Jump to content

உணவில் உப்பை குறைங்க... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு - தினமும் எவ்வளவு உப்பை எடுத்துக் கொள்ளலாம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உணவில் உப்பை குறைங்க... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு - தினமும் எவ்வளவு உப்பை எடுத்துக் கொள்ளலாம்?

உப்பு பயன்பாடு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக நாடுகள் தங்களது மக்கள் உப்பை எடுத்துக் கொள்ளும் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதிகளவில் உப்பை எடுத்துக் கொள்வது இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கப்படுகிறது. உப்பில் உள்ள சோடியம் முக்கியமான ஊட்டச்சத்தும் கூட. தேவையான அளவில் சோடியத்தை எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது.

அதேவேளையில், அதிகளவு சோடியத்தை எடுத்துக் கொள்வது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது. சோடியம் உட்கொள்வதை குறைப்பது தொடர்பான அந்த அமைப்பின் அறிக்கையில், 2025ஆம் ஆண்டிற்குள் சோடியம் உட்கொள்வதை 30 சதவீதம் குறைக்கும் தனது இலக்கில் இருந்து உலக நாடுகள் விலகி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சோடியம் அத்தியாவசிய ஊட்டச்சத்தாக இருந்தபோதிலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது இதய நோய், பக்கவாதம் மற்றும் அகால மரணம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. நாம் உணவில் பயன்படுத்தும் உப்பில் சோடியம் அதிகளவில் உள்ளது.

அஜினொமோட்டோ போன்றவற்றிலும் சோடியம் உள்ளது. உலக சுகாதார அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளில் 5 சதவீதம் மட்டுமே சோடியம் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான விரிவான, கட்டாய கொள்கைகளை கொண்டுள்ளன.

73 சதவீத உறுப்பு நாடுகள் அத்தகைய கொள்கைகளை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் அறிக்கை காட்டுகிறது.

சோடியம் பயன்பாடு குறைப்பு கொள்கைகள் மூலம் 2030ஆம் ஆண்டு வாக்கில் 70 லட்சம் மக்களை இறப்பில் இருந்து காப்பாற்ற முடியும்.

ஆனால் தற்போது பிரேசில், சிலி, செக் குடியரசு, லித்துவானியா, மலேசியா, மெக்சிகோ, சௌதி அரேபியா, ஸ்பெயின், உருகுவே ஆகிய 9 நாடுகளிடம் மட்டுமே சோடியம் உட்கொள்வதைக் குறைக்க பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளின் விரிவான தொகுப்பு உள்ளது.

சர்வதேச அளவில் இறப்பிற்கும் நோய் ஏற்படுவதற்கும் சுகாதாரமற்ற உணவு காரணமாக அமைகிறது. அதிகளவு சோடியத்தை எடுத்துக் கொள்வதும் முக்கிய காரணமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசூஸ் கூறுகிறார்.

"பெரும்பாலான நாடுகள் சோடியம் குறைப்புக் கொள்கைகளை இன்னும் கடைப்பிடிக்கவில்லை. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற உடல்நல பிரச்னை ஆபத்திற்கு தங்கள் மக்களை அவை ஆழ்த்துகின்றன. சோடியம் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் செயல்படுத்த வேண்டும். உணவில் சோடியம் உள்ளடக்கத்திற்கான தங்களின் அளவுகோலை உற்பத்தியாளர்கள் செயல்படுத்த வேண்டும," என்று உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

உப்பு பயன்பாடு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தினசரி உணவில் எவ்வளவு உப்பை எடுத்துகொள்ள வேண்டும்?

ஒரு ஆரோக்கியமான நபர் தினசரி 4 கிராம் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணரான மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.

“ஆனால், தற்போது சராசரியாக 10.8 கிராம் உப்பு மக்களால் தினமும் உட்கொள்ளப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இது இந்தியாவில் 9.8 கிராம் ஆக உள்ளது. இது நமது தினசரி தேவையை விட 2 மடங்கு அதிகம் ஆகும். குழந்தைகளுக்கு வழங்கும் தினசரி உணவில் 2 கிராம் வரை உப்பை சேர்க்கலாம்.

சராசரி நபர் 4 கிராம் உப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் 3 கிராம் உப்பை உணவில் சேர்க்கலாம். ” என்றார். இதேபோல், வயது, அவர்களின் நோயின் தன்மை ஆகியவற்றை பொறுத்தும் உப்பை உட்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

நமது உணவில் இரண்டு விதமாக உப்பை சேர்க்கிறோம் என்று குறிப்பிட்ட அவர், “முதலாவதாக, கண்ணுக்கு தெரியும் வகையில் உப்பை பயன்படுத்துகிறோம். இரண்டாவதாக கண்ணுக்கு தெரியாத வகையில் உப்பை பயன்படுத்துகிறோம்.

நாம் உட்கொள்ளும் அரிசி, பருப்பு, காய்கறி, கீரை போன்றவற்றிலும் உப்பு உள்ளது. ஆனால் இவற்றில் மிக குறைந்த அளவே உப்பு உள்ளது. இதேபோல், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அப்பளம், ஊறுகாய், சோடா பயன்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றிலும் கண்ணுக்கு தெரியாத உப்பு அதிகளவில் உள்ளது.” என்கிறார் அவர்.

உப்பு பயன்பாடு, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்
 
படக்குறிப்பு,

மீனாட்சி பஜாஜ், ஊட்டச்சத்து நிபுணர்

பாதிப்பு எப்படி இருக்கும்?

உப்பை அதிகம் உட்கொண்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய பிரச்னை ஏற்படும் என்று மட்டுமே பலரும் நினைக்கின்றனர்.

ஆனால், உப்பை அதிகமாக எடுத்துகொண்டால் இதய நோய், பக்கவாதம், வயிற்றில் புற்றுநோய், கிட்னியில் கல், எலும்புகள் வலு இழப்பது, உடல் பருமன் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று மீனாட்சி பஜாஜ் எச்சரிக்கிறார்.

உப்பு பயன்பாடு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உப்பு பயன்பாட்டை குறைப்பது எப்படி?

சோடியம் பயன்பாட்டை கட்டுப்படுத்த இந்தியா ஏற்கெனவே நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளதாக மீனாட்சி கூறுகிறார். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா மஞ்சள் பட்டியலில் உள்ளது. அதாவது, சோடியம் பயன்பாட்டை குறைக்க நாம் ஏற்கனவே நடவடிக்கைகளை தொடங்கி விட்டோம்.

சரியானதை உட்கொள்ளுங்கள் (Eat Right) இயக்கம் மூலம் உப்பு, சர்க்கரை, கெட்ட கொழுப்பு ஆகியவற்றை குறைத்து சாப்பிடுங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பதப்படுத்த உணவை சாப்பிடுவதை குறைத்து பருவ காலத்திற்கு ஏற்க உள்ளூர் உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மீனாட்சி அறிவுறுத்துகிறார்.

“உப்புக்கு மாற்றான இஞ்சி, பூண்டு, வெங்காயம், பட்டை, எலுமிச்சை போன்றவற்றை நாம் உணவில் சேர்த்துகொள்ளலாம். இவற்றின் மூலம் உணவில் உப்பின் தேவையை குறைக்க முடியும். ஊறுகாய், அப்பளம், கருவாடு, உப்புக்கடலை, மோனோசோடியம் க்ளூடமைட், இன்ஸ்டண்ட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நமது தினசரி உப்பு தேவையே 4 கிராம்தான். ஒரே ஒரு இன்ஸ்டென்ட் உணவை சாப்பிடுவதன் மூலம் நான் இதனை பெற முடியும். இவற்றை குறைக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துகொள்வதை குறைப்பது மூலம் பாதி பிரச்னையை சரி செய்துவிடலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.

முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போதோ, வெளியில் சாப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டாலோ உணவு வகைகளை தேர்வு செய்வதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.

https://www.bbc.com/tamil/articles/cl46n7n7r7no

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.கடைச் சாப்பாடு

2. அதிகம் பதப்படுத்தப் பட்ட துரித உணவுகள்

இவற்றோடு ...

3. வெளிநாடுகளில் எங்கள் ஆட்களின் விருந்துகளில் பரிமாறப் படும் "உப்பு, காரம், புளி" நிரம்பிய உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தாலே உப்பின் அளவைப் பெருமளவு குறைத்து விடலாம்!

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

1.கடைச் சாப்பாடு

2. அதிகம் பதப்படுத்தப் பட்ட துரித உணவுகள்

இவற்றோடு ...

3. வெளிநாடுகளில் எங்கள் ஆட்களின் விருந்துகளில் பரிமாறப் படும் "உப்பு, காரம், புளி" நிரம்பிய உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தாலே உப்பின் அளவைப் பெருமளவு குறைத்து விடலாம்!

கடந்த முறை (போன செப்ரம்பரில்), வழக்கமான குருதி சோதனை செய்த போது என் குருதியில் உள்ள சோடியத்தின் அளவு குறைவு (Low) என்று காட்டியது (134 mmol/L). இது நல்லதா கூடாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

கடந்த முறை (போன செப்ரம்பரில்), வழக்கமான குருதி சோதனை செய்த போது என் குருதியில் உள்ள சோடியத்தின் அளவு குறைவு (Low) என்று காட்டியது (134 mmol/L). இது நல்லதா கூடாதா?

இத்தகைய சிறிதளவான குறைவு ஆரோக்கியமான ஒருவரில் சோடியம் குறைவாகக் கருதப் படுவதில்லை. 136 - 145 mmol/L தான் சாதாரண அளவு. இரத்தம் எடுக்க முன்னர் நீங்கள் தண்ணீரை அதிகம் குடித்து விட்டுப் போயிருந்தால் இப்படி சோடியம் குறைவாகக் காட்டியிருக்கலாம். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் விளைவுகள் இருக்காது.

ஆனால், கால் வீக்கம் (நீர் தேங்குதல்), சீரியசான, நாள்பட்ட இதய நோய் போன்ற தெளிவாகத் தெரியக் கூடிய அறிகுறிகள் இருந்தால் குறைவான இரத்த சோடியம் பற்றி மருத்துவர் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்.   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

இத்தகைய சிறிதளவான குறைவு ஆரோக்கியமான ஒருவரில் சோடியம் குறைவாகக் கருதப் படுவதில்லை. 136 - 145 mmol/L தான் சாதாரண அளவு. இரத்தம் எடுக்க முன்னர் நீங்கள் தண்ணீரை அதிகம் குடித்து விட்டுப் போயிருந்தால் இப்படி சோடியம் குறைவாகக் காட்டியிருக்கலாம். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் விளைவுகள் இருக்காது.

ஆனால், கால் வீக்கம் (நீர் தேங்குதல்), சீரியசான, நாள்பட்ட இதய நோய் போன்ற தெளிவாகத் தெரியக் கூடிய அறிகுறிகள் இருந்தால் குறைவான இரத்த சோடியம் பற்றி மருத்துவர் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்.   

வணக்கம் ஜஸ்ரின் 

கொலொஸ்ரோல் மாத்திரை  எடுப்பவர்கள்  வாழ் நாள் முழுவதும் அதை எடுக்க வேண்டுமா? அல்லது அளவு சீரான பின்னர் கைவிடலமா?  கைவிட்டதன்  பின்னர் உணவு பழக்கங்கள் மூலம் கொலோஸ்ரோல் அளவை கட்டுக்குள் க்குள் வைத்திருக்க முடியுமா? மாத்திரைக்கு பழக்கப்பட்ட உடல் ஏற்றுக்கொள்ளுமா? 

கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறேன் என்று நின்ககிறேன். அதனால் நிறுத்துகிறேன். 

 

Link to comment
Share on other sites

18 minutes ago, island said:

வணக்கம் ஜஸ்ரின் 

கொலொஸ்ரோல் மாத்திரை  எடுப்பவர்கள்  வாழ் நாள் முழுவதும் அதை எடுக்க வேண்டுமா? அல்லது அளவு சீரான பின்னர் கைவிடலமா?  கைவிட்டதன்  பின்னர் உணவு பழக்கங்கள் மூலம் கொலோஸ்ரோல் அளவை கட்டுக்குள் க்குள் வைத்திருக்க முடியுமா? மாத்திரைக்கு பழக்கப்பட்ட உடல் ஏற்றுக்கொள்ளுமா? 

கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறேன் என்று நின்ககிறேன். அதனால் நிறுத்துகிறேன். 

 

எனது தந்தை உணவு கட்டுப்பாட்டின்பின் பல வருடங்களாகப் பாவித்து வந்த கொலஸ்ரரோல் மருந்தினைப் படிப்படியாகக் குறைத்து இப்போது தேவை இல்லை என்றாகிவிட்டது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, island said:

வணக்கம் ஜஸ்ரின் 

கொலொஸ்ரோல் மாத்திரை  எடுப்பவர்கள்  வாழ் நாள் முழுவதும் அதை எடுக்க வேண்டுமா? அல்லது அளவு சீரான பின்னர் கைவிடலமா?  கைவிட்டதன்  பின்னர் உணவு பழக்கங்கள் மூலம் கொலோஸ்ரோல் அளவை கட்டுக்குள் க்குள் வைத்திருக்க முடியுமா? மாத்திரைக்கு பழக்கப்பட்ட உடல் ஏற்றுக்கொள்ளுமா? 

கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறேன் என்று நின்ககிறேன். அதனால் நிறுத்துகிறேன். 

 

ஐலண்ட்,

ஆம், பெரும்பாலானோரில் மருந்தை நிறுத்த முடியும், ஆனால் சில நிபந்தனைகள் இருக்கின்றன

கொலஸ்திரோல் - அதுவும் LDL கொலஸ்திரோல் ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும் போது தான் சில வகையான கொலஸ்திரோல் குறைப்பு மருந்துகளைப் பரிந்துரைப்பர். அதைப் பரிந்துரைக்கும் போதே, உங்கள் வாழ்க்கை முறையை மாற்றும் அறிவுரையும் வழங்கப் படும்.  வருடாந்தம் இரத்தம் பரிசோதித்து, மருத்துவருடன் ஆலோசித்து கொலஸ்திரோல் குறைப்பு மருந்தைக் குறைப்பதா, முற்றாகக் கைவிட்டுப் பார்ப்பதா என்று தீர்மானிக்க முடியும். மருத்துவர் இந்த முடிவை எடுக்க, இரத்தக் கொலஸ்திரோலின் அளவோடு, உங்கள் ஏனைய நோய்கள் (நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்றன), உடல் பருமன், குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் உண்டா போன்ற காரணிகளையும் கவனத்திலெடுப்பர்.

எனவே, இது மருத்துவரின் ஆலோசனையோடு மட்டுமே எடுக்க வேண்டிய ஒரு முடிவு.

வெகு சிலருக்கு (~300 பேரில் ஒருவர்) குறிப்பிட்ட ஜீன்களின் குறைபாடு காரணமாக கொலஸ்திரோல் அதிகரிக்கும். இவர்கள் தொடர்ந்து கொலஸ்திரோல் குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உப்பின் அளவைப் பெருமளவு குறைத்து விடலாம்!

அனேகமான நேரங்களில் சோறு சாப்பிடும் போது மிளகாய் பொரியலுடன் சாப்பிடுவேன்.

பிரசருக்கு குளிசையும் போட்டுக் கொண்டு இந்த உப்பில போட்ட மிளகாயையும் நல்லா தின்னுங்கோ என்று வீட்டில் பேசுவார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

எனது தந்தை உணவு கட்டுப்பாட்டின்பின் பல வருடங்களாகப் பாவித்து வந்த கொலஸ்ரரோல் மருந்தினைப் படிப்படியாகக் குறைத்து இப்போது தேவை இல்லை என்றாகிவிட்டது.

கொலஸ்ரரோல் மருந்து எடுப்பவர்கள் சொன்னதை வைத்து அது எடுத்தால் வாழ் நாள் முழுவதும் எடுக்க வேண்டும் என்று  இதுவரை நினைத்தேன்.

எனக்கு ஒரு பெரியவர் சொன்னார்.தனக்கு நீரழிவு நோய் இருந்ததாகவும் உணவு கட்டுப்பாடு மூலம் அதை மாற்றிவிட்டதாக, அதை நான் நம்பவில்லை இப்போ நீங்கள் உங்கள் அப்பாவை பற்றி சொன்ன போது தான் நினைக்கிறேன் அது உண்மையாக இருக்குமோ.

4 minutes ago, ஈழப்பிரியன் said:

அனேகமான நேரங்களில் சோறு சாப்பிடும் போது மிளகாய் பொரியலுடன் சாப்பிடுவேன்.

😂

சோறுடன் மிளகாய் பொரியலும் அப்பளமும் எனக்கும் பிடித்தவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிரசர் குளிசை மற்றும் கொலஸ்ரோல் குளிசை சம்பந்தமாக 28 வருட அனுபங்கள் உண்டு.அதன் அடிப்படையிலான உணவு முறையிலும் பல அனுபவங்கள் உண்டு. என்னை நானே பரீட்சித்து பார்த்ததும் உண்டு.உயிருடனான விளையாட்டு.பிரசர் குளிசை என்றால் பல்வேறு கொம்பனிகளின் தயாரிப்புகளை பரிசோதித்து பார்த்ததும் உண்டு.
எனது குடும்ப வைத்தியரைப்போல்  அல்லாது எனக்கும் பல அனுபவங்கள் உண்டு.

இங்கே பல ஜாம்பவான்கள் இருப்பதால் சொந்த அனுபவங்களை பகிர்ந்து அடி வாங்காமல் விலகியிருப்பதே சாலச்சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் வாழ்க்க்கையில் இப்போ குளீசை மருந்தும் உணவாகவும் மாறி விட்டது 

எனது வீட்டிலு கூட அம்மா அப்பா  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.