Jump to content

இனியவள் ரசித்த சினிமா பாடல்கள்


Recommended Posts

படம் : மொழி

பாடல் : கண்ணால் பேசும் பெண்ணே

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம்

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா

கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா

சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி

உனது கோபங்களும் ஏனடி

உனது சில்லென்ற கண் பாரடி பாரடி

எனது சாபங்களை தீரடி

(கண்ணால்)

நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே

குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே

பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே

பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்

மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன்

மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன்

வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி

சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி

O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)

(கண்ணால்)

எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி

கண்ணில் கடல்கொண்ட கண்ணில் புயல்சின்னம் ஏசோ தெரியுதடி

செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்

பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்

காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்

வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்

வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி

இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி

O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)

(கண்ணால்)

Link to comment
Share on other sites

  • Replies 131
  • Created
  • Last Reply

நீங்க இரசிச்ச பாட்டு நல்லா இருக்கு அதை நாங்களும் இரசிக்க போட்டமைக்கு நன்றிகள் :rolleyes:

Link to comment
Share on other sites

படம் : 12B

பாடல் பூவே வாய் பேசும் ..

இசை: Harris Jayaraj

பாடியவர்: Harish Ragavendra , Mahalakshmi

பூவே வாய் பேசும் போது காற்றே ஓடாதே நில்லு

பூவின் பொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு

குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன்

என்னைத் தாண்டிப் போனால் நான் விழுவேன்

மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்

(பூவே...)

பூக்களைத் தொடித்தூடுத்திருப்பேன் அன்பே

புன்னகை புரிந்தால் களித்திருப்பேன் அன்பே

(பூக்களை...)

காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்

கைக்கொட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்

உன் சுவாசப் பாதையில் நான் சுற்றி திரிவேன்

(காதலன்...)

என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கின்றாய் என்ன நான் சொல்வேன்

நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை

நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை

(நீ..)

நேசத்தினால் என்னை கொன்றுவிடு

உன் நெஞ்சுக்குள்ளே என்னை துளி நீரைச் சிந்திடு

என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு

( நேசத்தினால்....)

அடி நூறு காவியம் சொல்லித் தோற்றது இன்று நீ சொன்னது

Link to comment
Share on other sites

எனக்கு என்றும் பிடித்த ஓர் பாடல்!! :P

படம்: இந்திரா

பாடியவர்: ஹரினி??

பாடல் வரிகள்: வைரமுத்து

ஆ... ஆ... ஆ.... ஆ...

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது! யாரும் ரசிக்கவில்லையே!

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!

தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது! யாரும் சுகிக்கவில்லையே!

சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!

காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே!

ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை!

என்றென்றும் வானில்!!

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது! யாரும் ரசிக்கவில்லையே!

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!

அதோ போகின்றது! ஆசை மேகம்! மழையை கேட்டுக் கொள்ளுங்கள்!

இதோ கேட்கின்றது குயிலின் பாடல்! இசையை கேட்டுக்கொள்ளுங்கள்!

இந்த பூமியே பூவனம்! உங்கள் பூக்களை தேடுங்கள்!

இந்த வாழ்கையே சீதனம்! உங்கள் தேவையை தேடுங்கள்!

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது! யாரும் ரசிக்கவில்லையே!

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!

தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது! யாரும் சுகிக்கவில்லையே!

சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!

Link to comment
Share on other sites

கலைஞன் உங்களாள் முடிந்தால் ,

பாடல் வரிகளையும் இனைத்து விடுங்கள்,

பிறறுக்கு இது உதவலாம்!!! :rolleyes:

Link to comment
Share on other sites

திரைப்படம் : ஆழ்வார் (2006)

இசை : ஸ்ரிகாந்த் தேவா

இயக்கம் : செல்லா

பாடியவர்கள் : மதுஷ்ரி

நடிப்பு : அஜித்,அஸின்

பெண்

பிடிக்கும் உனைபிடிக்கும் அழகா உனைப் பிடிக்கும்

ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும் ரொம்பப் பிடிக்கும் (பிடி)

அழகாய் இருப்பாய் எனக்குப் பிடிக்கும்

அழகான சிரிப்பை உலகுக்குப் பிடிக்கும்

அழகாய் அணைப்பாய் எனக்குப் பிடிக்கம்

அழகா உன் தமிழை உலகுக்குப் பிடிக்கும் (பிடி)

காபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்

காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்

ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தைப் பிடிக்கும்

ரேஸ்காரைப் போன்ற உன் வேகத்தைப் பிடிக்கும்

தந்தம் போல் இருக்கும் உன் தோளைப் பிடிக்கும்

தங்கம் போல் மின்னிடம் உன் மார்பைப் பிடிக்கும்

உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்

உன்னோட வார்த்தைகள் எல்லாமே; பிடிக்கும்

சின்னப் பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்

நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்

அன்றாட நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்

அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்

கன்னத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்

காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்

அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்

ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும் (பிடி)

Link to comment
Share on other sites

ஏன் எல்லாரும் உங்களுக்குப்பிடிச்ச பாட்டெண்டுட்டு எனக்கு பிடிச்ச பாட்டை போடுறீங்க.. :rolleyes:

பரவாயில்லை நிறைய போடுங்கோ.. :)

Link to comment
Share on other sites

படம்: AH AAH (BEST FRIEND)

பாடியது: Madhusri, Naresh Iyer

மயிலிறகே! மயிலிறகே! வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே! விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து!

காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்! மயிலிறகாய்! வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே! விழியில் எல்லாம் உன் உலா!

மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை!

மெதுவா...மெதுவா..மெதுவா... இங்கு வைகையில் வைத்திடு கை!

பொதிகை மலையை பிரிந்து என் பார்வையில் நீந்துது தென்றல்!

அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்!

ஓர் இலக்கியம் நம் காதல்!

வான் உள்ள வரை வாழும் பாடல்!

மயிலிறகாய்! மயிலகாய்! வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவாய்! மழை நிலவாய்! விழியில் எல்லாம் உன் உலா.....

உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே!

தமிழா! தமிழா! தமிழா! உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?

அமிர்தாய்! அமிர்தாய்! அமிர்தாய்! கவி ஆக்கிட நீ வருவாய்!

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்!

அந்த வள்ளுவன் தந்தது முப்பால்!

உனக்கும் எனக்கும் விருப்பம் - அந்த மூன்றாம் பால் அல்லவா?

பால் விளக்கங்கள்! நீ கூறு!

ஊர் உறங்கட்டும்! உறைப்பேன் கேளு!

மயிலிறகே! மயிலிறகே! வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே! விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து!

காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல

வருடுகிறாய்... மெல்ல!

வருடுகிறாய் மெல்ல!

வருடுகிறாய்....மெல்ல!

வருடுகிறாய் மெல்ல!

Link to comment
Share on other sites

படம்: ஆறு

பாடியவர்: கோபிகா பூர்ணிமா

நெஞ்சம் எனும் ஊரினிலே!

காதல் எனும் தெருவினிலே!

கனவு எனும் வாசலிலே!

என்னை விட்டுவிட்டு போனாயே!

வாழ்க்கை எனும் வீதியிலே!

மனசு எனும் தேரினிலே!

ஆசை எனும் போதையிலே!

என்னை விட்டுவிட்டு போனாயே!

நான் தனியாய் தனியாய் நடந்தேனே!

சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே!

ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே!

காதலாலே...

நெஞ்சம் எனும் ஊரினிலே!

காதல் எனும் தெருவினிலே!

கனவு எனும் வாசலிலே!

என்னை விட்டுவிட்டு போனாயே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்றும் பிடித்த ஓர் பாடல்!! :P

படம்: இந்திரா

பாடியவர்: ஹரினி??

பாடல் வரிகள்: வைரமுத்து

நன்றி கலைஞன்

இப்பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று. ஹரினியின் முதல்பாடல் இது தான் என நினைக்கின்றேன்.

இதில் அவதானித்த என்னுமொரு விடயம் என்னவென்றால் நிலாக் காய்கின்றது என்ற பாடலில் குழந்தை நட்சத்திரமாக இருக்கின்ற சிறுமி தான் 23ம் புலிக்கேசியில் வடிவேலுக்கு கீழ்வரும் பாடலில் ஜோடியாக நடித்திருப்பவர் போலத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

நன்றி தூயவன்... பாட்டு நல்லா இருக்கு. அதில வடிவேலின்ர ஆட்டம் ரசிக்கத்தக்க வகையில் நல்லா இருக்கு. நீங்கள் சொல்வது சரியாக இருக்ககூடும். இந்திரா படம் 2000 இல் வந்தது என நினைக்கின்றேன். புலிகேசி 2006 இல் தானே வந்தது? ஆறு வருடங்களில் சிறுமி பெரிய ஆளாக வளர்ந்து இருக்கலாம். முகம், சாயல் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கு. சிலது சிறுமியின் அக்காச்சியோ தெரியாது.

Link to comment
Share on other sites

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா

தேவாரப் பாடலா

தீராத ஊடலா

தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா

என்னாளும் கூடலா

பேரின்பம் நெய்யிலா

நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்

வா வா நிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா

தேன் உந்தன் வாக்கிலா

உன் பார்வை தூண்டிலா

நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -

நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா

உன் பார்வை தன்னிலா

தேனூறும் ??

உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா

உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

Link to comment
Share on other sites

படம்: முத்து

பாடியவர்கள்: மனோ, சுஜாதா

பாடல் வரிகள்: வைரமுத்து

ஓ... ஓ... ஓ...

தில்லானா! தில்லானா! தித்திக்கின்ற தேனா?

திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா!

தில்லானா! தில்லானா! தித்திக்கின்ற தேனா?

திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா!

ஓ மஞ்சக் காட்டு மைனா! என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா!

திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா!

ஓ... ஓ... ஓ...

கண்ணு வெச்சதும் நீதானா?

வெடி கண்ணி வெச்சதும் நீதானா?

கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா?

(தில்லானா)

[இஞ்ச - இந்த பீசில மியூசிக் சூப்பரா இருக்கும் :P ]

பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை!

தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை!

கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை!

மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை!

கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா?

அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா?

முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா?

முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா?

தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா?

(தில்லானா)

திக்குத் திக்கு நெஞ்சில்...

திக்குத் திக்கு நெஞ்சில்...

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு!

கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன?

கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே!

கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே!

மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே!

மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே!

சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே!

சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே!

கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே!

(தில்லானா)

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் பேபிக்கு என்ன பாட்டு விருப்பம் என்று தெரிந்து போடுறீங்க மிக்க நன்றி எல்லா பாட்டும் எனக்கு ரொம்ப நல்லா பிடித்து கொண்டது........ :)

Link to comment
Share on other sites

இனியவள்,கலைஞன் இருவருக்கும்

வணக்கங்கள்.

அருமையான பாடல்களை இணைத்த உங்களுக்கு எனது நன்றிகள்.

எனது விருப்பமான பாடலான (ஆசை பட்ட எல்லாத்தையும் வாங்கலாம் அம்மாவை வாங்கமுடியுமா)

பாடலை முடிந்தால் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

பாடல்: உன்னோடு வாழாத வாழ்வென்ன

குரல்: சித்ரா

வரிகள்: வைரமுத்து

படம். அமர்க்களம்.

இசை. பரத்வாஜ்

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்

தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே

நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு

நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு

நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது

நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது

உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்

நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

Link to comment
Share on other sites

படம்: பூவெல்லாம் உன் வாசம்

பாடியவர்: சுவர்ணலதா

திருமண மலர்கள் தருவாயா?

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

மலர்வாய் மலர்வாய் கொடியே!

கனிவாய் கனிவாய் மரமே!

நதியும் கரையும் அருகே!

நானும் அவனும் அருகே!

பிறந்த இடம் புகுந்த இடம்

வேறு இல்லை!

ஞாயிறுக்கும் திங்களுக்கும்

தூரம் இல்லை!

திருமண மலர்கள் தருவாயா?

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

தாலி கொள்ளும் பெண்கள் -

தாயை நீங்கும்போது -

கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு!

மாடி கொண்ட ஊஞ்சல் -

மடிமேல் கொஞ்சும் பூனை -

சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு!

அந்த நிலை இங்கே இல்லை!

அனுப்பி வைக்க வழியே இல்லை!

அழுவதற்கு வாய்ப்பே இல்லை!

அதுதான் தொல்லை!

போனவுடன் கடிதம் போடு!

புதினாவும் கீரையும் சேரு!

புத்திமதி சொல்லும் தாயின்

மொழியே இல்லை!

ஏன் என்றால் சுவர் தான் உண்டு!

தூரம் இல்லை!

இப்படி ஓர் நல்லுறவு

வாய்த்திடுமா?

வீட்டுக்குள் விண்மீன்கள்

காய்த்திடுமா?

திருமண மலர்கள் தருவாயா?

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

கன்னம் கிள்ளும் மாமி!

காதை திருகும் மாமா!

என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு?

மாதம் பத்து செல்ல -

மழலை பெற்றுக்கொள்ள -

அம்மம்மா தாய்வீடு ரெண்டு உண்டு!

பாவாடை அவிழும் வயதில்

கைறு கட்டிவிட்டவன் எவனோ?

தாலி கட்ட வந்தவன் அவனே!

உறவானவன்!

கொழுசுயிடும் ஓசை கேட்டே -

மனசில் உள்ள பாஷை சொல்வாய்!

மழை நின்ற மலரை போல

பதமானவன்!

உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய்

கூடியவன்!

தெய்வங்களும் எங்களைதான்

நேசிக்குமே!

தேவதைகள் வாழ்த்து மடல்

வாசிக்குமே!

திருமண மலர்கள் தருவாயா?

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

மலர்வாய் மலர்வாய் கொடியே!

கனிவாய் கனிவாய் மரமே!

நதியும் கரையும் அருகே!

நானும் அவனும் அருகே!

பிறந்த இடம் புகுந்த இடம்

வேறு இல்லை!

ஞாயிறுக்கும் திங்களுக்கும்

தூரம் இல்லை!

Link to comment
Share on other sites

கல்யாண தேன் நிலா,உன்னோடு வாழாத வாழ்வென்ன ,மயிலிறகே! மயிலிறகே ஆகிய 3 பாடல்கள் எனக்கு பிடித்த பாடல்கள்.இணைத்த கலைஞன்,இனியவளுக்கு நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

படம்: உன்னுடன்

பாடல் : கோபமா என்மேல்...

இசை : தேவா

பாடகர்:ஹரிகரன்

கோபமா என்மேல் கோபமா

பேசம்மா ஒரு மொழி பேசம்மா

என் பாலைவனத்தில் உந்தன்

பார்வையாறு வந்து பாய்ந்திடுமா

உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்

ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா

உள் உரிரே உருகுதம்மா... ஆ..

(கோபமா)

உன் பார்வை வடிகின்ற பாலொளியில் என் வானம் விடியுமடி

உன் பாதம் படிகின்ற சிறு துகளில் என் ஆவி துடிக்குதடி

கோபமா என்மேல் கோபமா

என் மார்பு தீரடி பெண்ணே

அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே

கண்கள் சாமரம் வீசிடுமா இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா

(கோபமா)

நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால் இந்தக் காதல் துயரமில்லை

நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால் இந்த ஏக்கம் சிறிதுமில்லை

கோபமா என் மேல் கோபமா

என் கண்ணில் ஏனடி வந்தாய்

என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்

மெனங்கள் மொழிகளின் வேசமம்மா மறுமொழி இன்று பேசிடம்மா

(கோபமா)

http://www.tamil.tamilsongs.net/page/player.cgi?3437

Link to comment
Share on other sites

படம் : சிந்து பைரவி

இசை : இளையராஜா

வரிகள் : வைரமுத்து

குரல் : சித்ரா

நானொரு சிந்து காவடிச்சிந்து

ராகம் புரியவில்லை

உள்ள சோகம் தெரியவில்லை

தந்தையிருந்தும் தாயுமிருந்தும் சொந்தமெதுவுமில்லை

அதச் சொல்லத்தெரியவில்லை

(நானொரு சிந்து.........)

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ

நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ

விதியோட நான் ஆடும் விளையாட்டைப் பாரு

விளையாத காட்டுக்கு விதை போட்டதாரு

பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு

என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு

கண்டுபிடி........

(நானொரு சிந்து...)

பெண்கன்று பசு தேடிப் பார்க்கின்ற வேளை

அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை

என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே

கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே

தலையெழுத்தென்ன? என் மொதலெழுத்தென்ன

சொல்லுங்களேன்...

(நானொரு சிந்து.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்! மிக நல்ல பாடல்கள். :):)

Link to comment
Share on other sites

திரைப்படம்: காதலன்

பாடகர்: உன்னிகிருஷ்ணன்

இசையமைத்தவர்: ஏ.ஆர். ரஹ்மான்

என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்து விட்டேன்

உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று

உந்தன் காலடி தேடி வந்தேன்

காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று

உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்

எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து

இரு கண்விழி பிதுங்கி நின்றேன்

(என்னவளே.............)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்

இன்று வசப்படவில்லையடி

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா

ஒரு உருண்டையும் உருளுதடி

காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்

ஒரு நிமிஷமும் வருஷமடி

கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்

ஒரு கலக்கமும் தோன்றுதடி

இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி

நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்

உன் வார்த்தையில் உள்ளதடி

(என்னவளே...............)

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னைக்

கும்பிட்டுக் கண்ணடிப்பேன்

கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு

உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்

வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க

உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்

வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்

வடிகட்டி அனுப்பி வைப்பேன்

என் காதலின் தேவையை

காதுக்குள் ஓதி வைப்பேன்

உன் காலடி எழுதிய கோலங்கள்

புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்

(என்னவளே..........)

Link to comment
Share on other sites

படம்: பூவெல்லாம் உன்வாசம்

பெண்: நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

நெஞ்சே! என் நெஞ்சே! செல்லாயோ? அவனோடு?

சென்றால் வரமாட்டாய்! அதுதானே பெரும்பாடு!

தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

ஆஆஆஆ....

பெண்: தூங்காத காற்றே! துணை தேடி ஓடி!

என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா?

ஆண்: நில்லாத காற்று! சொல்லாது தோழி!

நீயாக உந்தன் காதல் சொல்வாயா?

பெண்: உள்ளே எண்ணம் அரும்பானது!

உன்னால் இன்று ருதுவானது!

ஆண்: நான் அதை சோதிக்கும் நாள் வந்தது!

தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

பெண்: நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்!

உன் சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்!

ஆண்: நீ வந்து போனால் என் வீடு எங்கும்!

உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்!

பெண்: கனா வந்தால்! மெய் சொல்கிறாய்!

கண்ணில் கண்டால்! பொய் சொல்கிறாய்!

ஆண்: போ எனும் வார்த்தையால் வாவென்கிறாய்!

தன்னன்னானன!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

நெஞ்சே! என் நெஞ்சே! செல்லாயோ? அவனோடு?

சென்றால் வரமாட்டாய்! அதுதானே பெரும்பாடு!

தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான!

http://ww.smashits.com/player/flash/flashp...m?SongIds=32633

மூலம்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=316553

Link to comment
Share on other sites

படம்: கிச்சா வயது 16

பாடல்:சில நேரம் சில பொழுது

இசை: தீனா

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

இலட்சிய கதவுகளை திறந்துவைப்போம்

இதயத்தின்சோகங்களை இறக்கிவைப்போம்

சூரியன் என்பது கூட சிறுபுள்ளிதான்

சாதிக்க முதல்தகுதி ஒரு தோல்விதான்

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

வானம் தலையில் மோதாது

பூமி நகர்ந்து போகாது

நடுவிலிருக்கும் உந்தன் வாழ்க்கை

தொலைந்து ஒன்றும் போகாது

சோகம் என்றும் முடியாது

கவலை என்றும் அழியாது

இரண்டையும்தான் ஏற்றுக்கொண்டால்

வாழ்க்கை என்றும் தோற்காது

நெஞ்சே ஓ! நெஞ்சே தடையாவும் துரும்பு

தீயாய் நீ ஆனால் மெழுகாகும் இரும்பு

தோல்வி அவையேல்லாம் சில காயத்தழும்பு

ஏறு முன்னேறு உளியோடு திரும்பு

பறவை அதற்கு இறகு சுமையா

தோல்வி ஒரு தடையா

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

உனது கண்கள் அழும்போது

எந்த விரலும் துடைக்காது

விரலைநம்பி நீயும் நின்றால்

வந்த பாரம் தீராது

இன்று வந்த ராஜாக்கள்

நேற்று என்ன செய்தார்கள்

தோல்வி வந்து தீண்டும்போது

தன்னை நம்பி வாழ்ந்தார்கள்

கோடு அது நீள புது கோலம் பிறக்கும்

மேடு அதில் எறும் நீர் வேகமெடுக்கும்

சோகம் அதைவென்றால் ஒரு சக்திகிடைக்கும்

பாதை சில போனால் பல பதைதிறக்கும்

நேற்றை மறப்போம் நாளையொழிப்போம்.

இன்று யெயித்திருப்போம்

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

இலட்சிய கதவுகளை திறந்துவைப்போம்

இதயத்தின்சோகங்களை இறக்கிவைப்போம்

சூரியன் என்பது கூட சிறுபுள்ளிதான்

சாதிக்க முதல்தகுதி ஒரு தோல்விதான்

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது .........

*மிகவும் பிடித்த பாடல்

Link to comment
Share on other sites

படம் :கருத்தம்மா

பாடல் :தென்மேற்குப் பருவக் காற்று

குரல்: உன்னிகிருஷ்ணன், சித்ரா

வரிகள்: வைரமுத்து

தென்மேற்குப் பருவக் காற்று

தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்

தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று

சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்

வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட

செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

(தென்மேற்குப்)

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்

பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்

தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்

பாரட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்

மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ

மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே

மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ

நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

(தென்மேற்குப்)

நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி

நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி

ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன

கல்லும் முள்ளும் இப்போது பூவானதே

வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து

யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

(தென்மேற்குப்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.