Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

பிரித்தானியர் ஆட்சியின் கீழ் இலங்கைத் தமிழர்களின் அரசியல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழர்களின் பொருளாதார நடவடிக்கைகள் அவர்களிடையே செல்வம் சேர்வதற்கு வழிவகுத்தது. 17 யாழ்ப்பாணக் குடா நாட்டில் புகையிலை, நெல் உற்பத்தி என்பனவே பிரதான தொழில்களாக இருந்தன. இக்காலப்பகுதியில் புகையிலை உற்பத்தி தொடர்ந்து அபிவிருத்தி அடைந்து வந்தது. இதற்குக் காரணம் யாழ்ப்பாணச் சுருட்டுக்கு இலங்கையின் மேற்கு தெற்குப் பகுதிகளில் மாத்திரமல்லாமல் இந்தியாவின் திருவாங்கூர், கொச்சின் பகுதிகளிலும் பெரும் கிராக்கி இருந்ததே. இந்து சாதனம் குறிப்பிட்டது போல் இலங்கைத் தீவின் செழிப்புக்குக் கோப்பி எப்படிக் காரணமோ அவ்வாறே யாழ்ப்பாணக் குடாநாட்டுச் செழிப்புக்குப் புகையிலை காரணமாயிற்று.18

பொருளாதார இலாபமற்ற நிலவுடமை காணப்பட்ட குடாநாட்டில் சனத்தொகை அடர்த்தியாகவுள்ள கிராமங்களின் தீவிரமான பிரச்சினைகளை பிரித்தானியர் ஏற்படுத்திய மாற்றங்கள் தீர்க்கவில்லை. ஆகவே, கல்வியினு}டாகக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தமிழர் பயன்படுத்திக்கொண்டனர்.19 கல்வி பெறுதல், விசேடமாக ஆங்கிலக் கல்வியும் உயர் கல்வியும் பெறுதல் குடாநாட்டின் பொருளாதார வளர்ச்சியின்மைக்கு மாற்றாகியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பொதுவாக அரசாங்க நடவடிக்கைகள் அதிகரித்தமையால் பல்வேறு அரசாங்க திணைக்களங்கள் எழுச்சியடைந்தன. (உ-ம் : பொலிஸ் திணைக்களம் (1865), அளவை, பொதுச் சேவை திணைக்களம் (1870), நீர்ப்பாசன சபை (1887), வன பரிபாலன திணைக்களம் (1889), நிலக்குடியமர்த்தல் திணைக்களம் (1890)20.

இத்திணைக்களங்கள் எல்லாவற்றுக்கும் எழுது வினைஞர் உத்தியோகத்தர்கள் தேவைப்பட்டனர். 1868இல் 1710 பதவிகளில் 794 பதவிகள் இலங்கையருக்கு வழங்கப்பட்டன. அத்தகைய எழுதுவினைஞர் பதவிகளில் இலங்கைத் தமிழர் தமது சிங்கள சக பாடிகளின் பதவிகளுக்குச் சமமாக இடம் பெற்றனர். 21

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் போதுதான் இலங்கைக்குப் பல அரசியல் சீர்திருத்தங்கள் வழங்கப்பட்டன. 1802இல் பிரித்தானிய முடியினால் தெரிவு செய்யப்பட்ட தேசாதிபதியினால் இலங்கை நிர்வகிக்கப்பட்டது. இம்முறை 1829இல் பிரித்தானியாவால் தெரிவு செய்யப்பட்ட கோல்புறு}க் கமெரன் ஆணைக்குழுவின் சிபார்சுகளின் படி சட்ட நிரூபண சபை, சட்ட நிர்வாகசபை என்பன உருவாக்கப்படும் வரை தொடர்ந்திருந்தது. மேற்சொன்ன சிபார்சுகளின் அடிப்படையில் 6 உத்தியோகத்தர்களைக் கொண்ட ஒரு சட்ட நிர்வாக சபையும், 15 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு சட்ட நிரூபண சபையும் உருவாக்கப்பட்டன. பின்வருவோர் சட்ட நிரூபண சபையின் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாக இருந்தனர் :

ஐரோப்பியர் - 03

சிங்களவர் - 01

தமிழர் - 01

பறங்கியர் - 01

பல்வேறு காரணங்களுக்காகவும் வசதிகளுக்காகவும் பிரித்தானிய தேசாதிபதிகள் சிங்கள தமிழ்ச் சமுதாயங்களில் தனியொரு முன்னணி நிலை வகிக்கும் குடும்பத்தில் இருந்து சட்ட நிரூபண சபையில் சேவையாற்ற பிரதிநிதிகளைத் தெரிவு செய்தனர்.22 அதனால், இக்காலப் பகுதியில் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் தனியொரு உயர்ந்தோர் குழுவான கொழும்புத் தமிழ்க் குடும்பத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் சகல இலங்கைத் தமிழர்கள் சார்பிலும் சட்ட நிரூபண சபையில் பேசினர். கோல்புறு}க் கமெரன் சீர்திருத்தங்களின் கீழ் அமைந்த முதலாவது சட்ட நிரூபண சபை அங்கத்தவராகப் பிரபல்யம் வாய்ந்த இராமநாதன் அருணாசலம் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தான் பிள்ளை குமாரசுவாமி முதலியார் (1783-1836) நியமிக்கப்பட்டார்.23 ஆர்வம் மிகுந்த பிரித்தானிய ஓத்துழைப்பாளராக இருந்த ஆறுமுகத்தான் பிள்ளை தங்கப்பதக்கமும் சங்கிலியும் தங்க முலாம் பூசிய பிரம்பும் பிரித்தானியரிடமிருந்து வெகுமதியாகப் பெற்றுக்கொண்டவராவார். குமாரசுவாமி முதலியார் இறந்ததின் பின்னர் அவரது இடத்துக்கு வெளியார் ஒருவரான கொழும்புத் தமிழ்ச் செட்டியான சைமன் காசிச் செட்டி (1845-1938) நியமிக்கப்பட்டார். இந்த ஆசனம் பின்னர் குமாரசுவாமி முதலியாரின் மகனான முத்துக்குமார சுவாமியை வந்தடைந்தது. இவர் பிரித்தானிய பிரதம மந்திரியாகவிருந்த டிசரேவியின் நண்பராவார். இவர் 1862ல் இவரது மாமனாராகிய கேட் முதலியார் எதிர்மான சிங்கத்தின் இடத்துக்கு நியமிக்கப்பட்டதோடு 1861வரை சேவையாற்றினார். முத்துக்குமாரசுவாமி சட்டநிரூபண சபையின் நடைமுறைகளில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்த முயற்சித்தார். ஆனால், அம் முயற்சிகள் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியினருடன் சம்பந்தப்பட்டவையாக இருக்கவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் பிரித்தானிய ஆட்சி பற்றிய தெளிவற்ற அவரது நிலைப்பாட்டிற்கு மத்தியிலும் குமாரசுவாமி அவர்கள் ஒரு தேசியவாதியாகவே மதிக்கப்பட்டார்.23

சட்டநிரூபண சபைக்கு குமாரசுவாமியினைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவர் அவரது மருமகனான பொன்னம்பலம் இராமநாதன் ஆவார். 1879இல் அவர் நியமிக்கப்பட்டபோது 28 வயதுடையவராகவே இருந்தார். சட்ட சபையில் இராமநாதன் ஆரம்பகாலத்தில் காலனித்துவ அரசாங்கத்தின் கண்டனக்காரராகவே செயற்பட்டார். இளைஞனாக இருந்தபோதும் 1886இல் சபையின் முதிர்ந்த உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவரானார்.

1910இல் அறிமுகம் செய்யப்பட்ட மக்கலம் சீர்திருத்தத்தின் கீழ் கல்விகற்ற இலங்கையர்களுக்காக ஓர் ஆசனம் வழங்கப்பட்டது. இதற்காக நடந்த தேர்தலில் மார்க்கஸ் பெர்னாண்டோவை இராமநாதன் தோற்கடித்து வெற்றி பெற்றார். இராமநாதனைத் தொடர்ந்து பதவியேற்றவர் அவரது தம்பியாரான சேர்.பொன்னம்பலம் அருணாசலம் ஆவார்.

ஆகவே, பிரித்தானியர் ஆட்சியின் கீழ் இலங்கைத் தமிழர்களின் அரசியலை ஆக்கிரமித்தோர் குறிப்பிட்ட சாதியினையும் குடும்பத்தினையும் சேர்ந்த கல்விகற்ற உயர்ந்தோர் குழு என்பது தெளிவாகின்றது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் எவ்வாறு செல்வாக்குப்பெற முடிந்தது என்பதை இக் கட்டத்தில் விளக்குதல் பொருத்தமானதாகும்.

இலங்கைத் தமிழர்களின் சாதிமுறை அடிப்படையில் தென்னிந்திய திராவிட முறையை ஒத்ததாக இருந்தாலும் இலங்கையில் பிராமணர்களை விட எண்ணிக்கையில் வேளாளர் அதிகமானவர்களாக இருந்தனர். போர்த்துக்கேயர் வருகைக்கு முன்பு முன்னணி விவசாயிகளாக இருந்த வேளாளர்களையே தமிழ் இராச்சியம் அடிப்படையாகக் கொண்டிருந்தது. வேளாளரின் அரசியல் பொருளாதார உயர்ச்சி நவீன காலம் வரையும் தொடர்ந்து வந்தது. தமிழ்ச் சமூக முறையில் வேளாளர் கிராமங்களை ஆக்கிரமித்ததோடு அதன் விவகாரங்களை முகாமைத்துவம் செய்தும் வந்தனர். இது போர்த்துக்கேயர், டச்சுக்காரர், பிரித்தானியர் காலம் வரை மட்டுமல்லாது அதன் பின்னரும் தொடர்ந்தது.

வட இலங்கைத் தமிழரின் சொத்துக்கான உரிமையினை ஆட்சி செய்யும் தேச வழமைச் சட்டம் இன்றும் நடைமுறையிலுள்ளது. இது பரம்பரையாகக் கிடைத்த சொத்து, திருமணம் மூலம் கிடைத்த சொத்து ஆகிய இரண்டையும் ஆட்சி செய்கின்றது. தேச வழமை மூன்று விதமான சொத்துக்களை அங்கீகரிக்கின்றது அவையாவன: சீதனம்: திருமணத்தின்போது ஒரு பெண் பெறும் சொத்து; முதுசொத்து: ஆண் தனது பெற்றோரிடமிருந்து பெறும் சொத்து; தேடிய தேட்டம் : திருமணம் செய்த பின் இருவரும் பெறும் சொத்து. 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழர்களிடையே வழக்கத்திலிருந்த மரபுகள் வழக்கங்களின் தொகுப்பே தேசவழமையாகும்.24 இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். இது டச்சு அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தேச வழமை ஒரு குடும்பத்தில் பரம்பரையாக அல்லது ஒரு குடும்பத்தினு}டாக அல்லது மற்றைய எந்த வழிகளிலும் வரும் சொத்தினைப் பாதுகாப்பது பற்றியதாகும்.

இலங்கைத் தமிழர்கள் குறிப்பாக வேளாளர் சாதி யாழ்ப்பாணக் குடாநாட்டில் தேச வழமையை நடைமுறைப்படுத்துவதுபோல் மட்டக்களப்பு மக்கள் தமது முக்குவர் சட்டத்தை தமது சிவில் உரிமைகளை அல்லது குடியுரிமைகளைப் பாதுகாக்க நடைமுறைப்டுத்துகின்றனர்.25

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டது போல் சமூகத்தில் மக்கள் நடத்தைக்கான முழுமையான விதிகளாக இச்சட்டங்களை விளங்கிக்கொள்வதனால் இவை ஆக்கிரமிப்புச் செலுத்தும் குழுவின் விருப்பத்தை வெளிப்டுத்துவதோடு சமூகத் தொடர்புகளையும் பொது ஒழுங்குகளையும் ஆக்கிரமிக்கும் குழுவிற்கு வாய்ப்பளிக்கத் தக்க வகையில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகும்.26 யாழ்ப்பாணத்தின் தேசவழமைச் சட்டங்களும் வழக்காறுகளும், மட்டக்களப்பின் முக்குவர் சட்டங்களும் வழக்காறுகளும் யாழ்ப்பாண வேளாளர்களையும் மட்டக்களப்பு முக்குவர்களையும் பாதுகாக்க எழுந்தவையாகும். நவீன சமூக மாற்றங்களுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தினதும் மட்டக்களப்பினதும் சமூகக்கட்டமைவுகள் அடிப்படையில் இரு ஆக்கிரமிப்புச் செலுத்தும் சாதிகள் மீது தங்கியுள்ளன. ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து நவீனகாலம் வரைக்கும் இந்த வழக்காற்றுச் சட்டங்களின் தாக்கம் காரணமாக இவ்விரு ஆக்கிரமிப்பு மிக்க சாதிகளும் பலம் வாய்ந்த குழுக்களாக, நிலவுடமையாளர்களாக, பின்னர் தமிழ்ச் சமூகத்தின் உயர்ந்தோர் குழாம் வர்க்கமாக சமூகத்தினைக் கட்டுப்படுத்தின.27

மேற்சொன்ன விளக்கம் எவ்வாறு இலங்கைத் தமிழர்களுள் குறிப்பாக வடக்கே யாழ்ப்பாணத் தமிழர்களுள் சில குறிப்பிட்ட குடும்பங்கள் தமிழரின் ஆட்சியை ஆக்கிரமிக்க உதவின என்பதை காட்டுகின்றது. உயர்சாதி, சொத்துடைமை, கல்வி என்ற மூன்றினையும் பெற்ற குடும்பங்கள் அரசியலிலும் ஆக்கிரமிப்புச் செலுத்த முடிந்தன.

இவ்வாறான உயர்ந்தோர் குழாம் ஆக்கிரமிப்புச் செலுத்தும் அரசியல் பிரித்தானியர் ஆட்சியின் முடிவு வரைக்கும் தொடர்ந்ததா? சுதந்திரத்தின் பின்னர் மாறியதா? என்பதே எமக்கு முன்னுள்ள கேள்வியாகும்.

இத்தகைய தமிழ் உயர்ந்தோர் குழாமின் அரசியலில் முதலில் மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசைச் சேர்ந்தவர்களே. இது பூரண சுயாட்சி அல்லது சுயாட்சி என்பதை இலக்காகக் கொண்டது. மேலும், இது 1931ஆம் ஆண்டின் டொனமூர் சீர்திருத்தங்களின் கீழ் (இது ஒரு அரைகுறை பொறுப்பாட்சியை வழங்கியது) உருவாக்கப்பட்ட அரசாங்க சபைக்கான தேர்தல்களை வடக்கில் பகிஷ்கரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

இதில் அது வெற்றியும் கண்டது. டொனமூர் யாப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.28 1920களின் மத்தியிலிருந்து 1930களின் மத்தி வரை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தமிழ் இலக்கிய புனருத்தாரணத்தையும் ஆரம்பித்து வைத்தது. ஆகவே, இலங்கைத் தமிழரின் அரசியலை உயர்ந்தோர் குழாம் அரசியல் என்பதிலிருந்து முதலில் விலகச்செய்தது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என்பது தெரிகின்றது.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் அரசாங்க சபைக்கான தேர்தல் பகிஷ்கரிப்புக்கு முன்பு இலங்கைத் தமிழர் அரசியலில் நடந்த பாதகமான நடத்தை 1905இல் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சங்கமும் - இலங்கைச் சீர்திருத்த கழகமும் ஒன்றிணைந்து 1919இல் உருவாகிய இலங்கைத் தேசிய காங்கிரசிற்கு வழங்கிய ஆதரவாகும். வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே இலங்கைத் தமிழர்கள் ஒரு சமுதாயமாகச் சீர்திருத்த இயக்கத்திலும் காங்கிரசிலும் சேருமாறு தூண்டப்பட்டனர். ஆனால் 1918 டிசம்பரில் சேர். ஜேம்ஸ் பீரிசும், நு.து. சமரவிக்கிரமவும் யாழ்ப்பாணச் சங்கத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அருணாசலம் உட்படத் தமிழ்த் தலைவர்கள் காங்கிரசில் இருந்து விலகி, தமிழர் சீர்திருத்தக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினர். ஆகவே, 1921 செப்டெம்பர் மாதத்திலிருந்து இலங்கைத் தமிழர்களின் அரசியல் ஒரு புதிய கட்டத்தை அடைந்தது. அதாவது தமிழ்த் தலைவர்கள் தமக்கெனத் தனியான அரசியல் அமைப்புகளை உருவாக்கியமையாகும். இருந்தும் உயர்ந்தோர் குழாம் ஆக்கிரமிப்பு என்பது மேலும் தொடர்ந்தது. இப்போக்கின் சிறந்த உதாரணம் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆரம்பித்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆகும்.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் பகிஷ்கரிப்புத் தோல்வி கண்டதன் பின்பு சில வருடங்களுக்குத் தமிழ் அரசியலிலும் தலைமைத்துவத்திலும் ஓர் இடைவெளி ஏற்பட்டது. ஆனால், பல்வேறு செல்வாக்கு மிக்க தனிப்பட்டவர்களும் சங்கங்களும் யாழ்ப்பாணத்தின் அரசியல் சிந்தனைகளை மாற்ற முற்பட்டனர். தமிழ் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் வருகையானது செயல்முறைப்படுத்தக் கூடியதாய் மாற்றியது. டொனமூர் அரசாங்கசபையில் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம் அங்கத்தவராகியமை இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையானது.

1936க்கும் 1937க்கும் இடையில் பொன்னம்பலம் சம பிரதிநிதித்துவத்துக்கான சட்டத்தினை உருவாக்கினார்.

அரசாங்க சபையில் பொன்னம்பலம் ஆற்றிய உரையில் தான் ஏன் சமபிரதிநிதித்துவத்தைக் கோருகிறார் என்பதை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். 1940களில் இவர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான பழமை பேண் தமிழ் அரசியல் ஒழுங்கமைப்புகளின் ஆதரவினைப் பெற்றுக்கொண்டார். (உ- ம் : யாழ்ப்பாண சங்கம், அகில இலங்கை தமிழர் மகாநாடு.) இருந்தும் 1939இல் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் (வகுப்பு வாதமா? தேசிய வாதமா? என்ற தலையங்கத்தில்) பொன்னம்பலத்தைக் காரசாரமாக கண்டித்திருந்தது. இப்பிரசுரம் ஐம்பதுக்கு ஐம்பது என்ற சுதந்திரம் சிறுபான்மையினரை பாதுகாக்காது என வாதிட்டது.29 அத்தோடு மட்டக்களப்பின் இலங்கைத் தமிழர் பிரதிநிதியான ஈ.ஆர். தம்பிமுத்து அவர்களும் அதனை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் மலேடுஸ்பீம்கருக்கான நியமன அங்கத்தவரான ஈ.பீ. ஜாஜகற்றன் பிரதிநிதியான இந்திய தமிழ் அங்கத்தவர் கோ. நடேச ஐயர் என்போர் ஐம்பதுக்கு ஐம்பதை ஆதரித்தனர். ஒரு புதிய யாப்பினைச் சிபார்சு செய்யவென 1944இல் இலங்கைக்கு வருகை தந்த சோல்பரி ஆணைக் குழுவினர் முன்பு திரு.ஜி.ஜி. பொன்னம்பலம் தனது கோரிக்கை சார்பாக திறமையாக வாதாடிய போதும் ஆணைக்குழு சம பிரதிநிதித்துவ கோரிக்கையை ஏற்காததால் ஜீ.ஜீ. பொன்னம்பலமும் அவரை ஆதரித்த இலங்கைத் தமிழர்களும் விரக்தி அடைந்தனர்.

http://www.noolaham.net/library/books/01/42/42.htm

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.