Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனாவுக்கு பிறகு தமிழகத்தில்மாரடைப்பால்தான் அதிக அளவில் உயிரிழப்பு: ஆய்வு நடத்துமாறு மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு பிறகு தமிழகத்தில்மாரடைப்பால்தான் அதிக அளவில் உயிரிழப்பு: ஆய்வு நடத்துமாறு மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

Published By: RAJEEBAN

16 MAR, 2023 | 10:26 AM
image

கொரோனாவுக்கு பின்னர் தமிழகத்தில் இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் `எச்3என்2' என்ற இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களைக் கண்டறிந்து, மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது.

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையிலோ அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவிலோ அனுமதிக்கும் நிலை இதுவரை ஏற்படவில்லை. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்தது தொடர்பான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இறந்ததற்கான காரணம் தெரிவிக்கப்படும்.

கொரோனாவுக்கு  பிறகு, இளம்வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது பெரிதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பாக ஏற்கெனவே இதயவியல் துறைமருத்துவர்களுடன் ஆலோசித்துள்ளோம்.

இது சம்பந்தமான உலகளாவிய ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று உலகசுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தஇதயவியல் மருத்துவர்களும் ஆய்வு மேற்கொண்டு, உரியதீர்வு காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/150642

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுமா? இந்திய மத்திய அரசு விளக்கம்

Published By: RAJEEBAN

17 MAR, 2023 | 03:45 PM
image

கொரோனா தடுப்பூசியால் திடீர் மாரடைப்பு ஏற்படும் என எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மக்களவையில் இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடந்த இன்றைய கூட்டத்தொடரின் போது மக்களவையில் உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங், கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் திடீரென மாரடைப்பு ஏற்படக்கூடிய நிகழ்வு அதிகரித்துள்ளதா? இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் அதிக அளவு மாரடைப்பு ஏற்படுவது குறித்து எந்த ஒரு தரவுகளும் மத்திய அரசிடம் இல்லை.

அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு பின்னர் மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்பதற்கான எந்த ஒரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு ஆய்வுகளையும் ஐசிஎம்ஆர் மேற்கொள்ளவில்லை எனவும் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/150779

Link to comment
Share on other sites

இந்தியாவில் அஸ்ராசெனிக்கா தான் பெரும்பாலும் பாவிக்கப்பட்டது.மேற்கில் இவை சில நாடுகளால் தடை செய்யப்பட்டது தெரிந்த்தே. இந்த ஊசியும் காரணமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2023 at 18:48, ஏராளன் said:

கொரோனாவுக்கு பிறகு தமிழகத்தில்மாரடைப்பால்தான் அதிக அளவில் உயிரிழப்பு: ஆய்வு நடத்துமாறு மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

Published By: RAJEEBAN

16 MAR, 2023 | 10:26 AM
image

கொரோனாவுக்கு பின்னர் தமிழகத்தில் இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் `எச்3என்2' என்ற இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களைக் கண்டறிந்து, மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது.

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையிலோ அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவிலோ அனுமதிக்கும் நிலை இதுவரை ஏற்படவில்லை. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்தது தொடர்பான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இறந்ததற்கான காரணம் தெரிவிக்கப்படும்.

கொரோனாவுக்கு  பிறகு, இளம்வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது பெரிதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பாக ஏற்கெனவே இதயவியல் துறைமருத்துவர்களுடன் ஆலோசித்துள்ளோம்.

இது சம்பந்தமான உலகளாவிய ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று உலகசுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தஇதயவியல் மருத்துவர்களும் ஆய்வு மேற்கொண்டு, உரியதீர்வு காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/150642

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.