• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

இளைஞன்

பொதுவுடமைக் கோட்பாட்டின் தோல்வி

Recommended Posts

இங்கு ஒரு விடயம் ஆழ்ந்து சிந்திக்கப்படவேண்டியது. அதாவது கமூனிசம் தோற்றபின்னரும் மாக்சின் இருப்பிற்காக எழுதிக்கொண்டிருக்கும் ||தோழர்கள்|| போல, பெரியாரிசத்தின் தோல்விக்குப் பின்னும் பெரியாரின் இருப்பினை மனித மனங்களில் உறுதிப்படுத்துவதற்கான தேவை இங்கு ஏன் எழுகின்றது?

"அய்ரோப்பாவில் பெரியார் இயக்கம் - வரலாற்றுத் தேவை" என்ற தலைப்பில் இன்னுமொருவன் எழுதிய கருத்தே மேலே காணப்படுவது. "பொதுவுடமைக் கோட்பாடு தோற்றுவிட்டது" :rolleyes:

கிருபன் அண்ணா எங்கே? :angry:

Share this post


Link to post
Share on other sites

இந்தப் பதிவை இப்போது தான் பார்த்தேன். எங்கோ பதிந்த கருத்து எங்கோ எழுந்து நின்று போரிற்கு அழைக்கின்றது :rolleyes:

சரி உங்கள் பக்க கருத்துக்களை முன் வையுங்கள். அறிந்து கொள்ள முயல்கின்றேன்.

நட்புடன்

இன்னுமொருவன்

Share this post


Link to post
Share on other sites

இந்தப் பதிவை இப்போது தான் பார்த்தேன். எங்கோ பதிந்த கருத்து எங்கோ எழுந்து நின்று போரிற்கு அழைக்கின்றது :)

சரி உங்கள் பக்க கருத்துக்களை முன் வையுங்கள். அறிந்து கொள்ள முயல்கின்றேன்.

நட்புடன்

இன்னுமொருவன்

இல்லை, ஏற்கனவே இராமாயணம், யோனி, இந்துமதம், பெரியார் என்று ஒரு பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் பொதுவுடமையையும் போட்டு எதற்கு குழப்புவான், என்று தான் தனித் தலைப்பிலிட்டு, இன்னொரு போர்முனையைத் இன்னொருவனுக்காக திறந்துவிட்டேன். :)

பொதுவுடமைச் சித்தாந்தம் தோற்றுவிட்டதாக நீங்கள் சொல்வதன் அடிப்படை எனக்கு விளங்கவில்லை. அதனால் தான் இந்தத் தலைப்பு. பொதுவுடமைச் சித்தாந்தை அடிப்படையாக வைத்து வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு நபர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவரவர் புரிதலுக்கேற்ப பொதுவுடமைச் சித்தாந்தை அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள். பொதுவுடமை என்பது ஒரு கோட்பாடு. மார்க்ஸ் ஒரு சித்தாந்தவாதி மட்டுமே. அவர் எந்த இடத்திலும் போராட்ட வடிவங்கள் பற்றி சொல்லவில்லை என்று நினைக்கிறேன் (நான் அறிந்த வரையில்). தோற்றுப்போனதாக நீங்கள் சொல்வது ரஸ்யாவில் முன்னெடுக்கப்பட்ட லெனினிச போராட்ட வடிவம் போன்றவற்றை அடிப்படையாக வைத்தே என்று எண்ணுகிறேன். மார்க்ஸ் வரலாற்றை, சமூகத்தை, அதிலும் குறிப்பாக தான் வாழ்ந்த அந்த சூழலை ஒட்டிய அனுபவங்களைக் கொண்டு ஒரு விஞ்ஞான ரீதியான விளக்கத்தையே முன்வைத்திருக்கிறார். பொதுவுடமைத் தத்துவத்தின் கண்டுபிடிப்பாளர் மார்க்ஸ் அல்ல. இது உங்களுக்கு தெரியாததா என்ன. அதனால் தான் கேட்டேன், எந்த அடிப்படையில் பொதுவுடமைச் சித்தாந்தம் தோற்றுவிட்டது என்று பொருள்பட எழுதினீர்கள் என்று. விளக்கமில்லாமல் தான் கேட்கிறேன். சிலவேளை உங்களிடம் அதற்கான விளக்கங்கள் இருக்கலாம் அதனால் தான்.

எதற்கும் கிருபன் அண்ணா வந்தால் இன்னும் விளக்கம் தருவார். ஆளைக் காணவில்லை :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இளைஞன்,

"கமூனிசம் தோற்றபின்னரும்" என்ற எனது வார்த்தைப் பிரயோகத்தால் பொதுவுடமை அபிமானி போல் தோன்றுகின்ற உங்களை சீண்டியுள்ளேன் என்பது புரிகிறது. எனவே உங்களது கோபம் முற்றிலும் நியாயமானது தான்.

தோல்வி எது வெற்றி எது என்பதை எமது தேவைகளிற்கேற்ப நாங்கள் எவ்வாறும் திரித்துக் கொள்ளலாம். அது வாhத்தை விளையாட்டு. எனவே அந்த விளையாட்டிற்குள் செல்லாது, எனது கருத்தைக் கூறுகின்றேன்.

பிரித்தானியாவின் "புறொஸ்பெக்ற்" என்ற சஞ்சிகை இவ்வாண்டின் முதற் கூறில், "கமூனிசமும் கப்பிரலிசமுமாக இரண்டுமே தோற்று விட்டன. தற்போது உலகம் புதிய மாற்றீடொன்றை நோக்கி நகர்கிறது" என்ற பொருள்பட, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற ரீதியில் ஒரு அறிவிப்பினை மேற்கொண்டிருந்தது. புறெஸ்பெக்ற் சஞ்சிகைக்கு இருக்கின்ற புத்திசீவி விம்பத்தின் காரணமாக, அந்தச் சஞ்சிகையின் இந்தக் கட்டுரையை, தங்களைப் புத்தி சீவிகள் என்று கருதுகின்ற பலரும் உலகளாவிய ரீதியில் எடுத்து விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சஞ்சிகை சொல்லிவிட்டதால் அது மறுக்கப்படமுடியாத உண்மை என்பதல்ல. ஆனால் இந்தக் கட்டுரை சொன்ன செய்திகளாயினும்சரி, இது பற்றி நடக்கின்ற விவாதங்களாயினும்சரி, ஏன் கமூனிசம் வெல்லவில்லை ஏன் அதனால் வெல்ல முடியாது என்ற பக்கத்து வாதங்களாக, என்னைப் போன்ற சாதார மனிதர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் பல கருத்துக்களை அடுக்கிக் கொண்டே போகின்றன.

அது போன்றே நேபாளத்தின் மாவோ இயக்கத் தலைவர் பிரசன்டாவின் நேர்மையான பேட்டியாகட்டும், இரசியாவினதும் சீனாவினதும் நகர்வுகளாகட்டும் கொமூனிசம் தோற்றது என்பதற்கான மேலும் பல காரணங்களை முன் வைக்கின்றன. எனினும், நீங்கள் கூறியது போன்றே வடிவங்களில் சில மாற்றங்கள் இருப்பினும், வெனிசுவேலா போன்ற புது முனைகள் கமூனிச அபிமானிகளிற்கும் உற்சாகம் ஊட்டிக் கொண்டு தான் நிற்கின்றன. இதனால் தான் பல "தோழர்கள்" சாவோசை, சாதரண மனிதர்கள் எட்டமுடியாத ஏதோ ஒரு உயரத்தில் வைத்துக் கவிதைகளும் கட்டுரைகளும் புனைந்த வண்ணம் உள்ளார்கள்.

இந்நிலையில், நீங்கள் சொல்வது போன்றே, கமூனிசம் தோற்று விட்டது என்ற எனது கருத்து மடமைத்தனமானது என்று தான் வைத்துக் கொண்டாலும் கூட, பொருளியல் அல்லது அரசியல் துறையில் பயின்றிராத, அந்தத் துறையில் எவ்வித மேதாவித் தனத்திற்காக சான்றிதழ்களையும் வைத்திராத என் போன்ற சாதாரண மனிதர்களின் மனதில் ஒரு அப்பிராணித் தனமான கேள்வி எழுவது தவிர்க்கப்படமுடியாதது. அதாவது, கமூனிசத்தைக் கரைத்துக் குடித்து, அதன் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் அத்துப்படி ஆக்கி, அந்த மார்க்கம் தான் தனது மக்கள்ளிற்கு நன்மை பயக்கும் (அது கமூனிசத்தின் எந்த மாறுபட்ட வடிவமாக வேண்டுமாயினும் இருக்கட்டும்) என்று நம்பி அதற்காகப் போராட்டம் நடாத்திய பிரசன்டா போன்றவர்கள் கூட, அதுவும் அவர்களது போராட்டம் ஒரு குறிப்பிடும் படியான வெற்றியினைப் பெற்று விட்டுள்ள இந்நிலையில், கமூனிசம் பற்றிய சந்தேகங்களை எழுப்புவதும், கமூனிசம் என்றால் என்னவென்று தாமே முன்னர் விளக்கிய விடயங்களிற்கு நேர் முரணான விடயங்களைக் கூறுவதும், இன்னும் வேறு புத்திசீவிகள் பலர் இந்த முனையில் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருக்கும் (அவை எவை என்று இங்கு நான் அடுக்குவது தேவை அற்றது) கமூனிசத்தின் தோல்வியாகக் கருதப்படுகின்ற வாதங்களும், கமூனிசம் வெற்றி பெற முடியாதது என்ற எண்ணத்தையே என் போன்ற சாதாரண மனிதர்களின் மனங்களிற்குள் கிளப்புகின்றன.

நான் மேலே கூறிய தரவுகள் எல்லாம் ஏதோ தரவு ஆரோ சொன்னார்கள் என்று தான் அமைகின்றன. எனினும், எனது உள்ளார்ந்த கேள்விகளிற்கு அவை திருப்திகரமான பதில்களைத் தருகின்றன. மேலும், எல்லாவற்றிற்கும் மேலால், மனிதனின் அடிப்படைக் குணவியல்பான, தனக்கு உடன்பாடில்லாத ஒரு விடயம் தோற்கடிக்கப்படுவதைக் கண்டு குதூகலிக்கும் சிறுபிள்ளைத் தனமும் எனக்குள் சேர்ந்து தான் கொமூனிசம் தோற்று விட்டது என்ற எண்ணத்தை தற்போதைக்கு நான் கொண்டிருக்க வழி செய்கின்றன.

ஆனால், உங்களைப் போன்று கமூனிசத்தைக் கரைத்துக் குடித்தவர்கள், மேற்படி விடயங்கள் எல்லாம் தவிடுபொடியாகும் வண்ணம் உங்கள் பக்கக் கருத்துக்களை முன்வைத்து, ஏன் கமூனிசம் தோற்கவில்லை, மாறாக அது வீறு கொண்டு வளாந்து வருகிறது என்பது மட்டுமல்லாமல் மனித குலத்திற்கு ஏன் அது அளப்பரிய நன்மை உடையது என்றும் கூறும் பட்சத்தில், அக்கருத்துக்கள் எனக்குத் திருப்திகரமாயிருப்பின், நானும் ஒரு "தோழர்" ஆகி விடுவதில் எனக்கொன்றும் சிரமம் இருக்கப் போவதில்லை :P

Share this post


Link to post
Share on other sites

:) கோபப்பட இல்லை. கொமுனிசம் தோற்றுவிட்டது என்று அநேகர் மேலோட்டமாக சொல்வதை பல இடங்களில் கவனித்திருக்கிறேன். அதனால், அதனைத் பற்றி தனிக் கருத்தாடல் செய்வது ஆக்கபூர்வமாக இருக்குமென்று நினைத்தேன். மற்றும்படி பொதுவுடமை அனுதாபி, திராவிட அனுதாபி, இந்துத்துவ அனுதாபி எல்லாம் இல்லை :lol:

மார்க்ஸ் செய்தது ஒரு ஆய்வு. அவர் ஒரு சமூக விஞ்ஞானி. முதலாளித்துவத்தின் தன்மைகளை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார் தனது ஆய்வின் மூலம். எதிர்வுகூறல்களைச் செய்திருக்கிறார். ஆனால் அவர் எந்தத் தீர்வையும் முன்வைத்ததாகத் தெரியவில்லை. எப்படிப் போராட வேண்டும் என்ற செயல்வடிவத்தையும் காட்டவில்லை. எனது புரிதல் தவறென்றால் தோழர்கள் எனது அறியாமையைப் போக்கவேண்டும். :rolleyes:

என்னிடத்தில் தோன்றுகிற கேள்வி என்னென்றால், "பொதுவுடமை தோற்பது என்றால் என்ன?".

2005 ம் ஆண்டு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை. பிரித்தானியாவின்"பைனான்சியல் ரைம்ஸ்" இதழில் வெளிவந்த தலைப்பை மேற்கோள்காட்டி எழுதப்பட்ட கட்டுரை இது. இப்போதைக்கு இதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். தோற்றுப்போவதில்லை கொமுனிசம் - தோழர்கள் வருவார்கள் :)

21 ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க சிந்தனையாளராக உருவெடுக்கப் போகிறாரா கார்ல் மார்க்ஸ்?

பிரான்ஸ் வீன்

கையில் ஒரு செப்புக் காசு தானும் இல்லாமல் புலம்பெயர்ந்து வந்து இலண்டன் மாநகரில் தஞ்சம் புகுந்த ஒரு அகதியை வசைபாடுவதற்கும், அவர் மீது பழி தூற்றுவதற்கும் இரண்டு முழுப் பக்கங்களைச் செலவிட்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் சென்ற வார இதழ். `அகதி' என்ற சொல்லைக் கேட்டாலே வலதுசாரிகளுக்கு உடம்பெல்லாம் எரியும் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை தான். எனினும், தாக்குதலுக்கு ஆளான இந்த அகதி இருக்கிறாரே, அவர் தற்போது உயிருடன் இல்லாதவர். அதாவது, 1883 இலேயே இறந்துவிட்டவர்.

ஆம்! `மார்க்ஸ் எனும் அரக்கன்' என்பதே மேற்படி கட்டுரையின் தலைப்பு. பி.பி.சி. `ரேடியோ- 4' அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்ததுதான் இந்த வெறி கொண்ட எதிர்வினைக்குக் காரணம்.

"ஸ்டாலின், மாவோ, போல்பாட், முகாபே போன்ற கொலைகாரச் சீடர்களை உருவாக்கிய ஒரு மனிதனை உலகின் தலைசிறந்த தத்துவஞானியாக எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?"- இது அந்தப் பத்திரிகை எழுப்பியிருக்கும் கேள்வி.

இந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் புரிந்து கொள்ளத்தக்கதே. 15 ஆண்டுகளுக்குமுன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்த பின், "மார்க்ஸின் கதை இதோடு முடிந்தது" என்றொரு கருத்து பொதுவாகப் பரவியிருந்தது. "அவர் செத்துவிட்டார், லண்டன் கல்லறையில் எஞ்சியிருக்கும் அவரது உடலின் எச்சங்கள் பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்குக் கீழ் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விட்டன. யாரும் அவரைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை. அவரது சிந்தனைகளை இனி படிக்கவே தேவையில்லை" என்பதே அந்தப் பொதுக் கருத்து.

பனிப்போர் முடிவுக்கு வந்த அந்த காலகட்டத்தில் பிரான்சிஸ் புகுயாமா கூறினார், "நாம் கடந்து சென்று கொண்டிருப்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டமல்ல; நாம் காண்பது வரலாற்றின் முடிவு. மனித குலத்தின் சித்தாந்த வளர்ச்சிக்கே எல்லை இது தான். இத்துடன் முடிந்தது" இது அவரது பிரகடனம்.

வரலாறோ திரும்பியது; ஒரு வன்மத்துடன் விரைவிலேயே திரும்பியது. 1998 ஆகஸ்டில் ரஷ்யாவின் பொருளாதாரம் கற்பூரமாய்க் கரையத் தொடங்கியது. ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகள் தலைகுப்புறக் கவிழ்ந்தன. உலக சந்தை முழுவதும் பீதி பரவத் தொடங்கியது.

"உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டி பத்தாண்டுகள் கூட ஆகவில்லையே! அதற்குள்ளாகவா நாம் நெருக்கடியில் சிக்கிவிட்டோம்?" என்று தனது அதிர்ச்சியை வெளியிட்டது லண்டனின் "ஃபைனான்சியல் டைம்ஸ்" பத்திரிகை. அந்தக் கட்டுரையின் தலைப்பென்ன தெரியுமா? "டாஸ் காபிடலை (மார்க்சின் "மூலதனம்" நூலை) இன்னொரு முறை புரட்டிப் பார்ப்போம்!"

முதலாளித்துவ அமைப்பினால் பெரிதும் ஆதாயம் அடைந்தவர்கள் கூட "நம்முடைய வண்டி தொடர்ந்து ஓடுமா?" என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினார்கள்.

"தானும் தன்னையொத்த முதலாளிகளும் தங்களது மந்தை மனப்பான்மையை கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால், இந்த மந்தையின் காலடியில் எல்லோரும் மிதிபட்டுச் சாகவேண்டியதுதான்" என்று எச்சரிக்கை செய்கிறார் மிகப் பெரிய கோடீஸ்வரனும் ஊகச் சந்தை வணிகனுமான ஜார்ஜ் சோரோஸ்.

"முதலாளித்துவ அமைப்பைப் பற்றி நம்முடைய செவ்வியல் பொருளாதார வல்லுநர்கள் கூறும் சம நிலைக் கோட்பாட்டைக் காட்டிலும் சிறந்த முறையிலான ஆய்வை 150 ஆண்டுகளுக்கு முன்னரே மார்க்ஸும் ஏங்கெல்ஸும் வழங்கியுள்ளனர் என்று நிச்சயமாக என்னால் கூற முடியும்.

"அச்சுறுத்தும் வகையில் கூர்மையான அவர்களது ஊகங்கள் உண்மையாகாமல் போனதற்குக் காரணம் இருக்கிறது. ஜனநாயக நாடுகளில் (கம்யூனிச அபாயத்தைத் தடுக்க) எதிர்நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடுகள்தான் அதற்குக் காரணம். வரலாறு நமக்குப் பாடம் கற்பித்திருக்கிறது. அந்தப் பாடங்களிலிருந்து கூடத் தவறான முடிவுகளுக்கு மட்டுமே நாம் வருகிறோம். இன்னொரு முறை இதே தவறை நாம் செய்யும் அபாயம் இருக்கிறது. இந்த முறை அபாயம் கம்யூனிசத்திடமிருந்து வரவில்லை- சந்தை கடுங்கோட்பாட்டு வாதம் தான் இன்று நமக்கெதிரான அபாயமாகும்".

இவையெல்லாம் உலகின் மிகப் பெரும் ஊகச் சந்தை வணிகனான ஜார்ஜ் சோரோஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கள்.

`நியூயோர்க்கர்' பத்திரிகையின் வணிகத்துறைச் செய்தியாளர் ஜான் காசிடி, ஒரு முதலீட்டு வங்கியின் முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அந்த உரையாடலைப் பற்றி அக்டோபர் 1997 இல் எழுதினார். "வால் தெருவில் (நியூயோர்க்கின் பங்குச் சந்தைத் தெரு) நான் எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறேனோ. அந்த அளவிற்கு மார்க்ஸ் கூறியது சரிதான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்கு மார்க்ஸ் மேற்கொண்ட முறைதான் சரியானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை" என்று சொன்னாராம் அந்த வங்கி முதலாளி.

மார்க்ஸின் நூல்களை இதுவரை படித்திராத செய்தியாளர் காசிடி, ஆவலை அடக்கமாட்டாமல் முதன் முறையாக மார்க்ஸைப் படித்தாராம். "உலகமயமாக்கம், ஏற்றத்தாழ்வுகள், அரசியல் ஊழல், ஏகபோகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கலாசாரத்தின் வீழ்ச்சி, தொடர்ந்து உயிர்த்துடிப்பை இழந்து வரும் நவீன வாழ்க்கையின் தன்மை - இவை பற்றியெல்லாம் ஆணி அடித்தாற்போலப் பேசும் மார்க்சின் எழுத்துக்களைக் கண்டேன். இதே விடயங்களைத்தான் இன்றைய பொருளாதார வல்லுநர்கள் ஏதோ புதிய பிரச்சினைகளாகக் கருதி எதிர்கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில், மார்க்ஸின் கால்தடம் பதிந்த பாதையில்தான் செல்கிறோம் என்பதை அறியாமலேயே அந்தப் பாதையிலும் நடக்கிறார்கள்" இவை மார்க்ஸைப் படித்த பின் நியூயோர்க்கர் இதழில் காசிடி எழுதிய கருத்துக்கள்.

முதலாளி வர்க்கம் இன்னும் சாகவில்லை. மார்க்ஸும்தான் சாகவில்லை. முதலாளித்துவத்தைப் பற்றிய அவரது கணிப்புகளில் சில நிறைவேறாமல் போயிருக்கலாம்; அவர் தவறிழைத்திருக்கலாம்; ஆனால், முதலாளித்துவம் என்ற மிருகத்தின் இயல்பை வெளிக் கொணர்ந்து காட்டிய அவரது ஆய்வின் கூர்மை இருக்கிறதே - அந்த ஊடுருவிச் செல்லும் கூர்மை - அது அவரது கணிப்பில் நேர்ந்த சில பிழைகளையெல்லாம் புறந்தள்ளிக் கடந்து சென்றுவிட்டது.

கம்யூனிஸ்டு அறிக்கையில் அவர் எழுதினார்: "ஓயாது ஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும், சமூக உறவுகள் யாவும் இடையறாது அமைதி கலைதலும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்பும் முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய எல்லா சகாப்தங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றது.

சமீப காலம் வரையிலும் இங்கிலாந்திலும் பலர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் தொடர்ந்தார்கள்: அல்லது ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினார்கள். ஆனால் இன்று? அப்படி யாரையாவது நாம் காட்ட முடியுமா? மார்க்ஸ் கூறியதைப் போல. "திடப் பொருட்கள் எல்லாம் காற்றில் கரைகின்றன" அல்லவா?

உண்மையில் மனிதனுக்கு மட்டுமே உரியவையாக இருக்கும் அனைத்தும் சரக்காக, உயிரற்ற சடப்பொருளாக உறைந்து போவதையும். அந்தச் சரக்கானது. பேராற்றலையும் உயிர்த் துடிப்பையும் பெற்று தன்னை உற்பத்தி செய்த மனிதர்களையே கொடுங்கோன்மைக்கு ஆளாக்குவதையும் தனது தலைசிறந்த படைப்பான மூலதனத்தில் மார்க்ஸ் நிரூபித்துக் காட்டுகிறார்.

நம்முடைய வாழ்க்கையை ஆளும் சக்திகளைப் பற்றியும் அவை நம் வாழ்வில் தோற்றுவிக்கும் நிச்சயமின்மை, அந்நியமாதல், சுரண்டல் போன்றவை பற்றியும் மார்க்ஸ் வழங்கியுள்ள சித்திரிப்பு இன்னும் எதிரொலித்த வண்ணம் தான் இருக்கிறது. அது உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்தே தீரும். பி.பி.சி. வானொலியின் கருத்துக் கணிப்பு காட்டும் உண்மை இதுதான்.

பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்கு அடியில் மார்க்ஸ் புதைக்கப்பட்டு விட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை. இப்பொழுதுதான் தனக்குரிய உண்மையான முக்கியத்துவத்துடன் அவர் எழுந்து வரப் போகிறார். இதனைப் புரிந்து கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ, முடியாமல் வலதுசாரிப் பத்திரிகைகள் என்னதான் ஊளையிட்டாலும், 21 ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க சிந்தனையாளராக உருவெடுக்கப் போகிறார்கள் கார்ல்மார்க்ஸ்.

(கட்டுரையாளர் `கார்ல் மார்க்ஸ்' என்ற வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர். லண்டன் கார்டியனில் வெளியானதே இக் கட்டுரை)

Share this post


Link to post
Share on other sites

கம்னூசியம் தோல்வி என்பது அதை நடைமுறை வாழ்க்கையில் செயற்படுத்த முடியாமல் போனது, அல்லது போக்கடிக்கப்பட்டதைத் தோல்வியாகக் கொள்ளலாமா?

Share this post


Link to post
Share on other sites

பொதுவுடமை என்ற சித்தாந்தம் ரஷ்சியாவின் உடைவின் பின் தோற்றுவிட்டதாகவே பலரும் கருதுகின்றார்கள். ஆனால் சித்தாந்தம் தோற்கவில்லை. பொதுவுடமையை தமது அரசியலாக்கி, திரிபுபடுத்தி, அதிகாரங்களைப் பிரயோகித்த நாடுகளின்/ தலைவர்களின் கொள்கைகளே தோற்றன. உண்மையில் லெலின் இறந்து போன 1924 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்சியாவில் பொதுவுடமை என்ற பெயரில் சர்வாதிகாரமே இருந்தது.

தற்போது முதலாளித்துவமே உலக முன்னேற்றத்திற்கு உதவும் என்பது பலரின் நம்பிக்கையாக இருக்கின்றது. இதனால்தான் சுரண்டலும், ஏற்றத்தாழ்வுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன.

Share this post


Link to post
Share on other sites

கார்ல் மார்க்ஸ் எழுதிய "Das Kapital" அல்லது அதன் தமிழாக்கமான "மூலதனம்" இன்னமும் படிக்கவில்லை. எனினும் பொதுவுடமை பற்றிப் பல கட்டுரைகளைப் படித்தும் பல "புத்திசீவி" களின் பேச்சுக்களைக் கேட்டும், சுரண்டல் சமூகத்தினுள் தோன்றி பலரின் உழைப்பைச் சுரண்டும் "முதலை" நிறுவனத்தில் வேலை செய்தும் பெற்ற அனுபவங்களே பொதுவுடமை மீது ஈர்ப்பு வரக் காரணம். அதற்காக "தோழர்" ஆகும் தகுதிகள் எல்லாம் நமக்குக் கிடைக்காது!

சோசலிச சித்தாந்தம் என்றால் என்ன என்பதைக் கூறாமல் அது தோற்றுவிட்டது என்று சொல்லுவது சரியல்ல. ஏற்றத் தாழ்வுகளும், சுரண்டலும், பால் ரீதியான ஒடுக்குமுறைகளும் இல்லாத ஒரு மானிட சுதந்திரத்தை நேசிக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதும் அதனை உலகில் நிலை நிறுத்துவதுமே சோசலிசத்தின் நோக்கம். இவ்வாறான உயரிய சித்தாந்தம் உண்மையில் தோல்வி அடைந்துவிட்டதா?

Share this post


Link to post
Share on other sites

பொதுவுடமை.. முதலாளித்துவத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் சரியானது.

ஈவெ ராமசாமியின் வாரிசுகள்.. பொதுவுடமைவாதிகள் அல்ல..! ஈவெ ராமசாமி கூட பொதுவுடமைவாதியல்ல..! பொதுவுடமையின் ஈர்ப்புக்கு இலக்கானவர் மட்டுமே..! அதற்காக உழைத்தவரும் அல்ல..!

முதலாளித்துவ ஜனநாயகத்திடம் அரசியல் பிச்சை கேட்டுத் தோற்றதன் வெளிப்பாடே.. ஈவெ ராவின் பொதுவுடமை ஈர்ப்பு..! மற்றும் படி.. அவர்கள் பொதுவுடமைக் கொள்கைவாதியல்ல..! இருக்கவும் முடியாது..! காரணம் அவர் ஒட்டுமொத்தமாக பிராமண சமூகத்தையே கொழுத்த வேண்டும் என்ற கொடூர பாசிசவாதி..! அது பொதுவுடமையாகாது..! அது கிட்லரிசும்..! :D

Share this post


Link to post
Share on other sites

கதைப்பதை விடச் சற்று முதலில் கேட்போம் என்று முடிவு செய்துள்ளேன் :D

Share this post


Link to post
Share on other sites

Karl Heinrich Marx கார்ல்ஸ் கென்றிச் மார்க்ஸ்

Marx,%20Karl.jpg

ஜேர்மனியில் பிறந்த அடிப்படை யூதரான ஈவருன் குடும்பம் கிறீஸ்தவத்தை பின்னர் தழுவியது... சட்டம் மெய்யியல் வரலாறு பாடங்களில் கலாநிதி பட்டம் பெற்றவர்....

மக்களின் வாழ்வியல் விஞ்ஞானதை சொன்ன ஒரு அறிஞர்....

அவர் சொன்னவற்றில் முக்கியமானது வர்க்க வேறு பாடானது பாட்டாளிகளை சர்வாதிகாரத்துக்குள் இட்டு செல்லும் என்பதாகும்.. அவர் சொன்னவை ரஸ்யாவில் கண்கூடு நடந்தது...

Friedrich Engels and Karl Heinrich Marx

fengelsnmarx.jpg

பிரான்ஸ் நாட்டின் தனது கருத்தியலுடன் ஒத்து போன Friedrich Engels ஏங்கல் என்னு ஜேர்மானியர் ஒருவரை நண்பராக்கி கொள்ளகிறார்... அவர்கள் இருவருமே இந்த கம்யூனீச தத்துவங்களின் முதன்மை யானவர்களில் இருவர் ஆகிறார்கள்..

இவர்கள் இருவரினாலும் Das Kapital எனும் நூல் ஜேர்ம்மானீய மொழியில் வேளியிட்டார்கள்... அரச பொருளியல் முதலாளித்துவம் என்பன பற்றிய கட்டுரைகள் அடங்கிய நூல் ஆகும்..

பின்னர் அதே இருவரும் இணைந்து The Poverty of Philosophy எனும்புத்தகதையும்... வெளியிட்டார்கள்....

அதன் பின்னர் தான் கம்யூனிசம் பற்றிய தெளிவை கொடுத்த The Communist Manifesto எனும் புத்தகத்தை (கம்யூனீச விஞ்ஞாபனம் ) ஜேர்மன் மொழியில் வெளியீட்டத்தோடு கம்யூனிச லீக் ஒண்றையும் ஆரம்பித்து வைத்தார்கள்.... அந்த புத்தகத்திலேயே கம்யூனிச்ச லீக்கின் நோக்கம் விபரிக்க பட்டது, அதோடு. பாட்டாளி மக்கள் எழுச்சியை வேண்டி சமவுடைமையின் நோக்கினையும் தெளிவு படுத்தினார்கள்...

Share this post


Link to post
Share on other sites

இதென்ன கொடுமையா இருக்கு.

பெரியாரும் வேண்டாம், பெரியாழ்வாரும் வேண்டாம், ஆரியமும் வேண்டாம், திராவிடமும் வேண்டாம் என்று தான் பொதுவுடமை என்கிற இந்தக் களமுனையைத் திறந்தேன். "பெரியார்" என்ற சொல்லைப் பார்த்தாலே பம்பரமாய்ச் சுழல்கிற கடமையுணர்வை மதிக்கத்தான் வேண்டும். ஆனால், வேண்டாமையா, இதற்குள்ளும் ஈ.வே. ராமசாமி. (அழுகிற smiley வரவேண்டும் இதிலே).

பெரியாரை இங்கே அழைத்து வந்ததால் இன்னொரு விடயத்தை சொல்லித்தான் ஆகவேண்டும். அடிக்கடி "பெரியார் குளிப்பதற்கு பஞ்சிப் பட்டார்" என்பது ஒரு மிகப்பெரும் வாதமாகக் காவித்திரியப்படுகிறது கருத்துக்களத்தில். இந்த இடத்தில் "கார்ல் மார்க்ஸ்" பற்றியும் சில சொல்வது பொருத்தமாக இருக்கும்.

கார்ல் மார்க்ஸ் தன்னைவிட வயதில் முதிர்ந்த பெண்ணை (4 வயது) காதலித்துக் கைப்பிடித்தார். மனைவி, பிள்ளைகள் மீது அக்கறையில்லாமலே பெரும்பாலும் இருந்தார். அவருக்கு 7 பிள்ளைகள். அவர்களில் அநேகர் சிறு வயதிலேயே இறந்துவிட்டார்கள். கார்ல் மார்க்சின் மனைவியின் பெயர் ஜென்னி. ஜென்னி பற்றியும் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஜென்னி போன்ற (நான் படித்த அளவில்) அற்புதமான துணை கார்ல் மார்க்சுக்கு வாய்திருக்காவிட்டால் பொதுவுடமை என்கிற சொல்லுக்கான மதிப்பு இன்று எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. ஜென்னி இல்லா விட்டால் கார்ல் மார்க்சே இல்லையென்று சொல்லலாம். காதல் என்றால் ரோமியோ யூலியட் போன்ற உதாரணங்களை காட்டுபவர்கள், கார்ல் மார்க்ஸ் & ஜென்னி ஆகியோரை உதாரணமாகக் காட்டினால் பெருமிதமடையக்கூடியதாய் காதல் இருக்கும். இறுதிவரை எந்தத் துன்பமும், பிரிவுகளும், இழப்புகளும், ஏழ்மையும் சூழ்ந்தபோதும் உளத்தாலும் உன்னதமான வாழ்வாலும் இணைந்தே இருந்தார்கள். ஜென்னி இறந்து 2 வருடங்களின் பின்னர் கார்ல் மார்க்சும் 1883ம் ஆண்டு இறந்துவிட்டார். ஜென்னி இன்னும் சில காலாம் வாழ்ந்திருந்தால் நிச்சயமாக கார்ல் மார்க்சும் அதிக காலம் வாழ்ந்திருப்பார். :D காதல் செய்தல் என்பது இதுதான் என்பதை கார்ல் மார்க்ஸ் & ஜென்னியின் வாழ்வில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அதிகம் புகைப்பிடிப்பார். தனது அறையை தூசுபடிந்தபடியே விட்டிருப்பார். சுத்தம் செய்வதில்லை. புத்தகங்களை ஒழுங்காக அடிக்கி வைப்பதில்லை. குறிப்புகளை நேர்த்தியாக அடுக்குி வைப்பதில்லை. (குளிப்பதும் இல்லை அல்லது குறைவு என்ற தகவலும் எங்கோ வாசித்த ஞாபகம் :lol: யாராவது உறுதிப்படுத்தவும்). பொதுநலத்துக்காக, சமூகத்துக்காக உழைப்பவர்கள், தன்னலமற்று இருப்பவர்களின் இயல்பு இப்படித்தானோ? சே குவேராவையும் இந்த இடத்தில் நினைவு கூறலாம். அவரும் அதிகம் சுருட்டுப் பிடிப்பார். சுத்தமான உடைகளை அணிவதில்லை. தாடியைக் கூட ஒழுங்கா வழிப்பதில்லை.

சரி சரி. எங்கோ தொடங்கி எங்கோ வந்துவிட்டேன். தயா தகவலுக்கு நன்றி. காதலித்தவர்கள் பிரிந்துவிட்டார்கள் அல்லது தோற்றுவிட்டார்கள் என்றால் காதல் தோற்றது என்று பொருளா? (எங்கோ திரைப்படத்தில் கேட்ட வசனம்). அதுபோல் தான் பொதுவுடமைக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து போாராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தோல்வி கண்டார்கள் என்பதற்காக பொதுவுடமைக் கோட்டபாடே தோற்றுவிட்டது என்பது ஏற்புடையதல்ல. :D

Share this post


Link to post
Share on other sites

கோயில் என்றதும்.. ஓடி வரும் ஈ வெ ராமசாமி.. ரஷ்சியா போய் பொதுவுடமை.. அறிவு பெற்றவராதலால்.. இங்கு வருகிறார் போல. :D

உ + ம்: http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry341505

சோக்கிரட்டிஸின் சிலை முன்னோ.. பெரியார் கும்பிட்டாராம், சோக்கிரட்டிஸ் ஆண்டவா.. காட்டு மிராண்டித் தமிழர்களுக்கு பகுத்தறிவையும் சுயமரியாதையும்.. பொதுவுடமையையும்.. புகுத்தி.. நிர்வாணமாக ஆடவை என்று..! அதன் பலாபலங்கள் பல பக்கங்களில் விரியத்தான் செய்கிறது..! :D:lol:

Share this post


Link to post
Share on other sites

அது சரி பொதுவுடமைக் கோட்பாடு தோக்கவில்லை என்று விஞ்ஞானரீதியில் நிறுவ முடியுமா? அப்படி நிறுவ முடியாதவரை தோற்றதாகத்தான் கொள்ள வேண்டும்.

தன்னுடை சுகாதாரத்திலேயே விளக்கமில்லாது சுருட்டுபிடிச்சவர் சுத்தமா இல்லாதாவர் பிறகு எப்படி ஊருக்கு போதித்த பொதுவுடமையில எப்படி நல்ல விடையங்களைச் சொல்லியிருப்பார்?

Share this post


Link to post
Share on other sites

அது சரி பொதுவுடமைக் கோட்பாடு தோக்கவில்லை என்று விஞ்ஞானரீதியில் நிறுவ முடியுமா? அப்படி நிறுவ முடியாதவரை தோற்றதாகத்தான் கொள்ள வேண்டும்.

தன்னுடை சுகாதாரத்திலேயே விளக்கமில்லாது சுருட்டுபிடிச்சவர் சுத்தமா இல்லாதாவர் பிறகு எப்படி ஊருக்கு போதித்த பொதுவுடமையில எப்படி நல்ல விடையங்களைச் சொல்லியிருப்பார்?

நிச்சயமாக விஞ்ஞான ரீதியில் நிறுவ வேண்டும். கோட்பாடுகளை விதிகளாக்க வேண்டும் இன்றேல் தலைவிதி என்று தலை முழுக வேண்டும். அதற்கு யாழ் களத்தில் உள்ள பன்னாடைகள்.. பனர் பிரச்சாரம் செய்ய மக்கள் ஒத்துழைக்க வேண்டும். எப்படி பனர் பிரச்சாரம் செய்து லண்டன் தமிழ் கடைகளில் சிறீலங்கா பொருட்களை இல்லாத அளவுக்கு குவிக்க வைச்சமோ... அதைத் இதிலும் முயன்று பார்க்கனும்..! :):D:lol::D

Share this post


Link to post
Share on other sites

விடயங்களை அலச முன்னர் சில கலைச்சொற்களுக்கு விளக்கம் வேண்டியுள்ளது.

சோசலிசம்

கொம்முயூனிசம்

மார்க்கசியம்

லெனினிசம்

ஸ்ராலினிசம்

மாவோயிசம்

ட்ரொக்ஸியிசம்

பாசிசம்

பொதுவுடமை

முதலாளித்துவம்

ஏகாதிபத்தியம்

சர்வாதிகாரம்

இப்படிப் பல வார்த்தைகள் வந்து தெறிக்கின்றன. வார்த்தைகளின் அர்த்தம் தெரியாவிடில் குழப்பங்களே மிஞ்சும்.

Share this post


Link to post
Share on other sites

மு. மயூரன் எழுதிய பின்னூட்டம் ஒன்றில் மார்க்சியத்தினை அழகாக விபரித்துள்ளார்.

----------------

மார்க்சிய தத்த்துவத்தின் அடிப்படை" இயங்கியல் பொருள்முதல்வாதம்" என்கிற தத்துவத்திலிருந்து தொடங்குகிறது.

எளிமையாக சொன்னால், இந்த உலகில் எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. எதுவும் நிலையக நிற்பதில்லை. மற்றது, எல்லாவற்றிலும் முதன்மையானது, பொருளே, பௌதீக சூழலே, மனம், ஆன்மா, கடவுள் போன்றவை அல்ல. அவை எல்லாம் பொருள் வடிவான மூளையிலிருந்து உதித்தவை. புறக்காரணிகளே சிந்தனையை தீர்மானிக்கின்றன. புறக்காரணிகளை மாற்றுவதன்மூலம் சிந்திக்கும் போக்கை மாற்றலாம்.

இது மாறாநிலைக் கொள்கைகளையும், ஆன்மா, கடவுள் போன்ற கருத்துக்களை கொண்ட கருத்து முதல்வாதிகள், மதவாதிகள், கடவுள் நம்பிக்கையாளர்கள் போன்றவர்களுக்கு எதிரான கருத்து.

மார்க்சியத்தின் அடுத்த முக்கிய கோட்பாடு "வரலாற்று பொருள்முதல்வாதம்".

அதாவது, வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் உலகில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. அந்த முரண்பாடுகள் தம்மிடையே அடித்துக்கொள்கின்றன. முரண்பாடுகள் உச்ச நிலையை அடையும் போது, மூன்றாவது சக்தியாக, புதிய உலக அமைப்பு தோற்றம் பெறுகிறது.

உதாரணமாக, முன்னர் ஆண்டான் - அடிமை சமுதாயம் இருந்தது. ஆண்டானும் அடிமையும் அடித்துக்கொண்டார்கள். தொடர்ந்து அடிமையாகவே இருக்க முடியாமல் அடிமைகள் எல்லாம் கிளர்ச்சி செய்தபோது இந்த சமுதாய அமைப்பு உடைந்துபோய் இதன் விளைவாக புதிய சமுதாய அமைப்பான "நிலப்பிரபுத்துவ" சமுதாய அமைப்பு தோன்றியது.

பின்னர் பண்ணை அடிமைகளும், நிலப்பிரபுக்களும் அடித்துக்கொண்டு, மேலும் முற்போக்கான புதிய சமுதாய அமைப்பான முதலாளித்துவம் கைத்தொழில் வளர்ச்சியை கைகோர்த்துக்கொண்டு உருவானது. அந்த அமைப்பு இன்றும் இருக்கிறது.

ஆனால் இன்று இந்த முதலாளிய அமைப்பினுள்ளும் தெளிவான முரண்பாடு ஏற்படுகிறது. அதுதான் முதலாளி- தொழிலாளி.

இன்னும் தெளிவாக சொன்னால், மூலதனம் தேங்கிக்கிடக்கும் ஒரு வர்க்கம், இந்த மூலதன வர்க்கத்தால் சுரண்டப்படும் இன்னொரு வர்க்கம்.

மூலதனம் தேங்கிக்கிடக்கும் வர்க்கம் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. ஆனால் அவர்கள் அதிகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு மற்ற வர்க்கத்தை தொடர்ந்தும் சுரண்டி சுகபோகம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மூலதனம் எப்படி எல்லாம் இந்த சுரண்டலில் பங்கெடுக்கிறது, மூலதனம் என்றால் என்ன என்பது போன்ற விடயங்கள் பற்றிய மார்க்சின் ஆய்வு நூலே "மூலதனம்" (இதனை கவிஞர் தாமரையின் துணைவர் தியாகு தமிழில் மொழி பெயர்த்தார்).

இந்த சுரண்டுவோர்- சுரண்டப்படுவோர் முரண்பாடு தற்போது கொதித்துக்கொண்டுவருகிறது.

மூலதனம் மேற்கை நோக்கி குவிகிறது. மூன்றாம் உலகம் மேலும் மேலும் வறுமைக்குள்ளாகி, அடிமட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. மேற்குலகம் புதிய சுரண்டல் வடிவமான ஏகாதிபத்தியத்தை கொண்டுவந்து அதனை தக்கவைப்பதற்காக "உலகமயமாக்கல்" என்ற கருத்தியலை முன்வைக்கிறது. இதன்மூலம் சுரண்டுவதற்கு தடையாக இருக்கும் "நாடுகளின் இறையாண்மை" "அரசியல் யாப்பு" போன்றவற்றை எல்லாம் உடைத்து திறந்த நிலையில் சுரண்டல் செய்ய வசதியாக நாட்டு வேலிகளை உடைத்து "உலக மயமாக்கல்" இற்காக பாடுபடுகிறது. இதற்காக மேற்குலகம், முதாலாம் உலக நாடுகள் எமது அரசியல் வாதிகளை பயமுறுத்தி, காசுக்கு வாங்கி பயன்படுத்துகிறது. இந்தியாவில் என்ன தொழில் செய்யவேண்டும், என்ன படிப்பிக்க வேண்டும் என்பதை எல்லாம் அமெரிக்கா தான் திர்மானிக்கிறது, நமது மன்மோகன் சிங்கும், மகிந்த ராஜபக்சவும் வாயையும் அதையும் பொத்திக்கொண்டும் கையெழுத்து போட்டுவிட்டு வருவர்கள்.

இப்படியாக முரண்பாடு உச்சத்தை அடையும்போது இதற்கெதிராக சுரண்டப்படுவோர் வேறு வழியில்லாமல், தமது வாழ்வையும் இருப்பையும் காப்பாற்றிக்கொள்ள போராடுவது ஒன்றே வழி என்ற நிலையில், போராடாவிட்டால் செத்துப்போய்விடுவோம் என்ற நிலையில் ஆயுதம் தூக்கி போராட ஆரம்பிக்கிறார்கள். சட்டத்தை தூக்கி எறிந்து கிளர்ச்சிகளை நடத்துகிறர்கள்.

இன்று உலகில் நடக்கும் மக்கள் போராட்டங்களை எல்லாம் பார்த்தீர்களானால், அவை எல்லாம் ஏதோ ஒரு கட்டத்தில் சுரண்டலுக்கெதிரானதாக, ஏகாதிபத்தியத்தின், அதன் கைக்கூலிகளின் அதிகாரத்துக்கு எதிரானதாகவே இருக்கும்.

இவ்வாறான போராட்டங்கள் ஒட்டுமொத்தமாக புரட்சியாக மாறி இந்த முதலாளிய சமுதாய அமைப்பை உடைத்து புதிய, இப்போதிருப்பதைவிட மேலான சமுதாய அமைப்பான சோசலிசத்துக்கு கொண்டுசெல்லும் என்று மார்க்ஸ் எதிர்வு கூறுகிறார்.

பின்னர் மார்க்சியம் , சோசலிச சமுதாயம் என்றால் என்ன, அது ஏன் மேம்பாடானது, அதிலிருக்கும் முரண்பாடுகள் என்ன, அதை எப்படி சமாளிப்பது என்பது பற்றி எல்லாம் பேசுகிறது. கடைசியாக சோசலிச சமுதாய அமைப்பு கம்யூனிச சமுதய அமைப்பாக எப்படி மாற்றம் பெறும் என்றெல்லாம் பேசுகிறது.

மார்க்சின் கருத்துப்படி இன்றைய சுரண்டலுக்கும், முரண்பாடுகளுக்கும் தனி ஒருவர் சொத்து சேர்க்கக்கூடியதாக இருத்தல், அல்லது தனிச்சொத்துடைமை தான் காரணம்.

எனவே இதனை ஒழித்து "பொது உடைமை நிலை" தோற்றுவிக்கப்பட வேண்டும்.

இதனை சும்மா உருவாக்கலாமா?

நாம் தனிச்சொத்தை அழித்துக்கொண்டிருக்கும் காட்சியை அந்த அமைப்பின் மூலம் சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருக்கும் முதலாளிகள் தொலைக்காட்சியில் பார்த்த்து உருளைக்கிழங்குப்பொரியலை கொறித்து மகிழ்ந்துகொண்டிருப்பார்களா?

இல்லை.

அதிகாரம் அவர்களது கையில் தான் இருக்கிறது. ராணுவம், பொலிஸ் அதிகாரத்தின் கையில் தான் இருக்கிறது. எனவே அவற்றை எல்லாம் எமக்கெதிராக ஏவி விடுவார்கள்.

சோசலிசத்தை உருவாக்குதல் என்பது பெரும் இராணுவ போராட்டமாகத்தான் இருக்கும்.

உப்பு சத்தியாக்கிரகம் பண்ணி எல்லாம் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள முடியாது. . (நினைவு படுத்திப்பார்க்க வேண்டிய பாட்டு, "தனியுடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா. தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா தம்பி பழைய பொய்யடா)

எனவே சுரண்டப்படும் வர்க்கம், போர்க்குணமுள்ள வர்க்கம், இழப்பதற்கு எதுவுமில்லாத வர்க்கம் அதுதான் பாட்டாளி வர்க்கம். (தொழிலாளிகளும் அடிமஅட்ட விவசாயிகளும்) ஆயுதத்தை கையிலெடுத்து முதலாளித்துவ அரசுகளுக்கெதிராக, சொந்த நாட்டின் இராணுவத்திற்கெதிராக போரிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி, பொதுவுடைமை ஆட்சியை கொண்டுவரும். இதுதான் சோசலிச புரட்சி.

ஆக மார்க்சியத்தின் அடிப்படை இதுதான்.

Share this post


Link to post
Share on other sites

பொதுவுடமை என்ற சித்தாந்தம் ரஷ்சியாவின் உடைவின் பின் தோற்றுவிட்டதாகவே பலரும் கருதுகின்றார்கள். ஆனால் சித்தாந்தம் தோற்கவில்லை. பொதுவுடமையை தமது அரசியலாக்கி, திரிபுபடுத்தி, அதிகாரங்களைப் பிரயோகித்த நாடுகளின்/ தலைவர்களின் கொள்கைகளே தோற்றன. உண்மையில் லெலின் இறந்து போன 1924 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்சியாவில் பொதுவுடமை என்ற பெயரில் சர்வாதிகாரமே இருந்தது.

தற்போது முதலாளித்துவமே உலக முன்னேற்றத்திற்கு உதவும் என்பது பலரின் நம்பிக்கையாக இருக்கின்றது. இதனால்தான் சுரண்டலும், ஏற்றத்தாழ்வுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன.

பொதுவுடமை என்பது தோற்கவில்லை. அதற்கு ஏற்பட்ட இடைச்செருகல்களும், சர்வதிகாரக் கொள்கைகளும் தான் அதை இல்லாமல் செய்து விட்டதே என்று வாதிடும் தாங்கள், இந்து மதத்தில் அதன் கட்டுப்பாடற்ற நிலையில் ஏற்பட்ட இடைச்செருகல்களும், மூட நம்பிக்கைகளும் தான் அதை சிறிய மாற்றத்திற்கு உற்பட வைத்தது என்பதை ஏன் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. இது முரண்பாடக உங்களுக்குத் தோன்றவில்லையா?

பொதுவுடமை நிகழ்காலத்தில் சாதிக்க முடியாத அளவு, நடமுறைக்கு ஒத்துவராத அளவு தோற்று விட்டது என்பதைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளும் சமயத்தில் தான் இந்து மதம் தொடர்பான உங்களின் விவாதம் சரியோ, பிழையோ நியாயமாக அமையும்.

Share this post


Link to post
Share on other sites

பொதுவுடமைச் சித்தாந்தம் மனித மேம்பாட்டினை முன்வைத்து உருவாக்கப்பட்டது. எல்லாமே மாற்றத்திற்கு உள்ளாவது, எதுவும் நிலையற்றது என்ற இயங்கியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் கடவுள் நம்பிக்கையைக் கொண்டுள்ள கருத்து முதல்வாதிகள் மாற்றங்களை அனுமதிக்க விரும்வுவதில்லை. குறிப்பாக இந்து சமயம் சமத்துவமற்ற சமூகத் தட்டுக்களை நிலைநிறுத்துகின்றது. இதை நிறுவ வேண்டியதில்லை. ஏனெனில் இந்தியாவினதும் இலங்கையினதும் வரலாறுகளே சாட்சிகளாக உள்ளன. இப்படியான சமத்துவமற்ற சித்தாந்தம் இந்து மதத்தின் இடைச் செருகல் என்பது சமாளிப்பன்றி வேறொன்றுமல்ல.

மாற்றங்களை உள்வாங்கி பொதுவுடமையை இப்போதும் சீனா கொண்டுள்ளது. எனவே நடைமுறைக்கு ஒத்து வராது என்று எப்படிச் சொல்லமுடியும்? மேலும் உலகில் நடைபெறும் போராட்டங்கள் எல்லாம் (நமது தமிழீழப் போராட்டம் உட்பட) சுரண்டலையும் ஏற்றத்தாழ்வையும் இல்லாமல் செய்ய ஆரம்பிக்கப் பட்டவைதான். பொதுவுடமை தோற்றுவிட்டது என்று ஒப்புக்கொள்ளுவது நமது போராட்டம் வீணானது என்று சொல்லுவதற்கு ஒப்பானதாகும். இதைத்தான் "சர்வதேச நாடுகள்" எமக்குச் சொல்லுகின்றன.

Share this post


Link to post
Share on other sites

மு. மயூரன் எழுதிய பின்னூட்டம் ஒன்றில் மார்க்சியத்தினை அழகாக விபரித்துள்ளார்.

----------------

"உலக மயமாக்கல்" இற்காக பாடுபடுகிறது. இதற்காக மேற்குலகம், முதாலாம் உலக நாடுகள் எமது அரசியல் வாதிகளை பயமுறுத்தி, காசுக்கு வாங்கி பயன்படுத்துகிறது. இந்தியாவில் என்ன தொழில் செய்யவேண்டும், என்ன படிப்பிக்க வேண்டும் என்பதை எல்லாம் அமெரிக்கா தான் திர்மானிக்கிறது, நமது மன்மோகன் சிங்கும், மகிந்த ராஜபக்சவும் வாயையும் அதையும் பொத்திக்கொண்டும் கையெழுத்து போட்டுவிட்டு வருவர்கள்.

இப்படியாக முரண்பாடு உச்சத்தை அடையும்போது இதற்கெதிராக சுரண்டப்படுவோர் வேறு வழியில்லாமல், தமது வாழ்வையும் இருப்பையும் காப்பாற்றிக்கொள்ள போராடுவது ஒன்றே வழி என்ற நிலையில், போராடாவிட்டால் செத்துப்போய்விடுவோம் என்ற நிலையில் ஆயுதம் தூக்கி போராட ஆரம்பிக்கிறார்கள். சட்டத்தை தூக்கி எறிந்து கிளர்ச்சிகளை நடத்துகிறர்கள்.

கிருபன்,

இணைப்பிற்கு நன்றி. தொடர்ந்து பரந்து பட்ட இணைப்புக்களை இணைப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

இப்போதைக்கு ஒரு கேள்வி, மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள மயூரனின் கூற்றான உலகமயமாக்கல் விடயத்தை முதலாளித்துவத்தின் மீது கோபம் கொண்ட ஒரு மக்களாக இருந்து வாசிக்கும் எவரிற்கும் அது நியாமானதாகவே படுகின்றது என்றபோதும், இது மிகப் பழைய ஒரு வாதம் என்ற அடிப்படையிலும், இவ்வாதம் பற்றி பரந்த வாதப் பிரதிவாதங்கள் நடந்து வந்துள்ளன வருகின்றன என்ற அடிப்படையிலும், நான் படித்த பார்த்த சில வாதங்களில் பல "புத்திசீவிகள்" (இது சரியான சொல்லா?) உலகமயமாக்கல் என்ற அந்தச் சிந்தனைக்கு வித்திட்டவரே மார்க்ஸ் தான் என்று திருப்திகரமாக வாதிடுகிறார்கள்.

எப்படியென்றால், சகல எல்லைகளையும் கடந்து பாட்டாளிகளின் ஒன்றிணைவிற்காக உலகே செவியுற்ற வகையில் குரலெழுப்பிய முதலாவது மனிதர் கார்ல் மார்க்ஸ் என்பது அவர்களின் வாதம். அதாவது பாட்டாளி என்ற வரைவிலக்கணத்திற்குள் வரக்கூடிய அறுதிப் பெரும்பான்மையானோர்க்கு பல ஒற்றுமைகள் உள்ளன என்ற போதிலும்,

அவரவர் புவியியல் வாழ்விடங்களிற்கும் சமூகங்களிற்கும் ஏற்ப பல வேறு பாடுகளும் உள்ளன என்பதும் மறுக்க முடியாதது. மக்களின் மேற்படி தனித்துவங்கள் அனைத்தையும், தனது பார்வையில் பாட்டாளி நலன் என்ற சிந்தனையின் வெற்றிக்காக உதாசீசனம் செய்த மாக்சும் அவரது தோழர்களும், இன்று முதலாழித்துவம் அதனைச் செய்கின்றது என்று ஒப்பாரி வைப்பது இரண்டகத் தன்மை என்றும், இது வெறுமனே தத்தமது கொள்கைநிலைகள் தொடர்பான அடிபாடு என்றும் கூட நான் பார்த்த புத்திசீவிகள் கூறுகின்றார்கள். மேலும் இன்றைய முதலாளித்துவத்தின் உலகமயமாக்கல் மீதான் குற்றச்சாட்டுக்களாக "தோழர்கள்" அடுக்குகின்ற அத்தனை பக்கவிழைவுகளும் மாக்சின் உலகளாவிய பாட்டாளி இணைப்பு என்ற உலமயமாக்கலினாலும் உருவாக்கப்படக்கூடியது என்பது அவர்களின் கருத்து. இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் என பல முனைகளிலும் வாதிகள் உதாரணங்களை அடுக்குகின்றார்கள்.

இதுபற்றித் தெளிவாகக் கூறுவதாயின் அதிகம் எழுதவேண்டும், ஆனால் இங்கு கருத்துப் பகிரும் அனைவரும் என்னை விடப் பலமடங்கு இம்முனையில் கற்றுத் தெளிந்துள்ளீர்கள் என்று தோன்றுவதால், மேலே உள்ள கருத்தை முழுவதுமாக நீங்கள் புரிந்து கொள்ள அந்தப் பந்தி போதும் என்று நினைக்கின்றேன்.

இந்நிலையில், உலகமயமாக்கல் என்ற முனையில் மாக்சிசம் மீதான மேற்படி குற்றச்சாட்டு பற்றி, இங்கு கருத்துப் பகிரும் உங்கள் அனைவரதும் கருத்து எவ்வாறு அமைகிறது என்று அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

கமூனிசம் தோற்றது என்று எவ்வாறு கூறுவீர்கள் என்ற கோபத்தின் விளைவு தான் இந்தத் தலைப்பே என்ற நிலையில், வாதங்களின் தற்போதைய நிலையில்இ இன்னுமொரு விடயத்தையும் கூறிவிடுகின்றேன்.

பாப் றே என்பவர் கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தின் முன்னை நாள் முதல்வர். இவர் கல்வி கற்ற பல்கலைக்கழகங்களின் தரம்இ இவர் வென்ற புலமைப்பரிசில்களின் தரம் என்பனவற்றை வைத்து, கல்வி ரீதியாக இவர் ஒரு கெட்டிக்காரர் என்று எவரும் ஒத்துக்கொள்வர். பாப் றே ஒரு றோட்ஸ் புலமைப்பரிசில் வென்றவம் கூட. எனவே, இப்படிப்பட்டவர் ஒன்ராறியோவின் முதல்வராக, அதுவும் சோசலிசச் சித்தாந்தத்தில் நம்பிக்கையுடைய ஒரு போராளிக்கட்சியான "புதிய சனநாயகக் கட்சியின்"" தலைவராக பொப் றே முதல்வர் ஆனபோது மக்களின் எதிர்பார்ப்புக்கள் பலமாக இருந்தன. ஆனால் பாப்பின் ஆட்சிக் காலத்தில்இ பொருளாதார ரீதியில் ஒன்ராறியோ

அதன் முழந்தாளிற்கே இட்டுவரப்பட்டது. அத்தனை அபாயகரமான தோல்வி. இந்தத் தோல்விக்கான நூறு வீத பழியினை பாப் றே மீது போட்டு விடமுடியாது, பல அக புறக் காரணிகளின் பங்கு இதில் உள்ளது என்ற போதிலும், பாப்பின் கொள்கைகள் இத்தோல்வியில் பெரும் பங்கு வகித்தன. அடுத்த தேர்தலில், மக்களால் பாப்பும்

அவரது கட்சியும் பரிதாபகரமாகத் துரத்தி அடிக்கப்பட்டன.

ஆட்சியிழந்து ஏறத்தாள ஒரு தசாப்தத்தின் பின்னர், பாப் றே கனடாவின் தேசிய வானொலிக்கு வழங்கிய செவ்வியில் பின்வருமாறு தனது தோல்வியினை ஒப்புக் கொண்டார்:

"ஒருவர் எத்தகைய மாபெரும் சிந்தனைகளையும் வகுத்துக் கொள்ளலாம் நடைமுறைப் படுத்த முனையலாம். ஆனால் மக்கள் அந்தச் சிந்தனைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து, அந்தச் சிந்தனைகளை அறிமுகப்படுத்திய தலைவரைப் பின்தொடர மறுப்பார்களேயாயின், அந்தச் சிந்தனையும் அந்தத் தலைவரும் தோல்வியடைந்தனவே"

என்பதே பாப்பின் ஒப்புதல் வாக்கு மூலத்தின் சாராம்சமாக அமைந்தது.

இதை ஏன் நான் கூறுகின்றேன் என்றால், மாக்சின் சிந்தனை பற்றி நான் அறிந்து கொண்ட சொற்பமான விடயங்கள் அவரது சிந்தனை பற்றி ஆழ்ந்து படிக்கவிரும்பும் ஆசையினையும் ஆர்வத்தையும் என்னுள் ஏற்படுத்தத் தவறியது மட்டும்மன்றி அவரோடு என்னால் உடன்படமுடியாது என்பதற்குப் பல ஆணித்தரமான--எனது சுய விருப்பு வெறுப்பின் அடிப்படையில் அமைந்த--காரணங்களை எனது மனதில் எடுத்த எடுப்பிலேயே பட்டியலிட்டன. எனவே, என்னால் மாக்சைத் தொடரமுடியாது என்ற அடிப்படையில், பாப் றே கூறியதைப் போல, எனது மட்டத்தில் மாக்ஸ் தோற்றமை பற்றி என்னால் திட்டவட்டமாகக் கூற முடியும்.

இனி என்னை விட்டு வெளியே பார்த்தால், உலகில் மாக்சை ஆழமாகப் புரிந்து கொண்டோம் பரவசப்படுகின்றோம் என்று அரசமைத்த பல அரசுகள் தோற்றுப் போயுள்ளன. இதை மாக்சிசத்தின் தோல்வியாகக் காட்டமுடியாது ஏனெனில் மாக்சிசம் வேறு தோற்றுப் போன அரசுகள் கையாண்ட சித்தாந்தம் வேறு என்று பலர் கூறுகின்றார்கள். இது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா இல்லையா என்ற வாதத்தை இப்போது விட்டு விட்டு விட்டு, இவர்கள் கூறுவது போல் இந்த வாதம் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது தான் என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்.

அப்படியானால், மாக்ஸ் என்ற மாபெரும் சித்தாந்த வாதி இறந்து கூட இத்தனை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையிலும், இன்னமும் ஏன் உலகில் மாக்சின் சிந்தனையின் வெற்றிக்கு உதாரணமாக சுட்டிக்காட்டப்படக்கூடிய ஒரு நாடு உருவாகவில்லை என்ற கேள்வி எழுகிறது. உடனே, சீனா முதலியன சில வடிவ மாற்றங்களைச் செய்து கொண்டாலும் அவையும் கமூனிசத்தின் வெற்றியின் உதாரணமே என்று ஆரும் கூறின் அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. ஏனெனில் முதலில், சீனா முதலியன மாக்சின் சிந்தனைக்கு உதாரணம் இல்லை என்று கூறி விட்டுக் கணநேரத்தில் இம்முனையில் வாதத்தை நேர்மாறாக மாற்றுவது ஏற்புடையது அல்ல.

அடுத்துஇ மாக்சால் உந்தப்பட்டு, மாக்சின் சித்தாந்தத்தைத் தாம் புரிந்து கொண்டவரை நடைமுறைப்படுத்த வெளிக்கிட்ட அனைத்துப் போராட்டங்களுமே மாக்சிசத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறி விட்டன, இந்தப் போராட்டங்கள் வேறு மாக்ஸ் வேறு என்று தோழர்கள் கூறுகின்ற நிலையில், ஓரு முக்கிய கேள்வி எழுகின்றது. அதாவது, யாருக்காக மாக்ஸ் சிந்தித்தாரோ அவர்களால் கூட மாக்சைப் புரிய முடியவில்லை எனின், மாக்சின் சிந்தனை தோற்றுப்போன சிந்தனை என்று கூறுவதில் என்ன தப்பு? அதாவது, புரியப்பட முடியாத பிரமிப்புக்களால் ஆரிற்கு என்ன இலாபம்? புரியப்படமுடியாத ஒன்றினால் எவ்வாறு ஒரு மக்கள் கூட்டம் பயனடைய முடியும்? ஏற்கனவே

முதலாழித்துவத்தின் சுழிவுநெழிவுகளில் இருந்து தம்மைக் காக்கத் தெரியாத இந்தப் பாட்டாளிகள், புரியப்படமுடியாத ஆழ்ந்த மாக்சிச தத்துவத்தால் என்ன பலனடையமுடியும்? அவ்வாறாயின் மாக்சின் சித்தாந்தம் வென்றது என்று எவ்வாறு கூற முடியும்?

இறுதியாக, "தோழர்" இளைஞன் குறைந்தது இரண்டு தடவைகள் ஒரு விடயத்தைக் கோடிட்டுக் காட்டியுள்ளார். அதாவது, மாக்ஸ் எந்த போராட்ட வடிவத்தையும் தனது தோழர்களிற்குச் சுட்டிக் காட்டவில்லை, மாறாக, மாக்ஸ் வெறும் சித்தாந்தத்தை மட்டும் தான் எழுதிக் காட்டினார். மாக்ஸ் ஒரு சித்தாந்த வாதி மட்டுமே. எனவே மாக்ஸ் தோற்றார் என்று எவ்வாறு நீங்கள் கூறுவீர்கள் என்பதே இளைஞனின் கேள்வி. இளைஞன் கூறுவது சரியா தவறா என்று ஆராயாது இளைஞன் கூறுவது உண்மை தான் என்றே வைத்துக் கொள்வோம். அதாவது மாக்ஸ் ஒரு சித்தாந்தவாதி மட்டுமே அன்றி அவர் எந்தப் போராட்ட வடிவத்தையும் சுட்டிக் காட்டவில்லை என்று வைத்துக் கொண்டால், இது கூட இளைஞனின் வாதத்திற்குப் பாதகமான விளைவினையே ஏற்படுத்தும்.

எப்படி என்று கூறுவதற்கு முன்னர் ஒரு உதிரித் தகவல். கடந்த மாதம், கனடாவின் அதி உச்ச பத்திரிகையான குளோபன்ட் மெயில் தற்போதைய கனேடிய மத்திய அரசின் உப எதிர்க்கட்சித்தலைவரான மைக்கல் இக்னாச்சியவ் என்றவர் நியு+யோர்க் ரைம்சிற்கு வழங்கிய ஒரு சமீபத்திய செவ்வியின் பகுதிகளை மீள் பிரசுரம் செய்திருந்தது. மைக்கல் இக்னாச்சியவ் என்பவர் ஒரு முன்னைநாள் காவர்ட் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் தேசியவாதம் என்ற முனைகளில் இந்தப் புத்திசீவி எழுதிக் களைத்தவர். உலகளாவிய ரீதியில் ஒரு புத்திசீவியாக ஏற்றுக்கொள்ளப்படுபவர். இவர் ஏறத் தாள ஈராண்டுகளாகத் தான் நடைமுறை அரசியலில் பங்கு கொள்கிறார். இந்நிலையில் இரண்டு ஆண்டு நடை முறை அரசியலைத் தொடர்ந்து இந்தப் புத்திசீவி பின்வருமாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்:

"அரசியல் தொடர்பான நடைமுறை அறிவினைத் தற்போது கொஞ்சம் பெற்றுள்ள நிலையில், முன்னர் அசைக்கபட முடியாதனவாக எனக்குப் பட்ட எனது பல பழைய நிலைப்பாடுகள் இன்று ஆட்டம் கண்டுள்ளன. காவர்ட் பல்கலைக்கழகத்தில் புத்திக்கூர்மை மிக்க மாணவர்களிற்கு நாளாந்தம் நான் படிப்பித்த பல விடயங்கள் இன்று

எனக்குள் கேள்விக்குள்ளாகின்றன. இன்று அவற்றை நான் கற்பிற்பின் நிட்சயமாக முன்னர் கற்பித்த பல விடயங்களை முற்றிலும் மாறுபட்ட கருத்தியலோடே நான் கற்பிப்பேன். உதாரணத்திற்கு, சதாம் என்ற மனிதாபிமானமற்ற மனிதனிடம் இருந்து ஈராக்கியர்கள் மீட்கப்பட வேண்டும் என்று விரும்பிய நான், அமெரிக்கா சதாமை அகற்றிய பின்னர்

மத அடிப்படைவாதிகளிடம் ஈராக்கிய மக்கள் அகப்பட்டுத் தத்தளிக்கும் நிலையினை முன்னர் அறிய முடியாதவானாகவே இருந்துள்ளேன் என்பதனை இப்போது நினைத்து வேதனைப் படுகின்றேன். இது போன்று தான் நடைமுறை அறிவு அற்று நான் கொண்டிருந்த பல கொள்கைகள் அரசியலை நடைமுறையாகப் பார்த்துப் பயின்று விட்ட நிலையில் எனக்குள்ளே இன்று முற்றாக மாறியப்போயுள்ளன" என்பதே இக்னாச்சியவின் ஆதங்கத்தின் சாரம்.

ஆக, கடதாசியில் சிந்திப்பது என்பதும், சிந்தனையை நடை முறைப்படுத்துவது என்பதும்--அது எந்தத் துறையாகட்டும்--முற்றிலும் மாறுபட்டன. கருதுகோள்கள் எல்லாம் நிறுவப்பட்டதுமில்லை, சிந்தனைகள் எல்லாம் வெற்றி பெற்றதுமில்லை.

இனிச் சற்று கதைப்பதை நிறுத்தி கேட்க முனைகிறேன் :)

Share this post


Link to post
Share on other sites

முதலில் மார்க்சியம் என்றால் என்ன என்பதைப் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

மார்க்சியம் என்பதை ‘மார்க்ஸ்’ சொன்னவை மட்டும்தானா? அவரின் பின்னால் வந்த ஏங்கெல்ஸ், லெனின், ட்ரொக்ஸி, ஸ்டாலின், மாவோ போன்றவர்களும் மார்க்சியத்தைச் செழுமைப் படுத்தியவர்கள்தான். எனவே மார்க்சியத்திற்குள் மார்க்ஸ் சொன்னவை மட்டும் அடங்கா.

மார்க்சியம் எனப்படும் கொம்முனீசிய சித்தாந்தம் ஒரே தன்மையுடன் எல்லா இடங்களிலும் நடைமுறைப் படுத்தப்படவில்லை, அதனை உலக முதலாளியத்திற்கு எதிரான கருத்துப் போராகவே மார்க்சியத்தின் மூலவர்களான கார்ல் மார்க்ஸும் ஏங்கல்ஸும் முன்வைத்தார்கள். ரஷ்யாவில் லெனின் அதனை நிலச்சுவாந்தர்களுக்கு எதிராக நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டார். ரஷ்சியப் புரட்சியில் பங்கெடுத்தவர்கள் அநேகர் தொழிலாளர்கள் அல்லது போர் வீரர்கள். விவசாயிகள் அதிகம் பங்களிப்பைச் செய்யவில்லை. எனவே விவசாயிகள் கொம்முனீசிய சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளாமல் அல்லது அதைப் பற்றி அக்கறைப்படாமல் இருந்திருக்கலாம். கொம்முனீசிய பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தியபோது பலர் பாரிய மாற்றங்களை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்டும் மனதளவில் வெறுத்தும் இருக்கலாம். இப்படியான புறநிலைக் காரணிகள், உளவியல் காரணிகளால் கொம்முனீசிய சித்தாந்தத்தையும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளுக்கும் ஆதரவாக செயற்படாமல் இருந்திருக்கலாம்.

ஆகவே நீங்கள் மேற்கோள் காட்டியபடி மக்களாதாரவு இல்லயேல் எந்தச் சித்தாந்தங்களும் அவற்றினை நடைமுறைப்படுத்த முனையும் திட்டங்களும் வெற்றிபெறாது. அதற்காக சித்தாந்தம் தோற்பதில்லை. தோல்வி அல்லது சறுக்கல்களுக்கான காரணங்களை ஆராய்ந்து மேலும் முன்னேறமுடியும். மார்க்சியம் இயங்கியல் தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டுள்ளதால், மாற்றங்களை எப்போதுமே வரவேற்கின்றது.

Share this post


Link to post
Share on other sites

பொதுவுடமை தோற்கடிக்க பட்டதா...?? அல்லது தோற்றது போல தோண்றுகிறதா..??

அனேக மேற்கு நாடுகளின் பத்திரிகைகளும் சரி மக்களும் சரி சமதர்மத்தை கொள்கையாக கொண்ட நாடுகளை கொடுங்கோல் நாடுகள் எனும் ரீதியில்தான் பார்க்கிறார்கள் சொல்கிறார்கள்..! இது திட்ட மிட்ட பிரச்சாரங்கள் இல்லையா..??

அண்மையில்(சில காலம் முன்) வெனிசுலா நாட்டு அதிபர் அமெரிக்க நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணை கிணறுகளை அரசுடைமை ஆக்குவேன் எண்று பொதுக்கூட்டம் ஒண்றில் பேசியதுக்கு அமெரிக்க ஜனாதிபதி புஸ் அவர்கள் விசனம் தெரிவித்து வெனிசுலா அதிபரை கொடுங்கோலர் ஜனநாயக விரோதி எண்று பேசினார்...

Share this post


Link to post
Share on other sites

இங்கை இந்த தலைப்பிலை விவாதிக்கிற பெருந்தகைகள் மாதிரி விவாதிக்க இயலாது. என்னால் இயன்றளவு விளங்கியதை எனக்கு விளங்கிய ஊடகம் மூலம் புரிந்ததை நானும் கூறலாம் என்று நினைக்கிறன்.

மேலே நான் இணைத்த அன்பே சிவம் படத்தின் கிளிப்பின் கொஞ்சம் முந்தி ஒரு கட்டம் வருகுது. இந்த தலைப்பு வருகுது

அதில் மாதவன் சொல்லுவார் உங்கட ரஸ்யா சுக்கு நூறாகாயுட்டுது இப்பவும் ஏன் கொம்ணீயசத்தை இப்பவும் கதைக்கிறியள் என்று.

கமல் சொல்லுவார் காதலின் சின்னம் தாஜ்மாகால் என்று சொல்லுகின மில்லையா ஒருக்கால் தாஜ்மாகால் உடைந்து விட்டுது என்று வைப்பம். அதற்காக காதல் என்றது இல்லை என்றது சொல்கிறதா.

அதற்கு மாதவன் சொல்லுவார் காதல் என்றது பீலிங்

அதற்கு கமல் சொல்லுவார் கம்னீயுசம் என்றதும் ஒரு பீலிங்தான் ரஸ்யா உடைஞ்சு என்றது உடன் அந்த பீலிங் இல்லாமால் ஆயிடுமா

மாக்ஸ்க்கு முன்னமும் பலரிடமும் கம்யூன் பீலிங் இருந்தது மாக்ஸ் அதற்கு வடிவம் கொடுத்தார் அவ்வ்வளவு தான்.

பெருந்தலைகளே எனது விரலுக்கு ஏற்ற வீக்கம் மாதிரி எனக்கு விளங்கினளவுக்கு சொல்லியிருக்கிறன் சண்டைக்கு வந்துடாதையுங்க என்னுடன்

Share this post


Link to post
Share on other sites