Jump to content

பொதுவுடமைக் கோட்பாட்டின் தோல்வி


Recommended Posts

முதலில் மார்க்சியம் என்றால் என்ன என்பதைப் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

மார்க்சியம் என்பதை ‘மார்க்ஸ்’ சொன்னவை மட்டும்தானா? அவரின் பின்னால் வந்த ஏங்கெல்ஸ், லெனின், ட்ரொக்ஸி, ஸ்டாலின், மாவோ போன்றவர்களும் மார்க்சியத்தைச் செழுமைப் படுத்தியவர்கள்தான். எனவே மார்க்சியத்திற்குள் மார்க்ஸ் சொன்னவை மட்டும் அடங்கா.

மார்க்சியம் எனப்படும் கொம்முனீசிய சித்தாந்தம் ஒரே தன்மையுடன் எல்லா இடங்களிலும் நடைமுறைப் படுத்தப்படவில்லை, அதனை உலக முதலாளியத்திற்கு எதிரான கருத்துப் போராகவே மார்க்சியத்தின் மூலவர்களான கார்ல் மார்க்ஸும் ஏங்கல்ஸும் முன்வைத்தார்கள். ரஷ்யாவில் லெனின் அதனை நிலச்சுவாந்தர்களுக்கு எதிராக நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டார். ரஷ்சியப் புரட்சியில் பங்கெடுத்தவர்கள் அநேகர் தொழிலாளர்கள் அல்லது போர் வீரர்கள். விவசாயிகள் அதிகம் பங்களிப்பைச் செய்யவில்லை. எனவே விவசாயிகள் கொம்முனீசிய சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளாமல் அல்லது அதைப் பற்றி அக்கறைப்படாமல் இருந்திருக்கலாம். கொம்முனீசிய பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தியபோது பலர் பாரிய மாற்றங்களை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்டும் மனதளவில் வெறுத்தும் இருக்கலாம். இப்படியான புறநிலைக் காரணிகள், உளவியல் காரணிகளால் கொம்முனீசிய சித்தாந்தத்தையும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளுக்கும் ஆதரவாக செயற்படாமல் இருந்திருக்கலாம்.

ஆகவே நீங்கள் மேற்கோள் காட்டியபடி மக்களாதாரவு இல்லயேல் எந்தச் சித்தாந்தங்களும் அவற்றினை நடைமுறைப்படுத்த முனையும் திட்டங்களும் வெற்றிபெறாது. அதற்காக சித்தாந்தம் தோற்பதில்லை. தோல்வி அல்லது சறுக்கல்களுக்கான காரணங்களை ஆராய்ந்து மேலும் முன்னேறமுடியும். மார்க்சியம் இயங்கியல் தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டுள்ளதால், மாற்றங்களை எப்போதுமே வரவேற்கின்றது.

கிருபன்,

இளைஞனது வாதம் கமூனிசம் என்பதற்குள் மாக்சை இழுத்து அவரையும் தோற்றவர் என்று விடாதீர்கள். மாக்ஸ் வேறு கமூனிசம் வேறு என்ற அடிப்படையில் அமைகிறது. உங்களது வாதம், மாக்சிசம் என்பது மாக்சினுடைய சித்தாந்தங்கள் மட்டுமல்ல, மாக்சால் உந்தப்பட்ட, அல்லது கவரப்பட்டவர்களது சிந்தாத்தங்களையும் உள்ளடக்கியது தான் என்ற வகையில் அமைகிறது. ஆக அடிப்படையில் இளைஞனதும் உங்களதும் கமூனிசம் பற்றிய பார்வை வேறுபடுவதாகவே எனக்குப் படுகின்றது.

இனி, உங்களது கடந்த பின்னூட்டத்தின் பிரகாரம், கமூனிசம் (அது என்ன வரைவிலக்கணத்தின் படியானதாக இருந்தாலும்) என்பதன் கடந்த கால செயற்பாடுகள், மக்கள் ஆதரவு இன்மையால் தோற்றுவிட்டன அல்லது வெற்றி பெறத் தவறி விட்டன

என்ற வரைக்கும் நீங்கள் உடன் படுவது போன்று தான் தெரிகிறது. அந்தவகையில் எமக்குள் கருத்துடன்பாடு இருப்பதாகவே

நான் பார்க்கின்றேன்.

எதிர்காலத்தில் கமூனிச சித்தாந்தம் அதன் கடந்த காலத் தோல்விகளின் காரணத்தைப் பகுத்தறிந்து, புரிந்து, திருத்தி மீள் எழும் என்று நீங்கள் கூறுகின்ற விடயம் தொடர்பில் அதிகம் விவாதிப்பது சிரமம்.

ஆனால், என்னைப் பொறுத்தவரை, பின்வரும் விடயத்தை மாக்சிசத்தின் அல்லது கமூனிசத்தின் அடிப்படைகளில் முக்கியமானதொன்றாக நான் விளங்கிக் கொள்கின்றேன். அதாவது, தனது அன்றாடத் தேவைகளிற்கு அளவான உணவை அன்றாடம் தேடி உண்ட மனிதனின் வாழ்வு, என்று தேவைக்கதிகமான உற்பத்தியினை மேற்கொண்டு சேமிப்பிற்கு வழி செய்ததோ, அன்று தான் சொத்து என்ற விடயம் தொடங்கியது. சொத்து என்ற விடயம் தான் மூலதனத்தின் முடக்கத்தின் அடிப்படை. எனவே தனிமனித சொத்துச் சேர்ப்புக்கள் தடை செய்யப்படவேண்டும் என்பது அடிப்படைத் தேவை ஆகிறது..என்பது

மாக்சிசத்தின் அடிப்படைகளில் முக்கியமான ஒன்று என்று எனக்குப் படுகின்றது.

ஆன்மீக மார்க்கத்திலும் கூட ஆசை துறப்பு மற்றும் இம்மையின் நிலையின்மை பற்றி எல்லாம் பேசப்படுகின்றது. கமூனிசச் சித்தாந்தமும் சொத்துச் சேர்ப்புத் தடைபற்றிப் பேசுகிறது. ஆனால், இன்றுவரை, மக்களைச் சொத்துச் சேர்க்காது செய்வது என்பது கொடுங்கோல் அரசுகளின் கட்டுப்பாட்டிற்குள் மட்டும் தான் சாத்தியமாகியுள்ளது. கொடுங்கோல் அரசுகள் நிலைக்க முடியாதன. ஏனெனில் கொடு;ங்கோல் என்பதே விடுதலை வேண்டிய போராட்டங்களிற்கு மறுமுனையில் அடிப்படையாய் அமைந்து விடுகின்றது.

இது போன்ற விடயங்களால், எது கமூனிசம் என்று இன்றுவரை கதைக்கப்படுகின்ற பல அடிப்படை விடயங்கள் வெற்றி பெற

முடியாதன என்றே எனக்குத் தோன்றுகின்றது. ஆனால் நாளை என்ன நடக்கும் என்று எவராலும் அடித்துக் கூற முடியாது.

எப்படியிருப்பினும், கடந்தகால கமூனிச செயற்பாடுகள் தோற்றன என்ற அடிப்படைக் கருத்தில் உங்களிற்கும் உடன்பாடு

இருப்பதாகவே எனக்குப் படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொம்முயூனிசம் நினைத்த வெற்றியைப் பெறவில்லை என்பதை கிழக்கைரோப்பிய நாடுகளில் சிலவற்றிற்கு செல்லும்போதும் அங்குள்ள தொழில்சார் நண்பர்களுடன் உரையாடும்போதும் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்காக அங்குள்ளவர்கள் முதலாளித்துவப் பொருளாதாரம்தான் மீட்சிதரும் என்று வாதிடவில்லை. பெரும்பாலானவர்கள் கொம்முயூனிச சித்தாந்தத்தை அங்கீகரித்தாலும், அதை நடைமுறைப்படுத்த அரசியல்வாதிகள் மேற்கொண்ட வழிமுறைகள் அவர்கள் வாழ்வில் கசப்பான பாடங்களைக் கொடுத்துள்ளதாகச் சொல்லுகின்றனர். உதாரணமாக செர்னோபில் அணு ஆலையில் ஏற்பட்ட ஒழுக்கு பல்கேரிய நாட்டவருக்கு 2 வருடங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இப்படியான இரும்புப் பிடியான சட்டங்கள் மனிதர்களை போராடவே தூண்டும்.

கிழக்கு ஜேர்மனியும் 40 ஆண்டுகளுக்கு மேலாக கொம்முயூனிசத்திற்குள் இருந்த நாடு. எனவே நமது ஜேர்மனிய நண்பர்களுக்கு இதைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்புள்ளது.

Link to comment
Share on other sites

உண்மைதான், நானும் சத்திந்தவரை முன்னைய கமூனிச நாடுகளில் வாழ்ந்தவர்களில் மிகப்பெரும்பான்மையானோர், தங்களால் இனிமேல் அப்படி ஒரு கட்டமைப்பில் வாழ்வதை நினைத்தே பார்க்க முடியாது என்றே கூறுகின்றார்கள். எத்தனை கொடூரமான இரும்புப் பிடி அங்கு அரசாக இருந்தது என்று உணர்வதற்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அணுவாலை விடயம் மிகச் சிறந்த உதாரணம் . இச்சம்பவம் பற்றி இன்றும் கோபத்தில் கண்கள் சிவக்கக் கூறுகின்ற பலருள்ளார்கள்.

அரசு என்ற விடயத்திற்கு அபரிமிதம் என்பதை விட முற்றுமுழுதான முக்கியத்துவம் கொடுத்து, அரசின் கைகளில் அனைத்தையும் கொடுத்து விட்டதும் இந்த அரசுகள் செய்த தவறு. "Power corrupts" என்பது அத்தனை மனிதர்களிற்கும் பொதுவான ஒன்று (அரிய சில விதிவிலக்குகளைத் தவிர)என்பதனால், அரசு என்பது தொடர்பில்

Checks and balances இல்லாத எந்தக் கட்டமைப்பும் மக்களிற்கு விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும் என்பது பல அரசுகளின் வரலாறு காட்டுகின்ற உண்மை. மேலும் work units போன்ற நடைமுறைகள் வாயிலாக மக்கள் குறிப்பிட்ட உற்பத்தி முனைகளில் முடக்கப்பட்டு அவர்களது creativity ஒடுக்கப்பட்டது. மனிதருக்குள் இருக்கக்கூடிய கற்பனைகள் கடிவாளமிடப்பட்டன. தெரிந்தோ தெரியாமலோ, மனிதரும் பொருட்கள் போன்றே மனித உணர்வுகள் என்பன போன்ற விடயங்கள் மறக்கப்பட்டு நோக்கப்பட்ட நிலை. மேலும், ஒரு நாட்டின் எந்தப் பிரதேசத்தில் ஒருவர் வாழ்வது என்ற விடயத்தில் கூட அரசின் தலையீடுகள். இப்படி கமூனிசத்தை நடைமுறைப் படுத்த முனைந்த அரசுகள் கடைப்பிடித்த இரும்புப் பிடிகள் எண்ணிலடங்காதன. ஓருவகையில் பார்த்தால், இயல்பானதும் மக்களிற்கு நலன் பயப்பதுமாக இருக்க வேண்டிய கமூனிசத்தை நடைமுறைப்படுத்துவது என்பது மக்கள் மேல் இத்தனை கொடூரமாகத் திணிக்கப்பட்டே அடையக் கூடியது என்று அந்த கமூனிஸ்டுக்கள் நினைத்தமை எம்மை சிந்திக்கத் தூண்டுகின்றது.

அதற்காக முதலாழித்துவம் விமரிசனங்களிற்கு அப்பாற்பட்டது என்று எவராலும் கூறி விட முடியாது. எனது அபிப்பிராயத்தில், மனிதநேயம், மனசாட்சி, விழிப்புணர்வு உடைய எந்த மனிதராலும் முதலாழித்துவத்தைத் தங்கு தடையின்றிக் கொண்டாட முடியாது. எனினும், சமூகநலன்சார் பாதுகாப்பு வலைகள் உடைய, மனிதரை றோபோட்டுகள் போலன்றி (கமூனிச அரசுகளிலேயே அதிகம் மனிதர்கள் றோபோட்டுக்கள் போன்று நடாத்தப்பட்டதாக நான் உணருகின்றேன்)மனிதர்களாக மதிக்கின்ற ஒரு அரசியலமைப்பு பற்றியே எனக்குள் சிந்தனை அதிகம் வருவதுண்டு.

உதாரணத்திற்கு, கனடா பற்றியும் கனடாவின் வரலாறு மற்றும் இன்றைய நடப்புக்கள் பற்றியும் விமர்சிப்பதற்கு எத்தனையோ விடயங்கள் (குறிப்பாக உலக நாடுகளின் வாழ்க்கைத் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களிற்குள் தொடர்ந்து நிலைக்கக் கூடிய இதே கனடாவிற்குள் வாழும் செவ்விந்திய இனக்குழுமத்தின் வாழ்வாதாரம் எத்தனையோ மூன்றாம் உலக நாடுகளைக் காட்டிலும் பின்னடைவாக உள்ளது. எனது ஞாபகம் சரி என்றால் அவர்களது வாழ்கைத் தரம் உலக வரிசையில் 68ம் இடத்தில் உள்ளது) மலிந்து கிடக்கின்றன என்ற போதிலும், ஒருவகையில் சரியான சிந்தனையின் (இதனை தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்ட சரியான கமூனிச சிந்தனையின் தாக்கம் என்று கூடக் கூறலாம்) தாக்கம் என்றோ ஏற்படுத்திய விளைவு என்று நினைக்கும் வகை சில விடயங்கள் கனடாவில் காணலாம்:

அனைத்து மக்களிற்கும் எட்டக்கூடிய அத்தியாவசிய மருத்துவ சேவை மற்றும் அடிப்படைச் சட்ட சேவை, இன மத மொழி மற்றும் அனைத்து வேறுபாடுகளிற்கும் அப்பால் அனைத்துக் கனேடியர்களும் ஒரே உரிமைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனைச் சட்டமாக்கியுள்ள உரிமைகள் சாசனம், அரசால் கட்டுப்படுத்தப்படுகின்ற மிகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் தொடர்பான சட்டங்கள், மருத்துவ காரணங்களாலோ இதர காரணங்களாலோ உழைப்பு இழந்த மக்களிற்கான உறுதி செய்யப்பட்டுள்ள வாழ்வாதார நிதி, சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தொடர்பாக உருவாக இருக்கும் சட்டங்கள், தொழிலாழர் உரிமை பேணும் சட்டங்கள், அடிப்படைக் கல்வியினை அனைத்துக் குழந்தைகளும் பெற உறுதி செய்யும் சட்டமும் வசதிகளும், முதலாய இன்னோரன்ன விடயங்கள் சரியான திசையில் சுட்டி நிற்கின்றன.

அதற்காக கனடா ஒரு கமூனிச நாடு என்று எவராலும் சொல்லி விட முடியாது, இரண்டு போட்டி போடும் பொருளாதார சித்தாந்தங்களிலிருந்தும் நல்ல விடயங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

என்னைப் பொறுத்தவரை Branding தேவை அற்ற, இன்னமும் சொல்வதானால் முன்னேற்றத்திற்குத் தடையான ஒரு விடயம். இது இந்தச் சித்தாந்தம் என்று கண்மூடித்தனமான விசுவாசத்தோடு ஒரே வட்டத்திற்குள் சிந்திப்பதை விடுத்து, பல கோணங்களிலும் சிந்திப்பதே ஆரோக்கியமானது. இவ்வகையில், எதிர்காலத்தில் உருவாக இருக்கும் தமிழீழம் முதலிய அரசுகள், முதலாழித்துவத்தினதும் கமூனிசத்தினதும் என்று வெறும் இரண்டு சித்தாந்தங்களில் மட்டும் இருந்து நல்ல விடயங்களை எடுப்பதற்குப் பதிலாக, எந்தச் சித்தாந்தங்களிற்குள்ளும் கட்டுப்பட்டுப் போகாது விரியும் பல சிந்தனைத் தளங்களில் இருந்தும் நல்ல விடயங்களை எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கம்யூனிசம் என்றால் என்ன என்று எனக்கு வடிவாக தெரியாது ( முதலாளித்துவம் என்றாலும் என்ன என்று வடிவாக தெரியாது :) ) O/L இல் படித்ததோடு சரி.

இங்கு நடந்த உரையாடல்களை வாசித்தேன். எனது O/L அறிவு + அதிலிருந்து எனக்கு விளங்கியவைகளின் மூலம் இவ்வாறு வரையறுக்க முயல்கிறேன்.

ஒரு பத்துப் பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் சம அளவான மூலதனமும் (c - capital) உழைப்பும் (l - labour) இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரினதும் மூளை (e - effort) வேறுவேறானது. அவர்கள் தமது, மூலதனம், உழைப்பு, மற்றும் மூளையை பயன்படுத்தி தமக்கு செல்வத்தை சேகரிக்கின்றனர்.

சிலகாலம் செல்லுகிறது.

மேற்சொன்ன தரவுகளின் படி,

முதலாளித்துவதில்

2 பேர் - 20 c

3 பேர் - 5 c

5 பேர் - 0.25 c

வைத்திருக்கின்றனர்

கம்யூனிசத்தில்

ஒவ்வொருவரும் - 2 c வைத்திருக்கின்றனர்.

எனது விளக்கம் சரியா?

Link to comment
Share on other sites

செர்ணேபல் விபத்தையும் அது கய்யாண்ட முறையையும் வைத்து கமியூனிசம் பற்றி அதிகம் எடைபோட முடியாது. உப்பிடி வெளிக்கிட்டால் யூனியன் காபைட்டை போபால் விபத்தை கைய்யாண்ட முறையை வைத்து உலகின் 2 பெரும் ஜனநாயகங்களான அமெரிக்காவையும் இந்தியாவை பற்றி எப்படிப்பட்ட முடிவுக்கு வரலாம்? நஜீரியாவில் செல் எண்ணை நிறுவனம் செய்யும் திருகுதாளங்கள் பற்றிய பிரித்தானியாவின் ஜனநாயகம் என்று தொடங்கி கனக்க எழுதலாம்.

முதலாளித்துவம் வெல்லப்பட்டதரப்பாக இருந்த படி (எல்லாத்தரப்பிற்கும் உரிய) வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

marxism2rulingyh5.jpg

Thanks to ImageShack for Free Image Hosting

Link to comment
Share on other sites

செர்ணேபல் விபத்தையும் அது கய்யாண்ட முறையையும் வைத்து கமியூனிசம் பற்றி அதிகம் எடைபோட முடியாது. உப்பிடி வெளிக்கிட்டால் யூனியன் காபைட்டை போபால் விபத்தை கைய்யாண்ட முறையை வைத்து உலகின் 2 பெரும் ஜனநாயகங்களான அமெரிக்காவையும் இந்தியாவை பற்றி எப்படிப்பட்ட முடிவுக்கு வரலாம்? நஜீரியாவில் செல் எண்ணை நிறுவனம் செய்யும் திருகுதாளங்கள் பற்றிய பிரித்தானியாவின் ஜனநாயகம் என்று தொடங்கி கனக்க எழுதலாம்.

முதலாளித்துவம் வெல்லப்பட்டதரப்பாக இருந்த படி (எல்லாத்தரப்பிற்கும் உரிய) வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

முதலாழித்துவத்தின் கோரங்களிற்கு எதிராக எழுந்தது தான் கமூனிசம். இது இப்படி இருக்கையில், கமூனிசம் செய்த செர்ணேபல் போன்ற இராட்சத விடயங்கள் பற்றி கனக்க ஆராய்வதில் பலனில்லை ஏனெனில் இவ்வாறான விடயங்கள் முதலாழித்துவ சன நாயகங்களிலும் நடக்கின்றன என்பது எந்த வகையில் பார்த்தாலும் ஒரு அப்பிராணித்தனமான, அபத்தமான வாதம்.

மேலும், ஏற்கனவே இத்தலைப்பில் மிகத் தெளிவாகத் தெளிவு படுத்தப்பட்டுவிட்டதைப் போல, கமூனிசம் என்பது மக்கள் நலன் என்ற அடிப்டை பற்றி மட்மே சிந்தித்துத் தோன்றிய, இயல்பான, மக்களிற்கு நன்மையான ஒரு விடயம் என்றால் ஏன் அதனை அரசுகளின் இரும்புப் பிடி வாயிலாக மட்டுமே மக்கள் மீது திணிக்கலாம் மற்றும் தக்கவைக்கலாம் என்று கமூனிஸ்டுக்கள் நினைக்கிறார்கள் என்ற கேள்வி தானாகப் பிறக்கின்றது (இது ஆழமகாகச் சிந்திக்கப்படவேண்டியதே அன்றி மேலெழுந்தவாரியாக அல்ல).

அது போன்றே, பிரித்தானிய சனநாயகம் நைஜீரியாவில் அட்டூழியம் செய்கிறது என்றால் (இது பற்றி எனக்கு முழு விபரம் தெரியாது. நீங்கள் சொல்வதை வைத்து மட்டும் இங்கு பேசுகின்றேன்) இங்கு பரிசோதிக்கப்பட வேண்டியது நைஜீரிய அரசமைப்பில் அந்நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்காக எவ்வாறான விடயங்கள் நடைமுறையில் உள்ளன என்பதே அன்றி, பிரித்தானியாவின் சனநாயகம் இல்லை. ஏனெனில் இந்த திருகுதாளங்கள் பிரி;தானியாவிற்குள் நடக்கவில்லை!

செர்ணேபல் அணுக்கசிவு விடயம் மற்றைய அரச திருகுதாளங்களில் இருந்து எவ்வாறு வித்தியாசம் ஆகிறது என்றால், இத்தகைய ஒரு அசம்பாவிதம் முற்று முழுவதாக மக்களிடம் இருந்து வெற்றி கரமாக மறைக்கப்பட்டது என்பது தான். ஒரு நாட்டின் பாதுகாப்புத் திட்டங்கள் பற்றியோ, அல்லது ஆய்வுகூடங்களின் ஆராய்ச்சிகள் பற்றியோ மக்கள் அறியாது இரகசியம் பேணப்படுவது என்பதும், மக்களின் வீட்டிற்குள் நச்சுவாயுக் கசிவு ஏற்படுகின்றது என்பதனை அரசே வெற்றிகரமாக மறைப்பது என்பதும் (அதுவும் மக்களின் நலனிற்காகத் தோன்றிய ஒரு கமூனிச அரசு) வௌ;வேறு விடயங்கள். உலகளாவிய ரீதியில், செர்ணேபல் சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும், அரசியல் சித்தாந்த நிலை வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து அனைத்து மக்களாலும் சேர்பாணல் விடயம் இன்றறவும் பேசப்படுகின்றது என்றால், அது வெற்றி பெற்ற முதலாழித்துவத்தின் பிரச்சார வெற்றியோ உத்தியோ என்பது மட்டுமல்ல என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டியது.

மேலும் கற்றீனா இயற்கை அனர்த்தமும் போபால் விடயமும் எவ்வாறு கையாளப்பட்டன என்று ஆராய்வதும் விமர்சிப்பதும் சனநாயகங்களின் மக்கள் நலன் பேணல் தொடர்பான விவாதங்களிற்கும், மற்றும் ஏற்கனவே இங்கு தெழிவு படுத்தப்பட்டு விட்டது போலான முதலாழித்துவம் தங்குதடையின்றிக் கொண்டாடப்படக் கூடியது இல்லை என்ற விடயத்திற்கு உதாரணமாகவும் உதவும் என்ற போதும், இரண்டு வருடங்களிற்கு அணுக்கசிவை மக்கள் முற்றிலும் அறியாது மறைத்தமை என்பது இதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கமூனிச அரசின் இரும்புப் பிடியில் மக்கள,; உற்பத்தி வலுவாக பொருட்களோடு பொருட்களாக மாற்றப்பட் நிலையின் வெளிப்பாடாகத் தான் இத்தனை பெரிய அனர்;த்தம் இரு ஆண்டுகள் மக்களிற்குத் தெரியாமலேயே மறைக்கப்பட்டது சாத்தியமானது என்பது கவனிக்கப்பட வேண்டியது.

Link to comment
Share on other sites

சார் இப்ப கமியூனிசம் விட்ட பிழைகளை ஆய்வு செய்ய வேண்டாம் மூடி மறையுங்கோ அது ஒரு உன்னதமான புனிதமான கொள்கை என்று சொல்லவில்லை.

செர்ணேபல் விபத்தின் விழைவுகளை மூடி மறைச்சதே இராட்சதமா விவகாரம் என்றால் கிரோசிமா நாகசாக்கி என்ன அளவில பார்க்கலாம?

agent orange பற்றி இன்றைக்காவது உத்தியோக பூர்வமாக ஒத்துக் கொண்டு உரிய நிதிகளை வழங்க முற்படுகிறார்களா அடுத்த சந்ததிகளிற்கு அவலம் தொடராம இருக்க?

depleted uranium based ammunition பயன்பாட்டை என்ன சொல்வது?

பிரச்சனைகளை தீர்பதை விட தமக்கு சார்பாக மாற்றுவதற்கான absolute & unconditional surrender doctrine என்ன வென்பது?

இதுகள் எல்லாம் இரும்புபிடி இரும்புத்திரை எதிராக போராடிய உன்னத தரப்பின் பதக்கங்களில் சில.

இதை வைச்சு இவர்கள் பேசும் ஜனநாயகம் மனித உரிமை பற்றி எப்படியான முடிவுகளை எடுக்கலாம்?

முடியல ... :lol:

Link to comment
Share on other sites

முதலாழித்துவத்தினது கோரங்கள் என்று எதுவும் இல்லை என்று எவரும் இங்கு விவாதித்ததாய் நானுணரவில்லை. மனசாட்சி, மனிதநேயம், விழிப்புணர்வு உடைய எந்த மக்களாலும் முதலாழித்துவத்தைத் தங்கு தடையின்றிக் கொண்டாட முடியாது என்று முன்னர் இதே தலைப்பில் அடியேன் கூறிய விதத்திலேயே அடியேன் உங்களின் முதலாழித்துவம் மீதான கோபங்கள் தொடர்பில் கருத்துடன்பாடோடு தான் உள்ளேன் என்பதனை நீங்கள் காணலாம்.

முதலாழித்துவத்தின் மாபெரும் கோரங்களிற்கு எதிராகத் தான் கமூனிசம் உருப்பெற்றது என்பது தொடர்பில் முரண்பாடுகள் இங்கு இருப்பதாய் நான் காணவில்லை. ஆனால் அப்படி ஒரு மாற்றீடாக உருவெடுத்த கமூனிசம் ஏன் மக்களின் மனங்களில் தோற்றது என்று தான் இங்கு பேசப்படுகிறது. அதற்காகக், கமூனிசம் அபிமானம் இழந்து விட்டது என்பதற்காக, முதலாழித்துவத்தின் கோரங்களை எதிர்கொள்வதற்கான மாற்றீடுகள் பற்றி எவரும் சிந்திக்கக் கூடாது என்றோ முதாலாழித்துவம் தான் விதி என்று இருந்து விட வேண்டும் என்று ஆரும் சொல்லவில்லை.

முதலாழித்துவம் என்ற பு+தத்திடம் இருந்து மக்களைக் காக்கத் தோன்றிய கமூனிசம் என்ற தேவதை செய்த பு+தத் தனங்களில் ஒன்று தான் செர்ணபல். பு+தம் பு+தத் தனத்தோடு தான் இருக்கும் என்பது எல்லாரிற்கும் தெரியும். தேவதை பு+தத்தனமாகச் செயற்பட்டது தான் இங்கு செய்தி. இந்த அடிப்படையில் தான், கமூனிசத்தின் கோரமான செர்ணபல் பற்றிப் அதிகம் பேச முடியாது ஏனெனில் அப்படிப் பேசின் முதலாழித்துவத்தின் கோரங்கள் பற்றிப் பேச வேண்டும் என்று நீங்கள் கூறுவது தான் ஏற்புடையதல்ல என்று அடியேன் கூற நேர்ந்தது.

"கமூனிசம் தோற்றது" என்ற கூற்று நியாயமானதா இல்லையா என்று விவாதிக்கத் தான் இந்தத் தலைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில் தான் கடந்த கருத்துக்கள் எல்லாம் நகர்ந்து வந்துள்ளன. அந்தவகையில் கமூனிச அரசுகள் மக்கள் அபிமானம் இழந்தமைக்கான உதாரணங்களில் ஒன்றாகத் தான் சேர்ணபல் அநியாயம்; கதைக்கப்பட்டது. இந்தக் கொன்டெக்ஸ்றில் பார்க்கையில், அதுவும் முதலாழித்துவத்தின் தன்மைகள் பற்றி கருத்தாளர்கள் தெளிவாக உள்ள நிலையில், நீங்கள் இங்கு முதலாழித்துவத்தின் அநியாயங்களைப் பட்டியலிடுவது, முதலாழித்துவத்தின் கோரங்களிற்கான உதாரணங்களாக மட்டும் தான் இருக்க முடியும் என்பதே எனது கருத்து.

Link to comment
Share on other sites

சார் கமியூனிசம் ஒன்றும் தன்னம் தனியே ஒரு கொள்கையாக நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் மீது மக்களிற்கு இருக்கக் கூடிய விருப்பு வெறுப்புகள் அளவிடப்பட்டு வெற்றி தோல்வி கணிக்கப்படவில்லையே.

செர்ணேபலிற்கு கிடைத்த பிரச்சாரம் ஏன் மற்றய அவலங்களிற்கு கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் ஒப்பிடக் கூடிய ஏனய அவலங்களை குறிப்பிட்டன்.

மக்களின் அபிப்பிராயம் மாறியதற்கு செர்ணோபல் காரணமா அல்லது அதைப் பயன்படுத்தி எதிர்த்தரப்பினர் செய்த பிரச்சார தந்திரம் காரணமா?

செர்ணோபல் மக்கள் மனதில் கமியூனிசம் தோற்பதற்குமான காரணங்களின் 1 என்பது உலகமா யுத்தம் 1 ஆரம்பித்ததற்கு ஒஸ்ரோ கங்கேரி அரசகுமாரன் படுகொலை காரணம் எண்டமாதிரி இருக்குங்கோ.

Link to comment
Share on other sites

குறுக்காலபோவன்,

உங்களது ஆதங்கம் முற்றிலும் நியாமானதே. உங்களது ஆதங்கம் தொடர்பில் எனக்கு முரண்பாடு ஏதும் இல்லை என்பதால் நாம் விவாதிப்பதற்கு ஏதும் இம்முனையில் இல்லை என்றே படுகிறது.

ஒரு சிறு விடயத்தை மட்டும் கூற முடியும். அதாவது, வெளியில் இருந்து முதலாழித்துவத்தினதும் கமூனிசத்தினதும் மக்கள் மனங்களிற்கான போட்டிகளைப் பார்க்கும் எம் போன்றோர்க்கு முதலாழித்துவத்தின் பிரச்சாரம் முதலியன தெரிகின்றன. ஆனால், உள்நாட்டிற்குள்ளேயே நடந்த செர்ணபல் அநியாயம் பற்றிக் கூட இரண்டு வருடங்கள்

அறியாதிருந்த மக்களிற்கு, கமூனிசத்தின் தோல்விக்கு முன், முதலாழித்துவத்தின் பிரச்சாரம் எத்தனை தூரம் எட்டியிருக்கும் என்பது கேள்விக் குறியே. எனவே கமூனிசத்தின் தோல்விக்கு முற்று முழுதாக முதலாழித்துவத்தின் பிரச்சாரத்தைக் காரணம் காட்ட முடியுமா என்று என்னுள்ளே ஒரு சிறு கேள்வி எழத் தான் செய்கிறது. செய்தித்

தணிக்கைகள் எவ்வாறு எங்கெங்கு எப்படி அமுல் படுத்தப்பட்டன என்பது நாம் அனைவரும் அறிந்தது தானே.

அதாவது கமூனிச இரும்புத் திரைக்கு வெளியே இருந்த மக்களின் மனங்களில் கமூனிசம் தோற்றுப் போனதில் முதலாழித்துவத்தின் பிரச்சாரத்திற்கு

பங்கு இருக்கலாம். ஆனால், முதலாழித்துவத்தின பிரச்சாரங்களில் இருந்து இரும்புத்திரைக்கப்பால் மறைத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் தாமாகவே

கமூனிசம் மீது வெறுப்படைந்தமை என்ற ஒரு விடயமும் இருக்கின்றதல்லவா.

எது எப்படியோ, இந்தத் தலைப்பின் கேள்வியான "கமூனிசம் தோற்று விட்டது என்ற கூற்று நியாமானதா" என்பதைப் பொறுத்தவரை, உங்களது நிலை அது

தோற்று விட்டது தான் என்ற பக்கத்தையை சாய்வதாக நான் உணர்கின்றேன்.

Link to comment
Share on other sites

எல்லாக் கமுயூனிசம் தோற்கவில்லை என்பதற்கு கியூபா 1 ஆதாரம்.

தமது இனத்தை தேசியத்தை உலகில் உயர் தரத்திற்கு கொண்டு செல்வதில் கவனமாக உள்ள சீனா கூட இந்த அளவு வழர்ச்சி மாற்றங்கள் பலம் பெற்ற பிறகும் கமுயூனிசம் தோற்றுவிட்டது என்று ரஸ்யா போல் அறிவிக்கவில்லை.

நான் கமியூனிசத்தில் வாழவில்லை ஆனால் அதில் வாழ்ந்து வழர்ந்தவர்களை பலரை (1 அல்ல வேறுபட்ட பல கிழக்க ஜரோப்பிய நாட்டவர்களை) உற்ற நண்பர்களாக கொண்டிருக்கிறன். அவர்களோடு பல மணத்தியாலாங்கள் பல வருடங்களாக இது பற்றி கதைத்திருக்கிறன். அவர்கள் சொன்னவற்றை வைத்து விளங்கிக் கொண்டது முதலாளித்துவத்தின் பிரச்சாரம் அவர்கள் மீது தாக்கத்தைக் ஏற்படுத்தியிருந்தது என்பதே.

பிரச்சாரம் என்பது மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய மக்களை நோக்கியது தானே. அவர்கள் இரும்புத்திரைக்கு அப்பால் இருக்கிறார்களா கிடுவேலிக்கு அப்பால் இருக்கிறார்களா வாய்க்காலுக்கு அப்பால் இருக்கிறார்களா சமுத்திரத்திற்கு அப்பால் இருக்கிறார்களா என்றதற்கு ஏற்றமாதிரி வடிவமைத்து முன்னெடுக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்படியோ, இந்தத் தலைப்பின் கேள்வியான "கமூனிசம் தோற்று விட்டது என்ற கூற்று நியாமானதா" என்பதைப் பொறுத்தவரை, உங்களது நிலை அது

தோற்று விட்டது தான் என்ற பக்கத்தையை சாய்வதாக நான் உணர்கின்றேன்.

இப்படித்தான் முதலாளித்துவவாதிகள் தங்கள் வெற்றிச் செய்தியை எழுதி வாங்கிக் கொண்டு போவார்களோ? :lol:

Link to comment
Share on other sites

குறுக்காலபோவன்,

கமூனிசத்தின் நன்மை, தீமை, எதிர்காலம் பற்றிய தலைப்புக்களில் உங்களது முன்னைநாள் கமூனிச நாடுகள் வாழ்

நண்பர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டீர்கள் ஆயின் பயனுடையதாய் இருக்கும். வாசிக்க ஆவலாய்

உள்ளேன்.

Link to comment
Share on other sites

அரச சேவை" மீதான வெறுப்புணர்வும் விமர்சனங்களும் நன்றாகப் பரவி இறுகிப்போயிருக்கும் காலம் இது.

அரச சேவை என்றாலே சோம்பேறித்தனமும் படிநிலை அதிகாரங்களும் கொண்ட கையாலாகாத நிறுவனம் என்ற பதிவு எல்லார் மனதிலும் அழுத்தமாய்ப் படிந்திருக்கும் காலம் இது.

இலங்கைச்சூழல் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு வலுவிழக்கச்செய்யப்படும் அரச சேவையும், ஒரே சேவையை அரசும் தனியாரும் போட்டி போட்டுச் செய்ய வேண்டும் என்ற கபடத்தனமான உலக மயமாக்கல் விளம்பரங்களும் புதியவையல்ல.

"அரச சேவை" என்கிற கருத்தியல் ஒரே நேரத்தில் மார்க்சீயர்களாலும், ஏகாதிபத்தியவாதிகளாலும் தாக்கபப்டுகிறது.

இலங்கையில் அரச சேவை என்றாலே இனவாதம் அழுகிப் புழுத்த, அடை காக்கப்பட்ட பெருங்குகையாகவே மனங்களில் படிமம் கொள்கிறது.

"அரசுடைமையாக்கல் சோசலிசத்துக்கு" எதிராக தீவிர இடது சாரிகள் கூர்மையான விம்சனங்களை முன்வைக்கிறார்கள். அவர்கள் விமர்சனங்கள் உடன்படக்கூடியவையே.

--

பின்-முதலாளியத்துடன் உடன்பாடுகண்டவர்கள் தனியார் மயமாக்கலை தூக்கிப்பிடித்து மரபான சோசலிச ஒற்றைப்படைச் சிந்தனை முறையைத் தகர்க்கும் நவீன சிந்தனையாக நம்பவைத்து வருகின்றனர்.

இந்த தாராளவாத தனியார் மயமாக்கல் எனும் மதம் தொடர்ச்சியாகக் கவர்ச்சிகரமாகப்போதிக்கப்பட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கைரோப்பியக் கொம்முயூனிசிய நாட்டு நண்பர்கள் தாங்கள் இப்போது சந்தைப் பொருளாதாராத்தால் சுரண்டப்படுவதாக உணர்கிறார்கள். எனவே தற்போதைய முதலாளித்துவ ஆதிக்கம் தொடர்ந்தும் நிலைபெற்று இருக்கச் சாத்தியமில்லை. சுரண்டல்களுக்கு உள்ளாகும் மக்கள் எப்படியும் அதற்கெதிராகப் போராடவே செய்வர். உலகின் தலைவிதியை ஒரு சில தனிமனிதர்கள் தீர்மானிப்பதையும், உலகின் செல்வங்களை ஒரு சில தனிமனிதர்கள் கையகப்படுத்தி வைத்திருப்பதையும் சாதாரண மக்கள் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். மேற்கத்தைய ஜனநாயகம் திணிக்கப்பட்ட பலநாடுகளில் ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்துக்கள் தொடர்ந்தும் அரங்கேறமாட்டா.

Link to comment
Share on other sites

எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை பொதுவுடமை சித்தாந்தங்ங்கள் வெற்றி தோல்வி என்ற அளவுகோலுக்குள் அகப்படக்கூடிய ஒன்றல்ல. அது ஒரு உணர்வு பூர்வமான சிந்தனை முறை. சின்னக்குட்டி அவர்கள் எழுதிய உதாரணம் நன்கு பொருந்துகின்றது. பொது உடமை சித்தாந்தங்களை கையாண்டவர்கள் நடவடிக்கைகள் தோற்றுப்போயிருக்கலாம். அதுக்கு பல அக புற நிலைக்காரணிகள் இருக்கலாம். பொதுவுடமை என்ற சிந்தனை முறை மனுடம் உள்ள வரை வெற்றி தோல்வி என்ற அளவு கோலுக்கு அப்பாற்பட்டு இருந்து கொண்டே இருக்கும்.

உதாரணமாக:

ஒரு கிலோ தேயிலையை உற்பத்தி செய்ய தொழிலாளிக்கு கிடைக்கும் ஊதியம்

2.00 ரூபாய் இந்தியப்பணம்

ஒரு கிலோ தேயிலையில் விற்கப்படும் தேனீர் (400 பைகள்)

400

24 அவுன்ஸ் தேனீர் 1: 70 கனடா டொலர்கள் முதல் 2 : 55 வரை கடைக்கேற்ப வேறுபடும்

சராசரி

2.00 கனேடிய டொலர்கள்

400 தர 2 800 கனேடிய டொலர்கள்

இந்தியப்பணம் இன்றய நிலவரம்

800 கனேடிய பணம் சமன் 30756.30 இந்தியப்பணம்

30756.30 - 2 சமன் 30754.30 ரூபாய் உற்பத்திக்கு வெளியே நிற்பது.

(இது நான் வேலை செய்யும் கடையில் விற்கப்படும் நிலவரத்தையும், நீலகிரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சம்மந்தப்பட்ட ஆவணப்படத்தில் நிறுவப்பட்ட 2 ரூபாய் கூலிப்பணத்தையும் வைத்து நான் போட்ட கணக்கு. )

இவ்வாறான ஒரு சிந்தனை முறையை தருவது மார்ஸிய சிந்தனை முறை. இதில் வெற்றி தோல்வி என்ன இருக்கின்றது என்று எனக்கு புரியவில்லை.

Link to comment
Share on other sites

ரஸ்யா உலகிலேயே முதலாவது பெரிய நாடு இரண்டாவது பெரிய நாடான கனடாவை விட இரண்டு மடங்கைவிட கூடிய பெரிய நாடு... சனத்தொகையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது... அங்கு அதிகாரத்தில் இப்போதும் மாக்சிய சிந்தனை தான் ஆட்ச்சி செய்கிறது... ஜனநாயகம் எண்ற குளறு படிகள் இருந்தாலும்... உலகின் அதிகமான சனத்தொகை கொண்ட சீனாவும் மாக்சிய சிந்தனை அடிப்படை ஆட்ச்சியை கொண்ட நாடு... அதுதவிரவும் கியூபா, வடகொரியா , வியட்நாம்,

கிட்டத்தட்ட உலக சனத்தொகையின் 25% மான நாடுகளில் இண்றும் மாக்சிய சிந்தனை ஆட்ச்சி செய்கிறது...

அமெரிக்க சோவியற் பனிப்போருக்கு முன்னர் மாக்சியதை தழுவிய நாடுகள்.

ரஸ்யாவோடு சேர்ந்து இருந்த :: அர்மேனியா, அஜர்பைஜான்., பெலாரூஸ், எஸ்டோனியா, ஜோர்ஜியா , கசகிஸ்தான், குர்கிஸ்தான், லத்வியா , லித்துவேனியா , மோல்டோவா , தஜகிஸ்தான் , துர்க்மெனிஸ்தான் , உக்ரேன் , உஜர்பெர்க்கிஸ்தான்....

சோவியற்றின் தோழமைநாடக இருந்து சிதறுண்ட:: கிழக்கு ஜேர்மனி , செக்குடியரசு , ரோமானியா, போலந்து , பல்கேரியா , ஹங்கேரி, சொலவாக்கியா...

மொண்டினீக்குவா , சேர்பியா, சொலவேனியா , அல்பேனியா, பொஸ்னியா, மெசிடோனிய குடியரசு ,

ஆபிரிக்க நாடுகளான:: கொங்கோ குடியரசு, பெனின், அங்கோலா, எதியோப்பியா, எரித்திரியா, சோமாலியா, மொசம்பிக்...

ஆசியாவில்:: யேமன், ஆப்கானிஸ்தான், கம்போடியா, மங்கோலியா...

இத்தினை நாடுகள் கிட்டத்தட்ட 40% மானதுக்கும் அதிகமான மக்கள் தொகை மாக்சின் சிந்தனை முறையை தழுவி இருந்தது...

இந்த எல்லா நாடுகளிலும் உள்நாட்டு சண்ண்டைகள் தீவிரமாக நடந்தெறுகிண்றது... உள்ளே இருந்த பிரச்சினைகள் வெடித்து கிளம்பின என்பதுக்கு பதிலாக மேற்க்கு நாட்களின் முதலாளித்துவ மூளை வேலை செய்தது, செய்கிறது என்னும் போகில் சிந்த்தித்தால் விடை கிடைக்கலாம்... இஸ்லாமிய மதவாதத்தை பனிப்போரின் காலத்தில் காசு கொடுத்து கிழப்ப பட்டவை நினைவில் கொள்ள வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வாறே கியூபா என்ன தான் அமெரிக்காவிற்குச் சவால் விட்டாலும் பொருளாதாரரீதியில் அது படுதோல்வியான நாடு மட்டுமல்லாமல், ஒரு குடும்ப ஆட்சிக்குள் சிக்குப்பட்டும் தவிக்கின்றது.

Link to comment
Share on other sites

பொதுவுடமை சித்தாந்தங்ங்கள் வெற்றி தோல்வி என்ற அளவுகோலுக்குள் அகப்படக்கூடிய ஒன்றல்ல. அது ஒரு உணர்வு பூர்வமான சிந்தனை முறை. சின்னக்குட்டி அவர்கள் எழுதிய உதாரணம் நன்கு பொருந்துகின்றது. பொது உடமை சித்தாந்தங்களை கையாண்டவர்கள் நடவடிக்கைகள் தோற்றுப்போயிருக்கலாம். அதுக்கு பல அக புற நிலைக்காரணிகள் இருக்கலாம். பொதுவுடமை என்ற சிந்தனை முறை மனுடம் உள்ள வரை வெற்றி தோல்வி என்ற அளவு கோலுக்கு அப்பாற்பட்டு இருந்து கொண்டே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மேலும், ஏற்கனவே இத்தலைப்பில் மிகத் தெளிவாகத் தெளிவு படுத்தப்பட்டுவிட்டதைப் போல, கமூனிசம் என்பது மக்கள் நலன் என்ற அடிப்டை பற்றி மட்மே சிந்தித்துத் தோன்றிய, இயல்பான, மக்களிற்கு நன்மையான ஒரு விடயம் என்றால் ஏன் அதனை அரசுகளின் இரும்புப் பிடி வாயிலாக மட்டுமே மக்கள் மீது திணிக்கலாம் மற்றும் தக்கவைக்கலாம் என்று கமூனிஸ்டுக்கள் நினைக்கிறார்கள் என்ற கேள்வி தானாகப் பிறக்கின்றது (இது ஆழமகாகச் சிந்திக்கப்படவேண்டியதே அன்றி மேலெழுந்தவாரியாக அல்ல).

இன்னுமொருவன் அவர்களே.................. உங்களது கேள்வி நியாயமானது போன்றதே தவிர நியாயமற்றது.

நல்ல விடயங்கள் என்பது மனித சமுகத்தினுள் மன விருப்கங்களுக்கு புறம்பான விதத்தில்தான் காட்யத்தின் பேரில் புகுத்தப்பட்டன இது மிகவும் தெளிவான விடயம். ஒருவனுன்கொருத்தி என்பது எவ்வளவோ பண்பான மானிடத்திற்கு எவ்வகையிலும் நன்மை பயிற்க கூடியது இதை எல்லோரும் பகலில் ஏற்றுக்கொள்கிறார்கள் ஆனால் இரவானால்...................??? உலகில் எத்தனை விபச்சார விடுதிகள் நிரம்பி வழிகின்றன எப்போ கணவன் வேலைக்கு போவான் கள்ள காதலனுக்கு கதவு திறக்கலாம் என்று எத்தனை மணமுடித்த பெண்கள் ஆண்கள் ஏங்கி கொண்டிருக்கின்றார்கள்????

புகைபிடித்தல் கூடதென (பிடிப்பவருக்கு அல்ல அவரை ஒட்டியிருக்கும் சமூகத்திற்கு) எல்லோரும் தெரிந்திருக்க கூடிய ஒன்று நிலைநாட்ட வேண்டுமெனில்........ சர்வாதிகாரம் ஒன்றே ஒரே வழி... வேறு வழி இருக்கிறதா? இதில் மனிதரின் விருப்பு வெறுப்பு பற்றி விவாதித்தால் விவததித்தவர்களின் கல்லறைகளில் மட்டும் வேண்டுமானால் பொறித்து விடலாம் தயவு செய்து புகை படிக்காதீர்கள் என்று.

Link to comment
Share on other sites

கியூபா என்றதும் ஞாபகத்துக்கு வருவது அவர்கள் கல்விகற்றவர்களில் அமெரிக்கா கண்டத்தில் முதல் இடத்தில் உள்ளதாக (99%) அறிந்தேன்.

Link to comment
Share on other sites

நம்மில் பலர் பொதுவுடமைக்கு எதிரான எண்ணங்களைக் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். எமக்கு நேரடியான அனுபவத்தில் வந்த எதிரான எண்ணங்கள் என்பதைவிட முதலாளித்துவ உலகின் பரப்புரையினால் உருவான எதிர்மனோநிலை ஆகத்தான் இருக்கிறது.

தமிழீழத்தைப் பொறுத்தவரை எப்படியான பொருளாதாரக் கொள்கையை கொண்டிருக்க வேண்டும்?

முதலாளித்துவ பொருளாதாரம் அங்கீகாரத்தைப் பெறவும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும் தேவையானது.

அடக்கு முறையால் சீரழிக்கப்பட்டு போரினால் பலவீனப்பட்ட எம்மிடம் இருந்து சுறண்டல்களை தடுக்க ஏதோ ஒருவகை தேசிய மற்றும் சமூக நலன் சார்ந்த கட்டுப்பாட்டை விதிக்க வேண்டியிருக்கும். ஏலவே அபிவிருத்தி அடைந்த அல்லது சுதந்திரம் அடைந்து பல தசாப்த்தங்களாக ஓரளவு இயல்பு வாழ்கையை அனுபவத்துக் கொண்டிருக்கும் நாடுகள் பின்பற்றக் கூடிய அதே திறந்த முதலாளித்துவ பொருளாதாரத்தை நாம் பின்பற்ற முடியாது.

போர் எம்மீது கல்விச் சீர்கோடு தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலமை அபிவிருத்தியின்மை பொருளாதார சீரழிவை மாத்திரம் கொண்டுவரவில்லை. உளவியல்ரீதில் மோசமான வடுக்களையும் உருவாக்கியிருக்கிறது. War brings the best & worst out of human behaviour என்று சொல்வார்கள்.

அண்மையில் அல்ஜசீராவில் கிழக்கு எப்படி வெற்றி கொள்ளப்பட்டது என்று விபரணம் காட்டும் பொழுது ஒரு சிறு காட்சித்தூண்டு ஒன்று வருகிறது. சிறீலங்கா இராணுவம் எப்படி மீள்குடியேற்றம் செய்கிறது குளிர்பானம் கொடுக்கிறது என்ற பகுதியில் இடம்பெயர்ந்த மக்களிற்கு தேவையை விட குறைவாக உணவுப் பொருட்களை அதில் கொண்டு வந்து போடுவார்கள். மக்கள் அடிபட்டு அவற்றை பறிப்பார்கள். இந்த அனுபத்தை கண்டு இதில் தமது வாழ்வை ஆரம்பித்து வழர்ந்து வரும் இளைய சமுதாயம் எப்படியானவர்களாக வருவார்கள்? இது அடக்குமுறைத்தரப்பால் திட்டமிட்டு காலமாக செய்யப்படுவது.

இதன் தாக்கத்தின் சிறு உதாரணத்தை 2004 பாசிக்குடா சென்றபோது காண நேர்ந்தது. கடற்கரையில் மீன்பொரியல் கடலை வித்துக் கொண்டிருந்தார்கள் 5..6 தமிழ்ச் சிறுவர்கள். அவர்களிற்கு எல்லோருக்கும் பத்து வயதுக்குள்தான் இருக்கும். அவர்களில் ஒருவரிடம் இருந்து நாம் அதிக மீன் பொரியலை வேண்டியதற்கா மற்றவர்கள் அந்தச் சிறுவனை தாக்கி கலைத்தார்கள். பிறகு எல்லோரையும் கூப்பிட்டு இருத்தி வைத்து கதைக்கும் போது தான் போரினால் தந்தையை இழந்தவர்கள் தாயை இழந்தவர்கள் சீரழிவை சந்தித்தவர்கள் இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்டவர்களா அவர்களது பின்னணி இருந்து.

வெளிக்காயங்களை மாற்றலாம் உடைந்த கட்டங்களை திருத்தலாம் திருப்பிக் கட்டலாம். இப்படியாக ஆழமாக பாதிக்கபட்ட சமூகத்தை திருத்துவது ஒரு பெரிய சவால்.

புலம்பெயர்ந்தவர்கள் கூட தாயகத்தில் முதலீடு செய்ய விரும்பும் பொழுது அதை முற்று முழுக்க உதவியாக நன்கொடையாக பார்க்காது இலாப நோக்கோடும் அணுகுவார்கள். இவ்வாறான எதிர்பார்ப்புகள் கடந்த சமாதான காலத்திலேயே பல்வேறு திட்டங்களோடு தாயகத்திற்கு சென்றவர்களிற்கு இருந்தது. அதே நேரம் மக்கள் சுரண்டப்படாது அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற வேறுபட்ட எதிர்பார்புகளை நிர்வகிப்பது அதற்கேற்ப கொள்கைகளை வகுப்பது என்பதும் சிக்கலானது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சுவிசிலிருந்து மாதமிரு முறை வெளிவரும் "நிலவரம்" வார இதழின் 20 ஆவது இதழுக்கு க.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணல்: அதிலிருந்து இந்தத் தலைப்புக்கு பொருந்தக்கூடிய பகுதியை இணைக்கிறேன்: நன்றி: புதினம்

மார்க்சிசம் காலவதியானதா?

கேள்வி: "ஒருவருக்காக சமூகம். சமூகத்துக்காக ஒருவர்" என்ற பொது உடைமைச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு அரசியலில் பிரவேசித்தவர் நீங்கள். "மார்க்சிசம் காலாவதியாகிப் போன ஒரு சித்தாந்தம்" என ஒரு சாரார் கூறி வருவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: எதுவும் இவ்வுலகில் காலாவதியாவதில்லை. காலத்திற்கேற்ப அவை தம்மை மாற்றியமைக்கின்றன. இதுவே மாக்சிய சித்தாந்தத்தின் உட்கரு. எனவே எவ்வாறு மாக்சியம் காலாவதியாக முடியும்? இயங்கியல் அணுகுமுறையும் முரண்பாடுகளைக் கையாளும் திறனும் மார்க்சியம் மனிதத்திற்கு அளித்தகொடை. எனவே எங்கு மனிதர் போராடுகிறார்களோ, எங்கே அவர்கள் பாதகமான சூழலை மாற்ற முனைகின்றார்களோ- அங்கு அவர்களுக்கு இவை கைகொடுக்கும். வெற்றியைத் தேடித்தரும். மனிதர் விடும் தவறுகளுக்கு மார்க்சியம் பொறுப்பல்ல.

சிந்திக்கத் தூண்டுவதும் சரியான இடத்திற்கு உங்களைக் கொண்டு சேர்ப்பதுமே மார்க்சியம் எனும் அறிவியலின் பணி. கடவுளை நம்புவோர் கடவுளின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்காக கடவுளை நம்பாமல் விடவில்லையே என்றார் அவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.