Jump to content

"ஒரு கையோ காலோ இல்லை என்றாலும் எங்களால் கிரிக்கெட் விளையாட முடியும்" - சாதிக்கும் மாற்றுத்திறனாளி பெண்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"ஒரு கையோ காலோ இல்லை என்றாலும் எங்களால் கிரிக்கெட் விளையாட முடியும்" - சாதிக்கும் மாற்றுத்திறனாளி பெண்கள்

மாற்றுத் திறனாளி பெண் கிரிக்கெட்
3 மணி நேரங்களுக்கு முன்னர்

கிரிக்கெட் மைதானத்தில் தேர்ட் மேன் பகுதியில் ஊன்றுகோல் உதவியுடன் ஃபீல்டிங் செய்ய முடியுமா?

ஒரு கால் இல்லாமல் ஊன்றுகோல் உதவியுடன் பேக் ஃபுட்டில் கட்ஷாட் அடிக்க முடியுமா?

சாத்தியமே இல்லை என்கிறீர்களா? ஆனால், இந்த சூப்பர் பெண்களுக்கு இது எல்லாமே சாத்தியம்தான்.

பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதெல்லாம் கிடக்கட்டும், அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே ஆபத்தானது எனக் கருதப்படும் ஜார்கண்ட் மாநிலம் வாசிப்பூரில் வளர்ந்தவர் தாஸ்னிம் (26). இப்போது எல்லோரும் நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கான பள்ளி ஆசிரியையாக உள்ளார் அவர்.

 

வாய்க்கும் வயிற்றுக்கும் மட்டுமே போதுமான வருவாய் உள்ள குஜராத் மாநிலத்தின் பழங்குடி சிற்றூர் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர் லலிதா (26). அவருக்கு இப்போது ஒரு கைக்குழந்தையும் இருக்கிறது. அவருடைய வீட்டில் இப்போதும் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை. முழுமையான மின் இணைப்பும் இல்லை.

தாஸ்னிம், லலிதா இருவரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பிறந்து வளர்ந்தவர்கள். ஒருவர் தினமும் டிவியில் கிரிக்கெட் பார்த்து வளர்ந்தவர். மற்றொருவருக்கு வீட்டில் அப்படி விளையாட்டை டிவியில் பார்க்கும் வசதி இல்லை. ஆனால், இப்போது இருவருமே தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.

அவர்கள் இருவருக்கும் பொதுவான இன்னொன்று, அவர்கள் எதிர்கொண்ட போலியோ பாதிப்பு.

பெண் நேயர்களுக்காக நாங்கள் மேற்கொண்டுள்ள இதழியல் திட்டமான BBCShe-இன் ஒரு பகுதியாக TheBridge உடன் இணைந்து இந்தச் செய்தியைத் தயாரித்துள்ளோம்.

“குழந்தைப் பருவத்தில் நான் இர்ஃபான் பதான் ரசிகை. ஒரு மேட்சைக்கூட விடாமல் பார்ப்பேன். ஆனால், எனக்கான எல்லை எது என்பது எனக்குத் தெரியும். ஸ்டேடியத்துக்கு போய் விளையாடுவதெல்லாம் இருக்கட்டும், ஸ்டேடியம் போய் ஒரு மேட்ச் பார்ப்பதுகூட எனக்குச் சாத்தியமில்லை என்று நான் நினைத்தேன்.

ஏனென்றால், போலியோ நோய் தாக்கியதன் காரணமாக வாழ்க்கை குறித்து எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. மன அழுத்தத்துடனேயே இருந்தேன்,” என்கிறார் டாஸ்னிம்.

“இப்போது புதிய நம்பிக்கை வந்திருக்கிறது. மக்களுக்கு என்னைத் தெரியத் தொடங்கியிருக்கிறது,” என்கிறார் அவர்.

பெரிதும் ஆண்களே விளையாடும் கிரிக்கெட் விளையாட்டை, தங்களுடைய உடல் குறைபாடுகளைக் கடந்து டஜன் கணக்கான டாஸ்னிம்களும் லலிதாக்களும் விளையாடி வருகிறார்கள்.

இந்தியாவில் 1.2 கோடி மாற்றுத் திறனாளிப் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் பேர் தங்களுக்கு உதவும் வாய்ப்புகளோ, அடிப்படை வசதிகளோ இல்லாத கிராமப் பகுதிகளில் வசிக்கிறார்கள்.

ஆனாலும், நாம் பார்க்கும் இந்தப் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கான தங்கள் ஆர்வத்தைச் செயல்படுத்துகிறார்கள். இதற்காக சமூக கட்டுப்பாடுகளை மீறுவதற்கும், தேவையான தளவாடங்களைப் பெறுவதற்கும், பயணம் செய்வதற்கும் போராடுகிறார்கள். இதன் மூலம், தடைகளைக் கடந்து சாதிப்பதற்கு கனவு காண்பதற்காக சமூகத்தின் ஒரு பகுதிக்கு இவர்கள் ஊக்கம் அளிக்கிறார்கள்.

முதல் மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணி

மாற்றுத் திறனாளி பெண் கிரிக்கெட்
 
படக்குறிப்பு,

மொபைலில் கிரிக்கெட் பார்க்கும் லலிதா

2019இல் இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளி பெண்கள் கிரிக்கெட் முகாம் பரோடா கிரிக்கெட் சங்கத்தின் உதவியோடு குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

“மாற்றுத் திறனாளிப் பெண்கள், சாதாரண பெண்களைவிடவும் அதிக மன உறுதியோடும், தங்களை நிரூபிக்கவேண்டும் என்ற ஊக்கத்தோடும் இருக்கிறார்கள். கொஞ்சம் ஏதாவது கூடுதலாக செய்து, இந்த விளையாட்டுக்கு ஏற்றவர்களாகத் தங்களை ஆக்கிக்கொள்ள எப்போதும் அவர்கள் முயன்றுகொண்டே இருக்கிறார்கள்,” என்கிறார் இந்த முயற்சியை முன்னெடுக்கும் முதன்மை பயிற்சியாளர் நிதேந்திர சிங்.

குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாம் சில பெண்களுக்கு வாழ்க்கையில் புதிய பாதையைக் காட்டியது. சிறப்பான திறமையுடைய பெண் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண இந்த முகாம் உதவியது. இப்படி அடையாளம் காணப்பட்டவர்கள், பின்னாளில் இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி பெண்கள் கிரிக்கெட் அணியை அமைப்பதற்கு வினையூக்கிகளாக இருந்தார்கள்.

மாற்றுத் திறனாளி பெண் கிரிக்கெட்

ஆனால், அதன் பிறகு முன்னேற்றம் ஏதுமில்லாமல் இருந்து வந்தது.பல மாநிலங்களில், மாநில அளவிலான மாற்றுத் திறனாளி பெண்கள் கிரிக்கெட் அணியை அமைப்பதே போராட்டமாக இருந்தது.

2021இல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு என்று ஒரு குழுவை அமைத்தது. ஆனால், இதுவரை இதற்கு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை.

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு நிதியுதவி செய்யும் வகையிலான அரசாங்க கொள்கையும் ஏதுமில்லை. மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான எந்தத் தெளிவான பாதையும் இல்லை.

பாரா பேட்மின்டன், பாரா தடகளம் ஆகியவற்றுக்கு பாராலிம்பிக்சும், தேசிய அளவிலான போட்டிகளும் நடப்பதால், அவற்றுக்கு ஒப்பீட்டளவில் விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஒப்பீட்டளவில் நல்ல வாய்ப்பு உள்ளது. வேலை வாய்ப்புக்கான தெளிவான பாதை இல்லாவிட்டாலும்கூட, தங்களுடைய விடாமுயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் சில மாற்றுத் திறனாளி பெண் கிரிக்கெட் வீரர்கள் எல்லோரையும் வியப்படைய வைத்திருக்கிறார்கள்.

இப்போது இந்த அணிக்கு எந்த ஒளிமயமான எதிர்காலமும் இல்லாவிட்டாலும்கூட, குஜராத் முழுவதிலும் இருந்து 10-15 பெண்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒன்றுகூடி பயிற்சி செய்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் லலிதா(26). குஜராத் மாநிலம், டாஹோட் பகுதியில் உள்ள உமரியா கிராமத்தைச் சேர்ந்த இவர் வாரம் 150 கி.மீ. பயணம் செய்து பயிற்சிக்காக வதோதரா வந்து செல்கிறார்.

மாற்றுத் திறனாளி பெண் கிரிக்கெட்
 
படக்குறிப்பு,

ஆலியா

இரண்டு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட இவருடைய இடது காலில் எந்த இயக்கமும் இல்லை. ஆனால், பேட்டிங் செய்யும்போது அட்டகாசமான ஃபுட்வொர்க்கை வெளிப்படுத்துவதற்கு இது லலிதாவுக்குத் தடையாக இல்லை. ஊன்றுகோல் உதவியோடுதான் இவர் கிரீசில் நிற்கிறார். ஆனால், இவரது நிற்கும் வாட்டமும் மட்டையின் வீச்சும் எந்தத் தொழில்முறை கிரிக்கெட் வீரரோடும் ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது.

“முதன்முதலாக நான் கிரிக்கெட் பார்த்தது மொபைலில்தான். 2018இல் அப்படிப் பார்த்தபோதே எனக்கு கிரிக்கெட் விளையாடவேண்டும்போல இருந்தது. இப்போதுகூட எனக்கு கிரிக்கெட் பார்க்க வீட்டில் ஒரு தொலைக்காட்சி இல்லை. ஆனால், சர்வதேசரீதியில் என் நாட்டுக்காக விளையாடுவது குறித்து நான் கனவு காண்கிறேன்,” என உற்சாகத்தோடு கூறுகிறார் லலிதா.

தலித் கூலித் தொழிலாளியான அவரது கணவர் பிரவீன் அவருக்கு ஒப்பிடமுடியாத ஆதரவை அளிக்கிறார். லலிதா பயிற்சிக்குச் செல்லும்போது அவருடன் பிரவீனும் 8 மணி நேரம் பயணம் செய்கிறார். மனைவி பயிற்சியில் ஈடுபடும்போது அவர்களது 5 மாத குழந்தையைப் பார்த்துக் கொள்கிறார்.

“நாங்கள் பயிற்சிக்குக் கிளம்பும்போது, ஆட்கள் லலிதாவின் உடையைப் பற்றி ஏதாவது சொல்வார்கள். காரணம், கிராமத்தில் எந்தப் பெண்ணும் பேண்டும், டி ஷர்ட்டும் அணிவதில்லை. நடக்கவே முடியாதபோது எப்படி அவர் விளையாடுவார் என்றும் அவர்கள் பேசுவார்கள்.

அவர்கள் சொல்வதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. என் மனைவி முன்னேறிச் செல்லவேண்டும். எங்களுக்கெல்லாம் பெருமையைத் தரவேண்டும் என்பதே என் விருப்பம்,” என்கிறார் அவர்.

மாற்றுத் திறனாளி பெண் கிரிக்கெட்

விளையாட்டுக்கு ஆணா, பெண்ணா என்ற பாகுபாடு இல்லை. தேவையெல்லாம், பெண்களால் விளையாட்டில் சாதிக்க முடியும் என்று நம்புவதும், ஆதரவு வழங்குவதும்தான் என்ற கூற்றுக்கு வாழும் சான்றாக இருக்கிறார் பிரவீன்.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டில் உள்ள பாலின சிக்கல்கள் குறித்து நிறைய பேசப்படுகிறது. ஆனால், டாஸ்னிம், லலிதா ஆகியோர் எதிர்கொள்ளும் வேறு சிக்கள்கள் உண்டு. அவை பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

போதிய ஆதரவு இல்லாத நிலை

மாற்றுத் திறனாளி கிரிக்கெட்டுக்கு தேவை வெறும் உபகரணங்கள் மட்டுமே அல்ல. இதற்கு வேறு வகையான ஃபீல்டு செட்டிங் தேவை. கால்களில் மாற்றுத் திறன் உடைய பேட்ஸ்வுமனுக்கு ரன்னர்கள் தேவை. எல்லா வீரர்களின் திறனையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள பவர்பிளே முறை உருவாக்கப்படவேண்டும்.

“பெண்கள் பிரீமியர் லீக் போன்ற சில முயற்சிகளால் இன்று சில பெண் விளையாட்டு வீரர்கள் பெயர்களாவது தெரிகிறது. ஆனால், இப்படி ஒரு டோர்னமென்ட் விளையாடுவதற்குக்கூட எங்களுக்கு வசதிகள் இல்லை,” என்கிறார் ஆலியா கான். இவர் இந்தியாவின் முதல் தேசிய மாற்றுத்திறனாளி பெண்கள் அணியின் கேப்டனாக உள்ளார்.

இந்த விளையாட்டை விளையாட முயல்வதால் தாங்கள் இழிவுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

“நல்லா இருக்கும் பெண்களே கிரிக்கெட் விளையாட முடியாது. இதில் ஒரு கையை வைத்துக்கொண்டு உனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டுமா?' என்பது போன்ற சொற்களை நான் பலமுறை கேட்டுவிட்டேன்.

சமுதாயத்தில் பெண்களுக்கு என்ன நிலைமை தெரியுமா? நானெல்லாம் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும். வெளியே வந்து விளையாடி நேரத்தை வீணாக்கக்கூடாது என்ற பேச்சை அடிக்கடி கேட்கிறேன்,” என்கிறார் அவர்.

திவ்யாங்க கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட் ஆஃப் இந்தியா (இந்திய ஊனமுற்றோர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் DCCBI) ஒரு தனி அமைப்பாக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பை வழிநடத்தும் பெண் நிர்வாகிகள் இல்லை.  பார்வையற்ற பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் இதைவிட சிறப்பான ஏற்பாடு உள்ளது. நிறுவனங்களின் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி மூலமாகவும், இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தின் (CABI) மூலமாகவும் இதற்கான உதவிகள் வருகின்றன.  “BCCI, DCCBI, CABI ஆகிய அனைத்து அமைப்புகளுமே ஒன்று சேர்ந்து மாற்றுத் திறனாளி பெண்கள் கிரிக்கெட்டுக்கு உதவும் அமைப்பை உருவாக்கவேண்டும். விளையாட்டு வருகிறார்கள், விளையாடுகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். ஆனால், இதைப் பார்ப்பதற்குக்கூட ஒருவரும் இல்லை. அவர்களாலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை எப்படி மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள்?” என்று கேட்கிறார் இவர்களுக்கான பயிற்சியாளர் நிதேந்திர சிங்.  நல்ல நிலையில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. விளம்பரத்தின் மூலமும் வருவாய் வருகிறது. அவர்கள் விளையாடுவதைப் பார்க்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டும் வருகிறார்கள். இது மாதிரியான அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கான நம்பிக்கை இல்லாமலேயே மாற்றுத்திறனாளி பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடிவருகிறது. அதீதமான ஆர்வம் காரணமாகவும், சமூதாயத்தில் தங்களுக்கு என ஓர் இடம் வேண்டும் என்பதற்காகவும், தடைகளை உடைப்பதற்கான துணிச்சல் இல்லாத தங்களைப் போன்ற மற்ற பெண்களுக்கு ஊக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் இவர்கள் தாங்களே முயற்சி எடுத்து பயிற்சி மேற்கொள்கிறார்கள்.    (BBCShe தொடர். தயாரிப்பு: திவ்யா ஆர்யா, பிபிசி)
 
படக்குறிப்பு,

களத்திலும் வீட்டிலும் லலிதா

திவ்யாங்க கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட் ஆஃப் இந்தியா (இந்திய ஊனமுற்றோர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் DCCBI) ஒரு தனி அமைப்பாக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பை வழிநடத்தும் பெண் நிர்வாகிகள் இல்லை.

பார்வையற்ற பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் இதைவிட சிறப்பான ஏற்பாடு உள்ளது. நிறுவனங்களின் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி மூலமாகவும் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தின் (CABI) மூலமாகவும் இதற்கான உதவிகள் வருகின்றன.

“BCCI, DCCBI, CABI ஆகிய அனைத்து அமைப்புகளுமே ஒன்று சேர்ந்து மாற்றுத்திறனாளி பெண்கள் கிரிக்கெட்டுக்கு உதவும் அமைப்பை உருவாக்க வேண்டும். விளையாட வருகிறார்கள், விளையாடுகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். ஆனால், இதைப் பார்ப்பதற்குக்கூட ஒருவரும் இல்லை. அவர்களாலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை எப்படி மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள்?” என்று கேட்கிறார் இவர்களுக்கான பயிற்சியாளர் நிதேந்திர சிங்.

நல்ல நிலையில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. விளம்பரத்தின் மூலமும் வருவாய் வருகிறது. அவர்கள் விளையாடுவதைப் பார்க்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு வருகிறார்கள். இது மாதிரியான அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கான நம்பிக்கை இல்லாமலேயே மாற்றுத்திறனாளி பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.

அதீதமான ஆர்வம் காரணமாகவும் சமூதாயத்தில் தங்களுக்கென ஓர் இடம் வேண்டும் என்பதற்காகவும் தடைகளை உடைப்பதற்கான துணிச்சல் இல்லாத தங்களைப் போன்ற மற்ற பெண்களுக்கு ஊக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் இவர்கள் தாங்களே முயற்சி எடுத்து பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

(BBCShe தொடர். தயாரிப்பு: திவ்யா ஆர்யா, பிபிசி)

https://www.bbc.com/tamil/articles/c87vl80pp4jo

 

Edited by ஏராளன்
தவறான பதிவு திருத்தப்பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் , இவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது........!  👍

நன்றி ஏராளன் ......!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.