Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்து வேலி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of outdoors and tree
 
யாழ்ப்பாணத்து வேலி
********************
இந்த வேலிகளை பார்க்கையில் பலருக்கும் பல நினைப்புகள் வந்து போகும்.
இந்த வேலிகளுக்கு நிறைய வரலாறுகள் உண்டு. நிறைய விடயங்களுக்கு இந்த வேலிகளே தூதாகவும் ஏன் சாட்சியாகவும் கூட இருந்துள்ளது. சில விடயங்களுக்கு இந்த வேலிகளே குறியீடாகவும் இருக்கின்றன. எல்லாத்துக்கும் மேலாக இந்த வேலிகளால் சண்டைகள் ஏற்படாத வீடுகளே இல்லை எனலாம்.
 
வேலி உயர்த்திக் கட்டிய வீடுகளில் குமர்கள் உண்டு என்பதும் சீற் உயர்த்தி சைக்கிள் பெடியள் அடிக்கடி வந்து போனால் மறுநாளே ஒரு அடுக்கு கிடுகு உயர்வதும் யாழ்ப்பாண வேலிகளுக்குள்ள சிறப்பு அடையாளமாகும்.
 
இந்த வேலிகளில் பலவிதமான வேலிகள் உண்டு. கிடுகு வேலி, மட்டை வேலி, ஓலை வேலி, தகரவேலி,கம்பி வேலி, அலம்பில் வேலி, தூண் நிறுத்திய முள்க்கம்பி வேலி போன்றவை இதில் முக்கியமானவையாகும்.
 
இதில் கிடுகு வேலிகள் பின்னப்பட்ட தென்னோலைகளால் அடைக்கப்படும். ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி குத்தூசியால் கயிறு கொண்டு கட்டி இவ்வேலி அமைக்கப்படும். இது கொஞ்சம் செலவு குறைவு பாவனை காலமும் குறைவு. அடுத்து பனை ஓலை வேலிகள், இந்த பனை ஓலை வேலிகள் மிதித்து நேராக்கப்பட்ட்ட பனையோலைகளை குறுக்காக சரிவாக வைத்து அடைக்கும் முறை, இதன் ஆயுள்காலம் கிடுகு வேலியின் ஆயுட்காலத்தைவிட அதிகமானாலும் யாழ்ப்பாணத்தார் அதிகம் விரும்புவது என்னவோ கிடுகு வேலிகளைத்தான். அடுத்து மட்டை வேலிகள் இவை மூரி வேலிகள் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த மூரி வேலிகள் பனையோலை நீக்கப்பட்ட மட்டைகளை ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து அடுக்கி கம்பியால் வரித்துக்கட்டப்படும். இது நீண்ட கால ஆயுளைக்கொண்டது. செலவு கொஞ்சம் அதிகமானது. அந்தநாட்களில் பெரும்பாலும் வசதி படைத்தவர்களின் வேலிகளே மட்டைவேலியாக வரியப்படும். இந்த மட்டை வேலிகளின் மீது சில அடுக்கு கிடுகுகளால் வரிந்துவிட்டால் கொள்ளை அழகாக இருக்கும். இந்த மட்டை வேலிகளின் கீழ்ப்பகுதியை கறையான் அரிக்காதவாறு கழிவு எண்ணையால் வர்ணம்போல் தீட்டிவிடுவோரும் உண்டு.
 
இந்த வேலிகளில் யாழ்ப்பாணத்து வேலிகள் எப்போதுமே தனி அழகுதான். பிரதேசவாதம் என்று ஆரன் கிழம்பி வந்தாலும் அதுதான் உண்மையும், அதற்கு அந்தக் காணிகளின் அளவுகளே முக்கிய காரணம். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் காணிகள் இரண்டு முதல் ஆகக்கூடியது ஐந்து பரப்பு வரைதான் இருக்கும். அப்படியான அளவைக்கொண்ட காணிகளை அச்சறுக்கையான அழகான வேலிகளை அமைத்து பராமரிப்பது சுலபம்.
 
இந்த வேலி அடைப்புக்கும் சில விதிமுறைகள் உண்டு. இரண்டு காணிகளுக்கு நடுவேயுள்ள வேலியை அடைக்கும்போது அரைவாசி வேலியை ஒரு காணிக்காரரும் மறுபாதி காணியை ஒரு காணிக்காரருமாக அடைப்பார்கள். அப்படி அடைக்கப்படும் போது அரைவாசி வேலி ஒருகாணியின் உட்புறமாயும் மறுபாதி வேலி வெளிப்புறமாயும் இருக்கும்.
 
அனேகமான யாழ்ப்பாணத்து வேலிகளை கிளுவங் கதியால்களே அலங்கரித்து இருக்கும். முன்னர் பூவரசு, வாதராணி, முள்முருங்கை, சீமையில் கிளுவை போன்றவை அதிகளவில் இடம்பிடித்திருந்தன. இந்த வாதராணி இலை புளியம் இலை சாயலில் இருக்கும் அந்த இலை மருத்துவ குணம் மிக்கதென்று அம்மா அடிக்கடி அதில் வறை வறுப்பா. பூவரசும் வாதராணியும் விரைவாக மொத்தித்துவிடும், முள்முருங்கை மற்றும் பூவரசில் மயிர்க்கொட்டிகளின் தொல்லை என்பதாலும் காலப்போக்கில் அவை வெகுவாக குறைவடைந்துவிட்டன. இந்த கிளுவை நீண்டகாலத்துக்கு சிம்ரன் போல இருக்கும் என்பதால் பிற்காலத்தில் கிளுவை முற்றுமுழுதாக ஆக்கிரமித்துக் கொண்டது. எல்லைகளை நிர்ணயிக்கும் பகுதிகளில் தொடர்ச்சியாக பூவரசுகளே நிலைத்திருந்தன.
 
புகையிலை பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் ஊர்களின் வேலிகளில் அதிகளவு பூவரச மரங்கள் இருந்தன. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் இந்த பூவரசங் கிளைகள் வெட்டப்பட்டு தோட்டக்காணிகளில் குழைகள் பசளைக்காக தாழ்க்கப்படும். பின்னர் புகையிலை நட்டு வளர்ந்து வெட்டிய பின் அந்த குழைகள் உக்க மிஞ்சிக் கிடக்கும் தடிகள் கிழறி எடுக்கப்படும். அப்பம்மா வீட்டடியில் இலைகள் வெட்டிய பின் சாற்றிக் கிடந்த பூவரசந் தடிகளால் அருளானந்தத்தார் இந்திய இராணுவத்தால் நையப்புடைக்கப்பட்டது இன்னமும் கண்களில் நிழலாடுகின்றது.
 
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்கள் பகுதிகளில் இந்த வேலி அடைத்தல் காலம் வரும்போது எமக்கெல்லாம் கொண்டாட்டமாயிருக்கும். நாங்களும் பங்காளர்களாக இருப்போம். அனேகமாக கூலிக்கு ஆள்ப்பிடிப்பதெல்லாம் கிடையாது. எங்கள் பகுதியில் பெண்கள் இணைந்துதான் வேலி அடைப்பார்கள். வேலிகளை பார்த்து சரிந்த கதியால்களை நேராக்கி புதிய கதியால் இட வேண்டிய இடங்களுக்கு புதிய கதியாலிட்டு வேலி அடைக்கப்படும். அடைத்த வேலிகளில் சிறு பொட்டு அமைத்து குறுக்குப்பாதைகள் அமைக்கப்படும். எங்கள் பிராந்தியத்தவர்கள் சிவகாமி அம்மன் கோயிலுக்கு விரைவாகப் போவதற்கான பொட்டு எங்கள் வேலியில் அமைந்திருந்தது. நாம் சிறுவர்களாக இருந்தபோது சில அப்புமார் பொட்டுக்குள் குனிந்து போவதை பின்னுக்கு நின்று வாய்பிழந்து பார்த்து சிரிப்பம். பொட்டுக்குள் பூந்த புழுக்கொட்டி துரையப்பரின் வாயிலிருந்து புழுக்கொட்டியதைப்போல் விழுந்த செந்தமிழ் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்...
 
சரி விடயத்துக்கு வாறன் என்னவோ சொல்ல வெளிக்கிட்டு கடைசியா இவ்வளவு நீட்டி முழங்கீட்டன். இந்த வேலிகள் சார்ந்து பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கும்.
 
எனக்கு மட்டைவேலிகளை கண்டா தடியாலை இழுத்துக்கொண்டு ஓடுவதென்றா கொள்ளை விருப்பம். தட தட என்ற அந்த சத்தத்துக்காக திரும்ப திரும்ப என்று பல தரம் இழுப்பேன். பதினொரு வயது வரை ஊரிலை இருந்த உனக்கு வேலிதாண்டின காதல் கதையோ இருக்குமென்று நீங்கள் முனுமுனுப்பது கேக்குது.
 
பதினொரு வயதில் ஊரை விட்டு சுவிசுக்கு புலம்பெயர்ந்த நான் என் அஞ்ஞாதவாசம் முடித்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின் என் 23 வது வயதில் ஊரில் கால்பதித்தபோது பாதைகள் எல்லாம் ஒடுங்கி வேலிகள் வீதியின் நடுப்பகுதிகள் வரை வந்திருந்தை கண்டபோது அதிசயமாக இருந்தது. பூமி சுற்றுவது உண்மைதான் என்பதை உறுதியாய் நம்ப ஆரம்பித்தேன்.
 
அப்படி ஊரில் நின்ற ஒரு நாளில் இரவு ஒன்பது மணியிருக்கும் இணுவில் அங்களப்பாயில் உள்ள அத்தை வீட்டிலிருந்து இருந்து எங்கள் வீட்டுப் பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தேன். தர்மலிங்கத்தாரின் கடைக்கு அருகே இருந்த ஒழுங்கைக்குள் நுழைந்து நடக்க மட்டை வேலியொன்று தென்பட்டது நிலத்தில் ஒரு தடி 80களின் திரைப்படங்களில் வருவதுபோல என் கண்கள் மட்டை வேலியையும் தடியையும் மாறி மாறி பார்த்தது. உருக்கொண்டவன் போல குனிந்து தடியை எடுத்து தட தடவென இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கினேன். அந்த வீட்டு நாய் வேலியையும் தாண்டி குரைத்துக்கொண்டு கலைக்கத் தொடங்கியபோதுதான் சுயநினைவுக்குத் திரும்பினேன். தண்டவாளக் கரை வரை ஓட்டம் தொடர்ந்தது.
 
இப்ப ஊருக்கு போனாலும் மட்டை வேலியை கண்டால் கை துருதுருப்பது தவிர்க்க முடியாதது. கடந்த பயணத்தில் மகளுக்கு சின்ன வயசில் நாங்கள் இப்படித்தான் என்று தடிகொண்டு இழுத்துக்காட்டி என் அவாவை தீர்த்துக்கொண்டேன். அனேகமாக பேரப்பிள்ளையோடு போகும் காலத்திலும் இது தொடரும் போல... அதற்கு வேலியும் இருக்க வேண்டுமே...
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்து வீட்டு காணி எல்லைகள் பாதுகாப்பு அரண்கள்  பற்றி நல்ல தகவல்கள்.

1 hour ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தார் அதிகம் விரும்புவது என்னவோ கிடுகு வேலிகளைத்தான்.

தென்னோலைகளால் கட்படும் வேலிகள்தான்  அழகாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Keine Fotobeschreibung verfügbar.

578785_428201147232391_675537967_n.jpg?w=535&h=361

முன்னரெல்லாம் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் எல்லாம் குறிப்பாக வட பகுதிகளில் வேலிகள் இயற்கையோடு ஒட்டியிருந்தது. வீடுகளும் நிலமும் நல்ல காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருந்தது. இன்றோ நாகரீகம் /பணக்காரர் எனும் பெயரில் எல்லா வீடுகளுக்கும் சுற்றுமதில்கள்.அது மட்டுமல்லாமல் கட்டிய வீடுகள் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக குளிர்மை தரும் மரங்களையும் தறித்து விடுகின்றார்கள்.

வீட்டுக்கு குளிர்மை தரும் மரங்களை தறித்து விட்டு  குளிரூட்டிகளை பொருத்துகின்றார்கள்.
காலக்கொடுமை.

இணைப்பிற்கு நன்றி சிறித்தம்பி :314:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்பாணத்து வீட்டு காணி எல்லைகள் பாதுகாப்பு அரண்கள்  பற்றி நல்ல தகவல்கள்.

தென்னோலைகளால் கட்படும் வேலிகள்தான்  அழகாக உள்ளது

 

47 minutes ago, குமாரசாமி said:

முன்னரெல்லாம் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் எல்லாம் குறிப்பாக வட பகுதிகளில் வேலிகள் இயற்கையோடு ஒட்டியிருந்தது. வீடுகளும் நிலமும் நல்ல காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருந்தது. இன்றோ நாகரீகம் /பணக்காரர் எனும் பெயரில் எல்லா வீடுகளுக்கும் சுற்றுமதில்கள்.அது மட்டுமல்லாமல் கட்டிய வீடுகள் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக குளிர்மை தரும் மரங்களையும் தறித்து விடுகின்றார்கள்.

வீட்டுக்கு குளிர்மை தரும் மரங்களை தறித்து விட்டு  குளிரூட்டிகளை பொருத்துகின்றார்கள்.
காலக்கொடுமை.

இணைப்பிற்கு நன்றி சிறித்தம்பி :314:

veli-01.jpg

👆 முகமாலையில்,  அமைக்கப் பட்டுள்ள  அழகிய பனைவேலி! பாராட்டை அள்ளும் அழகு!!

பனை மட்டை வேலி.. - விவசாயம் » இயற்க்கை » சுற்றுசூழல் காப்பகம் | Facebook 

Palm Frond Fence 2 Photograph by Ron Kandt - Fine Art America

Palm Leaves Fence Northern Province Sri Lanka Stock Photo - Download Image  Now - Dry, Palm Leaf, Abstract - iStock

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு வேலிகள், ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அழகு........வேலி  அடைக்கும் பொழுது ஆளுக்கு ஒரு பக்கம் நின்றுகொண்டு ஒருத்தர் ஈர்க்கு கம்பியை குத்த மற்றவர் அதற்குள் ஈர்க்கை கொழுவ இழுத்து வைத்து முறுக்கிக் கட்டுவது ஒரு தனிக்கலை.......!   😂

கிணத்தடி வேலி உயர்த்திக் கட்டுவது நான் சொல்ல நினைத்தது, நீங்கள் சொல்லி விட்டடீர்கள் ........!  😁

மற்றும் படி பொட்டுக்குள்ளால் கறி, தூள்,பலகாரம் என்று கொடுக்கல் வாங்கல் செய்வது......பெரியவர்கள் ஏதாவது பிரச்சனைப் பட்டு பொட்டை அடைத்து விட்டால் சத்தமின்றி வேறொரு இடத்தில் பொட்டைத் திறப்பது என்று நிறைய நடக்கும்.......!  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் சகல வீடுகளிலும் வேலிகளே இருந்தன. இப்போது வேலிகளை பார்ப்பது அரிது.

சுற்று மதில் கட்டி மாரிமழைக்கு தண்ணியும் ஓடாது.

இணைப்புக்கு நன்றி சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை கலந்து எழுதிய இணுவையூர் மயூரனுக்கும் பகிர்ந்த தமிழ் சிறீக்கும் நன்றிகள். இனி வருங்காலம்   வேலி என்றால் என்ன என்று தெரியுமோ தெரியாது. அண்ணா மார்  வேலி அடைக்க அம்மா வழிகாடட உள் வேலியில் நின்று  குத்தூசிக்கு கயிறுக்கோர்த்த   அனுபவம்  எனக்கும் உண்டு . ஊசி வரும்போது பிராக்குப்பார்த்தல் அண்ணாவின்   ஏச்சும் விழும். ஊசி வரும்போது  ஒரு கிளுவந்த்தடியும் சேர்த்து கோர்க்க வேண்டும்.  எங்கள்பகுதியில் அதிகம் மடடையால்   வரிந்து மேலே கிடுகுகளால் அமைந்த வேலிகள் அதிகம் . அது ஒரு  கனாக் காலம். வரலாறாக சேமிக்க வேண்டிய பதிவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

எழுதுமட்டுவாளில எங்கட சொந்தக்கார இளம் பெண்கள் தமது வளவில் இருக்கும் தென்னைமரங்களின் ஓலைகளை எடுத்து கிடுகு பின்னி விற்று தமது கலியாணத்துக்கு தேவையான நகைகள் செய்த ஞாபகம் வருகிறது. அவர்கள் வீட்டில் 5 பெண்கள். ஐவரும் போட்டி போட்டு பின்னி யாருடைய அடுக்கு உயரமாக இருக்கு என்று நான் போகும் போது காட்டுவார்கள்.

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

veli-01.jpg

👆 முகமாலையில்,  அமைக்கப் பட்டுள்ள  அழகிய பனைவேலி! பாராட்டை அள்ளும் அழகு!!

பனை மட்டை வேலி.. - விவசாயம் » இயற்க்கை » சுற்றுசூழல் காப்பகம் | Facebook 

படத்தில் உள்ள முதலாவது இரண்டாவது வேலிகளை நான் கண்டதில்லை மிகவும் அழகான வேலைபாடுகள் கொண்டவை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

கிணத்தடி வேலி உயர்த்திக் கட்டுவது நான் சொல்ல நினைத்தது,

எங்கடை கிணத்தடி வேலியை சூறாவளியாலையும் அசைக்கேலாது.காத்துக்கூட உள்ளுடாது.கருங்கல்லு மதில் மாதிரி இருக்கும். இருந்தாலும் அதையும் எட்டிப்பாக்கிற அளவுக்கு அப்பனுக்கு அப்பனான ஆக்கள் இருக்கினம். :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கு கடிதம் வைப்பதற்கு உகந்தது கிடுகு வேலிதான் என்பது எனது தாழ்வான அபிப்பிராயம்..

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எங்கடை கிணத்தடி வேலியை சூறாவளியாலையும் அசைக்கேலாது.காத்துக்கூட உள்ளுடாது.கருங்கல்லு மதில் மாதிரி இருக்கும். இருந்தாலும் அதையும் எட்டிப்பாக்கிற அளவுக்கு அப்பனுக்கு அப்பனான ஆக்கள் இருக்கினம். :rolling_on_the_floor_laughing:

காவோலை வேலி தாண்டிய அனுபவமுள்ளவர்கள் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள்!

பொட்டுக்குள்ளால பூந்து போனவர்களும் மேடைக்கு வரலாம்!😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

எவ்வளவு வேலிகள், ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அழகு........வேலி  அடைக்கும் பொழுது ஆளுக்கு ஒரு பக்கம் நின்றுகொண்டு ஒருத்தர் ஈர்க்கு கம்பியை குத்த மற்றவர் அதற்குள் ஈர்க்கை கொழுவ இழுத்து வைத்து முறுக்கிக் கட்டுவது ஒரு தனிக்கலை.......!   😂

கிணத்தடி வேலி உயர்த்திக் கட்டுவது நான் சொல்ல நினைத்தது, நீங்கள் சொல்லி விட்டடீர்கள் ........!  😁

மற்றும் படி பொட்டுக்குள்ளால் கறி, தூள்,பலகாரம் என்று கொடுக்கல் வாங்கல் செய்வது......பெரியவர்கள் ஏதாவது பிரச்சனைப் பட்டு பொட்டை அடைத்து விட்டால் சத்தமின்றி வேறொரு இடத்தில் பொட்டைத் திறப்பது என்று நிறைய நடக்கும்.......!  😇

மிகவும் சுவாரசியமான தகவல்கள் . பகிர்ந்தமைக்கு நன்றி சுவி

6 minutes ago, புங்கையூரன் said:

காவோலை வேலி தாண்டிய அனுபவமுள்ளவர்கள் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள்!

பொட்டுக்குள்ளால பூந்து போனவர்களும் மேடைக்கு வரலாம்!😆

இப்படியான அனுபவங்கள் கிடைக்கவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை. கேட்க ஆவலாக உள்ளேன்

1 hour ago, குமாரசாமி said:

எங்கடை கிணத்தடி வேலியை சூறாவளியாலையும் அசைக்கேலாது.காத்துக்கூட உள்ளுடாது.கருங்கல்லு மதில் மாதிரி இருக்கும். இருந்தாலும் அதையும் எட்டிப்பாக்கிற அளவுக்கு அப்பனுக்கு அப்பனான ஆக்கள் இருக்கினம். :rolling_on_the_floor_laughing:

நீங்களும் அதில் அடங்குமா கு சா அண்ணா?😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, புங்கையூரன் said:

பொட்டுக்குள்ளால பூந்து போனவர்களும் மேடைக்கு வரலாம்!😆

பூங்கதவே தாழ்திறவாய்
பூவாய் பெண் பாவாய்
திருத்தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என்னுள்ளம்
பொன்நாதம் பூவாடை
ஆடும் காரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்...:rolling_on_the_floor_laughing:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

பூங்கதவே தாழ்திறவாய்
பூவாய் பெண் பாவாய்
திருத்தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என்னுள்ளம்
பொன்நாதம் பூவாடை
ஆடும் காரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்...:rolling_on_the_floor_laughing:

சந்தேகமே இல்லாமல் ஒராள் சரியாத்தான் கிடுகு வேலிகளை அனுபவித்திருக்கிறார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

No photo description available.

 

INSPIRED TREASURES: 2011

 

Thal Leave Fence | Jaffna, Crafts, Leaves

 

INSPIRED TREASURES: 2011

 

Passion Parade: Lifestyles of Jaffna ~ An Exhibition to Preserve Our  History and Heritage

 

Jaffna – A Sentimental Journey Home | Sanjiva Wijesinha -writer and  physician

 @விளங்க நினைப்பவன் , @குமாரசாமி@suvy@ஈழப்பிரியன்

@நிலாமதி, @nilmini, @alvayan@புங்கையூரன்

முன்பு ஊரில் இருந்த சண்டியர்கள், தங்கள் ஆயுதமான... 
சைக்கிள் செயின், வாள் போன்றவற்றை வேலியில் தான் மறைத்து வைப்பார்களாம் 
என ஊரில் இருக்கும் போது கேள்விப் பட்டுள்ளேன். 

எனது அப்பாவின் அம்மா கூறியது இது... 👇
ஆங்கிலேயர் காலத்தில்..... வெள்ளிக்கிழமை  போன்ற விசேட நாட்களில், விரதம் இருந்து 
வாழை இலையில் சாப்பிட்ட பின்... அந்த இலையை வேலியில் செருகி மறைத்து விடுவார்களாம்.

ஆங்கிலேயர்... மதம்  மாற்றி விடுவார்கள் என்ற பயமோ, 
அல்லது தண்டனை கொடுப்பார்கள் என்றோ மறைத்திருக்கலாம் என நினைக்கின்றேன். 

போர்த்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில்...
விரதம் இருந்து... வாழை இலையை, ஒழிக்கத்  தெரியாத சைவர்கள்தான் 
ஆங்கிலேயரால் மதம் மாற்றப் பட்டவர்கள் என நினைக்கின்றேன். 😂
 @நிலாமதி அக்கா... கோவிக்காதேங்கோ  பகிடிக்கு எழுதியது. 😂

👆 மேலே இறுதியாக உள்ள  படத்தில்... வேலி மிக உயரமாக கட்டி உள்ளதை பார்க்க...
"குமர்ப் பிள்ளைகள்" இருக்கின்ற வீடு போல் தெரிகின்றது. 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

👆 மேலே இறுதியாக உள்ள  படத்தில்... வேலி மிக உயரமாக கட்டி உள்ளதை பார்க்க...
"குமர்ப் பிள்ளைகள்" இருக்கின்ற வீடு போல் தெரிகின்றது. 🤣

வேலி உயர்த்தி அடைச்சால் அங்கை ஏதோ வில்லங்கம் இருக்கு எண்டு அர்த்தம்...:rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

 

No photo description available.

 

INSPIRED TREASURES: 2011

 

Thal Leave Fence | Jaffna, Crafts, Leaves

 

INSPIRED TREASURES: 2011

 

Passion Parade: Lifestyles of Jaffna ~ An Exhibition to Preserve Our  History and Heritage

 

Jaffna – A Sentimental Journey Home | Sanjiva Wijesinha -writer and  physician

 @விளங்க நினைப்பவன் , @குமாரசாமி@suvy@ஈழப்பிரியன்

@நிலாமதி, @nilmini, @alvayan@புங்கையூரன்

முன்பு ஊரில் இருந்த சண்டியர்கள், தங்கள் ஆயுதமான... 
சைக்கிள் செயின், வாள் போன்றவற்றை வேலியில் தான் மறைத்து வைப்பார்களாம் 
என ஊரில் இருக்கும் போது கேள்விப் பட்டுள்ளேன். 

எனது அப்பாவின் அம்மா கூறியது இது... 👇
ஆங்கிலேயர் காலத்தில்..... வெள்ளிக்கிழமை  போன்ற விசேட நாட்களில், விரதம் இருந்து 
வாழை இலையில் சாப்பிட்ட பின்... அந்த இலையை வேலியில் செருகி மறைத்து விடுவார்களாம்.

ஆங்கிலேயர்... மதம்  மாற்றி விடுவார்கள் என்ற பயமோ, 
அல்லது தண்டனை கொடுப்பார்கள் என்றோ மறைத்திருக்கலாம் என நினைக்கின்றேன். 

போர்த்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில்...
விரதம் இருந்து... வாழை இலையை, ஒழிக்கத்  தெரியாத சைவர்கள்தான் 
ஆங்கிலேயரால் மதம் மாற்றப் பட்டவர்கள் என நினைக்கின்றேன். 😂
 @நிலாமதி அக்கா... கோவிக்காதேங்கோ  பகிடிக்கு எழுதியது. 😂

👆 மேலே இறுதியாக உள்ள  படத்தில்... வேலி மிக உயரமாக கட்டி உள்ளதை பார்க்க...
"குமர்ப் பிள்ளைகள்" இருக்கின்ற வீடு போல் தெரிகின்றது. 🤣

மிகவும் முக்கியமான சாமான் திருக்கை வாலை விட்டிட்டியள் தமிழ் சிறி…! நாய்க்கு எட்டாத உயரத்திலை வைக்க வேணும்…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

வேலி உயர்த்தி அடைச்சால் அங்கை ஏதோ வில்லங்கம் இருக்கு எண்டு அர்த்தம்...:rolling_on_the_floor_laughing:

"கசிப்பு காய்ச்சுற"  இடத்திலேயும்... வேலி, உயரமாக இருக்குமாம்.  animiertes-lachen-bild-0116.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

"கசிப்பு காய்ச்சுற"  இடத்திலேயும்... வேலி, உயரமாக இருக்குமாம்.  animiertes-lachen-bild-0116.gif

சில இடங்களில் கடியன் நாய் கவனம் எண்டு எழுதி தொங்கவிட்டிருப்பனம் :beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புங்கையூரன் said:

மிகவும் முக்கியமான சாமான் திருக்கை வாலை விட்டிட்டியள் தமிழ் சிறி…! நாய்க்கு எட்டாத உயரத்திலை வைக்க வேணும்…!

புங்கையூரான்...  ஜேர்மனிக்கு, வந்து கனகாலம் என்ற படியால்...
ஊரில் பாவிக்கப் பட்ட  ஆயுதங்கள் பட்டென்று நினைவுக்கு வரவில்லை. 😂

திருக்கைவாலுடன்,  நாம்பன் மாட்டில் இருந்து பெறப்படும் 
அதன், இனவிருத்தி செய்யும் உறுப்பையும்... காய வைத்து   பாவிப்பார்களாம்.   
அதனால் அடித்து ஏற்படும் புண், சாகும் மட்டும் மாறாமல் இருக்கும் என்று சொல்வார்கள்.

நீங்கள் சொன்ன மாதிரி... இரண்டு ஆயுதத்தையும்... 
நாய்க்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். 😂
இல்லாட்டி நாய்..  கவ்விக்  கொண்டு போயிடும். 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பனை ஓலை வேலிகளை மாற்றும்போது அதில் இருந்து கொட்டும் ஏராளமான கறையான்களும் அவற்றைக் கொத்தித் தின்ன முண்டியடிக்கும் கோழிகளையும் பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கும்......!  😁

இந்த வெளி சம்பந்தமாய் ஒரு "A " ஜோக் ஒன்று உண்டு ....அநியாயத்துக்கு அதுவும் நினைவில் வந்து போகுது.......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலிக்கதைகளும், தகவல்களும் மடகஸ்கார் கதையை விட சுவாரசியமாக இருக்கிறது.  வழமைபோல கு சா அண்ணாவின் தருணத்துக்கேற்ற பகிடிகளுடன். அறிந்து சிரித்து மகிழ்ந்தேன். ஆங்கிலேயரை விட பல மடங்கு போர்த்துக்கீசர், மற்றும் ஒல்லாந்தர் தான் கொடூரமாக இருந்துளார்கள். அம்ம்மா சொன்னது ஞாபகம் வந்தது. போர்த்துக்கீசர் காலத்தில் ஒவ்வொரு நாளைக்கு ஓர் வீட்டில் இருந்து வரிசையாக வாசலில் ஒரு மாட்டை கொண்டு வந்து  அவர்களுக்கு கொடுத்தார்களாம்.  அவர்களது ஆட்சி கொடுங்கோல் ஆட்சி.

 
 
 
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

578785_428201147232391_675537967_n.jpg?w=535&h=361

 

வேலியளுக்கை காவோலை வேலிதான் பாதுகாப்பானது.ஆரும் கள்ளர் களவாக வேலி பாய்ஞ்சால் காவோலை சரசரக்கிற சத்தம் காட்டிக்குடுத்துடும்.கீழாலை பூந்து போனால் கருக்குமட்டை கீறும்.
எனவே காவோலை வேலியோடை சேட்டை விடேலாது கண்டியளோ:beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பின்லாந்து தொடர்ந்து நோவேயை விட குறைந்த அளவு குடிவரவாளர்களையே கொண்டிருந்திருக்கிறது. அதனால்.. சொந்தச் சனத்தொகையிடையே வளப் பரம்பலை மகிழ்ச்சிக்குரிய மட்டத்தில் வைக்க முடிந்துள்ளது. குறிப்பாக சமூகத் தேவைகளாக வீடு மற்றும் அடிப்படைவசதிகள். டென்மார்க்.. சுவீடன்.. பின்லாந்து ஈயுவிலும் அங்கத்துவம் வகிப்பதால்.. ஈயு நிதிப் பங்கீடு அவர்களுக்கும் அமையும். நோர்வே அப்படியன்று. இதுவும் ஒரு காரணியாக இருக்கும்.    https://www.statista.com/statistics/1296469/immigration-nordic-countries/  
    • என்றாலும்  இலங்கை தமிழர்கள் சிலரது இதயங்கள் வாழ்கின்ற நாடுகள் 70 க்கும் 64 வது இடத்துக்கும் வந்தது கவலை தருகிறது. இந்தியா பெண்களை தெய்வமாக வணங்கும் நாடு 😂
    • நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன்..வீடியோ வெளியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் Jeyalakshmi CPublished: Wednesday, March 22, 2023, 13:56 [IST] சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்துள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்ட நிலையில் அவர் வீடியோ மூலம் தனது உடல் நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனை கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கொரோனா தொற்று மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக அவருடைய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. மீண்டார் இளங்கோவன் இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய பாதிப்பு இருப்பதால் அவர் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. வீடியோவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர் நலமுடன் இருப்பதாக நேரில் பார்த்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது உடல் நலம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ள உடையில் இருக்கும் இளங்கோவன்..நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று கூறியுள்ளார். இதனைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/i-am-fine-i-will-be-discharged-soon-video-posted-by-evks-ilangovan/articlecontent-pf884143-504081.html டிஸ்கி: அம்மா இட்லி சாப்பிட்ட மாதிரியோ?
    • காணாமற்போன சம்பவங்கள்: இராணுவம் கடந்த காலத் தவறுகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய தருணம் வந்திருக்கிறது!   Photo, TAMILGUARDIAN கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க வழக்கொன்றின் போது 2019 மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்த மூன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென வவுனியா உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. அந்த மூன்று உறுப்பினர்களும் அன்று தொடக்கம் காணாமற் போயிருப்பதுடன், அவர்களுடைய மனைவிமார் அது தொடர்பாக ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். தமது கணவன்மாரை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக அப்பெண்கள் வழங்கிய சாட்சியத்தை தான் நம்புவதாகக் கூறிய நீதிபதி, இராணுவம் அவர்களை ஆஜர் செய்யத் தவறினால் அந்த நபர்கள் காணாமற் போன சந்தர்ப்ப சூழ்நிலைகளை எடுத்து விளக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஓர் ஆட்கொணர்வு மனு என்பது, பொது அல்லது தனியார் கட்டுக்காவலின் கீழ் சட்ட விரோதமாக அல்லது பொருத்தமற்ற விதத்தில் வைக்கப்பட்டிருக்கும் நபரொருவரை ஆஜர்படுத்துமாறு நிர்ப்பந்திப்பதற்கு, அவரை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்வதற்கு அல்லது சட்டத்தின் பிரகாரம் அந்த விடயத்தைக் கையாளுமாறு கேட்டுக் கொள்வதற்கு கிடைக்கும் ஒரு நிவாரணமாகும். இராணுவத் தளபதி, 58ஆவது படையணியின் தளபதி மற்றும் முல்லைத்தீவு இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த விண்ணப்பங்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், சம்பவம் நடந்த இடம் தொடர்பாக நியாயாதிக்கத்தைக் கொண்டிருக்கும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு விசாரணையை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென வவுனியா மேல் நீதிமன்றம் பணிப்புரை வழங்கியிருந்தது. இந்த விசாரணை முடிவடைவதற்கு ஒன்பது ஆண்டுகள் எடுத்தன. போரின் கடைசி நாட்களின் போது ஷெல் தாக்குதல்கள் மற்றும் குண்டுத் தாக்குதல்கள் என்பவற்றிலிருந்து தப்பிக் கொள்வதற்காக தாம் தப்பியோடிய போது நிலவிய கடும் திகில் மற்றும் குழப்ப நிலை என்பவற்றை அப்பெண்கள் எடுத்து விளக்கியிருந்தார்கள். அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தை சென்றடைந்த பொழுது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இருப்பின் அவர்கள் சரணடைய வேண்டுமென்றும், ஒரு விசாரணையின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நிலையில், அப்பெண்கள் தமது கணவன்மார் சரணடைய வேண்டுமென அவர்களைத் தூண்டினார்கள். அது தமது கணவன்மாரை அவர்கள் பார்த்த கடைசித் தடவை என்றும், இராணுவ ஆளணியினர் அவர்களை இலங்கை  போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் ஏற்றி, எடுத்துச் சென்றதைப் பார்த்ததாகவும் அப்பெண்மணிகள் கூறினார்கள். 58ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்தன இராணுவத்தின் சார்பில் சாட்சியமளிப்பதற்கென சட்டமா அதிபரினால் அழைக்கப்பட்டிருந்தார். எவரும் கைது செய்யப்பட்டதனையோ அல்லது தடுத்து வைக்கப்பட்டதனையோ அவர் மறுத்தார். ஆனால், குறுக்கு விசாரணையின் போது 2009 மே 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் ஆட்கள் இராணுவத்திடம் சரணடைந்ததையும், அவ்விதம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஒரு பதிவேட்டை இராணுவம் வைத்திருந்தது என்பதனையும் அவர் ஏற்றுக் கொண்டார். எவ்வாறிருப்பினும், மேஜர் ஜெனரல் குணவர்தன அந்தப் பதிவேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினார். ஆனால், அதற்குப் பதிலாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்டிருந்த ஒரு பதிவேட்டை அவர் எடுத்து வந்திருந்தார். அந்த மூன்று நபர்களும் இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்கள் என அளிக்கப்பட்ட சாட்சியம் குறித்து நீதிமன்றம் திருப்தியடைந்திருப்பதாகக் கூறிய நீதிபதி, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது இராணுவத்தின் பொறுப்பாகுமென சொன்னார். இராணுவம் மார்ச் 22 ஆம் திகதி (இன்று) அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென கட்டளையிடப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இதே மாதிரியான ஒரு கட்டளை வழங்கப்பட்டிருந்தது. போரின் இறுதிக் கட்டத்தின் போது முல்லைத்தீவில் வைத்து தனது குடும்ப உறுப்பினர்களால் ஆயுதப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரொருவரை ஆஜர்படுத்த வேண்டுமென வவுனியா உயர்நீதிமன்றம் இராணுவத்துக்கு கட்டளையிட்டது. இராணுவம் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தவறினால் அவர் காணாமற்போன சந்தர்ப்ப சூழ்நிலைகளை அது எடுத்து விளக்க வேண்டுமெனக் கூறிய நீதிமன்றம், அதனை நிரூபிக்கும் பொறுப்பை இராணுவம் கொண்டிருப்பதாக மேலும் கூறினார். இராணுவத்தின் சார்பில் சாட்சியமளித்த சாட்சி ஒருவர் குறிப்பிட்ட தினத்தின் போது சரணடைந்தவர்களை ஆவணப்படுத்திய ஒரு பதிவேடு இருப்பதை ஏற்றுக் கொண்ட பின்னர், காணாமல்போன நபர் ஆயுதப் படையினரின் கட்டுக்காவல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தார் என்பதை நீதிமன்றம் நம்புவதாக நீதிபதி குறிப்பிட்டார். ஆனால், அந்தப் பதிவேட்டை சாட்சி  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினார். இந்த ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்த மூன்று பெண்களில் ஒருவர் அனந்தி சசிதரன் ஆவார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி ஒருவராக இருந்து வந்த தனது கணவரான எழிலனை அன்றைய தினம் அவர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வேண்டுமென அனுப்பி வைத்திருந்தார். பின்னர் அவருடைய கணவர் காணாமற் போயிருந்தார். தன்னுடைய கணவர் மீண்டும் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையிலேயே சரணடையுமாறு அவர் கணவரிடம் கூறியிருந்தார். கணவர் அவ்விதம் திரும்பி வராத பொழுது அனந்தி அவரைத் தேடத் தொடங்கியதுடன், அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அனந்தி தனது விடயத்தை ஜெனீவாவில் ஐ.நா. மன்றத்துக்கு எடுத்துச் சென்றதுடன், போர்க் குற்றங்களுக்கு வகைப் பொறுப்புக் கூற வேண்டிய ஓர் அரங்கு  என்ற முறையில் நாடாளுமன்றத்திற்குள் பிரேவேசிப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. நீதிமன்றத் தீர்ப்பின் முக்கியத்துவம் குறித்த கேள்விகளுக்கு அனந்தி பதிலளித்ததுடன், நீதிக்கான தனது போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் எனக் குறிப்பிட்டார். உங்கள் கணவரை ஆஜர்படுத்துமாறு இராணுவத்தைக் கோரும் நீதிமன்ற தீர்ப்பு எவ்வளவுமுக்கியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 18.05.2009 இல் இலட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்த இடத்தில் இலங்கை இராணுவத்திடம் நிராயுதபாணியாக கையளித்திருந்தேன். ICRC, HRC மற்றும் புனர்வாழ்வு அமைச்சர்கள், ஜனாதிபதி, பிரதமர் என்று சகலரிடமும் முறையிட்டேன். 2009 இலேயே ஐ.நா. மன்றத்திடமும் முறையிட்டிருந்தேன். ஒரு பதிலும் இல்லை. 2013 இல் ஆட்கொணர்வு மறுவழக்கு வவுனியா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சரணடைந்த சம்பவம் முல்லைத்தீவு எல்லைக்குள் நடந்தபடியால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தாலும், இராணுவ புலனாய்வாளர்களாலும் பல அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன். நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில் புலனாய்வாளர்கள் எனது வாகனத்தை பின் தொடர்வதும், அச்சுறுத்துகின்ற வகையில் கண்காணிப்பதும், எனக்கு எதிராக CSD பண்ணையில் வேலை செய்கின்ற முன்னாள் போராளிகள், போராளிகளின் மனைவிமாரை கொண்டு போராட்டம் செய்வது, அவர்களைக் கொண்டு எனக்கு எதிராக கோசங்களை எழுப்புவது எல்லாமே நடந்தது. ஆனாலும் வழக்குகளுக்குத் தொடர்ந்து சென்று வந்தேன். இன்று வவுனியா உயர் நீதிமன்றில் எனது ஆட்கொணர்வு மனு வழக்கிற்கான தீர்ப்பு வந்துள்ளது என்பது ஒரு நம்பிக்கையையும் தெம்பையும் தந்திருக்கிறது. அறம் வெல்லும் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது. அது உங்களை எப்படி உணர வைத்தது? நான் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், அவமானங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு கிடைச்சிருக்கு. மனக்காயம் கொஞ்சம் ஆறியமாதிரி இருக்கிறது.. அறம் வெல்லும் என்ற நம்பிக்கை துளிர் விட்டிருக்கு. இன்னும் நம்பிக்கையுடன், வலுவாக அறம் சார்ந்து போராடக்கூடிய மன எழுச்சி ஏற்பட்டிருக்கு. இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கு நீங்கள் மேற்கொண்ட செயல்முறை என்ன?  18.05.2009 இல் என் கணவரை சரணடையக் கொடுத்துவிட்டு, அரச உத்தியோகத்தருக்கான சொற்ப சம்பளத்தில் பிள்ளைகளை வளர்க்க, கல்வியை ஊட்ட, பாதுகாப்பாக வைத்திருக்க என்று பலவகையில் பொருளாதார ரீதியாகவும் உளரீதியாகவும் போராட வேண்டியவளாக இருந்தேன். இலங்கை இராணுவத்தின் விசாரணை, இலங்கை புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் எல்லாமே இருந்தது. முதன் முதலாக 2011இல் எனது மூன்று பிள்ளைகளையும் கொழும்பிற்கு பஸ்ஸில் கூட்டிக்கொண்டு சட்டத்தரணி ரத்னவேல் அவர்களைச் சந்தித்து எனது கணவரை சரணடைய கொடுத்த சம்பவத்தை விசாரித்து ஆட்கொணர்வு மனு வழக்கு தாக்கல் செய்து தருமாறு கோரியிருந்தேன். ரத்னவேல் சேர் சொன்னார் இவ்வழக்கு மிகவும் அச்சுறுத்தலானது, நீங்கள் தனியாக இதில் ஈடுபடுவதை விட இன்னும் சிலரை சேர்த்து இவ்வழக்கை தாக்கல் செய்யலாம் என்றார். இந்த வழக்கிற்கான பணம் எதுவும் தரத் தேவையில்லை எனவும் சொன்னார். எனவே, 2011 இல் கிளிநொச்சியில் எனது அலுவலக கடமை நேரம் முடிந்தபின் பஸ்ஸில் சென்று பல போராளிகளின் மனைவியார், தாய்மார்களைச் சந்த்தித்தேன். அதேபோல் யாழ்ப்பாணத்தில் சனி, ஞாயிறு நாட்களில் பஸ்ஸில் சென்று போராளிகளின் மனைவியாரைச் சந்தித்தேன். சுமார் 25 பேர் வரை சந்தித்தேன். இதில் நான்கு பேர் என்னுடன் சேர்ந்து வழக்குத் தாக்கல் செய்ய உடன்பட்டனர். பின்னர் இந்த நான்கு பேரையும் கொழும்பிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து ரத்னவேல் சேருடன் கடமையாற்றிய சட்டத்தரணி மங்களேஸ்வரி அவர்களின் உதவியுடன் வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அந்த நெருக்கடியான காலப்பகுதியில் CHRD யில் கடமையாற்றிய பலர் எங்களுக்கு அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தனர். குறிப்பாக சட்டத்தரணி மங்களேஸ்வரி மிகவும் துணிச்சலாக பக்கபலமாக இருந்தார். அடுத்த கட்டமாக ஐந்து பேரை இணைத்து வழக்கு தாக்கல் செய்தோம். இதில் பல சரணடைந்தவர்களின் மனைவியர் இதே வழக்கினை தாக்கல் செய்வதற்கு உடன்படவில்லை. தங்களுக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், அரசு தங்களை பழிவாங்கும், பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் மறுத்துவிட்டனர். இந்தத் தீர்ப்பால் என்ன நடக்கும் என்று நம்புகிறீர்கள்? இந்தத் தீர்ப்பு காணாமற்போனவர்களுக்காக போராடும் ஏனையோருக்கு முன்னுதாரணம். ஆயிரக்கணக்கானவர்கள் சரணடைந்தார்கள். எனவே, ஏனையவர்களும் வழக்குகளை தாக்கல் செய்ய முன்வர வேண்டும். இனி பாதுகாப்பு தரப்பிலிருந்து என்ன வெளிப்பாடு வரப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நீங்கள் ஜெனிவா சென்ற போது சர்வதேச சமூகம் உங்களுக்கு உதவியாக இருந்ததா? ஜெனிவா சென்றபோது அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் எங்களுக்கு எதுவுமே செய்துவிடவில்லை. ஆனாலும், நீதி கோருகின்ற பொது வேலைத்திட்டத்திற்கு 2014 இலிருந்து இன்றுவரை முன்னெடுத்து வருகிறேன். 2014/ 2015 களில் சர்வதேசம் எங்கள் கருத்துக்களை செவிமடுத்தது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானிய, சுவிஸ் போன்ற நாடுகள் போரில் சாட்சியாக என் குரலை செவிமடுத்தது. ஆனால், சர்வதேசம் உருவாக்கிய நல்லாட்சிக்கு பின் சாத்தியமான எதுவும் நடக்கவில்லை. சர்வதேச விசாரணை என்பதை வலியுறுத்தினோம். 30/1 தீர்மானம் கலப்பு பொறிமுறை என்றது. பின்னர் வலுவிழந்த தீர்மானங்கள் நீர்த்துப் போனதாக இருக்கின்றது. 2013/ 2015௧ளில் நாடுகளும் சரி, சர்வதேச நிறுவனங்களும் சரி எங்களுக்கான நீதியை பெற்றுத்தருவதில் கரிசனைக் காட்டியது. இதன் காரணமாக போர் சாட்சியாக என்னையும் முன்னிலைப்படுத்தியது. இலங்கையில் ஏற்பட்ட 2015 ஆட்சி மாற்றத்தின் பின் எல்லாமே மாறிவிட்டது. ஆனாலும், தொடர்ந்து எனது நீதிகோரிய பயணம் தொடர்கின்றது. மனித உரிமைகள் பேரவையில் எத்தனை முறை உரையாற்றினீர்கள்? நான் 2014 தொடக்கம் இன்றுவரை 15 தடவைக்கு மேல் ஐ.நா. சபையில் பேசியுள்ளேன் முடிவு என்னவாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்? நல்ல முடிவுக்காக இன்றும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இன்றும் போராடவேண்டிய தேவை உள்ளது. உலக நாடுகள் தங்கள் நலன் சார்ந்து சிந்திக்கின்றனவே தவிர மனித நேயம் காக்கப்படுவதில்லை. மனித உரிமை என்பது வலுவிழந்தவர்களை கையாள எடுத்துக்கொள்ளும் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. 13 வருடங்கள் கடந்தும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், தடை செய்யப்பட்ட நச்சு குண்டுகள், கொத்து குண்டுகள் கொண்டும் கொள்ளப்பட்டும் தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று கண்டுகொள்ளத் தவறிய ஐக்கிய நாடுகள் சபையை என்னவென்று சொல்வது? இறுதியில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளதா? காலம் கடந்தாலும் நீதியைப் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இலட்சக்கணக்கான மக்களின் ஆன்மாக்கள், இனவிடுதலைக்காக தங்கள் உன்னதமான உயிரை ஆகுதியாக்கிய ஆயிரக்கணக்கான மாவீரர்களின் தியாயங்கள் வீண்போகாது. நீதியை பெற்றுக்கொள்ள போராடுவோம். அறம் வெல்லும். Military to Face a Day of Reckoning Over the Disappeared என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளியான நேர்க்காணலின் தமிழாக்கம்.   https://maatram.org/?p=10758  
    • கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த முயற்சியும் இல்லை 😭  ஆகக் குறைந்தது யாழ் களத்திலாவது நெடுக்ஸ்யும் கோசானையும் யஸ்ரினையும் (ஒரு உதாரணத்திற்கு தான் 3 பெயர்கள்) ஆவது ஒரு கோட்டின் கீழ் கொண்டு வரமுடியுமா? முடிந்தால் அறிவாயுதப்போர் பற்றி பேசும் தகுதியாகவாவது கொள்ளலாம். 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.