Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்?

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

9 மணி நேரங்களுக்கு முன்னர்

"ஒருவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவரை விமர்சிப்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய மிகவும் பரிதாபமான செயல். அவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் மீது கவனம் செலுத்தி வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை"

- இவை 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்ற போது, அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமியை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விமர்சித்த போது அப்போதைய கேப்டன் விராட் கோலி உதிர்த்த வார்த்தைகள்.

இந்த பின்னணியில்தான் சமீபத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் முகமது ஷமியைக் குறிவைத்து 'ஜெய் ஸ்ரீராம்' என்று சில ரசிகர்கள் முழக்கமிட்டது தொடர்பான இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவின் எதிர்வினை உற்று நோக்கப்படுகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற அந்த டெஸ்டின் முதல் நாளில் எல்லைக்கோடு அருகே நின்றிருந்த முகமது ஷமியை நோக்கி சில ரசிகர்கள் அவ்வாறு முழக்கமிட்டார்கள்.

 

அடுத்து வந்த இரு நாட்களில் சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதுவே பேசுபடுபொருளாக மாறிப் போனது. அந்த காட்சி அடங்கிய வீடியோவை பலரும் பகிர்ந்ததால் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அது வைரலாகிப் போனது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

நான்காவது டெஸ்டின் இறுதியில், அதாவது ஐந்தாவது நாள் ஆட்டநேரம் முடிந்த பிறகான பரிசளிப்பு விழாவின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.

"ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இப்போதுதான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன். அங்கே என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது" என்று அவர் பதில் தந்தார்.

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதன் தொடர்ச்சியாகவே, முகமது ஷமிக்கு இதற்கு முன்பு நிகழ்ந்த இதேபோன்றதொரு நிகழ்வை ரசிகர்கள் பலரும் நினைவுகூர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அது 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை தருணம்...

அது வரையிலும் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற வரலாற்றை தன் வசம் வைத்திருந்த இந்திய அணி முதன் முறையாக அந்த அணியிடம் தோற்றுப் போனது. அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியாக அது அமைந்தது.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் முகமது ஷமிக்கு அன்றைய தினம் மோசமானதாக அமைந்துவிட்டது. 3.5 ஓவர்கள் பந்து வீசிய அவர் 43 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா சார்பில் அவரே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பவுலராக இருந்தார்.

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் முதன் முறையாக இந்திய அணி தோல்வியுற்றதை ஜீரணித்துக் கொள்ள முடியாத ரசிகர்களின் அதிருப்தி முகமது ஷமி மீது திரும்பியது. பாகிஸ்தானுடனான தோல்விக்கு முகமது ஷமியையும், அவர் சார்ந்த மதத்தையும் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்தனர்.

ரசிகர்களிடம் இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் வந்த எதிர்வினையை, அடுத்து வந்த செய்தியாளர் சந்திப்பில் அப்போதைய கேப்டன் விராட் கோலி துணிச்சலாக எதிர்கொண்டார்.

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஒருவர் மீது அவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்துவது ஒரு மனிதன் செய்யக்கூடிய மிக மோசமான செயல். களத்தில் வெற்றிக்காக நாங்கள் எவ்வளவு தூரம் கடுமையாக முயன்றோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஷமி போன்ற ஒருவர் இந்தியாவுக்கு எத்தனை போட்டிகளில் வெற்றி தேடித் தந்துள்ளார் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

"உண்மையில், அந்த நபர்கள் மீது கவனம் செலுத்தி என் வாழ்க்கையில் ஒரு நிமிடத்தை கூட வீணாக்க நான் மட்டுமல்ல, ஷமியோ அல்லது அணியில் உள்ள வேறு யாருமோ விரும்பவில்லை" என்று விராட் கோலி கடுமையாக எதிர்வினையாற்றினார்.

விராட் கோலி மட்டுமின்றி, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு பக்கபலமாக குரல் கொடுத்தனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் அதிரடி வீரர் சேவாக் உள்பட பலரும் முகமது ஷமியை ஆதரித்தும், விளையாட்டின் இயல்பு குறித்தும் தங்களது கருத்துகளை சமூக ஊடகங்களில் உடனடியாக பதிவு செய்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இந்த வேளையில், 2021-ம் ஆண்டில் இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இனவெறி தாக்குதலை எதிர்கொண்ட போது அப்போதைய பொறுப்பு கேப்டன் ரஹானே தனக்கு உறுதுணையாக இருந்தது பற்றி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மனம் திறந்துள்ளார்.

தனியார் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ள முகமது சிராஜ், ""அந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் என்னை நோக்கி கருப்புக் குரங்கு என்று ரசிகர்கள் சிலர் குறிப்பிட்டதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அடுத்த நாளும் அது தொடர்ந்த போது எதிர்த்து நிற்க முடிவு செய்தேன்." என்றார்.

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இனவெறி தாக்குதல் குறித்து நடுவரிடம் முறையிட தீர்மானித்த நான் அதுகுறித்து கேப்டன் ரஹானேவிடம் தெரிவித்தேன். இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை நீங்கள் வேண்டுமானால் களத்தில் இருந்து வெளியே இருக்கலாம் என்று நடுவர்கள் கூறினர். ஆனால் கேப்டன் ரஹானேவோ, நாங்கள் கிரிக்கெட்டை நேசிக்கிறோம், மதிக்கிறோம், நாங்கள் ஏன் களத்தை விட்டு வெளியேற வேண்டும்? அவர்களை வெளியேற்றுங்கள்? நாங்கள் ஏன் வெளியேற வேண்டும்? என்று திட்டவட்டமாக கூறினார்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது, அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய வீரர் முகமது ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கிய ரசிகர்கள் மீது குஜராத் கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. அதேநேரத்தில், ரசிகர்களின் செயல்கள், விமர்சனங்களுக்குப் பதிலளித்து தேவையில்லாமல் சர்ச்சைகளை பெரிதாக்கக் கூடாது என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் காரணமாக இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா அதுபோன்ற பதிலை அளித்திருக்கலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c3gzkq7g4p9o

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறித்தம்பி!  நல்ல வடிவாய் பாருங்கோ அவர் மண்ணெண்ணை தகரத்தோட எல்லோ திரியிறவர்? என்ன விசர்க்கதை கதைக்கிறியள் ? புட்டின்  அருமை தெரியாதவர் யாரிருக்கிறார்கள்?   
    • தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: முக்கிய அம்சங்கள் - விரிவான தகவல்கள்   படக்குறிப்பு, தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆற்.கே. பன்னீர்செல்வம். 21 மார்ச் 2023, 09:07 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் சிறு தானிய உற்பத்தியை அதிகரிப்பது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தென்னை வளர்ச்சியை மேம்படுத்த திட்டம், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் திட்டம், சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில், அந்த அறிக்கையை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். பச்சைத் துண்டு அணிந்தபடி வந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பத்து மணியளவில் வேளாண் துறைக்கான நிதி நிலை அறிக்கையை வாசிக்க ஆரம்பித்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 முக்கிய அம்சங்கள் தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி பரப்பு 93 ஆயிரம் ஹெக்டேர் அதிகரித்து 63 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. 2021-22ஆம் ஆண்டில் 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 11 லட்சத்து 73 டன் அதிகம். டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு உற்பத்தியாகும். வரும் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்திற்காக புதிதாக ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 சிற்றூர்களில் வேளாண்மை முழுமையாக வளர்வதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும் மற்ற பணிகளையும் மேற்கொள்ள, 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்காக, 2504 ஊராட்சிகளுக்கு ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் இலவச பம்புசெட்டுகள், இலவச பண்ணைக் குட்டைகள் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும். தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஏற்கனவே 20 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு சிறுதானிய மண்டலங்கள் இருந்த நிலையில், தற்போது நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்த மாவட்டங்களும் இந்த மண்டலங்களில் சேர்த்துக்கொள்ளப்படும். நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பொது விநியோக அட்டைகளுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு தானிய திருவிழாக்களும் நடத்தப்படும். இந்த இயக்கத்திற்கு 82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் விவசாயிகளின் உடனடித் தேவைகளை நிறைவேற்றவும் வருவாயை அதிகரிக்கவும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அதில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்க 200 ஏக்கர் பரப்பளவில் அந்த ரகங்களின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கு 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு பட்ஜெட் 2023: "குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்.15 முதல் தொடங்கும்"20 மார்ச் 2023 'தமிழ்நாடு அரசு கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை' - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி21 மார்ச் 2023 உடலில் உரசுபவரைக் குத்துவதற்கு இந்தியப் பெண்கள் பயன்படுத்தும் சின்னஞ்சிறு ஆயுதம்6 மணி நேரங்களுக்கு முன்னர் பாரம்பரிய நெல் விதைகளை விதை வங்கியில் பராமரித்துவரும் 10 விவசாயிகளுக்கு தலா மூன்று லட்சம் வீதம் 30 லட்ச ரூபாய் வழங்கப்படும். குறுவைப் பருவத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்ய ஊக்குவிக்க 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெல்லுக்குப் பின் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதை ஊக்குவிக்க 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கு வேளாண் கருவிகளை வாங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 60,000 வேளாண் கருவிகள் இதன் மூலம் வழங்கப்படும். அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க சமீபத்தில் கொள்கை வெளியிடப்பட்டது. விவசாயிகள் அங்ககச் சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க 10 ஆயிரம் ஹெக்டேருக்கு சான்றிதழைப் பெற மானிய உதவி அளிக்கப்படும். இதற்காக இந்த ஆண்டில் 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க ஐந்தாண்டுகளுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிற அங்கக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் குடியரசு தினத்தன்று ஐந்து லட்ச ரூபாய் பணப்பரிசுடன் விருது வழங்கப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.10 கோடியும், பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாயும் என 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தி பம்ப் செட்கள் வாங்க இந்த மானியம் பயன்படும். தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர்கள், விவசாயிகளின் அடிப்படைத் தகவல்களான ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைச் சேமித்துவைக்க GRAINS (Grower Online Registration of Agriculture Inputs System) என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும் உற்பத்தியையும் அதிகரிக்க பயறு பெருக்குத் திட்டம் 30 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய துவரை மண்டலத்தில் துவரை சாகுபடிக்கு 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். எண்ணெய் வித்துக்கான சிறப்புத் திட்டம்: சூரியகாந்திப் பயிரின் உற்பத்தித் திறனை உயர்த்தவும் நிலக்கடலை, எள், சோயா, மொச்சை போன்ற பயிர்களை பரவலாக்கம் செய்யவும் 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தென்னை உற்பத்தியில் தேசிய அளவில் முதலிடம் பெற, மறுநடவு - புத்தாக்கத் திட்டம் 20 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். குட்டை - நெட்டை வீரிய ஒட்டுரக தென்னைக்கு விவசாயிகளிடம் வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டில் 10,000 குட்டை - நெட்டை ஒட்டுரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். பயிர் காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்த மாநில அரசின் மானியமாக இந்த ஆண்டு 2,337 கோடி ரூபாய் செலுத்தப்படும். கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்யப்படும் கரும்பு சாகுபடி பரப்பு 2022-23 காலகட்டத்தில் 55,000 ஹெக்டேர் அதிகரித்துள்ளது. கரும்புக்கு டன் ஒன்றுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாய விலையான 2,821 ரூபாயுடன் 195 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதற்கென 253 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.   படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டு விவசாயிகளின் இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மல்லிகை பூ மதுரையில் மட்டுமின்றி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 4,300 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் மல்லிகைப் பூக்கள் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் இத்திட்டம் ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். பலா மரங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஐந்து ஆண்டுகள் தொடர் திட்டமாக பலா இயக்கம் செயல்படுத்தப்பட்டு, 2,500 ஹெக்டர் பரப்பளவில் பலா சாகுபடி மேற்கொள்ளப்படும். இத்திட்டம், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில் இவ்வியக்கத்திற்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,200 ஹெக்டர் பரப்பில் மிளகாய் பயிரிடப்படுகிறது. இப்பரப்பை 40,000 ஹெக்டேராக உயர்த்தி, உற்பத்தியினை அதிகரிக்க இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும். மிளகாயின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க ஏதுவான கட்டமைப்பை உருவாக்க ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000: திமுக அரசின் அறிவிப்பும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும்20 மார்ச் 2023 பொள்ளாச்சி அருகே காகங்கள் வேட்டையாடப்பட்டது ஏன்? - எச்சரிக்கும் மருத்துவர்கள்21 மார்ச் 2023 பாலியல் தொழிலாளியாக இருந்த திருநங்கை அலிஷா வாழ்க்கையில் நடந்த திடீர் மாற்றம்20 மார்ச் 2023 வரும் ஆண்டு 1,000 ஹெக்டேர் பரப்பில் முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படுவதோடு, பதப்படுத்துதலுக்கும் மதிப்புக்கூட்டுதலுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும். முருங்கையில் ஏற்றுமதி வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில் இதற்கென 11 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக தக்காளி, வெங்காயம் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தைப்பு இயந்திரங்கள், சேமிப்புக் கட்டமைப்புகள், அறுவடை இயந்திரங்கள், வெங்காயத்தாள் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகிய உதவிகள் வழங்க 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெங்காய வரத்து நிலைப்படுத்தப்படும். தக்காளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல், தடுக்கு அமைத்தல், அதிக மகசூல் தரும் இரகங்களைப் பயிரிடுதல், மூடாக்கு இடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும். 19 கோடி ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில், பத்து இலட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச் செடிகள் அடங்கிய தொகுப்பு 15 கோடி ரூபாய் நிதியில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், 300 குடும்பங்களுக்கு இத்தொகுப்புகள் வழங்கப்படும். 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். Twitter பதிவை கடந்து செல்ல, 4 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 4 வரும் ஆண்டில் வேளாண் இயந்திரங்கள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், கரும்பு சாகுபடிக்கு ஏற்ற இயந்திரங்கள், கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஆகியவற்றுக்காக மத்திய, மாநில அரசின் நிதியிலிருந்து 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதோடு பயனாளிகள் தேர்வும் கணினிமயமாக்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 27 சேமிப்புக் கிடங்குகளில் 34,000 மெட்ரிக் டன் கொள்ளளவு ஏற்படும் வகையில், வரும் ஆண்டில் 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மறு கட்டமைப்பு மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மேலும், 50 உழவர் சந்தைகளுக்கு 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி, உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெற வரும் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் வளாகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தை மெருகேற்றவும், மேம்படுத்தவும், மேலும் கட்டமைப்புகளை உருவாக்கவும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 2022-23 ஆம் ஆண்டில் இது வரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 12,648 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 14,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். அதேபோல் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கூட்டுறவு கடனாக 1,500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும். வரும் ஆண்டில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ’மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Millet Cafe) உருவாக்கப்படும். Twitter பதிவை கடந்து செல்ல, 5 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 5 2023-24 ஆம் ஆண்டில் வேளாண்மை, அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தி, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு, உணவுத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளின் கீழ் 38 ஆயிரத்து 904 கோடியே 46 லட்சத்து ஆறு ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய வேளாண் நிதி நிலை அறிக்கையில் இலக்கியத்திலிருந்து பல்வேறு மேற்கோள்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ் இலக்கிய மேற்கோள்கள் உட்பட கலீல் ஜிப்ரான், சேக்ஸ்பியர் உள்ளிட்ட சர்வதேச கவிஞர்களிடமிருந்தும் மேற்கோள்காட்டிப் பேசினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். https://www.bbc.com/tamil/articles/cye4d4jwgn1o
    • பையன் நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். சரி,  மேற்குலக நாடுகளின் இந்த பாரபட்சமான அணுகு முறைக்கு எதிர்பபு தெரிவித்து புலம் பெயர் தமிழராகிய நாங்கள் அனைவரும் மேற்கத்தய நாடுகளில் இருந்து வெளிநடப்பு செய்து, ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகளில் குடிபெயரும் ஒரு போராட்டத்தை தொடங்கினால், அதற்கு ஆதரவாக அதை நடைமுறையில் செய்ய குறைந்தது யாழ் இணைய உறுப்பினர்களாகிய நாமாவது தயாரா நண்பா?  ஒப்பீட்டு ரீதியில் ரஷ்யா போன்ற நாடுகளை விட மனித உரிமைகளும் ஜனநாயக விழுமியங்களும் பேணப்படுவதால் தானே லட்சக்கணக்கான தமிழர்கள் இங்கு புலம் பெயர்ந்து அடுத்த தலைமுறையை கூட உண்டாக்கி அந்த தலைமுறை இங்கு மேற்கு நாடுகளில் உயர் பதவிகளில் கூட இருக்கின்றனரே! 
    • இந்த மா ஸ்காபாரோவில்  எங்கு எடுக்கலாம்.? நில்மினி உங்களுக்கு எங்கு இருந்து தருவிக்கிறார்கள்.  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.