Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அலுக்காமல் சலிக்காமல் தொடரும் உங்கள் சேவைக்கு நன்றி நுணாவிலான்.

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 361
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஆண்களே உங்கள் கவனத்திற்கு.! மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.... ஒரு கணவனும்

கணவன்: "என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக்

காசா கிடக்குது?"

மனைவி: "நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் 

சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திருடன் 1: "ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு

இருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்"

திருடன் 2: ''திருடன்-னு அலறியிருப்பாரே?''

திருடன் 1: " 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு

அரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு 

சொல்லிட்டார்"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவர் : "உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு

சொல்றீங்களே... அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க?"

மற்றவர்: "எறிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளை

வெறுப்பேத்துவேன்."

+++++++++++++++++++++

Link to post
Share on other sites


விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு

வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில்

உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல

உன் கணவர் யாருன்னு காட்டேன்"

கலா: "அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு

வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "தலையில் சுருள் முடியோட..."

விமலா: "ஆமாம்" 
  
கலா: "கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..." 

விமலா: "ஆமாம்"

கலா: " ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..."

விமலா: "ஆமாம்"

கலா: "நல்லா நடிகர் அஜீத் கலர்ல..."

விமலா: "ஆமாம்"

கலா: "அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான்

என் கணவர்!!!" 
*********************************************************************
திருமண விருந்தில்... 


பந்தி பரிமறுபவர்: "ஏம்ப்பா, நீ போன பந்தியிலயும்

சாப்பிட்டியே! இந்த பந்தியில் மறுபடியும் சாப்பிடறியே?"

சாப்பிடுபவர்: "ஆமாங்க, உங்களுக்கு ஞாபக சக்தி

அதிகம். எனக்கு ஜீரண சக்தி அதிகம்"

**************************************************************

முதலாம் நபர்: "என்ன சார், நேற்று இரவு உங்க 

வீட்டிலருந்து அடிதடி சத்தமெல்லாம் கேட்டுச்சே, 

எதுவும் சண்டையா சார்?"

இரண்டாம் நபர்: "ஆமாம் சார், எனக்கும் என் மனைவிக்கும்

சண்டை. அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க,

அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க, 

அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க...."

Link to post
Share on other sites
 • 2 weeks later...

''உண்மை பேசுவதற்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று சொல்கிறீர்களே, அது ஏன்?''
'உண்மை கசக்குமே!'
********
''தினசரி காலண்டர் தயாரிப்பவரின் மகளைக் கல்யாணம் செய்தது தப்பாப் போச்சு.''
''ஏன்,என்ன பிரச்சினை?'
''தினசரிஎன்னை கிழிகிழி என்று கிழிக்கிறாள்.''
********
கணவன்:நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்கம்மாவ உங்க அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்கிறாயா?
மனைவி:வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்?
கணவன்:வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!
********
டாக்டர்:தைரியமாய் இருங்க!நீங்க பூரண குணம் அடைய வேண்டி வெளியே பல பேர் கூட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நோயாளி:நீங்க வேற விபரம் தெரியாம பேசாதீங்க,டாக்டர்.அவர்களெல்லாம் எனக்குக் கடன் கொடுத்தவர்கள்.''
********
''மாப்பிள்ளை இருபது பவுன் நகையும் ஒரு லட்சம் ரொக்கமும் கேட்கிறாராமே!''
''இந்தக் காலத்தில இதெல்லாம் சகஜமாயிடுத்தே!'
''அதற்காக அறுபதாம் கல்யாணத்துக்கெல்லாமா கேட்பார்கள்?'' 
********
''ஆபிசுக்கு தாமதமா வர்ற கேசியர் மாலா ஏன் தலைவிரி கோலமா வர்றாங்க?''
'ஆபீசுக்கு தாமதமா வந்தா இப்ப வந்திருக்கிற மேனேஜர் பின்னிடுவாராம்,பின்னி!'
********
தொலைபேசியில் ஒருவர்:ஹலோ,அறுவைக்கு எதிர்ப்பதம் என்ன?
மற்றவர்:அறுக்காதே,வை.
********
''வாம்மா,மாப்பிள்ள எப்படி இருக்கிறார்?என்னை ரொம்பக் கேட்டதாகச் சொல்லியிருப்பாரே?''
'ரொம்ப இல்லப்பா,கொஞ்சம்தான்.பத்தாயிரம் ரூபாய்தான் கேட்டதா சொல்லச்சொன்னார்.'
********
நண்பன்:உன் மனைவிக்கு பெரிய அட்டிகை செய்து போட்டதற்குப் பதிலாக ஒரு கார் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.
மற்றவர்:அவளும் அதைத்தான் விரும்பினாள்.ஆனாலும் கார் கவரிங்கில்  கிடைக்காதே!
********
பெண்ணின் தாயார்:நாங்க  நாற்பது பவுன் போடுவோம்.நீங்க என்ன போடுவீங்க?
பையனின் தாயார்:அதில் அரைப் பவுன் குறைந்தாலும் சண்டை போடுவோம்.
********

Edited by nunavilan
Link to post
Share on other sites
 • 2 months later...

lawyercartoon.jpg

வழக்கு விசாரணை முடிந்தது. நீதிபதி தீர்ப்பளிக்கும் சமயம் நெருங்கியது. உடனே பரபரவென்று எழுந்தார் வக்கீல்.

"கனம் நீதிபதி அவர்களே... சற்று பொறுங்கள். அவசரப்பட்டு தீர்ப்பைக் கூறி விடாதீர்கள். இன்று காலைதான் எனக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது" என்றார்.

"என்ன தகவல் கிடைத்தது?" என்றார் நீதிபதி.

"என் கட்சிக்காரரிடம் இன்னும் இரண்டாயிரம் ரூபாய் இருக்கிற தகவல் கிடைத்திருக்கிறது" என்றார் வக்கீல்.

Link to post
Share on other sites

 எல்லோருக்கும் வணக்கம்!
நான் இந்த யாழ் இணையத்தை கடந்த 6-7 வருடங்களாக வாசித்து வருகின்றேன். இது தான் முதல் தடவை எழுத சந்தர்ப்பம் கிடைத்தது. தெனாலி கதைகள் மிகவும் அருமை.
Nunavilan நீங்கள் நுணாவில் இல் எங்கே? எனக்கு சிறு வயதில் அந்த இடம் மிகவும் பரிச்சயமான இடம்

 

Link to post
Share on other sites

 எல்லோருக்கும் வணக்கம்!

நான் இந்த யாழ் இணையத்தை கடந்த 6-7 வருடங்களாக வாசித்து வருகின்றேன். இது தான் முதல் தடவை எழுத சந்தர்ப்பம் கிடைத்தது. தெனாலி கதைகள் மிகவும் அருமை.

Nunavilan நீங்கள் நுணாவில் இல் எங்கே? எனக்கு சிறு வயதில் அந்த இடம் மிகவும் பரிச்சயமான இடம்

 

The truth is, நன்றி யாழில் எழுத தொடங்கியமைக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.தனிமடலை பார்க்கவும்.

Link to post
Share on other sites

டீவி பார்த்துக்கொண்டிருந்த
நாராயணசாமி தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும்
துருவித் துளாவுகிறார்.

நாராயணசாமி மனைவி : என்ன தேடுறீங்க?

நாராயணசாமி : இங்க
எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.

நாராயணசாமி மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?

நாராயணசாமி : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான்
பாக்குறேன் அப்படிங்கறத
எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.

நாராயணசாமி மனைவி : என்ன சொல்றான்?

நாராயணசாமி : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கேடிவி.

 

Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்
திருடன்: திருடறது எனக்கு பார்ட் டைம்...
 
பொலிஸ்: அப்ப மத்த நேரத்தில என்ன பண்றே ?
 
திரு: செக்யூரிட்டியா வேலை பன்றேன்.
 
 
**********************
 
 
புலவர்: நான் பாடி முடிஞ்சதும் பாடலுக்கு பொருள் கேடக்கக்கூடாது மன்னா..
 
மன்னன்: நீங்களும் தான் புலவரே.   
 
 
:lol:
Link to post
Share on other sites

பேருந்தில் நடத்துனரிடம்..


சர்தார்ஜி :      கண்டக்டர், ரெண்டு டிக்கெட்.
நடத்துனர்:    நீங்க ஒருத்தர் தானே ஏறினீங்க, எதுக்கு ரெண்டு டிக்கெட்?
சர்தார்ஜி :     ஒண்ணு தொலைஞ்சு போச்சுன்னா இன்னொன்னு.
நடத்துனர்:   அப்போ, இன்னொன்னும் தொலைஞ்சிடுச்சுன்னா?
சர்தார்ஜி :     என்கிட்டதான் பாஸ் (Pass ) இருக்கே!!
தன் பைக்கில் தன்னோடு இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சர்தார்ஜியை வழிமறித்த டிராபிக் போலீசிடம்..


சர்தார்ஜி: ஸாரி சார்! ஆல்ரெடி ரெண்டு பேர் வண்டில இருக்காங்க! உங்களுக்கு இடம் இல்லே..


துப்பறியும் அதிகாரி பணி தேர்வில்..

தேர்வாளர் :  மகாத்மா காந்தியைக் கொன்றது யார்?
சர்தார்ஜி:        இந்த பணிக்கு என்னை தேர்வு செய்ததற்கு நன்றி.. காந்தியை கொன்றவர்களை பற்றி நான் விசாரிக்கிறேன்..


பார்க்கில் ஒரு அழகிய பெண்ணிடம்..


சர்தார்ஜி: சுனிதா உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்.
சுனிதா:     நான் உன்னைவிட ஒரு வயது பெரியவள்!
சர்தார்ஜி: அப்போ, நான் உன்னை அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்கிறேன்.


பள்ளியில் ஆசிரியரிடம்..


ஆசிரியர்:  தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன?
சர்தார்ஜி : HIJKLMNO 
ஆசிரியர்: என்ன?
சர்தார்ஜி: நேற்று நீங்கள் தான் "ஹெச்" டூ "ஒ" என்று சொல்லிக்கொடுத்தீர்கள்..


நூலகத்தில்..


சர்தார்ஜி: (நூலகரிடம்) நான் படித்ததிலேயே மிகவும் மோசமான புத்தகம் இதுதான். மிகவும் அதிகமான கதாபாத்திரங்கள்.. சம்பாஷனைகள் யாவும் எண் வடிவில்  இருந்ததால் புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது..

நூலகர்: ஓஹோ! நீங்கதான் டெலிபோன் டைரக்டரியை தூக்கிட்டு போன ஆசாமியா?

Link to post
Share on other sites

சர்தார்ஜி:       சென்னையிலிருந்து மும்பை செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

பணிப்பெண்:  ஒரு நிமிடம் ( என்று கூறிவிட்டு தன் கணிப்பொறியில் நேரத்தைத்  தேடினாள்)

சர்தார்ஜி:       மிக்க நன்றி !! (என்று அந்த இடத்தை விட்டு அகன்றார்)

துணிக்கடையில்..

சர்தார்ஜி:        எனது கணிப்பொறிக்கு வைக்க ஒரு திரைச்சீலை(Curtain) கிடைக்குமா? நான் ஏற்கனவே ஜன்னல்களை (Windows) வாங்கிவிட்டேன்.

வீட்டில் தன் மகனுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கும் போது...

(அருகில் ஒரு நண்பரும் இருக்கிறார்)

சர்தார்ஜி:      பத்திலிருந்து அஞ்சு போனா எவ்வளவு?

மகன்:             நாலு!

சர்தார்ஜி:      சபாஷ்!! (என்று கூறி ஒரு இனிப்பை பரிசளிக்கிறார்!)

நண்பர் : (சற்றே அதிர்ந்து) நாலு தப்பான விடை ஆச்சே.. அதுக்கு ஏன் பரிசளிக்கறீங்க?

சர்தார்ஜி:      இன்னைக்கு பரவால்லே!! நேற்று அவன் மூணுன்னு இல்லே சொன்னான்!!

 

சர்தார்ஜிகள் புத்திசாலிகள் என்று நிரூபிப்பதற்காக ஒரு பிரதிநிதியை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியிருந்தார்கள். மற்ற சர்தார்ஜிகள் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.

தேர்வாளர்:  உங்க பேர் என்ன?

சர்தார்ஜி:    (மிகவும் யோசித்து) ஜஸ்வந்த் சிங்!

தேர்வாளர்:  உங்க தந்தை பேர் என்ன?

சர்தார்ஜி:   ( வியர்த்து விறுவிறுத்து) ம.. ம.. மணிந்தர் சிங்!

(சுற்றியிருந்த சர்தார்ஜிக்கள் ஒரே குரலில் தேரவாளரிடம்)

சர்தார்ஜிக்கள்: கடினமான கேள்விகள் வேண்டாம்!! எளிதாக இருக்கட்டும்!!

தேர்வாளர்: (தலையில் அடித்துக் கொண்டே) ரெண்டும் ரெண்டும் எவ்வளவு!!

சர்தார்ஜி:   (காகிதத்தில் எதையோ பெருக்கி பார்த்து விட்டு) ஒன்று!!

(தேர்வாளர் இல்லை என்று தலையாட்டவே..)

சர்தார்ஜிக்கள்:(ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!

சர்தார்ஜி:   (இந்த முறை நீண்ட யோசனைக்கு பின்) மூன்று!!

சர்தார்ஜிக்கள்: (ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!

சர்தார்ஜி:    நாலு!

சர்தார்ஜிக்கள்: (ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!!

Link to post
Share on other sites
 • 1 month later...
*.ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்.,
நீங்கள் அவர்களை பூவை கொண்டு எறியுங்கள்.!
மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால் .,
பூ தொட்டியைக் கொண்டு எறியுங்கள் , சாவட்டும் .!

*.அப்பா : அம்மா அடிச்சதுக்கு ஏன்டா அழுற ..?
மகன் : சும்மா இருங்கப்பா ..! உங்கள மாதிரி எல்லாம்என்னால அடி தாங்க முடியாது...!!

*.ஒரு குளத்தில் 22 எறும்புகள் குளித்துக் கொண்டிருக்கு ...
அப்போ ஒரு யானை வந்து குளத்தில் ட்ய்வ் அடிக்குது ...
அந்த குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 21 எறும்புகள்
கரைல போய் விழுந்திருச்சு .. ஒரு எறும்பு மட்டும் யானைதலைல போய்
விழ்ந்திருக்கு ... அத பார்த்த கரைல இருந்த ஒரு எறும்புசொல்லிச்சாம்..
"கொய்யால அவன அப்படியே தண்ணிக்குள்ள அமுக்குடாமாப்ள ..."

*.மகன் : "அப்பா ஓவரா என்னை பக்கத்து வீட்டு பொண்ணோட கம்பர் பண்ணி பேசிக்கிட்டே இருப்பியே ... இப்ப பார்த்தியா அது 470, நான் 480 மார்க்! "
அப்பா : அட நாயே .. அவ 10TH , நீ +2..

*.அப்பா : "அப்பா சொல்றத கேக்கணும் .. இல்லனா உருப்படமுடியாது ...!"
மகன் : "அதுக்கு இப்ப பீல் பண்ணி என்ன பிரயோஜனம் ...தாத்தா சொல்லும் போதே கேட்டிருக்கணும் ...!"
அப்பா : .....?

*.முடி வளர்ந்தா வெட்டிக்கலாம் ..!
நகம் வளர்ந்தா வெட்டிக்கலாம் ..!
ஆனா அறிவு வளர்ந்தா வெட்ட முடியுமா ...?

கவலை படாதிங்க உங்க நல்ல மனசுக்கு அப்படி எல்லாம்ஆகாது ...!

*.ஒரு மனிதர் ரயில் இல் ஒவ்வொரு ஸ்டேஷன் ஆகஇறங்கி இறங்கி
ஏறிக்கிட்டே இருந்தாரம் ...
அத பார்த்த ஒருத்தர் "ஏன் ஒவ்வொரு ஸ்டேஷன் ஆகஇறங்கி ஏறுரீங்கஅப்படின்னு கேட்டராம் .
அதுக்கு அந்த மனிதர் சொன்னாரம் " டாக்டர் நீண்ட தூரபயணம் போகதிங்கனு சொல்லிருக்கார் . அதான் ஒவ்வொருஸ்டேஷன் ஆக இறங்கி ஏறுறன்".

*.காற்றில் அவள் துப்பட்டா என்மீது விழுந்தது... எனக்குபயங்கர சந்தோசம்..
பைக் துடைக்க துணி கிடைத்தது என்று ..!

*.எப்பவெல்லாம் உங்களுக்கு படிக்கனும்னு தோணுதோஅப்ப ..
ஒரு அமைதியான அறைய தேர்ந்தெடுங்க.. கொஞ்சம்ஆசுவாசப்படுத்திக்குங்க ..
ஒரு முறை மூச்சை இழுத்து விட்டுக்குங்க ... அப்புறம்கன்னத்துல போட்டுக்குங்க .. " ராஸ்கல் இது என்ன புதுபழக்கம் ( படிக்கறது )..!"

*.உலகின் 6 உண்மைகள் :

முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது ..!இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் ..!
மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால ..!
நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க ..!
ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க ..!
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் ..!

*.சத்தம் இல்லாமல் உன் இருப்பிடம் தேடி குட் நைட்சொல்ல வந்த என் எஸ்.எம்.எஸ் இனை சத்தம் போட்டுகாட்டிக் கொடுத்தது உன்னோட
ஓட்ட மொபைல் ...!

*.உயிர் இல்லாத மலரை கூட நாம் நேசிக்கிறோம் ...ஆனால் நமக்காக உயிரையும் கொடுப்பவர்களை நேசிக்கஏன் யோசிக்கிறோம் ..!? அதனால நேசிங்க ...
கோழி , ஆடு ,மீன் ...

*.அப்பா : என்னடா பேப்பர்  ரிசல்ட் வந்திருக்கு ..உன்னோட நம்பர் வரல ...?
மகன் : நமக்கு இந்த விளம்பரம் எல்லாம் பிடிக்காதுப்பா...!

*.உங்கள தொந்தரவு பண்ணுறதுக்கு மன்னிக்கணும் .. ஆனா செய்தி முக்கியமானது .. உண்மையா சொன்னா நாங்க சீட்டு விளையாடிட்டு இருக்கோம் .. அதுல ஜோக்கேர் கார்டு காணாம போய்டுச்சு .. அதனால உன்னோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அனுப்பேன் ப்ளீஸ் ....

*.டாக்டர் : மாடில இருந்து எப்பிடி விழுந்திங்க ...?
நோயாளி : ஐயோ அம்மா னு கத்திகிட்டே விழுந்தேன்டாக்டர் ..!

*.உழைப்பு உயர்வு தரும் ..
உயர்வு பணம் தரும் ..
பணம் திமிரை தரும் ..
திமிர் ஆணவம் தரும் ..
ஆணவம் அழிவைத் தரும் ..
அதனால நாம் நாமாக இருப்போம் ..
உழைப்பை எதிர்ப்போம் ..
ஓய்வு எடுப்போம் ..!

*.இந்த உலகத்தில சில விசங்களை யாராலும் மாற்ற முடியாது ..
காளிபிலோவேற தலை ல வைக்க முடியாது ..
கோல்ட் பில்டேற அடகு வைக்க முடியாது ..
கோல மாவுல தோசை சுட முடியாது ..
இந்த மாதிரி வெட்டி எஸ்.எம்.எஸ் வந்தாலும் உங்களால படிக்காம இருக்க முடியாது ...

*.எங்கே நேசம் இருக்கிறதோ அங்கே காதல் பிறக்கும் ..
எங்கே காதல் பிறக்கிறதோ அங்கே வலி இருக்கும் ..
எங்கே வலி இருக்கிறதோ அங்கே ..
"IODEX" தடவுங்க ..வலி போய்டும் ..!

*.முயலும் ஆமையும் நுழைவுத்தேர்வு எழுதுச்சு..
அதுல ஆமை 80% , முயல் 81% மதிப்பெண் வாங்கிச்சு ..
இரண்டுமே பொறியியல் கல்லூரி அட்மிசன் இக்கு போனது ..
அங்க வந்து கட் ஆப் மார்க் 85%. ஆமை அட்மிசன் ஆகிடுச்சு.. எப்படி ..?
உங்களுக்கு நியாபகம் இருக்கா..? நாம ஒன்னாவது படிக்கும் போது ஒரு கதை படிசிருப்போமே .. அதுல கூட ஒரு ஆமை ஓட்டப் பந்தயத்துல வெற்றி பெற்றுடும்ல...?
ஸ்போர்ட்ஸ் கோட்டா ல அதுக்கு அட்மிசன் கிடைச்சுடுட்சு ...*."கொஞ்சமா பேசு ! அதிகமா கேள் " அப்படின்னு பெரியவங்க ஏன் சொன்னாங்க தெரியுமா ...?
 incoming free.. outgiong kaasu.. அதனாலதான் ..

*.பெண் 1  : ரேஷன் கடைல சர்க்கரை,அரிசி,பருப்பு போடுறாங்க ..!!
  பெண் 2  : உளுந்து போடுறாங்களா ...??
  பெண் 1 : இல்ல உட்கார்ந்துதான் போடுறாங்க ..
Link to post
Share on other sites
 • 3 weeks later...

அந்தளவுக்கு சின்ன நாடா இருந்துகொண்டு இஸ்ரேலால் எப்படி அந்தளவுக்கு பலமான படையாக இருக்க முடிகிறது என்று நிறையப் பேருக்கு குழப்பம்...

நீங்களே சொல்லுங்கோ...
இவங்க எல்லாம் சண்டை பிடிக்கப் போனா யாராவது சண்டை பிடிப்பானா?
உடன சரணடைஞ்சிருவாங்கள்..............................
 

 

(1)-719759.jpg

(2)-721201.jpg

(3)-722539.jpg

(4)-723717.jpg

(5)-725013.jpg

(6)-726125.jpg

(7)-727406.jpg

(8)-728856.jpg

(9)-729947.jpg

(10)-731392.jpg

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • 2 weeks later...

397984_332100786814362_945227123_n.jpg

 

 

 

ஒரு பையன் ஒரு பெண் 

இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் 

வெவ்வேறு வயதுகளில்:

@எல்கேஜி:

பெண்: "பென்சில் தருவியா..?"

பையன்: "மிஸ்கிட்ட சொல்லிடுவேன்..!"

@5ம்வகுப்பு:

பெண்: "பென்சில் தருவியா..?"

பையன்: "இந்தா..!"

@10ம்வகுப்பு:

பெண்: "பேனா இருந்தா கொடுக்க முடியுமா..?"

பையன்: "ஓ மை காட்... ப்ளாக் வேணுமா., ரெட் வேணுமா., ப்ளூ வேணுமா., க்ரீன் வேணுமா.?"

@12ம்வகுப்பு:

பெண்; (ஒன்றுமே கேட்கவில்லை)

பையன்: "2உன்னோட பென் சரியா எழுதலைனு நெனைக்கிறேன். இந்தா என்னோட பென்... இதை யூஸ் பண்ணிக்க..!"

@காலேஜ்:

பையன்: "புதுசா ஒரு பென் வாங்கினேன்... எழுதிப் பாத்துட்டுக் குடு...!". 

நீதி:

"எப்படி இருந்த பயலை 

இப்படி மாத்திட்டாளுக பாத்தீங்களா..?"

Link to post
Share on other sites
 • 1 month later...

அந்தப் பெண் பஸ்சுக்குக் காத்திருந்து போரடித்தத்தில் எடை பார்க்கும் மிஷினில் ஏறி நின்று ஒரு ரூபாய் போட்டாள்.
உங்கள் எடை 54 கிலோ. உயரம் 5′-5″. நீங்கள் கித்தார் வாசிப்பீர்கள்.என்று சீட்டு வந்தது.
நானாவது கித்தார் வாசிக்கவாவது என்று சிரித்துக் கொண்டே உட்கார்ந்திருந்த இடத்துக்குப் போனாள். கொஞ்ச நேரத்தில் ஒரு ஆள் கித்தாரோடு வந்தான்.
ப்ளீஸ் இதை கொஞ்சம் வச்சிக்கங்க. என்று கொடுத்து விட்டு எங்கேயோ போனான்.எதேச்சையாக அதன் தந்திகளை மீட்டிய போது ஹிந்தோள ராகம் ஒலித்ததில் அயர்ந்து போனாள்.
அந்த ஆள் வந்து திரும்ப கித்தாரை வாங்கிப் போனதும் ஆவல் மிகுதியில் மறுபடி எடை மிஷினுக்குப் போனாள். மறுபடி எடை பார்த்தாள்.
உங்கள் எடை 54 கிலோ. உயரம் 5′-5. எதிர்பாராமல் ஐந்நூறு ரூபாய் சம்பாதிப்பீர்கள்,என்று வந்தது.
மறுபடி அவள் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் போனாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ. ஐந்நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்குமா?” என்று ஒரு ஆள் வந்தான்.அதை வாங்கிக் கொண்டு ஹேன்ட் பேக்கைத் திறந்து சில்லறை தேடிக் கொண்டிருந்த போது, ஒரு பஸ் ஹாரன் அடித்தபடி நகர ஆரம்பித்தது.
“ஐயய்யோ.. பஸ் போகுது” என்று சில்லறை வாங்காமலே அந்த ஆள் ஓடினான்.
திரும்பவும் ஆச்சரியம் தாங்காமல் எடை பார்க்கப் போனாள்.
இம்முறை சீட்டில்,
‘உங்கள் எடை 54 கிலோ. உயரம் 5′-5″. ஒரு அழகான இளைஞனுடன் எக்கச்சக்கமான அனுபவம் ஏற்படப் போகிறது’
நீங்கள் நினைப்பது சரிதான்.
அவளருகே ஒரு இளைஞன் வந்து உட்கார்ந்தான்.
‘அழகாகத்தான் இருக்கிறான்’ என்று நினைத்தாள்.
அவன் அவளைப் பார்த்து சிரித்து விட்டு,
“இந்த மிஷினில் எடை பார்த்தால் அதில் எழுதியிருப்பதெல்லாம் நடக்கிறது” என்றான். தொடர்ந்து மூன்று சீட்டுக்களைக் காட்டி அதில் எழுதியிருப்பதெல்லாம் நடந்ததாக சொன்னான். கடைசீ சீட்டில் எழுதி இருப்பதை நம்பவே முடியவில்லை என்றான்.
என்ன எழுதியிருக்கு?
ஒரு அழகான பெண்ணுடன் சல்லாபம் பண்ணுவேன் என்று எழுதியிருக்கு”
நான் அழகா இருக்கேனா?
அழகாத்தான் இருக்கீங்க, ஆனா…
“என்ன ஆனா…” அவள் தன சீட்டைக் காட்டினாள்.சிரித்தார்கள்.
ரெண்டு பேரும் தோளில் கை போட்டு பயணிகள் தங்கும் அறை ஒன்றுக்குப் போனார்கள். பொழுது சல்லாபமாகக் கழிந்தது. அந்த இளைஞன் ‘பை’ சொல்லிவிட்டு போய் விட்டான்.
வேக வேகமாக எடை மிஷினுக்கு மறுபடி போனாள்.
சீட்டே வரவில்லை.
மிஷினை இரண்டு உதை விட்டு ஆட்டிப் பார்த்தாள். பின் கதவு திறந்தது.
கை நிறைய எடை டிக்கட்டுகளுடன் அதே இளைஞன் உள்ளே உட்கார்ந்திருந்தான்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படித்த ரசித்தது .!

நாட்டின் No.1 முட்டாள் யார்?

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

 
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”
 
“ஆம் மன்னா!”
 
“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.
 
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.
 

 
ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”
 
“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.
 
“தொடரும்” என்றார் மன்னர்.
 
“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.
 
“சரி அடுத்து”
 
“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”
 
“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”
 
"அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”
 
மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.
 
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.
 
ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.
 
“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.
 
“சரி எங்கே முதலாவது முட்டாள்?”
 

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான பக்கம்  வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் கொண்டிருக்கும் இவர்தான் நீங்க  முதல் முட்டாள்!”

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான்.

கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!''

""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான். பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?''

கணவன் பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?''

 • Like 1
Link to post
Share on other sites
 • 1 month later...
 • 1 month later...

என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்...?

 •  
 •  

 

 

முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார், அப்போது நாளிதழில் வந்த ஒரு(கீழ்க்கண்ட) விளம்பரம் கண்ணை கவர்ந்தது

 

மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு !

 

1) உடல் இளைக்க (சாதாரணம்) – Rs 1,000/- ஒரு மணி நேரம் ( 2 முதல் 5 கிலோ வரை )

2) சூப்பர் ட்ரிம்மர் - Rs 2,000/- இரண்டு மணி நேரம் ( 6 முதல் 10 கிலோ வரை )

3) ஹெவி ட்ரிம்மர் - Rs 3,000/- மூன்று மணி நேரம்( 11 முதல் 15 கிலோ வரை )

4) அல்டிமேட் ட்ரிம்மர் - Rs 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )

 

முன்பதிவிற்கு முந்துங்கள்...

 

முல்லா இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்சி செய்து பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். ஆனாலும்,சாதாரண முறையில் முதலில் பரீட்சிக்க விரும்பி அதற்க்கான பணத்தை கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார். அந்த அறை பதினாறுக்கு பதினாறு என்ற அளவில் இருந்தது. அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவளுடைய கையில் ஒரு அட்டை அதில் “ ஒரு மணி நேரத்திற்க்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம்“ என்று எழுதியிருந்தது, முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார்–அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது–அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கனிசமாக குறைந்தது..

 

முழு திருப்தியுடன் அதற்க்கு அடுத்த முறையை பரிச்சிக்க விரும்பினார் இந்த முறையில் கொஞ்சம் வித்தியாசம்.அறையின் அளவு நாற்பதுக்கு நாற்பது, சாதாரண முறையைவிட நல்ல அழகான பெண், கால அவகாசம் இரண்டு மணி நேரம் அவ்வளவுதான், மற்றபடி, முறை ஒன்றுதான். இதிலும் முல்லாவிற்கு முழுதிருப்தி.

 

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் இதிலும் கொஞ்சம் வித்தியாசம்.அறையின் அளவு எழுபத்தைந்துக்கு எழுபத்தைந்து, மிக மிக அழகான பெண், கால அவகாசம் மூன்று மணி நேரம். முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார். அவருக்கு, எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம்,கடைசியாக?அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்க்கான பணத்தையும் கட்டினார்.

 

வரவேர்ப்பாளர் அவரிடம் பதினாறாவது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார், முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோஷத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு பதினாறாவது மாடியை அடைந்தார். அங்கு அவர் நார்ப்பத்திரண்டாவது மாடிக்கு பதினைந்து நிமிடத்திற்குள் ஓடி வந்து சேர வேண்டும். அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது, முல்லாவிற்கு வேறு வழியும் இல்லை, தான் காணப்போகும் மிக மிக அற்புதமான அனுபவத்தை நினைத்தவாறு உயிரைக் கொடுத்து ஓடி மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500X500 அடி பரப்பளவு இருக்கும், அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான். அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது, முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே! " நான் உன்னை துரத்திப் பிடித்தால், என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன் “ என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக ஒரு பெரிய மனிதக்குரங்கு அமர்ந்திருந்தது.

 

Link to post
Share on other sites

நானும் ஒரு விபச்சாரி  

ஒரு முறை நடைபாதையில் லைசென்ஸ் இல்லாமல் நடை பாதையில் வியாபாரம் செய்ததற்க்காக முல்லா மாட்டிக்கொண்டார்-அவ்ர் அந்த ஊருக்கு புதிது அதனால் அங்கு நடைபாதையில் வியாபாரம் செய்ய உரிமம் தேவை என்பது தெரியாது.

 

அவர் நீதி மன்றத்திற்க்கு அழைத்து வரப்பட்டார்- அங்கு நீதிபதி முன் மூன்று பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உரிமம் இல்லாமல் விபச்சாரம் செய்ததல் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர். அந்த ஊரில் விபசாரம் செய்யவும் உரிமம் வழங்கப்படுகிறது-அவர்கள் அத்தகைய உரிமம் இல்லாததால் மாட்டிக்கொண்டனர்.

 

நீதிபதி முதல் பெண்ணிடம் கேட்டார் “ நீ யார் ,என்ன செய்து கொண்டிருந்தாய் ? இந்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா ?“

 

முதல் பெண் “ நான் ஒரு மாடல் , என்னை தவறாக கைது செய்துவிட்டனர்” என்று பொய் சொன்னாள்.

 

நிதிபதி “ 30 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு இரண்டாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

 

இரண்டாம் பெண் “ நான் ஒரு நடிகை! இதற்க்கும் சிறிதளவும் சம்மந்தமில்லை “ எனச் சொன்னாள் ( பொய்தான் ) நீதிபதி “ உனக்கு 60 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு முன்றாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

 

முன்றாம் பெண் “ ஐயா ! நான் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னாள்

 

இதைக் கேட்ட நீதிபதி “ நான் உன்னை பாராட்டுகிறேன் தண்டனை கிடைக்கும் எனத்தெரிந்தும் உண்மையை சொன்னதற்க்காக! நான் உண்னை விடுதலை செய்கிறேன் அதுமட்டுமல்ல உனக்கு உரிமம் வழங்கவும் உத்திரவிடுகிறேன்! “ எனதீர்ப்பு கூறினார்

 

இப்போது முல்லாவின் முறை, நீதிபதி தனது வழக்கமான கேள்விகளை முல்லாவிடம் கேட்டார் அதற்க்கு முல்லா” ஐயா ! நானும் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னார்

Link to post
Share on other sites
 • 1 month later...

Smily.gif

"ஆறாத ரணம்னு டாக்டர்கிட்டே போனியே, என்ன சொன்னார்?"

 

"ஒண்ணும் பயப்பட வேண்டாம். இது சாதா'ரணம்'னுட்டார்"

@

 

இரண்டு பேய்கள், "வாக்கிங் போக முடியலேங்கிற ஒரு குறைதான்!"

@

 

மனைவி கணவனிடம், "சே..! வர வர நீங்க ரொம்ப மோசம். வீட்டில் தூங்கும்போது கூட மானேஜர் வர்ரார்னு சொன்னதுக்கப்புறம்தான் கண்ணையே திறக்கறீங்க!"

@

 

"ஆனாலும், நம்ம ஜம்புலிங்கம் இப்படிச் செய்யக்கூடாது.."

 

"ஏன், என்ன ஆச்சு?"

 

"கொஞ்சம் உயர்ந்த நிலைக்கு வந்ததும் தன்னோட பேரை 'ஹைஜம்ப்லிங்கம்'னு மாத்தி வெச்சுட்டார்!"

@

 

"குடும்பப் படம்னு சொல்லிட்டு நிறைய சண்டைக் காட்சிகளை இணைச்சிருக்கீங்களே?"

 

"சண்டை இல்லாத குடும்பம் ஏது சார்...!"

@

 

நர்ஸ்; "நீங்க அப்பாவாகப் போறதா சொல்றேன். கொஞ்சம் கூட மகிழ்ச்சி அடையலியே.."

 

மற்றவர்; "எத்தனை தடவைதான் நர்ஸ் மகிழ்ச்சி அடையிறது?"

@

 

"சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் என் மனைவி என் கூட சண்டை போடுறா..."

 

"ஏன் அப்படி?"

 

"நான் சின்ன வீடு வச்சிருக்கது அவளுக்குப் பிடிக்கலையாம்!"

@

 

"முன்பெல்லாம் இராத்திரியில் படியில ஏறி இறங்குற மாதிரி கனவு வந்துச்சு..."

 

"நான் குடுத்த மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்ட பிறகு எப்படி இருக்கு?"

 

"இப்ப ஏறி இறங்குறதெல்லாம் இல்லீங்க டாக்டர். லிப்டிலேயே போயிடுறேன்...!"

@

 

"பணம் சம்பாதிக்க பத்து வழிகள்னு ஒரு புத்தகம் எழுதி இருக்கேன்"

 

"சரி, மீதி ஒன்பது வழிகள் என்னென்ன?"

@

 

"நமது நாட்டு மன்னரிடம் எந்த நாட்டு மன்னரும் போருக்கு வருவதில்லையே. ஏன்?"

 

"போரில் தன்னை வெல்பவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைப்பேன்னு அறிவிச்சிருக்காரே அந்தப் பயம்தான்!"

Link to post
Share on other sites
 • 2 months later...

உங்களுக்குள் எப்படி சண்டையே வருவதில்லை?"

 

muttel%2520family.png
கணவன்-மனைவி

அவர்களுக்கு இடையில் எப்பொழுதும் சண்டையே வருவது இல்லை.இது எப்படியோ பிரபலமாகி,

 ஒரு பத்திரிக்கை நிரூபர் அவர்களைப் பேட்டி காண வந்தார்.உங்களுக்குள் எப்படி சண்டையே வருவதில்லை?"

 
மிகவும் சுலபம்.சின்ன சின்ன விஷயங்களில் எப்பொழுதும் நான் முடி வெடுப்பேன்.பெரிய பெரிய விஷயங்களில் எப்பொழுதும் என் மனைவி முடிவெடுப்பார்"
 
அப்படியா,
 
சின்ன விஷயங்களென்றால்என்னென்ன?"
 
எந்த கார் வாங்க வேண்டும்எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும்,சொந்த ஊருக்கு எப்பொழுது செல்ல வேண்டும்எந்த சோஃபாஏர் கண்டிஷனர்ரெஃப்ரிஜிரேட்டர் வாங்க வேண்டும்,மாதச் செலவுகள்,வேலைக்காரி வேண்டுமா வேண்டுமா,இதெல்லாம் சின்ன விஷயங்கள்.இதில் என் மனைவி முடிவெடுப்பார்கள்நான் ஒன்றுமே சொல்வதில்லை"
 
அப்படியா,
 
பெரிய விஷயங்களென்றால்,என்னென்ன?"

அமெரிகா ஈரானுடன் போர் புரிய வேண்டுமா,பிரிட்டன் ஜிம்பாப்வேக்கு எதிரான் சாங்ஷனை நீக்க வேண்டுமாசச்சின் டெண்டுல்கர் எப்பொழுது ஓய்வு பெற வேண்டும்அணு ஆயுத ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டுமா என்பதெல்லாம் பெரிய விஷயங்கள்.இதில் என் மனைவி ஒன்றுமே சொல்வதில்லை.நான் தான் முடிவெடுப்பேன்"

 

Link to post
Share on other sites

மூளை இருக்கா ????????

 
meat-shops.jpg

 
ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி.

ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா? என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.

இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.

நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நண்பனும் கூறினான்.

images.jpg

கடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா? என்று வழக்கம் போலக் கேட்டான்.

அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை என்றான்.

திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த,

கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி.

 

Link to post
Share on other sites
 • 4 months later...
1) கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே?
 
மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க?
 
கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்...
 
மனைவி: ????
 
2) மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க.
 
கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்”
 
மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....”
 
கணவன் :????
 
3) டீச்சர்: உன்பேருஎன்ன..? -
 
மாணவி : " சௌமியா"
 
டீச்சர்: உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?
 
மாணவி : தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,
 
டீச்சர் : ????
 
4) டாக்டர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
 
பேசன்ட் :"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
 
டாக்டர்: ????
 
5) மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
 
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
 
மாப்பிள்ளை வீட்டார்:???
 
6) ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.
 
மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்.
 
ஆசிரியர் : ?
 
7) ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?
 
மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!
 
ஆசிரியர் : ???
 
வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
 
சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
 
வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?
 
மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.
 
வா‌த்‌‌தியா‌ர் : ????
 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஹீரா குகையினிலே... சீராய்ப் பிறந்ததம்மா || S.P.பாலசுப்ரமணியம் | இஸ்லாமிய பாடல்கள் | ISLAMIC SONGS.  
  • முகமெல்லாம்... முகமது நபி போல் முகமாகுமா || நெல்லை அபுபக்கர் | ISLAMIC SONGS.  
  • இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகர். bleiben sie gesund
  • ஐ.எஸ். குறித்து எச்சரித்தும் நல்லாட்சி அரசு கண்டுகொள்ளவில்லை – விஜயதாச      by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/Wijeyadasa.jpg ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர்களின் ஈடுபாடு குறித்து தான் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தால், பயங்கரவாத தாக்குதல்கள் தடுத்திருக்கலாம் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்த அவர், குறித்த தாக்குதலை தடுப்பது மட்டுமன்றி ஐக்கிய தேசிய கட்சியின் அழிவு மற்றும் அதிகார இழப்பு ஆகியனவற்றை தவிர்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் விஜயதாச ராஜபக்ஷவை குறுக்கு விசாரணை செய்ய விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இவ்விருவரும் கடந்த 28 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராக அழைப்பாணை விடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாரணைகளின்போது ஆணைக்குழு முன்னிலையில் விஜயதாச ராஜபக்ஷ, பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சமர்பித்திருந்தார். குறித்த பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள விஜயதாச ராஜபக்ஷ எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர்களின் ஈடுபாடு குறித்து 2016 நவம்பர் 18 ஆம் திகதி தான் ஆற்றிய உரையினை மறுத்ததன் மூலம் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ரஹ்மான் ஆகியோர் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தினர் என விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். அந்த நேரம் அரசாங்கம் த்னது அறிக்கை குறித்து கவனம் செலுத்தியிருந்தால் ஈஸ்டர் தாக்குதல்கள், ஐக்கிய தேசிய கட்சியின் அழிவு மற்றும் அதிகாரம் இழப்பு ஆகியனவற்றை தவிர்த்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். http://athavannews.com/ஐ-எஸ்-குறித்து-எச்சரித்த/
  • மாற்று திறனாளிகளும் களத்தில் 👍 தேர்தல் 2021-ல் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற தம்பி தங்கைகளுக்கு சீமானின் அறிவுரைகள் | செந்தமிழ்  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.