Jump to content

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

வேறுபாடு இருந்தாலும், விளைவு ஈற்றில் ஒன்றுதானே - பழங்குடிகள் இன்னமும் பலவீனமானவை - எனவே அவற்றின் மீதான தாக்கம் கூட அல்லவா?

குறிப்பாக - சீனாவில் - அவர்களின் பிரதேசத்தை விட்டு பெயர்க்கவில்லை - மதத்தை மாற்றவில்லை -  கொலைகள் என்று பொதுவாக இல்லை  -   ஆனால் தொழில் பயிற்சிகள் ; சீன  கலாசாரம் பற்றி வலோற்றகரமாக போதிக்கப்படுகிறது, முகாம்களில்.

உகிர்  பார்வையி அது அவர்களை அழிப்பதாக தெரிகிறது. இப்போது அமெரிக்கா அது இன கலாசார படுகொலை என்கிறது.  

உகிர் பிறப்பு வீதம் வெகுவாக குறைந்தது என்ற தரவு இருக்கிறது - அனால் - சீனா  han இனத்தவருக்கே 1 குழந்தை என்ற கொள்கையை கொண்டு இருந்தது. மற்றவர்கள் 2 அல்லது 3 பெறலாம் என்று வைத்து இருந்தது - 2015 - 2019 இல் 1 ஆக்கியது - இப்பொது எல்லாவற்றையும் எடுத்து விட்டது.     

இதை இனபடுகொலை என்பது  - பிரச்சாரமாக தானே தெரிகிறது.

நிச்சயமாக இரெண்டுக்கும் வித்தியாசம் உண்டு. ஒருவகை இன ஒழிப்புக்கு ஆளாகி மீதம் இருப்பவர்கள் மீது நடக்கும் இன ஒதுக்கல், சுரண்டல்.

மற்றையது சுட, சுட நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பு. இனப்படுகொலையா? என்பது வேண்டும் என்றால் சட்ட வரைவிலக்கணத்தில் அடங்காமல் போகலாம். ஆனால் உகிர்களுக்கு நடப்பது இனவழிப்புத்தான்.

இதை சொல்ல நான் ஆதாரம் இணைத்தால் அதை நீங்கள் மேற்கின் பிரச்சாரம் என்பீர்கள் எனவே இருவர் நேரத்தையும் மிச்சம் பிடிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

புட்டினைக் கைது செய்ய முடியுமென்று நம்பி இந்த கைது ஆணை பிறப்பிக்கவில்லை. ஆனால், அவரது சர்வதேச பயணங்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் நோக்கமே பிரதானமானது. புட்டினோடு சேர்த்து இது வரை மூன்று நாடுகளி

விசுகு

இப்படி இங்கு பலரும்  எழுதுவதை  பார்க்கமுடிகிறது உண்மையில் இது  தான்  எமது  பிரச்சினை  இழுபடக்காரணம் எமது உண்மைநிலை? எமது  பலம் என்ன? எமக்கென்று எத்தனை நாடுகள்?? எமக்கு  இன்னும

கிருபன்

ஆமாம். கிழக்கு, மேற்கு எனப் பிரிந்திருந்தபோது ரஷ்யாவின் (சோவியத்தின்) ஆதிக்கத்துக்கள் இருந்த பொற்கால வாழ்வை மறக்கமுடியுமா? மேற்கு நாடுகளின் சதியால் இழந்த வாழ்வை மீளப்பெற ரஷ்யா மீது எப்போதும் ஜேர்மனிக்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

பிரித்தனியா ஆரம்பத்தில் இருந்தே புலிகளை  (தமிழர்களை) எப்படியேனும் ஒடுக்கி விட வேண்டும் என்பதே கொள்கை. இது தெரியாமல்,    

தொடக்கத்தில் இருந்தே uk  கொடுத்தது. அதை தவிர, பயிற்றசையும் கொடுத்தது, தமிழ் சனத்தை  எப்படி ஒடுக்க வேண்டும் என்று.  முகாம்களுக்கு காஸ்ட்டு கொடுத்தது - dfid கறுப்புப்பக்க  திட்டப்படி, அதை நீங்கள் வாதத்துக்காக, பச்சை அடிக்கிறீர்கள் ராஜா தந்திரம் என்று.

எந்த மேற்கு அரசாவது கண்டித்ததா - அதை மனித குலத்துக்கு எதிரான குற்றம், யுத்தக்க குற்றம் என்று  வகைப்படுத்தா  விடினும்.

எந்த மேற்கு அரசுகம் முகாம்களை கண்டிக்கவில்லை - அவை நடத்தப்பட்ட விதத்தில் அவர்கள் உடன்படவில்லை - அதுவும்   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு.

ஏனெனில், மேற்கும் சேர்ந்து தான் இனப்படுகொலை ஊடக புலிகளை அழித்தல் என்ரூ செய்து முடித்தார்கள். 

ஆரம்பத்தில் இருந்து கடையில் கீனிமீனி வரை பிரிதானியா இலங்கை அரசு பக்கம் என்பதையும், கடைசி போரில் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என முடிவெடுத்து இவர்கள் பாரமுகமாக இருந்ததையும் இங்கே நானே பக்கம், பக்கமாக எழுதியுள்ள்ளேன்.

அதே போல் புட்டினுக்கு ஒரு வருடத்தில் பாய்ந்த ஐசிசி அழைப்பாணை, மகிந்தவுக்கு இன்னும் பாயாமல் இருப்பதன் காரணமும், இலங்கை மீதான மேற்கின் அணுகுமுறைதான்.

ஆனால் மெனிக்பார்ம் விடயத்தில் நடந்தது வேறு. அங்கே முதலில் எந்த வெளியாட்களையும் அனுப்பாமல் இலங்கை மட்டுமே செயல்பட்டது. பல அமைப்புகள், மேற்கு நாடுகள் வெளித்தரப்பு உள்ளே செல்ல, அனுமதிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்த பின், செலவை நீங்கள் ஏற்றால் நாம் அனுமதிப்போம் என இலங்கை இறங்கி வந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பையன்26 said:

உக்கிரேன் ர‌ஸ்சியா போர் தொட‌ங்கி ஒரு வ‌ருட‌ம் முடிந்து விட்ட‌து...............ஆர‌ம்ப‌த்திலே இந்த‌ முடிவை எடுத்து இருந்தா யாழில் எழுதாம‌ அமைதியாய் இருந்து இருப்பின‌ம் ப‌ல‌ர் ................போர் தொட‌ங்கின‌ கால‌ம் தொட்டு மாண்புமிகு புட்டின் என்று எழுதும் போது வேடிக்கை பார்த்து விட்டு   இனி வ‌ரும் கால‌ங்க‌ளில்  இத‌ன் ப‌டி தான் யாழில் செய‌ல் ப‌ட‌னும் என்று எழுதுவ‌து விய‌ப்பாய் இருக்கு🤣😁😂.............

இதுக்கு தான் யாழில் பல‌ர் எழுத‌ விரும்புவ‌தில்லை.................ம‌ற்ற‌ உற‌வுக‌ள் வில‌கி இருப்ப‌து போல் நானும் இனி வில‌கி இருக்க‌ போகிறேன் க‌ந்தையா அண்ணா..................

ர‌ஸ்சியா சர்வாதிகார நாடு இப்ப‌வாம் 2018ம் ஆண்டு ர‌ஸ்சியாவில் உல‌க‌ கோப்பை கால்ப‌ந்து போட்டி ந‌ட‌க்கும் போது பிரான்ஸ் கோப்பை தூக்கும் போது அப்ப‌ இனிச்ச‌து இப்ப‌ புளிக்குது............... 

என்ர‌ வ‌ய‌துக்கு நான் எழுத‌ வேண்டிய‌ இட‌ம் யாழ் இல்லை வேறு ப‌ல‌ இட‌ங்க‌ள் இருக்கு..............மொழி ப‌ற்றால் ம‌ற்றும்  என‌க்கு பிடித்த‌ சில‌ உற‌வுக‌ள் யாழில் இப்ப‌வும் இணைந்து இருக்கின‌ம் அது தான் நானும் யாழில் இணைந்து இருக்கிறேன்❤️🙏.........................

உங்க‌ட‌ இல‌வ‌ச‌ அறிவுரைக்கு ந‌ன்றி அண்ணா😏.............................

 

தம்பி பையன்  யாழ் களம். குப்பை களமில்லை   ஒரு கொள்கை...நோக்கத்துடன் பயணிக்கும் களம்..  ...இந்த உலகில் இலங்கை தமிழர்கள் விடுதலையை ஆதரிக்கும் ஒரேயொருகளம்.   ...இலங்கையில் பிறந்து வளர்த்து  ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய  நாங்கள்  ...ஆக்கிரமிப்பை. ஆதரிப்பது கூட  யாழ் கள நிர்வாகம் எதிர்பார்க்காதது மட்டுமல்ல வியப்பாகவுமிருக்கும்.    ...நடக்கும் நிகழ்வுகளை பார்த்து  புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்ய வேண்டும்.    ....இது பிழையா??.  யாழ் களம்  தொடர்ந்தும்.  தமிழ் மக்களின் ஆதரவுடன் இயக்கும்போது   நாங்கள் தொடர்ந்தும் போரடுகிறோம்  என்பதாகும்.  ...  நான் உங்களுக்கு இலவசமாக ஆலோசனை சொல்ல வரவில்லை     இணந்து இருந்து சரியே பிழையே   கருத்துக்களை எழுதுங்கள்....இனிமேல் ஆலோசனைகளு. ....பணம் அறவிடப்படும்.   🤣🙏😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

என்ன விசுகர், எந்த கிரகத்தில இருக்கிறீர்கள்? சரி சரி நம்பிக்கைதானே வாழ்க்கை

Injustice anywhere is a threat to justice everywhere

எங்கோ நடக்கும் அநீதி, எல்லா இடத்திலும் நீதியை குலைக்கும் வல்லமை உடையது 

என்றார் கிங். 

இதை மறுவளமாக யோசியுங்கள்.

Justice somewhere is a threat to injustice everywhere.

எவரோ ஒருவருக்கு கிடைக்கும் நீதி, எல்லாருக்கும் நீதி கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

பிரான்ஸ்காரர் ரொம்ப நல்லவங்க. ஆபிரிக்காவை வளர்ந்த நாடாக மாற்றிய பெருமை பிரான்சையே சாரும்.🙃

எங்களை ஆண்ட பிரிட்டிஷ்காரனாவது பரவாயில்லை. பிரான்ஸ்காரன் ஆபிரிக்காவை இன்னும் தலை நிமிரவே விடவில்லை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

தம்பி பையன்  யாழ் களம். குப்பை களமில்லை   ஒரு கொள்கை...நோக்கத்துடன் பயணிக்கும் களம்..  ...இந்த உலகில் இலங்கை தமிழர்கள் விடுதலையை ஆதரிக்கும் ஒரேயொருகளம்.   ...இலங்கையில் பிறந்து வளர்த்து  ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய  நாங்கள்  ...ஆக்கிரமிப்பை. ஆதரிப்பது கூட  யாழ் கள நிர்வாகம் எதிர்பார்க்காதது மட்டுமல்ல வியப்பாகவுமிருக்கும்.    ...நடக்கும் நிகழ்வுகளை பார்த்து  புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்ய வேண்டும்.    ....இது பிழையா??.  யாழ் களம்  தொடர்ந்தும்.  தமிழ் மக்களின் ஆதரவுடன் இயக்கும்போது   நாங்கள் தொடர்ந்தும் போரடுகிறோம்  என்பதாகும்.  ...  நான் உங்களுக்கு இலவசமாக ஆலோசனை சொல்ல வரவில்லை     இணந்து இருந்து சரியே பிழையே   கருத்துக்களை எழுதுங்கள்....இனிமேல் ஆலோசனைகளு. ....பணம் அறவிடப்படும்.   🤣🙏😁

ம‌ற்ற‌ த‌ள‌ங்க‌ளில் வ‌ரும் செய்திக‌ளை தானே அண்ணா யாழில் இணைக்கின‌ம் அத‌ன் பிற‌க்கு விவாதிப்ப‌து ...............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைத்து இருக்கின‌ம் 😂😁🤣 இனி இதை ப‌ற்றி கூட‌ எழுத‌ விரும்ப‌ல‌ அண்ணா.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

மேற்கு ஜேர்மனியில் இருக்கும் புட்டின் அபிமானிகள் குறைந்த பட்சம் கிழக்கு ஜேர்மனியில் போய் வசிக்கத் தயாரா?😁

அன்று போல் இன்றில்லை. இன்றைய நாஷிகள் வேலை செய்வோரை வரவேற்கின்றார்கள். சோம்பேறிகளாக இருந்த/இருக்கின்ற வேலை வெட்டிகளை எதிர்க்கின்றார்கள். பணம் சம்பாதிக்க வரும் அகதிகளை வெறுக்கின்றார்கள்.

வேக வீதிகளில் வாகனத்தை ஓட்டி ஜாலி பண்ணி விட்டு ஜேர்மனிய நிலவரத்தை விபரிக்க முடியாது. :grinning_squinting_face:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

ம‌ற்ற‌ த‌ள‌ங்க‌ளில் வ‌ரும் செய்திக‌ளை தானே அண்ணா யாழில் இணைக்கின‌ம் அத‌ன் பிற‌க்கு விவாதிப்ப‌து ...............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைத்து இருக்கின‌ம் 😂😁🤣 இனி இதை ப‌ற்றி கூட‌ எழுத‌ விரும்ப‌ல‌ அண்ணா.....................

அப்பன் இத்துடன் முடிக்கலாம்.:beaming_face_with_smiling_eyes:


இருந்தாலும் கந்தையருக்கு ஒரு வசனம் சொல்லீட்டு வாறன்...:face_with_tears_of_joy:

34 minutes ago, Kandiah57 said:

தம்பி பையன்  யாழ் களம். குப்பை களமில்லை  

யாழ்களம் குப்பை களம் இல்லை எண்டதை நீங்களும் கவனத்திலை எடுத்துக்கொள்ள வேணும்.:cool:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


நானும் தான் :zany_face:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலோ கந்தையர்!  இஞ்சை உப்புடி தனிய ஸ்மையிலி போட சட்டமில்லை தெரியுமோ? 😙
எழுத கை நடுங்கினால் இரண்டு பியரை அடிச்சுப்போட்டு வாறது  🥃  :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

ஏன் ரஷ்யா, வட கொரியா என்று தூர இடங்களுக்குப் போகவேண்டும்?

மேற்கு ஜேர்மனியில் இருக்கும் புட்டின் அபிமானிகள் குறைந்த பட்சம் கிழக்கு ஜேர்மனியில் போய் வசிக்கத் தயாரா?😁

நீங்கள் ஏன்? கிழக்கு ஜேர்மனிக்கு போகிறீர்கள்      இங்கே  மேற்கு ஜேர்மனியில்  பின்தங்கிய பகுதியில் கூட  இருக்க மாட்டார்கள்      

5 hours ago, குமாரசாமி said:

கலோ கந்தையர்!  இஞ்சை உப்புடி தனிய ஸ்மையிலி போட சட்டமில்லை தெரியுமோ? 😙
எழுத கை நடுங்கினால் இரண்டு பியரை அடிச்சுப்போட்டு வாறது  🥃  :cool:

இரண்டு இல்லை பத்து பியரும். அடிக்கலாம்  .....அனுப்பி வைக்கவும்.     🤣.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

13 hours ago, முதல்வன் said:

இந்த ரஷ்ய வாதமும் எதிர் வாதமும் திரிக்கு திரி தொடர்கின்றன. தனிமனித சுய தன்னிலை முன்னிறுத்தல்களாக மாறி, தனி மனித தாக்குதல்களாகவும் தொடர்கின்றன. 

சண்டைகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் அப்பால் எமது போராட்ட நிலை சார்ந்தும் ரஷ்யாவுக்காகவும் மேற்குலகிற்காகவும் வளைந்து நெளிந்து கருத்துகளை வைக்க பழகிக்கொண்டோம். 

பல அறியப்படாத தகவல்களும், தொடர்களும் இந்த கருத்தாடல்களின் பக்கவிளைவாக தோன்றினாலும், ஆழமாக ஒரு பகை உணர்வையும், வெல்ல வேண்டும் அல்லது தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக யாரையும் தூற்றவும், தமிழ்தேசியத்தை விலைபேசவும், எந்த நிலைக்கும் போக தயாராக மாறும் மனநிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுவிட்டோம் என்று கொஞ்சம் நிதானித்து ஆறுதலாக சிந்தித்தால் புரியும்.

ஒரு வளமான தமிழ்தேசியத்தின் தமிழர் உரிமையில் ஒற்றுமையாக இருக்கவேண்டியதை தாண்டி ஒருவரை ஒருவர் வசைபாடுவதில், உள்ளே ஊடுருவியவர்களுக்கு வேலை வைக்காமல் ஒவ்வொரு பக்கம் ஆட்சேர்த்து அவர்களை நம்பும் அளவுக்கு மாறிவிட்டோம்.

மீண்டும் ஒருமுறை நின்று நிதானித்து சிந்திப்போம். 

வணக்கம் @முதல்வன் 

இந்த கருத்தாடல்களை முதலில் இருந்து கவனித்தீர்களானால். ???

உறவுகளா உக்ரைன் ரசிய கருத்தாடலா என்றால் உறவுகள் தான் எனக்கு வேண்டும் என்று விலகி இருந்தேன். அப்படி விலகுவதும் ஒரு குற்றச்சாட்டாக இங்கே வைக்கப்பட்டது 

அதே நேரம் இங்கே ரசியாவை புட்டினை போற்றி வைக்கப்பட்ட கருத்துக்களை ஆரம்பத்தில் பகிடியாக அல்லது மற்றவர்களை சீண்டும் நோக்கோடு மட்டுமே வைக்கப்படுகிறது என்று தான் ஒதுங்கினேன்.

ஆனால் பிராந்திய வல்லரசுகள் எதையும் செய்யலாம்

அவனது நிலத்தை சுடுகாடு ஆக்கினால் கூட பலமற்றவன் காலில் விழவேண்டும் என்று சொல்லப் படும் போது எமது போராட்டத்தின் அத்திவாரமே இல்லாமல் போகும் நிலை. 

எனவே பேசவேண்டும் கண்டும் காணாமல் போய்விடமுடியாதநிலை.  

இது என் தனிப்பட்ட நிலை மட்டுமே. 

நன்றி உங்கள் நேரத்துக்கும் கருத்துக்கும்.

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஆனால் உகிர்களுக்கு நடப்பது இனவழிப்புத்தான்.

இதை சொல்ல நான் ஆதாரம் இணைத்தால் அதை நீங்கள் மேற்கின் பிரச்சாரம் என்பீர்கள்

 

ஆம், நிச்சயமாக மேற்றுகின் இனப்படுகொலை பிரசாரத்துக்கு பட்டு இருக்கிறீர்கள். 

நான் பலவற்றையும் பார்த்து விட்டே சொல்கிறேன்.

சீனா எவ்வாறு  1 குழந்தை கொள்கையை ஹான்  இனத்தவரிடம் வழக்கத்தில் கொண்டுவந்தது என்று  நினைக்கிறீகள்.

பெருந்தொகையான, பரவலான, வலோற்றக்கார கருத்தடை, முக்கியமாக கற்ப பையை அகற்றுதல்.

இப்போதைய உகிர் அடகு முறையிலும் இது அங்கங்கே நடந்து இருக்கலாம். அனால், ஹான் இனத்தவருக்கு நடந்தை போல கிரமம், பரவல் அல்ல.


அதே போல, சீனாவில் எல்லோரும் எல்லா இடங்களிலும் வாழ முடியாது, xinxang போன்ற இடங்களில் கட்டாய வேலை என்பதும் இருக்கிறது.  


இது மேற்கு நன்கு அறிந்து இருந்தும், இதை பற்றி மூச்சே இல்லை. சீன அரசின் நியாயம் சனத்தொகை கட்டுப்படுத்துதல், மேற்கிற்கு அது ஒத்து வந்தது.  

சீன அரசை பொறுத்தவரையில், உகிருக்கு செய்வதும், ஹான் க்கு செய்வதும் ஒன்று - வேறுபாடு இல்லை.


மாறாக , அமெரிக்கா அரசு செய்த,  பழங்குடி, கறுப்பு இனத்தவர் கற்ப பையை அகற்றுதல் ஆக குறைந்த மதிப்பீடு 25%. இது வலோற்கரமாக அல்லது களவாக செய்யப்பட்டது.

சீன தன இனத்தவருக்கே செய்தது. அமெரிக்கா வேறு இனத்தவருக்கு செய்தது.

இவற்றோடு ஒப்பிட்டு தன இப்பொது உக்கிருக்கு நடைபெறுவதை சொல்ல முடியும்.  

மேற்கு, xinxang இல் நடப்பதை உடனடியாக இனப்படுகொலை என்கிறது , எமக்கு நடந்ததாய் ஒதுக்கி தளி விட்டது, யெமனில் நடப்பது (ஏனெனில் மேற்கு சவூதுக்கி ஆயுதம் கொடுப்பதால்)?


ஆகவே மேற்கு சீன xinxang  இல் இனப்படுகொலை செய்கிறது என்பது அரசியலும், பிரச்சாரமும் தவிர , உண்மை நிலையை வெளிப்படுத்துவது அல்ல.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

ஆம், நிச்சயமாக மேற்றுகின் இனப்படுகொலை பிரசாரத்துக்கு பட்டு இருக்கிறீர்கள். 

நான் பலவற்றையும் பார்த்து விட்டே சொல்கிறேன்.

சீனா எவ்வாறு  1 குழந்தை கொள்கையை ஹான்  இனத்தவரிடம் வழக்கத்தில் கொண்டுவந்தது என்று  நினைக்கிறீகள்.

பெருந்தொகையான, பரவலான, வலோற்றக்கார கருத்தடை, முக்கியமாக கற்ப பையை அகற்றுதல்.

இப்போதைய உகிர் அடகு முறையிலும் இது அங்கங்கே நடந்து இருக்கலாம். அனால், ஹான் இனத்தவருக்கு நடந்தை போல கிரமம், பரவல் அல்ல.


அதே போல, சீனாவில் எல்லோரும் எல்லா இடங்களிலும் வாழ முடியாது, xinxang போன்ற இடங்களில் கட்டாய வேலை என்பதும் இருக்கிறது.  

 

இல்லை யூ எஸ் ஸ்டேட் டிபார்ட்மெண்ட் நாடுகளுக்கான வருடாந்த அறிக்கையிலும், யூகேயின் COIS அறிக்கையிலும் இவை மட்டும் அல்ல, Hukou எனப்படும் உள்ளக இடமாறலை தடுக்கும் சட்டம் பற்றியும் கூட பல விடயங்கள் சொல்லபட்டுள்ளன.

இதைவிட மேற்கில் இருந்து இயங்கும், மேற்கின் ஏஜெண்டுகள் என உங்கள் போன்றோர் சொல்லும் Amnesty, HRW எல்லாமும் கூட சீனாவின் உள் நடக்கும் அடக்குமுறை பற்றி பல அறிக்கைகள் விட்டுள்ளன.

ஆகவே உகிர் பிரச்சனையை மட்டும் மேற்கு தூக்கி பிடிப்பதாக சொல்லுவது தவறு.

 

1 hour ago, Kadancha said:

சீன அரசை பொறுத்தவரையில், உகிருக்கு செய்வதும், ஹான் க்கு செய்வதும் ஒன்று - வேறுபாடு இல்லை.

நிச்சயமாக வேறுபாடு உள்ளது.

இலங்கையில் சிங்களவரும் ஒரு பிள்ளைதான் பெற வேண்டும், தமிழரும் ஒரு பிள்ளைதான் பெற வேண்டும் என சட்டத்தை கொண்டு வந்து விட்டு, தமிழர் பகுதியில் அடக்குமுறையை ஏவி இதை கடுமையாக அமல்படுத்தி, கலாச்சார, இன அடையாளத்தையும் அழித்து, பிறக்கும் பிள்ளைகளை “இலங்கை மயப்படுத்துகிறோம்” என சிங்கள மயப்படுத்தினால் எமக்கு எப்படி இருக்கும்?

இதேதான் உகிர்களுக்கு நடக்கிறது.

பிள்ளை கடத்தல் முதல், வதை முகாம்கள் வரை பல ஆதாரங்களை காட்டலாம் - ஆனால் நேரத்தை மிச்சம் பிடிக்கிறேன்.

1 hour ago, Kadancha said:

மாறாக , அமெரிக்கா அரசு செய்த,  பழங்குடி, கறுப்பு இனத்தவர் கற்ப பையை அகற்றுதல் ஆக குறைந்த மதிப்பீடு 25%. இது வலோற்கரமாக அல்லது களவாக செய்யப்பட்டது.

இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒன்று historical injustice. மற்றையது injustice happening right now.

அது நடந்ததால் - இது நடக்க வேண்டும் என்பது, இப்படி சொல்லுவதற்கு மன்னிக்கவும் sadistic.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

சீன தன இனத்தவருக்கே செய்தது. அமெரிக்கா வேறு இனத்தவருக்கு செய்தது.

இல்லை. யூனானில் இருந்து இன்னர் மங்கோலியா வரை ஒரு கோடு கீறினால் - அதன் கிழக்கே உள்ளவை எதுவும் சீன இனத்தவரின் தேசம் அல்ல.

உகிர், திபெத், மங்கோலிய இன்னும் பல தேசிய இனங்களை, அவர்களின் நிலங்களை சீனா விழுங்கி உருவானவையே. அருணாச்சல், ஹிமாச்சல் பிரதேசங்களை கூட உரிமை கோருவது இப்படித்தான்.

இவை எல்லாமுமே வேறு, வேறு தேசிய இனங்கள்.

2 hours ago, Kadancha said:

மேற்கு, xinxang இல் நடப்பதை உடனடியாக இனப்படுகொலை என்கிறது , எமக்கு நடந்ததாய் ஒதுக்கி தளி விட்டது, யெமனில் நடப்பது (ஏனெனில் மேற்கு சவூதுக்கி ஆயுதம் கொடுப்பதால்)?

இது வெளிப்படையானது. தனது எதிரியின் ஓட்டையை தூக்கி பிடிப்பது, நண்பனின் குறைகளை போத்து மூடுவது - எல்லா நாடும் செய்யும் வேலைதான்.

நாம் யாருக்கும் வேண்டபடாதவர்களா இருந்த போது, இந்தியா வை மீறி எம்மை அணுக எவரும் தயாரில்லை என்ற போது - எம் விடயத்தில் பாரமுகமாக இருந்தார்கள்.

ஒரு படி மேல் எம் அழிவுக்கு உதவினார்களும் கூட.

2 hours ago, Kadancha said:

ஆகவே மேற்கு சீன xinxang  இல் இனப்படுகொலை செய்கிறது என்பது அரசியலும், பிரச்சாரமும் தவிர , உண்மை நிலையை வெளிப்படுத்துவது அல்ல.

இல்லை.

நடப்பது உண்மைதான்.

ஆனால் மேற்கு இதை அரசியலுக்கு கையில் எடுக்கிறது.

இதனால் மட்டும் நடப்பது பொய் என்றாகாது.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

நீங்கள் ஏன்? கிழக்கு ஜேர்மனிக்கு போகிறீர்கள்      இங்கே  மேற்கு ஜேர்மனியில்  பின்தங்கிய பகுதியில் கூட  இருக்க மாட்டார்கள்

உங்களை வைத்து மற்றவர்களையும் எடை போடக்கூடாது.:cool:

எனக்குத்தெரிய அங்கே ஊரில் மாட்டுவண்டிலே போக பாதை இல்லாத ஊரில் இருந்து இங்கே வந்துவிட்டு......

என்னெண்டு உந்த பட்டிக்காடுக்குள்ளை இருக்கிறியள்?
பக்கத்திலை எயார்போர்ட்டும் இல்லை
ரயில் ஸ்ரேசனும் இல்லை
ஹை ஸ்பீற் ரோட்டுக்களும் இல்லை
காகம் பறக்காத இடங்களிலை இருக்கிறியள் என.....
நக்கல் அடிக்கும் பலரை கண்டிருக்கிறேன். அப்படியானவர்களின் வாழ்க்கை எப்படி சீரழிந்து போய்க்கொண்டிருக்கின்றது என்பதையும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.:winking_face:

ஆனால் நான் உங்களைச் சொல்லவில்லை.:smiling_face:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

உங்களை வைத்து மற்றவர்களையும் எடை போடக்கூடாது.:cool:

எனக்குத்தெரிய அங்கே ஊரில் மாட்டுவண்டிலே போக பாதை இல்லாத ஊரில் இருந்து இங்கே வந்துவிட்டு......

என்னெண்டு உந்த பட்டிக்காடுக்குள்ளை இருக்கிறியள்?
பக்கத்திலை எயார்போர்ட்டும் இல்லை
ரயில் ஸ்ரேசனும் இல்லை
ஹை ஸ்பீற் ரோட்டுக்களும் இல்லை
காகம் பறக்காத இடங்களிலை இருக்கிறியள் என.....
நக்கல் அடிக்கும் பலரை கண்டிருக்கிறேன். அப்படியானவர்களின் வாழ்க்கை எப்படி சீரழிந்து போய்க்கொண்டிருக்கின்றது என்பதையும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.:winking_face:

ஆனால் நான் உங்களைச் சொல்லவில்லை.:smiling_face:

நான் வந்தது தொடக்கம் ஒரே இடத்தில் தான் இருக்கிறேன்........இங்கே இலங்கை தமிழர்கள்  பல பல தடவைகள்  இடமாறி இருப்பதை. நேரில் கண்டுள்ளேன்    .... கிருபன். சொன்ன உண்மையை எற்றுக்கொள்ளும்.  மனப்பங்குவம்.  உங்களுக்கு இல்லை     வீட்டுதளபாடங்களுக்கு.    ஒவ்வொரு குடும்பங்களுக்கும்  1500...2000 மார்க.  கொடுக்கிறார்கள் என்றவுடன்  பல தமிழ் குடும்பங்கள்  பல பொய்களை கூறி பலத்த சிரமத்தின் மத்தியில்  இடம்மாறியது எனக்கு நன்கு தெரியும்....அது   ஜேர்மனியில் உள்ள தமிழர்களில் எத்தனை பேர்   கிழக்கு ஜேர்மனியில் வாழ்கிறார்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

....அது   ஜேர்மனியில் உள்ள தமிழர்களில் எத்தனை பேர்   கிழக்கு ஜேர்மனியில் வாழ்கிறார்கள்???

வாழத்தேவை இல்லை ஜயா 

விடுமுறைக்காவது  ஒதுங்குகிறார்களா??

Edited by விசுகு
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விசுகு said:

வாழத்தேவை இல்லை ஜயா 

விடுமுறைக்காவது  ஒதுங்குகிறார்களா??

இரண்டுமே இல்லை தான் .....ஆனால்   அதுவல்ல பிரச்சனை   ஏன்   மறுக்க வேண்டும்   என்பது தான்  கேள்வி?? எற்றுகொள்வதில்   எமக்கு எதுவும் குறையப்போவதில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2023 at 08:07, கிருபன் said:

நான் அவதானித்த வகையில் @vasee ஒருவரது கருத்தையும் மறுதலிப்பதில்லை. எல்லோரிடமிருந்தும் அறிவதற்கு ஏதாவது இருக்கும் என்ற தேடல் உள்ளவர். தனது கருத்துக்களை மென்மையாக வைப்பவர்!

நன்றி கிருபன் உங்கள் கருத்திற்கு, 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.