Jump to content

மடகஸ்கார் பயண அனுபவம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் சகோதரி

உங்கள் திரியில் யாராவது எழுதுவதை அறிய செற்றிங்கில் போய்  Follow என்பதை அழுத்திவிட்டால் உங்கள் பதிவில் யார் எழுதினாலும் உடனே தெரியவரும்.

நன்றி அண்ணா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

2017 ஆம் ஆண்டு எமது பல்கலைக்கழக BBB (Tribeta Biological Honor society)அமைப்புக்கு கிடைத்த ஆய்வு பணத்துடன் லீமார் விலங்கினங்கள், மற்றும் மடகஸ்கார் தாவர விலங்கினங்களை பற்றிய  ஆய்வுக்காக மாணவ மாணவிகளுடனு

nilmini

இந்த பயணம் மிகவும் தனித்துவமான ஒரு சுற்றுலாவாக இருந்ததற்கு முக்கிய காரணங்கள் ஆய்வு நிமித்தமாக ஒரு உலக அமைப்பினர் எமது பயணத்தை ஒழுங்கு செய்து மடகஸ்காரில் உள்ள அவர்களது கிளை உறுப்பினர்கள் மிகவும் நேர்த்

nilmini

அண்டாசிபே லெமூர் சரணாலயத்தில் இருந்து மிக அருகில் இருக்கும் லெமூர் தீவுக்கு விடிய காலமய் படகுகளில் புறப்பட்டோம். வெள்ளைக்காரர்களுக்கு பொதுவாக படகோட்டல்  நீர், மலை, காடு சம்பத்தப்பட்ட விடயங்கள் எல்லாம்

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது ஒவ்வொரு திரி பதியும் போதும் Follow     என்பது காட்டும்.

அதை அழுத்தி விடுங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-tiere-bild-0024.gif நில்மினி... அடுத்த மடகஸ்கார் கட்டுரை எப்ப வரும்.animiertes-tiere-bild-0025.gif animiertes-tiere-bild-0018.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-tiere-bild-0024.gif நில்மினி... அடுத்த மடகஸ்கார் கட்டுரை எப்ப வரும்.animiertes-tiere-bild-0025.gif animiertes-tiere-bild-0018.gif

எழுதிவைத்திருக்கிறேன் இன்று வீட்டுக்கு போய் இன்னும் கொஞ்சம் கூட எழுதி பதிவிடுகிறேன் சிறி. நீங்கள் எல்லோரும் ஆவலாக வாசிப்பதால் நிறைய புதினங்களை சேர்த்து எழுதுகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nilmini said:

எழுதிவைத்திருக்கிறேன் இன்று வீட்டுக்கு போய் இன்னும் கொஞ்சம் கூட எழுதி பதிவிடுகிறேன் சிறி. நீங்கள் எல்லோரும் ஆவலாக வாசிப்பதால் நிறைய புதினங்களை சேர்த்து எழுதுகிறேன்.

நன்றி நில்மினி. ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

நன்றி நில்மினி. ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். 

இந்த பயணம் மிகவும் தனித்துவமான ஒரு சுற்றுலாவாக இருந்ததற்கு முக்கிய காரணங்கள் ஆய்வு நிமித்தமாக ஒரு உலக அமைப்பினர் எமது பயணத்தை ஒழுங்கு செய்து மடகஸ்காரில் உள்ள அவர்களது கிளை உறுப்பினர்கள் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு முக்கியமான இடங்களுக்கு அழைத்து சென்றமைதான்.

அங்கிருந்த 12 நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து நள்ளிரவு வரை காடு மேடு வனாந்திரம் எல்லாம் ஒரே ஹைக்கிங் தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு போவதானல், கிட்டஎன்றால் van அல்லது நேரத்தை வீணாக்காமல் சிறிய ரக விமானத்தில்தான் பயணித்தோம்.

ஒரு ஆபத்தான விலங்குகளும் மடகஸ்காரில் இல்லாதால் இரவிரவாக காடுகளில் நடமாட பயப்படத்தேவை இல்லை. பாம்புகள் இருக்கு ஆனால் நச்சுப்பாம்புகள் அல்ல.

உலகில் சிங்கம், புலி, யானை, கரடி, மலைப்பாம்பு மாதிரி மிருகங்கள் கூர்ப்பு அடைந்து தோன்ற முன்னமே, மடகாஸ்கர் ஆபிரிக்க பெரும் நிலப்பரப்பில் இருந்து பூமித்தட்டுகளின் அசைவு காரணமாக தனியே விலகி சென்றுவிட்டது. அதனால் தான் உலகின் மற்ற இடங்களில் இருந்த லெமூர் மாற்று ராட்சத பச்சோந்திகள், பறவைகள் எல்லாவற்றையும் பின்பு தோன்றிய வேட்டையாடும் விலங்குகள் கொன்றழித்து விட்டன.

மற்ற மிருகங்களை காட்டிலும், மிகுந்த அழிவை தரும் மனித விலங்குகளால் தான் பல விலங்கினங்களும் அழிந்து போய்விட்டன. மடகாஸ்கரும் அதற்கு விலக்கல்ல. ஆனால் அங்கு மனிதர்கள் குறைவாக இருந்ததாலும், குடியேறச்சென்ற மனிதர்கள் புலி, சிங்கங்களை கொண்டு போகாமல் நாய் பூனைகளை கொண்டு சென்றதால் ஓரளவுக்கு இந்த லெமூர் உற்பட மிகப்பழைய விலங்கினங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றன.

ஆனாலும் நாய்கள் பெருகி காட்டுக்குள் சென்று இந்த அரிய வகை மிருகங்களை கொல்வதும், மடகஸ்காரின் அரசியல், பஞ்சம் என்பவற்றால் நிறைய அழிவுகளை சந்தித்திக்கொண்டு இருக்கிறது. காடுகளை சட்ட விரோதமாக அழித்து எரிபொருள், கட்டடம் கட்ட என்றும் ஒரு பக்கத்தால் அழிவு.

பொதுவாக அமெரிக்கர்களை ஒருவருக்கும் பிடிக்காது. ஒன்றில் பொறாமை அல்லது அவர்கள் எல்லோரிடமும் சண்டை போடுபவர்கள் என்பதால். அது அவர்களுக்கும் தெரியும். தாம் உலகில் எங்கு சென்றாலும் ஒருவித சந்தேகத்துடன் தான் பயணிப்பார்கள். ஆனால் மடகஸ்காரில் அமெரிக்கர்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு. ஏனென்றால் பட்ரிசியா ரைட் என்னும் பெண் விஞ்ஞானி 1960 ஆண்டுப்பகுதியில் அங்கு சென்று இந்த லெமூர் மற்றும் விலங்குகளை பாதுகாக்க பெரும் பாடு பட்டு, அங்கு ஒரு ஆய்வு நிலையமும் அமைத்து இன்று அது மிகப்பெரும் உதவிகளை செய்து வருகிறது. https://www.stonybrook.edu/commcms/centre-valbio/. அதானல் எமது குழுவினருக்கு பெருமிதமும் மகிழ்ச்சியும். இன்னும் தொடரும்……

Patricia.jpg

Slide10.jpg

Slide11.jpg

Slide12.jpg

Slide14.jpg

Slide15.jpg

Slide2.jpg

Slide3.jpg

Slide5.jpg

Slide6.jpg

Slide7.jpg

Slide8.jpg

Slide9.jpg

Edited by nilmini
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களும் தகவல்களும் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம், புலி போன்ற விலங்கினங்கள் கூர்ப்பு அடைய முன்பே…
மடகஸ்கார் பூமித்தட்டில் இருந்து விலகிச் சென்றதால்,
இன்னும் மற்ற இடங்களில் இல்லாத அரிய விலங்கினங்கள் எஞ்சி இருக்கின்றன என்ற
 அரிய தகவலை இந்தக் கட்டுரை மூலம் அறிந்து ஆச்சரியப் பட்டேன்.
நன்றி நில்மினி. 👍🏽

தற்போது  ஊக்கப்புள்ளி போட முடியாமல் உள்ளது. கிடைத்தவுடன் போடுகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக மிக நன்றாக இருக்கின்றன படங்களுடன் கூடிய உங்களின் கட்டுரை.........தொடருங்கள்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களும் படங்களும் அருமையாக இருக்கின்றது.
நன்றி சகோதரி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்க மிச்ச சொச்சத்தை காணல  @nilmini

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்க மிச்ச சொச்சத்தை காணல  @nilmini

வருது வருது. வெள்ளிக்கிழமை வரும். கு ச அண்ணாவோட விவாதத்தால் கொஞ்சம் பிந்திவிட்டது😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nilmini said:

வருது வருது. வெள்ளிக்கிழமை வரும். கு ச அண்ணாவோட விவாதத்தால் கொஞ்சம் பிந்திவிட்டது😂

ஏதாவது  சூட்டாதரவு கொடுக்கணூமா கெதியா சொல்லுங்க அடிச்சு விரட்டுவம் ஆள @குமாரசாமிஎன்ன என்ன ஆ?? சும்மா விரட்டுறீங்க போல 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏதாவது  சூட்டாதரவு கொடுக்கணூமா கெதியா சொல்லுங்க அடிச்சு விரட்டுவம் ஆள @குமாரசாமிஎன்ன என்ன ஆ?? சும்மா விரட்டுறீங்க போல 

சீ சீ கு சா அண்ணா இல்லாமல் யாழ் வெறிச்சோடிப்போடும். சும்மா இளையராஜாவை பற்றி ஒரு சிறு விவாதம்தான். இன்றுடன் முடிந்து விட்டது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்டாசிபே லெமூர் சரணாலயத்தில் இருந்து மிக அருகில் இருக்கும் லெமூர் தீவுக்கு விடிய காலமய் படகுகளில் புறப்பட்டோம். வெள்ளைக்காரர்களுக்கு பொதுவாக படகோட்டல்  நீர், மலை, காடு சம்பத்தப்பட்ட விடயங்கள் எல்லாம் சர்வ சாதாரணம் என்றபடியால், எனக்கும் படகோட்டத்தெரியும் என்று நினைத்திருந்தார்கள். ஏரிக்கு அருகில் சென்றதும் ஒரு படகுக்கு இருவர்,  நாலு துடுப்புகள் என்று எடுத்துக்கொண்டு படபடவென்று ஏறிவிட்டார்கள்.

எனக்கு படகு ஓட்டத்தெரியாது என்று அவர்களிடம் உடனேயே சொல்லிவிட்டேன். எம்முடன் வந்த guide, தான் என் படகில் முன்னுக்கு இருந்து துடுப்பை இயக்குவதாகவும், நான் எப்படி பின்னுக்கு இருந்து அதே மாதிரி செய்யவேண்டும் என்றும் சொல்லித்தந்தான். அமைதியான ஏரிதான். என்றபடியால் பிரச்சனை இல்லை என்று ஒருமாதிரி நானும் படகை ஓட்டினேன். அரைவாசி வழியில் ராட்சத மரம் ஒன்று அரைவாசி வெட்டப்பட்டு எரிந்த நிலையில் குறுக்கே விழுந்திருந்தது. மடகாஸ்கர் மக்கள் பொருளாதார பிரச்சனைகளால் சட்டத்தை மீறி காடுகளையும், மிருகங்களையும் அழித்து வருகிறார்கள்.

அந்தமரத்தை கடந்து படகை எடுத்துக்கொண்டு நாமும் போகவேண்டும் என்பது நினைத்துப்பார்க்க முடியாத மாதிரி இருந்தது. எல்லோருக்கும் ஒத்தபடிதானே என்று நான் அவ்வளவு கவலைப்படவில்லை. உதவிக்கு வந்த சிலருடன் உதவியுடன் படகில் இருந்து மரத்தில் ஏறி பிறகு, அவர்கள் படகை மற்றப்பக்கம் கொண்டுவர திரும்ப படகுப்பயணம் தொடர்ந்தது. அப்பாடா என்று நினைக்கும் முதல் பாறைகள் நிறைந்த எரிப்பக்கத்தில் நீரின் ஓட்டம் அதிகமாக இருந்தது. என்னுடன் படகை ஒட்டிய மடகாஸ்கர் காரனே கொஞ்சம் படபடத்தமாதிரி இருந்தது. வந்த எல்லோருமே மிகவும் பயந்து போனோம். இடையிடையே படகைவிட்டு பாறையில் ஏறி நிற்பதும் பிறகு படகில் போவதுமாக ஒருமாதிரி லெமூர் தீவை சென்றடைந்தோம்.

தூரத்தில் எங்களை கண்டதுமே அழகான ரிங் டெய்ல் லெமூர் இன மிருகங்கள் ஏரியின் கரையில் வந்து வரவேற்பதுபோல் ஆவலாக நின்றார்கள். படகுகள் அவர்களை அண்மித்ததும் பாய்ந்தோடிவந்து எங்கள் தோள்மூட்டு, தலை என்று ஏறி நிண்டுகொண்டார்கள். கூட்டி வந்த guide மார் வாழைப்பழங்களை தந்து அவர்களுக்கு கொடுக்கும்படி கூறினார். மிகவும் நற்பான மனிதர்களை நம்பும் காட்டு விலங்கினங்கள் அவை. எமது மாணவிகள் செல்பி எடுக்க வெளிக்கிட்டவுடனேயே அந்த லெமூர்கள் அவர்களது தலையில் இருந்துகொண்டு தாமும் போஸ் கொடுத்தது மிகவும் அழகாக இருந்தது. 

Slide10.jpg

Slide14.jpg

Slide3.jpg

Slide4.jpg

Slide5.jpg

Slide7.jpg

Slide8.jpg

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் தொடருவேன் Pira பிரா. பதின்மூன்றுநாள் தான். ஆனால் தொடர்ந்து இரவு பகலாக பயணித்ததால் ஒரு வருட அனுபவமும் போல இருந்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

நில்மினி…  எழுத்திற்கு  ஏற்ற மாதிரி, படங்களை இணைப்பதால்…
நாமும், மடகஸ்காரிற்கு பயணிப்பது மாதிரி உணர்வு ஏற்படுகின்றது.

எமது வீட்டு பிராணிகளான… நாய், பூனையை விட  
லெமூர் மிருகங்கள்… முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் நெருக்கமாக பழகுவது வியப்பாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களும் அருமையான கட்டுரையும் நன்றாக இருக்கிறது.....!

6 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி…  எழுத்திற்கு  ஏற்ற மாதிரி, படங்களை இணைப்பதால்…
நாமும், மடகஸ்காரிற்கு பயணிப்பது மாதிரி உணர்வு ஏற்படுகின்றது.

சிறியர் அந்த ஆற்றில மரத்தில தடக்குப்பட்டு முழுசின அனுபவமும் வந்ததா......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

அரைவாசி வழியில் ராட்சத மரம் ஒன்று அரைவாசி வெட்டப்பட்டு எரிந்த நிலையில் குறுக்கே விழுந்திருந்தது

அந்தமரத்தை கடந்து படகை எடுத்துக்கொண்டு நாமும் போகவேண்டும் என்பது நினைத்துப்பார்க்க முடியாத மாதிரி இருந்தது. எல்லோருக்கும் ஒத்தபடிதானே என்று நான் அவ்வளவு கவலைப்படவில்லை. உதவிக்கு வந்த சிலருடன் உதவியுடன் படகில் இருந்து மரத்தில் ஏறி பிறகு, அவர்கள் படகை மற்றப்பக்கம் கொண்டுவர திரும்ப படகுப்பயணம் தொடர்ந்தது

Slide7.jpg

1 hour ago, suvy said:

அழகான படங்களும் அருமையான கட்டுரையும் நன்றாக இருக்கிறது.....!

சிறியர் அந்த ஆற்றில மரத்தில தடக்குப்பட்டு முழுசின அனுபவமும் வந்ததா......!   😂

animiertes-baeume-bild-0023.gifசுவியர்...  நானும் ஆற்றின் படத்தை கண்டவுடன், அந்த இராட்சத மரத்தையும், 
முழுசிக் கொண்டு நிற்கும், நில்மினி எங்கே என்றும்தான்  தேடினேன். 😂
அவ அந்தப் படத்தை எமக்கு காட்டாமல், மறைத்து விட்டா போலுள்ளது. 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

animiertes-baeume-bild-0023.gifசுவியர்...  நானும் ஆற்றின் படத்தை கண்டவுடன், அந்த இராட்சத மரத்தையும், 
முழுசிக் கொண்டு நிற்கும், நில்மினி எங்கே என்றும்தான்  தேடினேன். 😂
அவ அந்தப் படத்தை எமக்கு காட்டாமல், மறைத்து விட்டா போலுள்ளது. 🤣

அவ நில் மினி இல்ல .....ரன் மினி........!  🏃‍♀️

Pin on movement

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி…  எழுத்திற்கு  ஏற்ற மாதிரி, படங்களை இணைப்பதால்…
நாமும், மடகஸ்காரிற்கு பயணிப்பது மாதிரி உணர்வு ஏற்படுகின்றது.

எமது வீட்டு பிராணிகளான… நாய், பூனையை விட  
லெமூர் மிருகங்கள்… முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் நெருக்கமாக பழகுவது வியப்பாக உள்ளது.

ஓம் சிறி. லெமூர்களை பார்க்கவும் நல்ல வடிவு. பஞ்சு போல பாதங்கள். ஒருவிதத்தில் அப்பாவி மிருகங்கள்

14 hours ago, suvy said:

அழகான படங்களும் அருமையான கட்டுரையும் நன்றாக இருக்கிறது.....!

சிறியர் அந்த ஆற்றில மரத்தில தடக்குப்பட்டு முழுசின அனுபவமும் வந்ததா......!   😂

😁ஆத்தில எல்லோரும் முழுசிக்கொண்டு நிண்டதால ஒருவரும் படம் எடுக்கவில்லை. படகில் இருந்து குறுக்க இருந்த மரத்துக்கு மேல ஏற வேண்டி இருந்ததால் கமெரா போன் எல்லாம் பையில வச்சிட்டம்.

13 hours ago, தமிழ் சிறி said:

animiertes-baeume-bild-0023.gifசுவியர்...  நானும் ஆற்றின் படத்தை கண்டவுடன், அந்த இராட்சத மரத்தையும், 
முழுசிக் கொண்டு நிற்கும், நில்மினி எங்கே என்றும்தான்  தேடினேன். 😂
அவ அந்தப் படத்தை எமக்கு காட்டாமல், மறைத்து விட்டா போலுள்ளது. 🤣

படமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று எல்லோரும் முழுசிக்கொண்டு நிண்டதால் அந்தக்காட்சி மனதில் மட்டும்தான் இருக்கு சிறி.🤔

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அவ நில் மினி இல்ல .....ரன் மினி........!  🏃‍♀️

இதைத்தான் அசல் பகிடி எண்டு சொல்லுறது. நில்(மினி) ஓடி(மினி) ஆகிய இடம் மடகஸ்கார்.

பி கு:  அப்பா இருந்தா கவலைப்பட்டிருப்பாரே? அவரது நீல மாணிக்கத்தை (Nilmini) எல்லோரும் பகிடி பண்ணுகிறார்கள் என்று ☺️

14 hours ago, suvy said:

அழகான படங்களும் அருமையான கட்டுரையும் நன்றாக இருக்கிறது.....!

சிறியர் அந்த ஆற்றில மரத்தில தடக்குப்பட்டு முழுசின அனுபவமும் வந்ததா......!   😂

நன்றி சுவி.

நிறைய சுவாரசியமான கதைகள் இருக்கு. கட்டுரை தொடரும்.

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.