Jump to content

நாளை மறுதினம் கைது செய்யப்படுவேன் என்கிறார் டொனால்ட் ட்ரம்ப்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாளை மறுதினம் கைது செய்யப்படுவேன் என்கிறார் டொனால்ட் ட்ரம்ப்

Published By: Sethu

19 Mar, 2023 | 10:08 AM
image

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) தான் கைது செய்யப்படக்கூடும் என தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துமாறும் தனது ஆதரவாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆபாசப்பட நடிகை ஒருவருடன் ட்ரம்ப் பாலியல் உறவு கொண்டதாக கூறப்படுவது தொடர்பில், அந்நடிகையை மௌனம் காக்கச் செய்வதற்காக, 2016 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 

ட்ரம்ப் பணம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு விசாரணை தொடர்பிலேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தான் ஸ்தாபித்த ட்ரூத் சோஷல் எனும் சமூக வலைத்தளத்தில் நேற்று காலை குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், மன்ஹட்டன் சட்ட மா அதிபர் அலுவலகத்திலிருந்து கசிந்த தகவலின்படி, 'குடியரசுக் கட்சியின் முன்னிலை வேட்பாளரும், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமானவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படுவார். ஆர்ப்பாட்டம் நடத்துங்கள், எமது தேசத்தை மீளக் கொண்டுவாருங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டோர்மி டேனியல்ஸ் என அறியப்பட்ட ஸ்டெபானி கிளிபர்ட் எனும் மேற்படி நடிகை ,2016 ஆம் ஆண்டின் தேர்தலுக்கு முன்னர் தனக்கு 130,000 டொலர்கள் வழங்கப்பட்டதாக கூறுகிறார். இது தொடர்பாக மன்ஹெட்டன் மாவட்ட அதிகாரிகள் 5 வருடங்களாக விசாரணை நடத்துகின்றனர். 

அப்பெண்ணுடன் தான் பாலியல் உறவு கொள்ளவில்லை என ட்ரம்ப் கூறி வருகிறார்.

இது தொடர்பில் ஜூரிகள் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்குமாறு ட்ரம்புக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர் என ட்ரம்பின் சட்டத்தரணி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். 
 
https://www.virakesari.lk/article/150883

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது : டிரம்ப் கைதுக்கு ஏற்பாடு !

அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரம் கைது செய்யப்படலாம் என்ற கருத்து பரவியுள்ள நிலையில், இந்த வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அப்படி நடந்தால் அவரது ஆதரவாளர்கள் கலவரம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தன்னை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக டிரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு எதிராக தனது ஆதரவாளர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .

இந்தப் பின்னணியிலேயே நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது . நியூயோர்க், வாஷிங்டன், லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் இடையேயான பாலியல் தொடர்பை மறைப்பதற்காக ட்ரம்ப் தரப்பால் தனக்கு 130,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாகவும், இந்த விடயத்தை இரகசியமாக வைக்குமாறு கூறியதாகவும் டேனியல்ஸ் கூறியிருந்தார்.

2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் பிரசாரம் செய்தபோது இந்தப் பணம் அவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறித்த பணப்பரிமாற்றத்தின் ஊடாக ஜனாதிபதி தேர்தல் பிரசார நிதியளிப்பு சட்டத்தை மீறியுள்ளதாக டிரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வரும் மன்ஹாட்டன் நீதிமன்றத்துக்கு அருகிலும், டிரம்ப்புக்கு சொந்தமான ‘ட்ரம்ப் டவர்’ கட்டிடத்தைச் சுற்றிலும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/245794

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அமெரிக்கன் ஜனாதிபதிகளில்.. கிளின்ரனுக்கு, அடுத்து ட்ரம்ப்.
இன்னும்.. லிஸ்ட் நீளும் போலை இருக்கு.
இவர்களை  இந்தியாவுக்கு...  அனுப்பி மாட்டுப் படாமல் பாலியல் 
தொடர்பு வைக்கிறது எப்படி  என்று  ட்ரெயினிங் கொடுக்க வேணும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொனால்ட் டிரம்ப்: முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி  கைது செய்யப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும்?

டொனால்ட் டிரம்ப்: முன்னாள் அமெரிக்க அதிபர் கைது செய்யப்பட்டால் என்ன நடக்கும்?
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப், கடந்த 2016ஆம் ஆண்டு ஆபாசப்  பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு 1.3 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் கொடுத்த வழக்கில் இன்று (செவ்வாக்கிழமை) கைது செய்யப்படலாம் என அவரே கூறி இருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் குற்றவியல் வழக்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறை. இப்படிப்பட்ட சூழலில் தான் சில அடிப்படைக் கேள்விகள் எழுகின்றன. அதை எல்லாம் பார்ப்பதற்கு முன், டொனால்ட் டிரம்ப்  எதிர்கொள்ளும் பிரச்னை என்ன என்பதைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

newssensetn%2F2023-03%2F36261dff-3eb8-40
 
டிரம்ப் மீதான குற்றச்சாட்டு:

நீலப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், தனக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையே கடந்த 2006ஆம் ஆண்டு வாக்கில் உறவு இருந்ததாக 2016ஆம் ஆண்டு ஊடகங்களிடம் கூறினார்.

இந்த பிரச்சினை பூதாகாரமாக வெடித்து சிதறிக் கொண்டிருந்த போது, பிரச்சி னையைச் சமாளிக்கும் நோக்கில், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு டிரம்பின் வழக்கறிஞர் மைக்கெல் கோஹென் 1.3 லட்சம் அமெரிக்க டொலரைக் கொடுத்து டேனியல்ஸின் வாயை அடைக்க முயன்றார். இது அமெரிக்க சட்டப்படி தவறல்ல.

இதை டொனால்ட் டிரம்ப் தன் கணக்கு வழக்கில் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக, அந்த 1.3 இலட்சம் அமெரிக்க டொலரை வழக்கறிஞர் கட்டணமாகக் கணக்கில் காட்டினார். இதனால் இந்த விஷயம் மீண்டும் வேறு ஒரு வடிவத்தை எடுக்கத் தொடங்கியது.

இப்படி டொனால்ட் டிரம்ப் கணக்கு காட்டியிருப்பது, தன் வணிக நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை தவறாகக் காட்டுவதற்குச் சமம். சொல்லப் போனால் சட்டப்பட தவறு. நியூயார்க் நகரத்தில் இது ஒரு குற்றச் செயல்.

மேலும், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு டொனால்ட் டிரம்ப் தரப்பு பணம் கொடுத்த விஷயத்தை மறைக்க நினைப்பது, தேர்தல் சட்டத்தையும் மீறுவதாகப் பொருள் கொள்ளப்பட்டு குற்றம்சுமத்தப்படலாம்.

தாம்  வாக்களிக்க இருக்கும் வேட்பாளரைக் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பது இதன் நோக்கமாக குறிப்பிடலாம். இதை எல்லாம் விட மோசமான விஷயம் என்னவென்றால், ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு, தவறான பதிவுகளைக் கொடுப்பது மிகப் பெரிய மற்றும் தீவிரமான குற்றமாக அமெரிக்காவில் கருதப்படும்.

newssensetn%2F2023-03%2Fa30b151a-f3fc-48
 
டொனால்ட் டிரம்ப் வழக்கு:

டொனால்ட் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுப்பது நியூயார்க் நகர அட்டர்னி ஜெர்னரல் ஆல்வின் ப்ராக்கின் கையில் தான் இருக்கிறது. அவர் தான் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அளவுக்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதை விசாரிக்க குழு அமைத்தார். அவர் ஒருவரால் மட்டும் தான் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படுமா? ஆம் என்றால் எப்போது தொடுக்கப்படும் என்கிற பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்.

கடந்த வாரம், ஜூரி விசாரணைக் குழுவிற்கு முன் ஆஜராக டிரம்புக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக, டிரம்பின் வழக்கறிஞர் கூறி இருந்தார். இது ஜூரி விசாரணைக் குழு தன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதையே குறிக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு தான் டிரம்பின் இன்னாள் சட்ட ஆலோசகர் மைக்கெல் கோஹென் மற்றும் முன்னாள் சட்ட ஆலோசகர் ராபட் காஸ்டெல்லோ தங்கள் தரப்பு பிரமாணங்களை முன்வைத்தனர். சரி இந்த கதைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கேள்விகளுக்கு வருவோம்.

newssensetn%2F2023-03%2F4947e30e-c621-49
 
டிரம்ப் கைது செய்யப்பட்டால் என்ன ஆகும்?

டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டால், சில நடைமுறைகள் பின்பற்றப்படும். முதலில் டிரம்ப் ஃப்ளோரிடாவில் இருக்கும் மர்-அ-லாகோ வீட்டில் இருந்து நியூ யார்க் நகர நீதிமன்றத்துக்கு வர வேண்டும். அதன் பின் கைரேகைகள் எடுக்கப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்படும்.

முறையாக வழக்கு பதியப்பட்டு, நீதிபதி தேர்வு செய்யப்பட்ட பின், மற்ற விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். அதன் பிறகு தான் எப்போது விசாரணை நடக்கும், என்ன மாதிரியான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், பிணை எடுப்பதற்கு என்ன விஷயங்கள் எல்லாம் தேவை போன்ற விஷயங்கள் தெரிய வரும்.

அமெரிக்காவைப் பொருத்த வரை இன்னாள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ரகசிய பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் டொனால்ட் டிரம்புக்கும் ரகசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

எனவே, டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அப்படையினரும் சில திட்டங்களை வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

டொனால்ட் டிரம்ப் தவறான நடத்தையின் கீழ் தண்டிக்கப்பட்டால் வெறும் அபராதத்தோடு தப்பிக்கலாம், ஒருவேளை Felony என்றழைக்கப்படும் குற்றத்தின் கீழ் குற்றம் உறுதி செய்யப்பட்டால், அதிகபட்சமாக 4 ஆண்டு காலம் சிறை தண்டணை விதிக்கப்படலாம்.

newssensetn%2F2023-03%2F2c6e4799-bb12-41
 
போராட்டங்கள் ஏதாவது நடக்குமா?

டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. டிரம்பும் தொடர்ந்து பெரிய அளவில் போராட்டங்களை நடத்த தன் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன் பேசியது போலவே, இப்போதும் பேசி இருக்கிறார் என பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே டொனால்ட் டிரம்ப் வழக்கு தொடர்பாக கலவரங்கள் கூட ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதிகார வட்டத்திலிருந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்தது போல ஒரு ஒருங்கிணைந்து நிர்வகிக்கப்பட்ட பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறுவதற்கான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டி இடலாமா?

ஒரு நபர் குற்றவியல் வழக்கில் குற்றவாளி (criminal conviction) என்று அறிவிக்கப்பட்டால் கூட, அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் ஒருவேளை டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டால், அது அவரது ஜனாதிபதி பிரச்சாரத்தை சிக்கலாக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

இனி டொனால்ட் டிரம்ப் என்ன ஆவார்? சிறை செல்வாரா? தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமா? ஒருவேளை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் அவர் ஜனாதிபதி தேர்தலில் நிற்பாரா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

newssensetn.com

https://thinakkural.lk/article/245701

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் கைது செய்யப்பட்டால் எப்படி இருக்கும்: வைரலான புகைப்படங்கள்..!

964177.jpg

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கைது செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அவர் கைது செய்யப்படுவது போன்ற போலியான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க அமெரிக்கா மொடல் ஸ்டோமி டேனியல்ஸ்க்கு ட்ரம்ப் 1,30,000 டொலர் வழங்கி இருந்ததாக கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டில் ட்ரம்ப் விரைவில் கைதாவார் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வந்தார். எனினும் ட்ரம்ப் உறுதியாக கைதாவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

1679458478355.jfif

இதற்கிடையில் ஒருவேளை பொலிஸாரால் ட்ரம்ப் கைது செய்யப்பட்டால் அந்த நிகழ்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன.

இந்தப் படங்கள் போலியானது என்றாலும் அது தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்ததால் இணையவாசிகள் பலரும் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்

முன்னதாக, அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக வெடித்தது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக மாறியது நினைவுகூரத்தக்கது.

Hindu Tamil

https://thinakkural.lk/article/245809

Edited by ஏராளன்
இடைவெளி குறைப்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Donald-trump GIFs - Get the best GIF on GIPHY  COMEDY KD: வக்கீல் "வண்டு முருகன்"  

ஏலுமெண்டால்... நம்ம கட்சிக்காரன் மேலை கை  வைத்து பாக்கட்டும்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Donald-trump GIFs - Get the best GIF on GIPHY  COMEDY KD: வக்கீல் "வண்டு முருகன்"  

ஏலுமெண்டால்... நம்ம கட்சிக்காரன் மேலை கை  வைத்து பாக்கட்டும்.  🤣

கட்சிகாரன்….கைதுசெய்யப்பட நான் ரெடி…ஆனால் விலங்கு மாட்டி போஸ் கொடுக்கும்படி கைதுசெய்ய வேண்டும் என அடம்பிடிக்கிறாராம்🤣

Link to comment
Share on other sites

ட்ரம்ப் கைது செய்யப்பட்டால் அமெரிக்க வரலாற்றில் முதலாவதாக கைது செய்யப்படும் ஜனாதிபதியாக இருப்பார். (முன்னை நாள் அல்லது தற்போதைய)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஏலுமெண்டால்... நம்ம கட்சிக்காரன் மேலை கை  வைத்து பாக்கட்டும்.  🤣

வரும் தேர்தலுக்காக இப்பவே அடுக்கெடுக்கினம்.....:grinning_squinting_face:

1 hour ago, nunavilan said:

ட்ரம்ப் கைது செய்யப்பட்டால் அமெரிக்க வரலாற்றில் முதலாவதாக கைது செய்யப்படும் ஜனாதிபதியாக இருப்பார். (முன்னை நாள் அல்லது தற்போதைய)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கட்சிகாரன்….கைதுசெய்யப்பட நான் ரெடி…ஆனால் விலங்கு மாட்டி போஸ் கொடுக்கும்படி கைதுசெய்ய வேண்டும் என அடம்பிடிக்கிறாராம்🤣

ட்ரம்ப் வரும் தேர்தலில்… அனுதாப வாக்கு எடுக்க, விலங்குடன் கைது செய்ய சொல்லக் கூடிய ஆள் தான். 😂

39 minutes ago, குமாரசாமி said:

வரும் தேர்தலுக்காக இப்பவே அடுக்கெடுக்கினம்.....:grinning_squinting_face:

பைடனுக்கு… வாற தேர்தலில், கட்டுக் காசும் கிடைக்காமல் போகப் போகுது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

பைடனுக்கு… வாற தேர்தலில், கட்டுக் காசும் கிடைக்காமல் போகப் போகுது. 🤣

இப்ப இருக்கின்ற பைடன் உண்மையா, or டம்மியா😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

ட்ரம்ப் கைது செய்யப்பட்டால் அமெரிக்க வரலாற்றில் முதலாவதாக கைது செய்யப்படும் ஜனாதிபதியாக இருப்பார். (முன்னை நாள் அல்லது தற்போதைய)

ட்றம்ப் அடுத்த தேர்தலில்… ஜனாதிபதியாகி, பைடனை கைது செய்து
இரண்டாவது இடத்தை அவருக்கு பெற்றுக் கொடுப்பார். 🤣

4 minutes ago, உடையார் said:

இப்ப இருக்கின்ற பைடன் உண்மையா, or டம்மியா😁

இரண்டு தரம்… விமான படிக்கட்டிலை, தலை குப்புற… தடுமாறி விழுந்து, உள்காயம் அதிகம் என்ற படியால்..
இப்ப இருப்பவர்… டம்மி என்று, ஊர்க்கிழவி சொல்லுது. 🤣 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு தரம்… விமான படிக்கட்டிலை தலை குப்புற தடுமாறி விழுந்து உள்காயம் அதிகம் என்ற படியால்..
இப்ப இருப்பவர்… டம்மி என்று, ஊர்க்கிழவி சொல்லுது. 🤣 😂

😂🤣 - இது அவர்களுக்கு சர்வசாதாரணம்😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

😂🤣 - இது அவர்களுக்கு சர்வசாதாரணம்😁

ஒமோம்… அமெரிக்கன் “கவ் போய்ஸ்” எல்லாத்தையும் வெட்டி ஆடுவார்கள். 😂 🤣

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

வரும் தேர்தலுக்காக இப்பவே அடுக்கெடுக்கினம்.....:grinning_squinting_face:

ட்ரம்பின் கட்சிக்குள்  ட்ரமுடன் டிசான்டஸ் என்பவர் போட்டியிடுகிறார். முன்பு டிசான்டசுக்கு கட்சிக்குள் செல்வாக்கு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இப்போ ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

கட்சிகாரன்….கைதுசெய்யப்பட நான் ரெடி…ஆனால் விலங்கு மாட்டி போஸ் கொடுக்கும்படி கைதுசெய்ய வேண்டும் என அடம்பிடிக்கிறாராம்🤣

இங்கு யாரை கைது பண்ணினாலும் பின்பக்கம் கைகளை மடக்கி விலங்கு போடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கு யாரை கைது பண்ணினாலும் பின்பக்கம் கைகளை மடக்கி விலங்கு போடுவார்கள்.

பத்திரிகை செய்திகள், முன்னாள் secret service அதிகாரிகள் (இப்போது டிவி பண்டிதர்கள்) இல்லை என்கிறார்கள்.

டிரம்ப் இப்போதும் secret service பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாலும், அவர் ஒரு violent criminal இல்லை, தப்பி ஓடவும் போவதில்லை என்பதால் விலங்கடிக்கும் தேவை இல்லை. இது சம்பந்தமாக பொலிஸ், secret services இடையே பேச்சு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கூடவே வழக்கை நடத்தும் நியூயார்க் டிஸ்திரிக் அட்டர்னியும் இது டிரம்புக்கு அரசியல் அனுதாபத்தை தரும் என்பதால் இப்படி செய்ய விரும்பவில்லையாம்.

ஆனால் டிர்ம்ப் தான் இப்படி கைதாவதையே விரும்புவதாக தன் சகாக்களிடம் கூறியுள்ளாராம்.

எல்லாம் பத்திரிகை செய்திதான். உண்மையோ இல்லையோ யாமறியோம்.

Will he be handcuffed?

Almost certainly not. The crime(s) for which he could be indicted are not considered violent offences, and the former president is hardly considered an escape risk. District Attorney Alvin Bragg has also reportedly been discussing the optics of handling Mr Trump’s arraignment, so don’t expect any attention-grabbing moves like slapping Mr Trump in cuffs. By contrast, The New York Times reports that Mr Trump hopes that Mr Bragg will indeed take this step, as he hopes to inspire a frenzy of photos in the media of a former US president being “perp-walked”.

https://www.independent.co.uk/news/world/americas/us-politics/trump-mugshot-jail-hush-money-b2306523.html?amp

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

என்னப்பா இன்னும் கைது செய்யேலையோ? சட்டுப்புட்டென்று காரியத்தை முடியுங்கோநிறைய வேலை கிடக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் கைது செய்யப் படுவதைப் பார்க்க எனக்கும் ஆசை தான்😎, ஆனால் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் இந்த விசாரணையில் இது நடக்காது என்றே நினைக்கிறேன். உள்ளூர் செய்திகள், தரவுகளைப் பார்த்த படி என் அவதானிப்பு:

1. இது 4 வருடம் தாண்டி விட்ட ஒரு பணப்பரிமாற்றக் கேஸ். இதில் கால எல்லை நிர்ணயிக்க முடியாதென்றாலும், வழக்குத் தொடுப்போர் இருக்கும் ஏனைய வழக்குகளோடு ஓப்பிடுகையில் இது முக்கியமா என்று தீர்மானிக்க வேண்டி வரும், யார் தீர்மானிப்பது?

2. தீர்மானிப்பவர்கள் கிராண்ட் ஜூரி எனப்படும் ஒரு 12 பேர் கொண்ட பொது மக்களிடமிருந்து தெரிவு செய்யப் பட்ட ஒரு குழுவினர். இவர்கள் சாதாரண மக்கள். இவர்கள் முன்னிலையில் தான் இவ்வளவு நாட்களும் ட்ரம்புக்கெதிரான சாட்சிகளை விசாரித்து வருகிறார்கள். சாட்சிகள் அடிப்படையிலும், Manhattan DA இன் அறிவுறுத்தல்களின் அடிப்படையிலும் இந்த 12 பேரும் ட்ரம்பை குற்றம் சாட்டுவதா (indict) என்று தீர்மானிக்க வேண்டும். இது ஒருமித்து (unanimous) 12 பேரும் எடுக்கும் தீர்ப்பாக இருக்க வேண்டுமென்கிறார்கள்.

3. கேசும் கூட பெரிய சிறைத்தண்டனை, பிணை அவசியமான ஒரு தண்டனையை வேண்டுமளவுக்கு இல்லை. ஸ்ரோர்மி டானியலுக்கு 130K டொலர்களை கள்ளக்காதலை மறைப்பதற்காகக் கொடுத்தார், ஆனால் ஏன் கொடுத்தார் என்பதைப் பற்றிய ஆவணங்களை மாற்றினார். எனவே இது falsification of records கேஸ். நியூயோர்க் மாநில சட்டப் படி இது ஒரு misdemeanor. ஆகக் குறைந்தளவு குற்றம். நிரூபித்தாலும் சிறை கிடைக்காது. இதை சீரியசான குற்றமாக்க இயலுமா?

4. அந்த ஆவணங்களை மாற்றியதன் நோக்கம் "இன்னொரு குற்றத்தை மறைப்பதற்காக" என்று நிரூபித்தால் இதை மாநிலச்சட்டப் படி  Felony ஆகக் காட்ட இயலும். ஆனால் எந்தப் பிழையை மறைத்தார் என்று வழக்குப் போட்டவர்களுக்கே தெளிவில்லை. ஸ்ரோர்மியோடு தொடர்பு வைத்திருந்தது குற்றமென்று அமெரிக்க ஜூரிகளை நம்ப வைக்க இயலாது. ஆனால், இன்னொரு வழி இருக்கிறது, என்ன வழி அது?

5. "தேர்தலில் மக்களை ஏமாற்ற இந்தப் பணம் கொடுக்கப் பட்டது, எனவே இது தேர்தல் நிதி (campaign finance) தொடர்பான குற்றம்" என்று வாதிட முயல்கிறார்கள். ஆனால், தேர்தல் நிதிக் குற்றங்கள் சமஷ்டி மட்டத்திலேயே விசாரிக்கப் பட முடியும், நியூயோர்க் மாநிலம் இதை விசாரிக்க இயலாது. மத்திய அரசின் DoJ தான் இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க முடியும்.

எனவே, எப்படிப் பார்த்தாலும் ஒரு சுவரில் முட்டுப் பட்டு நிற்கிற நிலை தான் அல்வின் ப்றாக்கிற்கு.  முன்னேறி எதிர்கால AG ஆக வரும் வாய்ப்புகள் மங்கிப் போகின்றன.

ட்ரம்ப், இதெல்லாம் புரிந்திருப்பதால் , கைது செய்யப் பட்டால் தனக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் எனப் புரிந்து காரணமாற்றுகிறார்.

நான் நினைக்கிறேன், இப்போது யாரோ உள்வட்டத்தினர் அல்வினைக் கட்டுப் படுத்தி "lose this battle to win the war" என்று ஆலோசனை கொடுத்திருக்கின்றனர்.

(அப்பாடா, சட்டம் எவ்வளவு பெரிய ஒரு இருட்டறை, எழுதவே கண்ணைக் கட்டுது!😂)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

என்னப்பா இன்னும் கைது செய்யேலையோ? சட்டுப்புட்டென்று காரியத்தை முடியுங்கோநிறைய வேலை கிடக்கு

விவேக்கின் ஒப்பாரி மியூசிக் பகிடியில்….வெட்டியான் கடனுக்கு சரக்கை போட்டு விட்டு வந்து தாத்தாவை “எடுக்க” சொன்ன மாதிரி போகுது கதை🤣

2 hours ago, Justin said:

ட்ரம்ப் கைது செய்யப் படுவதைப் பார்க்க எனக்கும் ஆசை தான்😎, ஆனால் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் இந்த விசாரணையில் இது நடக்காது என்றே நினைக்கிறேன். உள்ளூர் செய்திகள், தரவுகளைப் பார்த்த படி என் அவதானிப்பு:

1. இது 4 வருடம் தாண்டி விட்ட ஒரு பணப்பரிமாற்றக் கேஸ். இதில் கால எல்லை நிர்ணயிக்க முடியாதென்றாலும், வழக்குத் தொடுப்போர் இருக்கும் ஏனைய வழக்குகளோடு ஓப்பிடுகையில் இது முக்கியமா என்று தீர்மானிக்க வேண்டி வரும், யார் தீர்மானிப்பது?

2. தீர்மானிப்பவர்கள் கிராண்ட் ஜூரி எனப்படும் ஒரு 12 பேர் கொண்ட பொது மக்களிடமிருந்து தெரிவு செய்யப் பட்ட ஒரு குழுவினர். இவர்கள் சாதாரண மக்கள். இவர்கள் முன்னிலையில் தான் இவ்வளவு நாட்களும் ட்ரம்புக்கெதிரான சாட்சிகளை விசாரித்து வருகிறார்கள். சாட்சிகள் அடிப்படையிலும், Manhattan DA இன் அறிவுறுத்தல்களின் அடிப்படையிலும் இந்த 12 பேரும் ட்ரம்பை குற்றம் சாட்டுவதா (indict) என்று தீர்மானிக்க வேண்டும். இது ஒருமித்து (unanimous) 12 பேரும் எடுக்கும் தீர்ப்பாக இருக்க வேண்டுமென்கிறார்கள்.

3. கேசும் கூட பெரிய சிறைத்தண்டனை, பிணை அவசியமான ஒரு தண்டனையை வேண்டுமளவுக்கு இல்லை. ஸ்ரோர்மி டானியலுக்கு 130K டொலர்களை கள்ளக்காதலை மறைப்பதற்காகக் கொடுத்தார், ஆனால் ஏன் கொடுத்தார் என்பதைப் பற்றிய ஆவணங்களை மாற்றினார். எனவே இது falsification of records கேஸ். நியூயோர்க் மாநில சட்டப் படி இது ஒரு misdemeanor. ஆகக் குறைந்தளவு குற்றம். நிரூபித்தாலும் சிறை கிடைக்காது. இதை சீரியசான குற்றமாக்க இயலுமா?

4. அந்த ஆவணங்களை மாற்றியதன் நோக்கம் "இன்னொரு குற்றத்தை மறைப்பதற்காக" என்று நிரூபித்தால் இதை மாநிலச்சட்டப் படி  Felony ஆகக் காட்ட இயலும். ஆனால் எந்தப் பிழையை மறைத்தார் என்று வழக்குப் போட்டவர்களுக்கே தெளிவில்லை. ஸ்ரோர்மியோடு தொடர்பு வைத்திருந்தது குற்றமென்று அமெரிக்க ஜூரிகளை நம்ப வைக்க இயலாது. ஆனால், இன்னொரு வழி இருக்கிறது, என்ன வழி அது?

5. "தேர்தலில் மக்களை ஏமாற்ற இந்தப் பணம் கொடுக்கப் பட்டது, எனவே இது தேர்தல் நிதி (campaign finance) தொடர்பான குற்றம்" என்று வாதிட முயல்கிறார்கள். ஆனால், தேர்தல் நிதிக் குற்றங்கள் சமஷ்டி மட்டத்திலேயே விசாரிக்கப் பட முடியும், நியூயோர்க் மாநிலம் இதை விசாரிக்க இயலாது. மத்திய அரசின் DoJ தான் இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க முடியும்.

எனவே, எப்படிப் பார்த்தாலும் ஒரு சுவரில் முட்டுப் பட்டு நிற்கிற நிலை தான் அல்வின் ப்றாக்கிற்கு.  முன்னேறி எதிர்கால AG ஆக வரும் வாய்ப்புகள் மங்கிப் போகின்றன.

ட்ரம்ப், இதெல்லாம் புரிந்திருப்பதால் , கைது செய்யப் பட்டால் தனக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் எனப் புரிந்து காரணமாற்றுகிறார்.

நான் நினைக்கிறேன், இப்போது யாரோ உள்வட்டத்தினர் அல்வினைக் கட்டுப் படுத்தி "lose this battle to win the war" என்று ஆலோசனை கொடுத்திருக்கின்றனர்.

(அப்பாடா, சட்டம் எவ்வளவு பெரிய ஒரு இருட்டறை, எழுதவே கண்ணைக் கட்டுது!😂)

பெரிய இருட்டறை என்றால் என்ன?

வாசிப்பு, கிரகிப்பு, சிந்திப்பு, மேலும் தகவல் சேர்ப்பு,  சேர்த்தவையை ஒருமிப்பு, அதை பின்னர் விளங்குவிப்பு, 

என நீங்கள் ஆறு பட்டரி டோர்ச் அடித்ததால் எல்லாம் தெளிவாக தெரிகிறதே👏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கடன் இல்லை என்பது போல தான் இருக்கும் போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பிளை பிரச்சனைதான் எண்டால் பில்கிளின்ரனையும் எல்லோ உள்ளுக்கு போட்டிருக்கோணும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பொம்பிளை பிரச்சனைதான் எண்டால் பில்கிளின்ரனையும் எல்லோ உள்ளுக்கு போட்டிருக்கோணும்?

பொம்பிளை பிரச்சனைக்கு உள்ளுக்கு போடுவது என்றால் அமெரிக்காவில் அரைவாசி ஆம்பிளைகள் கம்பி எண்ணவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பொம்பிளை பிரச்சனைக்கு உள்ளுக்கு போடுவது என்றால் அமெரிக்காவில் அரைவாசி ஆம்பிளைகள் கம்பி எண்ணவேண்டும். 

அமெரிக்கா மட்டும் அல்ல. உலகில் உள்ள almost எல்லா ஆம்பிளைகளும் எணலடு சொல்லுங்கோ. 😂

Edited by island
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.