Jump to content

மலருக்கு தென்றல் பகையானால்.........!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர், இன்று தான் இந்தப் பக்கம் வந்தேன்..!

கதை நல்ல படியாக நகர்கின்றது..! கதா நாயகன் ஒரு பச்சை சுய நலம் பிடித்தவன் போல உள்ளது..!

எனது கவலையெல்லாம் நிர்மலா தாலியை மட்டும் வைத்துவிட்டுத் தாலிக்கொடியையும் கொண்டு போயிருக்கலாம் என்பது தான்..!

தொடருங்கள்…!

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

மலர்............(5).

                                          

                                                வவுனியாவில் நிர்மலா நடந்து செல்லும் அந்த வீதியில் அநேகமானோர் பலதரப்பட்ட வாகனங்கள், வண்டிகளில் சென்று கொண்டிருக்கிறார்கள்.அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் நடந்தும் போய் வந்து கொண்டிருக்கின்றனர். பாடசாலைப் பிள்ளைகளும் முதுகில் புத்தகப் பையை சுமந்தபடி நடக்கிறார்கள். அப்போது தனியாக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த இரு பொம்பிளைப் பிள்ளைகளை நிர்மலா வழிமறித்து, பிள்ளைகள் இங்கு பக்கத்தில் ஏதாவது வீடுகள் வாடகைக்கு இருக்கிறதா என்று வினவுகிறாள். அவர்களும் அப்படி எதுவும் தமக்குத் தெரியவில்லை என்று உதட்டைப் பிதுக்க அவளும் பரவாயில்லை என்று சொல்லி விட்டு அவர்களைக் கடந்து போகிறாள். அப்போது அங்கு சைக்கிளில் வந்த ஒரு பையனை மறித்த அந்தப் பிள்ளைகளுள் ஒருத்தி அவனிடம் ஏன்டா ரமேஷ் இங்கு பக்கத்தில் எங்காவது வீடு வாடகைக்கு இருக்குதா என்று கேட்க அவனும் கொஞ்சம் யோசித்து அந்த பைக் கடைக்காரர் வீட்டு கேட்டில "டூ லெட்" பலகையைப் பார்த்தனான் தேவையென்றால் கேட்டுப் பார்க்கலாம் என்று சொல்கிறான். உடனே மற்றப்பெண் சற்று தூரத்தில் செல்லும் நிர்மலாவை சத்தமாய் அழைத்து அக்கா சற்று நில்லுங்கள் என்று சொல்ல அதைக் கேட்டுத்  திரும்பிய நிர்மலாவும் அவர்களுக்கு அருகில் வருகிறாள். அந்தப் பெண்ணும் அக்கா இவன் இங்கு அருகில் ஒரு வீட்டில் "டூ லெட்" பலகையைப் பார்த்ததாக சொல்கிறான்.விரும்பினால் சென்று பாருங்கள் என்று சொல்கிறாள். அந்தப் பையனும் அக்கா அது பக்கத்தில்தான் இருக்கு நானும் போற வழிதான் வாங்கோ காட்டிட்டுப் போறேன் என்று சொல்லி சயிக்கிளை விட்டிறங்கி உருட்டிக் கொண்டு நடந்து வருகிறான். அந்த வீதியில் சிறிது தூரம் சென்று ஒரு ஒழுங்கையில் இறங்கி இரு வளவு தாண்டி நடந்து வர ஒரு பெரிய கேட்டில் "டூ லெட்" பலகை தொங்குகிறது. பையனும் இடத்தைக் காட்டி விட்டு சயிக்கிளில் ஏறி சிட்டாய் பறக்கிறான்.

                                                                               அந்த வீடு வெளிக்கேட்டில் இருந்து சிறிது தூரம் உள்வாங்கி இருக்கிறது. கொஞ்சம் பழைய காலத்து வீடானபோதும் அதை மிகவும் அழகாக நவீனமயப் படுத்தி இருந்தார்கள். ஆங்காங்கே செம்பருத்தி, ரோஜா மற்றும் சில பூ மரங்கள் செடி கொடிகளும் சரியான நீரின்றி காய்ந்துபோய் இருக்கின்றன. வீட்டின் முன்னால் முற்றத்தில் ஒரு மல்லிகை பந்தல் ஆர்ச் வடிவுக் கம்பிப் பந்தலில் படர்ந்திருக்கிறது. அங்கிருக்கும் தென்னை மரங்களின் ஓலைகள் எல்லாம் மாலையில் கிளிகள் கூட்டமாக வந்து தங்குவதால் நார் நாராக கிழிந்து தொங்குகின்றன.எல்லாவற்றையும் ஒரு கண்ணோட்டத்தில் நிர்மலா கவனித்து விடுகிறாள். அங்கு மல்லிகை பந்தலின் நிழலில் ஒரு ஐயா சரத்தோடும் வெற்றுடம்பில் ஒரு சிவப்புத் துவாயும் தோளில் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அவர் மடியில் ஒரு சின்னப்பிள்ளை விரல் சூப்பியபடி உறங்கிக் கொண்டிருக்கு. கையில் இருந்த பனை ஓலை விசிறியால் அவர் குழந்தைக்கும் விசிறி அப்பப்ப தனக்கும் விசிறிக் கொள்கிறார். நிர்மலாவும் படலையைத் திறந்து கொஞ்சம் உள்ளே வந்து ஐயா நாய் நிக்குதோ என்று கேட்டபடி சுற்று முற்றும் பார்க்கிறாள். அப்போது வீட்டுக்குள் இருந்து ஒரு ஆச்சி வருகிறா. அவவின் சீலைத் தலைப்பப் பிடித்துக் கொண்டு அரைக் காற்சட்டையுடன் ஒரு சிறுவன் மூக்கு ஒழுக  வருகிறான்.

                                       இஞ்சையப்பா யாரோ படலையடியில் நிக்கினம் ஒருக்கால் என்னெண்டு விசாரியுங்கோ என்று சொல்ல அப்புவும் அங்க பார்த்து பிள்ளை இங்க வாங்கோ உங்களுக்கு என்ன வேணுமென்று கேட்கிறார்.

--- நாய் நிக்குதோ ஐயா.

--- ஒரு நாய் நிக்குதுதான் அது ஒன்றும் செய்யாது நீங்கள் பயப்பிடாமல் வாங்கோ என்று ஆச்சி சொல்லுறா. அவர்களுக்கு அருகே வந்த நிர்மலாவும் ஆச்சி இங்கு வீடு வாடகைக்கு என்று பலைகையில எழுதி இருக்கு அதுதான் விசாரிக்க வந்தனான்.

--- யாருக்கு பிள்ளை வீடு. பெரிய குடும்பமோ என்று ஐயா கேட்கிறார்.

--- இல்லை ஐயா, எனக்குத்தான். அவரின் மடியில் இருக்கும் பிள்ளையைப் பார்த்து பிள்ளைக்கு என்ன பெயர் என்று கேட்கிறாள்.

--- இவளுக்கோ ....ஓ இவள் பெயர் சிவாங்கி. எப்பவும் சிணுங்கிக் கொண்டிருப்பாள். அப்படியா நல்ல பெயர். அவர் தொடர்ந்து பேரன் பெயர் முகிலன் என்கிறார். ம்....இதுவும் நல்ல பெயர். என்று சொல்கிறாள்.

ஆச்சி பேரனின் மூக்கை வழித்து எறிந்து விட்டு தனது முந்தானையால் அவன் மூக்கை அழுத்தித் துடைத்து விடுகிறா.

                                      இவர்கள் இப்படி கதைத்துக் கொண்டிருக்க முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார் சைக்கிளில் உள்ளே வந்து நிறுத்தி விட்டு இறங்கி வருகிறார். ஆச்சி அவளிடம் இவர்தான் எங்கட மகன் கதிரவன். வவுனியா டவுனில் மோட்டார் சைக்கிள் கடை வைத்திருக்கிறார். நீங்கள் இவரோடு கதையுங்கோ என்று சொல்லிவிட்டு தம்பி கதிரவன் இவ வீடு வாடகைக்கு கேட்டு வந்திருக்கிறா, என்னண்டு நீ விசாரி என்று சொல்கிறாள்.

                                             நிர்மலா அவரைப் பார்த்து வணக்கம் சொல்ல, அவனும் வணக்கம் சொல்லிவிட்டு விசாரிக்கிறான். நீங்கள் எங்கிருந்து வாறீங்கள். குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கினம்.

--- நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறேன்.தனியாக எனக்கு மட்டும்தான். ஒரு சிறு அறை இருந்தால் கூடப் போதும்.

--- இங்கு எங்கே வேலை செய்கிறீங்கள்.

--- நான் இனித்தான் வேலை தேட வேண்டும்.

--- அப்போ உங்களின் வருமானம் என்று கேட்கிறான்.

---எனக்கு நல்ல வேலையொன்று கிடைக்கும்வரை பிள்ளைகளுக்கு ட்யூசன் குடுக்கலாம் என்றிருக்கிறேன்.மேலும் ஒன்லைன் மூலமாகவும் A /L  வரை என்னால் படிப்பு சொல்லிக் குடுக்க முடியும் என்கிறாள்.

--- ஆச்சி குறுக்கிட்டு என்னபிள்ளை சொல்லுறாய், டியூசன் குடுத்து அதில என்ன வருமானம் வர போகுது. அதில வீட்டு வாடகை எங்க, உன்ர சாப்பாட்டு செலவுகள் எங்க என்று சொல்கிறாள். தாயை இடைமறித்த கதிரவன் தாயிடம் அம்மா நீ இந்தக் காலத்தில் இருக்கிறாய் இப்பவெல்லாம் டியூஷனில் நிறைய சம்பாதிக்கலாம் தெரியுமா, வீட்டுக்குள் இருந்து கொண்டே நாடுமுழுக்க பாடம் சொல்லிக் குடுக்கலாம் தெரியுமே, பின் நிர்மலாவின் பக்கம் திரும்பி அம்மா அப்படித்தான் நீங்கள் தப்பா நினைக்க வேண்டாம் சரி நீங்கள் சொல்லுங்கோ.

--- இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு அறை போதும்.சிறிதாய் இருந்தாலும் பரவாயில்லை.வாடகை எவ்வளவு என்று சொன்னால் நல்லது.

--- நாங்கள் ஒரு குடும்பத்துக்கு, மேல் வீட்டை முழுதாய் குடுக்கிறதாய்த்தான் இருக்கிறம். அங்கு குசினி, டாய்லெட் எல்லாம் சேர்ந்தே இருக்கிறது. நீங்கள் தனியாக இருப்பதால், உங்களுக்கு விருப்பம் என்றால் வீட்டின் பின்பக்கம் ஒரு அறை இருக்கு அதைத் தருகிறேன். பின் விறாந்தையில் வைத்து நீங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுக்கலாம். பக்கத்தில கிணத்தடியோடு குளியலறை மற்றும் டாய்லெட் எல்லாம் சேர்ந்தே இருக்கு அதை நீங்கள் பாவிக்கலாம். நீங்கள் சமைக்க ஒரு பத்தி இறக்கித் தாறன். ஒரு எண்ணாயிரம் ரூபாய் தந்தால் போதும். இரண்டு மாத வாடகை முன்பணமாகத் தரவேண்டும்.

--- அவள் கொஞ்சம் யோசிக்கிறாள்...... என்ன யோசிக்கிறீங்கள் எதுவென்றாலும் சொல்லுங்கோ.

--- இல்ல, உடனடியாக அவ்வளவு பணம் தர எனக்கு கொஞ்சம் சிரமம். அதுதான் யோசிக்கிறேன். அப்போது ஆச்சி மகனைத் தனியாக அழைத்துப் போய் ....எட தம்பி அந்தப் பிள்ளையைப் பார்த்தால் நல்ல பிள்ளை போலத் தெரியுது. எங்களுக்கும் உதவியாய் இருக்கும். அத்துடன் உன்ர பிள்ளையளுக்கும் பிராக்காய் இருக்கும். இந்தப் பெரிய வீட்டில நானும் கொப்பரும் ஆளை யாள் பார்த்து முழுசிக் கொண்டு இருக்கிறம். நீ வாடைக்காசை கொஞ்சம் குறைத்து விடு. இப்ப பத்தி ஒன்றும் போடவேண்டாம், அவவும் எங்கட குசினியையே பாவிக்கட்டும் என்று சொல்ல அவனுக்கும் அது சரியென்று படுகிறது.

                                          பின் அவன் அவளிடம் வந்து நிர்மலா நீங்கள் ஒரு நல்ல வேலை எடுக்கும்வரை ஐயாயிரம் ரூபாய் தந்தால் போதும். முன்பணமும் இப்ப அவசரமில்லை என்று சொல்கிறான்.

--- சரிங்க....இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டன்.

--- எப்ப இங்கு குடி வாறீங்கள்.

--- உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் இன்றைக்கே வந்து விடுகிறேன்.காலையில் இங்கு வரும்போது முருகனைக் கும்பிட்டுவிட்டு வந்தேன் அவர் கை விடேல்லை என்று சொல்கிறாள்.

--- உங்கட உடைமைகள் எங்கே இருக்கு.

--- என்ன பெரிய உடைமைகள் ஒரு சூட்கேஸ் அது டவுனில் ஒரு விடுதியில் இருக்கு....!

--- சரி நீங்கள் போய் அதை எடுத்துக் கொண்டு வாங்கோ அதற்குள் நான் அறையை தயார்படுத்தி வைக்கிறேன்.

                         நிர்மலாவும் வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து விடுதிக்கு சென்று தனது பெட்டியை எடுத்துக் கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு வாழைப்பழமும் பாணும் வாங்கிக் கொண்டு வருகிறாள்.....!

மலரும்.......!   🌷

  • Like 6
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலாவுக்கு உடனே வீடு கிடைத்து மகிழ்ச்சி . தொடருங்கள். அங்கு  மாப்பிளை வீட்டில் என்ன பாடோ ?  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை சுவி அண்ணை. எனக்கு ஒரு விடயம் பிடிபட்டிருக்கு, அவசரக்குடுக்கையா மூக்கை நுழையாது பொறுமையா இருப்பம், நான் நினைச்சது சரியோ என்று கதை முடிவில் சொல்றன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

மலரும்

மலரட்டும் மலரட்டும்.

அதுக்கிடையில நிர்மலாவின் கணவனுக்கு இரண்டு போட்டுட்டு வாறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர்.......(6).

                               

                                                                   சங்கருக்கும் இராசம்மாவுக்கும் மனசுக்குள் ஒரே குற்றவுணர்வாய் இருக்கிறது. நிர்மலாவின் பெற்றோரும் அவளைத் தேடி அங்கு வந்திருந்தார்கள்.இருபகுதியினரும் சண்டை பிடித்து வாக்குவாதப் பட்டு பின் தனித்தனியே சென்று போலீசில் நிர்மலாவை காணவில்லை என்று புகார் குடுத்து விட்டு வந்திருந்தார்கள். இவ்வளவுக்கும் சங்கரின் புது மனைவியான ஜோதி அவர்களின் கண்களில் படவேயில்லை. நிர்மலாவின் தந்தை சண்முகம் போகும்போது சங்கரிடம் இதை தான் இப்படியே விடப் போவதில்லை நீங்கள் கெதியா என்ர பிள்ளையை என்னிடம் கொண்டுவந்து தரவேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது வழக்குப் போடுவன் என்று எச்சரித்து விட்டுப் போகிறார்.

   

                                                           இவை எதைப் பற்றியும் ஜோதி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. முதலில் அவள் பெற்றோர் அவளை வேலையையும் நிறுத்தி விட்டு கொழும்பில் இருந்து கூட்டிக் கொண்டு வந்ததில் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஜோதியின் தகப்பன் கஜேந்திரன் இராசம்மாவுக்கு துரத்து உறவு. ஜோதி கொழும்பில் ஒரு சர்வதேசங்களுடன் தொடர்புடைய கம்பனியொன்றில் நல்ல சம்பளத்தோடு நல்ல வேளையில் இருக்கிறாள். முதன் முதல் வீட்டில் இருந்து கொழும்புக்கு வேலைக்குப் போகும்போது பதவிசாக நல்ல மாதிரித்தான் போனவள். அங்கு அவர்களின் உறவினர் ராசன் வீட்டில் இருந்து கொண்டுதான்  பேரூந்தில் வேலைக்குப் போய்வாறவள். காலப்போக்கில் கூட வேலை செய்ப்பவர்களின் சகவாசத்தாலும் மற்றவர்கள் போல் மிகவும் வசதியாக வாழவேண்டும் என்னும் இச்சையாலும் சின்ன சின்ன பார்ட்டிகள், அங்கு அவர்களுக்காக கொஞ்சம் கொஞ்சமாக மது அருந்துதல் என்று தடம் மாறுகிறாள்.

                                  அவள் அடிக்கடி வீட்டுக்கு தாமதமாக வருவதாலும் சில நாட்கள் வெளியே தங்கிவிட்டு வருவதாலும் அதை ராசன் கண்டிக்க அவர்களுக்குள் உறவில் விரிசல் ஏற்பட்டு அங்கிருந்து கிளம்பி சக தோழியுடன் ஒரு அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வருகிறாள்.

                                                                                             சமீபத்தில் ஒருநாள் கஜேந்திரனுக்கு அவரது கை பேசியில் ஒரு அழைப்பு வருகிறது. எதிர் முனையில் பேசியவர் நீங்கள் கஜேந்திரனோ பேசுவது என்று வினவ, ஓம்....நீங்கள் யார் கதைக்கிறது என்று கேட்கிறார். ஐயா உங்களது மக்கள் ஜோதி கொழும்பாஸ்பத்திரியில் இன்ன வார்ட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான நோயில் இருக்கிறா. அதுதான் உங்களுக்கு தெரிவிக்கிறன் என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார். உடனே கஜேந்திரன் பதற்றத்துடன் மனைவி சுகுமாரியிடம் விஷயத்தை சொல்ல அவளும் பதறி இஞ்ச அப்பா இப்ப நீங்கள் கோபத்தை பாராட்டாமல் ராசனுக்கு அழைப்பெடுத்து என்னெண்டு போய் பார்க்கச் சொல்லுங்கோ. நாங்களும் உடனே போக வேணும் என்கிறாள். அவரும் ராசனுக்கு அழைப்பு விட அவனும் எடுத்து என்ன மாமா என்கிறான்.

--- தம்பி ராசு நான் மாமா பேசுறன்.....என்ன சொல்லுங்கோ மாமா.(ராசன் வீட்டில் இருந்துதான் ஜோதி வேலைக்குப் போய் வந்தவள்).

--- அப்பன் குறைநினைக்காத இப்ப உங்கிருந்து ஒரு ஆள் யாரென்று தெரியாது போன் எடுத்தவர். என்னண்டால் எங்கட மகள் ஜோதி எதோ வருத்தமாய் ஆசுபத்திரியில் இருக்கிறாவாம். உனக்கு தெரியுமே.

--- எங்களுக்குத் தெரியாது மாமா, விவரத்தை சொல்லுங்கோ நான் போய் பார்த்து உங்களுக்கு அறிவிக்கிறன்.

--- அவர் விபரங்களை விளக்கமாய் சொல்லிவிட்டு, குறைநினைக்காமல் ஒருக்கால் போய் பார்த்துவிட்டு எங்களுக்கு சொல்லு தம்பி. இங்க தாயார்காரி ஒரே அழுகையோடு இருக்கிறாள்.

--- ஒரு குறையுமில்லை மாமா, நான் இப்பவே சென்று பார்த்துவிட்டு சொல்லுறன். தொடர்பு துண்டிக்கப் படுகிறது.கொஞ்ச நேரத்தில் கஜேந்திரனுக்கு அழைப்பு வருகிறது. ராசன்தான் அழைக்கிறான்.

--- ஹலோ மாமா உங்களுக்கு வந்த செய்தி உண்மைதான். அவ இப்பவும் ஆசுபத்திரியில்தான் இருக்கிறா. குளுக்கோஸ் ஏத்துப்படுகுது. எதுக்கும் நீங்கள் இங்கு வாறது நல்லம் என்கிறான். உடனேயே கஜேந்திரனும் சுகுமாரியும் காரில் இரவிரவாக ஓடி கொழும்புக்கு வருகிறார்கள். பொழுது பல பலவென விடிந்து விட்டது.

                                                                       நேராக ஆஸ்பத்திரி சென்று மகளைப் பார்க்கிறார்கள். அவள் கட்டிலில் கிழிந்த நாராய் களைப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். குளுக்கோஸ் எல்லாம் கழட்டி விட்டு விட்டார்கள். அங்கு அவள் அறைக்கு வந்த வைத்தியரிடம் விசாரித்த போது அவர் சொன்ன செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சொல்கிறார், இப்ப இந்தப் பெண்ணுக்கு மூன்றாவது முறையாக "அபார்சன்" ஆகியிருக்கு. முன்பே எச்சரித்து இருந்தோம். இனி இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் கருத்தரிப்பது கடினம்.இன்றைக்கே நீங்கள் பில்லை கட்டிவிட்டு பிள்ளையை கூட்டிக் கொண்டு போகலாம் என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

  

                                              அன்றே அவளிடம் கஜேந்திரன் உனக்கு இங்க வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் ஒழுங்கா வேலை செய்வாய் என்று அனுப்பினால் நீ இங்க விசர் வேலை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாய் என்று பேசிவிட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து விட்டார். இது நடந்து சில மாதங்களில் இந்த இராசம்மாவின் சம்பந்தம் தானாக தேடிவர, ஜோதிக்கு நிறைய புத்திமதிகள் சொல்லி அவசரம் அவசரமாக கலியாணம் செய்து வைத்து விட்டார்கள். ஆனால் இராசம்மா அவர்களிடம் உண்மையை மறைக்காமல் சொல்லித்தான் ஜோதியை சங்கருக்கு இரண்டாவது மனைவியாக கலியாணம் கட்டி அழைத்து வந்தவள். இரண்டு வீட்டாரும் மிகவும் பணக்காரர்களாக இருந்தபடியால் யாரும் இதைப் பெரிதாக்கவில்லை.

                          மணமக்கள் சங்கரின் வீட்டுக்கு வந்த நேரம் நிர்மலா இல்லாததும் அவர்களுக்கு வசதியாகி விட்டது. இதை இராசம்மா சிறிதும் எதிர்பார்க்க வில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் தன்னுடைய வீட்டுக்குத்தான் போவாள், கொஞ்ச நாளில அங்கு சென்று அவளை அழைத்து வந்து விடலாம் என்றுதான் நினைத்தாள். இப்படியே ஒரு வருடத்துக்கு மேல் ஓடி விட்டது. ஜோதியும் புகுந்த வீட்டுடன் நன்றாக ஒன்றிப்போய் விட்டாள். நிர்மலாவைப் பற்றி அவர்களுக்கு எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை.

மலரும்........!  🥀

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போலவே உங்கள் கதை விறுவிறுப்பாகப் போகிறது அண்ணா. தொடருங்கள்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவி, நன்றாக போகின்றது

On 24/3/2023 at 23:03, நிழலி said:

தொடருங்கள் சுவி அண்ணா 

ஆனாலும் இக் காலத்திலும் இப்படி செய்வார்களா என்ற கேள்வி வருகின்றது. முக்கியமாக இக் காலத்தில் எங்கள் சமூகத்தில் இப்படி நடப்பதில்லை அல்லவா? 

On 26/3/2023 at 13:53, Kavi arunasalam said:

 

கொடிகாமம்,சாவகச்சேரி, வவுனியா  எல்லாம் வருகிறதை கவனிக்கவில்லையா நிழலி?

 

😂😁

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

கதை அருமை சுவி அண்ணை. எனக்கு ஒரு விடயம் பிடிபட்டிருக்கு, அவசரக்குடுக்கையா மூக்கை நுழையாது பொறுமையா இருப்பம், நான் நினைச்சது சரியோ என்று கதை முடிவில் சொல்றன்.

ஓம்.நான்காவது பகுதிக்கு பின் கதையின் போக்கை புரிந்து கொள்ள முடிகிறது..தொடரட்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கமும் ஊக்கமும் தந்து கருத்துக்களால் மகிழ்விக்கும் அன்புள்ளங்களுக்கு மிகவும் நன்றி......எனக்குப் பல புதிய உறவுகளும் வந்து வாசிப்பதும் கருத்துக்கள் பகிர்வதும் சந்தோசமாய் இருக்கு......!  💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர்...........(7).

                                 

                                                         நிர்மலாவும் வவுனியாவுக்கு வந்து இரண்டு வருடத்துக்கு மேலாகிறது. அவளது ட்யூசன் வகுப்புகளும் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது. அவள் கணிதமும் விஞ்ஞானமும் விசேஷமாக சொல்லிக் கொடுப்பதால் நிறைய A /L  மாணவர்கள் கணனி மூலமாக படிக்கிறார்கள். மேலும் அயலில் இருக்கும் பலதரப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கும் பின் விறாந்தையில் வைத்து பாடம் சொல்லிக் குடுக்கிறாள். வறுமையான பிள்ளைகளிடம் பணம் வாங்குவதில்லை என்பதை தனக்குள் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறாள்.

                                                                         கதிரவனின் பிள்ளைகளில் சிவாங்கி இன்னும் சிறு பிள்ளையாக இருக்கிறாள். முகிலன் கொஞ்சம் வளர்ந்து விட்டிருந்தான். அதனால் அவர்களையும் கவனித்து படிப்பு சொல்லிக் குடுக்கிறாள். சமையலிலும் ஆச்சியை அதிகம் வேலை செய்யவிடாமல் தானே கவனித்துக் கொள்கிறாள். கூடவே "யு டியூபிலும்" தான் சமையலில் இருந்து வீட்டுத் தோட்டம் பராமரிப்பது வரை பதிவிடுகிறாள். அவள் செய்யும் விதம் விதமான உணவுகள் ஆச்சி அப்பு மட்டுமன்றி கதிரவனுக்கும் பிடித்திருக்கு. பிள்ளைகளுக்கும் தனியாக உறைப்பில்லாமல் சமைத்து ஊட்டிவிடுவாள். என்னதான் இருந்தாலும் கதிரவனின் தேவைகளை கூடுதலாக ஆச்சிதான் கவனித்துக் கொள்வது வழக்கம். நிர்மலாவும் ஆச்சியிடம் இருந்து கோழிப்புக்கை, மீன் புட்டு, மற்றும் சிறுதானிய உணவுகள் எல்லாம் சமைக்கப் பழகியிருந்தாள். ஓய்வாக இருக்கும் சமயங்களில் அப்புவும் ஆச்சியும் பிள்ளைகளும் அவளுமாக கனக்க கதைத்துப் பேசி சிரித்து மகிழ்வார்கள். அந்நேரம் கதிரவனும் வீட்டில் இருந்தால் "சமா" களை கட்டும்.

                                                          இப்படித்தான் ஒருநாள் மாலைவேளை அப்பு கிணத்துக் கட்டினருகில் இருந்து பேரப்பிள்ளைகள் முகிலனுக்கும் சிவாங்கிக்கும் பெரிய கொடுவாக் கத்தியால் பணங்கொட்டையை வெட்டி பூரான் கிண்டிக் குடுத்துக் கொண்டிருக்கிறார். இடைக்கிடை ஆச்சிக்கும் நிர்மலாவுக்கும் முகிலனிடம் பூரான்களைக் குடுக்க அவனும் சின்னக் கால்களால் ஓடிச்சென்று அவர்களிடம் குடுத்து விட்டு வருகிறான். சிவாங்கியும் அருகே விளையாடிக்கொண்டிருக்கிறாள். ஆச்சி விறாந்தையில் இருந்து ஓலைச் சத்தகத்தால் செருகி செருகி பாய் இழைத்துக் கொண்டிருக்கிறாள். பக்கத்தில் நிர்மலாவும் ஏதோ பாடலை முணுமுணுத்தபடி பூசையறை குத்துவிளக்குகளை புளிபோட்டு விளக்கிக் கொண்டிருக்கிறாள். ஆச்சியும் அவளிடம் என்ன பிள்ளை நல்லா பாடுகிறாய் போல, கொஞ்சம் பெலுத்தாப் பாடேன் நாங்களும் கேட்பம்.  நிர்மலாவும் சரி அம்மா என்று சொல்லி விட்டு தொண்டையை கொஞ்சம் செருமி செம்பில் இருந்த தண்ணியையும் குடித்து விட்டு "காம்போதி" யில் ஒரு கீர்த்தனையை பாடுகிறாள். பக்கத்தில் ஆச்சியும் கையில் இருந்த சத்தகத்தை கொண்டையில் செருகி விட்டு பின்னால் இருந்த நெல்லு மூடடையில் சாய்ந்து கொண்டு பாட்டில் சொக்கிப்போய் கேட்டுக் கொண்டிருக்கிறா. அவளும் ஸ்வர வரிசைக்கு வந்து கீழ் ஸ்தாயியில் இருந்து உச்சத்தில் அரோகணத்துக்கு மாறி 7ம் கட்டையில் விஸ்தாரமாக ஸஞ்சரிக்கும் பொழுது  அந்த இசை காற்றில் கலந்து வானில் பரவுகிறது.

                                                                                         சற்று நேரத்தில் முற்றத்தில் "டமார்" என்று ஒரு பெரிய சத்தம். புழுதியும் நீருமாய் முகத்தில் அடிக்க ஆச்சி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க முற்றத்தில் பெரிய கொம்புகளுடன் ஒரு எருமை மூச்சிரைக்க வந்து நிக்குது. இதென்னடா இந்த எருமை எங்கிருந்து இங்க வந்தது என்று விழிகளை உயர்த்திப் பார்க்க சாட்சாத் சதாசிவனே அந்த எருமைமீது ஆரோகணித்திருக்கிறான். ஆச்சியும் பதறிப்போய்....

--- சுவாமி என்ன இது இந்த ஏழையின் இல்லத்துக்கு எருமையில் எழுந்தருளி இருக்கிறாய். என்றாவது நீ என்னை அழைக்க வருவாயென்று பூவும் புல்லும் படைத்து வணங்கினேன், இப்படி எருமையில் வருவாயென்று தெரிந்திருந்தால் பூவோடு புண்ணாக்கும் வைத்திருப்பேனே. நீ திடுதிப்பென்று வந்ததால் நான் பதறிவிட்டேன்.

--- பதறாதே கிழவி....நான் கயிலையில் நிஷ்டையில் இருந்த பொழுது ஒரு கந்தர்வ கானம் என் கர்ணங்களை (காதுகளை) தீண்டி சென்றது. அன்றொருநாள் தசமுகன் தன் தலையை தானே கொய்து என்னை மகிழ்வித்து விடுதலை பெற்றான். இன்று அதே இசை என்னை ஈர்த்ததால் நான் அதில் மெய்மறந்து என் வாகனத்தில்  இங்கு வந்து விட்டேன்.

--- ஆ சிவ சிவா....என்ர சிவனே என்ன காரியம் செய்து போட்டாய், சுவாமி இது எமனுடைய எருமை உன்  எருது அல்ல, கெதியா இதைக் கொண்டுபோய் அவனிடம் குடுத்திட்டு உன்ர எருதில் ஏறி வா. இதத் தேடிக்கொண்டு எமன் இங்க வந்திடப் போறான். (நடுங்குகிறாள்)

--- அப்போதுதான் ஈசன் கவனிக்கிறான். அட நான் என்னை மறந்ததால் எருது எது எருமை எது என்று கவனிக்க வில்லை. ஓம் கிழவி நீ சொன்னதுபோல் இந்த எருமையைத் தேடி எமன் இங்கு வந்தால் எதாவது ஒரு உயிரை எடுக்காமல் போக மாட்டான். அதற்குள் நான் அங்கு போகவேண்டும். பின் எருமையைப் பார்த்து எருமையே நீ எதற்கு கயிலை வந்தாய்.

---  --- ஐயனே நான் அன்றாடம் எமதர்மராஜனோடு சென்று அவர் உயிர்களை கவர உதவுவதால் அந்தப் பாவத்தில் ஒரு பங்கு என்னையும் சேருமல்லவா. இன்று போயா விடுமுறையாதலால்  எமன் எனக்கு விடுமுறை தந்ததால் அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்ள பகீரதியிடம் (கங்கை)  ஒருகுடம் தீர்த்தம் பெற்று ஸ்நானம் செய்யலாம் என்று வந்தேன் பிரபு. அப்போது தாங்கள் அங்கு வந்து என்மீது ஏறி  இசை வந்த திசையில் விரைந்து செல் என்று கட்டளை இட்டீர்கள்.அதனால் இங்கு வந்தோம் ஐயனே.

                                                    அப்படியா நல்ல காரியம் செய்தாய். பின் கங்காதேவி  உடனே உன் புனிதமான தீர்த்தத்தால் இந்த எருமையை குளிப்பாட்டு என்று கூறி தலையைத் தடவ அங்கு சடாமுடி பிரிந்து கிடக்கிறது. கை கால்களை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஆபரணங்களான பாம்புகளையும் காணவில்லை. அடி கங்கா  நீ எங்கிருக்கிறாய்.

--- சுவாமி அந்த எருமை வேகமாய் வந்து சடுதியாக  நின்றதால் நாங்கள் சிதறிக் கிடக்கிறோம். அந்நேரம் அந்த எருமையை நானும் என் நிலைகுலைந்து முற்று முழுதாகக் குளிப்பாட்டி விட்டேன். இப்பொழுது நான் அதன் ஒரு கொம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறேன். உங்களின் கழுத்தாபரணமும் மற்ற கொம்பில் தொங்குது.

கீழே குட்டி ஆபரணங்கள் சிதறி ஓடியதைக் கண்டு ஆச்சியின் நாயும் அங்கும் இங்கும் ஓடி பாம்புக்குட்டிகளைத் தேடிக் குரைக்கிறது.

  --- உடனே அந்த எருமையும் ஐயனே கங்கையின் தீர்த்தத்தால் என் பாவங்கள் தொலைந்தன. தங்களின் ஸ்பரிசத்தால் என் ஜென்மமும் புனிதமடைந்தது வணங்குகிறேன் சுவாமி.என்னை ஆசிர்வதியுங்கள் ஐயனே.

    அவர்களை ஆசீர்வதித்த சிவனும் அப்படியே திரும்பி ஆச்சியையும் நிர்மலாவையும் பார்வையால் ஆசீர்வதிக்கிறார். பின் சடாமுடியை தூக்கி ஒதுக்கி கொண்டை போட்டு கங்கையை தூக்கி அதில் வைத்து அவளை பிணைக்க எதையோ தேடுகிறார். அதையுணர்ந்த ஆச்சியும் தன் தலையில் செருகி இருந்த சத்தகத்தை எடுத்து சுவாமி இந்தா இதால குத்திக் கொண்டு கெதியா போய் உந்த எருமையை எமனிடம் குடுத்துடு என்று எறிய சிவனும் அதை கட்ச் பிடித்து முடியில் செருகிக் கொண்டு சீக்கிரம் செல் என்று எருமையிடம் சொல்கிறார். அந்த எருமையும் வேகமாய்த் திரும்பி ஓட வெளிக்கிட ஆங்காங்கே விழுந்து கிடந்த ஆபரணங்களாக அந்த பாம்புக் குட்டிகளும் ஓடுற பேரூந்தில் ஓடி ஏறும் பயணிகள் போல் பாய்ந்தோடிப்போய் எருமையின் கால்களிலும் வாலிலும் தொற்றிக் கொள்கின்றன. அது ஓடி கிணத்து கட்டில் மிதித்து வானில் கிளம்புகிறது. அந்த வேகத்தில் ஒரு கல்லு பறந்து வந்து ஆச்சியின் நெத்தியை பதம் பார்க்கிறது.

                                             உடனே திடுக்கிட்டு கண் விழித்த ஆச்சியின் மடியில் அப்பு கொத்தும்போது வழுக்கிப் பறந்து வந்து தலையில் அடித்த பனங்கொட்டை கிடக்கு.  நடந்தது எல்லாம் சொப்பனம் என்று உணர்ந்து அப்புவைப் பார்க்க அங்கு அப்புவோடு முகிலன் நிக்கிறான். சிவாங்கி  கிணத்துக் கட்டில் ஒரு கால் உள்ளே வைத்துக் கொண்டிருந்து  வாளிக் கயிற்றோடு விளையாடிக் கொண்டிருக்கு. அப்புவும் அதைக் கவனிக்கவில்லை. எடியே இஞ்ச பாரடி பிள்ளை என்று ஆச்சி கத்த வெளிக்கிட அதைக் கவனித்த நிர்மலாவும்  அவ வாயைப் பொத்தி உஸ்ஸ் என்று ஆச்சிக்கு ஜாடை காட்டிவிட்டு மெதுவாக ஊர்ந்து சென்று சிவாங்கி மறுபக்கம் கயிற்றுடன் சரியும் நேரம் அவளின் மற்றக் காலைக் கெட்டியாகப் பிடித்து தூக்கி தன்னுடன் சேர்த்தணைத்துக் கொள்கிறாள். உடனே அப்பு ஆச்சி எல்லாம் அவளை மொய்த்து விட்டினம்.

                       

                                                       நல்ல காலமாக நடக்க இருந்த ஒரு பெரிய விபத்து தவிர்க்கப் பட்டது. இது எதுவும் அறியாமல் சிவாங்கி அழகாய் சிரிக்க மற்றவர்களும் அந்தத் துன்பத்தை மறந்து சிரிக்கிறார்கள். பின் ஆச்சி அப்புவைப் பார்த்து இஞ்ச நீங்கள் பூரான் வெட்டினது போதும் கெதியா முகிலனோடு வீட்டுக்கு போங்கோ, எவன் வருறானோ எமன் வருறானோ தெரியேல்ல காலம் கெட்டுக் கிடக்கு  என்று திட்டிவிட்டு நிர்மலாவைப் பார்த்து பிள்ளை நீ நல்லாத்தான் பாடுறாய் ஆனால் நீ 7ம் கட்டை 8ம் கட்டை  என்று அவ்வளவு தூரம் எல்லாம் போக வேண்டாம். இஞ்ச ரெண்டு கிழடுகட்டை  கிடக்குது, ஏதோ எமக்குத் தோதாக 4ம் கட்டையோடு பாட்ட நிப்பாட்டு என்கிறா. நிர்மலாவும் இதென்ன அம்மா நல்லாத்தானே இருந்தவ  என நினைத்துக் கொண்டு குழப்பத்துடன் விளக்கிய விளக்குகளை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறாள்.

மலரும்........!  🌷

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

ஆக்கமும் ஊக்கமும் தந்து கருத்துக்களால் மகிழ்விக்கும் அன்புள்ளங்களுக்கு மிகவும் நன்றி......எனக்குப் பல புதிய உறவுகளும் வந்து வாசிப்பதும் கருத்துக்கள் பகிர்வதும் சந்தோசமாய் இருக்கு......!  💐

தொடருங்கள் சுவியர்! உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் ரசித்து வாசிக்கக்கூடியவையே.:respekt:

Respect GIFs | Tenor

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்  அண்ணா

முழுமையாக  வாசித்ததும  கருத்திடுகின்றேன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென்று ......ஆச்சியின்  கனவு  எதோ நடக்க போவதை உணர்த்திற்று . தொடருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர்.......(8).

                                                                            பிறிதொருநாள் ஆச்சி மகன் கதிரவனிடம் தம்பி நீ இந்தப் பிள்ளை நிர்மலாவைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்கின்றாள். அவனும் ஏன் அவவைப் பற்றி நினைக்கிறதுக்கு என்ன இருக்கு. அவ தானும் தன் பாட்டில் வேலை செய்கிறா. வாடைக்காசும் ஒழுங்காய் தருகிறா. எங்கட மகன் முகிலனும் வகுப்பில் கெட்டிக்காரனாய்  இருக்கிறான் என்று அவன்ர வகுப்பு ஆசிரியை சொன்னவர். வேறு எண்ணத்தை சொல்ல.

--- இல்லை தம்பி, எங்களுக்கும் வயசாயிட்டுது. உனக்கு விருப்பமெண்டால் அந்தப் பிள்ளையை கேட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கிறன். கொப்பருக்கும் நல்ல விருப்பம்.

--- ஓ.....நீங்கள் இரண்டு பேரும் ஏற்கனவே கதைத்து வைத்து விட்டுத்தான் இப்ப என்னிடம் கேட்கிறீங்கள் போல. அவ ஏதோ தன் பாட்டுக்கு இருக்கிறா, அவவை அத இத கதைத்து குழப்பிப் போடாதேங்கோ. மேலும் அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது. அவ தனியா வீட்டை விட்டு வர என்ன என்ன பிரச்சினையென்றும் தெரியாது. அதால கதைக்கிறதை நல்லா யோசித்து கதையுங்கோ.

--- அதடா மோனை அப்பப்ப கதையல் வரேக்க நான் கொஞ்சம் கொஞ்சம் ஜாடை மாடையா விசாரிக்கிறானான்.அதுகளை கோர்த்து வைத்துப் பார்த்தால், அவ யாழ்ப்பாணத்தில் கலியாணம் கட்டிய இடம் பெரிய இடமாம். கலியாணம் செய்து பல வருடங்களாக அவையளுக்கு பிள்ளை இல்லையாம். அதனால புருசன்காரன் இரண்டாவது கலியாணம் செய்து கொண்டு வீட்டுக்கு வர இந்த பிள்ளையும் அங்கிருக்கப் பிடிக்காமல் ஏதோ ஒரு தைரியத்தில வெளிக்கிட்டு வந்திட்டுது. தாய் தேப்பன் எல்லாம் தெல்லிப்பளையில் இருக்கினமாம். ஆனால் ஒருத்தரோடும் இதுவரை எதுவித தொடர்பும் இல்லையாம் என்று சொன்னவ.

--- ஓ.....நீங்கள் எல்லாம் விசாரிச்சுதான் வைத்திருக்கிறியள்.

--- அதுதான் சொன்னேனே, அப்பப்ப பேச்சு வரேக்க கதைக்கிறது, பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சேர்த்து புரிந்து கொள்ளுறதுதானே. அது கிடக்கட்டும் இப்ப நீ என்ன சொல்லுறாய் அத முதல்ல சொல்லு.

--- சரி, என்னவோ செய்யுங்கோ ஆனால் அவவுக்கு அதிகம் மனக்கஷ்டம் உண்டாக்க வேண்டாம். அது முக்கியம்.

--- சரியடா தம்பி, நான் நேரம் பார்த்து நைசாய் கதைக்கிறேன்.

                                                                                

                                                               அநேகமான மாலை நேரங்களில் அவர்கள் அருகில் இருக்கும் குளத்தின் கரையையொட்டி நடந்து போய் வருவதை வழக்கமாய் கொண்டிருந்தார்கள். முன்பு ஆச்சி அப்புவுக்கு அந்தப் பழக்கமில்லை. ஆனால் நிர்மலா வந்து கொஞ்ச நாளில், அவள் முதலில் தான் தனியா நடந்து போட்டு வருவாள். பின் அவர்களுடன் நன்றாகப் பழகியபின் அவர்களையும் கூட்டிக் கொண்டு வெளியே நடந்து போய்வரப் பழக்கி விட்டாள். ஆரம்பத்தில் சும்மா சாக்கு போக்கு சொன்ன ஆச்சி நாளடைவில் அப்புவும் பிள்ளைகளும் ஆவலுடன் சேர்ந்து நடக்க பின் தானும் சேர்ந்து கொண்டாள். அதில் அவர்களுக்கு ஒரு சௌகரியம் இருந்தது. பிள்ளைகளின் இரவு உணவையும் கொண்டு சென்று அங்கேயே சாப்பிட வைத்து விடுவார்கள். அவர்களுக்கு முன் சிவாங்கியும் முகிலனும் நொறுக்குத் தீனிகளுடன் தயாராய் இருப்பார்கள். அப்படி குளக்கரையிலும் வயல்களுக்கு நடுவேயும் நடக்கும்போது சுத்தமான காற்றையும் சுவாசிப்பதால் ஆச்சி அப்புவுக்கும் உடம்பு இலேசாகவும் சில சில வருத்தங்கள் இல்லாமல் போவதையும் கண்கூடாக அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். இரவில் நல்ல பசியுடன் வந்து வடிவா சாப்பிட முடிகிறது. அடிச்சுப் போட்டால் போல் நல்ல உறக்கமும் வருகிறது. பலப்பல விடயங்களையும் கதைத்துக் கொண்டு வருவதால் மனசிலும் எந்தப் பாரமும் இல்லாமல் இலேசாக இருக்கின்றது. பிள்ளைகள் முன்னால் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டு திரிய இவர்கள் பின்னால் நடந்து போவார்கள்.

                                                             அன்றும் அப்படித்தான் அப்புவும் பிள்ளைகளும் முன்னால் போய்க்கொண்டிருக்க ஆச்சியும் நிர்மலாவுக்கு மிக அருகில் வந்து மெதுவாக பேச்சைத் துவங்குகிறாள்.

--- எடி பிள்ளை நிர்மலா நான் உன்னட்டை ஒரு விஷயம் கேக்கட்டே என்று பீடிகையுடன் ஆரம்பிக்கிறாள்.

--- என்ன அம்மா இது எதுவென்றாலும் கேளுங்கோ.

--- பிறகு நீ குறை நினைக்கக் கூடாது சரியோ.

--- சொல்லுங்கோ அம்மா இந்தமாதிரி தயக்கம் எல்லாம் வேண்டாம். நான் ஒன்றும் குறை நினைக்க மாட்டன்.

--- பிள்ளை நீ ஏன் இன்னொரு கல்யாணம் செய்யக் கூடாது.

--- அது வந்து அம்மா நான் அங்கிருந்து வந்தபின் எப்படியாவது உழைத்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும். கடைசி காலத்தில அம்மா அப்பாவுக்கும் மற்றும் எனது மூத்த அக்காவுக்கும் உதவி செய்து அவர்களை நல்லா வைத்திருக்க வேண்டும். அதிலேயே என் சிந்தனை முழுதும் இருந்ததால் நான் மறுமணம் பற்றி நினைக்கவே இல்லை.

--- சரி..... நீ இப்ப நல்லா சம்பாதிக்கிறாய்தானே. நீ கெட்டிகாரி அதெல்லாம் செய்து போடுவாய். அதவிடு, இப்ப நான் விசயத்துக்கு வாறன். இந்த சில வருடங்களில் உன்னை எங்களுக்கு மிகவும் பிடித்துப் போட்டுது. என்ர மகன் கதிரவனை கலியாணம் செய்ய உனக்கு சம்மதமே. அல்லது உனது பெற்றோருடன் கதைக்க வேண்டும் என்றாலும் தயங்காமல் சொல்லு நாங்கள் சென்று உன்னைப் பெண் கேட்கிறம்.

--- சிறிது தயங்கிய நிர்மலாவும் அது வந்து அம்மா நீங்கள் திடுதிப்பென்று என்னிடம் கேட்கிறீங்கள் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

--- பொறு பிள்ளை, நீ ஒன்றும் அவசரப்பட வேண்டாம்.நன்றாக யோசித்து ஒரு பதிலை சொல்லு. நீயும் இப்படியே இன்னும் எவ்வளவு காலம்தான் இருக்க முடியும்.

--- உங்களுக்கு தெரியும்தானே அம்மா எனக்கு பிள்ளை பிறக்காததால்தான் அவர் மறுமணம் செய்தவர். அதனால்தான் நானும் அங்கிருந்து கிளம்பி வந்தனான்.நாளைக்கு அதுவே உங்களுக்கும் ஒரு பிரச்சனையாய் இருக்கக் கூடாதல்லவா.

--- அதையேண்டி அம்மா நீ நினைக்கிறாய். அது ஆண்டவன் போடுற பிச்சை. யார்யாருக்கு எதையெதை எப்ப குடுக்கணும் என்று அவனுக்குத்தான் தெரியும். எனக்கு ஆறு பிள்ளைகள். ஐந்து பிள்ளைகளும் ஒவ்வொன்றும் கருவிலே அழிந்தும், குறைப்பிரசவத்திலும் என்று போய் கடைசியில மிஞ்சினது இவன் கதிரவன் மட்டும்தான். இப்ப உனக்குத்தான் இரண்டு பிள்ளைகள் இருக்குதே. நீ இங்க வந்ததில் இருந்து அந்த தாயில்லாப் பிள்ளைகளை  குளிக்கவாக்கிறதில் இருந்து  அவையளுக்கு ஏற்ற சாப்பாடுகள் உடுப்புகள் எல்லாம் நீதானே பார்த்துப் பார்த்து செய்கிறாய். கண்ணன் தேவகியிடம் பிறந்தாலும் தாய் என்று யசோதாவிடம்தானே வளர்ந்தவன். அதுபோல் அதுகளும் உன்னிடம்தானே அம்மா அம்மா என்று ஒட்டிக் கொண்டு கிடக்குதுகள். பெற்றவளுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கேல்லையே.   "கல்லைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டால்தான் கடவுள் வழிபாடா, இந்த பிள்ளைகளை தாய்க்கு தாயாய் இருந்து கண்ணுங் கருத்துமாய் வளர்க்கிறதும் கூட அந்த பரம்பொருளுக்கான வழிபாடுதான்" அன்று கிணத்துக் காட்டில் இருந்து நீ சிவாங்கியை காப்பாத்தினது இப்பவும் என் கண்ணுக்குள்ள நிக்குது. அண்டைக்கு மட்டும் ஒரு தப்பு நடந்திருந்தால் நான் என்ர பிள்ளைக்கு என்ன பதில் சொல்லுவன். அன்றிலிருந்துதான் எனக்கும் அப்புவுக்கும் உன்மீது இப்படி ஒரு எண்ணம் வந்தது. யார் கண்டது உனக்கும் ஆண்டவன் ஒரு மடிப்பிச்சை இட நினைத்தால் அதை யார் தடுப்பார். இப்படி இவர்கள் கதைத்துக் கொண்டிருக்க அப்புவும் பிள்ளைகளும் விளையாடி விட்டு வருகினம். பின் எல்லோருமாக வீட்டிற்கு வருகிறார்கள்.

மலரும்...........!  🌾

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர் .....(9).

                            

                                                      இராசம்மாவின் வீட்டில் ஜோதி வந்ததில் இருந்து அவளுக்கு தாயம்மாவை அவ்வளவாக பிடிக்கவில்லை. தாயம்மா பத்து வயதில் அந்த வீட்டுக்கு வேலைக்கு வந்து இராசம்மாவின் அன்பால்  பத்தாவது வகுப்புவரை படித்திருந்தாள். நாளாக நாளாக அவள் அந்த வீட்டின் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யப் பழகியிருந்தாள். அங்கு இராசம்மாவும் சங்கரும் மட்டும் இருப்பதால் அவர்களுக்கு என்னென்ன தேவைகள் எந்தெந்த நேரத்தில் வேண்டும் என்பதை நன்றாக அறிந்திருந்தாள். ஆனால் ஜோதிக்கு அவள் தான் ஒரு வேலைக்காரி என்பதையும் மறந்து அந்த வீட்டில் அதிக உரிமை எடுப்பது போலப் படுகிறது. உணவு மேசையில் சங்கருக்கு சாப்பாடு பரிமாறுவது அவனது உடுப்புகளை கழுவிற மிஷினில் போட்டு பின் இஸ்திரி போட்டு மடித்து வைப்பதெல்லாம் பிடிக்கவில்லை. ஆனால் அவள் அவர்கள் எல்லோருடைய ஆடைகளையும் அப்படித்தான் செய்கிறாள். அதனால் அப்பப்ப சிறு சிறு பிரச்சினைகள் வர இராசம்மாவுக்கு தாயம்மா தனியாக போய் அழுவது எதையும் பார்க்கப் பொறுக்கவில்லை. அந்நேரம் தாயம்மாவின் தகப்பன் அங்கு வந்து தாயம்மாவுக்கு ஒரு வரன் வந்திருப்பதாகவும் அவளை தன்னோடு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்க இராசம்மாவும் அவர்களுக்கு தேவையான பணம், புடவைகள், நகைகள் எல்லாம் சீராகக் குடுத்து அனுப்பி வைக்கிறாள்.

                                                      ஜோதி சங்கரின் வீட்டுக்கு இரண்டாந்தாரமாக மணமுடித்து வந்து இந்தா அந்தா என்று நான்கைந்து வருடங்கள் ஓடி விட்டன.    ஜோதியும் கல்யாணமாகி வந்த புதிதில் ஜோடியாக தியேட்டர்,பூங்கா,கடற்கரை என்று எல்லா இடமும் சந்தோசமாக சுற்றித் திரிவார்கள்.அப்படி அவன் கையைப் பிடித்து நடக்கும்போது அதில்  ஆறாவதாக ஒரு சின்னி விரல் இருப்பதைப் பார்த்து ஏன் சங்கர் இதை ஒரு சத்திரசிகிச்சை  செய்து அகற்றலாமே என்று சொல்ல அவனும் ஏன் அது தன்பாட்டுக்கு இருக்கு. என் அப்பா அவரின் அப்பா எல்லோருக்கும் இடது கையில் ஆறுவிரல் இருக்கு தெரியுமா. அதன் பின் அவளும் அதைப்பற்றி கதைப்பதில்லை. அவளுக்கு ஓரிரு தடவை வயிற்றில் பிள்ளை உண்டாகியும் மூன்று நான்கு மாதங்களில் கரு அழிந்து விடுகின்றது. இராசம்மாவுக்கு எல்லா நம்பிக்கையும் போய் விட்டது. இப்போதெல்லாம் அவள் யாரிடமும் அதிகம் கதைப்பதில்லை. தங்களுடைய இவ்வளவு திரண்ட சொத்துக்கு ஒரு வாரிசு இல்லையே என்பதை நினைக்க அவளறியாமலே கண்கள் கலங்கி கண்ணீர் வருகிறது. அவளும் தன்பாட்டில் புதிதாக வந்த வேலைக்காரி அம்மாவுடன் சேர்ந்து சமையல் செய்து வைத்து விட்டு மாலை நேரங்களில் அயலவர்களுடன் ஏதாவது கதைக்க போய் விடுவாள். அல்லது அருகில் உள்ள கோயிலுக்கு சென்று இருந்து விட்டு வருவாள். சங்கருக்கும் பிள்ளை ஆசையே போய் விட்டது. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறான். ஜோதியிடமும் இந்த நான்கைந்து வருடங்களில் நல்ல நிதானமும் பக்குவமும் வந்து விட்டது. அவளுக்குள் எப்போதும் ஒரு குற்றவுணர்வு இருக்கு. குழந்தை ஒன்று வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இந்தக் குடும்பத்துக்கு தன்னால் ஒரு குழந்தை பெற்றுத்தர முடியவில்லையே என்று. கருத்தரிக்கும் பிள்ளைகள் கருவிலேயே அழிந்து போவதற்கு முன்பு கொழும்பில் தனது தவறான நடத்தையே காரணம் என்று நன்கு அறிவாள். அத்துடன் சங்கரின் முதல் மனைவி பற்றி ஒரு தகவலும் இல்லை. இப்ப எங்கிருக்கிறாளோ என்ன ஆனாளோ தெரியவில்லை. எல்லாம் தனது தவறான நடத்தையால் என்று உள்மனம் குத்திக் காட்டுது.

                                                    சங்கருக்கும் எப்போதும் கலகலப்பாய் இருந்த தன்வீடு இப்போது வெறும் அமைதியாக இருப்பதும் கவலையளிக்கிறது. அத்துடன் அநியாயமாய் நிர்மலாவை மனம் நோகச்செய்து விட்டோம் என்ற கவலை வேறு. அவன் இப்போது தாயாரோடும் ஜோதியோடும் கலந்தாலோசித்து ஒரு பிள்ளையை தத்தெடுத்தால் என்ன என்றுகூட யோசிக்கிறான். அப்படியாவது இந்த வீட்டின் இழந்த சந்தோசம் மீண்டும் திரும்பாதா என்றும் நினைக்கிறான். முதலில் இந்தத் துன்பத்தை போக்குவதற்கு என்ன வழி, எல்லோருமாய் எங்காவது சுற்றுலா சென்று வந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றுகின்றது. இந்நேரத்தில் அவன் நண்பன் ஜோசேப் பத்திரிகையில் வந்த படத்துடன் கூடிய மடுமாதா திருக்கோயிலின் திருவிழா அடுத்த வாரம் ஆரம்பமாகும் ஒரு செய்தியைக் காட்டி தாங்களும் தங்கள் குடும்பத்துடன் போகப் போவதாகச் சொல்லுகிறார். அதைக் கேட்ட சங்கருக்கும் தாங்களும் அங்கு சென்று இரண்டு மூன்று நாட்கள் தங்கி மாதாவின் கூடு சுற்றும் திருவிழாவையும் பார்த்துவிட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு வரலாம் என்று தோன்றுகின்றது.

மலரும்.........!  🌷

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதைக்கரு. தொடருங்கள்.👍🏼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிதான் இப்படி நன்றாக எழுதுகின்றீகளோ தெரியவில்லை🤔, உங்கள் எழுத்து நடை அருமை👍, அத்துடன் கதையை நகர்த்துமிடம் அதைவிட👍

தொடர்ந்து எழுதுங்கள், கலைஞனாக என்றும் சந்தோஷமாக இருப்பிர்கள்🙏, வாசர்களாக நாமும்👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் பக்தி ஆரம்பித்து விட்டது. மாதா  நம்பினோரைக் கைவிடமாடடார்  . இனி எல்லாம் சுபமே நடக்கும் என எண்ணுகிறோம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவியண்ணா உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல்...வாழ்த்துக்கள்...நானும் தான் எழுத முயற்சிக்கிறேன்...முடியவில்லை  
 

2 hours ago, நிலாமதி said:

கடவுள் பக்தி ஆரம்பித்து விட்டது. மாதா  நம்பினோரைக் கைவிடமாடடார்  . இனி எல்லாம் சுபமே நடக்கும் என எண்ணுகிறோம். 

முதல் பொண்டாட்டி பிள்ளை பெத்து தரேல்ல என்று துரத்தி விட்டவருக்கு மாதா நல்லருளை கொடுப்பா...இப்ப இப்படியானவர்களுக்கு தான் "கடவுள்" என்று சொல்பவர் அருள் புரிவார் . இல்லையா நிலாக்கா 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ரதி said:


 

முதல் பொண்டாட்டி பிள்ளை பெத்து தரேல்ல என்று துரத்தி விட்டவருக்கு மாதா நல்லருளை கொடுப்பா...இப்ப இப்படியானவர்களுக்கு தான் "கடவுள்" என்று சொல்பவர் அருள் புரிவார் . இல்லையா நிலாக்கா 

பாவிகளையும் மன்னிப்பவர் தான் கடவுள் .  மனைவியை துரத்தியது  தாயின் சதி. மனம் திரும்பி  கடவுளிடம் வருவோருக்கு   மீட்பு உண்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலரும்.........! (10).

                                      

                                                                அன்று ஆச்சி அப்படிக் கேட்டதும் சில நாட்களாக அதை பற்றி நன்றாக யோசித்துப் பார்த்த நிர்மலா தனது வாழ்க்கைக்கும் ஒரு பிடிமானம் வேண்டும் என்று முடிவு செய்கிறாள். இவர்களின் குடும்பம் ஒரு நல்ல குடும்பமாகவும் இருக்கின்றது. ஏன் தானும் மறுமணம் செய்யக்கூடாது. அவர்கள் என்ன காரணத்துக்காக மறுமணம் செய்தார்களோ அதே காரணம் எனக்கும் இருக்குதுதானே. மாதங்கள் வந்து போகுதோ இல்லையோ மாதவிடாய் தவறாமல் வந்து விடுகிறதுதானே. தானாக வரும் இந்த சந்தர்ப்பத்தை ஏன் நான் எனக்கான பரிசோதனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. என்று பலவாறு யோசிக்கிறாள்.

                               அன்று ஆச்சி உரலில் வெத்திலை இடித்துக் கொண்டிருக்கும்பொழுது நிர்மலா சிவாங்கியுடன் அங்கு வருகிறாள். அப்போது ஆச்சியும் இயல்பாக என்ன பிள்ளை நான் சொன்ன காரியத்தை யோசிச்சனியோ என்று கேட்கிறாள்.

--- ஓம் அம்மா ....நான் நிறைய யோசிச்சனான். நீங்கள் இப்படிக் கேட்பது உங்களின் மகனுக்குத் தெரியுமோ, அவருக்கு இதில விருப்பம் இருக்குதோ என்று வினவுகிறாள்.

--- ஓம் பிள்ளை......முதலில் நானும் இவரும்தான் இது பற்றி கதைத்தனாங்கள். அன்றைக்கு இந்தப் பிள்ளை சிவாங்கி அந்தக் கிணத்துக் காட்டில் ஏறி நின்று விளையாடியபோது நானும்  இவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிக்க நீ தளப்பம் இல்லாமல் மெதுவாக ஊர்ந்து போய் பிள்ளையை படக்கென்று பிடித்தனியெல்லோ, அப்போதுதான் எங்கட மனசுக்குள் இந்த எண்ணம் தோன்றியது. பின் இந்த சம்பவத்தை கதிரவனிடம் சொன்னபோது அவன் உனக்கு நன்றி சொல்லிவிட்டு போனவன். பிறகு சிலநாள் கழித்து நாங்கள் அவனுடன் இந்த எங்களின்விருப்பத்தை சொன்னபோது முதலில் தயங்கினாலும் பிறகு சரியென்று சொல்லிப் போட்டார். ஆனால் உனக்கு விருப்பம் இல்லையென்றால் வற்புறுத்தக் கூடாது எண்டவர். அதன் பின்னால்தான் நான் உன்னோடு கதைத்தது.

                                                                        அடுத்து வந்த சில நாட்களில் கதிரவனுக்கும் நிர்மலாவுக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. என்னதான் அவர்கள் நட்புடன் பழகி இருந்தாலும் அடுத்து வந்த இரவுகளில் தயக்கத்தாலும் பிள்ளைகள் அவர்களிடையே படுத்துறங்குவதாலும் அதிகமான நெருக்கம் இன்றி கை கால்களின் சின்ன சின்ன உரசல்களுடனும் விரல்களின் சில்மிசங்களுடனும் காதல் பார்வைகளுடனும் உறவுகள் இன்றியே கடந்தன. இவர்களின் போக்கை தனது அனுபவத்தால் உணர்ந்த ஆச்சியும் மெய்கண்டான் காலண்டரில் ஒரு நல்ல நாள் பார்த்து அன்று பிள்ளைகளை தன்னுடன் பிடித்து வைத்துக் கொண்டு நிர்மலாவுக்கு சில அறிவுரைகள் சொல்லி அறைக்குள் அனுப்பி வைக்கிறாள்.

                                          அறைக்குள் கட்டிலின் மீது புதிய விரிப்புகளும் பூபோட்ட தலையணைகளும் அழகாக விரித்து இருக்கின்றன. ஊதுபத்தியின் மணம் ஒரு கிறக்கத்தைத் தருகின்றது. உள்ளே கதிரவனும் நாலுமுழ வேட்டி அணிந்து மெல்லிய வெள்ளை சேர்ட்டுடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருக்கிறான். சேர்ட்டினூடாக கிப்ஸ் பெனியனும் அதன் மேல் அட்ஷரக்கூடுடன் கூடிய தடித்த டைமன் சங்கிலி டாலடிக்கிறது. அவனிடம் இருந்து நறுமணமிக்க செண்டின் வாசனை வருகின்றது. அவனுக்கு ஒரு நிமிஷம் ஒரு யுகமாக இருக்கிறது. நிர்மலாவும் ஆச்சி தன் கையாலேயே பின்னி அவள் தலையில் சூடிவிட்ட ஒற்றை மல்லிகை சரமும், கையில் மாற்றிக் கட்டுவதற்கான நைட்டியோடும் பூபோட்ட கொட்டன் புடவையும் அணிந்துகொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்து அதைத் தாழிடுகிறாள். அப்போது வலிமையான இரு கரங்கள் அவளை இடையுடன் சேர்த்து தன்னுடன் அனைத்துக் கொள்கின்றன.

--- ஸ்......என்ன அவசரம், கொஞ்சம் பொறுங்கள் நைட்டியை மாற்றிக் கொண்டு வருகிறேன். அவள் குரல் கெஞ்சலாய் ஒலிக்கிறது.

--- இந்த சேலையை அகற்றினால்தானே அதை நீ மாற்ற முடியும், அதற்கு நான் உனக்கு உதவி செய்கிறேன். அப்படியே பூமாலைபோல் அவளை அள்ளியெடுத்து தத்தையை மெத்தையில் வளர்த்திவிட்டு வித்தைகள் புரிய சரிந்து கொள்கிறான்.      அவள் வெட்கத்தில் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு மெத்தையில் உருண்டு குப்புறப் படுத்துக் கொள்கிறாள். அந்த அறையின் சிறு வெளிச்சத்தில் ஒரு தேவதைபோல் அவனருகே கிடக்கிறாள். அவனும்கூட வெகு காலத்தின்பின் தனக்கே தனக்கான ஒரு பெண்ணணங்கை தன்னருகே பாசத்தோடும் காதலோடும் பார்க்கிறான். அவளது கருங்குழல் அந்தப் பரந்த முதுகில் மயில்தோகை போன்று சற்றே விரிந்து பரவிக் கிடக்கிறது. அதன் நடுவே ஒற்றை மல்லிகை சரம் மின்னல் கீற்றாக மின்னுகிறது. அவன் கைகள் அவள் முதுகை ஆதரவுடன் வருடிக் கொண்டு வர  "கரைதேடி நுரையோடு வரும் பேரலையொன்று கற்பாறையில் மோதி மேலெழுந்து குடையாய் விரித்தபடி ஒரு கணம் அசைவற்று அப்படியே நிண்றதுபோல்" இடைக்கும் முழங்காலுக்கும் இடையில் பொங்கித் தளும்பும் பேரழகு மனசை அலைக்கழிக்க, அவனது பார்வை போகும் இடமெல்லாம் தன் அகக்கண்களால் உணர்ந்தவள்போல் அவள் சிறிது நெளிந்து கொள்கிறாள். அவனும் தனது பார்வையை வேறு பக்கம் திருப்பி அவளது வழுக்கும் தோள்களை வலுவான கரங்களால் பற்றி தனது பக்கம் திருப்புகிறான்.

                                             அவளது மேனியில் இருந்தும் ஒரு சுகந்தமான வாசனை அவன் நாசியை வருடுகிறது. தன் முகத்தருகே மிக அருகில் நெருங்கும் அவன் முகத்தை அவளும் காதலுடன் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுக்கையில் அந்த வார்த்தைகளை அவன் தன் வாயினுள் வாங்கிக் கொள்கிறான். அவர்களுக்குள் பல ஆண்டுகளாக பதுங்கியிருந்த காமம் கிளர்ந்தெழுகிறது. ஆதவனின் கதிர்கள் மலர்களை மலர்விப்பதுபோல் கதிரவனின் ஸ்பரிசத்தில் பெண்மை மலர்கின்றது. அந்நேரத்திலும் அவளது மனம் "முருகா எனக்கு ஏற்பட்ட அபவாதம் நீங்க நீ அருள் புரிய வேண்டும். குழந்தையுடன் உன் சன்னதிக்கு வந்து மாவிளக்கு ஏற்றுவதற்கு நீ கிருபை செய்திடு" என்று பிரார்த்திக்கிறாள்.

                                                            இதயம் பிரார்த்தனை செய்ய இதழ்களில் அவன் பருகப் பருக தேன் சுரக்கிறது. ஆகிருதியான அவன் மார்பின் உரோமங்களை உரசி உரசி முந்தானை மொட்டுக்கள் மலர்கின்றன. விலகிய ஆடையின் இடையினில் துலங்கிய நாபியில் அவனது விரல்கள் மேய்கின்றன. அந்த மோதிர விரல்களை மேலும் நகரவிடாமல் வளைக்கரமொன்று தளர்வாகத் தடுக்கின்றது. ஆனந்தகான அமுதமழையாக அவனை அவள் வர்ஷிக்கிறாள். அதில் மூல்கித் திளைத்தவனில் இருந்து வியர்வையுடன் முத்துக்களும் சிதறுகின்றன. சிந்திய முத்துக்களை சேகரிக்க சிப்பியொன்று தயாராகின்றது. சத்தான கருவில் வித்தாக எதுவும் தீண்டியதில்லை இதுவரை. கல்லாகி நின்ற மருங்குகள் அனல்மேல் மொழுகாகி நெகிழ்கின்றன. வியர்வை மதுவில் மூழ்கிய கனியை கொஞ்சி கொத்தி சுவைக்கும் கிளியாக .......

                                                  அந்தப்புரத்தில் ஆனந்தலீலை அதிகாலைவரை நீடிக்கின்றது. நேரத்துடன் கதிரவன் எழுந்து கொள்கிறான். இன்னும் அவள் களைப்பில் சாந்தமான முகத்துடன் உறங்குகிறாள். இதழ்களில் சிறு புன்னகையும் சேர்ந்திருக்க அதை சிறிது ரசித்து விட்டு அவள் நெற்றியில் நெளிந்த முடியை கொஞ்சம் ஒதுக்கி சிறு முத்தமிட்டு எழுந்து கொள்கிறான். அவள் கட்டியிருந்த சேலை எட்டிக் கிடந்ததால் அந்த ஆறடி அழகுச்சிலையை தனது நாலுமுழத்தால் போர்த்திவிட்டு சறத்தை அணிந்து கொண்டு வெளியே வருகிறான். அதற்காகவே காத்திருந்த ஆச்சியும் இரண்டு கோப்பைகளில் முட்டைக் கோப்பி எடுத்து வந்து ஒன்றை அவனிடம் குடுத்து விட்டு மற்றதை எடுத்துக் கொண்டு அறைக்குள் வருகிறாள்.

--- பிள்ளை எழும்பி இதைக் குடித்து விட்டு படனை. ஆறப்போகுது சுட சுட குடி நல்லா இருக்கும் என்று சொல்லிவிட்டு வேட்டியால் போர்த்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் வெளியேறுகிறாள்.

                                        கதிரவன் எழுந்தவுடன் நிர்மலாவுக்கும் விழிப்பு வந்துவிட்டது. ஆனால் தான் இருந்த நிலையில் துணி எடுக்க அவகாசமில்லாததால் உறங்குவதுபோல் பாவனை செய்கிறாள். அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு தனது வேட்டியால் போர்த்திவிட்ட அந்தக் கரிசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்பு அவள் எழும்புவதற்குள் ஆச்சியும் உள்ளே வந்து விட்டா அதனால் மீண்டும் தூக்கம்போல் நடிப்பு. அவர்களது அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது ஒரு சரியான பாதுகாப்பான இடத்துக்கு தான் வந்திருப்பதாக உணர்கிறாள்......!

மலரும்.........!  🌼

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மலரும்.........!  🌼

வழமை போல இந்தமுறையும் எழுத்து நடை பின்னியெடுக்குது. அதிலையும் இந்த முறை அனுபவிச்சு எழுதி இருக்கிறியள். வேற லெவல்  :pokal:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணனைகள் நன்றாக இருந்தது. வாழ்த்துகள் சுவி அண்ணை, தொடருங்கள்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.