Jump to content

"சங்கப் படலை" என்றால் என்ன என்று தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of tree and outdoors
 
சங்கப் படலை.

இலங்கையின் வடமாகாணமான யாழ்ப்பாணத்தில், அநேகமான வீடுகளைச் சுற்றிக் கிணறு,
மரங்கள், பூஞ்செடிகளுடன் கூடிய காணிகள் காணப்படும்.

இவற்றைத் தாண்டியே வீட்டின் தலைவாசலை (Main Entrance) அடையலாம்.
வீதியிலிருந்து வீட்டுக் காணிக்குள் செல்ல உபயோகிக்கும் வாயிலை (Gate) அங்கே "படலை" என்பார்கள்.
வீதிகளில் செல்லும் வழிப்போக்கர்கள் சற்று ஆற, அமர இருந்து விட்டுச் செல்லும் நோக்கில்,
சில வீடுகளின் வாயில்களின் இரு புறமும் திண்ணைகளும், மேலே கூரையும் அமைக்கப்பட்டிருக்கும்.
இது "சங்கப்படலை" அல்லது "சங்கடப்படலை" எனப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் தென்னோலையில் பின்னிய கிடுகுகள், தடிகள் கொண்டமைக்கப்பட்ட
சங்கப் படலையானது காலப் போக்கில் ஓடுகள், சீமெந்து கொண்டு அமைக்கப்பட்டது.

சங்கப் படலையோடு மண் பானையில் தண்ணீரும், அருகே குவளையையும் வைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.
அங்கு நடந்த போரினாலும், பழமையை விட்டுப் புதுமையைத் தேடும் மனோபாவத்தாலும்
இத்தகைய சங்கப்படலைகள் பெரும்பாலும் அழிந்து விட்டன.

இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாகவிருக்கும் சங்கப்படலைகள்
எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகின்றனவோ?

முன்னோர்கள் எவ்வித பலனையும் எதிர்பாராது, மற்றவர்களின் நலன் கருதிச் செய்த
பல விஷயங்களை நாம் தொடராமல் விட்டதோடு, அவர்கள் விட்டுச் சென்றவற்றைக்
கூடப் பாதுகாக்க முடியாதவர்களாக  இருக்கிறோ என்பது அவமானமே !

படம்:
யாழ்ப்பாணத்தில், "அளவெட்டி" என்னும் ஊரிலிருந்து "அம்பனை" என்னும் ஊருக்குப் போகும் வீதியில் சங்கப்படலையுடன் இப்போதும் காட்சியளிக்கும் வீடு.

Sriram Govind

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமை தாங்கியும் பாரம் தூக்கிச் செல்லும் பயணிகளுக்காக வைத்திருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

சுமை தாங்கியும் பாரம் தூக்கிச் செல்லும் பயணிகளுக்காக வைத்திருந்தனர்.

பிரசவத்தில்... இறந்த பெண்ணின், நினைவாக...
சுமைதாங்கியை  அந்த வீட்டுக்காரர் 
அமைத்துக் கொடுக்கும் பழக்கம், தமிழர்களில்  இருந்ததாக 
எங்கோ வாசித்தேன். உண்மை தெரியவில்லை.

தமிழ்நாட்டிலும்... சுமைதாங்கி அமைக்கும் பழக்கம் இருந்ததாம்.

நல்லூருக்குப் போகும் வழியில்... கந்தர்மடம், அரசடி வீதியில்  
ஒரு சுமைதாங்கி இருந்ததை கண்டுள்ளேன். இப்போ... உள்ளதோ தெரியவில்லை.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவிற்கு.. சிலர் எழுதிய கருத்துக்கள், உங்கள் பார்வைக்கு.... 🙂

இப்போது இதே போல தின்னை வடிவமைத்தால் அதை டாஸ்மாக் பாராக மாற்றும் மக்கள்தான் ஏராளம். மாட்டு வண்டியிலோ நடைபயனமாகவோ வெகுதூரம் செல்லும் மக்கள் இல்லாமலே போயினர். அதனால் இளைப்பாறும் வேலையும் இல்லை. மாறாக சாலைக்கு சாலை ஏரிக்கரைகளில் தெருவிளக்கு அடியில் மாலையில் சுடச்சுட பீப் பகோடா பீப் ப்ரைட்ரைஸ் உடன் மது அருந்தும் நம் நாட்டின் உண்மை குடிகள் பெருகிவிட்டனர். இது போல தின்னை இருந்தால் குடித்துவிட்டு வம்பிழுக்க இன்னும் வசதியும் இருக்கும். காலக்கொடுமை. என்ன செய்வது சிலவற்றை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் திண்ணை  வீட்டுக்காரர்கள்.
- Rishikesh Venkatakrishnan -

இப்போது நம் தமிழகத்தில் இதைப்போல் சங்கப்படலை வைத்தால் குடிமகனின் குடிப்படலையாகி விடும்.
- Babu Nmc Vishvakarma -

ஏன் நமது கிராமங்களிலும் , நகரத்தில்உள்ள அந்த காலத்து வீடுகளிலும் இது போல தண்ணைகள் உண்டு. அந்த காலத்தில் இரவு படுக்க போகும் முன் சிலர் வாசலில் வந்து தேசாந்திரியம் போவோர் உண்ண வரலாம் என்று கூவி விட்டு படுக்க போவார்கள் . சில வீடுகளில் இருவர் உண்பதற்று தேவையான உணவை திண்ணையில் வைத்துவிட்டு படுக்கச்செலவர். இது பெரும்பாலும் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்லும் பாதையில் அமைந்திருக்கும் வீடுகளில் உள்ளோர் பழக்கம்.
- Ramani Krishnamurthy-

அவசரமான உலகில் போக்குவரத்து வசதிகள் நிறையவே வந்ததால், தங்கி களைப்பாறி செல்ல வேண்டிய தேவை இல்லாத காரணத்தால் சங்கப்படலை மட்டுமல்ல சுமைதாங்கி கற்கள் கூட காணாமல் போய்விட்டன.
-Raj Ragul-

இப்பொழுது மக்கள் விரைவு பயண வழிமுறைகளை கையாள்வதாலும் நடைபயணம் என்பது வெகுசிலர் மட்டுமே மேற்கொள்வதாலும் இதற்கான தேவை இப்பொழுது இல்லை என்றே கொள்ளலாம் என்பது என் கருத்து.
-Srimurugan Ponampalam-

எங்கள் கிராமங்களில் எங்கள் பாட்டி கடைசி பஸ் வந்து போன பத்து நிமிடங்கள் கழித்து தான் சோற்றில் தண்ணீர் ஊற்றுவார்கள்.
-Narayanan Sridhar-

எங்களுக்கும் புதிதாய் கட்டவிருப்பம் கட்டினால் யார் தங்குவார் தெருவில் மதுபானம் அருந்துவோரும் வாழ்வெட்டுக்குழுவும் தான் தங்கும். அப்போ யார்தான் பாதுகாப்பார்/ யார்தான் கட்டுவார். 😂
-Nadarasha Punchadsaralinkam-

இப்பல்லாம் சங்கப்படலை அமைத்தால் பயலுவ உழைக்க போகாம செல் போனோட வந்து உட்கார்ந்து கொண்டு நம்மள சங்கட படுத்து வானுவோ... 🤣
Basheer Ibrahim

இப்போ உள்ள காலத்தில் இப்படி வசதி செய்து கொடுத்தால் இதையே தண்ணி அடிக்கும் பார் ஆக்கி அங்கேயே மட்டையாகி விடுவார்கள்.... போதாக்குறைக்கு நாய்களும் ஆக்கிரமித்து விடும். 😎
-Jaffer Abdullah- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊரில் இன்றும் சுமைதாங்கி தூண்கள் இருப்பதாக என உறவினர் ஒருவர் கூறினார்.

இந்தப்படம் கூகுளில் இருந்து  எடுக்கப்பட்டது.

 

பழம்பெருமை பேசும் சுமை தாங்கி கல் மேடை.. வயலூர் சாலையில் சென்றால் இதை  பார்க்கலாம்..

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.