Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அருந்ததி பார்க்கும் திருமண சடங்கில் அறிவியல் உள்ளதா? வைரல் வீடியோவும் விஞ்ஞானி விளக்கமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அருந்ததி பார்க்கும் திருமண சடங்கில் அறிவியல் உள்ளதா? வைரல் வீடியோவும் விஞ்ஞானி விளக்கமும்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அ.தா.பாலசுப்ரமணியன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து

பட மூலாதாரம்,MAHESH/SARANYA

'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து' திருமணம் செய்யும் நடைமுறை தமிழ்நாடு உள்ளிட்ட சில தென்னிந்திய மாநிலங்களில் பல சாதிகளில் உள்ளது.

திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அம்மிக்கல் ஒன்றில் கால் வைத்து வானத்தில் மேலே அண்ணாந்து மணமகன் வானத்தில் உள்ள அருந்ததி நட்சத்திரத்தை மணமகளுக்கு காட்டுவதாகவே இந்த சடங்கு இருக்கும்.

வழக்கமாக திருமணம் பகல் நேரத்திலேயே நடக்கும் என்பதாலும், மண்டபத்திலோ, வீடுகளிலோ, பந்தலிலோ உள்ளரங்கத்தில்தான் திருமணம் நடக்கும் என்பதாலும் உண்மையிலேயே மணமகனும், மணமகளும் அருந்ததி பார்ப்பது நடைமுறையில் இல்லை. மேலே காட்டி அருந்ததி நட்சத்திரம் தெரிகிறதா என்று கேட்கும் ஒரு சடங்கு அவ்வளவே.

16ஆம் நூற்றாண்டில் தாண்டவராய சுவாமிகள் எழுதிய கைவல்ய நவநீதம் என்ற நூலில்,

 

"தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார் போல்

ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டுவார்போல்..." என வருகிறது ஒரு பாடல் வரி.

அதாவது வானத்தில் மரங்களைக் காட்டி அதன் பின்னால் இருக்கும் பிறையைக் காட்டுவது போல, வானத்தில் உள்ள நட்சத்திரங்களைக் காட்டி அவற்றுக்குள் உள்ள அருந்ததி நட்சத்திரங்களைக் காட்டுவது போல, உருவத்தை முதலில் காட்டி பிறகு, அருவமாக இருக்கிற மூலப் பொருளை விளக்கத் தொடங்கினார் என்று அந்தப் பாடலின் பொருள் செல்லும்.

எனவே, ஒரு காலத்தில் உண்மையிலேயே வானத்தில் அருந்ததி நட்சத்திரத்தை காட்டும் நடைமுறை திருமண சடங்குகளில் இருந்ததா, அப்படி எனில் திருமணம் இரவில் நடந்ததா, இந்தப் பாடலில் திருமணம் பற்றிய குறிப்பு இல்லாததால், அருந்ததி காட்டும் நடைமுறை திருமணத்தோடு தொடர்பற்ற ஒன்றாக இருந்ததா என்ற கேள்விகள் எழுகின்றன.

விண்வெளி

பட மூலாதாரம்,GETTY IMAGES

எது எப்படி என்றாலும் இது ஒரு சடங்கு. அது அந்த அளவில் இருப்பது வேறு. ஆனால், இது போன்ற சடங்குகளுக்குப் பின்னால் அறிவியல் இருப்பதாகவும், இன்றைய நவீன அறிவியல் கண்டறிந்த உண்மைகளை பழங்காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டறிந்துவிட்டதாகவும் கூறும் வீடியோக்கள் பரவி வருகின்றன.

அதைப் போல பகிரப்பட்டுவரும் ஒரு வீடியோவில் பேசும் பெண், பொதுவாக இரட்டை நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம் நிலையாக இருக்கும், மற்றொரு நட்சத்திரம் நிலையாக உள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும். ஆனால், அருந்ததி (மிஸார்) - வசிட்டர் (அல்கோர்) நட்சத்திரங்கள் லட்சியத் தம்பதிகளைப் போல ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. வானத்தில் சிறு புள்ளிகளாகத் தெரியும் நட்சத்திரங்களின் செயல்பாட்டைக் கண்டறிந்து திருமண சடங்கில் வைத்திருக்கிறார்கள் என்று பேசுகிறார்.

இதில் கூறப்படும் வானியல் விவரங்கள் உண்மையா என்று இந்தக் காணொளியை மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பில் பணியாற்றும் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனிடம் அனுப்பிக் கேட்டோம்.

வெங்கடேஸ்வரன் கூறும் மூன்று காரணங்கள்

த.வி.வெங்கடேஸ்வரன்

பட மூலாதாரம்,TVVENKATESWARAN

 
படக்குறிப்பு,

த.வி.வெங்கடேஸ்வரன்

அவர் இந்தக் காணொளியில் கூறப்படும் வானியல் சார்ந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றார். மூன்று அடிப்படைகளில் இவற்றை முற்றிலும் மறுக்க முடியும் என்று கூறிய அவர் விரிவாக அளித்த விளக்கம் இதோ:

முதல் காரணம்:

பூமியிலிருந்து சுமார் 81.7 ஒளியாண்டு தொலைவில் அருந்ததி (அல்கோர்) உள்ளது. ஆனால் வசிட்டர் (மிஸார்) 82.9 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. எனவே இரண்டும் அசல் ஜோடி அல்ல.

பார்வைக்கு இரண்டும் ஒரே திசையில் இருப்பதால் ஜோடிபோல நாடகம் ஆடும் விண்மீன்கள் தான் இவை. இதுபோன்ற போலி ஜோடி விண்மீன்களை 'தோற்றமயக்கம் தரும் ஜோடி' என வானவியலில் அழைப்பார்கள்.

எப்சிலன் லைரே போன்ற அசல் ஜோடி விண்மீன்கள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு ஒன்றையொன்று சுற்றுகின்றன. இவை அசல் ஜோடி விண்மீன்கள். அல்ஜிடி போன்ற தோற்ற மயக்கம் தரும் ஜோடிகள் இடையே ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே தொடர்பு ஏதுமில்லை.

ஆப்டிகல் பைனரி நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளாது, இரண்டு விண்மீன்களும் வெவ்வேறு தொலைவுகளில் இருந்தாலும் பார்வைக் கோட்டில் ஒரே திசையில் அமைவதால் ஏற்படும் தோற்ற மயக்கம் காரணமாக, இவை ஜோடி போலத் தோற்றம் தரும்.

எனவே, வசிட்டரும் (மிஸார்) அருந்ததியும் (அல்கோர்) ஜோடியே அல்ல. தொலைவில் ஒரே திசையில் இருக்கும் உயரமான இரண்டு மலைகள் பார்வைக்கு இணைந்து மலைத்தொடர் போன்ற தோற்ற மயக்கம் ஏற்படுத்துவது போல வசிட்டர் - அருந்ததி விண்மீன்கள் போலி ஜோடி.

 

இரண்டாவது காரணம்:

ஒரு ஒளிபுள்ளியாக வெறும் கண்களுக்கு புலப்படும் அருந்ததி (அல்கோர்) விண்மீனுக்கு உண்மையிலேயே அல்கோர்-B என்று அழைக்கப்படும் அசல் இணை உள்ளது. வேறு சொற்களில் கூறினால், அருந்ததியின் அசலான இணை வசிட்டர் விண்மீன் அல்ல; அல்கோர்-B என்னும் வேறொரு விண்மீன்.

மூன்றாவது காரணம்:

உண்மையான இரட்டை விண்மீன் தொகுப்பு அனைத்திலுமே இரண்டு விண்மீன்களும் சுற்றி வரவே செய்யும். இரண்டு விண்மீன்களும் உண்மையில் ஒன்றை ஒன்று சுற்றுவதில்லை. பதிலாக இரண்டுக்கும் இடையில் உள்ள நிறைமையம் என்ற புள்ளியையே இரண்டும் சுற்றிவரும்.

புவி, சூரியனை சுற்றுவதாக எளிதாக கூறுகிறோம். ஆனால், உண்மையில் இரண்டுக்கும் இடையில் உள்ள நிறைமையத்தை ஒட்டியே புவி சுற்றி வருகிறது. அந்த நிறை மையத்தை சூரியனும்கூட சுற்றவே செய்கிறது. ஆனால், சூரியன் சுற்றுகிற வட்டம் மிகச் சிறியதாக இருக்கும். ஆட்டு உரலில் குழவிக்கல் சுற்றிவருவதைப் போல சூரியன் சுற்றுவது ஒரே இடத்திலேயே அமைந்திருக்கும்.

எனவே வசிட்டரும் அருந்ததியும் அசல் ஜோடி என்றாலும் கூட தட்டாமாலை போல சுற்றுவது அவற்றின் சிறப்பு குணம் இல்லை. எல்லா ஜோடி விண்மீன்களுக்கும் இருக்கும் குணம் தான் என்கிறார் வெங்கடேஸ்வரன்.

இந்த கட்டுரையின் நோக்கம் சடங்குகளை ஆராய்வதல்ல. அவற்றைக் குறைகூறுவதும் அல்ல. ஆனால், சடங்குகள் அறிவியல் ரீதியில் அமைந்தவை என்று கூறுவதன் மூலம் அறிவியல் உண்மைகள் திரிக்கப்படுவதையும், அறிவியல் எது, நம்பிக்கை எது என்ற மயக்கத்தை ஏற்படுத்தும் தகவல்களை ஆராய்ந்து உண்மையை உரைப்பதுமே.

https://www.bbc.com/tamil/articles/cp3zrxy6n0po

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது வேறை ஒன்டும் இல்லை நீ அம்மிக்குழவியை தலையில் போட நினைத்தால் மேலை இருக்கிறவன் சாட்ச்சி சொல்லுவான் என்டு மனைவியை ஏமாத்தின காலம் அது.😆

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நண்பர்கள் எத்தனையோ மனிதர்களை நட்புக்கு எடுத்துக்காட்டாய் நாம் சுட்டுகிறோம். படித்து அதிசயிக்கிறோம். ஆனால் எத்தனை சோதனைகள் வந்தாலும் உண்மையிலேயே நட்புக்கு எடுத்துக்காட்டாய் பார்த்த கணத்திலிருந்து இறந்து வீழ்ந்த கணம் வரை வாழ்ந்தவர்கள் என்றால் கர்ணனையும் துரியோதனனையுமே சுட்டலாம். அவர்களின் சிறப்பான பக்கங்களைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே. அஸ்தினாபுர அரண்மனையில் மன்னர்களுக்கிடையே ஒரு வில்வித்தைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருபோட்டியில் விஜயன் வென்றுவிட அங்கே தேரோட்டியின் மகனான கர்ணன் பங்கெடுக்க விரும்புகிறான். ஆனால் துரோணரோ அது க்ஷத்திரிய மன்னர்களுக்கான போட்டி என நிராகரிக்கிறார். உடனே துரியோதனன் கர்ணனைத் தன் நண்பனாக ஏற்று அங்க தேசத்தின் அரசனாக அறிவிக்கிறான். இங்கே ஆரம்பிக்கிறது அவர்களின் மாசற்ற நட்பும் கர்ணனின் செஞ்சோற்றுக் கடனும்.   ப்ரக்ஜோதிஷ்பூரை ஆண்ட பகதத்தன் என்பவரின் மகள் பானுமதி. இவளுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொள்ளை கொள்ளும் அழகுடைய பானுமதியைக் கரம்பிடிக்கஅங்கே அனைத்து தேசத்து அரசர்களும் அணிவகுத்திருந்தனர். அப்போட்டியில் பங்கேற்க துரியோதனனும் சென்றிருந்தான். அவனுக்குத் தோழனாக கர்ணனும் சென்றிருந்தான். பார்த்ததுமே பானுமதியின் அழகில் மயங்கினான் துரியோதனன். ஆனால் அவளோ சுயம்வர மாலையோடு துரியோதனன் பக்கம் வந்ததும் வேறு பக்கம் திரும்பி விட அவளைக் கடத்திச் சென்று மணக்கத் துடிக்கிறான். இச்சந்தர்ப்பத்தில் கர்ணன் தேரோட்டியாக இருந்து பல்வேறு மன்னர்களுடன் போரிட்டு  இருவரையும் அஸ்தினாபுரத்துக்குக் கொண்டு வந்து சேர்க்க அவர்கள் திருமணம் அதன் பின் இருமனம் இணைந்த திருமணமாக முடிந்தது. ஒருமுறை பானுமதியும் கர்ணனும் சொக்கட்டான் ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே துரியோதனன் வருகை புரிந்தான். கணவனைக் கண்ட பானுமதி மரியாதை நிமித்தமாக எழுந்தாள். தோற்கும் நிலையில் இருந்த அவள் ஆட்டத்தைவிட்டு வெளியேறுவதாக நினைத்த கர்ணன் வேகமாக அவள் உடையைப் பற்றி அமரவைக்க எத்தனித்தான். ஆனால் அவள் இடுப்பில் அணிந்திருந்த மணிமேகலை என்னும் ஆபரணம் அறுபட்டு அதிலிருந்து மணிகள் தரையெங்கும் உருண்டோடின. இருவருமே பதற்றத்தில் ஆழ்ந்தனர். அதற்குள் பக்கத்தில் வந்துவிட்ட துரியோதனன் ” எடுக்கவோ, கோர்க்கவோ” என சூழ்நிலையை இயல்பாக்க முயன்றான். தன் மனைவியுடன் தன் சிநேகிதனே ஆனாலும் தனிமையில் அமர்ந்து சொக்கட்டான் ஆடுவதையோ அவன் பற்றியதால் அவளது ஆடையின் மேகலை அறுந்து உதிர்ந்ததையோ பெரிதாக எண்ணாமல் சூழ்நிலையை இலகுவாக்க முயன்ற துரியோதனன் தன் நண்பன் கர்ணனின் மேல் வைத்த நம்பிக்கை கர்ணனைத் தன் வாழ்நாள் முழுவதும் அசைத்துக் கொண்டிருந்தது. இது எப்போது வெளிப்பட்டது என்றால் குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கும் சமயம் பாண்டவர்களின் தாயான குந்தி, கர்ணன் தன் மகன் என்ற உண்மையை கர்ணனிடமே உரைக்க வந்தாள். மேலும் போரில் அவன் பாண்டவர் பக்கம் சேர்ந்து கௌரவர்களை எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள வந்தாள். அப்போது கர்ணன் வாய்மொழியாகவே இந்நிகழ்வு வெளிப்பட்டது. கர்ணன் தன் தாயிடம்” பிறந்தவுடனே என்னைக் கைவிட்ட தாயான நீங்கள் இப்போதுதான் மகனாக ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறீர்கள். ஆனால் என் நண்பனான துரியோதனனோ நான் யாரென்று தெரியாமலே என் வீரத்தைப் பார்த்துச் சகோதரனாக ஏற்று அங்க தேச அரசனாக்கினான். அங்கேயே ஆரம்பித்துவிட்டது என் செஞ்சோற்றுக் கடன். இதைவிடத் தன் மனைவியுடன் சொக்கட்டான் ஆடும்போது அவள் மேகலை அறுந்து வீழ்ந்ததைக் கூடத் தப்பாக எண்ணாமல் எடுக்கவோ கோர்க்கவோ என்று கேட்ட அவன் பண்பின் முன் என் எல்லா அன்பும் இணைந்துவிட்டது அம்மா. ” ”நான் இன்றுவரை தானதர்மம் செய்துவரும் பொருட்களெல்லாமே துரியோதனனைச் சேர்ந்ததுதானேம்மா. மாயக் கிருஷ்ணனின் துணையை நீங்களெல்லாம் நம்பும்போது என் வில்திறமையை மட்டுமே நம்புகிறான் அம்மா. இப்படிப்பட்ட என் நண்பனுக்குனுக்கு என் உடல் பொருள் ஆவியைத் தியாகம் செய்யாவிட்டால், செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்காவிட்டால் நான் வாழ்ந்ததன் பயன் ஏது?” என்று கேட்க அர்ஜுனன் மேல் பிரம்மாஸ்திரத்தை ஒருமுறைக்குமேல் ஏவக்கூடாது என்றும், அர்ஜுனனைத் தவிர பாண்டவர்கள் யாருடனும் பொருதக் கூடாது என்றும் கர்ணனிடம் வரம் பெற்றுச் செல்கிறாள் குந்தி. இப்படித் தன் நண்பனுக்காகத் தாயே வந்து கேட்டும் மாறாத கர்ணனின் பண்பு உயர்ந்ததுதானே. அதனினும் குருக்ஷேத்திரப் போரின் போது பீஷ்மர் தடுத்ததால் அவன் வெறும் படைவீரனாகவே போரிட நேருமென்பதால் போரிடப் புகமாட்டேன் என்று மறுத்ததையும் துரியோதன் ஏற்றான். அதன்பின் பீஷ்மர் விழுந்ததும்தான் அவன் தன் நண்பன் துரியோதனுக்காகப் போர்க்களம் புகுந்தான். இதுவே இவர்களின் இணைபிரியாத புரிதலுள்ள நட்பினுக்கு எடுத்துக்காட்டு என்பதைப் பார்த்தோம் இல்லையா குழந்தைகளே.     Posted by Thenammai Lakshmanan at பிற்பகல் 8:07  http://honeylaksh.blogspot.com/2023/03/blog-post_19.html
    • சிறித்தம்பி!  நல்ல வடிவாய் பாருங்கோ அவர் மண்ணெண்ணை தகரத்தோட எல்லோ திரியிறவர்? என்ன விசர்க்கதை கதைக்கிறியள் ? புட்டின்  அருமை தெரியாதவர் யாரிருக்கிறார்கள்?   
    • தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: முக்கிய அம்சங்கள் - விரிவான தகவல்கள்   படக்குறிப்பு, தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆற்.கே. பன்னீர்செல்வம். 21 மார்ச் 2023, 09:07 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் சிறு தானிய உற்பத்தியை அதிகரிப்பது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தென்னை வளர்ச்சியை மேம்படுத்த திட்டம், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் திட்டம், சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில், அந்த அறிக்கையை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். பச்சைத் துண்டு அணிந்தபடி வந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பத்து மணியளவில் வேளாண் துறைக்கான நிதி நிலை அறிக்கையை வாசிக்க ஆரம்பித்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 முக்கிய அம்சங்கள் தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி பரப்பு 93 ஆயிரம் ஹெக்டேர் அதிகரித்து 63 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. 2021-22ஆம் ஆண்டில் 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 11 லட்சத்து 73 டன் அதிகம். டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு உற்பத்தியாகும். வரும் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்திற்காக புதிதாக ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 சிற்றூர்களில் வேளாண்மை முழுமையாக வளர்வதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும் மற்ற பணிகளையும் மேற்கொள்ள, 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்காக, 2504 ஊராட்சிகளுக்கு ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் இலவச பம்புசெட்டுகள், இலவச பண்ணைக் குட்டைகள் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும். தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஏற்கனவே 20 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு சிறுதானிய மண்டலங்கள் இருந்த நிலையில், தற்போது நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்த மாவட்டங்களும் இந்த மண்டலங்களில் சேர்த்துக்கொள்ளப்படும். நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பொது விநியோக அட்டைகளுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு தானிய திருவிழாக்களும் நடத்தப்படும். இந்த இயக்கத்திற்கு 82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் விவசாயிகளின் உடனடித் தேவைகளை நிறைவேற்றவும் வருவாயை அதிகரிக்கவும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அதில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்க 200 ஏக்கர் பரப்பளவில் அந்த ரகங்களின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கு 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு பட்ஜெட் 2023: "குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்.15 முதல் தொடங்கும்"20 மார்ச் 2023 'தமிழ்நாடு அரசு கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை' - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி21 மார்ச் 2023 உடலில் உரசுபவரைக் குத்துவதற்கு இந்தியப் பெண்கள் பயன்படுத்தும் சின்னஞ்சிறு ஆயுதம்6 மணி நேரங்களுக்கு முன்னர் பாரம்பரிய நெல் விதைகளை விதை வங்கியில் பராமரித்துவரும் 10 விவசாயிகளுக்கு தலா மூன்று லட்சம் வீதம் 30 லட்ச ரூபாய் வழங்கப்படும். குறுவைப் பருவத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்ய ஊக்குவிக்க 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெல்லுக்குப் பின் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதை ஊக்குவிக்க 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கு வேளாண் கருவிகளை வாங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 60,000 வேளாண் கருவிகள் இதன் மூலம் வழங்கப்படும். அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க சமீபத்தில் கொள்கை வெளியிடப்பட்டது. விவசாயிகள் அங்ககச் சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க 10 ஆயிரம் ஹெக்டேருக்கு சான்றிதழைப் பெற மானிய உதவி அளிக்கப்படும். இதற்காக இந்த ஆண்டில் 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க ஐந்தாண்டுகளுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிற அங்கக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் குடியரசு தினத்தன்று ஐந்து லட்ச ரூபாய் பணப்பரிசுடன் விருது வழங்கப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.10 கோடியும், பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாயும் என 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தி பம்ப் செட்கள் வாங்க இந்த மானியம் பயன்படும். தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர்கள், விவசாயிகளின் அடிப்படைத் தகவல்களான ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைச் சேமித்துவைக்க GRAINS (Grower Online Registration of Agriculture Inputs System) என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும் உற்பத்தியையும் அதிகரிக்க பயறு பெருக்குத் திட்டம் 30 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய துவரை மண்டலத்தில் துவரை சாகுபடிக்கு 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். எண்ணெய் வித்துக்கான சிறப்புத் திட்டம்: சூரியகாந்திப் பயிரின் உற்பத்தித் திறனை உயர்த்தவும் நிலக்கடலை, எள், சோயா, மொச்சை போன்ற பயிர்களை பரவலாக்கம் செய்யவும் 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தென்னை உற்பத்தியில் தேசிய அளவில் முதலிடம் பெற, மறுநடவு - புத்தாக்கத் திட்டம் 20 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். குட்டை - நெட்டை வீரிய ஒட்டுரக தென்னைக்கு விவசாயிகளிடம் வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டில் 10,000 குட்டை - நெட்டை ஒட்டுரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். பயிர் காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்த மாநில அரசின் மானியமாக இந்த ஆண்டு 2,337 கோடி ரூபாய் செலுத்தப்படும். கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்யப்படும் கரும்பு சாகுபடி பரப்பு 2022-23 காலகட்டத்தில் 55,000 ஹெக்டேர் அதிகரித்துள்ளது. கரும்புக்கு டன் ஒன்றுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாய விலையான 2,821 ரூபாயுடன் 195 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதற்கென 253 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.   படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டு விவசாயிகளின் இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மல்லிகை பூ மதுரையில் மட்டுமின்றி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 4,300 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் மல்லிகைப் பூக்கள் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் இத்திட்டம் ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். பலா மரங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஐந்து ஆண்டுகள் தொடர் திட்டமாக பலா இயக்கம் செயல்படுத்தப்பட்டு, 2,500 ஹெக்டர் பரப்பளவில் பலா சாகுபடி மேற்கொள்ளப்படும். இத்திட்டம், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில் இவ்வியக்கத்திற்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,200 ஹெக்டர் பரப்பில் மிளகாய் பயிரிடப்படுகிறது. இப்பரப்பை 40,000 ஹெக்டேராக உயர்த்தி, உற்பத்தியினை அதிகரிக்க இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும். மிளகாயின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க ஏதுவான கட்டமைப்பை உருவாக்க ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000: திமுக அரசின் அறிவிப்பும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும்20 மார்ச் 2023 பொள்ளாச்சி அருகே காகங்கள் வேட்டையாடப்பட்டது ஏன்? - எச்சரிக்கும் மருத்துவர்கள்21 மார்ச் 2023 பாலியல் தொழிலாளியாக இருந்த திருநங்கை அலிஷா வாழ்க்கையில் நடந்த திடீர் மாற்றம்20 மார்ச் 2023 வரும் ஆண்டு 1,000 ஹெக்டேர் பரப்பில் முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படுவதோடு, பதப்படுத்துதலுக்கும் மதிப்புக்கூட்டுதலுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும். முருங்கையில் ஏற்றுமதி வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில் இதற்கென 11 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக தக்காளி, வெங்காயம் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தைப்பு இயந்திரங்கள், சேமிப்புக் கட்டமைப்புகள், அறுவடை இயந்திரங்கள், வெங்காயத்தாள் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகிய உதவிகள் வழங்க 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெங்காய வரத்து நிலைப்படுத்தப்படும். தக்காளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல், தடுக்கு அமைத்தல், அதிக மகசூல் தரும் இரகங்களைப் பயிரிடுதல், மூடாக்கு இடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும். 19 கோடி ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில், பத்து இலட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச் செடிகள் அடங்கிய தொகுப்பு 15 கோடி ரூபாய் நிதியில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், 300 குடும்பங்களுக்கு இத்தொகுப்புகள் வழங்கப்படும். 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். Twitter பதிவை கடந்து செல்ல, 4 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 4 வரும் ஆண்டில் வேளாண் இயந்திரங்கள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், கரும்பு சாகுபடிக்கு ஏற்ற இயந்திரங்கள், கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஆகியவற்றுக்காக மத்திய, மாநில அரசின் நிதியிலிருந்து 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதோடு பயனாளிகள் தேர்வும் கணினிமயமாக்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 27 சேமிப்புக் கிடங்குகளில் 34,000 மெட்ரிக் டன் கொள்ளளவு ஏற்படும் வகையில், வரும் ஆண்டில் 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மறு கட்டமைப்பு மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மேலும், 50 உழவர் சந்தைகளுக்கு 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி, உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெற வரும் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் வளாகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தை மெருகேற்றவும், மேம்படுத்தவும், மேலும் கட்டமைப்புகளை உருவாக்கவும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 2022-23 ஆம் ஆண்டில் இது வரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 12,648 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 14,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். அதேபோல் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கூட்டுறவு கடனாக 1,500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும். வரும் ஆண்டில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ’மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Millet Cafe) உருவாக்கப்படும். Twitter பதிவை கடந்து செல்ல, 5 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 5 2023-24 ஆம் ஆண்டில் வேளாண்மை, அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தி, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு, உணவுத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளின் கீழ் 38 ஆயிரத்து 904 கோடியே 46 லட்சத்து ஆறு ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய வேளாண் நிதி நிலை அறிக்கையில் இலக்கியத்திலிருந்து பல்வேறு மேற்கோள்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ் இலக்கிய மேற்கோள்கள் உட்பட கலீல் ஜிப்ரான், சேக்ஸ்பியர் உள்ளிட்ட சர்வதேச கவிஞர்களிடமிருந்தும் மேற்கோள்காட்டிப் பேசினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். https://www.bbc.com/tamil/articles/cye4d4jwgn1o
    • பையன் நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். சரி,  மேற்குலக நாடுகளின் இந்த பாரபட்சமான அணுகு முறைக்கு எதிர்பபு தெரிவித்து புலம் பெயர் தமிழராகிய நாங்கள் அனைவரும் மேற்கத்தய நாடுகளில் இருந்து வெளிநடப்பு செய்து, ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகளில் குடிபெயரும் ஒரு போராட்டத்தை தொடங்கினால், அதற்கு ஆதரவாக அதை நடைமுறையில் செய்ய குறைந்தது யாழ் இணைய உறுப்பினர்களாகிய நாமாவது தயாரா நண்பா?  ஒப்பீட்டு ரீதியில் ரஷ்யா போன்ற நாடுகளை விட மனித உரிமைகளும் ஜனநாயக விழுமியங்களும் பேணப்படுவதால் தானே லட்சக்கணக்கான தமிழர்கள் இங்கு புலம் பெயர்ந்து அடுத்த தலைமுறையை கூட உண்டாக்கி அந்த தலைமுறை இங்கு மேற்கு நாடுகளில் உயர் பதவிகளில் கூட இருக்கின்றனரே! 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.