Jump to content

வடக்கில் புலம்பெயர் தமிழரின் அழகிய பண்ணைத் தோட்டம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் புலம்பெயர் தமிழரின் அழகிய பண்ணைத் தோட்டம்

IMG-20230227-112217.jpg

IMG-20230227-112236.jpg

வட பகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இயக்கச்சி எனும் இடத்தில் ReeCha எனும் பெரிய பண்ணை ஒன்றை எமது புலம் பெயர் தமிழர் ஒருவர் உருவாக்கியிருக்கிறார்.

150 ஏக்கர் நிலப்பரப்பில் இதை அமைத்திருக்கிறார். இயற்கையாகவே இயற்கையில் நாட்டமுள்ள எனக்கு இந்த பண்ணையை பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடைத்தது.

IMG-20230227-112332.jpg

இங்கே பலவிதமான பயன் தரும் மரங்களும், பலவகையான உயிரினங்களாகிய ஆடு, மாடு,கோழி, பன்றிகள், வாத்துக்கள், முயல்கள் போன்றனவும் வளர்க்கப்படுகின்றன.

வடபகுதியில் உள்ள இந்தப் பண்ணையினை மிகவும் அழகாகவும்,நேர்த்தியாகவும் பராமரிக்கிறார்கள்.
150 ஏக்கரையும் முழுமையாக பயன்படுத்துகிறார்கள்.

உள்ளே பண்ணைக்குரிய அடையாளங்களைத் தவிர சிறுவர்களை உற்சாகப்படுத்தும், மகிழ்வூட்டும் பலவகையான பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்திருக்கின்றன.

Adventure rides, Roller coasters, fun rides,boat rides போன்றன காணப்படுகின்றன. இங்கே குழந்தைகள் மட்டும் அல்ல இறுக்கமான சமூக அமைப்பைக் கொண்ட எமது சமூகத்தில் உள்ள வயது வந்தவர்களும் தங்களை் மறந்து தங்களுக்குள் இருந்த குழந்தைத்தனத்துடன் சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

எம்மவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டும் எனக்கு இது மிகவும் சந்தோஷத்தை அளித்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கோயில்களுக்கு பணம் வழங்கி கோயில்களை ஹோட்டேல் ஆக்குவபவர்கள் மத்தியிலும், மக்களுக்கு பணம் வழங்கி அவர்களை அடிமைகளாகவும், சோம்பேறிகளாகவும் உருவாக்கும் மக்கள் மத்தியில் இந்த பண்ணையின் உரிமையாளர் எனக்கு அதிசயப் பிறவியாக தெரிந்தார். கிட்டத்தட்ட 200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

IMG-20230227-112410.jpg

தாயக நிலத்தை சரியான முறையில் பயன்படுத்துகிறார். இதன்மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். Organic விளைச்சல்களை ஊக்குவிப்பதுடன் Organic பொருட்களை பெறக்கூடிய வாய்ப்பையும் அளிக்கிறார்.மற்றவர்களை சந்தோஷப்டுத்துகிறார் போன்றவற்றிற்காக இவரது முயற்சிக்கு பெரியதொரு பாராட்டை தெரிவித்தே ஆகவேண்டும். இப்படி சமூகமாக முன்னேற்றுபவர்களை ஆதரிப்போம்.உற்சாகப்படுத்துவோம்.

-கலைச்செல்வி

https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/185932/

  • Like 5
  • Thanks 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது சிறுவர்கள் பெரியோர்கள் சுற்றுலா செல்லும் இடம்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். போவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தோழர்........சந்தர்ப்பம் கிடைத்தால் சென்று பார்க்க வேண்டும்.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அங்கு போனால் பல கள உறவுகளை சந்திக்கலாம் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

நன்றி புரட்சி. இம்முறை போகும் போது கட்டாயம் போக வேண்டிய இடம்.

11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வடக்கில் புலம்பெயர் தமிழரின் அழகிய பண்ணைத் தோட்டம்

இங்கு போன பலர் கூடுதலாக பணம் அறவிடுகிறார்கள் என்று முன்னர் யாரோ குறைபட்டுக் கொண்டதாக ஞாபகம்.

யாராவது போய் பார்த்தவர்கள் தங்கள் அனுபவத்தை எழுதினால்த் தான் தெரியும்.

இணைப்புக்கு நன்றி புரட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கு போன பலர் கூடுதலாக பணம் அறவிடுகிறார்கள் என்று முன்னர் யாரோ குறைபட்டுக் கொண்டதாக ஞாபகம்.

யாராவது போய் பார்த்தவர்கள் தங்கள் அனுபவத்தை எழுதினால்த் தான் தெரியும்.

இணைப்புக்கு நன்றி புரட்சி.

லிபரா பாஸ்கரன் தான் இந்த பண்ணைக்கு சொந்தக்காரர் ...ஊரில் இருந்து சுத்திப் பார்க்க போனவர்கள் அங்கு விற்கப்படும் உணவு விலை அதிகம் அத்தோடு தரம் சரியில்லை என்று சொன்னார்கள் ...மற்றப்படி ஒரு நாள் பொழுதை கழிக்க சிறந்ததொரு இடம் என்று சொன்னார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்ணை சிறப்பாக தான் உள்ளது. வாழ்த்துக்கள். ஆனால் தாயக மண்ணின் மன்னர்களை விட்டு விட்டு அந்நிய மன்னர்களான ராஜ ராஜ சோழன், பாண்டியன், கரிகால் சோழன் ஆகியோரின்  படங்கள் எதற்கு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

லிபரா பாஸ்கரன் தான் இந்த பண்ணைக்கு சொந்தக்காரர் ...ஊரில் இருந்து சுத்திப் பார்க்க போனவர்கள் அங்கு விற்கப்படும் உணவு விலை அதிகம் அத்தோடு தரம் சரியில்லை என்று சொன்னார்கள் ...மற்றப்படி ஒரு நாள் பொழுதை கழிக்க சிறந்ததொரு இடம் என்று சொன்னார்கள் 

தகவலுக்கு நன்றி ரதி.

Edited by ஈழப்பிரியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது இப்படியான பண்ணைத் தோட்டங்களை உருவாக்குகிறார்கள்.

கொக்குத்தொடுவாய்( என்றுதான் நினைக்கிறேன்- கொக்கிளாயிற்கு போகும் வழியில்) உள்ள பரராஜசிங்கம் தோட்டம் கூட அப்படியான ஒன்றுதான். 

Reecha போல விளையாட்டு வசதிகள் இல்லை ஆனால் அமைதியையும் பருவ காலங்களுக்கு ஏற்ப தமது இடங்களை விட்டு வேறு இடங்களிற்கு பறந்து வரும் பறவைகள், மயில்கள் என பறவைகளை பார்க்கவும்  விருப்பம் உள்ளவர்கள்,கடற்கரையை விரும்புபவர்கள், இந்த பண்ணைத் தோட்டத்திற்கும போகலாம்..

இதன் ஒரு எல்லை கடல்.. மறுபுறம் தென்னை மரங்கள்.. 

7999-A3-E9-D527-495-F-8-CE3-5-E092584-DE
இது அந்தத் தோட்டத்தின் ஒரு பகுதி.. 

நான் திருகோணமலைக்கு போய்விட்டு திரும்பும் வழியில் இங்கே போக வேண்டியிருந்தது. இருட்டிவிட்டதுடன் யாழ்பாணமும் உடனே திரும்ப வேண்டியிருந்ததால் வேறு விடயங்களை சேகரிக்க முடியவில்லை.. ஆனால் என் போன்ற இயற்கையையும் அதன் சூழல் தொடர்பான இரசனை உள்ளவர்களுக்கு இந்த இடம் கட்டாயம் பிடிக்கும். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிரபா இணைப்பிற்க்கு.நானும் உங்கள் ரகம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய தோட்டத்தை மன்னர்கள் படங்களை வைத்து அழகை கெடுத்து போட்டார்கள்.

இது பார்க்க வேண்டிய அழகிய தோட்டம் 👇

7999-A3-E9-D527-495-F-8-CE3-5-E092584-DE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி பிரபா இணைப்பிற்க்கு. நானும் உங்கள் ரகம் தான். 

52 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது பார்க்க வேண்டிய அழகிய தோட்டம் 👇

7999-A3-E9-D527-495-F-8-CE3-5-E092584-DE

நன்றி!!

இப்பொழுது இதைப்போல செய்வது ஒரு வழமையாகிவிட்டது என நினைக்கிறேன்.

இன்று  WhatsApp groupல் ஒரு videoவைப் போட்டிருந்தார்கள்..பரந்தனில்  ஜேர்மன் தமிழர் ஒருவரைப்பற்றியும் அவர் காணி ஒன்று சம்பந்தமாக நடந்துகொண்ட முறையைப் பற்றியும்.. தகவல்கள் எவ்வளவு தூரம் உண்மையென தெரியாதமையால் இங்கே இணைக்கவில்லை.. ஆனால்  திருமன மண்டபங்கள் கட்டுவது, YouTube videos போல இந்தப் பண்ணைத் தோட்டங்களும் ஒரு trend ஆகியுள்ளதோ தெரியவில்லை.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி!!

இப்பொழுது இதைப்போல செய்வது ஒரு வழமையாகிவிட்டது என நினைக்கிறேன்.

இன்று  WhatsApp groupல் ஒரு videoவைப் போட்டிருந்தார்கள்..பரந்தனில்  ஜேர்மன் தமிழர் ஒருவரைப்பற்றியும் அவர் காணி ஒன்று சம்பந்தமாக நடந்துகொண்ட முறையைப் பற்றியும்.. தகவல்கள் எவ்வளவு தூரம் உண்மையென தெரியாதமையால் இங்கே இணைக்கவில்லை.. ஆனால்  திருமன மண்டபங்கள் கட்டுவது, YouTube videos போல இந்தப் பண்ணைத் தோட்டங்களும் ஒரு trend ஆகியுள்ளதோ தெரியவில்லை.. 

நீங்கள் இணைத்த படத்தில் உள்ள பிரதேசம் மிகவும் அழகாக உள்ளது.  நீங்கள் கூறியதைப்போல சில விடயங்கள் இப்போது trend ஆகியது போல் தோன்றினாலும், ஏதோ ஏட்டிக்கு போட்டியாக மக்களின் வேலை வாய்பபுகளை ஏற்படுத்தும் பண்ணைகள், வியாபாரங்கள், சுற்றுலாதுறை ஆகிய  திட்டங்களை உருவாக்குவது நல்லதே. வரவேற்க வேண்டிய விடயம். 

ஆனால் திருமண மண்டபங்களை கட்டும் போது அவற்றை  திருமணங்களுக்கு மட்டுமே உபயோகிக்கும் வகையில் கட்டுமானங்களாக  கட்டாமல் பல தேவைகளுக்கும் உபயோகிக்க கூடிய வகையில் கட்டலாம். உதாரணம் உள்ளரங்க விளையாட்டுகள் சிறுவர்களுக்கான உடற்பயிற்சி  செய்யும் மண்டபங்கள்.  

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளிலேயே ஒரு மண்டபத்தை பல தேவைகளுக்கு உபயோகிக்க கூடிய வகையில் சிக்கனத்தை கடைப்பிடித்து கட்டப்படும் போது ஏழை நாடான இலங்கையில் திருமணங்கள் மட்டுமே நடத்தக் கூடிய வகையிலான கட்டட அமைப்புடன் தேவையற்ற தூண்களுடன் மண்டபங்கள் அமைப்பது அபத்தம். வீண் பணவிரயம்.  எமது நாடுகள் ஏழை  நாடாக தொடர்ந்து இருப்பதற்கு இவ்வாறான முன்னெடுப்புகளும் காரணம்.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இப்பொழுது இப்படியான பண்ணைத் தோட்டங்களை உருவாக்குகிறார்கள்.

கொக்குத்தொடுவாய்( என்றுதான் நினைக்கிறேன்- கொக்கிளாயிற்கு போகும் வழியில்) உள்ள பரராஜசிங்கம் தோட்டம் கூட அப்படியான ஒன்றுதான். 

Reecha போல விளையாட்டு வசதிகள் இல்லை ஆனால் அமைதியையும் பருவ காலங்களுக்கு ஏற்ப தமது இடங்களை விட்டு வேறு இடங்களிற்கு பறந்து வரும் பறவைகள், மயில்கள் என பறவைகளை பார்க்கவும்  விருப்பம் உள்ளவர்கள்,கடற்கரையை விரும்புபவர்கள், இந்த பண்ணைத் தோட்டத்திற்கும போகலாம்..

இதன் ஒரு எல்லை கடல்.. மறுபுறம் தென்னை மரங்கள்.. 

7999-A3-E9-D527-495-F-8-CE3-5-E092584-DE
இது அந்தத் தோட்டத்தின் ஒரு பகுதி.. 

நான் திருகோணமலைக்கு போய்விட்டு திரும்பும் வழியில் இங்கே போக வேண்டியிருந்தது. இருட்டிவிட்டதுடன் யாழ்பாணமும் உடனே திரும்ப வேண்டியிருந்ததால் வேறு விடயங்களை சேகரிக்க முடியவில்லை.. ஆனால் என் போன்ற இயற்கையையும் அதன் சூழல் தொடர்பான இரசனை உள்ளவர்களுக்கு இந்த இடம் கட்டாயம் பிடிக்கும். 

படமும் தகவல்களும் பல கதைகள் சொல்கின்றன.

கடற்கரையை அண்டி தென்னை வளருமா என்ற கேள்வி இருந்தது.

அதற்கும் விடை கிடைத்துள்ளது.

இது முன்னர் தமிழர் பிரதேசமாக இருந்து இப்போது சிங்கள குடியேற்ற திட்டங்களாகி விட்டதா?

அல்லது இன்னமும் தமிழர் பிரதேசமாகவே உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2023 at 06:59, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தகவல்கள் அடங்கிய இணைப்பிற்கு நன்றி புரட்சியர் 👍🏼 🙏🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

நீங்கள் இணைத்த படத்தில் உள்ள பிரதேசம் மிகவும் அழகாக உள்ளது.  நீங்கள் கூறியதைப்போல சில விடயங்கள் இப்போது trend ஆகியது போல் தோன்றினாலும், ஏதோ ஏட்டிக்கு போட்டியாக மக்களின் வேலை வாய்பபுகளை ஏற்படுத்தும் பண்ணைகள், வியாபாரங்கள், சுற்றுலாதுறை ஆகிய  திட்டங்களை உருவாக்குவது நல்லதே. வரவேற்க வேண்டிய விடயம். 

ஆனால் திருமண மண்டபங்களை கட்டும் போது அவற்றை  திருமணங்களுக்கு மட்டுமே உபயோகிக்கும் வகையில் கட்டுமானங்களாக  கட்டாமல் பல தேவைகளுக்கும் உபயோகிக்க கூடிய வகையில் கட்டலாம். உதாரணம் உள்ளரங்க விளையாட்டுகள் சிறுவர்களுக்கான உடற்பயிற்சி  செய்யும் மண்டபங்கள்.  

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளிலேயே ஒரு மண்டபத்தை பல தேவைகளுக்கு உபயோகிக்க கூடிய வகையில் சிக்கனத்தை கடைப்பிடித்து கட்டப்படும் போது ஏழை நாடான இலங்கையில் திருமணங்கள் மட்டுமே நடத்தக் கூடிய வகையிலான கட்டட அமைப்புடன் தேவையற்ற தூண்களுடன் மண்டபங்கள் அமைப்பது அபத்தம். வீண் பணவிரயம்.  எமது நாடுகள் ஏழை  நாடாக தொடர்ந்து இருப்பதற்கு இவ்வாறான முன்னெடுப்புகளும் காரணம்.  

இப்படியான தோட்டங்கள் சரி, ஆனால் திருமண மண்டபங்களை அதிகளவில் கட்டுவதும் அதுவும் மிக பிரமாண்டமாக கட்டி பின் பூட்டி வைப்பதும் தேவையா என நினைப்பதுண்டு.. 

சில இடங்களில் பார்த்தால் ஒன்றிற்கு இரண்டு திருமண மண்டபங்கள்.. ஆனால் நீங்கள் கூறியது போல விளையாட்டுக்கென வசதி இல்லை.. பாடசாலைகளை, பல்கலைகழகத்தை தவிர

11 hours ago, ஈழப்பிரியன் said:

படமும் தகவல்களும் பல கதைகள் சொல்கின்றன.

கடற்கரையை அண்டி தென்னை வளருமா என்ற கேள்வி இருந்தது.

அதற்கும் விடை கிடைத்துள்ளது.

இது முன்னர் தமிழர் பிரதேசமாக இருந்து இப்போது சிங்கள குடியேற்ற திட்டங்களாகி விட்டதா?

அல்லது இன்னமும் தமிழர் பிரதேசமாகவே உள்ளதா?

நன்றி அங்கிள்…

நான் முல்லைத் தீவு கொக்கிளாய் வீதி முடியும் இடம் வரை போயிருந்தேன். கடற்கரைக்கு போக முடியவில்லை..

அனேகமாக இந்த இடங்களுக்கு வெளியாட்கள் போவதில்லைப் போல ஒரு மாதிரிப் பார்த்தார்கள்.. அதனால் மேற்கொண்டு கிராமத்திற்குள் போகவில்லை.. 

தமிழர் இடங்கள் ஆனால் புத்தரும் மெதுமெதுவாக குடியேறுகிறார். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2023 at 12:44, பிரபா சிதம்பரநாதன் said:

திருமன மண்டபங்கள் கட்டுவது, YouTube videos போல இந்தப் பண்ணைத் தோட்டங்களும் ஒரு trend ஆகியுள்ளதோ தெரியவில்லை.

ஓம் நான் கேள்விபட்டேன் 🙆‍♂️  இந்தியா மாதிரியாம்.
திருமண மண்டபங்களில் நடத்தபடும் திருமணங்கள் தான் சட்டபடி செல்லுபடியாகும் என்று சட்டம் போட்டுவிடலாம். இவ்வளவு பிரமாண்டமான  மண்டபங்களை கட்டியவர்களுக்கு வருமானம் வேண்டும்  தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2023 at 08:57, விளங்க நினைப்பவன் said:

ஓம் நான் கேள்விபட்டேன் 🙆‍♂️  இந்தியா மாதிரியாம்.
திருமண மண்டபங்களில் நடத்தபடும் திருமணங்கள் தான் சட்டபடி செல்லுபடியாகும் என்று சட்டம் போட்டுவிடலாம். இவ்வளவு பிரமாண்டமான  மண்டபங்களை கட்டியவர்களுக்கு வருமானம் வேண்டும்  தானே

நான் இங்கே இருந்து கொண்டு அங்கே இருப்பவர்களில் குறை கண்டுபிடிப்பதாக யாராவது நினைக்கக்கூடும்.. உண்மையில் அங்கே உள்ளவர்களிடம் வலு, திறமை இருந்தும் வீணாகப் போகிறது என்பதுதான் கவலை. இப்பொழுது அங்கே அவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை, சட்ட நடைமுறைகளை வைத்து முயற்சிகளைச் செய்யலாம்.. ஆனால் ஒருவர் ஒரு விடயத்தை தொடங்கினால் அதையே மற்றவர்களும் செய்யத் தொடங்குவது.

கேள்வி அதிகம் இல்லாத இடத்தில் அதிக வழங்கல்கள் இருந்தால் நட்டம் யாருக்கு என்பதைப் பற்றி யோசிக்கவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. 

ஆடம்பர மண்டபங்கள், ஊரின் தன்மைக்கேற்ப இவற்றைக் கட்டலாம்.. அப்படி இல்லை. வங்கியில் கடன் எடுத்து செய்து பின் மாதாந்த தவணைப்பணம் கூட கட்டமுடியாமல் அவதிப்படுவது.. 

வேலைவாய்ப்புகளை வழங்க கூடிய தொழில்களை உருவாக்கலாம்.. இன்றைக்கு சில வேலைகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்துதான் ஆட்கள் வருகிறார்கள்.. ஆனால் அவற்றைப் பற்றி சிந்திப்பதில்லை. 

அதே போல இந்த YouTube, நிறைய தெரியாத ஊர்கள், விடயங்களை அறிய முடிந்தாலும், சில தேவையற்ற விடயங்களையும் வீடியோவாக வெளியிடுகிறார்கள்.. பாதிக்கப்படுவது யாருடைய தனிப்பட்ட சுதந்திரம்? பிறகு ஒன்று நடந்தவுடன் கவலைப்பட்டு என்ன பிரயோசனம்? இப்படிப் பல.. அதிகம் கூறினால் வீண் பிரச்சனை அவ்வளவுதான்..

Link to comment
Share on other sites

யாழ் போன்ற  நகர பகுதிகளில் திருமண மண்டபங்கள் தேவையானவையே.. கிராம பகுதிகளில் மண்டபங்கள் பெரிதாக இல்லை ஆனாலும் இவற்றை பல் தேவைகளிற்கு பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கலாம் . பேட்மின்டன் அல்லது வலைப்பந்து, கைப்பந்து போன்ற உள்ளக அரங்குகளில் விளையாட கூடிய விளையாட்டுகளிற்கான இடமாகவோ பயன்படுத்ததலாம் ஆனால்அவற்றை விளையாடுவதற்க்கானோர் அங்கு பெருமளவில் இல்லை என்பதே உண்மை 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது உலகமெங்கும் ஆர்கானிக் டூரிசம் எனும் விடையம் மிகவும் புகழ்பெறத் தொடங்கியுள்ளது. இதேபோல் சென்ற் அன்ரனீஸ் கார்டுவேயஸ் அதாவது முன்பு எஸ் சிலோன் பைப் செய்த நிறுவனம் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலிச் சந்திக்கு அண்மையாக திண்ணை எனும் பெயரில் விடுதி நடத்துகிறது. அதே நிறுவனம் மருதனார்மடம் சந்தியிலிந்து கோப்பாய் போகும் வீதியில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி இயற்கை வேளாண்மை டூரிசம் நடாத்துகிறார்கள் இனிவரும் காலங்களில் இதுதான் தாயகத்துக்கு தேவை

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.