Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வீடு மீது அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் - நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வீடு மீது அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் - நடந்தது என்ன?

திருச்சி சிவா

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு, கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்களுக்கும் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பணிகளைத் துவங்கி வைத்ததோடு, ஏற்கனவே திட்டமிடப்பட்டு பணிகள் முடிவடைந்த திட்டங்களைத் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக எஸ்.பி.ஐ. காலனியில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தையும் அவர் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், மேயர், மாநகராட்சி ஆணையர் சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால், இதில் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் பெயர் இல்லையெனக் கூறப்படுகிறது. இதனால், சிவாவின் ஆதரவாளர்கள் கோபத்தில் இருந்தனர்.

 

இந்த நிகழ்ச்சிக்குப் பங்கேற்பதற்காக சிவாவின் வீடு உள்ள நியூ ராஜா காலனி வழியாக அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட பிரமுகர்களின் வாகனங்கள் சென்றுள்ளன. சிவாவுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாத கோபத்தில் இருந்த அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் வாகனம் அவ்வழியாகச் சென்றபோது கறுப்புக் கொடி காட்டினர்.

இருந்தபோதும் அமைச்சர் உள்ளிட்டோரின் கார்கள் அதனைக் கடந்து சென்றவிட்டன. திறப்பு விழா நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, சிவாவின் வீட்டிற்கு வந்த சிலர் அங்கிருந்த காரைத் தாக்கினர். அதற்குப் பிறகு, சிவாவின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

@KN_NEHRU

பட மூலாதாரம்,@KN_NEHRU/TWITTER

இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பத்துப் பேரைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில், அங்கு வந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், அவர்களைத் தாக்கினர்.

இதையடுத்து காவல்நிலையம் முன்பாக பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, அமைச்சர் கே.என். நேரு தரப்பிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா தரப்பிற்கும் நீண்ட காலமாக மோதல் நிலவுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cl46l4ezrx3o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சொல்வதற்கு நிறைய உள்ளன, ஆனால் பேசும் மனநிலையில் இல்லை" - திருச்சி சிவா எம்.பி

திமுக, திருச்சி சிவா, கே.என்.நேரு
6 மணி நேரங்களுக்கு முன்னர்

திருச்சியில் தமது சொந்த வீடு, திமுகவைச் சேர்ந்த சிலரால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச மறுத்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, "பேச நிறைய உள்ளன, ஆனால் அதை பேசும் மனநிலையில் நான் இல்லை" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுகவினருள் ஒரு பிரிவினர் அமைச்சர் நேருவின் அணியிலும் மற்றொரு தரப்பினர் திருச்சி சிவா தரப்பிலும் இருந்து கொண்டு செயல்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்பிஐ காலனியில் உள்ள புதிய இறகு மைதானத்தை திறப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கட்சியினர் மைதானத்திற்கு சென்றனர். ஆனால் அந்த மைதானத்திற்கான முன்னேற்பாடுகளை செய்தவர் எம்பி சிவா என்பதால் அவர் பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறி எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு கார் முன்பாக கருப்புக்கொடி காட்டினர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்தவுடன் திரும்பி வந்த திமுகவினர் சிவாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அனைவரையும் தாக்கியதுடன், அவர்கள் வீடு புகுந்து கார், பைக் மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

 

இதையடுத்து கருப்பு கொடியை காட்டிய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது திமுகவின் மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய், முத்துசெல்வம், ராமதாஸ் மற்றும் சிலர் அங்கு தாக்குதல் நடத்தியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

 

இதைத்தொடர்நது திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மாமன்ற உறுப்பினருமான காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளரும்,மாமன்ற உறுப்பினருமான முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், 55வது வட்டச் செயலாளரரும் மாமன்ற உறுப்பினருமான ராமதாஸ் மற்றும் திருப்பதி ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து திருச்சி செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக காஜாமலை விஜய், முத்து செல்வம், ராமதாஸ், துரைராஜ், திருப்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது திருச்சி சிவா அவரது வீட்டில் இல்லை. அவரது வீட்டில் இருந்த சிலர் கல் வீச்சில் காயம் அடைந்தனர். இந்த நிலையில், ஊர் திரும்பிய திருச்சி சிவா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

திமுக, திருச்சி சிவா, கே.என்.நேரு

அப்போது பேசிய அவர்,” நாடாளுமன்ற குழுவுடன் பஹ்ரைன் சென்றிருந்த நேரத்தில் என் வீட்டை சிலர் தாக்கிய தகவலை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் வாயிலாகவும் அறிந்தேன்.

நடந்த சம்பவம் குறித்து எதையும் பேசும் மனநிலையில் நான் இல்லை. கடந்த காலங்களில் கூட நான் இத்தகைய பல சோதனைகளை சந்தித்தேன். அப்போது கூட யாரிடமும் நான் புகார் சொன்னதில்லை. தனி மனித இயக்கத்தை விட கட்சி பெரியது என கருதுபவன் நான்.

நடந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் எனது குடும்பத்தினரும் மன வேதனை அடைந்துள்ளனர். வீட்டில் வேலை செய்து வந்த 65 வயது பெண்மணி கூட காயம் அடைந்துள்ளார். நான் இதுவரை மனச்சோர்வில் இருப்பதாக சொன்னதில்லை. ஆனால் இப்போது அப்படித்தான் இருக்கிறேன்” என்றார் திருச்சி சிவா.

https://www.bbc.com/tamil/articles/crgqm7qm8y7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

’மனவேதனையில் இருக்கிறேன்’ - திருச்சி சிவா எம்.பி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

’மனவேதனையில் இருக்கிறேன்’ - திருச்சி சிவா எம்.பி.

இதுக்கு வந்த 28 பின்னூட்டத்தையும் வாசித்தீர்களா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இதுக்கு வந்த 28 பின்னூட்டத்தையும் வாசித்தீர்களா? 🤣

இன்னும் வாசிக்கவில்லை. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னப்பா, திமுகவுக்குள் நடக்கும் பிரச்சனை குறித்து நடுநிலை ஊடகங்கள் சொல்லும் விசயங்களை இணைத்தாலும் தூக்குபடுது.

பார்த்துத்தான் தூக்குகினமோ, அல்லது பார்க்காமலே, டபெக்கெண்டு தூக்குகினமோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த்யா காயத்ரி   Entertainment கோவை குணா விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்று கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திருக்கிறார். பல குரல் பேசி பலரையும் வியக்க வைத்தவர். மிமிக்ரி உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர். அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவருடன் கலக்கப்போவது யாரு மேடையில் பழகி நண்பனாக பயணித்த வெங்கடேஷை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினேன். "கோவை குணாவுக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்துச்சு. கடந்த மூன்று வருஷமா டயாலிசிஸ் பண்ணிட்டு இருந்தார். நண்பர்கள் எல்லாரும் எங்களால முடிஞ்ச சின்ன, சின்ன உதவிகளை அவருக்கு பண்ணிட்டு இருந்தோம். கிட்டத்தட்ட 5,6 வருஷம் முன்னாடியே அவர் இறந்திடுவார்னு எல்லாரும் நினைச்சோம். அந்த அளவுக்கு மோசமா அவருடைய உடல்நிலை இதுக்கு முன்னாடி இருந்துச்சு.   ஆனாலும், இத்தனை நாட்களாக அவரை ஆக்டிவ் ஆக வச்சிருந்தது அவருடைய நகைச்சுவை உணர்வு தான்! கோவிட் முன்னாடி வரைக்கும் ரொம்ப பரபரப்பா நிகழ்ச்சிகள் பண்ணிட்டு தான் இருந்தார். கடந்த 7,8 மாசமாகத்தான் எந்த நிகழ்ச்சிகளும் பண்ணல. அவருடைய ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டார். அவருடைய இழப்பு எங்க எல்லாருக்குமே மிகப்பெரிய இழப்பாகத்தான் கருதுறேன்!" என்றார். ஆழ்ந்த இரங்கல்கள்! கோவை குணா : `கலக்கப்போவது யாரு' ஷோவின் முதல் டைட்டில் வின்னரான குணா மரணம்!|kalakkapovathu yaru show first title winner kovai guna passed away (vikatan.com)
    • யாராவது IMF ஆபீஸ் பக்கம் போனால் அப்படியே பெரிய அதிகாரிக்கு சொல்லி விடுங்கப்பா கொடுக்கிற கடன் 2.பில்லியன் டாலருக்கும் சைனா வெடிக்கு ஓடர் பண்ணியிருக்கான்கள் என்று .
    • `திருமணத்தை எதிர்த்த பெற்றோர்; பல பெண்களுடன் நெருக்கத்தைத் தொடர்ந்த பாதிரியார்!' - விசாரணையில் தகவல் கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29). பேச்சிப்பாறை, பிலாங்காலை தேவாலயங்களில் பங்குத்தந்தையாக இருந்திருக்கிறார். பேச்சிப்பாறையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச சாட்டிங் செய்த வழக்கில் சைபர் க்ரைம் போலீஸார் இவர்மீது வழக்கு பதிவுசெய்த நிலையில், நேற்று கைதுசெய்யப்பட்டார். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பாதிரியாரை, வரும் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் நேற்று காலை முதல் போலீஸார் நடத்திய விசாரணையில், பல புதிய தகவல்கள் வெளியாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவுசெய்திருக்கின்றனர். போலீஸார் பிடியில் சிக்காமல் இருக்க தனது செல்போனின் சிம்கார்டை மாற்றியிருக்கிறார் பாதிரியார். மொத்தத்தில் மூன்று புதிய செல்போன்களை வாங்கியவர், 11 சிம்கார்டுகளை மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.     கைதான பாதிரியார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு இறையியல் கல்வி, தத்துவவியல் உள்ளிட்டவை படித்திருக்கிறார். இவருக்கு ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய 3 மொழிகள் தெரியும். சென்னையில் பயிற்சி காலத்தின்போது ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் அந்தப் பெண்ணை பாதிரியார் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். காதலித்தவர்கள் பின்னர் மிக நெருக்கமாக இருந்திருக்கின்றனர். கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ளாமல் சேவையாற்ற வேண்டும் என்பது மரபு. ஒருகட்டத்தில், பாதிரியார் பொறுப்பிலிருந்து வெளியேறி காதலியைக் கரம்பிடித்து குடும்ப வாழ்க்கை வாழ அவர் ஆசைப்பட்டிருக்கிறார்.   பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது   ஆனால் அவரது வீட்டில் உள்ளவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லையாம். சிறு வயதிலேயே பாதிரியாராக வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டதால், அவரை சாதாரண வாழ்க்கைக்கு வர வேண்டாம் என குடும்பத்தினர் கூறினார்களாம். தனது காதல் ஆசை நிறைவேறாத பிறகும், அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகிவந்திருக்கிறார். இருவரும் அவ்வப்போது வீடியோ காலில் பேசுவது வழக்கமாம். அவ்வாறு பேசும் சமயங்களில்தான் அந்தரங்க காட்சிகளை வீடியோவில் பதிவுசெய்திருக்கிறார். அந்த வீடியோக்களை லேப்டாப் ஒன்றில் வைத்திருந்திருக்கிறார். சென்னையிலுள்ள அந்தப் பெண் அவ்வப்போது குமரி மாவட்டத்துக்கும் வந்து, பாதிரியாரை தனியாகச் சந்திப்பது வழக்கமாம்.   கைதுசெய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இது தவிர தனக்கு அறிமுகமான அனைத்து இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்து, அந்த போட்டோக்களை லேப்டாப்பில் பாதுகாத்து வைத்திருக்கிறார். புது...புது இளம்பெண்களுடன் வாட்ஸ்அப் சாட்டிங் செய்வது பாதிரியாரின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. சாட்டிங் செய்யும்போதே இளம்பெண்களின் மனநிலை என்ன என்பதை புரிந்துகொள்வாராம். யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ எதுவும் செய்யவில்லை என பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ விசாரணையில் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. `திருமணத்தை எதிர்த்த பெற்றோர்; பல பெண்களுடன் நெருக்கத்தைத் தொடர்ந்த பாதிரியார்!' - விசாரணையில் தகவல் | Police interrogates priest Benedict arrested for sexual abuse - Vikatan
    • ஓம் வறுத்து வைத்தால் நல்ல ஒரு வாசம் வரும். கலரும் மண்ணிறமாக இருக்கும். கோதுமை மாவில் பார்க்க தாய்லாந்து, வியட்நாம் சீனா கடைகளில் விற்கும் மாவை 2 நிமிடம் வறுத்து எமது அரிசிமாவுடன் கலந்து அவித்தால் புட்டு பஞ்சு போல வரும். அவர்கள் dumplings செய்ய பாவிக்கிறார்கள். ஊரில் இருந்து வரும் சில மா க்கள் சரியில்லாதபோது இதை கலந்தால் நல்ல வாசமாகவும் இருக்கும். சரியான அறணை வியாபாரிகள் போல இருக்கு சிறி 😁. தாமரைக் கிழங்கு, கோகிலா தண்டு இந்தியன் கடைகளை frozen section இல் இருக்குமே. Oriental ( Thailand, Vietnaam, China, Japan)  ஆக்கலும் விட்ப்பார்கள் தகவலுக்கு நன்றி நாதமுனி.
    • நாங்கள் கேள்விமட்டும்தான் கேட்பம். அதையே நீங்கள் திருப்பிக்கேட்டால்?? வேறென்ன எஸ்கேப் அல்லது தூங்குபவர்களை போல நடிக்கிறார்கள் என்பது. கவுண்டர் சொல்வதுபோல், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!! என்ன விசுகர், எந்த கிரகத்தில இருக்கிறீர்கள்? சரி சரி நம்பிக்கைதானே வாழ்க்கை!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.