Jump to content

“13” முழுமையாக அமுலாக இடமளியோம்! – பிக்குகள் எச்சரிக்கை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆரோக்கியமான கருத்தாடல். இவ்வாறான கருத்தாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் பல் வேறு தரப்பிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் போது,  ஒரு கட்டத்தில் புரிந்துணர்வுடன் கூடிய ஒற்றுமை உருவாகும்.  
ஒற்றுமை என்பது,  ஒருவர் கூறியதை  மற்றவர் எல்லாம் அப்படியே 100 வீதம் ஏற்று ஆமா போடுவதாக இருக்க தேவையில்லை. அப்படி இருக்கவும் கூடாது. 

பலவேறு வித்தியாசமான சிந்தனைகளின் மீது கட்டி எழுப்பப்படுவதே உண்மையான,  சிறந்த ஆரோக்கியமான ஒற்றுமை.  அவ்வாறான ஒற்றுமை எம்மிடையே கட்டி எழுப்பப்படாலே காலப்போக்கிலாவது நாம் விரும்பிய கெளவரமான தீர்வை பெற முடியும். 

கருத்தாடலுக்கு நன்றி: 

@குமாரசாமி@பகிடி@பிரபா சிதம்பரநாதன்@Nathamuni@பையன்26@Kandiah57

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பகிடி

இந்தியாவின் இலங்கைக்கான கொள்கை என்பது இலங்கையில் தமிழரும் சிங்களவரும் தொடர்ந்து அடிபட்டு குத்துப் பட வேண்டும் என்பதே. பிரிட்டிஷ் அமெரிக்க நிலைபாடும் இதுவே. இந்தியாவுக்கு இலங்கைத் தமிழர் மேலும் சி

Kandiah57

இன்றைய நிலையில் நீங்கள் சொல்வது சரியானதாகும்...ஆனால் அதற்கு முதல் நாங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும்... 1...தந்தை செல்வா.  தமிழ்ஈழம்.    விரும்பி கேட்கவில்லை   ..இலங்கையை அவர் வெறுக்கவில்லை

Sasi_varnam

இந்த கருத்தாடலின் ஒரு அங்கமாக விளங்கக்கூடிய ஒரு திரியை கோஷன் கடந்த மாதம் திறந்து சில கருத்துக்கள், பதிவுகளை வைத்திருந்தார். அதாவது இன்றைய நாளில் தமிழ் மக்களுடைய தேவை என்ன நிலைப்பாடு என்ன என்கிற தலைப்ப

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

வடக்கில் உள்ள அரச அலுவலர்கள், தனியார் ஊழியர்களுக்கும் அவற்றின் கொழும்பு தலைமையகம், வடக்கில் உள்ள அலுவலகங்கள் நன்றாக இயங்குவதாக(?), இலாபம் ஈட்டுவதாக etc etc கூறி இலவச சுற்றுலா வசதிகளை செய்து தெற்கிலும் இலங்கையின் மற்றைய இடங்களுக்கும் கூட்டிப் போகிறார்கள்.. நன்றாக அவர்களைக் கவனிக்கிறார்கள்.. நல்ல விடயம்தான்,  எங்களவர்களும் சேர்ந்து வாழலாம் என நினைக்கிறார்கள்..

அதுமட்டுமல்ல போர் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகியும் ஒன்றுமே நல்லது நடவாதமையாலும் இன்றைய சமூக நிலையிலும் ஏதோ தருவதைத் தந்து நிம்மதியாக இருக்கவிட்டால் காணும் என்ற நிலையிலும் இருக்கிறார்கள். அதனால்தான். ஒன்றுமே இல்லாத 13த் தாருங்கள்.. சிங்களவர்கள் நல்லவர்கள், பழக இனிமையானவர்கள், சேர்ந்து வாழலாம் .. இப்படிப் பல .. 

அவர்கள் அப்படிக் கேட்பதை/நினைப்பதைக் கூட நான் தவறாக கூறவில்லை.. ஏனெனில் அங்கே உள்ளவர்களுக்குத்தான் அங்கே உள்ள நடைமுறைச் சிக்கல்கள், வாழ்க்கையின் பிரச்சனைகள் தெரியும்..அனுபவிப்பதும் அவர்கள்தான்.. 

ஆனால் இன்று வரையும் போராடும் காணாமல் போனவர்களின் பெற்றோர் உறவுகளின் நிலை? மாவீரர்களின் தியாகங்கள்? இன்றுவரை வறுமையிலும் பல்வேறு இடர்களுக்கும் முகம் கொடுக்கும் போராளிகள் மக்கள்? இன்று எங்களது வன்முறைக் கலாச்சாரத்திற்கான தீர்வு?

இவ்வளவும் ஏன் இன்று இந்த பிக்குகளின் எதிர்ப்பிற்கு மறுப்பு தெரிவித்தோ இல்லை இனப்பிரச்சனையை தீர்க்கவேண்டும் என சாதாரண சிங்களவர்கள்கூட  முன்வரவில்லை.. 

இந்த நிலையில் யார் முதலில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்? 

நான் இப்படி எழுதுவதால் இன்னொரு போர் வேண்டும் என்ற அர்த்தமில்லை.. ஆனால் எனக்குள் ஏற்படும் கேள்விகள் இவை!.. 

நம்பிக்கையை உருவாக்க வேண்டியவர்கள் சிங்களவர்கள் தான் ஆனால் அப்படி ஒரு படிநிலைக்கு சிங்கள மக்கள் நகர இந்தியா இடமளிக்கவில்லை.

இன்னும் மன்னாரில் இருந்து ராமேஸ்வரம் வரைக்கும் பாலம் அமைக்க இந்தியா முயல்கிறது. சிதம்பரத்துக்கு கப்பல் விட முயல்கிறது. இந்த இரண்டுக்கும் இலங்கை போக்குக் காட்டி தப்பித்து வருகின்றது

இந்தியா இலங்கைத் தமிழரைப் பயன் படுத்தி இங்கே தன் செல்வாக்கை பலப் படுத்திக்கொள்ள விரும்புகின்றது. அதில் வெற்றியும் பெற்று விட்டது.தமிழரும் சிங்களவரும் எதாவது ஒரு உடன்பாட்டுக்கு வர விளையும் பொழுது அதைக் குழப்புகின்றது.

இரண்டு கிட்டட்டி உதாரணங்கள்

1) ரணில் மைத்திரி ஆட்சியில் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை சுமத்திரன் சம்பந்தன் ஆகியோர் இணைந்து கொஞ்சமெனும் சமஸ்டிக்கு அருகில் கொண்டு வர முனைந்த பொழுது ஈஸ்டர் தாக்குதலை நாடாத்தி அதைக் குழப்பியடித்தது இந்தியா. இதை அன்று ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக வந்த தகவல்களை உன்னிப்பாக அவதானிப்போருக்கு நன்கு விளங்கும்.

அடுத்தது இப்போது ரணில் கொஞ்சம் உறுதியாகவே 13 ஐ தரப் போவதாகச் சொன்னதும் பயப்படும் இந்தியா பிரபாகரன் கதையை அவிழ்த்து விட்டு இருக்கிறது

இப்படி சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இந்தியா செய்து வருகின்றது

நீங்கள் சொல்லுங்கள் இப்போது யார் நமக்கு எதிரி?

சிங்களவனா? அல்லது இந்தியனா?

காலம் எங்கள் தாய்மார்களின் காயங்களை ஆற்றும், சிங்களத் தாய்களும் தம் மகன்களுக்கு பாலூட்டியவர்கள் தான் அவர்களும் தான் தம் பிள்ளைகளைப் பலி கொடுத்து இருக்கிறார்கள். ஓம் நீங்கள் சொல்வது விளங்குகின்றது. காயங்களும் வலிகளும் மனதின் ரணங்களும் எங்களுக்குத் தான் அதிகம். ஆனால் அதை வைத்தே இன்னொரு குளறுபடியை உருவாக்கும் இந்தியாவை அனுமதிக்கப் போகின்றோமா அல்லது கூடி வாழ்வதே நல்லது என்ற என்னவோட்டதுக்கு எம் மனதை மாற்ற ஏத்தனிக்கப் போகின்றோமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

இஸ்ரேவேலில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட யூதர்களின் பலமானது, அவர்களது பொருளாதாரத்தில் தங்கி இருந்தது.

இன்று தமிழர்கள் பலம் அவ்வாறே உருவாகின்றது.

இதுவரை 1 பில்லியன் என்று இருந்த லைக்காவில் இருந்து, 10 பில்லியன் என்று ஆயில் கம்பெனி சஞ்சய்குமார் வரை பலம் வளர்கிறது. இது இன்னும் பெருகும் போது, யூதர் பெற்ற பலம் வரும். 

***

பத்தாததுக்கு நம்ம உடான்சு சுவாமியார், சும்மா நினைக்காதீர்கள். பெரும் பண முதலை. வெளியே சொல்வதில்லை. ஆனால் அவரது சகலமும் அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். 😎

இஸ்ரேலின் உருவாக்கம் ஆங்கிலோ அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக் கொள்கையால் ஆமோதிக்கப் பட்ட திட்டம். அமேரிக்கா தனது நலன் கருதி அதை ஆசீர்வதித்தது.

தமிழர்க்கு ஒரு நாடு அமைந்திடக் கூடாது என்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் நிலை. இந்தியா என்ற முழு நாடும் சீனாவை கட்டுக்குள் வைக்க அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது, ஆக தமிழர் ஒரு நாடு அமைக்க அது விடாது.

அடுத்தது நீங்கள் சொல்லும் பணக்கார் ஆகும் விடயத்துக்கு வருவோம். தமிழர் சில மில்லியன் டாலர் அல்லது பில்லியன் டாலருக்கு அதிபதி ஆகும் வரைக்கும் அமேரிக்காவோ அல்லது அதன் சார்பு நாடுகளோ ஒன்றும் செய்யாது ஆனால் அதற்கும் மிஞ்சினால் ராஜ் ராஜரத்தினதுக்கு நடந்த நிலை வரும். ஒரு கட்டத்தில் அவர் உலகின் முதல் 500 பணக்காரர் வரிசைக்குள் இருந்த ஈழத்தமிழர். கடைசியில் அவருக்கு என்ன நடந்தது? பொய்க் குற்றம் சுமத்திய அவரை பல வருடம் உள்ளே தள்ளி வெறும் சில மில்லியன் டாலர் உடன் வெளிய விட்டு இருக்கிறார்கள். அவர் அது சம்பந்தமாக எழுதிய புத்தகத்தை நான் வாங்கிப் படித்தேன். இயலுமானால் நீங்களும் படியுங்கள்

ஆக எம்மை யூதருடன் ஒப்பிடுவது எந்தளவுக்கு நியாயம் என்று தெரியவில்லை.

உலக ஒழுங்கு முறையில் ( அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவுற்று, இந்தியா துண்டு துண்டாக உடையும் வரைக்கும் ) நாம் நம் இனத்தைக் காக்க வேண்டும், அதற்கு கொஞ்சம் விட்டுக்கொடுக்க மனம் வேண்டும்

துருக்கீயர்களாளும் ரஷ்யர்கள் ஆலும் நசுக்கி ஒடுக்கப்பட்ட பண்டைய சரித்திரதைக் கொண்ட தொன்மையான மொழியைப் பேசும் அர்மெனியர்களைப் பாருங்கள், இரண்டில் எது ஓரளவுக்கு தீமை குறைந்தது என்று பார்த்து இன்று சோவியத் நாடுகளோடு சேர்ந்து இயங்குகின்றர்கள். அதனால் அவர்களுக்கு பூரண சுதந்திரம் கிடைக்கவில்லை எனினும் இன்னும் தம் மொழியை இனத்தைக் காப்பாற்ற முடிந்து இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்த பிக்குகள் இனவாதத்தின் பின்னால் இருப்பது மகிந்தாவும் அவர் கைத்தடிகள் சரத் வீரசேகர, விமல், உதயா போன்றவர்கள். இதனை அமெரிக்காம் கனடா அறிந்துதான் முதல் எச்சரிக்கை வேட்டு கனடாவால் தீர்க்கப்பட்டது.

அதுவும் சரி வராவிடில், அவர்கள் The Hague போகும் வகையில் சர்வதேசம் நடந்து கொள்ளும்.

சான்று, சேர்பியாவின் மிலோசொவிச்.

நீங்கள் இன்னொருவரை சேர்க்க மறந்துவிட்டீர்கள்.. பரவாயில்லை.. ஆனால் பிக்குகளின் இனவாதம் என்று மட்டும் தனியே கூற முடியாது..

நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்த்தால் சாதாரண சிங்களவர்களும்  இவர்களின் கதைகளை இனியும் நம்புவது என்றால் சிங்களவர்களின் ஆழ்மனதிலும் மாற்றம் இல்லை என்றுதானே அர்த்தம்.. 

The Hague நம்பிக்கையை நான் கலைக்கவில்லை.. ஆனால் இவையெல்லாம் தனியே பெயருக்கு மட்டும் என்பது என் அபிப்பிராயம்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்தாடலின் ஒரு அங்கமாக விளங்கக்கூடிய ஒரு திரியை கோஷன் கடந்த மாதம் திறந்து சில கருத்துக்கள், பதிவுகளை வைத்திருந்தார். அதாவது இன்றைய நாளில் தமிழ் மக்களுடைய தேவை என்ன நிலைப்பாடு என்ன என்கிற தலைப்பு என நினைக்கிறன்.
அதில் நாம் எதிர்நோக்கும் சவால்கள், தடைகள் போன்றன  குறித்தும் அடிப்படைகள் கேள்விகள், அலசல்கள்  கூட வைக்கப்பட்டிருந்தது.

இன்றைய சூழலில் நான் நினைக்கிறேன் இந்த 13 குறித்து சிங்கள மக்களிடம் பிணக்குகள் வளர்ப்பது தவிர்த்து, இன்னும் சொல்லப் போனால் காலாவதியாகிய, நிராகரிக்கப்பட்ட 13 ஐ இணைத்து  தமிழர்களின் பிரச்சினையை கதைப்பதை கூட தள்ளி வைத்து விட்டு, இன்றைய இலங்கையின் யதார்த்த சூழலில் சிங்கள மக்கள்படும் ஒட்டு மொத்த துன்பங்களுக்கும் காரணம் இந்த அதிகார மையம், அதிகார குவியல் ஒரே இடத்தில் இருப்பது தான், அந்த 75 வருட அதிகார குவியலால் நாட்டுக்கு, சிங்களவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தீமைகள் என்ன? இனிமேலும் இப்படியே போனால் அந்த மக்கள் எதையெல்லாம் சந்திக்கப் போகிறார்கள் போன்ற குறித்த பிரக்ஞயை உருவாக்குதல் வேண்டும். அவர்களுக்கும் கூட (சிங்களவர்களுக்கு)அதிகார பரவலாக்கல் எவ்வளவு நன்மையை அவர்களுடைய மாகாணங்களுக்கு, அவர்களுடைய மக்களுக்கு பயனளிக்கும் என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

அதாவது எமது பிரச்சினையை முன்வைத்து பேசுவதை சற்றே முதுகுக்குப் பின் மறைத்து விட்டு, சிங்களவனுடைய சிக்கல்களை பேசலாம்.  குறிப்பாக இந்த கொழும்பு சார்ந்த அதிகார மையம்!! அந்த உரையாடலில்  தெளிவு பிறக்கும் பட்சத்தில் அப்படியே பக்கத்தில் உள்ளவனுக்கும் பாயாசம் எண்டது போல் நாமும் எமக்கு கிடைக்கவேண்டியதை சரியான புரிதலோடு, உடன்பாட்டோடு பெற்றுக்கொண்டு அனைத்தையும் கட்டி எழுப்பலாம். 
அதே நேரம் இந்தியா எப்படியெல்லாம் எமக்கு சகுனியாக இருந்திருக்கிறது... இனிமேலும் கூட இருக்கும் என்பதையும் சேர்த்தே உரையாடலாம்.
தமிழர்களின் போராட்டம் என்றுமே இதர இனங்களுக்கோ, மதங்களுக்கோ எதிராக தொடங்கிய, வழிநடத்தப்பட்ட தொன்றன்று என்ற உண்மையை அழுத்தி சொல்லி  புதிய, இளைய சமுதாயத்தை நோக்கி குரல் கொடுத்து பார்க்கலாம்.

இதெல்லாம் நடக்கிற காரியமா தெரியவில்லை. ஆனால் குறைந்த பட்சம் அந்த சிங்கள மக்களிடம் எமது பிரச்சினைகளை பேசக்கூடிய ஒரு வெளியை உருவாக்கலாம்!! 🙂 
  
Edited by Sasi_varnam
  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

நம்பிக்கையை உருவாக்க வேண்டியவர்கள் சிங்களவர்கள் தான் ஆனால் அப்படி ஒரு படிநிலைக்கு சிங்கள மக்கள் நகர இந்தியா இடமளிக்கவில்லை.

இன்னும் மன்னாரில் இருந்து ராமேஸ்வரம் வரைக்கும் பாலம் அமைக்க இந்தியா முயல்கிறது. சிதம்பரத்துக்கு கப்பல் விட முயல்கிறது. இந்த இரண்டுக்கும் இலங்கை போக்குக் காட்டி தப்பித்து வருகின்றது

இந்தியா இலங்கைத் தமிழரைப் பயன் படுத்தி இங்கே தன் செல்வாக்கை பலப் படுத்திக்கொள்ள விரும்புகின்றது. அதில் வெற்றியும் பெற்று விட்டது.தமிழரும் சிங்களவரும் எதாவது ஒரு உடன்பாட்டுக்கு வர விளையும் பொழுது அதைக் குழப்புகின்றது.

இரண்டு கிட்டட்டி உதாரணங்கள்

1) ரணில் மைத்திரி ஆட்சியில் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை சுமத்திரன் சம்பந்தன் ஆகியோர் இணைந்து கொஞ்சமெனும் சமஸ்டிக்கு அருகில் கொண்டு வர முனைந்த பொழுது ஈஸ்டர் தாக்குதலை நாடாத்தி அதைக் குழப்பியடித்தது இந்தியா. இதை அன்று ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக வந்த தகவல்களை உன்னிப்பாக அவதானிப்போருக்கு நன்கு விளங்கும்.

அடுத்தது இப்போது ரணில் கொஞ்சம் உறுதியாகவே 13 ஐ தரப் போவதாகச் சொன்னதும் பயப்படும் இந்தியா பிரபாகரன் கதையை அவிழ்த்து விட்டு இருக்கிறது

இப்படி சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இந்தியா செய்து வருகின்றது

நீங்கள் சொல்லுங்கள் இப்போது யார் நமக்கு எதிரி?

சிங்களவனா? அல்லது இந்தியனா?

இலங்கையில் வாழ்பவர்கள் யார்? தமிழர் சிங்களவர்… இன்று ஒன்றாக இருப்பவர்களை நம்பாமல் அயலவனை நம்பி மோசம் போனது யார்? சிங்களவர்கள் இதயபூர்வமாக எங்களை மதித்து தீர்வை தர  விரும்பினால் இந்தியாவின் செயல்களைப் பற்றி அவர்கள் நம்பியிருக்க வேண்டிய தேவை என்ன? இங்கே சிங்களவர்களுக்கும் இந்தியாவிற்கும் பொது எதிரி யார்? 

தமிழர்களுடன் உண்மையில் தீர்வை விரும்பி நம்பிக்கையை முதலில் தரவேண்டியது அவர்கள்தான்.. அப்படி ஒரு நம்பிக்கையைத் தராமல் எப்படி அவர்களை நம்பலாம்? இந்தியாவை விலத்தி தமிழர்கள் சிங்களவர்களுடன் சேரவேண்டும  என்றால் இன்று அதிகாரத்தில் இருக்கும் சிங்களவர்கள்தான் அதனை உருவாக்கவேண்டும் உணரவைக்கவேண்டும்.. எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் எப்படி தமிழர்கள் போவார்கள்? 

இந்த 13, ரணிலின் உண்மையான முயற்சியா? இல்லை.. அப்படியானால் இந்த பிக்குகள் இந்த ஆர்பாட்டங்களை நடத்த விட்டிருக்கமாட்டார்.. இவர்களுக்கு உண்மையிலேயே தீர்வைத் தரவேண்டும் என்ற நோக்கம் இல்லை.. கதிரைக்கு வந்தாயிற்று.. அவ்வளவுதான்.. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

காலம் எங்கள் தாய்மார்களின் காயங்களை ஆற்றும், சிங்களத் தாய்களும் தம் மகன்களுக்கு பாலூட்டியவர்கள் தான் அவர்களும் தான் தம் பிள்ளைகளைப் பலி கொடுத்து இருக்கிறார்கள். ஓம் நீங்கள் சொல்வது விளங்குகின்றது. காயங்களும் வலிகளும் மனதின் ரணங்களும் எங்களுக்குத் தான் அதிகம். ஆனால் அதை வைத்தே இன்னொரு குளறுபடியை உருவாக்கும் இந்தியாவை அனுமதிக்கப் போகின்றோமா அல்லது கூடி வாழ்வதே நல்லது என்ற என்னவோட்டதுக்கு எம் மனதை மாற்ற ஏத்தனிக்கப் போகின்றோமா?

நல்ல விஷயம்..போரினால் பாதிக்கப்பட்டது சாதரான மக்களே அதில் சிங்களவர் தமிழர் என்ற பாகுபாடில்லை ஆனால் அப்படி சிங்கள தாய்மார்கள் அந்த வலியை உணர்ந்திருந்தால் தமிழ்பெற்றோர்களுடன் சேர்ந்தே இந்த காணாமல் போனவர்களுக்கு ஆதரவு அளித்திருப்பார்கள்..

இறந்த இராணுவ வீரர் குடும்பத்திற்கும் வீரமரணமடைந்த புலிவீரர் குடும்பத்திற்கும் உள்ள வித்தியாசம் கூட உங்களுக்கு இன்னமும் விளங்கவில்லை.. அவர்கள் நடத்தப்படும் விதங்களும் தெரியவில்லை..சிலசமயம் அது பற்றி தெரிந்திருந்தாலும் அதற்கான முக்கியத்துவம் குறைந்திருக்கலாம்.. 

Anyway, 

உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1960 கள் வரை தமிழர்கள் இந்தியாவை தமது உரிமைக்காக குரல்கொடுக்கும்படியோ அல்லது தமது தனிநாட்டிற்கான போராட்டத்திற்கு ஆதரவு நல்கும்படியோ கேட்டதில்லை. பண்டாரநாயக்காவின் தனிச்சிங்களசட்டம், தமிழர் மீதான திட்டமிட்ட வன்முறைகள், குடியேற்றங்கள், அடுத்தடுத்து தம்முடன் செய்த ஒப்பந்தங்களை பெளத்த காடையர்களின் அழுத்தத்தினால் சிங்களத் தலைவர்கள் தூக்கியெறிந்தமையினால் ஏற்பட்ட விரக்தியும் ஏமாற்றமும்  ஆகியவற்றின் பின்னரே தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழ்நாட்டுத் தலைவர்களையும், அவர்களூடாக இந்திய மத்திய அரசையும் தொடர்புகொண்டனர். அதுவரை இந்தியா தமிழர் சார்பாக இலங்கையில் தலையீடு செய்ததில்லை. 

தமிழர்களை இந்தியா நோக்கித் தள்ளியது யார்? இதற்கான விடை தெரிந்தால் எமது உண்மையான எதிரி யாரென்பது ஓரளவிற்குப் புரியும்.

சிங்களவர்கள் கூறும் இந்தியாவின் தமிழர் மீதான பாசமே தமது கொடுங்கோண்மைக்குக் காரணம் என்பது அர்த்தமற்றது என்பதுதான் எனது அசைக்கமுடியாத் நிலைப்பாடு. . சரி, எல்லாவற்றையும் விடுங்கள், 2006 இலிருந்து 2009 வரையான காலப்பகுதியில் இந்தியாவை ஆண்ட சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு தமிழரை அழிக்க இலங்கைக்குச் செய்த உதவியை சிங்களவர்கள் அறியவில்லை என்கிறீர்களா? எமது போராட்டத்தை முற்றாக அழித்து, ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொல்ல இலங்கைக்கு முழு உதவிகளையும் செய்தது இந்தியாதான் என்பதை சிங்களவர்கள் நன்றாக அறிவார்கள். இந்த லட்சணத்தில், தமிழர்களுக்குச் சார்பாக இந்தியா இனிமேலும் களத்தில் இறங்கும் என்று சிங்களவர் பயப்படுவதாகவும், அதனாலேயே இன்றுவரை தமிழனை அழிக்கக் கங்கணம் கட்டியிருப்பதாகவும் கூறுவது வேடிக்கை.

நாம் உதவிகேட்டோம், இந்தியா எம்மைப் பாவித்து இலங்கைக்குள் நுழைந்தது. ஆனால் இன்று தமிழரை விடவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் சிங்களவரையே தனது தோழர்களாக வைத்திருக்க வேண்டும் என்று அது விரும்புகிறது. சீனாவின் பின்னால் இலங்கை ஓடுவது கண்டும், அதனன் பின்னால் போய் அடுத்தடுத்து உதவிகளைச் செய்வதுகூட அதனால்த்தான். ஆக, இந்தியாவின் அச்சமே சிங்களவரை எம்மை அழிக்கத் தூண்டுகிறது என்பது பொய். ஏனென்றால், அப்படியொன்று இல்லையென்பது அவர்களுக்கே தெரியும்.

13 ஆம் திருத்தச் சட்டத்தை சிங்களவர்கள் எதிர்க்கக் காரணம் அது இந்தியாவினால் கொண்டுவரப்பட்டது என்பதற்காக அல்ல, மாறாக அதில் இருக்கும் சில விடயங்களை தமிழர்கள் பாவித்து தனிநாடு அடைந்துவிடுவார்கள் எனும் பயமும், கணி அதிகாரம் தமிழர் கையில் போகுமிடத்தும் தமது சிங்களக் குடியேற்றங்கள் தடைப்பட்டு விடுமென்கிற பயமும், பொலீஸ் அதிகாரம் தமிழரின் கைகளில் போகுமிடத்து தமிழர்களுக்கு தாமே அயுதம் கொடுத்துப் பலமாக்கி ஈற்றில் தனிநாடு அடைய வழிசெய்துவிடுவோம் என்கிற பயமும் தான். சிங்கள இனவாதிகளின் அண்மைய கூச்சல்களில் இது அதிகமாகப் பேசப்படுகிறது. தமிழ் பொலீஸுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் வெகு விரைவில் போர் நடக்கும் என்று அழுகிறார்கள். இவர்களுள் ஒருவர்கூட இந்தியாவை எதிர்த்துப் பேசவில்லை. ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும், இன்னொரு போர் வந்தால்க்கூட இந்தியா தமிழரை அழிக்க உதவும் என்பது.

Edited by ரஞ்சித்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, இன்றுவரை இலங்கை தமிழருக்குத் தருவதாக வாக்களித்துள்ள தீர்வுகள் என்னவென்பதை இலங்கையுடன் நட்புப் பாராட்டவேண்டும் என்று கூறுவோர் பட்டியலிடுங்கள் பார்க்கலாம். 

எனக்குத் தெரிந்தவகையில் 1978 ஆம் ஆண்டு ஜே ஆர் கொடுப்பதாக கூறிய 
 மாவட்ட அமைச்சர்கள் பதவியைத் தவிர வேறு எதுவுமே இல்லையென்பதுதான் உண்மை. வடக்குக் கிழக்கும் இணைந்த தமிழரின் தாயகத்தை தமிழரின் பூர்வீக நிலமாக அங்கீகரியுங்கள், சிங்களத்திற்கு ஒத்த அந்தஸ்த்தை தமிழுக்கும் தாருங்கள் என்று தமிழர் கேட்டதற்கு ஜே ஆரினால் தர முடிந்தது 25 மாவட்ட சபை அமைச்சர்களில் 3 மாவட்ட சபை அமைச்சுப் பதவிகள்தான். அதுகூட பேச்சளவில்த்தான் கூறப்பட்டது. ஒருவேளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இந்த அமைச்சர் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டிருந்தால் மறுகணமே அவற்றை சிங்கள பெளத்தர்களை ஆர்ப்பட்டம் செய்யத் தூண்டி முளையிலேயே கிள்ளி எறிந்திருப்பார்கள். பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு நடந்த அதே கதிதான் இதற்கும் நடந்திருக்கும்.

முதலில் சிங்களவர்களின் விருப்பத்தோடு தமிழர்களுக்குக் கிடைக்கும் தீர்வு என்னவென்பதை வெளிப்படையாகக் கூறுங்கள். பொலீஸ் வேண்டாம், காணியதிகாரம் இருந்தால்ப் போதும் என்று நீங்கள் தான் கூறுகிறீர்களே ஓழிய அவர்கள் கூறவில்லை. 13 ஆம் திருத்தமே வேண்டாம், அகற்றிவிடுங்கள் என்பதுதான் அவர்களின் வாதம். இந்த லட்சணத்தில் அவர்கள் விரும்பும் தீர்வு என்னவென்பதை உங்களை அனுப்பிவிட்டவர்களிடம் கேட்டு வாருங்கள். 

என்னைப்பொறுத்தவரை சிங்களவன் விரும்பித் தரும் தீர்வு : "இது ஒரு சிங்கள பெளத்த நாடு. சிங்களமும் பெளத்தமும் மற்றைய இனங்களுக்கும், மதங்களுக்கும் மேலானவை. இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது. சிங்களவரது தயவில் வாழ விரும்பினால் மற்றைய இனங்கள் ஒரு மூலையில் இருந்துவிட்டுப் போகட்டும். உரிமையும் சம அந்தஸ்த்தும் கோரினால் இந்தியாவுக்குப் போய்விடுங்கள். ஏனென்றால், மற்றைய இனங்களுக்கு உரிமையும் சம அந்தஸ்த்தும் இங்கே கிடையாது". 

இதைத்தானே விரும்பி ஏற்றுக்கொள்ளப்போகிறீர்கள்? இதைவைத்துக்கொண்டு பின்னர் சிறிது சிறிதாக ஏனைய விடயங்களைப் பெற்றுக்கொள்ளலாமா? எப்படி? நீங்கள் அவன் விரும்பித்தரும் இந்த அடிமைச் சாசனத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபின்னர் நீங்கள் மீண்டெழுவதென்பது கனவில்கூட நடவாதே? 

சிங்களவன் எமது எதிரி, இந்தியா எமது துரோகி. இரண்டுமே எம்மை அழிப்பதில் இணைந்துதான் செயற்படுகின்றன. இதில் ஒன்றை விட மற்றையது சிறந்தது என்று நாம் நினைத்தால் எம்மில்த்தான் தவறு இருக்கிறது. 

Edited by ரஞ்சித்
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

இதெல்லாம் நடக்கிற காரியமா தெரியவில்லை. ஆனால் குறைந்த பட்சம் அந்த சிங்கள மக்களிடம் எமது பிரச்சினைகளை பேசக்கூடிய ஒரு வெளியை உருவாக்கலாம்!! 🙂 

பலருக்கும் இப்படி ஒரு எண்ணம் கொஞ்ச காலத்திற்கு முன்பு இந்த அரகலய போராட்டம் நடைபெற்ற பொழுது இருந்தது .. காலி முகத்திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி.. அப்படி இப்படி என்றவுடன் எங்களில் அனேகமானோர் சிங்களவர்கள் மனம் மாறுகிறார்கள் என்றார்கள்.. சிங்கள மக்களும்  தமிழர்களும் இந்த நாட்டுப் பிரஜைகள், அவர்களுக்குத் தீர்வு கிடைக்கவேண்டும், நாங்கள் அவர்களை(தமிழர்களை) மதித்து சமமாக வாழ வேண்டும் etc etc என அறிக்கைகளை விட்டார்கள்.. ஆனால் இப்பொழுது அந்த எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா? 
அப்படி ஒரு எண்ணம் இருந்தால் நீங்கள் கூறுவதும் நடக்கலாம் ஆனால் உண்மையில் அவர்கள் எங்களைப் பயன்படுத்தினார்கள் என்ற எண்ணமே அதிகமாக உள்ளது.. 

இந்தியா அங்கே உள்ள இளைய சமுதாயத்தை தூண்டி மீண்டும் பிரச்சனையை உருவாக்கும் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இதற்கெல்லாம் உரிமை, தேசம் என்ற உணர்வு வேண்டும் ஆனால் அங்கே கஞ்சாவை அடித்துவிட்டு நிலைகெட்டு திரியும் இளையோரே அதிகம்.. வாள்வெட்டுக்குத்தான் லயக்கு என்ற கூட்டமே உள்ளது.. 

இந்த நிலையை இல்லாதெழித்தால்தான் உணர்வுடனும் அறிவாகவும் நடந்து எங்களது பிரச்சனைகளை பேசித் தீர்க்க கூடியவர்களை உருவாக்கலாம்.. 

உண்மையில் சசிவர்ணம், ஒருவருக்குமே எங்களது பிரச்சனைகளை தீர்த்து நாட்டைக் கட்டியெழுப்பி ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற எண்ணம் இல்லை. இதில் எங்களது தமிழ் அரசியல்வாதிகளும் அடக்கம்.. மக்களாக உணர்ந்து செயற்பட்டாலே தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை.. 

59 minutes ago, ரஞ்சித் said:

1960 கள் வரை தமிழர்கள் இந்தியாவை தமது உரிமைக்காக குரல்கொடுக்கும்படியோ அல்லது தமது தனிநாட்டிற்கான போராட்டத்திற்கு ஆதரவு நல்கும்படியோ கேட்டதில்லை. பண்டாரநாயக்காவின் தனிச்சிங்களசட்டம், தமிழர் மீதான திட்டமிட்ட வன்முறைகள், குடியேற்றங்கள், அடுத்தடுத்து தம்முடன் செய்த ஒப்பந்தங்களை பெளத்த காடையர்களின் அழுத்தத்தினால் சிங்களத் தலைவர்கள் தூக்கியெறிந்தமையினால் ஏற்பட்ட விரக்தியும் ஏமாற்றமும்  ஆகியவற்றின் பின்னரே தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழ்நாட்டுத் தலைவர்களையும், அவர்களூடாக இந்திய மத்திய அரசையும் தொடர்புகொண்டனர். அதுவரை இந்தியா தமிழர் சார்பாக இலங்கையில் தலையீடு செய்ததில்லை. 

தமிழர்களை இந்தியா நோக்கித் தள்ளியது யார்? இதற்கான விடை தெரிந்தால் எமது உண்மையான எதிரி யாரென்பது ஓரளவிற்குப் புரியும்.

சிங்களவர்கள் கூறும் இந்தியாவின் தமிழர் மீதான பாசமே தமது கொடுங்கோண்மைக்குக் காரணம் என்பது அர்த்தமற்றது என்பதுதான் எனது அசைக்கமுடியாத் நிலைப்பாடு. . சரி, எல்லாவற்றையும் விடுங்கள், 2006 இலிருந்து 2009 வரையான காலப்பகுதியில் இந்தியாவை ஆண்ட சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு தமிழரை அழிக்க இலங்கைக்குச் செய்த உதவியை சிங்களவர்கள் அறியவில்லை என்கிறீர்களா? எமது போராட்டத்தை முற்றாக அழித்து, ஒன்றரை லட்சம் தமிழர்களைக் ஒல்ல இலங்கைக்கு முழு உதவிகளையும் செய்தது இந்தியாதான் என்பதை சிங்களவர்கள் நன்றாக அறிவார்கள். இந்த லட்சணத்தில், தமிழர்களுக்குச் சார்பாக இந்தியா இனிமேலும் களத்தில் இறங்கும் என்று சிங்களவர் பயப்படுவதாகவும், அதனாலேயே இன்றுவரை தமிழனை அழிக்கக் கங்கணம் கட்டியிருப்பதாகவும் கூறுவது வேடிக்கை.

நாம் உதவிகேட்டோம், இந்தியா எம்மைப் பாவித்து இலங்கைக்குள் நுழைந்தது. ஆனால் இன்று தமிழரை விடவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் சிங்களவரையே தனது தோழர்களாக வைத்திருக்க வேண்டும் என்று அது விரும்புகிறது. சீனாவின் பின்னால் இலங்கை ஓடுவது கண்டும், அதனன் பின்னால் போய் அடுத்தடுத்து உதவிகளைச் செய்வதுகூட அதனால்த்தான். ஆக, இந்தியாவின் அச்சமே சிங்களவரை எம்மை அழிக்கத் தூண்டுகிறது என்பது பொய். ஏனென்றால், அப்படியொன்று இல்லையென்பது அவர்களுக்கே தெரியும்.

13 ஆம் திருத்தச் சட்டத்தை சிங்களவர்கள் எதிர்க்கக் காரணம் அது இந்தியாவினால் கொண்டுவரப்பட்டது என்பதற்காக அல்ல, மாறாக அதில் இருக்கும் சில விடயங்களை தமிழர்கள் பாவித்து தனிநாடு அடைந்துவிடுவார்கள் எனும் பயமும், கணி அதிகாரம் தமிழர் கையில் போகுமிடத்தும் தமது சிங்களக் குடியேற்றங்கள் தடைப்பட்டு விடுமென்கிற பயமும், பொலீஸ் அதிகாரம் தமிழரின் கைகளில் போகுமிடத்து தமிழர்களுக்கு தாமே அயுதம் கொடுத்துப் பலமாக்கி ஈற்றில் தனிநாடு அடைய வழிசெய்துவிடுவோம் என்கிற பயமும் தான். சிங்கள இனவாதிகளின் அண்மைய கூச்சல்களில் இது அதிகமாகப் பேசப்படுகிறது. தமிழ் பொலீஸுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் வெகு விரைவில் போர் நடக்கும் என்று அழுகிறார்கள். இவர்களுள் ஒருவர்கூட இந்தியாவை எதிர்த்துப் பேசவில்லை. ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும், இன்னொரு போர் வந்தால்க்கூட இந்தியா தமிழரை அழிக்க உதவும் என்பது.

மிக்க நன்றி..

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜே வி பி மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோருடன் சேர்ந்து பயணித்தல் எனும் கருத்திற்கான எனது பதில்.

மக்கள் விடுதலை முன்னணியினரின் இரண்டாவது எழுச்சியே 13 ஆம் திருத்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்தக் கூடாதென்பதற்காகவே நடத்தப்பட்டது. மேலும், 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அடிப்படையாக வைத்து தற்காலிகமாக (பொதுசன வாக்கெடுப்பு நடக்கும்வரையில்) இணைக்கப்பட்டிருந்த வடக்கையும் கிழக்கையும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் 2006 இல் இனவாத நீதியரசர் சரத் என் சில்வாவைக் கொண்டு நிரந்தரமாகவே பிரித்துப்போட்டதும் இதே மக்கள் விடுதலை முன்னணிதான். தமிழர்களுக்கென்று தனியான பிரச்சினை ஏதுமில்லை, நாட்டிலிருக்கும் மற்றைய இனங்களைப் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளே அவர்களுக்கும் இருக்கின்றன, ஆகவே அரசியல்த் தீர்வென்ற பேச்சிற்கே இடமில்லை என்பதே மக்கள் விடுதலை முன்னணியினரின் இன்றைவரையான நிலைப்பாடு.  இருவாரங்களுக்கு முன்னர்கூட மக்கள் விடுதலை முன்னணியினரின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தமது கட்சி 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அடிப்படையில், மக்கள் விடுதலை முன்னணியினர் என்போர் இனவாதத்தினை சோசலிசத்தினுள் மறைத்து அரசியல் செய்யும் தென்னிலங்கைச் சிங்களவர்களே. அவன்  தமிழருக்குப் பிரச்சினையே இல்லையென்கிறான், இந்த இலட்சணத்தில் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கலாமாம், நன்றாக இருக்கிறது.

இரண்டாவது வாசுதேவ நாணயக்கார

கடைந்தெடுத்த இனவாதி. மகிந்த இராஜபக்ஷெ எனும் இனக்கொலையாளியின்  அத்தனை அக்கிரமங்களையும் கூடவிருந்தே ஆதரித்தவன், இன்றுவரை ஆதரிப்பவன். விக்கிரமபாகு கருணாரத்தினவுடன் நவ சம சமாஜக் கட்சியிலிருந்த வாசுதேவ நாணயக்காரதான் இப்போதும் இருக்கிறான் என்றும், அவனோடு சேர்ந்து பயணிக்கலாம் என்றும் கனவு காண்போர் கடந்த 18 வருடங்களாக உறக்கத்தில் இருக்கிறார்கள் என்று பொருள். இவனது ஹெலிகொப்டர் முன்னணியின் ஏனைய இனவாத மிருகங்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்சவுடனும் சேர்ந்து பயணிக்கலாமே?? அவர்கள் உங்களுக்கு என்ன தரவிரும்புகிறார்கள் என்று கேட்டு, அதையே வாங்கிக்கொண்டு வாருங்கள், பின்னர் சிறிது சிறிதாக நாம் எமது இலக்கை அடையலாம், பகிடிக்குத்தானே??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் நடந்து முடியேக்க அங்கு தமிழ் மக்கள் எவளவு பேர் மிஞ்சி இருப்பார்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இதெல்லாம் நடந்து முடியேக்க அங்கு தமிழ் மக்கள் எவளவு பேர் மிஞ்சி இருப்பார்கள்.

வண‌க்க‌ம் சுவை அண்ணா 
ந‌ல‌மா

முத‌ல் புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் எம்ம‌வ‌ர்க‌ளுக்கு அடி போட்டால் ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ள் வெளி நாட்டு ஆசை இல்லாம‌ சுய‌ தொழில் அல்ல‌து கூலி வேலைக்கு போய் த‌ன்னும் குடும்ப‌த்தை பாப்பார்க‌ள்...................ஊரில் இருப்ப‌ர்க‌ளை உன்னை வெளி நாட்டுக்கு எடுத்து விடுவோம் என்று ஆசை வார்த்தைக‌ளை காட்டுவ‌து.............ச‌ரி உங்க‌ளிட‌த்திலே ஒரு கேள்விய‌ முன் வைக்கிறேன் அண்ணா , த‌மிழீழ‌த்தில் நீங்க‌ள் ஆர‌ம்ப‌ க‌ல்வி க‌ற்க்கும் போது உங்க‌ளின் பாட‌சாலையில் எத்தை பிள்ளைக‌ள் ப‌டித்தார்க‌ள்............கூடுத‌லா த‌மிழீழ‌ பாட‌சாலையில் 1900க‌ளில் இருந்து 1995 வ‌ரை 600 பிள்ளைக‌ளுக்கு மேல்.............இப்போது 250க்குள் வ‌ந்து விட்ட‌து..................ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வு தூய‌வ‌ன் எழுதின‌து ஒரு குடும்ப‌த்தில் குறைந்த‌து ஜ‌ந்து பிள்ளைக‌ள் த‌ன்னும் இருக்க‌னும் என்று...............வ‌றுமையில் வாடும் ஏழை ம‌க்க‌ளால் இல‌ங்கையில் ஒரு பிள்ளைய‌ வ‌ள‌த்தெடுப்ப‌தெ மிக‌ க‌ஸ்ர‌ம் 

ஆண்டு நினைவில்லை இதுக்குத் தான் த‌லைவ‌ர் நாட்டு ந‌ல‌ன் க‌ருதி  புது ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ந்த‌வ‌ர் ஈழ‌ ம‌ண்ணில் இருந்து கொழும்புக்கு போர‌வை த‌மிழீழ‌ காவ‌ல்துறையிட‌ம் பாஸ் வாங்கி விட்டுத் தான் போக‌னும் என்று..............அந்த‌ ம‌னுஷ‌ன் அந்த‌ கால‌த்தில் கூட‌ விரும்பின‌து கிடையாது த‌மிழ‌ர்க‌ள் அன்னிய‌ நாட்டில் போய் வாழ்வ‌தை..............எல்லா வ‌ச‌திக‌ளுட‌னும் த‌மிழீழ‌த்திலே வாழ‌னும் என்று..............என்னை பொறுத்த‌ வ‌ரை இது அட‌க்குமுறை கிடையாது..............த‌லைவ‌ர் எடுத்த‌ சிற‌ந்த‌ முடிவு.............நான் பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில் என‌க்கும் ச‌ரி என‌து ச‌க‌ தோழ‌ர்க‌ளுக்கும் க‌ஞ்சா என்றால் என்ன‌ என்று தெரியாது..............சின்ன‌னில் எங்கை ஊரில் ப‌டிச்ச‌து பாட‌சாலையில் சேர்ந்த‌ கால‌ம் தொட்டு இட‌ம் பெய‌ர்வு அது இது என்று சிறு வ‌ய‌திலே எங்க‌ளின் ப‌டிப்பு ஒரு முன்னேற்ற‌மும் இல்லாம‌ நாச‌மாய் போன‌து 

இப்ப‌ த‌மிழீழ‌ நில‌ப்ப‌ர‌ப்பில் ப‌ல‌ குடும்ப‌ங்க‌ளை வ‌றுமை போட்டு வாட்டி எடுக்குது.............க‌ருனை உள்ள‌ம் ப‌டைச்ச‌துக‌ள் ஜ‌ந்தை ப‌த்தை கிள்ளி  கொடுக்கின‌ம்.............கொடுக்க‌ ம‌ன‌ம் இல்லாத‌துக‌ள் புல‌ம்பெய‌ர் நாட்டில் ஆட‌ம்ப‌ர‌ வாழ்க்கை வாழுகின‌ம்..............

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பகிடி said:

இப்போதைக்கு போலீஸ் அதிகாரம் கூட வேண்டாம் ( போலீஸ் அதிகாரம் தந்தால் நல்லது தராவிட்டால் விட்டுப் பிடிப்போம் )ஆனால் காணி அதிகாரம் வேண்டும். காணி அதிகாரம் கிடைக்கும் பொழுது நிலம் பறி போவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் அதுவே அடுத்த இருபது வருடங்களுக்குப் போதும். ஏற்கனவே சுகாதாரத் துறை போன்ற சில அதிகாரங்கள் இருக்கின்றன. 

காணி அதிகாரம் மட்டும் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டத்தை அமுல்படுத்துவது காவல்துறை.நாளைக்கே ஒரு புத்தபிக்கு வந்து அடாத்தா காணி பிடித்தால்நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை இந்தியா ஒரு வக்கத்தநாடு. இழப்பின் நடுவில் நலிந்திருக்கும் மக்களை பயன்படுத்தி அவர்களின் நிழலில் சுகங்காணும் சுடுகாடு.

3 hours ago, ரஞ்சித் said:

சிங்களவர்கள் கூறும் இந்தியாவின் தமிழர் மீதான பாசமே தமது கொடுங்கோண்மைக்குக் காரணம் என்பது அர்த்தமற்றது

இது நம்மை நாமே ஏமாற்றி ஆறுதல்படும் காரணம். விடுதலைப்போர் முறியடிக்கப்பட்டு முடிந்தவுடன் சரத் பொன்சேகா கூறினார் "நாங்கள் கிளிநொச்சியை கைப்பற்றியதும் தாக்குதல்களை நிறுத்துவதாக இருந்தோம் ஆனால் இந்தியாவே போரை முன்கொண்டு செல்ல எங்களை தூண்டி வற்புறுத்தியது." மஹிந்தா சொன்னது "விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை, அது இந்தியாவின் போர். அந்தப்போரை இந்தியாவே செய்தது, இந்த யுத்தத்தில் இந்தியாவை உதவி செய்யச்சொல்லி நான் கேட்கவில்லை, இந்தியா தானே முன்வந்து பல்வேறு உதவிகளை செய்தது. உண்மையில் இது என்னுடைய போர் இல்லை, அது இந்தியாவின் போர் என்றுதான் சொல்ல வேண்டும்." என்று வெளிப்டையாகச்சொன்னார். அதை இந்தியா மறுக்கவில்லை. மகிந்த காலத்தில் இனப்பிரச்சனைக்கு திட்ட வரைபு செய்வதற்காக மஹிந்தவால் நியமிக்கப்பட்டவர் திஸ்ஸ விதாரண அவர் கூறியது. தன்னை இந்தியாவுக்கு அழைத்து அந்த செயற்பாட்டை நிறுத்தும்படி இந்தியா வற்புறுத்தியது என்றார். இந்தியா அதை மறுக்கவில்லை. எரிக் சொல்ஹெய்ம் என்ன சொன்னார் என்பதை எல்லோரும் அறிவர். இந்தியா அதையும் மறுக்கவில்லை. கொத்துக்கொத்தாக தமிழரை அழித்து விட்டு ரத்தம் தோய்ந்த கையோடு ஐ. நா. சென்ற மஹிந்தவை பாராட்டி அனுப்பியது இந்தியா. இப்போ சொல்லுங்கள்! சிங்களவருக்கு எங்கிருந்து அந்தப்பயம் வந்தது? இது நாங்களே உருவாக்கி நம்மை நாமே சமாதானப்படுத்தும் கதை. இன்னும் இருக்கு... நாம் எப்படி இந்தியா எமக்கு ஒரு தீர்வை பெற்றுத்தரும் என நம்பலாம்? இலங்கையை விட முழுமூச்சாக எங்களை அழித்தது இந்தியா, கண்ணால் கண்டோம், சிங்களவன் சொல்லி மகிழ கேட்டோம். ஒரு சிறிய அதிகாரமுமில்லாத பதின்மூன்றை முப்பத்தைந்து ஆண்டுகளாய் நிறைவேற்றுவிக்க முடியாத, விரும்பாத இந்தியா எதைப்பெற்று தரப்போகிறது? எங்கே எங்கள் தலைவர் என்று சொல்லிக்கொள்பவர்கள் தன்னை விட்டு வேறு எங்கும் போய்விடுவார்களோ என்கிற அச்சத்தில் அவர்களை ஊட்டி அருகே வைத்திருக்கு. இதை அவர்கள் அறியாமலில்லை ஆனால் இந்தியாவோடு சேர்ந்திருந்தால் இரண்டு பக்கமும் வருமானம் ஆகவே அவர்களுக்கு ஒத்தூதிக்கொண்டு அவர்களின் கவனிப்பில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். எங்களை வைத்து சிங்களம், முஸ்லீம், இந்தியா, இன்னபிற நாடுகள் நன்மையடைகின்றன ஆனால் எங்களுக்கு ஒரு விடிவுமில்லை. ஆகவே மற்றவரை நம்பி காத்திருப்பதைவிட நம்மளால முயன்றதை செய்வோம், யார் காலடியிலும் விழாமல்  எதிர்பார்ப்பு, ஏமாற்றமாவது இல்லாமல் வாழலாம். நாம் நாமாக வாழ முயன்றால் நம்மை வைத்து பிழைப்பவர்களுக்கு வேலை இல்லை, தம்மைத்தாமே வருத்த வேண்டிவரும் தரகு வேலை நிற்கும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13ஐ அமுல்படுத்துவதன் மூலமே நாடு பிரிவினையற்ற தேசமாக இருக்கும் - கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்

Published By: T. SARANYA

20 FEB, 2023 | 03:45 PM
image

எமது நாட்டில் அமுலிலுள்ள அரசியலமைப்பு திருத்தச்சட்டங்கள் அதன் சரத்துக்களினூடாக அமையப்பெற்றுள்ள நல மேம்பாடுகள் சிறுபான்மை இன மக்களுக்கு இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்படாத நிலையே காணப்பட்டு வருகின்றது. 

அதனடிப்படையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமும் இருக்கக்கூடாதென்பதே எனது கருத்தாகும். 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதன் மூலமாகவே தேசிய ரீதியில் பிரிவினையற்ற தேசமாக இலங்கையை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் அரசியல் சமூக, சமய, கலை, கலாசார விழுமியங்களோடு சுதந்திரமாக வாழவேண்டுமென்பதே எல்லோரதும் எதிர்ப்பார்பாகும்.

அந்தவகையில் 13ஆவது திருத்தச்சட்டம் என்பது வடக்கு, கிழக்கு மக்களுக்கு மட்டுமன்றி, முழு நாட்டுக்கும் ஏற்றவகையிலானதாகவே அமைந்துள்ளது. அரசியலமைப்பை மாற்றி, புறக்கணித்து அல்லது கொச்சைப்படுத்தி அதனூடாக நாட்டை குட்டிச்சுவராக்கும் எண்ணம் துளியளவும் கிடையாது என்பதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகத் தெளிவுபட கூறியுள்ளமை எமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருவதாகவுள்ளது.

நாடு கடந்து வந்த சிக்கல்கள், அரசில், சமூக, பொருளாதார நெருக்கடி தற்போது படிப்படியாக குறைந்து தற்போது ஒரு சுமூகமான நிலையில் நாட்டின் பொருளாதாரம் தக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார வளர்ச்சியானது எதிர்வரும் காலங்களில் சீரான நிலையை அடையும் என்பதை ஜனாதிபத ரணில் விக்கிரமசிங்க உறுதியாக அறிவித்துள்ளார். அதேபோன்று அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்துக்காக மக்களை திசை திருப்பும் நோக்கம் ஒருநாளும் கைகூடாது என்பதையும் தன்னால் உறுதியாக கூறமுடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில் அதில் குற்றம் கண்டுபிடிப்பதோ அல்லது அது தேவையில்லை என்ற தொனியில் பேசுவதோ எவ் எகையிலும் பொருத்தமானதல்ல. சட்டங்கள் வகுக்கப்படுவது நாட்டு மக்களின் நன்மையை கருத்திற்கொண்டேயொழிய தனிப்பட்டவர்களின் நலனுக்காகவோ அல்லது இனவாதம் பேசும் அரசியல் கட்சிகளின் நன்மைக்காகவோ இல்லை.

13ஆவது திருத்தச்சட்டத்தின் பின் எட்டு திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அங்கீகரிக்கப்பட்டு தற்போது அது 23 வரை வந்துள்ளது.

புதிய திருத்தச்சட்டங்கள் கொண்டுவரப்படும் போது மௌனியாக இருந்தவர்கள சுமார் 40 வருடங்களுக்கு பிறகு அதனை விமர்சனம் செய்வதோ அல்லது அதனை எமது அரசியலமைப்பில் இருந்து நீக்குவதற்கு எத்தனிப்பதோ பாரதூரமான சிக்கல்களுக்கும் சர்வதேச ரீதியிலான விரிசல்களுக்கும் வித்திடும் என்பதே வெளிப்படை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/148673

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

என்னைப்பொறுத்தவரை இந்தியா ஒரு வக்கத்தநாடு. இழப்பின் நடுவில் நலிந்திருக்கும் மக்களை பயன்படுத்தி அவர்களின் நிழலில் சுகங்காணும் சுடுகாடு.

இது நம்மை நாமே ஏமாற்றி ஆறுதல்படும் காரணம். விடுதலைப்போர் முறியடிக்கப்பட்டு முடிந்தவுடன் சரத் பொன்சேகா கூறினார் "நாங்கள் கிளிநொச்சியை கைப்பற்றியதும் தாக்குதல்களை நிறுத்துவதாக இருந்தோம் ஆனால் இந்தியாவே போரை முன்கொண்டு செல்ல எங்களை தூண்டி வற்புறுத்தியது." மஹிந்தா சொன்னது "விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை, அது இந்தியாவின் போர். அந்தப்போரை இந்தியாவே செய்தது, இந்த யுத்தத்தில் இந்தியாவை உதவி செய்யச்சொல்லி நான் கேட்கவில்லை, இந்தியா தானே முன்வந்து பல்வேறு உதவிகளை செய்தது. உண்மையில் இது என்னுடைய போர் இல்லை, அது இந்தியாவின் போர் என்றுதான் சொல்ல வேண்டும்." என்று வெளிப்டையாகச்சொன்னார். அதை இந்தியா மறுக்கவில்லை. மகிந்த காலத்தில் இனப்பிரச்சனைக்கு திட்ட வரைபு செய்வதற்காக மஹிந்தவால் நியமிக்கப்பட்டவர் திஸ்ஸ விதாரண அவர் கூறியது. தன்னை இந்தியாவுக்கு அழைத்து அந்த செயற்பாட்டை நிறுத்தும்படி இந்தியா வற்புறுத்தியது என்றார். இந்தியா அதை மறுக்கவில்லை. எரிக் சொல்ஹெய்ம் என்ன சொன்னார் என்பதை எல்லோரும் அறிவர். இந்தியா அதையும் மறுக்கவில்லை. கொத்துக்கொத்தாக தமிழரை அழித்து விட்டு ரத்தம் தோய்ந்த கையோடு ஐ. நா. சென்ற மஹிந்தவை பாராட்டி அனுப்பியது இந்தியா. இப்போ சொல்லுங்கள்! சிங்களவருக்கு எங்கிருந்து அந்தப்பயம் வந்தது? இது நாங்களே உருவாக்கி நம்மை நாமே சமாதானப்படுத்தும் கதை. இன்னும் இருக்கு... நாம் எப்படி இந்தியா எமக்கு ஒரு தீர்வை பெற்றுத்தரும் என நம்பலாம்? இலங்கையை விட முழுமூச்சாக எங்களை அழித்தது இந்தியா, கண்ணால் கண்டோம், சிங்களவன் சொல்லி மகிழ கேட்டோம். ஒரு சிறிய அதிகாரமுமில்லாத பதின்மூன்றை முப்பத்தைந்து ஆண்டுகளாய் நிறைவேற்றுவிக்க முடியாத, விரும்பாத இந்தியா எதைப்பெற்று தரப்போகிறது? எங்கே எங்கள் தலைவர் என்று சொல்லிக்கொள்பவர்கள் தன்னை விட்டு வேறு எங்கும் போய்விடுவார்களோ என்கிற அச்சத்தில் அவர்களை ஊட்டி அருகே வைத்திருக்கு. இதை அவர்கள் அறியாமலில்லை ஆனால் இந்தியாவோடு சேர்ந்திருந்தால் இரண்டு பக்கமும் வருமானம் ஆகவே அவர்களுக்கு ஒத்தூதிக்கொண்டு அவர்களின் கவனிப்பில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். எங்களை வைத்து சிங்களம், முஸ்லீம், இந்தியா, இன்னபிற நாடுகள் நன்மையடைகின்றன ஆனால் எங்களுக்கு ஒரு விடிவுமில்லை. ஆகவே மற்றவரை நம்பி காத்திருப்பதைவிட நம்மளால முயன்றதை செய்வோம், யார் காலடியிலும் விழாமல்  எதிர்பார்ப்பு, ஏமாற்றமாவது இல்லாமல் வாழலாம். நாம் நாமாக வாழ முயன்றால் நம்மை வைத்து பிழைப்பவர்களுக்கு வேலை இல்லை, தம்மைத்தாமே வருத்த வேண்டிவரும் தரகு வேலை நிற்கும். 

நன்றி ஏராளன். இது தான் எனது நிலைபாடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பகிடி said:

நன்றி ஏராளன். இது தான் எனது நிலைபாடும். 

யோவ் பகிடி எழுதியது சாத்தான்

நன்றி ஏராளனுக்கு.

பகிடிக்கோ.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

ஜே வி பி மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோருடன் சேர்ந்து பயணித்தல் எனும் கருத்திற்கான எனது பதில்.

மக்கள் விடுதலை முன்னணியினரின் இரண்டாவது எழுச்சியே 13 ஆம் திருத்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்தக் கூடாதென்பதற்காகவே நடத்தப்பட்டது. மேலும், 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அடிப்படையாக வைத்து தற்காலிகமாக (பொதுசன வாக்கெடுப்பு நடக்கும்வரையில்) இணைக்கப்பட்டிருந்த வடக்கையும் கிழக்கையும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் 2006 இல் இனவாத நீதியரசர் சரத் என் சில்வாவைக் கொண்டு நிரந்தரமாகவே பிரித்துப்போட்டதும் இதே மக்கள் விடுதலை முன்னணிதான். தமிழர்களுக்கென்று தனியான பிரச்சினை ஏதுமில்லை, நாட்டிலிருக்கும் மற்றைய இனங்களைப் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளே அவர்களுக்கும் இருக்கின்றன, ஆகவே அரசியல்த் தீர்வென்ற பேச்சிற்கே இடமில்லை என்பதே மக்கள் விடுதலை முன்னணியினரின் இன்றைவரையான நிலைப்பாடு.  இருவாரங்களுக்கு முன்னர்கூட மக்கள் விடுதலை முன்னணியினரின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தமது கட்சி 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அடிப்படையில், மக்கள் விடுதலை முன்னணியினர் என்போர் இனவாதத்தினை சோசலிசத்தினுள் மறைத்து அரசியல் செய்யும் தென்னிலங்கைச் சிங்களவர்களே. அவன்  தமிழருக்குப் பிரச்சினையே இல்லையென்கிறான், இந்த இலட்சணத்தில் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கலாமாம், நன்றாக இருக்கிறது.

இரண்டாவது வாசுதேவ நாணயக்கார

கடைந்தெடுத்த இனவாதி. மகிந்த இராஜபக்ஷெ எனும் இனக்கொலையாளியின்  அத்தனை அக்கிரமங்களையும் கூடவிருந்தே ஆதரித்தவன், இன்றுவரை ஆதரிப்பவன். விக்கிரமபாகு கருணாரத்தினவுடன் நவ சம சமாஜக் கட்சியிலிருந்த வாசுதேவ நாணயக்காரதான் இப்போதும் இருக்கிறான் என்றும், அவனோடு சேர்ந்து பயணிக்கலாம் என்றும் கனவு காண்போர் கடந்த 18 வருடங்களாக உறக்கத்தில் இருக்கிறார்கள் என்று பொருள். இவனது ஹெலிகொப்டர் முன்னணியின் ஏனைய இனவாத மிருகங்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்சவுடனும் சேர்ந்து பயணிக்கலாமே?? அவர்கள் உங்களுக்கு என்ன தரவிரும்புகிறார்கள் என்று கேட்டு, அதையே வாங்கிக்கொண்டு வாருங்கள், பின்னர் சிறிது சிறிதாக நாம் எமது இலக்கை அடையலாம், பகிடிக்குத்தானே??? 

Jvp, வாசுதேவ போன்றோரின் எங்கள் மீதான விரோதத்துக்குக் காரணமே எம்மை வைத்து இந்தியா இலங்கையை நாசக்குகின்றது என்ற உண்மையை அவர்கள் உணர்ந்த காரணத்தால்த் தான். அதற்காக நான் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம்.

எனது கேள்வி என்னவென்றால் இந்தியா எமக்கு உதவுகின்றதா? புலிகளை ஆதரித்ததா?  போருக்குப் பின் நலிவடைந்த போராளிக் குடும்பங்களுக்கு உதவியதா? ஒரு நிரந்தர தீர்வை தர முயற்சி எடுத்ததா? சரி சிங்களவரும் தமிழரும் சேர்ந்து இயங்கும் பொழுது அதை ஆதரித்ததா?

இவை எல்லாவற்றுக்கும் பதில் இல்லை இல்லை இல்லவே இல்லை என்பது தான்.

ஆனால் தமிழ் இயக்கங்களுக்குள் பிரிவினையை உருவாக்கியது யார்? ஈஸ்டர் குண்டு வெடிப்பை நாடாத்தி ரணில் மைத்திரி அரசு புதிய அரசியல் அமைப்பை வரைந்த பொழுது அதை குழப்பி அடித்தது யார்? இலங்கைத் தமிழரை ஹிந்துத்துவ மனநிலைப் படுத்துவது யார்? போருக்குப் பின்னர் மகிந்த ஏதோ ஒரு தீர்வை தர திஸ்ஸ விதாரண தலைமையில் புதிய அரசியல் அமைப்பை வரைந்த பொழுது மகிந்தவை வீழ்த்தி மைதிரியை கொண்டு வந்தது யார்? இப்போது பிரபாகரனை உயிர்தெழுப்பியது யார்?

பதில் இந்தியா என்பது தான்

இப்பொழுது சொல்லுங்கள் எங்கள் உண்மையான எதிரி யார்? 

9 minutes ago, ஈழப்பிரியன் said:

யோவ் பகிடி எழுதியது சாத்தான்

நன்றி ஏராளனுக்கு.

பகிடிக்கோ.

ஒகே. பெயர் தவறி விட்டது. சாத்தான் அவர்களுக்கு நன்றி. சுட்டிக்காட்டிய உங்களுக்கும் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Sasi_varnam said:

இந்த கருத்தாடலின் ஒரு அங்கமாக விளங்கக்கூடிய ஒரு திரியை கோஷன் கடந்த மாதம் திறந்து சில கருத்துக்கள், பதிவுகளை வைத்திருந்தார். அதாவது இன்றைய நாளில் தமிழ் மக்களுடைய தேவை என்ன நிலைப்பாடு என்ன என்கிற தலைப்பு என நினைக்கிறன்.
அதில் நாம் எதிர்நோக்கும் சவால்கள், தடைகள் போன்றன  குறித்தும் அடிப்படைகள் கேள்விகள், அலசல்கள்  கூட வைக்கப்பட்டிருந்தது.

இன்றைய சூழலில் நான் நினைக்கிறேன் இந்த 13 குறித்து சிங்கள மக்களிடம் பிணக்குகள் வளர்ப்பது தவிர்த்து, இன்னும் சொல்லப் போனால் காலாவதியாகிய, நிராகரிக்கப்பட்ட 13 ஐ இணைத்து  தமிழர்களின் பிரச்சினையை கதைப்பதை கூட தள்ளி வைத்து விட்டு, இன்றைய இலங்கையின் யதார்த்த சூழலில் சிங்கள மக்கள்படும் ஒட்டு மொத்த துன்பங்களுக்கும் காரணம் இந்த அதிகார மையம், அதிகார குவியல் ஒரே இடத்தில் இருப்பது தான், அந்த 75 வருட அதிகார குவியலால் நாட்டுக்கு, சிங்களவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தீமைகள் என்ன? இனிமேலும் இப்படியே போனால் அந்த மக்கள் எதையெல்லாம் சந்திக்கப் போகிறார்கள் போன்ற குறித்த பிரக்ஞயை உருவாக்குதல் வேண்டும். அவர்களுக்கும் கூட (சிங்களவர்களுக்கு)அதிகார பரவலாக்கல் எவ்வளவு நன்மையை அவர்களுடைய மாகாணங்களுக்கு, அவர்களுடைய மக்களுக்கு பயனளிக்கும் என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

அதாவது எமது பிரச்சினையை முன்வைத்து பேசுவதை சற்றே முதுகுக்குப் பின் மறைத்து விட்டு, சிங்களவனுடைய சிக்கல்களை பேசலாம்.  குறிப்பாக இந்த கொழும்பு சார்ந்த அதிகார மையம்!! அந்த உரையாடலில்  தெளிவு பிறக்கும் பட்சத்தில் அப்படியே பக்கத்தில் உள்ளவனுக்கும் பாயாசம் எண்டது போல் நாமும் எமக்கு கிடைக்கவேண்டியதை சரியான புரிதலோடு, உடன்பாட்டோடு பெற்றுக்கொண்டு அனைத்தையும் கட்டி எழுப்பலாம். 
அதே நேரம் இந்தியா எப்படியெல்லாம் எமக்கு சகுனியாக இருந்திருக்கிறது... இனிமேலும் கூட இருக்கும் என்பதையும் சேர்த்தே உரையாடலாம்.
தமிழர்களின் போராட்டம் என்றுமே இதர இனங்களுக்கோ, மதங்களுக்கோ எதிராக தொடங்கிய, வழிநடத்தப்பட்ட தொன்றன்று என்ற உண்மையை அழுத்தி சொல்லி  புதிய, இளைய சமுதாயத்தை நோக்கி குரல் கொடுத்து பார்க்கலாம்.

இதெல்லாம் நடக்கிற காரியமா தெரியவில்லை. ஆனால் குறைந்த பட்சம் அந்த சிங்கள மக்களிடம் எமது பிரச்சினைகளை பேசக்கூடிய ஒரு வெளியை உருவாக்கலாம்!! 🙂 
  
நன்றி சசி வர்ணம் அவர்களே. இது தான் இன்றைய தேவை 

Link to comment
Share on other sites

1 hour ago, பகிடி said:

எனது கேள்வி என்னவென்றால் இந்தியா எமக்கு உதவுகின்றதா? புலிகளை ஆதரித்ததா?  போருக்குப் பின் நலிவடைந்த போராளிக் குடும்பங்களுக்கு உதவியதா? ஒரு நிரந்தர தீர்வை தர முயற்சி எடுத்ததா? சரி சிங்களவரும் தமிழரும் சேர்ந்து இயங்கும் பொழுது அதை ஆதரித்ததா?

இந்தியா தனக்கு அருகில் பல்லின மக்கள் வாழும் அமைதியான அபிவிருத்தியடடைந்த நாடொன்றினை விரும்பாது.

அண்மையில் இந்தியாவால் யாழில் மேற்கொள்ளப்படும் காந்தி ஜெயந்தி, சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் கலை நிகழ்வுகள் போன்றன இந்தியா தமிழர்களுடன் நெருக்கமானது என்ற தோற்றப்பட்டை ஏற்படுத்தலாம். இது தமிழர்கள் மீதான சிங்களவர் மட்டுமலாது முஸ்லிம்களினதும் வெறுப்பை மேலும் அதிகரிக்கும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இயற்கை ஒரு சமநிலையில் இயங்குகிறது, காட்டில் சிங்கங்கள் இல்லாவிட்டால் காட்டெருமைகள் பல்கி பெருகி உலக அழிவிற்கு காரணமாகிவிடும்.

இலங்கயின் பூகோள அமைவிடம் நேரடியாக இந்திய பாதுகாப்பில் முதலிடம் வகிக்கிறது.

இலங்கையில் இந்தியா தமிழர்களின் மூலமாக தனது ஆதிக்கத்தினை நிலைநிறுத்த முனைகிறது.

நீங்கள் கூறுவது போல இலங்கை அமைதியாக இருக்க இந்தியா விரும்பாது என்பது அதன் தேவையல்ல என கருதுகிறேன்.

இலங்கயில் இந்தியா ஒரு பலச்சமனிலையினை பேண விரும்புகிறது என கருதுகிறேன், தமிழர்கள் அதிகாரம் பெற்று மேலோங்குவதையும் விரும்பாத அதே நேரம் சிங்களவர்கள் ஒருமித்த சக்தியாக மேலோங்குவதையும் விரும்பாது.

தற்போதுள்ள நிலையில் இந்தியாவினது உதவி தமிழர்களுக்கு தேவை, என்பது காலத்தின கட்டாயமாக உள்ளது, இல்லாவிட்டால் சிங்களவர்கள் முழுமையாக தமிழர்களை அடக்குமுறைக்குள்ளாக்கி, தமிழர்கலை சொந்த நாட்டிலேயே இரண்டாந்தர பிரஜைகள் ஆக்கி விடுவார்கள்.

ஜெ ஆர் மிகவும் சம்ஜோகிதமாக சிந்தித்து இலங்கையில் இந்திய படையின்ரை அனுமதித்து, பின்னர் தமிழர்களுக்கும் இந்திய படைக்குமிடையில் போரினை உருவாக்கி அதன் மூலம் முன்னாள் இந்திய பிரதமர் கொல்லப்படுவதன் மூலம், தமிழர்களை இந்தியாவின் துருப்பு சீட்டு எனும் நிலையினை இல்லாதொழிக்க முயன்றார், அனால் சிங்கள்வர்களால் இன்னும் அதனை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.

இது இலங்கைக்கும் இந்தியாவிற்கிடையேயான பனிப்போர்.

எமது நலனை முதன்மைபடுத்தி அதனுடன் இந்தியாவின் பாதுகாப்பிற்கு தமிழர் தரப்பால் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்கவேண்டும் (தமிழர்கள் எப்ப்பொதும் அவ்வாறே இருந்துள்ளார்கள், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தினை தவிர்த்து).

நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பது தெரிந்தாலேயே நாங்கள் போகும் இடத்திற்கான பாதையினை தெரிவு செய்யமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

பதில் இந்தியா என்பது தான்

இந்தியாவோ, முஸ்லிமோ அவர்களை நம்பி, உதவி தேடிப்போவதாலேயே அவர்கள் நம்மை ஏமாற்றுவதும், அச்சுறுத்துவதும், நிபந்தனை விதிப்பதும், சுரண்டுவதும். எதுவும் செய்யப்போவதில்லை, எங்களது இயலாமையை, அவர்களில் தங்கியிருப்பதை தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள். அதை தெரிந்தும் இன்னும் அவர்களில் தங்கியிருக்கும், அவர்கள் இல்லாமல் எமக்கு விடிவில்லை என நினைக்கும் நாங்கள் முழு முட்டாள்கள். அவர்கள் கையை தட்டிவிட்டு நடக்க வெளிக்கிட்டால் அவர்கள் முடங்க வேண்டியதுதான், சில தடங்கல்களை ஏற்படுத்தலாம், இந்தளவுக்கு நட்டம் வராது. அதற்கான உபாயங்களை தேட வேண்டுமேயொழிய அவர்களின் காலடியில் கிடந்து பெறலாம், இந்தியா இல்லாமல் விடிவு இல்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது வரையில் இந்தியா நமக்கு செய்த நன்மை என்ன?

2 hours ago, இணையவன் said:

அண்மையில் இந்தியாவால் யாழில் மேற்கொள்ளப்படும் காந்தி ஜெயந்தி, சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் கலை நிகழ்வுகள் போன்றன இந்தியா தமிழர்களுடன் நெருக்கமானது என்ற தோற்றப்பட்டை ஏற்படுத்தலாம்.

சர்வதேசம் தன்னை விட்டு, தான் விரும்பாத ஏதாவது சலுகையை தமிழருக்கு செய்துவிடுமோ என்கிற பயம், அந்தரிக்கும் தமிழர் தன்னை விட்டு போய்விடுவார்களோ என்கிற ஆதங்கம், ஆகவே யாரையும் நெருங்க விடாமல் தள்ளி வைப்பதற்கு பலவந்தமாக அழையா விருந்தாளியாக பூந்து சில சில்லறை வேலைகளை செய்து, தான் தமிழர் பக்கம், தமிழர் தம்மை ஆதரிப்பதுபோல ஒரு தோற்றப்பாட்டை உருவாக்குகிறது, அதற்காகவே தமிழ் அரசியல்தலைவர்களை தன்பக்கம் வைத்திருக்கிறது. இந்தியாவை விட்டு  யாரையும் சந்திக்க அவர்கள் மறுக்கிறார்கள், யாரும் வந்தாற்கூட வாசலிலேயே கிடந்து அறிக்கை விட்டு இந்தியாவை காக்கிறார்கள். இவர்கள் இருக்க இந்தியாவுக்கு பயமேன்? சுமந்திரனை மக்கள் கைகழுவ, பாருங்கள் இன்னொன்றை தோற்றுவித்துள்ளது இந்தியா. இதை முறியடிக்க முயற்சிக்க வேண்டும். அது ஒன்றுமே செய்யப்போவதில்லை, ஆனால் நம்மை விலகி நடக்க விடப்போவதுமில்லை, இந்தியா இல்லாமல் ஒன்றும் நடவாது என்கிற மாயை அவ்வளவே. சொல்லப்போனால் இந்தியாவின் இருப்பே இலங்கைத்தமிழர் கையில். அதை உணராத தமிழினம் செக்குமாடுமாதிரி இந்தியாவை சுத்துது.

44 minutes ago, vasee said:

தற்போதுள்ள நிலையில் இந்தியாவினது உதவி தமிழர்களுக்கு தேவை, என்பது காலத்தின கட்டாயமாக உள்ளது, இல்லாவிட்டால் சிங்களவர்கள் முழுமையாக தமிழர்களை அடக்குமுறைக்குள்ளாக்கி, தமிழர்கலை சொந்த நாட்டிலேயே இரண்டாந்தர பிரஜைகள் ஆக்கி விடுவார்கள்.

இவ்வளவும் நடந்து, சிங்களவனே வெளிப்படையாக இந்தியாவின் போரையே நாங்கள் செய்து முடித்தோம் என்று சொல்லிக்காட்டிய பின்னும் இந்தியாவை  நம்புகிறீர்கள் என்றால் உங்கள் நம்பிக்கையை என்ன சொல்வது? நாம் இலங்கையில் இரண்டாந்தர பிரஜைகள் இல்லை அடிமைகள் இப்போது. நீதி அமைப்பிலும் சரி, அரசியலமைப்பிலும் சரி. நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. பிறகு எதை கதைப்பது உங்களுடன்?     

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இயற்கை ஒரு சமநிலையில் இயங்குகிறது, காட்டில் சிங்கங்கள் இல்லாவிட்டால் காட்டெருமைகள் பல்கி பெருகி உலக அழிவிற்கு காரணமாகிவிடும்.

இலங்கயின் பூகோள அமைவிடம் நேரடியாக இந்திய பாதுகாப்பில் முதலிடம் வகிக்கிறது.

இலங்கையில் இந்தியா தமிழர்களின் மூலமாக தனது ஆதிக்கத்தினை நிலைநிறுத்த முனைகிறது.

நீங்கள் கூறுவது போல இலங்கை அமைதியாக இருக்க இந்தியா விரும்பாது என்பது அதன் தேவையல்ல என கருதுகிறேன்.

இலங்கயில் இந்தியா ஒரு பலச்சமனிலையினை பேண விரும்புகிறது என கருதுகிறேன், தமிழர்கள் அதிகாரம் பெற்று மேலோங்குவதையும் விரும்பாத அதே நேரம் சிங்களவர்கள் ஒருமித்த சக்தியாக மேலோங்குவதையும் விரும்பாது.

தற்போதுள்ள நிலையில் இந்தியாவினது உதவி தமிழர்களுக்கு தேவை, என்பது காலத்தின கட்டாயமாக உள்ளது, இல்லாவிட்டால் சிங்களவர்கள் முழுமையாக தமிழர்களை அடக்குமுறைக்குள்ளாக்கி, தமிழர்கலை சொந்த நாட்டிலேயே இரண்டாந்தர பிரஜைகள் ஆக்கி விடுவார்கள்.

ஜெ ஆர் மிகவும் சம்ஜோகிதமாக சிந்தித்து இலங்கையில் இந்திய படையின்ரை அனுமதித்து, பின்னர் தமிழர்களுக்கும் இந்திய படைக்குமிடையில் போரினை உருவாக்கி அதன் மூலம் முன்னாள் இந்திய பிரதமர் கொல்லப்படுவதன் மூலம், தமிழர்களை இந்தியாவின் துருப்பு சீட்டு எனும் நிலையினை இல்லாதொழிக்க முயன்றார், அனால் சிங்கள்வர்களால் இன்னும் அதனை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.

இது இலங்கைக்கும் இந்தியாவிற்கிடையேயான பனிப்போர்.

எமது நலனை முதன்மைபடுத்தி அதனுடன் இந்தியாவின் பாதுகாப்பிற்கு தமிழர் தரப்பால் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்கவேண்டும் (தமிழர்கள் எப்ப்பொதும் அவ்வாறே இருந்துள்ளார்கள், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தினை தவிர்த்து).

நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பது தெரிந்தாலேயே நாங்கள் போகும் இடத்திற்கான பாதையினை தெரிவு செய்யமுடியும்.

நீங்கள் இந்தியாவைப் பற்றி ஓரளவுக்கு சரியாகவே சிந்திக்கிறீர்கள் ஆனால் பின் எதற்காக திரும்பவும் இந்தியாவுடன் இணக்க மனப்பான்மையில் இருந்தால்த் தான் தீர்வு சாத்தியம் என்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருக்கட்டும்   ஒரு கற்பனை செய்து பார்ப்போம் அதாவது  தமிழர்கள் இலங்கையில் பெரும்பான்மை இனம்.    ...இலங்கையை தமிழர்கள் தான் ஆட்சி புரிகிறார்கள்..இந்நிலையில் .இந்திய தமிழர்கள்...[.தமிழ்நாடு தமிழர்கள் ] உருமைக்காக  இந்தியா அரசாங்கத்துடன் போரடுகிறார்கள்.    இலங்கையில் ஆட்சியிலுள்ள தமிழர்கள்   இந்தியா மத்திய அரசுக்கா. ?அல்லது தமிழ்நாடு தமிழருக்கா. ?ஆதரவு அளிப்பார்கள்?   

1...இந்தியா மத்திய அரசுக்கு ஆதரவு எனில் ஏன?. விளக்கம் தரவும் 

2..தமிழ்நாடு தமிழருக்கு எனில்   அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா? இந்தியாவை எதிர்த்து ...உங்களால் அமைதியாக   உறுதியாக பலமாக. இலங்கையை ஆட்சி செய்ய முடியுமா?

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
    • 200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் . இந்த துறவறத்தில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.. இதன் காரணமாக இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. https://thinakkural.lk/article/299196
    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.