Jump to content

ஆசிய கிண்ண கிரிக்கெட் 2023 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு நாட்டில் இந்திய போட்டிகள்

Published By: VISHNU

24 MAR, 2023 | 01:46 PM
image

(நெவில் அன்தனி)

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதேவேளை, இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள்  பிரிதொரு நாட்டில் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் ஒரு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்துவதில் ஆரம்பித்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முரண்பாடு நிலவியது.

பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் தங்களால் பங்குபற்ற முடியாது என இந்தியாவும் இந்தியாவில் உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்பட்டால் தங்களால் பங்குபற்ற முடியாது என பாகிஸ்தானும் ஏட்டிக்குப்போட்டியாக அறிவித்திருந்தன.

இந்தப் பிரச்சினைக்கு முடிவுகாணும் வகையில் தற்போது இரண்டு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானைவிட வேறு எந்த நாடு நடத்தும் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், இலங்கை ஆகிய நாடுகளில் ஒன்று இந்தியா சம்பந்தப்பட்ட 5 போட்டிகளை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தும் இந்தப் போட்டிகளை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு போட்டிகளில் சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கவே செய்கிறது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் 6 நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் 6 அணிகளும் லீக் சுற்றில் இரண்டு குழுக்களில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 4 சுற்றில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். சுப்பர் 4 சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

இதன் பிரகாரம் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடுவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

இந் நிலையில் போட்டி அட்டவணையைத் தயாரிக்கவென ஒரு செயற்குழ நியமிக்கப்பட்டுள்ளது. பங்குபற்றும் நாடுகளுடன் அக் குழுவினர் கலந்துரையாடி விமானப் போக்குவரத்து, ஒளிப்பரப்பும் அட்டவணைகள் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்வர்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் ஒரு தொகுதிப் போட்டிகளை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்துவதற்கு கொள்கையளவில் இணக்கம் காணப்ப்பட்டுள்ளது. துபாயில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்திற்கு புரிம்பாக ஆசிய கிரிக்கெட் பேரவை உறுப்பினர்கள் கலந்துரையாடியபோதே கொள்கையளவில் இந்த இணக்கம் காணப்பட்டது.

https://www.virakesari.lk/article/151313

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.