Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்து வேலி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of outdoors and tree
 
யாழ்ப்பாணத்து வேலி
********************
இந்த வேலிகளை பார்க்கையில் பலருக்கும் பல நினைப்புகள் வந்து போகும்.
இந்த வேலிகளுக்கு நிறைய வரலாறுகள் உண்டு. நிறைய விடயங்களுக்கு இந்த வேலிகளே தூதாகவும் ஏன் சாட்சியாகவும் கூட இருந்துள்ளது. சில விடயங்களுக்கு இந்த வேலிகளே குறியீடாகவும் இருக்கின்றன. எல்லாத்துக்கும் மேலாக இந்த வேலிகளால் சண்டைகள் ஏற்படாத வீடுகளே இல்லை எனலாம்.
 
வேலி உயர்த்திக் கட்டிய வீடுகளில் குமர்கள் உண்டு என்பதும் சீற் உயர்த்தி சைக்கிள் பெடியள் அடிக்கடி வந்து போனால் மறுநாளே ஒரு அடுக்கு கிடுகு உயர்வதும் யாழ்ப்பாண வேலிகளுக்குள்ள சிறப்பு அடையாளமாகும்.
 
இந்த வேலிகளில் பலவிதமான வேலிகள் உண்டு. கிடுகு வேலி, மட்டை வேலி, ஓலை வேலி, தகரவேலி,கம்பி வேலி, அலம்பில் வேலி, தூண் நிறுத்திய முள்க்கம்பி வேலி போன்றவை இதில் முக்கியமானவையாகும்.
 
இதில் கிடுகு வேலிகள் பின்னப்பட்ட தென்னோலைகளால் அடைக்கப்படும். ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி குத்தூசியால் கயிறு கொண்டு கட்டி இவ்வேலி அமைக்கப்படும். இது கொஞ்சம் செலவு குறைவு பாவனை காலமும் குறைவு. அடுத்து பனை ஓலை வேலிகள், இந்த பனை ஓலை வேலிகள் மிதித்து நேராக்கப்பட்ட்ட பனையோலைகளை குறுக்காக சரிவாக வைத்து அடைக்கும் முறை, இதன் ஆயுள்காலம் கிடுகு வேலியின் ஆயுட்காலத்தைவிட அதிகமானாலும் யாழ்ப்பாணத்தார் அதிகம் விரும்புவது என்னவோ கிடுகு வேலிகளைத்தான். அடுத்து மட்டை வேலிகள் இவை மூரி வேலிகள் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த மூரி வேலிகள் பனையோலை நீக்கப்பட்ட மட்டைகளை ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து அடுக்கி கம்பியால் வரித்துக்கட்டப்படும். இது நீண்ட கால ஆயுளைக்கொண்டது. செலவு கொஞ்சம் அதிகமானது. அந்தநாட்களில் பெரும்பாலும் வசதி படைத்தவர்களின் வேலிகளே மட்டைவேலியாக வரியப்படும். இந்த மட்டை வேலிகளின் மீது சில அடுக்கு கிடுகுகளால் வரிந்துவிட்டால் கொள்ளை அழகாக இருக்கும். இந்த மட்டை வேலிகளின் கீழ்ப்பகுதியை கறையான் அரிக்காதவாறு கழிவு எண்ணையால் வர்ணம்போல் தீட்டிவிடுவோரும் உண்டு.
 
இந்த வேலிகளில் யாழ்ப்பாணத்து வேலிகள் எப்போதுமே தனி அழகுதான். பிரதேசவாதம் என்று ஆரன் கிழம்பி வந்தாலும் அதுதான் உண்மையும், அதற்கு அந்தக் காணிகளின் அளவுகளே முக்கிய காரணம். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் காணிகள் இரண்டு முதல் ஆகக்கூடியது ஐந்து பரப்பு வரைதான் இருக்கும். அப்படியான அளவைக்கொண்ட காணிகளை அச்சறுக்கையான அழகான வேலிகளை அமைத்து பராமரிப்பது சுலபம்.
 
இந்த வேலி அடைப்புக்கும் சில விதிமுறைகள் உண்டு. இரண்டு காணிகளுக்கு நடுவேயுள்ள வேலியை அடைக்கும்போது அரைவாசி வேலியை ஒரு காணிக்காரரும் மறுபாதி காணியை ஒரு காணிக்காரருமாக அடைப்பார்கள். அப்படி அடைக்கப்படும் போது அரைவாசி வேலி ஒருகாணியின் உட்புறமாயும் மறுபாதி வேலி வெளிப்புறமாயும் இருக்கும்.
 
அனேகமான யாழ்ப்பாணத்து வேலிகளை கிளுவங் கதியால்களே அலங்கரித்து இருக்கும். முன்னர் பூவரசு, வாதராணி, முள்முருங்கை, சீமையில் கிளுவை போன்றவை அதிகளவில் இடம்பிடித்திருந்தன. இந்த வாதராணி இலை புளியம் இலை சாயலில் இருக்கும் அந்த இலை மருத்துவ குணம் மிக்கதென்று அம்மா அடிக்கடி அதில் வறை வறுப்பா. பூவரசும் வாதராணியும் விரைவாக மொத்தித்துவிடும், முள்முருங்கை மற்றும் பூவரசில் மயிர்க்கொட்டிகளின் தொல்லை என்பதாலும் காலப்போக்கில் அவை வெகுவாக குறைவடைந்துவிட்டன. இந்த கிளுவை நீண்டகாலத்துக்கு சிம்ரன் போல இருக்கும் என்பதால் பிற்காலத்தில் கிளுவை முற்றுமுழுதாக ஆக்கிரமித்துக் கொண்டது. எல்லைகளை நிர்ணயிக்கும் பகுதிகளில் தொடர்ச்சியாக பூவரசுகளே நிலைத்திருந்தன.
 
புகையிலை பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் ஊர்களின் வேலிகளில் அதிகளவு பூவரச மரங்கள் இருந்தன. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் இந்த பூவரசங் கிளைகள் வெட்டப்பட்டு தோட்டக்காணிகளில் குழைகள் பசளைக்காக தாழ்க்கப்படும். பின்னர் புகையிலை நட்டு வளர்ந்து வெட்டிய பின் அந்த குழைகள் உக்க மிஞ்சிக் கிடக்கும் தடிகள் கிழறி எடுக்கப்படும். அப்பம்மா வீட்டடியில் இலைகள் வெட்டிய பின் சாற்றிக் கிடந்த பூவரசந் தடிகளால் அருளானந்தத்தார் இந்திய இராணுவத்தால் நையப்புடைக்கப்பட்டது இன்னமும் கண்களில் நிழலாடுகின்றது.
 
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்கள் பகுதிகளில் இந்த வேலி அடைத்தல் காலம் வரும்போது எமக்கெல்லாம் கொண்டாட்டமாயிருக்கும். நாங்களும் பங்காளர்களாக இருப்போம். அனேகமாக கூலிக்கு ஆள்ப்பிடிப்பதெல்லாம் கிடையாது. எங்கள் பகுதியில் பெண்கள் இணைந்துதான் வேலி அடைப்பார்கள். வேலிகளை பார்த்து சரிந்த கதியால்களை நேராக்கி புதிய கதியால் இட வேண்டிய இடங்களுக்கு புதிய கதியாலிட்டு வேலி அடைக்கப்படும். அடைத்த வேலிகளில் சிறு பொட்டு அமைத்து குறுக்குப்பாதைகள் அமைக்கப்படும். எங்கள் பிராந்தியத்தவர்கள் சிவகாமி அம்மன் கோயிலுக்கு விரைவாகப் போவதற்கான பொட்டு எங்கள் வேலியில் அமைந்திருந்தது. நாம் சிறுவர்களாக இருந்தபோது சில அப்புமார் பொட்டுக்குள் குனிந்து போவதை பின்னுக்கு நின்று வாய்பிழந்து பார்த்து சிரிப்பம். பொட்டுக்குள் பூந்த புழுக்கொட்டி துரையப்பரின் வாயிலிருந்து புழுக்கொட்டியதைப்போல் விழுந்த செந்தமிழ் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்...
 
சரி விடயத்துக்கு வாறன் என்னவோ சொல்ல வெளிக்கிட்டு கடைசியா இவ்வளவு நீட்டி முழங்கீட்டன். இந்த வேலிகள் சார்ந்து பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கும்.
 
எனக்கு மட்டைவேலிகளை கண்டா தடியாலை இழுத்துக்கொண்டு ஓடுவதென்றா கொள்ளை விருப்பம். தட தட என்ற அந்த சத்தத்துக்காக திரும்ப திரும்ப என்று பல தரம் இழுப்பேன். பதினொரு வயது வரை ஊரிலை இருந்த உனக்கு வேலிதாண்டின காதல் கதையோ இருக்குமென்று நீங்கள் முனுமுனுப்பது கேக்குது.
 
பதினொரு வயதில் ஊரை விட்டு சுவிசுக்கு புலம்பெயர்ந்த நான் என் அஞ்ஞாதவாசம் முடித்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின் என் 23 வது வயதில் ஊரில் கால்பதித்தபோது பாதைகள் எல்லாம் ஒடுங்கி வேலிகள் வீதியின் நடுப்பகுதிகள் வரை வந்திருந்தை கண்டபோது அதிசயமாக இருந்தது. பூமி சுற்றுவது உண்மைதான் என்பதை உறுதியாய் நம்ப ஆரம்பித்தேன்.
 
அப்படி ஊரில் நின்ற ஒரு நாளில் இரவு ஒன்பது மணியிருக்கும் இணுவில் அங்களப்பாயில் உள்ள அத்தை வீட்டிலிருந்து இருந்து எங்கள் வீட்டுப் பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தேன். தர்மலிங்கத்தாரின் கடைக்கு அருகே இருந்த ஒழுங்கைக்குள் நுழைந்து நடக்க மட்டை வேலியொன்று தென்பட்டது நிலத்தில் ஒரு தடி 80களின் திரைப்படங்களில் வருவதுபோல என் கண்கள் மட்டை வேலியையும் தடியையும் மாறி மாறி பார்த்தது. உருக்கொண்டவன் போல குனிந்து தடியை எடுத்து தட தடவென இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கினேன். அந்த வீட்டு நாய் வேலியையும் தாண்டி குரைத்துக்கொண்டு கலைக்கத் தொடங்கியபோதுதான் சுயநினைவுக்குத் திரும்பினேன். தண்டவாளக் கரை வரை ஓட்டம் தொடர்ந்தது.
 
இப்ப ஊருக்கு போனாலும் மட்டை வேலியை கண்டால் கை துருதுருப்பது தவிர்க்க முடியாதது. கடந்த பயணத்தில் மகளுக்கு சின்ன வயசில் நாங்கள் இப்படித்தான் என்று தடிகொண்டு இழுத்துக்காட்டி என் அவாவை தீர்த்துக்கொண்டேன். அனேகமாக பேரப்பிள்ளையோடு போகும் காலத்திலும் இது தொடரும் போல... அதற்கு வேலியும் இருக்க வேண்டுமே...
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்து வீட்டு காணி எல்லைகள் பாதுகாப்பு அரண்கள்  பற்றி நல்ல தகவல்கள்.

1 hour ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தார் அதிகம் விரும்புவது என்னவோ கிடுகு வேலிகளைத்தான்.

தென்னோலைகளால் கட்படும் வேலிகள்தான்  அழகாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Keine Fotobeschreibung verfügbar.

578785_428201147232391_675537967_n.jpg?w=535&h=361

முன்னரெல்லாம் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் எல்லாம் குறிப்பாக வட பகுதிகளில் வேலிகள் இயற்கையோடு ஒட்டியிருந்தது. வீடுகளும் நிலமும் நல்ல காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருந்தது. இன்றோ நாகரீகம் /பணக்காரர் எனும் பெயரில் எல்லா வீடுகளுக்கும் சுற்றுமதில்கள்.அது மட்டுமல்லாமல் கட்டிய வீடுகள் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக குளிர்மை தரும் மரங்களையும் தறித்து விடுகின்றார்கள்.

வீட்டுக்கு குளிர்மை தரும் மரங்களை தறித்து விட்டு  குளிரூட்டிகளை பொருத்துகின்றார்கள்.
காலக்கொடுமை.

இணைப்பிற்கு நன்றி சிறித்தம்பி :314:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்பாணத்து வீட்டு காணி எல்லைகள் பாதுகாப்பு அரண்கள்  பற்றி நல்ல தகவல்கள்.

தென்னோலைகளால் கட்படும் வேலிகள்தான்  அழகாக உள்ளது

 

47 minutes ago, குமாரசாமி said:

முன்னரெல்லாம் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் எல்லாம் குறிப்பாக வட பகுதிகளில் வேலிகள் இயற்கையோடு ஒட்டியிருந்தது. வீடுகளும் நிலமும் நல்ல காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருந்தது. இன்றோ நாகரீகம் /பணக்காரர் எனும் பெயரில் எல்லா வீடுகளுக்கும் சுற்றுமதில்கள்.அது மட்டுமல்லாமல் கட்டிய வீடுகள் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக குளிர்மை தரும் மரங்களையும் தறித்து விடுகின்றார்கள்.

வீட்டுக்கு குளிர்மை தரும் மரங்களை தறித்து விட்டு  குளிரூட்டிகளை பொருத்துகின்றார்கள்.
காலக்கொடுமை.

இணைப்பிற்கு நன்றி சிறித்தம்பி :314:

veli-01.jpg

👆 முகமாலையில்,  அமைக்கப் பட்டுள்ள  அழகிய பனைவேலி! பாராட்டை அள்ளும் அழகு!!

பனை மட்டை வேலி.. - விவசாயம் » இயற்க்கை » சுற்றுசூழல் காப்பகம் | Facebook 

Palm Frond Fence 2 Photograph by Ron Kandt - Fine Art America

Palm Leaves Fence Northern Province Sri Lanka Stock Photo - Download Image  Now - Dry, Palm Leaf, Abstract - iStock

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு வேலிகள், ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அழகு........வேலி  அடைக்கும் பொழுது ஆளுக்கு ஒரு பக்கம் நின்றுகொண்டு ஒருத்தர் ஈர்க்கு கம்பியை குத்த மற்றவர் அதற்குள் ஈர்க்கை கொழுவ இழுத்து வைத்து முறுக்கிக் கட்டுவது ஒரு தனிக்கலை.......!   😂

கிணத்தடி வேலி உயர்த்திக் கட்டுவது நான் சொல்ல நினைத்தது, நீங்கள் சொல்லி விட்டடீர்கள் ........!  😁

மற்றும் படி பொட்டுக்குள்ளால் கறி, தூள்,பலகாரம் என்று கொடுக்கல் வாங்கல் செய்வது......பெரியவர்கள் ஏதாவது பிரச்சனைப் பட்டு பொட்டை அடைத்து விட்டால் சத்தமின்றி வேறொரு இடத்தில் பொட்டைத் திறப்பது என்று நிறைய நடக்கும்.......!  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் சகல வீடுகளிலும் வேலிகளே இருந்தன. இப்போது வேலிகளை பார்ப்பது அரிது.

சுற்று மதில் கட்டி மாரிமழைக்கு தண்ணியும் ஓடாது.

இணைப்புக்கு நன்றி சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை கலந்து எழுதிய இணுவையூர் மயூரனுக்கும் பகிர்ந்த தமிழ் சிறீக்கும் நன்றிகள். இனி வருங்காலம்   வேலி என்றால் என்ன என்று தெரியுமோ தெரியாது. அண்ணா மார்  வேலி அடைக்க அம்மா வழிகாடட உள் வேலியில் நின்று  குத்தூசிக்கு கயிறுக்கோர்த்த   அனுபவம்  எனக்கும் உண்டு . ஊசி வரும்போது பிராக்குப்பார்த்தல் அண்ணாவின்   ஏச்சும் விழும். ஊசி வரும்போது  ஒரு கிளுவந்த்தடியும் சேர்த்து கோர்க்க வேண்டும்.  எங்கள்பகுதியில் அதிகம் மடடையால்   வரிந்து மேலே கிடுகுகளால் அமைந்த வேலிகள் அதிகம் . அது ஒரு  கனாக் காலம். வரலாறாக சேமிக்க வேண்டிய பதிவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

எழுதுமட்டுவாளில எங்கட சொந்தக்கார இளம் பெண்கள் தமது வளவில் இருக்கும் தென்னைமரங்களின் ஓலைகளை எடுத்து கிடுகு பின்னி விற்று தமது கலியாணத்துக்கு தேவையான நகைகள் செய்த ஞாபகம் வருகிறது. அவர்கள் வீட்டில் 5 பெண்கள். ஐவரும் போட்டி போட்டு பின்னி யாருடைய அடுக்கு உயரமாக இருக்கு என்று நான் போகும் போது காட்டுவார்கள்.

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

veli-01.jpg

👆 முகமாலையில்,  அமைக்கப் பட்டுள்ள  அழகிய பனைவேலி! பாராட்டை அள்ளும் அழகு!!

பனை மட்டை வேலி.. - விவசாயம் » இயற்க்கை » சுற்றுசூழல் காப்பகம் | Facebook 

படத்தில் உள்ள முதலாவது இரண்டாவது வேலிகளை நான் கண்டதில்லை மிகவும் அழகான வேலைபாடுகள் கொண்டவை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

கிணத்தடி வேலி உயர்த்திக் கட்டுவது நான் சொல்ல நினைத்தது,

எங்கடை கிணத்தடி வேலியை சூறாவளியாலையும் அசைக்கேலாது.காத்துக்கூட உள்ளுடாது.கருங்கல்லு மதில் மாதிரி இருக்கும். இருந்தாலும் அதையும் எட்டிப்பாக்கிற அளவுக்கு அப்பனுக்கு அப்பனான ஆக்கள் இருக்கினம். :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கு கடிதம் வைப்பதற்கு உகந்தது கிடுகு வேலிதான் என்பது எனது தாழ்வான அபிப்பிராயம்..

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எங்கடை கிணத்தடி வேலியை சூறாவளியாலையும் அசைக்கேலாது.காத்துக்கூட உள்ளுடாது.கருங்கல்லு மதில் மாதிரி இருக்கும். இருந்தாலும் அதையும் எட்டிப்பாக்கிற அளவுக்கு அப்பனுக்கு அப்பனான ஆக்கள் இருக்கினம். :rolling_on_the_floor_laughing:

காவோலை வேலி தாண்டிய அனுபவமுள்ளவர்கள் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள்!

பொட்டுக்குள்ளால பூந்து போனவர்களும் மேடைக்கு வரலாம்!😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

எவ்வளவு வேலிகள், ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அழகு........வேலி  அடைக்கும் பொழுது ஆளுக்கு ஒரு பக்கம் நின்றுகொண்டு ஒருத்தர் ஈர்க்கு கம்பியை குத்த மற்றவர் அதற்குள் ஈர்க்கை கொழுவ இழுத்து வைத்து முறுக்கிக் கட்டுவது ஒரு தனிக்கலை.......!   😂

கிணத்தடி வேலி உயர்த்திக் கட்டுவது நான் சொல்ல நினைத்தது, நீங்கள் சொல்லி விட்டடீர்கள் ........!  😁

மற்றும் படி பொட்டுக்குள்ளால் கறி, தூள்,பலகாரம் என்று கொடுக்கல் வாங்கல் செய்வது......பெரியவர்கள் ஏதாவது பிரச்சனைப் பட்டு பொட்டை அடைத்து விட்டால் சத்தமின்றி வேறொரு இடத்தில் பொட்டைத் திறப்பது என்று நிறைய நடக்கும்.......!  😇

மிகவும் சுவாரசியமான தகவல்கள் . பகிர்ந்தமைக்கு நன்றி சுவி

6 minutes ago, புங்கையூரன் said:

காவோலை வேலி தாண்டிய அனுபவமுள்ளவர்கள் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள்!

பொட்டுக்குள்ளால பூந்து போனவர்களும் மேடைக்கு வரலாம்!😆

இப்படியான அனுபவங்கள் கிடைக்கவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை. கேட்க ஆவலாக உள்ளேன்

1 hour ago, குமாரசாமி said:

எங்கடை கிணத்தடி வேலியை சூறாவளியாலையும் அசைக்கேலாது.காத்துக்கூட உள்ளுடாது.கருங்கல்லு மதில் மாதிரி இருக்கும். இருந்தாலும் அதையும் எட்டிப்பாக்கிற அளவுக்கு அப்பனுக்கு அப்பனான ஆக்கள் இருக்கினம். :rolling_on_the_floor_laughing:

நீங்களும் அதில் அடங்குமா கு சா அண்ணா?😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, புங்கையூரன் said:

பொட்டுக்குள்ளால பூந்து போனவர்களும் மேடைக்கு வரலாம்!😆

பூங்கதவே தாழ்திறவாய்
பூவாய் பெண் பாவாய்
திருத்தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என்னுள்ளம்
பொன்நாதம் பூவாடை
ஆடும் காரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்...:rolling_on_the_floor_laughing:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

பூங்கதவே தாழ்திறவாய்
பூவாய் பெண் பாவாய்
திருத்தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என்னுள்ளம்
பொன்நாதம் பூவாடை
ஆடும் காரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்...:rolling_on_the_floor_laughing:

சந்தேகமே இல்லாமல் ஒராள் சரியாத்தான் கிடுகு வேலிகளை அனுபவித்திருக்கிறார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

No photo description available.

 

INSPIRED TREASURES: 2011

 

Thal Leave Fence | Jaffna, Crafts, Leaves

 

INSPIRED TREASURES: 2011

 

Passion Parade: Lifestyles of Jaffna ~ An Exhibition to Preserve Our  History and Heritage

 

Jaffna – A Sentimental Journey Home | Sanjiva Wijesinha -writer and  physician

 @விளங்க நினைப்பவன் , @குமாரசாமி@suvy@ஈழப்பிரியன்

@நிலாமதி, @nilmini, @alvayan@புங்கையூரன்

முன்பு ஊரில் இருந்த சண்டியர்கள், தங்கள் ஆயுதமான... 
சைக்கிள் செயின், வாள் போன்றவற்றை வேலியில் தான் மறைத்து வைப்பார்களாம் 
என ஊரில் இருக்கும் போது கேள்விப் பட்டுள்ளேன். 

எனது அப்பாவின் அம்மா கூறியது இது... 👇
ஆங்கிலேயர் காலத்தில்..... வெள்ளிக்கிழமை  போன்ற விசேட நாட்களில், விரதம் இருந்து 
வாழை இலையில் சாப்பிட்ட பின்... அந்த இலையை வேலியில் செருகி மறைத்து விடுவார்களாம்.

ஆங்கிலேயர்... மதம்  மாற்றி விடுவார்கள் என்ற பயமோ, 
அல்லது தண்டனை கொடுப்பார்கள் என்றோ மறைத்திருக்கலாம் என நினைக்கின்றேன். 

போர்த்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில்...
விரதம் இருந்து... வாழை இலையை, ஒழிக்கத்  தெரியாத சைவர்கள்தான் 
ஆங்கிலேயரால் மதம் மாற்றப் பட்டவர்கள் என நினைக்கின்றேன். 😂
 @நிலாமதி அக்கா... கோவிக்காதேங்கோ  பகிடிக்கு எழுதியது. 😂

👆 மேலே இறுதியாக உள்ள  படத்தில்... வேலி மிக உயரமாக கட்டி உள்ளதை பார்க்க...
"குமர்ப் பிள்ளைகள்" இருக்கின்ற வீடு போல் தெரிகின்றது. 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

👆 மேலே இறுதியாக உள்ள  படத்தில்... வேலி மிக உயரமாக கட்டி உள்ளதை பார்க்க...
"குமர்ப் பிள்ளைகள்" இருக்கின்ற வீடு போல் தெரிகின்றது. 🤣

வேலி உயர்த்தி அடைச்சால் அங்கை ஏதோ வில்லங்கம் இருக்கு எண்டு அர்த்தம்...:rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

 

No photo description available.

 

INSPIRED TREASURES: 2011

 

Thal Leave Fence | Jaffna, Crafts, Leaves

 

INSPIRED TREASURES: 2011

 

Passion Parade: Lifestyles of Jaffna ~ An Exhibition to Preserve Our  History and Heritage

 

Jaffna – A Sentimental Journey Home | Sanjiva Wijesinha -writer and  physician

 @விளங்க நினைப்பவன் , @குமாரசாமி@suvy@ஈழப்பிரியன்

@நிலாமதி, @nilmini, @alvayan@புங்கையூரன்

முன்பு ஊரில் இருந்த சண்டியர்கள், தங்கள் ஆயுதமான... 
சைக்கிள் செயின், வாள் போன்றவற்றை வேலியில் தான் மறைத்து வைப்பார்களாம் 
என ஊரில் இருக்கும் போது கேள்விப் பட்டுள்ளேன். 

எனது அப்பாவின் அம்மா கூறியது இது... 👇
ஆங்கிலேயர் காலத்தில்..... வெள்ளிக்கிழமை  போன்ற விசேட நாட்களில், விரதம் இருந்து 
வாழை இலையில் சாப்பிட்ட பின்... அந்த இலையை வேலியில் செருகி மறைத்து விடுவார்களாம்.

ஆங்கிலேயர்... மதம்  மாற்றி விடுவார்கள் என்ற பயமோ, 
அல்லது தண்டனை கொடுப்பார்கள் என்றோ மறைத்திருக்கலாம் என நினைக்கின்றேன். 

போர்த்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில்...
விரதம் இருந்து... வாழை இலையை, ஒழிக்கத்  தெரியாத சைவர்கள்தான் 
ஆங்கிலேயரால் மதம் மாற்றப் பட்டவர்கள் என நினைக்கின்றேன். 😂
 @நிலாமதி அக்கா... கோவிக்காதேங்கோ  பகிடிக்கு எழுதியது. 😂

👆 மேலே இறுதியாக உள்ள  படத்தில்... வேலி மிக உயரமாக கட்டி உள்ளதை பார்க்க...
"குமர்ப் பிள்ளைகள்" இருக்கின்ற வீடு போல் தெரிகின்றது. 🤣

மிகவும் முக்கியமான சாமான் திருக்கை வாலை விட்டிட்டியள் தமிழ் சிறி…! நாய்க்கு எட்டாத உயரத்திலை வைக்க வேணும்…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

வேலி உயர்த்தி அடைச்சால் அங்கை ஏதோ வில்லங்கம் இருக்கு எண்டு அர்த்தம்...:rolling_on_the_floor_laughing:

"கசிப்பு காய்ச்சுற"  இடத்திலேயும்... வேலி, உயரமாக இருக்குமாம்.  animiertes-lachen-bild-0116.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

"கசிப்பு காய்ச்சுற"  இடத்திலேயும்... வேலி, உயரமாக இருக்குமாம்.  animiertes-lachen-bild-0116.gif

சில இடங்களில் கடியன் நாய் கவனம் எண்டு எழுதி தொங்கவிட்டிருப்பனம் :beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புங்கையூரன் said:

மிகவும் முக்கியமான சாமான் திருக்கை வாலை விட்டிட்டியள் தமிழ் சிறி…! நாய்க்கு எட்டாத உயரத்திலை வைக்க வேணும்…!

புங்கையூரான்...  ஜேர்மனிக்கு, வந்து கனகாலம் என்ற படியால்...
ஊரில் பாவிக்கப் பட்ட  ஆயுதங்கள் பட்டென்று நினைவுக்கு வரவில்லை. 😂

திருக்கைவாலுடன்,  நாம்பன் மாட்டில் இருந்து பெறப்படும் 
அதன், இனவிருத்தி செய்யும் உறுப்பையும்... காய வைத்து   பாவிப்பார்களாம்.   
அதனால் அடித்து ஏற்படும் புண், சாகும் மட்டும் மாறாமல் இருக்கும் என்று சொல்வார்கள்.

நீங்கள் சொன்ன மாதிரி... இரண்டு ஆயுதத்தையும்... 
நாய்க்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். 😂
இல்லாட்டி நாய்..  கவ்விக்  கொண்டு போயிடும். 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பனை ஓலை வேலிகளை மாற்றும்போது அதில் இருந்து கொட்டும் ஏராளமான கறையான்களும் அவற்றைக் கொத்தித் தின்ன முண்டியடிக்கும் கோழிகளையும் பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கும்......!  😁

இந்த வெளி சம்பந்தமாய் ஒரு "A " ஜோக் ஒன்று உண்டு ....அநியாயத்துக்கு அதுவும் நினைவில் வந்து போகுது.......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலிக்கதைகளும், தகவல்களும் மடகஸ்கார் கதையை விட சுவாரசியமாக இருக்கிறது.  வழமைபோல கு சா அண்ணாவின் தருணத்துக்கேற்ற பகிடிகளுடன். அறிந்து சிரித்து மகிழ்ந்தேன். ஆங்கிலேயரை விட பல மடங்கு போர்த்துக்கீசர், மற்றும் ஒல்லாந்தர் தான் கொடூரமாக இருந்துளார்கள். அம்ம்மா சொன்னது ஞாபகம் வந்தது. போர்த்துக்கீசர் காலத்தில் ஒவ்வொரு நாளைக்கு ஓர் வீட்டில் இருந்து வரிசையாக வாசலில் ஒரு மாட்டை கொண்டு வந்து  அவர்களுக்கு கொடுத்தார்களாம்.  அவர்களது ஆட்சி கொடுங்கோல் ஆட்சி.

 
 
 
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

578785_428201147232391_675537967_n.jpg?w=535&h=361

 

வேலியளுக்கை காவோலை வேலிதான் பாதுகாப்பானது.ஆரும் கள்ளர் களவாக வேலி பாய்ஞ்சால் காவோலை சரசரக்கிற சத்தம் காட்டிக்குடுத்துடும்.கீழாலை பூந்து போனால் கருக்குமட்டை கீறும்.
எனவே காவோலை வேலியோடை சேட்டை விடேலாது கண்டியளோ:beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பையடுத்து மீண்டும் உயர்வடைந்தது ரூபாவின் பெறுமதி Published By: VISHNU 21 MAR, 2023 | 05:30 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பையடுத்து இன்று (21) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வடைந்துள்ளது.  நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க அதிகரிப்பினால் கடந்த காலங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துசென்றது. இருப்பினும் கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் சடுதியான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டதுடன், ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்துச்சென்றது.  ஆனால் நேற்று (20) திங்கட்கிழமை மீண்டும் ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டது. அதன்படி நேற்று (20) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 331.71 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 349.87 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்திருப்பதாக இன்று (21) உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து மீண்டும் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.  அதன்படி இன்று (21) செவ்வாய்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 316.84 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 334.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/151098
    • அது தான் பெயரைப் பார்த்தாலே அதிருதில்ல.
    • 16 சந்தர்ப்பங்களில் நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாது ஏமாற்றியுள்ளோம் - அரசாங்கம் Published By: DIGITAL DESK 5 21 MAR, 2023 | 11:43 AM (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள நீடிக்கப்பட்ட கடன் திட்டத்திற்கான நிபந்தனைகளை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாது ஏமாற்றியுள்ளோம். எனினும் இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. எனவே நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , சர்வதேச நாணய நிதியத்துடனான எந்தவொரு நிபந்தனைகளையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது. இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை அனைத்தும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அரசியலமைப்பிற்கமைய நிதி தொடர்பான சகல அதிகாரங்களும் பாராளுமன்றத்திடமே காணப்படுகிறது. இந்த கடனுதவி திட்டத்தின் விசேட அம்சம் யாதெனில் , கடன் தொகை பெற்றுக் கொள்ளப்படவுள்ள 48 மாதங்களும் யார் ஆட்சி செய்தாலும் , எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய அதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் சர்வதேசத்துடன் எம்மால் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் முன்னெடுக்க முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தத்தில் காணப்படும் நிபந்தனைகளுக்கு எதிர்ப்புக்கள் காணப்பட்டாலும் அல்லது அவற்றை ஏற்றுக் கொண்டாலும் அது தொடர்பில் சகல கட்சிகளும் பாராளுமன்றத்தில் தத்தமது நிலைப்பாடுகளை அறிவிக்குமானால் அது சிறந்ததாகும். அத்தோடு இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாம் சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றியிருக்கின்றோம். ஆனால் இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. இதற்காக அரசியல் வேறுபாடுகள் இன்றி தேசிய ரீதியில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அரச நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நாணய நிதியத்தினால் நீடிக்கப்பட்ட கடன் வசதித்திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர் வழங்கப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மீது ஏற்படும் நம்பிக்கையின் அடிப்படையில் ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான கடன்களாக இவ்வருடத்திற்குள் 7 பில்லியன் டொலர் கிடைக்கப்பெறும். நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்தினை பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளன. அவை தொடர்பில் விரைவில் நாட்டுக்கு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னரே அவற்றை வெளிப்படுத்த முடியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விசேட உரை நிகழ்த்துவார். நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த முழுமையான பொறுப்புக்கள் நாட்டு மக்களுடையது. வேலைத்திட்டங்களை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படாவிட்டால் , நாடு பாரிய நெருக்கடிகளையே எதிர்கொள்ளும். நாட்டை நேசிக்கும் மக்கள் அதைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவார் என்று நம்புகின்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டில் காணப்படும் நிபந்தனைகளில் ஒன்று ஊழல் , மோசடிகளை ஒழிப்பதற்கான சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/151027
    • நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நண்பர்கள் எத்தனையோ மனிதர்களை நட்புக்கு எடுத்துக்காட்டாய் நாம் சுட்டுகிறோம். படித்து அதிசயிக்கிறோம். ஆனால் எத்தனை சோதனைகள் வந்தாலும் உண்மையிலேயே நட்புக்கு எடுத்துக்காட்டாய் பார்த்த கணத்திலிருந்து இறந்து வீழ்ந்த கணம் வரை வாழ்ந்தவர்கள் என்றால் கர்ணனையும் துரியோதனனையுமே சுட்டலாம். அவர்களின் சிறப்பான பக்கங்களைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே. அஸ்தினாபுர அரண்மனையில் மன்னர்களுக்கிடையே ஒரு வில்வித்தைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருபோட்டியில் விஜயன் வென்றுவிட அங்கே தேரோட்டியின் மகனான கர்ணன் பங்கெடுக்க விரும்புகிறான். ஆனால் துரோணரோ அது க்ஷத்திரிய மன்னர்களுக்கான போட்டி என நிராகரிக்கிறார். உடனே துரியோதனன் கர்ணனைத் தன் நண்பனாக ஏற்று அங்க தேசத்தின் அரசனாக அறிவிக்கிறான். இங்கே ஆரம்பிக்கிறது அவர்களின் மாசற்ற நட்பும் கர்ணனின் செஞ்சோற்றுக் கடனும்.   ப்ரக்ஜோதிஷ்பூரை ஆண்ட பகதத்தன் என்பவரின் மகள் பானுமதி. இவளுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொள்ளை கொள்ளும் அழகுடைய பானுமதியைக் கரம்பிடிக்கஅங்கே அனைத்து தேசத்து அரசர்களும் அணிவகுத்திருந்தனர். அப்போட்டியில் பங்கேற்க துரியோதனனும் சென்றிருந்தான். அவனுக்குத் தோழனாக கர்ணனும் சென்றிருந்தான். பார்த்ததுமே பானுமதியின் அழகில் மயங்கினான் துரியோதனன். ஆனால் அவளோ சுயம்வர மாலையோடு துரியோதனன் பக்கம் வந்ததும் வேறு பக்கம் திரும்பி விட அவளைக் கடத்திச் சென்று மணக்கத் துடிக்கிறான். இச்சந்தர்ப்பத்தில் கர்ணன் தேரோட்டியாக இருந்து பல்வேறு மன்னர்களுடன் போரிட்டு  இருவரையும் அஸ்தினாபுரத்துக்குக் கொண்டு வந்து சேர்க்க அவர்கள் திருமணம் அதன் பின் இருமனம் இணைந்த திருமணமாக முடிந்தது. ஒருமுறை பானுமதியும் கர்ணனும் சொக்கட்டான் ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே துரியோதனன் வருகை புரிந்தான். கணவனைக் கண்ட பானுமதி மரியாதை நிமித்தமாக எழுந்தாள். தோற்கும் நிலையில் இருந்த அவள் ஆட்டத்தைவிட்டு வெளியேறுவதாக நினைத்த கர்ணன் வேகமாக அவள் உடையைப் பற்றி அமரவைக்க எத்தனித்தான். ஆனால் அவள் இடுப்பில் அணிந்திருந்த மணிமேகலை என்னும் ஆபரணம் அறுபட்டு அதிலிருந்து மணிகள் தரையெங்கும் உருண்டோடின. இருவருமே பதற்றத்தில் ஆழ்ந்தனர். அதற்குள் பக்கத்தில் வந்துவிட்ட துரியோதனன் ” எடுக்கவோ, கோர்க்கவோ” என சூழ்நிலையை இயல்பாக்க முயன்றான். தன் மனைவியுடன் தன் சிநேகிதனே ஆனாலும் தனிமையில் அமர்ந்து சொக்கட்டான் ஆடுவதையோ அவன் பற்றியதால் அவளது ஆடையின் மேகலை அறுந்து உதிர்ந்ததையோ பெரிதாக எண்ணாமல் சூழ்நிலையை இலகுவாக்க முயன்ற துரியோதனன் தன் நண்பன் கர்ணனின் மேல் வைத்த நம்பிக்கை கர்ணனைத் தன் வாழ்நாள் முழுவதும் அசைத்துக் கொண்டிருந்தது. இது எப்போது வெளிப்பட்டது என்றால் குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கும் சமயம் பாண்டவர்களின் தாயான குந்தி, கர்ணன் தன் மகன் என்ற உண்மையை கர்ணனிடமே உரைக்க வந்தாள். மேலும் போரில் அவன் பாண்டவர் பக்கம் சேர்ந்து கௌரவர்களை எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள வந்தாள். அப்போது கர்ணன் வாய்மொழியாகவே இந்நிகழ்வு வெளிப்பட்டது. கர்ணன் தன் தாயிடம்” பிறந்தவுடனே என்னைக் கைவிட்ட தாயான நீங்கள் இப்போதுதான் மகனாக ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறீர்கள். ஆனால் என் நண்பனான துரியோதனனோ நான் யாரென்று தெரியாமலே என் வீரத்தைப் பார்த்துச் சகோதரனாக ஏற்று அங்க தேச அரசனாக்கினான். அங்கேயே ஆரம்பித்துவிட்டது என் செஞ்சோற்றுக் கடன். இதைவிடத் தன் மனைவியுடன் சொக்கட்டான் ஆடும்போது அவள் மேகலை அறுந்து வீழ்ந்ததைக் கூடத் தப்பாக எண்ணாமல் எடுக்கவோ கோர்க்கவோ என்று கேட்ட அவன் பண்பின் முன் என் எல்லா அன்பும் இணைந்துவிட்டது அம்மா. ” ”நான் இன்றுவரை தானதர்மம் செய்துவரும் பொருட்களெல்லாமே துரியோதனனைச் சேர்ந்ததுதானேம்மா. மாயக் கிருஷ்ணனின் துணையை நீங்களெல்லாம் நம்பும்போது என் வில்திறமையை மட்டுமே நம்புகிறான் அம்மா. இப்படிப்பட்ட என் நண்பனுக்குனுக்கு என் உடல் பொருள் ஆவியைத் தியாகம் செய்யாவிட்டால், செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்காவிட்டால் நான் வாழ்ந்ததன் பயன் ஏது?” என்று கேட்க அர்ஜுனன் மேல் பிரம்மாஸ்திரத்தை ஒருமுறைக்குமேல் ஏவக்கூடாது என்றும், அர்ஜுனனைத் தவிர பாண்டவர்கள் யாருடனும் பொருதக் கூடாது என்றும் கர்ணனிடம் வரம் பெற்றுச் செல்கிறாள் குந்தி. இப்படித் தன் நண்பனுக்காகத் தாயே வந்து கேட்டும் மாறாத கர்ணனின் பண்பு உயர்ந்ததுதானே. அதனினும் குருக்ஷேத்திரப் போரின் போது பீஷ்மர் தடுத்ததால் அவன் வெறும் படைவீரனாகவே போரிட நேருமென்பதால் போரிடப் புகமாட்டேன் என்று மறுத்ததையும் துரியோதன் ஏற்றான். அதன்பின் பீஷ்மர் விழுந்ததும்தான் அவன் தன் நண்பன் துரியோதனுக்காகப் போர்க்களம் புகுந்தான். இதுவே இவர்களின் இணைபிரியாத புரிதலுள்ள நட்பினுக்கு எடுத்துக்காட்டு என்பதைப் பார்த்தோம் இல்லையா குழந்தைகளே.     Posted by Thenammai Lakshmanan at பிற்பகல் 8:07  http://honeylaksh.blogspot.com/2023/03/blog-post_19.html
    • சிறித்தம்பி!  நல்ல வடிவாய் பாருங்கோ அவர் மண்ணெண்ணை தகரத்தோட எல்லோ திரியிறவர்? என்ன விசர்க்கதை கதைக்கிறியள் ? புட்டின்  அருமை தெரியாதவர் யாரிருக்கிறார்கள்?   
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.