம்

சோமண்ணை: அப்ப எதையாம் ?

கந்தப்பு: சுந்தரத்தானின் மனுசியின் கழுத்தில இருக்கிற 70 பவுண் தாலிக்கொடி 25 பவுண் தங்கச் சங்கிலியின்ர வெயிற்றாம்.

சோமண்ணை: ???!!!...

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கந்தப்பு: ஐரோப்பிய நாட்டில் வாழும் எங்கட பெண்டுகள் இப்ப தங்கட இனத்தவரை கண்டால் கை எடுத்து கும்பிட்டு அதோட கை குலுக்கிதான் வரவேற்கினமாம்.

சோமண்ணை: தமிழ்கலாச்சாரமும் ஐரோப்பிய கலாச்சாரத்தையும் கடைப்பிடிக்கினம் எண்டு சொல்லுங்கோ !

கந்தப்பு: கலாச்சாரம் கிலாச்சாரம் கலக்கவில்லை. கையெடுத்து கும்பிட்டால் இரண்டு கையிலும் எத்தினை தங்க காப்பு இருக்கு எண்டு தெரியும் கைகுலுக்கினால் எவ்வளவு வெயிற் எண்டு கைகுடுக்கிறவருக்கு புரியும். இது தான் கும்பிட்டு குலுக்கிற சமாச்சாரம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கந்தப்பு: நான் குடிச்சா, எனக்கு என் மனைவி யாருன்னு கூடத் தெரியாது!

சோமண்ணை: ஏன்?

கந்தப்பு: நான் கவலையை மறக்கத்தானே குடிக்கிறேன்...

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

கந்தப்பு: எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறுதாம்!

சோமண்ணை: ஓம் ஓம் எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறும். எங்கட சனம் ஐரோப்பாவைவிட்டு போனால்.. இங்க கிலீனிங் வேலைக்கு ஆள் இல்லாமலும் ஐரோப்பா நாறும்.

கந்தப்பு: ???!!!...

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

கந்தப்பு: எங்கட சுந்தரம் சீட்டுப்பிடித்தான் நட்டப்பட்டான். உண்டியல் நடத்தினான் நட்டப்பட்டான். கடைபோட்டான் நட்டப்பட்டான்.

சோமண்ணை: இப்ப நல்ல பிஸ்னஸ் நடக்குதாம் அப்படியெண்டால் என்ன பிஸ்னஸ் செய்கிறான்?

கந்தப்பு: கடைக்குள்ள உண்டியலை வைச்சு கடையை கோயிலாக்கிப் போட்டானாம்.

Link to comment
Share on other sites

ஐடியா ஐயாசாமி

நான் சீட்டு பிடித்தால் சேருறாங்களும் இல்லை!

என்னை சீட்டில சேக்கிறாங்களும் இல்லை!!

பிள்ளையள் நீங்கள் என்னை மறந்தாலும் நான் உங்களை மறக்க மாட்டன். ஏன் தெரியுமே? என்ர இனத்தை என்னால் மறக்க முடியுமே! தான் ஆடாவிட்டாலும் தன்ர சதை ஆடும் எண்டகனக்கா எங்கட இனம் என்ர இனம்தானே. ஆனால் சிலசனம் இங்க ஐரோப்பாவில தன்ர இனத்தை கண்டால் நாயை கண்ட நாய் உறுமின கணக்கா உறுமுதுகள். இதைத்தான் நாய்க்குணம் எணடு சொல்லுறதோ தெரியவில்லை.

அது கிடக்கட்டும். இப்ப நான்சொல்லவந்த விசயத்தை விட்டுட்டு எதேதோ அலட்டுறன். இதைத்தான் எங்கடசனம் அலட்டல் குணம் எண்டு சொல்லுறவையோ தெரியாது.

நேற்று எங்கட சுந்தரத்தான் கவலையாய் வந்தான் கவலை என்டாலும் கவலை பேய்க்கவலை கண்டியலே. என்னடாப்பா சுந்தரம் கவலையாய் வாறாய் ஏதும் காசுப்பிரச்சனையோ எண்டு கேட்டன்.

இல்லை அண்ண என்னை ஒருத்தரும் சீட்டுக்கு சேர்க்கினமில்லை எண்டான்.

உன்னை யாரடாப்பா சீட்டுக்கு சேர்க்கமாட்டன் எண்டது நீயும் வேலை உன்ர மனுசியும் வேலை அதால நீ ஒழுங்காய் சீட்டுக்காசை கட்டுவாய்தானே எங்கட ஊரிலை எண்டால் இரண்டுபேரும் வேலைசெய்தால் கட்டாயம் அவர்களுக்குத்தானே முதலிடம் எண்டு சொல்லுவினம்.

அது எல்லாம் ஊரிலை தான் அண்ண இங்கசீட்டுப்பிடிக்கிற ஆட்கள் சீட்டுப்பிடிக்க வாற ஆட்களிண்ட நிலமையை அவையலுக்கு தற்சமையம் உள்ள கஷ்டங்கள் இதுகளை பார்த்துத்தான் சேர்ப்பினம் எண்டான். நல்ல கொள்கையாய் இருக்கு கஷ்டப்படுபவர்களுக்கு முதலிடம் கொடுக்கிறவன்களுக்கு கோவில் கட்டியல்லே கொண்டாட வேண்டும் எண்டன்.

தாச்சியார் எண்டால் சீட்டுக்கு பொறுப்பா ஒருத்தர் இருப்பார். அவறைத்தான் உந்தப்பேர் சொல்லிக் கூப்பிடுறது. உந்தப்பதவி கிடைச்சவையில எழும்பின் ஆட்களும் உண்டு தலைகுப்பிற விழுந்த ஆட்களும் உண்டு பாருங்கோ.

நான் அவனிட்ட கேட்டன் கஷ்டப்பட்ட ஆட்களைத்தானே சீட்டுக்கு சேற்ப்பம் எண்ட கொள்கை உள்ள ஆட்களுக்கு சப்போட்டா கதைச்சால் அதுக்கு நீ ஏன் கோவப்படுகிறாய் எண்டு கேட்டன்.

அப்பதான் அவன் விஷயத்தை வடிவாய் விபரமாய் சொன்னான்.

அண்ணை ஊரிலைதான் இரண்டுபேரும் வேலை செய்தால் சீட்டுக்கு சேர்ப்பினம். இங்க அப்படியில்லை. இங்க சீட்டுக்குசேருபவர் குடும்பத்திலை ஒரு ஆள்தான் வேலை செய்ய வேணும். அதோட சீட்டுக்கு சேருறவற்றை குடும்பத்திலையாறாவது வந்து கொழும்பிலை லொட்ஐpலையோ இல்லாட்டில் ரஷ்சியாவிலையோ தாய்லாந்திலையோ நீண்டு இங்கவர அவதிப்பட்டுக் கொண்டிருக்கவேணும். அடிக்கடி ரெலிபோன் அடித்து காசு அனுப்பச்சொல்லி கேட்டபடி அறுக்கவேணுமாம் இப்படியான பிரச்சனை உள்ள ஆட்களைத்தான் சேர்ப்பினமாம் எண்டு சொன்னான் பாருங்கோ.

நீ சொல்லுறது என்க்குப்புரியுதில்லை சுந்தரம் இதுக்கும் சீட்டுக்கும் என்ன தொடர்பு எண்டு கொஞ்சம் விளக்கி சொல்லடாப்பா? எண்டு கேட்டன்.

இப்படியான கஷ்டத்திலை இருக்கிறவன்கள் நல்லாக் கழிச்சு கேட்டு சீட்டை எடுத்து அனுப்புவான்கள். அப்பத்தானே தாச்சியாருக்கும் மற்ற சீட்டுக்காறறுக்கும் நல்ல லாபம். அதைவிட்டுட்டு எங்களைப்போல் இரண்டு பேரும் வேலை செய்தால் கடைசியாய்தான் சீட்டை எடுப்பம் எண்டிட்டு என்னை சேர்க்க மாட்டன் என்கிறான்கள் எண்டான்.

இப்பத்தான் அவன்றை உண்மையானகவலை என்னவெண்டு எனக்க விளங்கிச்சிது. என்க்கு விளங்கியதை உங்களுக்கு விளக்கி சொல்லிப்போட்டன்.

கஷ்ரப்பட்டவன் சீட்டுப்போட்டு சீட்டால் உயர்ந்தது அங்கே கஷ்ரப்பட்டவனை சீட்டில் சேர்த்து சேர்த்தவன் உயர்ந்தது இங்கே.

திருக்குறளை எழுதின வள்ளுவர் இப்ப இங்க வந்தால் இப்பிடித்தான்குறள் எழுதியிருப்பார் பாருங்கோ.

ஐரேப்பாவிலே சீட்டு பிடிக்கிறதுக்கு எங்கட ஆட்கள் புதுப்புது சட்டதிட்டம் கொண்டுவந்திட்டினம்.

சீட்டு பிடிக்காதவனுக்கும் வட்டிக்கு விடாதவனுக்கும் மதிப்பில்லை. அந்த காலத்திலை படிச்சவனுக்குத்தான் மதிப்பு. இந்தகாலத்திலை ஐரேப்பாவிலே பிடிச்சவனுக்கும் விட்டவனுக்கும் தான் மதிப்பு. பிடிச்சவன் என்டால் சீட்டு விட்டவன் எண்டால் வட்டி.

இப்ப உங்களுக்கு எல்லாம் வடிவாய் விழங்கியிருக்கும் எண்டு நம்பிறன்...

எல்லாருக்கும் மங்களம் உண்டாகட்டும் மீண்டும் அடுத்தமுறை சந்திக்கிறன்.

Link to comment
Share on other sites

"தமிழரைக்கண்டால் பிடிக்காது"

இப்பிடி சொல்லுறவை யார்?

காலம் போற கெதியைப்பாத்தியலே, காலம் கெதியாய்ப்போனால் பறுவாய்யில்லை வயசுமல்லே கெதியாய் ஏறுது. இந்த முறை ஐரோப்பாவில வலுகெதியா வெய்யிலும் வந்திட்டுது.

காலம் மாறிப்போச்சு போல கிடக்கு.

காலம் மாறிப்போனாலும் பறுவாய்யில்லை ஐரோப்பாவுக்கு வந்த எங்கட சனமும் அல்லே மாறிப்போச்சுதுகள். அதை நினைக்கத்தான் பெரிய வயித்தெரிச்சலாய் கிடக்குது பாருங்கோ.

அப்ப இங்கவந்த புதுசில "பாசைப்பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை." அப்பவும் என்ன இப்பவும் தான்!. அப்ப எல்லாரையும் வந்தவுடன காம்பில தானே விடுவாங்கள். விடைக்கே பாக்கிஸ்தான், துருக்கி, குருதீஸ், கறுப்பர் எண்டு பல நாட்டுக்காரரும் இருப்பாங்கள். எங்களை ஸ்ரீலங்கன் எண்டு செல்லி ஒண்டாகத்தான் விடுவினம் நாங்களும் ஒண்டாகத்தான் இருக்கப்போறம் எண்டு ஒஷ்டாய் இருந்தனாங்கள் அதோட ஒண்டாய் சமைச்சு சாப்பிட்டு அவங்கள் குடுக்கிற சோசல் காசில் மிச்சமும் பிடித்து ஊருக்கும் காசு அனுப்பினனாங்கள் பாருக்கோ.

அது அப்ப பாருங்கோ இப்ப இதைக்கேட்டுப்பாருங்கோ - அப்ப வந்த சனத்திட்ட... காம்போ? சோசலோ? ரெட்குறஸோ? எண்டு இங்கேயே பிறந்து வளந்தவங்கள் மாதிரி கேப்பினம்.

அப்பவெல்லாம் ஒண்டாய் இருந்த சனம் காலப்போக்கிலே வதிவிட வசதி, நெஷனாலிட்டி கிடைச்சவுடன இப்ப என்ன சொல்லுகினம் தெரியுமே நாங்கள் எனி தனிய எங்கையும் எங்கட சனம் இல்லாத இடமாய் இருக்கப்போறம் என்னுகினம்.

எங்கட தமிழ்சனத்தோட இருந்தால் பிரச்சினையாம். இதை வெள்ளையன் சொன்னாலும் பறுவாயில்லை. தமிழனே இப்பிடி சொன்னால் எப்பிடி இருக்கும் பாருங்கோ. தமிழரைக்கண்டால் பிடிக்காது. தமிழ் படிக்கப் பிடிக்காது. தமிழ் புத்தகங்கள், பேப்பர் பிடிக்காது எண்னுவினம் அப்படி எண்டால் வெள்ளையனோட எண்டாலும் சேர்ந்து வாழுகினமோ அதுவும்மில்லை கேட்டால் அவங்களின்ட கலாச்சாரம் சரியில்லை என்னுகினம். வெள்ளையனின்ட புத்தகம், பேப்பர் வாசித்தாலும் விளங்காது அவையளுக்கு.

இப்பிடி இருக்கேக்க இப்பிடிப்பட்ட தமிழரிண்ட நிலமை எங்கபோய் முடியுமோ தெரியாது. "அகதி" எண்ட சொல்லுக்கு ஏற்றமாதிரி வாழ்ப்போகினமோ?

அதைவிட பெரிய பகிடி என்ன வெண்டால் தமிழராலேயே உழைக்கிற தமிழர் சிலரும் தமிழரை கண்டால் பிடிக்காது எண்டு சொல்லுகினம்.

தமிழரை பிடிக்காத தமிழருக்கு தமிழ்சாப்பாடுமல்லே பிடிக்கக்கூடாது. ஆனால் அதுபிடிச்சிருக்கு பாருங்கோ. பங்கு இறைச்சி, யாழ்ப்பாண முருங்கைகாய், மரவள்ளக்கிழங்கு கறுத்தக்கொழும்பான்மாம்பழம் எண்டு வடிவாய் வெட்டுவினம் கண்டியலே. இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு "தமிழரிண்ட சாப்பாடு நல்ல மலிவுச்சாப்பாடு" பாருங்கோ.

இப்பிடி எங்கட சனம் போற போக்கை பார்த்தால் எங்க போய் முடியுமோ தெரியாது.

தமிழரைக்கண்டால் தெரிந்தும் தெரியாதவர் போல், தமிழரைக்கண்டால் புரிந்தும் புரியாதவர்போல், எங்கட சனம் வாழவேண்டியதாய் போட்டுது. நாட்டுப்பிரச்சனை தீர்ந்தாலும் இப்பிடியான புதுப்புது பிரைச்சினைகள் துவங்கீட்டிது பாருங்கோ. இப்பிடி இருக்கிற ஆட்க்களை எப்பிடி திருத்தமுடியும்.

"கெடுகிறன் பந்தயம் பிடி" என்னுறவையோட எப்பிடிப்பாருக்கோ கதைக்கமுடியும்.

உப்பிடியான ஆட்க்கள் தானாத்திருந்தவேனும் இல்லாட்டி திருத்தப்படவேனும் என்னுறதுதான் ஐடியா ஐயாசாமின்ட ஐடியா.

எதுக்கும் இப்பபோட்டு பிறகு வாறன்... எல்லாருக்கும் மங்களம்முண்டாகட்டும்.

Link to comment
Share on other sites

கந்தப்புவும் - சோமண்ணையும்

கந்தப்பு: திருவள்ளுவர் ஐரோப்பாவிற்கு வந்திருந்தால், எப்படி குறள் எழுதியிருப்பார்?

சோமண்ணை: "வட்டிக்கு விட்டவன் வயிறு எரிய வாழ்வான். சீட்டுப்பிடித்தவன் சீரழிஞ்சு போவான்" என்று எழுதியிருப்பார்.

கந்தப்பு: ???!!!...

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கந்தப்பு: உங்கட மகன்ரை பண்பாட்டைப் பார்த்துத்தான் என் மகள் விரும்பினாள்.

சோமண்ணை: என்ன பண்பாடு?

கந்தப்பு: "ரீ" "யூஸ்" குடிக்கும் போதும் "சியேஸ்" சொல்லுறாரே...

--------------------------------------------------------------------------------------------------

கந்தப்பு: என்ன சோமண்ணை தாயின்ர செத்த வீட்டில மூத்தமகன் சுந்தரத்தைக் காணக்கிடைக்கல...

சோமண்ணை: வட்டிக்காசு வாங்கப் போனவர் வர சுணங்கிட்டுதாம்!

கந்தப்பு: ???!!!...

------------------------------------------------------------------------------------------------------

சோமண்ணை: ஐரோப்பாவில வெள்ளையன் 800 பேர் இருக்கக்கூடிய பிளேனை செய்துமுடிச்சு வெள்ளோட்டம் விட்டவங்களாம்.

கந்தப்பு: ஏன்! எங்கட ஆட்களும் வருசா வருசம் ஐரோப்பாவில வெள்ளோட்டம் விடுகினம் தானே!

சோமண்ணை: என்னத்தை விடுகினம்?

கந்தப்பு: 800 பேர் இழுக்கக்கூடிய தேரை செய்து முடிச்சு வெள்ளோட்டம் விடுகினம்தானே.

சோமண்ணை: ????!!!... -

-----------------------------------------------------------------------------------------------------------------

கந்தப்பு: லண்டன் மாப்பிள்ளை ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழுகிறார்?

சோமண்ணை: அவர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் வேலை செய்கிறார். அதுதான் எரிஞ்சு, எரிஞ்சு விழுகிறார்.

Link to comment
Share on other sites

மாறாது, மாறாது ஒரு போதும் மாறாது

குயில் எங்கை இருந்தாலும் கூ கூ என்று கூவும்

காகம் எங்கை இருந்தாலும் கா கா என்று கரையும்

தமிழன் எங்கை இருந்தாலும் ஏன் ???

வணக்கம் பிள்ளையள் எப்படி சுகம்? வெயில் தொடங்கிட்டுது. இனி வீட்டுக்குள்ள இருக்க முடியாது. காலம் மாறி மாறித்தான் வரும் ஆனால் நாங்கள் தான் ஓரே அடியாய் மாறிப்போனம், எங்கட குணம் மாறாது பாருங்கோ. அதுக்கு நல்ல உதாரணம் எங்கட கனடா கைலாஸ், அவன்ற கதையை சொல்லுறன் கேளுங்கோ.

அப்ப ஊரிலை கமக்கார சின்னத்துரையின்ற மகன்கைலாசநாதன் சின்னனில நல்லா கஷ்டப்பட்டவன். விடிய வெள்ளன எழும்பி தோட்டத்திற்குப்போய் தோட்ட வேலை செய்து சந்தையில் போய் மரக்கறி வித்துப்போட்டுதான் பள்ளிக்குப் போறவன். பள்ளிக்குப்போற நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் ஆளை கோமணத்தோடதான் காணலாம். ஏனெண்டால் நெடுக தோட்ட வேலைதான். அதாலை அவனை கோமணக்கைலாசு எண்டும் கூப்பிடுறவை. கடைசியிலை அவன் நல்லா படிச்சு டாக்குத்தராய் வந்திட்டான். வந்ததும் இல்லாமல் கனடாவுக்கும் டாக்குத்தராய் போட்டான். அவன் போய் இப்ப 20 வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது. கமக்கார கைலாசு என்று கூப்பிட்டகாலம் போய் கனடா டாக்குத்தர் கைலாசு என்றால்த்தான் ஊரிலை தெரியும்.

கனடாவுக்கு போனவன் 2 வருஷத்தால ஊருக்கு வந்து நல்ல சீதனத்தோட நகைநட்டு, தோட்டம், துறவு, வீடு வளவுகளோட ஓரு கலியாணமும் முடிச்சுக் போனவன் போனதுதான். பிறகு ஊர் பக்கமே ஆளைக்காணோம். அப்ப இப்படி நாட்டுப்பிரச்சனை இல்லைத்தானே. வடிவாக வந்து போயிருக்கலாம் வரவே இல்லை இப்ப எண்டாலும் ஆமி பிடிச்சுப்போடும் நாட்டுப்பிரச்சனை என்று சொல்லலாம். அவன் அப்பவே வராதவன் இப்ப எங்க வரப்போறான் எண்டுட்டு கனடா போன இடத்திலை அவனை ஒருக்கா போய்ப்பார்ப்போம் எண்டுட்டு அவனைப்பார்க்கப்போனன் பாருங்கோ. அவனைக்கண்டு கைலாசு எப்படிச்சுகம் ? என்னை தெரியுதோ ? எண்டு கேட்டன் பாருங்கோ. அதுவும் தமிழிலைதான் கேட்டனான். அவன் என்னைப்பார்த்து ஹலோ கூ ஆர் யு? வட் இஸ் யுவர் நேம்? எண்டு இங்கிலிசிலை கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டிட்டுது. அவனை சொல்லி என்ன குற்றம். இப்ப எங்கட தமிழ்சனத்தில சிலதுகளுக்கு தாய் தகப்பனையே மறந்து போகுது. உவன் பாவிக்கு 20 வருஷத்துக்கு முன்னம் கண்ட பக்கத்து வீட்டுக்காரன் என்னை எங்க தெரியப் போகுது. என்னை தெரியாட்டிலும் பறுவாயில்லை. நான் தமிழிலை கதைச்சதற்கு அவன் தமிழிலை எண்டாலும் பதில் சொல்லியிருக்கலாம்தானே.

காகத்தின்ர கூட்டிலை குயில் முட்டை போடுது. காரணம் குயிலுக்கு அடைகாக்க தெரியாதாம். காகம் அடைகாத்து பொறிச்ச குயில் குஞ்சு கூ கூ எண்டு கூவுது. காகத்திண்ட குஞ்சு கா கா எண்டு கத்துது. அது, அது தன்ர குரலாலைதான் தங்களை யார் எண்டு இனம் காட்டுது. ஆனால், இந்த தமிழ் இனத்திலை சிலர் தங்களை வெள்ளையன் எண்டு காட்ட தங்கட தாய்பாசையை கதைக்க வெக்கப்படுகினம்.

உது எல்லாம் ஒருவகை வருத்தம் கண்டியலோ. உதுகளை எப்படி மாற்றுறது எண்டு உங்களிட்டத்தான் கேட்கின்றன். நீங்கள்தான் பதில் சொல்ல வேணும். உப்படியான ஆட்களைக் காணேக்க எனக்கு ஒரு சினிமாப் பாட்டுத்தான் ஞாபகம் வருது. அது என்ன பாட்டு எண்டால் "வானத்தில் மீது பறந்தாலும் காக்கை கிளியாகமாறாது. கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது".

எமக்கு எண்டு ஒரு நாடு வரும்வரை இந்த அகதி என்ற பெயர் மாறாது பாருங்கோ. அகதி என்ற பெயர் மாறினாலும் எங்கட சனம்

மாறவே மாறாது.

எனக்கும் நேரமாகுது போட்டுவாரன் எல்லா தமிழ் மக்களுக்கும் மங்களம் உண்டாகட்டும்

Link to comment
Share on other sites

பே‌ங்‌க் லோ‌ன்

சார் நாங்க பேங்க்லேர்ந்து பேசறோம்... எங்க கிட்ட புது லோன் ஸ்கீம் வந்திருக்கு சார்... அதுல கேட்டிங்கன்னா...

காலைலேர்ந்து சாப்படல... 10 ரூபா லோன் குடுத்தீங்கன்னா... போய் சாப்டுட்டு வந்துருவேன்.

1325782461_f163912cd2_o.gif

------------------------------------------------------------------------------------------------------------------------------------

திரு‌ட்டு‌க் கா‌ய்‌ச்ச‌ல்

உங்களுக்கு வந்திருக்கறது திருட்டுக் காய்ச்சல்

எத வச்சு டாக்டர் இதை திருட்டுக் காய்ச்சல்னு சொல்றீங்க?

நீங்கதான சொன்னீங்க, வீட்டுல யாருமே இல்லாதபோது நடு ராத்திரி வந்துச்சுன்னு...

----------------------------------------------------------------------------------------------------------------------------------

கா‌பி பொடி

"சார் அந்த ப்ளேயர நீங்க ஏகப்ப‌ட்ட பணம் கொடுத்து ஏலம் எடுத்துருக்கீங்கங்கறது உண்மைதான்... அதுக்காக அவரை காப்பி பொடி வாங்க கடைக்கு அனுப்பறது கொஞ்சம் கூட நல்லாயில்ல."

--------------------------------------------------------------------------------------------------------------------------

ரிவர்ஸ்

அவர் ஏன் கார ரிவர்ஸ்லயே ஓட்டிட்டு போறார்.

வி‌‌ற்கும் போது கி.மீ. குறைவா காண்பிக்கணுமாம்.

tongue-smiley-8854.gif

----------------------------------------------------------------------------------------------------------------------

டெஸ்ட் மேட்‌‌ச்

என்ன எல்லா ப்ளேயர்சும் பேப்பரும், பேனாவுமா வந்துருக்காங்களா?

இன்னிக்கு டெஸ்ட் மேட்சுங்கறத தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க

Edited by nunavilan
Link to comment
Share on other sites

கந்தப்புவும் - சோமண்ணையும்

கந்தப்பு: ஐரோப்பாவில் அகதி வாழ்கையில் பிடிப்பில்லாமல் வாழ்ந்த கன ஆட்களுக்கு பிடிப்பு வந்துட்டுதாம் !

சோமண்ணை: ஐரோப்பிய வாழ்க்கையில் அப்பிடி என்ன பிடிப்பு வந்ததாம் ?

கந்தப்பு: நாரிப்பிடிப்பு, முழங்கால்பிடிப்பு, கழுத்துப்பிடிப்பு எண்டு கன பிடிப்புக்கள் வந்திட்டுதாம்.

சோமண்ணை:- !!!???... _roflcopter__by_darkmoon3636.gif

--------------------------------------------------------------------------------------------------------------------------------

கந்தப்பு: கோயில் பக்கமே போகாத சுந்தரத்தான் இப்ப அடிக்கடி கோயிலுக்கு போய் பஐனை எல்லாம் பாடுறான். பக்திமானாகிட்டானோ !

சோமண்ணை: பக்தியுமில்லை, கித்தியுமில்லை இப்ப கோயில்வழிய பூசைமுடிய அன்னதானம் குடுக்கினமாம் அதுதான் அடிக்கடி கோயிலுக்கு போறான்.

கந்தப்பு: !!!???... _roflcopter__by_darkmoon3636.gif

-------------------------------------------------------------------------------------------------------------------------------

கந்தப்பு: நம்ம தலைவர் பெரிசா ஒரு வீடு கட்டுறாரே... யாருக்கு அந்த பெரிய வீடு?

சோமண்ணை: அது அவரோட சின்ன வீட்டுக்குத்தான்!

கந்தப்பு: ???!!!...

_roflcopter__by_darkmoon3636.gif

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கந்தப்பு: எங்கட கோவில் ஐயர் ஏன் அடிக்கடி வேதக் கோவிலுக்குப் போகிறார்?

சோமண்ணை: பாவ மன்னிப்பு கேட்கத்தான்.

கந்தப்பு: !!!???...

--------------------------------------------------------------------------------------------------------------------------------

கந்தப்பு: ஆமா, உன் பொண்ணு அந்த நல்ல குணமான உத்தியோகஸ்தனைக் கல்யாணம் செய்ய மறுத்திட்டாளாமே...ஏனாம்..?

சோமண்ணை: தன்ர கூந்தலைவிட அவரின் கூந்தல் மிகவும் நீளமாம் அதுதான்!

கந்தப்பு: ???!!!...

_roflcopter__by_darkmoon3636.gif

Link to comment
Share on other sites

வாயில்லாத பிராணி

ஆசிரியர்: ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம வச்சிருக்கே?

மாணவன்: அது வாயில்லாத பிராணி சார்...!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மாப்பிள்ளை அழைப்பு

"மாப்பிள்ளை அழைப்பு எங்கிருந்து ஆரம்பம்?"

"சென்ட்ரல் ஜெயிலில் இருந்து."

---------------------------------------------------------------------------------------------------------------------------

நடிகையின் வயசு

நடிகைக்கு வயசாயிடுச்சுன்னு அவரோட கணவன் ஓடிப்போயிட்டானாமே அப்படி என்னதான் வயசு அந்த நடிகைக்கு!

93 வயசு.

----------------------------------------------------------------------------------------------------------------------------

சம்பள உயர்வு

அவருக்கு சம்பள உயர்வு வராத வெறுப்ப எப்படி காட்டுவார் தெரியுமா?

அவர் வீட்டுக்கு யாராவது வரும்போது அதிசயமா சம்பள உயர்வு மாதிரி வந்திருக்கீங்களே அப்டீன்னுவார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்டர்வியூ வந்தவங்க

என்ன இன்டர்வியூ வந்தவங்க எல்லாருக்கும் தண்ணி கொடுத்து கண்ணுல ஊத்திக்க சொல்றாங்க?

வேல கிடைக்கல்லேன்னா எப்படியிருந்தாலும் ஐ வாஷ்னு சொல்லப்போறீங்க அதையும் அவங்களே பண்ணிட்டா பிரச்சனை இல்ல பாருங்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. இன்னொரு தெனாலிராமன் கதை சொல்லுங்கோ...

Link to comment
Share on other sites

டபிள் தென்னாலிராமன் கதைகள் கிடக்கும் போது இணைக்கிறேன்.

டேய் கடவுள்!! நீ யாருடா?

நான் ஒரு agnostic. கடவுள் மேல் உள்ள கற்பிதங்களும், புரிதல்களும்…

“அம்மா! மழை எப்படி பெய்யுது?”

“கடல்நீர் ஆவியாகி குளிர்ந்த மேகமாகி…”

“ஆவின்னா என்னம்மா?”

“கோவில்ல சாமின்னு ஒருத்தரை கும்பிட்றோம்ல்ல, அவருக்கு வானத்து மேல தான் வீடு. நாம இருக்கும் பூமி அவருக்கு காலுக்கு கீழே தான் இருக்குது. நினைச்ச எட்டி உதைப்பாரு.. நினைக்கலன்ன சும்மா உட்கார்ந்திருப்பாரு. அவருக்கு ஒன் பாத்ரூம் வந்தா அது வானத்திலேயிருந்து மழையா பெய்யுது”

“அப்ப ஏம்மா சில மாசம் மட்டும் சாமி ஒன் பாத்ரூம் போறாரு”

“பூமி மாதிரி வானத்துல நிறைய கிரகம் இருக்கு. மத்த மாசத்துல கடவுள் பாத்ரூம் அங்கே எங்கேயாச்சும் வச்சிருப்பாரு”

“சீ… சாமி ஒரு indecent fellow”

“அப்ப ஏம்மா இடி இடிக்குது”

“கடவுளுக்கு கேஸ் ட்ரபிள்ப்பா”

சே கடவுள் சுத்த கரைச்சல் பிடிச்ச ஆளாயிருப்பாரு போலிருக்கே….

அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ

நீ பாவம் செய்தால் செத்த பிறகு நரகத்துக்கு தான் போவாய்

நரகத்துக்கு போனா…

உன்னை ஐஸ் கட்டியில் குளிப்பாட்டுவார்கள். அடுப்பில் காய வைப்பார்கள். எண்ணைய் கொப்பரையில் போட்டு பொரித்தெடுப்பார்கள்.

மிளகாய் பொடி தடவியா?… தடவாமய.?..

அப்போ கடவுள் நம்பர் ஒன் நான்வெஜ் பிரியன்னு சொல்லு… மனுச கறியை சாப்பிடுறதுனாலா ஒரு வேளை கடவுள் காட்டுமிராண்டி மாதிரியிருப்பாரோ….

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

“என் காதலியே

நான் உன்னை கடவுள் என்பேன்

ஏனென்றால் நீ தெருக்கோடியில்

எனக்கு காட்சி தராததால்”

இப்படி காதலியை கடவுளாக நினைத்து சுட்டோ/சுடாமலோ எழுதிய கவிதையாக…

இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ

கடவுள் எல்லா மனுச பசங்களையும் எப்படி மேனேஜ் செய்கிறார்?

ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு லைட் பல்பு வானத்துல கடவுள் வச்சிருப்பாரு. நீ ஏதாச்சும் தப்பு செஞ்ச அங்கே பல்பு எரியும். உடனே எப்படியாச்சும் ஒரு தட்டு தட்டுவாரு. அப்படியும் நீ கேட்கலையா ஒரே போடா போட்டுருவாரு. அங்கேயே உனக்கு ஒரு சுவிட்சு இருக்கும். நீ ரொம்ப ஆட்டம் போட்ட ஆஃப் பண்ணிடுவாரு…

இது எங்க வீட்டுக்கு வயரிங் பண்ண வந்த வையாபுரி சொன்னது.

நான் முதன் முதலில் மைக்ரோ பிராசசர் பற்றி படிக்கும் போது, மைக்ரோ பிராசசர் என்பது மில்லியனுக்கு மில்லியன்கள் நாநோ (Nano) சுவிட்சுகளால் ஆனது. அந்த சுவிட்சுகள் எப்படி ஆன் ஆவது எப்படி ஆஃப் ஆவது என்று சொல்லுவதே கட்டளைகள் (commands) என்கிறோம். மைக்ரோ பிராசாசர் தான் கடவுளோ? அங்கிருக்கும் சுவிட்சுகள் தான் மனுசங்களோ? ஜீவிக்க வைப்பதும் மரணிக்க வைப்பதும் தான் அவர் இடும் கட்டளைகளோ?

ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ

ஜீவ காந்தமே கடவுள். கோவிலில் இருக்கும் சாமி சிலைகளில் உள்ள காந்த ஈர்ப்பே நினைப்பதை எல்லாம் நடக்கவைக்கிறது.

அப்படியென்றால் காந்தமும் காந்தப் படுக்கையும் கடவுள் தான். காந்தப்படுக்கையை ஜெயிலில் வைத்து காந்த சாமியை கோவிலில் வைத்தால் எப்படி?

உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ

தியானம் ஒன்றே கடவுளை அடையும் வழி. தியானம் செய்யும் போது மூளையின் அலைவரிசைகள் ஆல்பா, பீட்டா, காமா, தீட்டா என்று போகும் போது மனதில் சாந்தம் நிலவுகிறது. முகத்தில் அமைதி குடிக்கொள்கிறது. மூளையில் அலைவரிசைகள் டிவியில் பார்க்கமுடியாது. ரேடியோவில் கேட்கமுடியாது. உங்கள் மனதில் தான் அந்த அலைவரிசையை பார்க்கமுடியும் கேட்க முடியும். தீட்டா தீய்ந்து போகும் போது நீங்கள் சமாதி அடைவீர்கள். சாமியாவீர்கள்.

ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

சுக்கிலத்தை மேலேற்றி கபாலத்தில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் சுக்கிலத்தை வைக்கும் போது சித்தி அடையலாம். சித்தப்பா கோபம் கொண்டால் அது கடவுள் அல்ல.

எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ

கடவுளை எப்படியும் அடையலாம்? ராஜ யோகம், தியான யோகம், சேவையோகம்… சன் மார்க்கம், விஜய் மார்க்கம் இவையெல்லாம் கடவுளை அடையும் வழிகள். அதாகப்பட்டது எப்படி மாட்டு வண்டி, குதிரை வண்டி, ரயில் வண்டி, பஸ் வண்டி என்று பலவித வாகனங்களில் ஒரு ஊருக்கு போய் சேர வேண்டுமோ அதுபோல யோகங்களும் மார்க்கங்களும் கடவுளை அடையும் வழிகள்.

மொதல்ல கடவுள் யாரு எப்படின்னு இன்னும் கன்பர்ம் ஆகலை. அப்பறம் எப்படி அவரை போய் பார்க்கிறதுன்னு யோசிக்கலாம். புல்லட் ரயில் மாதிரி ஏதாவது ஒரு வழியிருந்தா சீக்கிரமே கடவுளை பார்க்கலாமே? புல்லட் ரயில் மாதிரி சீக்கிரமாக கடவுளை சந்திக்கவும் பல வழியிருக்கு. தூக்கில் தொங்கலாம். விஷம் குடிக்கலாம். தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கலாம். மாடியிலிருந்து குதிக்கலாம் இப்படி பலவழிகள்.

ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ

கடவுள் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். உன்னிலும் இருப்பான். என்னிலும் இருப்பான். நீ கடவுள். நான் கடவுள்.

confirm-அ தெரியுமா?

ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ

கடவுள் + அழுக்கு = மனிதன்

மனிதன் - அழுக்கு = கடவுள்

அழுக்கு = அழுக்காறு+அவா+வெகுளி

மனிதன் = மனம் + உயிர்

கடவுள் = கட + உள்

(மனம்+உயிர்) - (அழுக்காறு+அவா+வெகுளி)=(கட+உள்)

-மனம்-உயிர் = பிணம்

-(மனம்+உயிர்) = பிணம்

-(மனிதன்) = பிணம்

மனிதன் = -பிணம்

-பிணம் - அழுக்காறு - அவா - வெகுளி = -(-கட-உள்)

-(பிணம்+அழுக்காறு+அவா+வெகுளி) = (+கட+வுள்)

ஏதோ கூட்டி கழிச்சி பார்த்த கணக்கு சரியா வர்ற மாதிரி தான் தெரியுது. இந்த கணக்கை சொல்லிக் கொடுத்த கணக்கு வாத்தியாரு தான் சாமியாரா போயிட்டார். அதாவது சாமி+யார்?

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஓ ஒ ஒ ஒ ஒ ஓ ஒ

கடவுளே! எழுத்தை தான் என் உயிர் மூச்சாய் வைத்தாய். எழுத்தை தான் என்னை சுவாசிக்க வைத்தாய். எழுத்தை தான் உண்ண உணவாகக் கொடுத்தாய். எழுத்தை தான் பருக வைத்தாய். எழுத்தில் தூங்க வைத்தாய். எழுத்தில் தான் முழிக்க வைத்தாய். எழுத்தில் தான் பல் துலக்க வைத்தாய். எழுத்தில் தான் வாய் கொப்பளிக்க வைத்தாய். எழுத்தாகவே என்னை கொல்லைக்கும் போக வைக்கிறாய் நீ.

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

Link to comment
Share on other sites

ஜார்ஜ் புஷ்ஷின் கேள்வி நேரம்

ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும், ‘கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்’ என்றார். ஒரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார்.

“உன் பெயர் என்ன?”

“டேவிட்”

“கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன?’

“3 கேள்விகள் கேட்கப்போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே?”

அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று புஷ் அறிவித்தார். இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும் வகுப்புக்கு வந்தார். “கேள்விகள் கேட்கலாம்” என்றார்.

வேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார்.

“ராபர்ட்”

“உன் கேள்விகள் என்ன?”

“5 கேள்விகள் கேட்கப் போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே? வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது? முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே?” :rolleyes:

Link to comment
Share on other sites

ஸ்மைல் பிலீஸ்

ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார்,

'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்.. சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.

********************************************************************************

பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட

செய்தி நடந்துச்சிம்மா. அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மாஅம்மா: கெட்ட செய்திபையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க

மிஸ்டர் X ஜோக்(மிஸ்டர் X மஞ்சப்பை வைத்துக் கொண்டு LIC க்கு முன்னால் நிற்கிறார். ஒரு சென்னை லோக்கல் ரவுடி அவரிடம் )ரவுடி: இங்க என்ன பண்ணிட்டு இருக்கிறமிஸ்டர்X : எவ்வளவு பெரிய உயரமான கட்டிடம் பாத்துட்டு இருக்கேன்.ரவுடி: அப்படியெல்லாம் சும்மா பாக்க கூடாது. நீ எத்தனை மாடி வரை பாத்தியோ அதுக்கு எனக்கு பணம் தரனும். ஒரு மாடிக்கு பத்து ரூபாய் குடு.மிஸ்டர்X : நான் 4 வது மாடி வரைக்கும் தான் பாத்தேன் இந்தா பிடி (40 ரூபாய் கொடுக்கிறார்)ஒரு பொது ஜனம்: என்னங்க அந்த ரவுடி ஏமாத்தி பணம் வாங்கிட்டான் உங்களிடம்

மிஸ்டர்X: அவன் எங்க ஏமாந்தான் நான்தான் ஏமாத்திட்டேன். நான் பாத்தது

ஏழாவது மாடி அவனிடம் 4 வது மாடின்னு சொல்லி ஏமாத்தி 40 ருவாதானே குடுத்தேன்

********************************************************************************

*****

நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'

********************************************************************************

**************************

.

செம கடி

அமலா : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?

விமலா : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே!

-----------------------------------------------------------------------

அமலா : என்னை அவமானப்படுத்திட்டே, அவமானப்படுவதற்காக நான் இங்கே வரலே.

விமலா : அப்படியா? அவமானப்பட வழக்கமா எங்கே போவாய்?

-----------------------------------------------------------------------

அமலா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்!

விமலா : எதை வைத்து?

அமலா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!

-------------------------------------------------------------------------

அமலா : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.

விமலா : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

அமலா : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

--------------------------------------------------------------------------

அமலா : அவர் கோயிலுக்கு போகும் போது பாய்ந்து பாய்ந்துதான் போவார்..

விமலா : ஏன்?

அமலா : அவர்தான் பக்திமான்-ஆச்சே..

---------------------------------------------------------------------------

அமலா : உங்க மாமா டெல்லியில் என்னவா இருக்காரு..?

விமலா : அங்கேயும் எங்க மாமாவாதான் இருக்காரு..

---------------------------------------------------------------------------

அமலா : "என்ன உன் கணவர் தூக்கதுல 'ஹலோ.. ஹலோ..'ன்னு டெலிபோன்ல பேசறது மாதிரி பேசறாரு?"

விமலா : "நான்தான் சொன்னேனே, அவருக்கு தூக்கத்துல 'கால்' போட்ற பழக்கம் இருக்குன்னு."

---------------------------------------------------------------------------

விமலா : நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

அமலா : இல்லடா.. ஆனா பக்கத்து வீட்டுல ஒரு சைட் வெச்சிருக்கேன்.

---------------------------------------------------------------------------

அமலா : பைனான்ஸ் கம்பெனிக்காரரைக் காதலிச்சது தப்பாய் போச்சு!விமலா : ஏன்?அமலா : எங்கள் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினாலும் ஓடிப் போய் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிறார்.

---------------------------------------------------------------------------

அமலா : என்னது உன் கணவரை அந்த பிரபலமான பாகவதர் கச்சேரிக்கு கூப்பிட்டாரா ஆச்சரியமா இருக்கே!

விமலா : இதுல என்ன ஆச்சரியம் அவர் எனக்கு போட்ற ஜால்ராவ பாத்துட்டு அந்த பாகவதர் ஜால்ரா தட்ட கூப்பிட்டிருக்கார்.

---------------------------------------------------------------------------

டாக்டர் : உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?அமலா : எப்டி சொல்றீங்க?

டாக்டர் : ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!

---------------------------------------------------------------------------

அமலா : என்னடி, நீ வேலைக்காரி சேலையைப் போய் கட்டியிருக்க?

விமலா : அப்பத்தான்டி என் புருசன் ஏறெடுத்தே என்னைப் பாக்குறாரு.

---------------------------------------------------------------------------

அமலா : பத்திரிக்க ஆசிரியருக்கு காதல் கடிதம் அனுப்பியது தப்பாப் போச்சு.

விமலா : ஏன் ?

அமலா : பத்திரிக்கையில பிரசுரம் பண்ணிட்டு, சன்மானம் அனுப்பிட்டார்.

---------------------------------------------------------------------------

அமலா : என் மாமியார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

விமலா : எப்படி?

அமலா : கரெக்டா அரை மணி நேரத்துக்கு மேல சண்டைய நீடிக்க மாட்டார்.

---------------------------------------------------------------------------

அமலா : வாசல்ல நின்னுக்கிட்டுதான் என் மாமியார் என்கூட சண்டை போடுவாங்க

விமலா : ஏன்?

அமலா : அப்பதான் ஜெயிக்க முடியும்னு அவுங்களுக்கு வாஸ்து சாஸ்திரத்ல சொன்னாங்களாம்.

---------------------------------------------------------------------------

அமலா : புகுந்த வீட்டுல பெண்கள மதிக்க மாட்டேங்குறாங்க .

விமலா : என்ன செய்றாங்க?

அமலா : மாமியார் மருமக சண்டைக்கு வாய்ப்புக் குடுக்காம எந்நேரமும் அப்பாவும் மகனும் சண்டை போடுறாங்க.

---------------------------------------------------------------------------

அமலா : "என் புருசனுக்கு ரொம்ப நல்ல மனசு"

விமலா : "எத வச்சு சொல்ற?"

அமலா : "சமையல் செய்றதுமில்லாம எனக்கு ஊட்டியும் விடுவாரே, அத வச்சு தான்."

---------------------------------------------------------------------------

விமலா : "என் மாமியாரும் நானும் சும்மா இருந்தாலும் என் புருசன் சண்டை போடச் சொல்லி வற்புறுத்துவாரு"

அமலா : "ஏன்?"

விமலா : "வீட்டோட இயல்பு நிலை பாதிச்சிடக் கூடாதுன்னுதான்".

நன்றி --தமிழ்மொழி

Link to comment
Share on other sites

தெனாலிராமன் மறுபிறவி

தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது.

அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.

இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர்.

உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார்.

இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார்.

மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார்.

அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே.......... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.

இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள்.

அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார்.

இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.

இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை.

சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்ம ராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார்.

இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னால் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார்.

அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு.

மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார்.

உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார்.

இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்

தெனாலிராமன் வரலாறு

சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.

சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை.

சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.

காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான்.

அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.

Link to comment
Share on other sites

கந்தப்புவும் - சோமண்ணையும்

கந்தப்பு: எப்ப பார்த்தாலும் உவன் சிவத்தான் ஆசியன் கடையில சும்மா வந்து நிற்கிறான் என்ன சங்கதி?

சோமண்ணை: அதில்லை, பெஞ்சாதிக்கு பயத்திலை வேலைக்குப் போறன் எண்டு சொல்லிப்போட்டு.. நாள் முழுக்க கடையில வந்து நிண்டு தூங்கிறான்.

கந்தப்பு: ???!!!...

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

கந்தப்பு:- "தொப்புள்கொடி உறவுகள்" எண்டு சொல்லுறதுக்கு என்ன அர்த்தம்?

சோமண்ணை:- அதுக்கு இரண்டு அர்த்தம் இருக்கு, ஓண்டு அப்பத்தைய அர்த்தம். மற்றது இப்பத்தைய அர்த்தம். உனக்கு எப்பத்தைய அர்த்தம் வேணும்!

கந்தப்பு:- எனக்கு "தொப்புள்கொடி உறவுகள்" எண்டதுக்கு இப்பத்தயை அர்த்தத்தை சொல்லுங்கோ...

சோமண்ணை:- இப்பத்தயை அர்த்தப்படி எங்களுக்கு "தொப்புள்கொடி உறவுகள்" எண்டால் ஜோதிகா, அசின், சிம்ரன் இவையள்தான்.

கந்தப்பு:- இந்த சினிமா நடிகைமாறே எங்கட "தொப்புள்கொடி உறவுகள்"

சோமண்ணை:- இப்போதைக்கு இவயள்தானே எங்களுக்கு அடிக்கடி தங்கட தொப்புளை காட்டுறவை

கந்தப்பு:- ???!!!...

------------------------------------------------------------------------------------------------------------------------------------

கந்தப்பு: வட்டிக்கு விட்ட காசையும், சீட்டுக்கட்டிய காசையும் சுத்திக்கொண்டு போட்டாங்கள் என்று சிரித்துக்கொண்டு சொல்லுறியள். எப்படி இவ்வளவு பணம் போயும் உங்களால் சிரிக்க முடிகிறது?

சோமண்ணை: சுத்திக்கொண்டு போனது என்ர காசில்லை.. சுத்தரத்தின்ர காசு.

கந்தப்பு: ???!!!...

Link to comment
Share on other sites

நமிதா-விவேக்-ஒரு பேட்டி

விவேக்: ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்

நமிதா : எதுக்கு நீங்கோ மாடு மாதிரி என்ன கூப்பிடுதூ

விவேக் : Oh No. அது அப்படி இல்ல..இதூ விவேக் Style.

நமிதா : விவேக் எனக்கு ரொம்ப பிடிக்குது.

விவேக் : என்ன மா சொல்ல வர?

நமிதா : i mean, i like your comedy

விவேக் : யப்பா. சரி நமிதா, நீங்க கடந்து வந்த பாதைய கொஞ்சம் ஓப்பனா பேசலாமா?

நமிதா : *#*#*@*#

விவேக் : அய்யோ நமிதா, என்ன இது. நான் சொன்னது ஒப்பனா பேசலாம்னு. I mean without hiding anything..ஆஹா எப்படி சொன்னாலும் தப்பாகுதே..நீங்க தயவு செய்து அதெல்லாம் திருப்பி போட்டுக்கங்க

நமிதா : ஓஹ் எனக்கு புரியுது. Sorry விவேக். எனக்கு படத்துல ஓப்பனா இருந்தூ இருந்தூ பழகி போச்சூ. அந்த word என்ன டிச்ட்டர்ப் பண்ணிடுச்சூ.

விவேக் : பேட்டி எடுக்கு வந்தது நானு. ஒரு second என்ன முதல்வன் ரகுவரன் மாதிரி திணற அடுச்சுட்டீங்க... ஹா ஹா ஹா ஹா ஹா. சரி மேட்டருக்கு வருவோம்..இது english மேட்டர். சரியா

நமிதா : கேலுங்கோ விவேக்.

விவேக் : பறவால. தெளிவா தான் இருக்கீங்க...சரி நமிதா, உங்களுக்கு எப்படி இப்படி குறுகிய காலத்துல இவ்வளவு fans.

நமிதா : குறுகிய dress போட்டதால தானு எல்லாரும் சொல்றாங்கோ.

விவேக் : அப்ப நீங்க அப்படி சொல்லலையா?

நமிதா : அப்படி கிடையாது..எனக்கு என்ன Situationஓ அதுக்கு யேத்தா மாதிரி நான் perfectஆ பண்ணுதூ.

விவேக் : சரி விடுங்க, உங்களுக்கு business செய்ய ஆசை உண்டா ?

நமிதா : ஓஹ் உண்டூ விவேக். எனக்கு ஒரு துணி கடை start செய்ய ஆசை

விவேக் : அதிர்ச்சி கலந்த கேள்வி..என்ன நமிதா சொல்றீங்க?

நமிதா : இப்பொ ஹோட்டல் காரன் ஹோட்டல்லையா சாப்பிடறான் ?

விவேக் : ஹா ஹா ஹா ஹா ஹா. சூப்பரா சொன்னீங்க. சூப்பரா சொன்னீங்க. S.J.Surya சார் சொன்னா மாதிரி உங்க கடைல துணி இருக்கும் ஆனா இல்லைன்னு சொல்ல வரீங்க போல :-)

நமிதா : எனக்கு புடிச்சதெல்லாம் நான் செய்யுது. அவ்ளூ தான். I live for myself.

விவேக் : Great policy. சரி இனிமே யார் கூட நடிக்க உங்களுக்கு ஆசை.

நமிதா : First, i want to act with you.

விவேக் : போங்க நமிதா. எனக்கு வெக்கமா இருக்கு

நமிதா : Next, எனக்கு கமல் சார் கூட ஒரு படம் act செய்ய விரும்புது.

விவேக் : அட, கமல் சார next time பாக்கும்போது நான் கண்டிப்பா உங்க ஆசைய சொல்லிடறேன். But என்ன, திமிங்கலத்த சீண்டிப் பாக்க விரும்பரீங்க

நமிதா : Thanks விவேக். இச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

விவேக் : என்ன இது இப்படி Interviewல எல்லாம் இச்ச்ச்ச்ச்ச்ச்ச் கொடுத்துகிட்டு. அதுவும் பேசும்போது பேச்சு வர இடத்துல.

நமிதா : கமல் சார் இந்த Interview பாத்துதூ, ஒரு நல்ல Screen test மாதிரி இருக்குதூ நென்சி என்ன புக் பன்னிடுவாரூ.

விவேக் : அதுக்காக இப்படியா... பறவால, chance எப்படி எல்லாம் கேக்கணும்னு உங்களுக்கு நல்லா தெரியுது. சரி, உங்களுக்கு வேற எந்த மாதிரி roles பிடிக்கும்

நமிதா : எனக்கூ chief minister மாதிரி or police roles புடிக்கும். யாரும் குடுக்க மாட்டேங்குது

விவேக் : (மனசுக்குள்ள, நாடு வெளங்கிடும்). ஒஹ் உங்களுக்கு correctஆ match ஆகும்.

நமிதா : எனக்கும் விஜயகாந்த் சார் மாதிரி செவுரூ மேல ஏரி fights பன்ன புடிக்குது

விவேக் : இத்துடன் இந்த Interview முடிவு அடைகிறது..மீண்டும் அடுத்த வாரம் சந்திக்க முடிஞ்சா சந்திப்போம் நேயர்களே

நமிதா : ஏன் சீக்கிரம் முடிக்குது விவேக்

விவேக் : கமல் சார்க்கு நீங்க screen test அனுப்சா மாதிரி Captain சார்க்கும் அனுப்பறேன்னு என் மேல எல்லாம் ஏரி மிதிச்சிடாதம்மா. மிதிச்சிடாதம்மா..இந்து பிஞ்சு உடம்பு தாங்காது

நமிதா : நீங்கோ ரொம்ப கிண்டல் பன்னுது. ஹி ஹி ஹி...I wont act here.

விவேக் : அப்போ முத்தம் கொடுத்தது உனக்கு acting ஆ?? சரி சரி.

நமிதா : OK விவேக். எனக்கு சென்னைல ஒரு ஷூட்டிங் and நைட் துபாய்ல ஒரு ஷூட்டிங் இருக்குதூ.. thanks for making me share my experience

விவேக் : என்னது, துபாய்லயாஆஆஆ?? OK நமிதா நீங்க தமிழ் நாட்டு மக்கள மேலும் மேலும் கலக்கி எடுக்க என் வாழ்த்துக்கள். All the best for your kamal movie. All the best for your kamal movie. All the best for your kamal movie.

நமிதா : Thank you.

விவேக் : ச்ச்ச, ஒரு வாட்டி தானா :unsure:

Link to comment
Share on other sites

இரண்டு போலீஸ்காரர்கள் ஏன் அந்த வாழை மரத்தை சுற்றி சுற் றி வருகிறார்கள்.

அங்கே கொலை விலை போகுதாம்.

லஞ்சம் கேட்டதால பொது மக்கள் சக்கையாய் பிழிஞ்சு எடுத்துட் டாங்களா, யாரை?

கரும்பு இன்ஸ்பெட்டரை.

மாமூல் ரொம்ப பப்ளிக்கா மாறிடுச்சி.

ஏன் சலிச்சிக்கிறீங்க?

பின்னே என்னங்க? போலீஸ் ஸ்டேஷன்ல பாருங்க. விழா எடுத்து திருடனுக்கு மாமூல் மாணிக்கம்னு இன்ஸ்பெட்டர் பட்டம் தர்றாரு.

திருடனுக்கும் போலீசுக்கும் என்ன வித்தியாசம்?

தொப்பைதான்.

என்னை கண்டு எல்லோரும் போலீஸ்னு நெனைச்சி பயந்துக்கிடுறாங்க.

ஆமா இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க...!

வாழ்க்கையிலே பல நாள் ஜெயில்லே கழிஞ்சு போச்சுன்னு வருத்தப்படுறீங்களே...! என்ன தப்பு செஞ்சீங்க?

நீங்க வேற....! ஜெயிலராயிருந்தேன்...!

அந்த ஆபிசர் கமிஷன் வாங்கினது தெரிஞ்சு போச்சு.

அப்புறம்?

கமிஷனை விசாரிக்க ஒரு கமிஷன் போட்டாங்க.

பின்ன என்ன ஆச்சு?

கமிஷன்கிட்டே கமிஷன் கொடுத்து தப்பிச்சிட்டார்.

கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?

ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, சுப்பிரமணின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!

திருடன் - எதுக்கு என்ன ஜாமீன்ல எடுத்தீங்க..!

போலீஸ் - நீ உள்ள போனதிலேர்ந்து என்னோட மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி...!

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை

.

.

வேலை இல்லாமல் வெட்டியாக இருந்த ஒருவர் மாமியார் வீட்டிற்கே சென்று வீட்டோடு மாப்பிள்ளையாக செட்டிலாகிவிட்ட திட்டமிட்டிருந்தார்.

.

மாமியார் வீட்டிற்கு சென்ற அவருக்கு முதல் சில தினங்கள் ராஜமரியாதை கிட்டியது.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை குறையத் தொடங்கியது. ஒரு நாள் இரவு சிற்றுண்டிக்காக பொங்கல் செய்து பரிமாறினார்கள்.

பொங்கலின் ருசியில் மயங்கிய மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்பிட வேண்டும் என்று விரும்பினார். இருந்தாலும் வாயைத் திறந்து கேட்க கூச்சமாக இருந்தது.

இதனால் காலியாக இருந்த சாப்பாட்டு தட்டைத் தட்டிக் காண்பித்து இந்தத் தட்டு மிகவும் நன்றாக இருக்கிறதே, எங்கு வாங்கியது என்று கேட்டார்.

மாப்பிள்ளையின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மாமியார், பொங்கல் பானையும் காலியாகத்தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட, பானையைத் தட்டி, இந்தப் பானை வாங்கிய அதே கடையில் தான் அந்தத் தட்டும் வாங்கினேன் என்றார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜோக்

.

.

பத்திரிகை நிருபர் ஒருவர் இறந்தபின்னர் சொர்க்கத்திற்கு செல்ல விரும்பினார். சொர்க்கத்தன் வாயிலுக்கு சென்ற அவரை பாதுகாவலர்கள் தடுத்தனர்.

சொர்க்கத்தில் நிருபர்களுக்கு என 12 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே 12 பேர் இருப்பதாகவும் கூறி அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

.

அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நிருபர், உள்ளே இருக்கும் நிருபர்களிடம் சென்று நரகத்தில் பத்திரிகை தொடங்கப் போவதாக ஒரு பொய் சொல்லுங்கள். உடனே அங்கிருக்கும் சிலர் நரகத்திற்கு சென்று விடுவார்கள். இதனால் எனக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று கூறினார்.

இதற்கு முதலில் மறுத்த பாதுகாவலர்கள் பின்னர் சம்மதித்தனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர்களிடம் சென்ற நிருபர் என்னவாயிற்று என்றார்.

நீங்கள் சொன்ன மாதிரியே நரகத்தில் புதிய பத்திரிகை தொடங்கப் போவதாக கூறினார். அனைவரும் அங்கு சென்றுவிட்டனர். இப்போது நீங்கள் உள்ளே செல்லலாம் என்றனர்.

இதைக்கேட்ட நிருபர், அப்படியே, பத்திரிகை தொடங்கப் போவது உண்மையாகக் கூட இருக்கலாம். நானும் நரகத்திற்கே போகிறேன் என்று கூறி போய்விட்டார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி விழா

. .

பெண்மணி ஒருவர் தனது கணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மனைவி கணவரிடம் அடுத்த வாரம் முக்கியமான நாள் வருகிறது தெரியுமா என்று கேட்டார்.

.

கணவன் யோசித்து விட்டு நம்முடைய திருமண நாள் தானே என்றார். மனைவி, ஆமாம். ஆனால் அதில் என்ன விசேஷம் தெரியுமா? என்று கேட்டு விட்டு, நமக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது தெரியுமா என்று கேட்டார்.

கணவர் அப்படியா என்றார். மனைவி, ஆமாம் நாம் அதனை சிறப்பாக கொண்டாட வேண்டும். கோழி அல்லது ஆட்டை அடித்து விருந்து வைக்கட்டுமா என்று கேட்டார்.

உடனே கணவர் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த தவறுக்கு அப்பாவி விலங்கை ஏன் பலி கொடுக்கிறாய் என்று கேட்டார். :D:D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கலெக்டர் ஆகனும்னா ஐஏஎஸ் படி

போலீஸ் ஆகனும்னா ஐபிஎஸ் படி

ஆடிட்டர் ஆகனும்னா சிஏ படி

எடிட்டர் ஆகனும்னா மாஸ் கம்யூனிகேசன் படி

வீனாப் போகனும்னா என் எஸ்எம்எஸ் படி

ஹா..ஹா..ஹா போய் வேலையப் பாருடா டுபுக்கு!

===================

இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பன்னு

உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?

என்னது இல்லையா?

அதுசரி, சும்மாவா சொன்னாங்க

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!!!"

===================

உலகத்தில் பெரிய கேட் என்ன கேட்?

உங்க கிட்னிய பயன்படுத்தி யோசிங்க

இன்னுமா யோசிக்கிறீங்க

சுத்த வேஸ்ட்டு நீங்க

காலையில் தினமும் கண்விழித்தால் நான்

கை தொடும் தேவதை எது?

கோல்கேட்தான் வேறென்ன..!

===================

வீர்சிங் விடியற்காலையில் எழுந்து மனைவியை சூரியன் தெரிகிறதா என்று பார்க்கச் சொன்னான். அவன் மனைவி பார்த்துவிட்டு பார்க்க முடியவில்லை ஒரே இருட்டாக இருக்கிறது என்றாள்.

உடனே வீரு முட்டாள் டார்ச் அடித்து நல்லா பாரு.....

Link to comment
Share on other sites

ஒரு நக்கல் பேர்வழி பற்றி?

ஜார்ஜ் பெர்னாட்ஷா, மாமிசம் சாப்பிட மாட்டார்.மதுவும் அருந்த மாட்டார். இதைப் பத்தி கேட்டவர்கிட்ட பெர்னாட்ஷா சொன்ன பதில்,

நான் செத்த பிராணிகளை உண்பது இல்லை. என் முன்னோர்கள் என்னைப் போல பலருடைய பங்குகளைச் சேர்த்துக் குடித்து விட்டார்கள். அதனால் எனக்கு பங்கு இல்லாமல் போய் விட்டது.

தாடி வைத்துக் கொண்ட இவர்கிட்ட நீங்கள் தாடி வளர்ப்பது லாபமான்னு ஒருத்தர் கேட்டாரு.

நான் முகச்சவரம் செய்வதற்காக ஆகும் நேரத்தில் நிச்சயம் ஒரு நாடகமாவது எழுதிடுவேன்னாராம்.

ஆஸ்பத்திரிநர்ஸிங் ஹோம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?ன்னு கேட்டவருக்கு பெர்னார்ட்ஷா சொன்ன பதில்...

நோய் பாதி தீருவதற்கு முன்பே நடுத் தெருவுக்கு துரத்தி விட்டால் அது ஆஸ்பத்திரி. சாகும் வரை வெளியே அனுப்பாமல் இருந்தால் அது நர்ஸிங் ஹோம்.

----------------------------------------------------------------------------------------------------

இரத்தத்துலயே ஊற வைக்க வேண்டிய விஷயம் எது?

ஒருத்தர் தன்னோட ரெண்டு குழந்தைகளையும் கூட்டிக்கிட்டு விளையாட்டு அரங்கத்துக்கு போனாரு. டிக்கெட் கவுன்டருல போய் டிக்கெட் விலை என்ன?ன்னு கேட்டாரு.

பெரியவர்களுக்கு ஐந்து ரூபாய். குழந்தைகளுக்கு ஆறு வயதுக்கு கீழ் டிக்கெட் இலவசம்ன்னு கவுண்டரில் இருக்கிறவரு சொன்னாரு.

உடனே இவர் பெரிய பையனுக்கு ஏழு வயது ஆகிறது. எனக்கும் அவனுக்கும் மட்டும் இரண்டு டிக்கெட் குடுங்கன்னு சொன்னாரு.

டிக்கெட் குடுக்கிறவரு. ஏற இறங்க பார்த்துட்டு. பையன பார்த்தா ஏழு வயசு மாதிரி தெரியலை. அவனுக்கு ஆறு வயசு தான் ஆகு துன்னு சொல்லியிருந்தால் நானும் விட்டிருப்பேன். உங்களுக்கு ஐந்து ரூபாய் மிச்சமாயிருக்குமேன்னு சொல்ல.

அதுக்கு அப்பாக்காரர், நீங்க சொல்ற மாதிரி அவனுக்கு ஆறு வயசுன்னு சொல்லியிருந்தா, எனக்கு அஞ்சு ரூபாய் தான் மிச்சமாகியிருக்கும்... ஆனா அதோட அஞ்சு ரூபாய்க்காக நம்ம அப்பா பொய் சொல்றாரேன்னு என் மகன் என்னை அற்பத்தனமா நினைப்பான். இந்த அஞ்சு ரூபாயை மறுபடியும் சம்பாதிக்கலாம். ஆனா என் மகன் மனசுல இந்தக் கனவு வந்துட்டா, அதை கடைசி வரை எடுக்க முடியாதுன்னு நேர்மையா சொல்லிட்டுப் போனாரு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக் கூடாது இந்தக் கடைசிப் பகிடி நெஞ்சைத் தொட்டுவிட்டது. நுனா. வெல்டன்!!! :rolleyes::D

Link to comment
Share on other sites

குழாய் ரிப்பேர்

.

டாக்டர் ஒருவர் வீட்டில் குழாய் ரிப்பேர் ஆகி தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. இதனையடுத்து அவர் குழாய் ரிப்பேர் செய்பவரை வீட்டிற்கு வரவழைத்தார். குழாய் ரிப்பேர் செய்ய வந்த வாலிபர், ஐந்தே நிமிடத்தில் பழுதான குழாயை சரி செய்து விட்டார். டாக்டர் அவரிடம் எவ்வளவு ரூபாய் தரவேண்டும் என்றுகேட்டதற்கு வாலிபர் 500 ரூபாய் வேண்டும் என்றார்.

.

இதைக்கேட்டு திகைத்துப் போன டாக்டர் 5 நிமிடத்துக்கு 500 ரூபாயா? டாக்டரான நானே இவ்வளவு பீஸ் கேட்பதில்லை என்றார். உடனே வாலிபர், அதற்கென்ன செய்வது? உங்களைப் போல நான் நோயாளியை மீண்டும் வரச்சொல்லி பீஸ் வாங்க முடியாதல்லவா? என்றார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

மிஸ்டர் எக்ஸ்

.

மிஸ்டர் எக்ஸ் ஒருநாள் மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்த வரவேற் பாளினியிடம் மருத்துவர் இருக்கிறாரா? அவரை பார்க்க முடியுமா என்றார். கண்கள் உள்ள எல்லோருமே அவரை பார்க்க முடியும் என அந்த பெண் பதில் அளித்தார்.

கண் எனக்கு இருக்கிறதா என்பதில்தான் குழப்பம். அதனால்தான் மருத்துவரை பார்க்க வந்துள்ளேன் என்றார் மிஸ்டர் எக்ஸ். ஏன் இந்த குழப்பம் வந்தது என அந்தப் பெண் கேட்டார். எல்லா பொருளையும் என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் என் கண்ணை என்னால் பார்க்க முடியவில்லை என்றார்.

அதற்கு அந்த பெண் டாக்டரின் பீஸ் போர்டு தெரிகிறதா என்று கேட்டார். அதற்கு மிஸ்டர் எக்ஸ், இப்போது எனக்கு கண் தெரிகிறது என்பது தெரிகிறது என்றார்.

. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனநல மருத்துவர்

. .

மனநல மருத்துவர் ஒருவர் பொது நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்திருந்தவர்கள் மனநலம் தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்று கொண்டிருந்தனர்.

.

அப்போது ஒரு பெண்மணி, ஒரு நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருக் கிறார் என்பதை எப்படி கண்டு பிடிப்பீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அந்த மருத்துவர் அனை வரும் எளிதாக பதிலளிக்கக் கூடிய கேள்விகளுக்கு கூட பதில் தெரியாதவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என்றார்.

இதற்கு அந்த பெண்மணி உதாரணம் கேட்க, மூன்று முறை உலகை வலம் வந்த கேப்டன் குக் எத்தனையாவது முறை உலகை வலம் வரும்போது இறந்து போனார் என்ற கேட்டார்.

அதற்கு அந்த பெண்மணி வேறு ஏதாவது கேள்வி கேளுங்கள். எனக்கு வரலாறு தெரியாது என்றார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

கலப்படம்

.

ஓட்டல் ஒன்றில் முயல் கறியைக் கொண்டு விதவித மான உணவு வகைகள் தயாரித்து விற்கப்பட்டது. ருசியான அந்த உணவை சாப்பிடுவதற்காக பலரும் அந்த ஓட்டலுக்கு வரத் தொடங்கினார்கள்.

.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால், தேவையான அளவு முயல் கறி கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ஓட்டல் முதலாளி, முயல் கறியில் கலப்படம் செய்து விற்பனை செய்து வந்தார்.

கலப்படம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டதால் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். முயல் கறியுடன் என்ன கலந்தீர்கள்? என்று அவரிடம் கேட்டனர். ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் குதிரைக்கறி சேர்த்தேன் என்றார் அவர்.

Link to comment
Share on other sites

img108010504611xf9.jpg

உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?

தெரியாது

SmileS

எப்படி?

முதல் எஸ்-சுக்கும் கடைசி எஸ்-சுக்கும் ஒரு மைல் தூரம் இருக்கு. அதான்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------

டீச்சர் : நேற்று நான் சொன்னேன்ல. இன்றைக்கு உங்ககிட்ட ஜென்ரல் நாலேட்ஜ் பத்தி கேள்வி கேட்பேன் என்று.

பப்பூ நீ சொல்லு, உன்னுடைய தலையில் எத்தனை தலை முடி இருக்கு?

பப்பூ : 1,08,05,900 டீச்சர்.

டீச்சர் : பப்பூ நீ எப்படி எண்ணினாய்?

பப்பூ : ஸாரி டீச்சர். இது அடுத்த கேள்விக்கான பதில். இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது டீச்சர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

பையன் : அப்பா உங்களால் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட முடியுமா?

அப்பா : முடியுமே. ஈஸியா கையெழுத்துப் போடுவேன்.

பையன் : அப்போ என் ரிப்போர் கார்டில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துக் போடுங்க.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

. கடைக்காரர் : ஒரு ரூபாய்க்கு பத்து வாழைப்பழம்.

வாங்குபவர் : கொஞ்சம் குறைக்கக் கூடாதா?

கடைக்காரர் : சரி ஐந்து வாழைப்பழம் எடுத்துக்குங்க.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்த நூற்றாண்டில் எப்படிப் பேச வேண்டும்?

நான் வழி தெரியாமல் வாத்தியார் வேலைக்கு வந்து விட்டவன். வந்த பிறகு வழி தெரிந்தாலும், மாணவக் கண்மணிகளின் அன்பு வெள்ளத்தினால் திக்கு முக்காடி போக மனமில்லாமல் இந்த வேலையிலேயே தங்கி விட்டவன்!

என் மூத்த சகோதரரும் ஒரு வாத்தியார்தான். ஆனால் அவர் ஒரு கல்லூரியில் வேலை பார்க்கின்றார்.

அதிலும் அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்பதோடு, சிறந்த மேடைப்பேச்சாளர் என்பதால் அவருக்கு ஒட்டு மொத்தக் கல்லூரி வட்டாரங்களில் முழு மரியாதை உண்டு.

கலகலப்பாகப் பேசுவதில் மட்டுமல்ல, அன்பாகவும், இடமறிந்தும் பேசுவதிலும் அவர் வல்லவர்

ஒரு முறை அவரைக் கோவில்பட்டி அருகில் உள்ள சிற்றூர்க் கல்லூரி ஒன்றில் இருந்து மாணவர் மன்ற நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றுவதற்காக அழைத்திருந்தார்கள்.

அவரும் புறப்பட்டுச் சென்றார். மாலை 6 மணிக்குத்தான்

நிகழ்ச்சி. ஆனால் அவர் முன்னதாக மதியம் 3 மணிக்கே அங்கே சென்று விட்டார்.

அவரை வரவேற்ற மாணவக் கண்மணிகள், மாலைச் சிற்றுண்டிக்காக ஒரு சிறிய விடுதிக்குக் கூட்டிசென்றார்கள்

அவர் வேண்டாம், போதும் போதும் என்று மறுக்க, விடாது நிறைய அயிட்டங்களுக்கு ஆர்டர் கொடுத்து விட்டார்கள்

முதலில் மைசூர்பாகு வந்தது. செங்கல்லைவிடக் கடினமாக இருந்தது. இருந்தாலும் தன் பற்கள் உறுதியாக இருந்ததாலும், மாணவக் கண்மணிகள் மனது நோகக் கூடாது என்பதற்காகவும் மிகுந்த சிரமப்பட்டுக் கடித்துத் தின்று விட்டார்.

அதோடு விட்டிருக்கக்கூடாது. அங்கிருந்த மாணவ மணிகளில் ஒருவன் கேட்டான்.

"அய்யா, எங்களூர் மைசூர்பாகு எப்படியிருக்கிறது?"

உடனே, என் மூத்த சகோதரர் சொன்னாராம்,"தம்பி மைசூர்பாகு நன்றாக இருக்கிறது. நான்தான் பத்து நாள் தாமதமாக வந்து விட்டேன்!"

மைசூர்பாகு 10 நாள் அறுதப் பழசு என்பதை எப்படிப் போட்டார் பார்த்தீர்களா?

விஷயம் அதோடு முடிந்து விடவில்லை!

அதற்குப்பிறகு விடுதியைவிட்டு வெளியே வந்தவுடன், மாணவர்களில் ஒருவன் பக்கத்திலிருந்த பெட்டிக்கடை யொன்றிலிருந்து ஒரு சீப்பு வாழைப்பழத்தை வாங்கிக் கொண்டு வந்து, இரண்டு பழங்களை அதிலிருந்து பிய்த்துக் கொடுத்து அய்யா சாப்பிடுங்கள் என்றான்.

தோல் மட்டும்தான் மஞ்சள் நிறமாக இருந்த்தே தவிர, அவை சுத்தமான காய்கள். துவர்ப்பு வேறு.

இவரும் சிரமப்பட்டு கொடுத்த இரண்டையும் சாப்பிட்டு முடித்தார். மைசூர்பாகிற்கு மறுமொழி கேட்டவனே மீண்டும் கேட்டான்.

"அய்யா எங்களூர் பழம் எப்படி இருந்தது?

இவர் உடனே சொன்னார், "பழம் நன்றாக இருந்தது. ஆனால் நான்தான் நான்கு நாட்கள் முன்னாடியே வந்து விட்டேன்!"

எப்படிச் சொன்னார் பார்த்தீர்களா?

இப்படிப் பேசினால், பேசப் பழகிகொண்டால் இந்த நூற்றாண்டில் நமக்கு எந்தப் பிரச்சினையும் வராது!

என்ன சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.