Jump to content

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

புட்டினைக் கைது செய்ய முடியுமென்று நம்பி இந்த கைது ஆணை பிறப்பிக்கவில்லை.

உண்மை தான்.......எது நடக்கும் என்று நம்புகிறோமோ  அது நடக்காது ...எது நடக்காது என்று நம்புகிறோமோ.   அது நடக்கும்....எனவே… புட்டினை கைது செய்ய முடியாது என்று உறுதியாக நம்புவோம் 🤣

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

புட்டினைக் கைது செய்ய முடியுமென்று நம்பி இந்த கைது ஆணை பிறப்பிக்கவில்லை. ஆனால், அவரது சர்வதேச பயணங்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் நோக்கமே பிரதானமானது. புட்டினோடு சேர்த்து இது வரை மூன்று நாடுகளி

விசுகு

இப்படி இங்கு பலரும்  எழுதுவதை  பார்க்கமுடிகிறது உண்மையில் இது  தான்  எமது  பிரச்சினை  இழுபடக்காரணம் எமது உண்மைநிலை? எமது  பலம் என்ன? எமக்கென்று எத்தனை நாடுகள்?? எமக்கு  இன்னும

கிருபன்

ஆமாம். கிழக்கு, மேற்கு எனப் பிரிந்திருந்தபோது ரஷ்யாவின் (சோவியத்தின்) ஆதிக்கத்துக்கள் இருந்த பொற்கால வாழ்வை மறக்கமுடியுமா? மேற்கு நாடுகளின் சதியால் இழந்த வாழ்வை மீளப்பெற ரஷ்யா மீது எப்போதும் ஜேர்மனிக்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

உண்மை தான்.......எது நடக்கும் என்று நம்புகிறோமோ  அது நடக்காது ...எது நடக்காது என்று நம்புகிறோமோ.   அது நடக்கும்....எனவே… புட்டினை கைது செய்ய முடியாது என்று உறுதியாக நம்புவோம் 🤣

ட்ரம் கைது செய்யப்பட மாட்டார் என நம்புவோம். பைடன் அடுத்த தேர்தலில் வெல்லுவார் என நம்புவோம்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, kalyani said:

ட்ரம் கைது செய்யப்பட மாட்டார் என நம்புவோம். பைடன் அடுத்த தேர்தலில் வெல்லுவார் என நம்புவோம்.😜

ம்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அரசியல் - icc  இதனுடன் குலைய ஆரம்பிக்கும். ஏற்கனவே அவ்வளவு உறுதியாக இல்லை.

ருஸ்யா கிரிமினல் வழக்கு தொடுத்து இருக்கிறது ICC நீதிபதி மற்றும் ஆய்வாளர்கள் மேல்.

இது இன்னும் பிரச்சனையாகும் - காரணம் இது அரசுகளுக்கு இடையில் நடக்கும் பேரத்தை பொறுத்தது. 

இவர்கள், வேறு நாடுகளுக்கு செல்வது எப்போதும் நிச்சயமற்றதாகிவிட்டது.

ICC யம் பூகோள அரசியலுக்கு உட்பட்டது - இதைத்தானே ரஷ்யா முதலில்  இருந்தே சொல்கிறது. 

ICC இந்த வழக்கும் கேலிக்கூத்தானது - எந்த ஒரு பிரதேசத்தின் மீது கட்டுப்பாடு கொண்டு இருக்கும் அரசம், அங்குள்ள மக்களின் அடிப்படை நலத்தை பேண வேண்டும். அடிப்படை, சர்வதேச சட்டம்.

எனவே, கைவிடப்பட்ட குழந்தைகளை , யுத்த பிரதேசத்தில் இருந்து அகற்றி பேணுதல்   கிரிமினல் என்பது சோடிக்கப்பட்டது. 

அனால், ICC முதல் இந்த வழக்கை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மீது தொடுத்து இருந்தால்- வரலாற்றை சரி செய்யும் நோக்கில் - ஏனெனில், பழங்குடிகள் இன்னமும் தமது தொலைந்த சந்ததியை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் - இந்த வழக்குக்கு இடம் இருக்கிறது. 

சட்ட அடிப்படையில், ருஷ்யாவின் வாதம், மிக வலுவானது, ICC இந்த வழக்கிலும் பார்க்க.

இது தான் மேற்கின் rule based - அவர்களேயே எதுவென்று சொல்லமுடியாமல், வேளைக்கு, சந்தர்ப்பத்துக்கு , தமக்கு ஏற்றவாறு செய்வது (இதை  மேற்கின் ஆய்வு மையங்களே சொல்கின்றன, அனால் இங்கு சிலர் சாதிக்கிறார்கள் அப்படி இல்லை என்று).

ICC ஐ ஏற்றுக்கொண்ட மேற்கு அல்லாத அரசுகளும் அநேகமாக இதை புறக்கணிக்க கூடும்; மற்றும் விலத்தவும்  கூடும், ஏனெனில் இந்த நிலை ஆப்பிரிக்காவில், ஆசியாவில், தென்னமெரிக்காவில் இடம்பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

ICC யின் குலசைவு ஆரம்பிக்கிறது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kadancha said:

ICC இந்த வழக்கும் கேலிக்கூத்தானது - எந்த ஒரு பிரதேசத்தின் மீது கட்டுப்பாடு கொண்டு இருக்கும் அரசம், அங்குள்ள மக்களின் அடிப்படை நலத்தை பேண வேண்டும். அடிப்படை, சர்வதேச சட்டம்.

எனவே, கைவிடப்பட்ட குழந்தைகளை , யுத்த பிரதேசத்தில் இருந்து அகற்றி பேணுதல்   கிரிமினல் என்பது சோடிக்கப்பட்டது. 

அனால், ICC முதல் இந்த வழக்கை அமெரிக்கா, கனடா,

முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மக்களை - மெனிக்பார்ம் உட்பட்ட முகாமகளில் தடுத்துவைத்தது - இதே பேணலுக்குள் வருமா ?

இவர்கள் கைவிடப்பட்ட குழந்தைகள் இல்லை. அந்த நகரில், ரஸ்ய துருப்புகள் போய் இவர்களை எடுக்கும் வரை தம் பெற்றாருடன் வாழ்ந்த பிள்ளைகள்.

ஒரு குழந்தையின் best interest அதன் பெற்றாருடன் இருப்பதே என்கிறது சட்டம்.

பழங்குடி குழந்தைகளுக்கு நடந்தது கிரிமினல் குற்றம்தான். அதற்கு அவுஸ்ரேலிய அரசு பகிரங்க மன்னிப்பும் கேட்டுள்ளது.

ஆகவே பல வருடங்களுக்கு முன் மேற்கு ஒரு குற்றத்தை இழைத்தது என்பதால், இப்போ அதையே ரஸ்யா செய்வது குற்றம் இல்லை என்றாகாது.

ரஸ்யா உண்மையில் இந்த குழந்தைகளை பேண விரும்பினால் - அவர்களை பெற்றாருடன் சேர்த்து இடம் பெயர்த்து, பெற்றாருடன் சேர்த்து, உக்ரேனின் இன்னொரு நகருக்கு அனுப்பி இருக்க வேண்டும்.

போர்க்கைதிகளை பரிமாறும் ரஸ்யா இதை மிக இலகுவாக செய்திருக்கலாம்.

————-

ICC யில் 123 நாடுகள் ஒப்பம் இட்டுள்ளன.

அவை எவையும் விலகுவதாக அறிவிக்கவில்லை. வழமையாக ICC ஐ ஏற்காத நாடுகள்…ஏற்கப்போவதில்லை.

ஆனால்,  மனித குல விரோதமாக யார் நடந்தாலும் ICC விசாரிக்க முடியும் என்பதே உண்மை.

நிச்சயமாக இதில் அரசியல் உண்டு. அது மேற்கு சார்பான அரசியல்தான்.

மேற்கின் ஆளுமை இருக்கும் வரை ICC குலைய வாய்ப்பு அதிகம் இல்லை.

Edited by goshan_che
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மக்களை - மெனிக்பார்ம் உட்பட்ட முகாமகளில் தடுத்துவைத்தது - இதே பேணலுக்குள் வருமா ?

இந்த நிலை வேறு, முழு மக்களையும், பெயர்த்து, சிறையாக  அடைத்து வைத்து இருந்தது - முழு மக்களையும் ருஷ்யா கொண்டு போனதா?

அனால், முள்ளிவாய்க்காலுக்கு மேற்கு, சர்வதேச சட்டத்தை வைத்து மக்கள் கூட்டத்தை அடைத்த  சிறைக்கு நியாயம் கற்பித்தது. 
 
8 minutes ago, goshan_che said:

ஒரு குழந்தையின் best interest அதன் பெற்றாருடன் இருப்பதே என்கிறது சட்டம்.

இது சிவில் ஒழுங்கு இருக்கும் வரைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kadancha said:

இந்த நிலை வேறு, முழு மக்களையும், பெயர்த்து, சிறையாக  அடைத்து வைத்து இருந்தது - முழு மக்களையும் ருஷ்யா கொண்டு போனதா?

இரெண்டுமே கொடுமைதான்.

எது அதிகம் கொடுமையானது?

தாய் தந்தை யுடன் பிள்ளைகளை அடைத்து வைத்தது (இலங்கை).

தாய் தந்தை யுடன் இருந்த பிள்ளையை, அவர்களிடம் இருந்து பிரித்து - வேற்று நாட்டில் கொண்டு போய் அடைத்து வைப்பது? (ரஸ்யா).

22 minutes ago, Kadancha said:

அனால், முள்ளிவாய்க்காலுக்கு மேற்கு, சர்வதேச சட்டத்தை வைத்து மக்கள் கூட்டத்தை அடைத்த  சிறைக்கு நியாயம் கற்பித்தது. 

முள்ளிவாய்கால் மக்களை முகாமில் அடைத்து வைத்ததை எந்த மேற்கு நாடு சட்டப்படியானது என்று நியாப்படுத்தி அறிக்கை விட்டது?

ஆதாரம்?

26 minutes ago, Kadancha said:

இது சிவில் ஒழுங்கு இருக்கும் வரைக்கும்.

இல்லை - பெற்றாரால் பிள்ளைக்கு தீங்கு என்ற ஒரு நிலை தவிர மிகுதி நிலைகளில் எல்லாம் பிள்ளைகளின் சேம நலன் - அவர்களின் பெற்றாருடன் தங்கி இருப்பதிலேயே உள்ளது.

35 minutes ago, goshan_che said:

ஆகவே பல வருடங்களுக்கு முன் மேற்கு ஒரு குற்றத்தை இழைத்தது என்பதால், இப்போ அதையே ரஸ்யா செய்வது குற்றம் இல்லை என்றாகாது.

இந்த கேள்வியை லாவகமாக கடந்து சென்றுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

முள்ளிவாய்கால் மக்களை முகாமில் அடைத்து வைத்ததை எந்த மேற்கு நாடு சட்டப்படியானது என்று நியாப்படுத்தி அறிக்கை விட்டது?

uk இன் அந்த நேர அமைச்சரே (அல்லது முது நிலை அதிகாரி)  (DFID க்கும் பொறுப்பாக இருந்தவர், பெயர் நினைவிபு இல்லை ), அந்த நிலையில் இந்த முகாம்களே ஏற்ற நிலை என்று.

அது முகாமூக்கு சென்று பார்த்து சொன்னதாக தான் எனது நினைவில் இருக்கிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

தாய் தந்தை யுடன் இருந்த பிள்ளையை, அவர்களிடம் இருந்து பிரித்து - வேற்று நாட்டில் கொண்டு போய் அடைத்து வைப்பது? (ரஸ்யா).

இது நடந்து இருக்கலாம், அனால் திட்டமிட்டு அல்ல. மேற்றுகின் ஊடகங்களே, சொல்லும் சந்தர்ப்பங்கள், 10க்கும் குறைவாக இருக்கிறது.

https://apnews.com/article/ukrainian-children-russia-7493cb22c9086c6293c1ac7986d85ef6

மற்றது அடைத்து வைக்கவில்லை. 

மிகப் பெரும்பான்மையாக, கைவிடப்பட்ட சிறுவயதினர்.

முக்கியமாக, ருசியா இதை மறைக்கவில்லை. - இந்த சிறுவர்கள் பரமறுப்புக்காக ரஷ்யாவுக்கு கொண்டுவரப்படுவது. ( அனால்  மேற்கு இப்போதும்  தொலைந்தவர்களின் விபரத்தை  ஒழிக்கிறது - அதன் பரிமாணம் தெரிந்து விடும் என்பதால்)   

மேற்கு சொல்வது - அவர்கள் ருசியா கலாசாரத்தில் வளர்வது இனப்படுகொலை என்று. 

இது சீனாவில் Uyghurs குக்கு இனப்படுகொலை நடக்கிறது, 8 சந்தர்ப்பங்களை வைத்து மேற்கு சொன்ன கதையாகத் தான் இருக்கிறது; இறுதியில் cia இன் பிரச்சாரம் என்று வெளிப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இது அரசியல் - icc  இதனுடன் குலைய ஆரம்பிக்கும். ஏற்கனவே அவ்வளவு உறுதியாக இல்லை.

ருஸ்யா கிரிமினல் வழக்கு தொடுத்து இருக்கிறது ICC நீதிபதி மற்றும் ஆய்வாளர்கள் மேல்.

இது இன்னும் பிரச்சனையாகும் - காரணம் இது அரசுகளுக்கு இடையில் நடக்கும் பேரத்தை பொறுத்தது. 

இவர்கள், வேறு நாடுகளுக்கு செல்வது எப்போதும் நிச்சயமற்றதாகிவிட்டது.

ICC யம் பூகோள அரசியலுக்கு உட்பட்டது - இதைத்தானே ரஷ்யா முதலில்  இருந்தே சொல்கிறது. 

ICC இந்த வழக்கும் கேலிக்கூத்தானது - எந்த ஒரு பிரதேசத்தின் மீது கட்டுப்பாடு கொண்டு இருக்கும் அரசம், அங்குள்ள மக்களின் அடிப்படை நலத்தை பேண வேண்டும். அடிப்படை, சர்வதேச சட்டம்.

எனவே, கைவிடப்பட்ட குழந்தைகளை , யுத்த பிரதேசத்தில் இருந்து அகற்றி பேணுதல்   கிரிமினல் என்பது சோடிக்கப்பட்டது. 

அனால், ICC முதல் இந்த வழக்கை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மீது தொடுத்து இருந்தால்- வரலாற்றை சரி செய்யும் நோக்கில் - ஏனெனில், பழங்குடிகள் இன்னமும் தமது தொலைந்த சந்ததியை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் - இந்த வழக்குக்கு இடம் இருக்கிறது. 

சட்ட அடிப்படையில், ருஷ்யாவின் வாதம், மிக வலுவானது, ICC இந்த வழக்கிலும் பார்க்க.

இது தான் மேற்கின் rule based - அவர்களேயே எதுவென்று சொல்லமுடியாமல், வேளைக்கு, சந்தர்ப்பத்துக்கு , தமக்கு ஏற்றவாறு செய்வது (இதை  மேற்கின் ஆய்வு மையங்களே சொல்கின்றன, அனால் இங்கு சிலர் சாதிக்கிறார்கள் அப்படி இல்லை என்று).

ICC ஐ ஏற்றுக்கொண்ட மேற்கு அல்லாத அரசுகளும் அநேகமாக இதை புறக்கணிக்க கூடும்; மற்றும் விலத்தவும்  கூடும், ஏனெனில் இந்த நிலை ஆப்பிரிக்காவில், ஆசியாவில், தென்னமெரிக்காவில் இடம்பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

ICC யின் குலசைவு ஆரம்பிக்கிறது.

எனது பிள்ளைகளை ரசியா பலாத்காரமாக பிடித்துச் சென்று விட்டது என்று பெற்றோர் வழக்கு தொடர்ந்தால் ரசியா குற்றவாளியா இல்லையா??

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

எனது பிள்ளைகளை ரசியா பலாத்காரமாக பிடித்துச் சென்று விட்டது என்று பெற்றோர் வழக்கு தொடர்ந்தால் ரசியா குற்றவாளியா இல்லையா??

வாய்க்கு வந்த கதையாக அல்லவே இருக்கிறது. என்னக்கு அப்படித் தான் தோன்றுகிறது.

எவரும் எந்த வழக்கும் போடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

வாய்க்கு வந்த கதையாக அல்லவே இருக்கிறது. என்னக்கு அப்படித் தான் தோன்றுகிறது.

எவரும் எந்த வழக்கும் போடலாம். 

பதில்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

பதில்??

குற்றம் என்று தீர்மானித்த பின் வழக்கு எதுக்கு - தண்டனை கொடுத்து பிடிவிறாந்து, தணடனையை அமுல்படுத்த என்றல்லவா போட்டு இருக்க  வேண்டும்.
 
எதுவாயினும், உண்மையான சிக்கலான பிரச்னை, பூகோள  அரசியல் மயப்படுத்தப்பட்டு, மலினப்படுத்தப்பட்டுவிட்டது.  

ICC - அதுக்கு இதுவரை இருந்த நியாதிக்கத்தையும் மலினப்படுத்திவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

uk இன் அந்த நேர அமைச்சரே (அல்லது முது நிலை அதிகாரி)  (DFID க்கும் பொறுப்பாக இருந்தவர், பெயர் நினைவிபு இல்லை ), அந்த நிலையில் இந்த முகாம்களே ஏற்ற நிலை என்று.

அது முகாமூக்கு சென்று பார்த்து சொன்னதாக தான் எனது நினைவில் இருக்கிறது.
 
வாய்பில்லை.

 DFID உருவாக்கப்பட்டதே ஜூலை 2016 இல்தான்.

ஆதாரம் இருந்தால் தரவும்.

10 minutes ago, Kadancha said:

இது நடந்து இருக்கலாம், அனால் திட்டமிட்டு அல்ல. மேற்றுகின் ஊடகங்களே, சொல்லும் சந்தர்ப்பங்கள், 10க்கும் குறைவாக இருக்கிறது.

ஜோக் அடிக்காதேங்கோ கடஞ்சா,

ஒரு யுத்த நகரத்தில் திடேரென்று எப்படி 4000 பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் தோன்றினர்?

மரியபோல் என்ன மும்பாய் ரயில் நிலையம் போல், கைவிடபட்ட குழந்தைகள் வாழும் இடமா?

அப்படி பெற்றார் இறந்து இருந்தாலும் அவர்களை அடுத்து next of kin எனப்படும் உறவினர்களிடம் ஒப்படைப்பதுதான் முறை. பிள்ளைகளை பத்திரமாக மீட்டு, பெற்றார் அல்லது, உறவினரிடம் ஒப்படைப்பதுதான் முறை.

மாறாக அவர்களை கலச்சார சலவை செய்து, பொம்மைகள் போல் வெளிகிடுத்தி ரஸ்ய தொலைகாட்சிகளில் காட்சி பொருளாக்கியது ரஸ்யா.

இப்பதானே பிடியாணை போயிருக்கு? எப்படி, எந்த குழந்தைகளை, புட்டின் கடத்தினார் என்பது வழக்கு முன் போகும் போது வெளிவரும்?

15 minutes ago, Kadancha said:

மிகப் பெரும்பான்மையாக, கைவிடப்பட்ட சிறுவயதினர்.

ஆதாரம் எதும் அற்ற கூற்று

16 minutes ago, Kadancha said:

இது சீனாவில் Uyghurs குக்கு இனப்படுகொலை நடக்கிறது, 8 சந்தர்ப்பங்களை வைத்து மேற்கு சொன்ன கதையாகத் தான் இருக்கிறது; இறுதியில் cia இன் பிரச்சாரம் என்று வெளிப்பட்டது.

சீனாவில் நடப்பது இனப்படுகொலைதான். 

நாளைக்கு ரொஹிங்யாவிலும் ஒண்டும் நடக்கவில்லை என்பீர்கள் போல் இருக்கு.

ரஸ்யாவுக்கு வெள்ளை அடிக்க வெளிக்கிட்டு, எல்லாருக்கும் அடிக்கும் படி ஆகி விட்டது போலும்.

9 minutes ago, Kadancha said:

குற்றம் என்று தீர்மானித்த பின் வழக்கு எதுக்கு - தண்டனை கொடுத்து பிடிவிறாந்து, தணடனையை அமுல்படுத்த என்றல்லவா போட்டு இருக்க  வேண்டும்.

தவறான புரிதல். 

குற்றம் சாட்ட பட்டவரை நீதி மன்றம் கொண்டுவரும்

பிடிவிறாந்து தான் கொடுக்கப்பட்டிருக்கு.

இன்னும் குற்றன் என தீர்மானிக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

ICC - அதுக்கு இதுவரை இருந்த நியாதிக்கத்தையும் மலினப்படுத்திவிட்டது. 

ICC மேற்கின் எதிரிகளை மட்டும் குறிவைக்கும் என்ற விமர்சனம் பல ஆண்டுகளாக உள்ளது.

இதை சொல்லித்தான் 2016 இல் என நினைக்கிறேன் ரஸ்யா ரோம் சரத்தில் வைத்த கையொப்பத்தை மீள பெற்றது.

123 நாடுகளில் பல திடீரென்று ரோம் சரத்தில் இருந்து விலகாதவரை - ICC யி. நியாயப்பாட்டில் அதிக மாற்றம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

DFID உருவாக்கப்பட்டதே ஜூலை 2016 இல்தான்.

உங்களை பொறுத்தவரையில் 

https://www.gov.uk/government/organisations/department-for-international-development/about

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

உங்களை பொறுத்தவரையில் 

https://www.gov.uk/government/organisations/department-for-international-development/about

ஓம்  DFID 2016 இல் உருவானது என்ற என் தரவு பிழைதான். 

ஆனால், மேற்கு இலங்கையின் தடை முகாம்களை நியாயப்படுத்தியது என்பதை நிறுவ இன்னும் நீங்கள் ஆதாரம் தரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஆனால், மேற்கு இலங்கையின் தடை முகாம்களை நியாயப்படுத்தியது என்பதை நிறுவ இன்னும் நீங்கள் ஆதாரம் தரவில்லை.

uk காசே கொடுத்தது. இதன் பின் நான் ஒன்றும் ...

https://webcache.googleusercontent.com/search?q=cache:BXErMzTszhMJ:https://socialistworker.co.uk/international/why-has-britain-funded-sri-lankan-detention-camps/&cd=5&hl=en&ct=clnk&gl=uk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

முதலில் எந்த வெளி ஆட்களையும் உள்ளே விடாமல் இருந்த முகாமுக்குள், aid workers ஐ உள்ளே விடுவதற்கு இலங்க இணங்கியதால், அதை fund பண்ண வெளிநாடுகள் காசு கொடுத்தன? சரிதானே?

இது அடைக்கப்பட்ட மக்களின் நல வாழ்வை இட்டு மேற்கொள்ளபட்டது.

இது அல்ல நீங்கள் சொன்னது. நீங்கள் சொன்னீர்கள் மேற்கு இம்முகாம்களை நியாயபடுத்தியது என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kadancha said:

குற்றம் என்று தீர்மானித்த பின் வழக்கு எதுக்கு - தண்டனை கொடுத்து பிடிவிறாந்து, தணடனையை அமுல்படுத்த என்றல்லவா போட்டு இருக்க  வேண்டும்.
 
எதுவாயினும், உண்மையான சிக்கலான பிரச்னை, பூகோள  அரசியல் மயப்படுத்தப்பட்டு, மலினப்படுத்தப்பட்டுவிட்டது.  

ICC - அதுக்கு இதுவரை இருந்த நியாதிக்கத்தையும் மலினப்படுத்திவிட்டது. 

ஒரு சாதாரண மனிதனுக்கு தெரியவேண்டயதை மாயாஜாலத்துடன் நீட்டுகிறீர்கள். முட்டுக் கொடுக்க வெளிக்கொண்டு?? 

நியாயம் தர்மம் ஏன் சட்டம் கூட மரத்துப்போச்சு???

Edited by விசுகு
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

நியாயம் தர்மம் ஏன் சட்டம் கூட மரத்துப்போச்சு???

நாம் எல்லோரும் பெற்றோர்….

அந்த உள்ளுணர்வு கூட 😕

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

“We will not be prepared to fund closed camps after the monsoons.”

ஓம்…காசு தாறோம் உள்ள விடு என முதலில் போவது ….பிறகு அங்கே ஒரு சிஸ்டத்கை உருவக்கியபின்…காசில் இலங்கை தங்கி இருக்க தொடங்கிய பின்… இனி முகாம் தேவையில்லை, காசு தரமாட்டோம், முகாமை மூடு என்பது. மூட வைப்பது.

மேற்கின் இராஜதந்திரம் பற்றி சிலாகிக்கும் நீங்கள் இதை கிரகிப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

முதலில் எந்த வெளி ஆட்களையும் உள்ளே விடாமல் இருந்த முகாமுக்குள், aid workers ஐ உள்ளே விடுவதற்கு இலங்க இணங்கியதால், அதை fund பண்ண வெளிநாடுகள் காசு கொடுத்தன? சரிதானே?

இது அடைக்கப்பட்ட மக்களின் நல வாழ்வை இட்டு மேற்கொள்ளபட்டது.

இது அல்ல நீங்கள் சொன்னது. நீங்கள் சொன்னீர்கள் மேற்கு இம்முகாம்களை நியாயபடுத்தியது என.

உங்களுக்கு DFID இந்த உண்மையான பரிமாணம் தெரியவில்லை. அதன கறுப்பு  பக்கம்  counter insurgency உடன் சம்பந்தப்பட்டது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

உங்களுக்கு DFID இந்த உண்மையான பரிமாணம் தெரியவில்லை. அதன கறுப்பு  பக்கம்  counter insurgency உடன் சம்பந்தப்பட்டது.
 
நிச்சயமாக. எல்லா நாடு கொடுக்கும் foreign aid உம், அதன் சுய நலன் சார்ந்தே.

அது pro insurgency ஆகவும் இருக்கலாம், counter insurgency ஆகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

இப்படி இங்கு பலரும்  எழுதுவதை  பார்க்கமுடிகிறது

உண்மையில் இது  தான்  எமது  பிரச்சினை  இழுபடக்காரணம்

மது உண்மைநிலை?

எமது  பலம் என்ன?

எமக்கென்று எத்தனை நாடுகள்??

 விசுகு இதை விபரமாக எழுதுங்களேன், நீங்கள் மாறியதை போல் நாங்களும் மாற

மது உண்மைநிலை?................

எமது  பலம் என்ன? ................

எமக்கென்று எத்தனை நாடுகள்??............

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.