Jump to content

கோவை குணா : `கலக்கப்போவது யாரு' ஷோவின் முதல் டைட்டில் வின்னரான குணா மரணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவை குணா

விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்று கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திருக்கிறார்.

பல குரல் பேசி பலரையும் வியக்க வைத்தவர். மிமிக்ரி உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர். அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவருடன் கலக்கப்போவது யாரு மேடையில் பழகி நண்பனாக பயணித்த வெங்கடேஷை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினேன்.

"கோவை குணாவுக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்துச்சு. கடந்த மூன்று வருஷமா டயாலிசிஸ் பண்ணிட்டு இருந்தார். நண்பர்கள் எல்லாரும் எங்களால முடிஞ்ச சின்ன, சின்ன உதவிகளை அவருக்கு பண்ணிட்டு இருந்தோம். கிட்டத்தட்ட 5,6 வருஷம் முன்னாடியே அவர் இறந்திடுவார்னு எல்லாரும் நினைச்சோம். அந்த அளவுக்கு மோசமா அவருடைய உடல்நிலை இதுக்கு முன்னாடி இருந்துச்சு.

 

ஆனாலும், இத்தனை நாட்களாக அவரை ஆக்டிவ் ஆக வச்சிருந்தது அவருடைய நகைச்சுவை உணர்வு தான்! கோவிட் முன்னாடி வரைக்கும் ரொம்ப பரபரப்பா நிகழ்ச்சிகள் பண்ணிட்டு தான் இருந்தார். கடந்த 7,8 மாசமாகத்தான் எந்த நிகழ்ச்சிகளும் பண்ணல. அவருடைய ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டார். அவருடைய இழப்பு எங்க எல்லாருக்குமே மிகப்பெரிய இழப்பாகத்தான் கருதுறேன்!" என்றார்.

ஆழ்ந்த இரங்கல்கள்!

கோவை குணா : `கலக்கப்போவது யாரு' ஷோவின் முதல் டைட்டில் வின்னரான குணா மரணம்!|kalakkapovathu yaru show first title winner kovai guna passed away (vikatan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் .......!

நல்ல நகைச்சுவையாளர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் ........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்சியில் தனி முத்திரை பதித்தவர். 
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கோவை குணாவை பற்றி தவறாக பேசுவது வருத்தமளிக்கிறது" - மதுரை முத்து

கோவை குணா மரணம்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், பன்முக தன்மையில் சிறந்து விளங்கும் நடிகர்களுக்கு அவர் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று மேடை கலைஞரும், சின்னத்திரை நகைச்சுவை கலைஞருமான மதுரை முத்து பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கோவை கணபதி வினாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவை குணா (54). இவர் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி கோவை மக்களிடையே பிரபலமனவர்.

தனியார் தொலைக்காட்சிகளில் வெளியான 'கலக்கப்போவது யாரு', 'அசத்தப்போவது யார்' போன்ற நிகழ்ச்சிகள் மூலம் கோவை குணா சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமாக தொடங்கினார். நகைச்சுவை நடிகர் மதுரை முத்து - கோவை குணா ஆகியோர் இணைந்து செய்யும் காமெடிகள் அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களிடையே தனித்த வரவேற்பை பெற்றிருந்தது.

ரஜினிகாந்த், கவுண்டமணி, ஜனகராஜ், எம்.ஆர். ராதா போன்ற நடிகர்களின் குரலை மிமிக்ரி செய்வது மட்டுமல்லாது அவர்களின் உடல் மேனரிசத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பொற்றவர். கலக்கப்போவது யாரு சீசன் 1 வெற்றியாளரான கோவை குணா சின்னத்திரை நிகழ்ச்சி மட்டுமல்லாது பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் என்ற சங்கத்தில் இணைந்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார்.

 
கோவை குணா மரணம்

பட மூலாதாரம்,FACEBOOK/MADURAIMUTHU

 
படக்குறிப்பு,

மதுரை முத்து

இவரது மனைவி பெயர் ஜூலி. இரண்டு மகள்களுக்கு திருமணமான நிலையில் கோவை குணா தனது மனைவியுடன் கோவையில் வசித்து வந்தார். ஜனவரி மாதம் வரை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து வந்துள்ளார்.

சர்க்கரை நோய் பாதிப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு, டயலாசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக் கிழமை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மார்ச் 20ஆம் தேதி கோவை குணா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கோவை குணாவின் இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், நகைச்சுவை நடிகர்கள், பல குரல் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை குணா குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நகைச்சுவை நடிகர் மதுரை முத்து,

பன்முக கலைஞர் என்றால் அது கோவை குணா மட்டும்தான் என்று தெரிவித்தார்.

அவருடன் இணைந்து பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் மதுரை முத்து.

‘பொதுவாக பலரும் உடன் இருக்கும் கலைஞர்களை போட்டியாளராக நினைப்பார்கள். ஆனால், அனைவரையும் நண்பராக பாவித்தவர் கோவை குணா. ஒரு நபரிடம் இவ்வளவு திறமை இருக்குமா என்று அவரை நினைத்து பலமுறை பிரமித்துள்ளேன். பல குரல், நடிப்பு என எது கொடுத்தாலும் கச்சிதமாக செய்வதோடு, அதைவிட யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என எண்ண வைத்துவிடுவார். அவரது திறமையை பார்த்து இவரை விட நம்மால் என்ன சிறப்பாக செய்ய முடியும் என பயந்ததும் உண்டு. ஆனாலும், நான் சிறப்பாக செய்ய அவர் உற்சாகப்படுத்தி ஊக்கம் அளிப்பார் . தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன்பே அவர் பிரபலமாக இருந்தார். கோவை மாவட்டத்தில் கோவை குணாவிற்கு என்று ரசிகர்கள் இருந்தனர்’ என்று குறிப்பிட்டார்.

'சினிமா பயன்படுத்திக்கொள்ளவில்லை'

தொடர்ந்து பேசிய அவர், ‘கோவை குணாவை ஈடு செய்வதற்கென்று வேறு கலைஞர்கள் யாரும் இல்லை. நானும் எத்தனையோ நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளேன். ஆனால், கோவை குணாவை போன்று அனைத்து நடிகர்களின் மேனரிசத்தையும் வெளிப்படுத்தக் கூடிய ஒருவரை பார்த்ததில்லை. சிறந்த கலைஞர் என்பதை தாண்டி சிறந்த மனிதநேயம் உடைய நபர் அவர். அவர் நிகழ்ச்சியில் தொடர்ந்து பிற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தார்" என்று தெரிவித்தார்.

தமிழ் சினிமாவும் கோவை குணாவை பயன்படுத்திக்கொள்ளவில்லை, அவரும் சினிமாவை சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை என்றும் மதுரை முத்து தெரிவித்தார். ‘கோவை குணா தற்போது உயரத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் சினிமாவில் பெரிதாக அவர் ஈடுபாடு காட்டவில்லை. சென்னைக்கு அடிக்கடி வரவேண்டும் என்ற அலைச்சலை அவர் தவிர்த்தார். பெரிய பெரிய இயக்குநர்கள், நடிகர்களெல்லாம் கோவை குணாவின் ரசிகர்களாக இருந்தனர். அவர் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மிக சிறந்த நடிகராக வெளியே தெரிந்திருப்பார்." என்றார்.

கோவை குணா மரணம்
 
படக்குறிப்பு,

கோவை குணா

கோவை குணா பெயரில் விருது

மேலும், "தற்போது ஒருசிலர் அவர் கெட்டப் பழக்கத்தால் இப்படி ஆகிவிட்டார் என்று கூறுகின்றனர். அது மிகவும் தவறானது. அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள இன்றைய தலைமுறை கலைஞர்களுக்கு நிறைய உள்ளது. அப்படியிருக்கும்போது, அவரை சிறுமைப்படுத்துவது போல் பேசுவது வருத்தமளிக்கிறது’ என்றும் தெரிவித்தார் கோவை குணா.

பன்முக தன்மையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும் என்று தெரிவித்த மதுரை முத்து, ‘கோவை குணா பெயரில் விருது வழங்கினால் விருதுக்கும் பெருமை அதை பெறுபவர்களுக்கும் பெருமை. அவருக்கு விரைவில் கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில், வளர்ந்து வரும் கலைஞருக்கு கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்." என்று மதுரை முத்து தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c25v94vp47po

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீரியல் நாடக அஜாரங்களுக்கு முன்னர் இவரைப்போன்றவர்களின் நிகழ்ச்சிகள் கொடிகட்டிப்பறந்தன. அதில் இவரது டிமிக்கிரி தனித்துவமானது.

அஞ்சலிகள். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.