Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக சம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக சம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ்

Published By: VISHNU

15 MAR, 2023 | 06:37 PM
image

(என்.வீ.ஏ.)

மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இருபது 20 உலக சம்பியன் இங்கிலாந்தை 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தி வரலாற்று தொடர் வெற்றியை பங்களாதேஷ் ஈட்டியது.

1403_litton_das.jpg

முதல் இரண்டு போட்டிகளில் ஈட்டிய வெற்றிகளுடன் தொடரை தனதாக்கிக்கொண்டிருந்த பங்களாதேஷ், மிர்பூர் ஷியரே பங்ளா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற கடைசிப் போட்டியில் 16 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

1403_najmul_hassain_shanto.jpg

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நொக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

1403_banglasdesh_clean_sweep_eng__3_-_0_

13 ஓவர்கள் நிறைவின்போது இங்கிலாந்து ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்ததால் அவ்வணி வெற்றியீட்டி ஆறுதல் அடையும் என நம்பப்பட்டது.

1403_eng_vs_bang.jpg

ஆனால், கிரிக்கெட் விசித்திரமான விளையாட்டு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

14ஆவது ஓவரின் முதல் பந்தில் டேவிட் மாலனும் அடுத்த பந்தில் ஜொஸ் பட்லரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ஓட்ட வேகம் குறைந்ததுடன் விக்கெட்களும் சரளமாக விழத்தொடங்கியது.

டேவிட் மாலன் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க ஜொஸ் பட்லர் 31 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்று ரன் அவுட் ஆனார்.

ஜொஸ் பட்லர் கவர் திசையில் பந்தை அடித்துவிட்டு அவசரமான ஓட்டம் ஒன்றை எடுக்க விளைந்தபோது பந்தை பிடித்த மெஹிதி ஹசன் மிராஸ் நேராக விக்கெட்டை நோக்கி எறிந்து அவரை ரன் அவுட் ஆக்கினார்.

இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்களை இழந்து ஆட்டத்தின் பிடியை தளரவிட்டிருந்தது.

அவர்களைவிட பென் டக்கட் 11 ஓட்டங்களையும் கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தன்விர் இஸ்லாம், ஷக்கிப் அல் ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

லிட்டன் தாஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இரண்டு சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி பங்களாதேஷை பலப்படுத்தியிருந்தார்.

ஆரம்ப விக்கெட்டில் ரொனி தாலுக்தாருடன் 55 ஓட்டங்களைப் பகிர்ந்த லிட்டன் தாஸ், தொடர்ந்து 2ஆவது விக்கெட்டில் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவுடன் 84 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

லிட்டன் தாஸ் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 73 ஓட்டங்களைக் குவித்ததுடன் ரொனி தாலுக்தார் 24 ஓட்டங்களைப் பெற்றார்.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஆட்டநாயகன்: லிட்டன் தாஸ், தொடர்நாயகன்: நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ.

முதல் இரண்டு போட்டிகள்

இரண்டு அணிகளுக்கும் இடையில் சட்டோக்ராமில் நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் 6 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

அப் போட்டியில் இங்கிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் 18 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்ற வெற்றியீட்டியது.

மிர்பூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 4 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது. அப்போட்டியில் இங்கிலாந்து 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் 18.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

https://www.virakesari.lk/article/150620

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்க‌ளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌ஸ்ர‌ம்

இந்தியாவை தொக்க‌டிச்சார்க‌ள் ஒரு நாள் தொட‌ரில்

20ஓவ‌ர் விளையாட்டில் இங்லாந்தை 3-0 வென்று இருக்கின‌ம்...................

வ‌ங்க‌ளாதேஸ் அணிக்கு வாழ்த்துக்க‌ள்.................

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது  ஒரு பிரச்னை என்பது உண்மை. அனால், அதை தேவை இல்லாத பூகோள அரசியலாக்கி, icc க்கு இழுத்து சென்றது - இதை குழப்பி விட்டது. ருசியா மறுத்து இருந்தால், icc வரை போய் இருக்கலாம்.   ரஷ்யா இப்பொது உத்தியோக பூர்வம் இல்லாடதா கலந்துரையாடலை UN பாதுகாப்பு சபையில் தொடக்க இருக்கிறது . இதன் வழியே, இதில் இருக்கும் அரசியல் வெளிப்பட்டு, வேறு நாடுகள் வேறு முடிவை எடுக்க கூடும்.
    • மா, மிளகாய்த்தூள் போன்றவைகளை நமது பிராண்ட் சொந்தக்காரர்கள், இந்திய, கேரள வியாபாரிகளுக்கு சப் - காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். அதனால் தரம் நன்றாக இராது. முக்கியமாக, மிளகாய், அரசி, கழுவி, காயவைத்து அரைத்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. London Times பத்திரிக்கையில், ஆந்திர மாநிலத்தில் கடல் போல பரவி காய வைத்திருக்கும் மிளகாய் படம் போட்டிருந்தார்கள். மிளகாய் செடியை புடுங்கி, அதிலிருக்கும், மிளகாயை அப்படியே பரவி விடப்பட்ட அதே நிலத்தில் போட்டு காய விடுகிறார்கள். அதனை கழுவி சுத்தம் செய்வார்கள் என்று தோன்றவில்லை. வாங்குவோர் தான் செய்ய வேண்டும். வாங்குபவர்கள் இந்த சப் - காண்ட்ராக்ட் காரர்கள் என்றால், காசை மிச்சம் பிடிக்கத்தானே செய்வார்கள். இப்போது, ஊரில் இருந்து, நேரடியாக உறவினர்களுக்கு சொல்லி, dhl மூலம் எடுக்கிறார்கள். காசு அவ்வளவு இல்லை. காரணம். 10kg வரை ஒரு நிர்ணய கட்டணம் என்று வைத்துள்ளார்கள். ஒருமுறை முயன்று பாருங்கள்.
    • சண்டை பிடிக்கும்போதும், மற்றவர்களை குறை சொல்லும்போதும் பாவிக்கும் சொல்😂இப்ப நினைத்துப்பார்த்தால் சிரிப்பாக இருக்கு.
    • நீங்கள் இருவரும் சொல்வது உண்மைதான். இங்கு மத்திய கிழக்கு நாடு வந்தவுடன் எந்த மல்லு கடைக்கு போனாலும் இந்த பிட்டு தான். அதுவும் வாழைப்பழம், அப்பளம் போன்றவற்றை பிட்டுவோடு பிசைந்து அடிப்பார்கள்.. ‘வ்வ்வேவே’ என வாந்திதான் வரும்.  ஆனால் ஊரில் கிராமத்தில் எப்பொழுதாவது அம்மா பச்சரிசி மாவை இடித்து குழைத்து அவித்து அதனுடன்  தேங்காய் துருவல் மற்றும் சீனியை கலந்து அம்மா செய்து கொடுப்பார்கள். அம்மா செய்த அவ்வகை புட்டு பிடிக்கும்.
    • த்யா காயத்ரி   Entertainment கோவை குணா விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்று கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திருக்கிறார். பல குரல் பேசி பலரையும் வியக்க வைத்தவர். மிமிக்ரி உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர். அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவருடன் கலக்கப்போவது யாரு மேடையில் பழகி நண்பனாக பயணித்த வெங்கடேஷை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினேன். "கோவை குணாவுக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்துச்சு. கடந்த மூன்று வருஷமா டயாலிசிஸ் பண்ணிட்டு இருந்தார். நண்பர்கள் எல்லாரும் எங்களால முடிஞ்ச சின்ன, சின்ன உதவிகளை அவருக்கு பண்ணிட்டு இருந்தோம். கிட்டத்தட்ட 5,6 வருஷம் முன்னாடியே அவர் இறந்திடுவார்னு எல்லாரும் நினைச்சோம். அந்த அளவுக்கு மோசமா அவருடைய உடல்நிலை இதுக்கு முன்னாடி இருந்துச்சு.   ஆனாலும், இத்தனை நாட்களாக அவரை ஆக்டிவ் ஆக வச்சிருந்தது அவருடைய நகைச்சுவை உணர்வு தான்! கோவிட் முன்னாடி வரைக்கும் ரொம்ப பரபரப்பா நிகழ்ச்சிகள் பண்ணிட்டு தான் இருந்தார். கடந்த 7,8 மாசமாகத்தான் எந்த நிகழ்ச்சிகளும் பண்ணல. அவருடைய ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டார். அவருடைய இழப்பு எங்க எல்லாருக்குமே மிகப்பெரிய இழப்பாகத்தான் கருதுறேன்!" என்றார். ஆழ்ந்த இரங்கல்கள்! கோவை குணா : `கலக்கப்போவது யாரு' ஷோவின் முதல் டைட்டில் வின்னரான குணா மரணம்!|kalakkapovathu yaru show first title winner kovai guna passed away (vikatan.com)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.