Jump to content

இரும்புப் பெண்மணி, கல்வி ஆலோசகர் நெல்லை உலகம்மாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரும்புப் பெண்மணி, கல்வி ஆலோசகர் நெல்லை உலகம்மாள்.

325305213_561894662506513_4525946031625616371_n.jpg
324877049_502677612009254_7346939221337093592_n.jpg

நெல்லை உலகம்மாள். நெல்லையில் மட்டுமல்ல சென்னையும் அறிந்த பெயர்தான். சின்னச் சின்னதாய்த் தடங்கல்கள் இடையூறுகள் குறைகள் ஏற்பட்டாலே ஓய்ந்து போய் அமரும் பெண்ணினம், நெல்லை உலகம்மாள் பற்றிக் கேள்விப்பட்டால் தங்கள் தன்னம்பிக்கைக்குப் புத்துயிர் ஊட்டிக் கொள்ளும். லேடீஸ் ஸ்பெஷலுக்காகப் பேட்டி வேண்டும் என்றபோது மிக மகிழ்ந்து தன் முனைவர் பட்ட வேலைகளுக்கு நடுவிலும் இன்னொரு கல்லூரிக்கு உரையாற்றச் சென்ற பயணப் பொழுதினில் தன் காரில் இருந்தபடியே என் கேள்விக்கான பதில்களை அனுப்பினார்.   

SCAN_.jpg

நெல்லையில் பிறந்தவர் உலகம்மாள். கூடப்பிறந்தவர்கள் நால்வர், மூத்த சகோதரி, மூத்த சகோதரர் மற்றும் இரு தம்பியர். பெற்றோர்கள் இருவரும் ஆசிரியரகள் என்றாலும்,

பார்ன் வித் கோல்டன் ஸ்பூன் என்ற சொல்லுக்குத் தகுதியான அன்பினையும், அரவணைப்பினையும், பெற்றோரிடமும், உடன் பிறப்புகளிடமும் பெற்றுக் கொண்டிருப்பவர். சிற்சில உடற்குறைபாடு இருந்தாலும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னை இன்னும் இளமையாக இனிமையாகப் புதுப்பித்துக் கொண்டிருப்பவர். எப்போதும் தான் எடுத்த முடிவிலும் பின் தயங்காதவர். இரும்புப் பெண்மணி என்ற பட்டத்துக்குப் பொருத்தமானவர். சேவைக்காகவே தன்னை ஒப்புக் கொடுத்தவர்.

எந்த விழா என்றாலும் தன் உதவியாளர் உதவியுடன் தன் வாகனத்தில் சரியான நேரத்துக்கு வந்து சிறப்பிப்பார். எந்த இடம் என்றாலும் தயங்கியதே இல்லை. சென்னை மட்டுமல்ல எந்த ஊர் என்றாலும் நட்புக்குக் கரம் கோர்ப்பதில் இவர் வல்லவர். இவரை நண்பர்களாகப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நானும்தான்.

இவர் ஆற்றி வரும் பணிகளில் சிலவற்றை உங்களுக்காகத் தொகுத்து அளித்துள்ளேன். சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அகாடமியில் 14 ஆண்டுகளாக கல்வி ஆலோசனை மற்றும் வழிகாட்டலோடு, நிர்வாக பணியில் இருந்து நல்ல அனுபவம் பெற்ற அடிப்படையில், 2015 முதல், பள்ளி மாணவர்களுக்கு இப்போது வரை கல்வி ஆலோசனை வழங்கி வருகிறார்.

JEO பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலரர்களுக்கு, அவர்களின் பயிற்சியின் போது உரையாற்றும் வாய்ப்பினை 2016 முதல் பெற்று, அதற்கான  சான்றிதழும்  பெற்றுள்ளார். அத்தோடு, வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு கழகம் ஏற்பாடு செய்யும் போட்டித் தேர்வுக்கு  தயாராகும் மாணவ/மாணவியருக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டலும் தொடர்ந்து செய்து வருகிறார்.

தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு “முதன்மை பயிற்சியாளராகப்” பணிபுரிந்து வருவதோடு,  கொரோனா  தொற்றுக் காலத்தில்  கைபேசியில்  காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உளவியல் ஆலோசனையுடன், தேவையான உதவிகளை, துறை உயர் அதிகாரிகள் மூலம் நிறைவேற்றிக் கொடுக்கும் பணியினையும் செய்து அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளார்.

பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பல பணிகள் ஆற்றுவதுடன், சென்னை லயோலா கல்லூரி அவுட் ரீச் மாணவர்களுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று பெண்களுக்கான விழிப்புணர்வுடன், பெண்களுக்கான உளவியல் ஆலோசனை, முதியோர் இல்லமும் சென்று ஊக்க உரையாற்றி வருகிறார்.

கொரோனா தொற்றுக் காலத்திலும், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், வேலைவாய்ப்பு மையம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிகழ்த்தும் நிகழ்வுகளில் பங்கெடுத்து ஆன்லைனில் உயர்கல்வி, உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறார். பல மாவட்டங்கள், பல மாநிலங்கள், பல நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களையும், பல்வேறு நிகழ்வுகளில் சந்தித்து வருகிறார்.

காது கேளாதோர் பள்ளி பணியாற்றும் 30 ஆசிரியர்களிடையே அவர்கள் பணியினை உற்சாகமூட்டும் வகையில்ஊக்க உரை ஆற்றியுள்ளார். காது கேளாதோர் பள்ளி மாணவ/மாணவியர்களிடமும் அறநெறி குறித்து ஆலோசனை வழங்கும் நிகழ்வு ஆகியனவும் நிகழ்த்தி உள்ளார்.

கோட்டூர்புரம், பார்வையற்றோருக்கான செயிண்ட் லூயிஸ் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கான வழிகாட்டலுடன், 10 & 12 வகுப்பு  பொதுத்  தேர்வுக்கு தயாராவது குறித்த ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தோடு அவர்களுக்குத் தேவையான ஒலி புத்தகங்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பதிவு செய்து கொண்டு போய் கொடுத்துள்ளார். 2015 விருந்து நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று, 26000க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகளைச் சந்தித்துள்ளார். கிட்டத்தட்ட 200 மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு சென்று வழிகாட்டல் ஆலோசனை வழங்கியுள்ளார்.

SCAN__0001.jpg

இதற்கெல்லாம் தூண்டுதலாக இருந்தது எது எனக் கேட்டபோது,

நான் குழந்தையாக இருந்த போது அப்பா துவங்கிய மழலையர் பள்ளியிலிருந்து கிடைத்தது எனக் கூறினார். கல்வி ஆலோசனை சேவைக்கெனவே  M.Com., M.Ed., M.Phil., D.Co.Op., PGDCA., M.Sc Counselling & Psychotherapy ஆகிய பட்டங்களைப் பெற்றதோடு தற்போது Ph.D "கல்வி"யில் முனைவர் பட்டப் படிப்பினைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இப்பணியின் ஏற்ற இறக்கங்கள் என்ன, தடைகள் என்ன? எனக்கேட்ட போது ஏற்ற இறக்கங்கள்  என்று  எதுவும் என் வாழ்க்கையில் எப்போதும் இல்லை. சுமுகமான சீரான வாழ்க்கை. இயலாமை என்பது அனைவருக்கும் பொதுவானது என்று என் அறியாத வயதிலேயே ஏற்றுக் கொண்டதாலோ என்னவோ இறக்கங்கள் என்று எதனையும் எண்ணியதில்லை என்றார். இவர் செய்யும் "பணிக்கான தனித்துவம்" என்பது, எளிமையாகச் சொல்லி விளங்க வைப்பது என்கிறார்.

மேலும் இத்துறையில் பலருக்கு  வேலையிலும், உயர் கல்விக்கும் வழிகாட்டுதல் என்பது, இதனை "செய்", "செய்யாதே", என்று "அறிவுரை" கூறாமல், வழிகாட்டுகிறார். செய்யாதே என்பதனை விட எதைச் செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று ஆலோசனயுடன் வழிகாட்டுவேன் என்கிறார்.  ஆகையால் குழந்தைகளுக்கு என்னைப் பிடிக்கும். மேலும் நான் தடைகளாக எதையும் பார்த்ததில்லை. சவால்களாகத் தான் பார்க்கிறேன். ஆகையால் எதுவும் எனக்கு தடை இல்லை.

இத்துறையில் என் 20 வயதில் கல்லூரி காலங்களிலேயே சேவை மனப்பான்மையுடன் என் பயணத்தை துவங்கிவிட்டேன். கல்வித் தகுதியுடன் 2001 விருந்து முழு மூச்சாக செயல்பட ஆரம்பித்தேன்.  முதலில் வழிகாட்டல் ஆலோசனை வழங்குவதை தொழிலாகச் செய்யவில்லை. ஆங்கிலத்தில் பாசன் (Passion) என்று சொல்லக்கூடிய வேட்கை, ஆர்வம், ஆசை என்று சொல்லுமளவிற்கு செயல்பாடுகளில் ஈடுபடுகிறேன். புதிதாக எதையும் செய்ய விரும்புபவர்களுக்கு அறிவுரையாக அல்லாமல் வழிகாட்டலாக கூறுகின்றேன். செய்யும் பணியில் ஈடுபாட்டுடன், நேசித்து உங்களை ஈடுபடுத்துங்கள்.

அடைக்கலம் அறக்கட்டளையின் ’’ஜெம்ஸ் ஆஃப் திஷா’ விருது, சிற்பி அமைப்பினர் வழங்கிய ”தைரியமான வீரமங்கை” விருது, அமுத சுரபி என்னும் முகநூல் பக்கத்தினர் வழங்கிய ”அமுத பட்டிமன்ற விருது”, மற்றும் ”இரும்புப் பெண்மணி” விருது, ஊருணி அறக்கட்டளையின் ”பாத் பிரேக்கர்” விருது, பூவரசி அமைப்பின் ”நம்பிக்கை” விருது, S2S அமைப்பின் “சமூகச் சிற்பி” விருது, கலாம் யு.வி. அறக்கட்டளை “பாராட்டு விருதுகள்”,  இந்தியன் உலக சாதனைகள் – சிறந்த மனிதநேய விருது, சூப்பர் ராயல் டிவி விருது – 2021, சிறந்த கல்வியாளர் & ஆலோசகர், காவல்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான பாராட்டு சான்றிதழ்,  கலங்கரை விளக்கம் அறக்கட்டளை, காருண்யம் அறக்கட்டளை, கவித்திறன் மேடை இணைந்து பத்மஸ்ரீ விவேக் நினைவாகக் “கலைச்செல்வர் விருது”, “ஆரஞ்சு உலக சாதனை சான்றிதழ்” பதின்பருவ சவால்கள்” தலைப்பில் ஆற்றிய உரைக்காக, ஷாக்ஷம் “டைனமிக் கேரியர் கவுன்சிலர்” விருது, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ், “பெண்மையை” கொண்டாடுதல் மற்றும் கௌரவித்தல், ஸ்ரீமதி சோனியா காந்தி விருதுகள்-2022, சிரம் அறக்கட்டளை, கெளரவ விருந்தினர், தங்க மங்கை விருது – 2022, தமிழால்  இணைவோம்-உலகத் தமிழ் பேரியக்கம் ஆகியன இவருக்கு இப்பணிகள் மூலம் கிடைத்த விருதுகள், பரிசுகள்,  முக்கியஸ்தர்களின் வாழ்த்துகளும் அடங்கும்.

வாழ்க்கையில் நட்டம் என்று எதுவுமில்லை. லாபம் என்று  பார்த்தால், பல ஆயிரக்கணக்கான மாணவ/மாணவியரின் அன்பினையும், பல்வேறு ஆளுமைகளின் இதயங்களிலும் இடம்பெற்றுள்ளேன். இந்த உலகில் நெல்லை உலகம்மாளுக்கு என்று தனி ஒரு இடம் கொடுத்துக் கொண்டிருக்கும் சமூகத்திற்கும், அதனைக் கண்டு ஆனந்திக்கும் என் பெற்றோருக்கும், செயல்பாடு கள் மூலம் நன்றி கடன்  செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

தன் வாழ்க்கையில் எதையுமே பாசிட்டிவாக எதிர்கொள்ளும் நெல்லை உலகம்மாளைப் பார்த்தால் எந்தப் பெண்ணுமே ஓய்ந்து அமர மாட்டார்கள். புயல் ஒன்று புறப்பட்டதே என்று வேகம் கொள்வார்கள். அவ்வளவு எனர்ஜி ஏற்பட்டது எனக்கும் இந்தப் பளிச் பெண்ணுடன் உரையாடியபிறகு. உங்களுக்கும்தானே !

http://honeylaksh.blogspot.com/2023/02/blog-post_24.html

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
    • யாழ் பல்கலை நிதியாளருக்கு எதிராக முறைப்பாடுகள்! (இனியபாரதி) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி சயந்தன், பல்கலைக் கழகச் சட்டத்துக்கு விரோதமான முறையில் நிதியாளர் தனது சம்பளத்தை நிறுத்தியதால் தனது வாழ்வாதாரம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏழாண்டு விடுமுறையை நிறைவு செய்து கொண்டு குறிப்பிட்ட திகதியில் தான் கடமைக்குத் திரும்பிய போதிலும் தனக்கு அரைமாதச் சம்பளத்தை வழங்கி விட்டு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குத் தனது வாழ்வாதாரத்தைச் சவாலுக்குட்படுத்தும் வகையில் தனது சம்பளத்தை நிறுத்தியமை தவறு என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  இது தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகம் முன்னெடுத்துள்ளது.  இதேநேரம், வருமான வரி முன்மொழிவின் போது பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற பல வருமானத்தை மறைத்து வரிஏய்ப்புச் செய்துள்ளார் எனக் கைதடியைச் சேர்ந்த கே. சிவரஞ்சன் என்பவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரி பணிமனையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.(ஏ)   https://newuthayan.com/article/யாழ்_பல்கலை_நிதியாளருக்கு_எதிராக_முறைப்பாடுகள்! 
    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.