Jump to content

"நாங்கள் இணைந்து வாழ கல்யாணம் தேவையில்லை, காதல் போதும்" - லிவ்-இன் உறவில் வாழும் கவிதா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"நாங்கள் இணைந்து வாழ கல்யாணம் தேவையில்லை, காதல் போதும்" - லிவ்-இன் உறவில் வாழும் கவிதா

கவிதா கஜேந்திரன்

பட மூலாதாரம்,KAVITHA GAJENDRAN

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 52 நிமிடங்களுக்கு முன்னர்

"என்னுடைய சுதந்திரத்தையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்தாத உறவும், வாழ்க்கையும் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த வகையில் 10 ஆண்டு காதல் தராத புரிதலையும் நெருக்கத்தையும் லிவ்-இன் வாழ்க்கை தந்துள்ளது" என்கிறார் கவிதா கஜேந்திரன்.

சென்னையைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்துப் பெண்ணான இவர் இடதுசாரி அரசியல் தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர். பழைமைவாதமும் ஆணாதிக்கமும் மிகுந்த, ஆண்-பெண் இடையே இயல்பாக அரும்பும் காதலைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் நமது சமூகத்தில், காதல் மண வாழ்க்கை விரும்பியபடி அமையாமல் போனதால் லிவிங் டுகெதர் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.

இடதுசாரி எழுத்தாளர் ராஜ சங்கீதனுடன் சுமார் 4 ஆண்டுகள் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்த கவிதா கஜேந்திரன் இடதுசாரி அரசியல் தளத்தில் இளம் வயது முதலே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்.

தனது அரசியல் தெளிவு, வாழ்க்கை குறித்த புரிதல் மட்டுமின்றி, காதல் , திருமணம், லிவிங் டுகெதர் வாழ்க்கை அனுபவங்ளையும் அதற்கு குடும்பத்தினர், உறவுகள் மட்டுமல்லாது இந்த சமூகம் எவ்வாறு எதிர்வினையாற்றியது என்பது குறித்தும் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். அவை அனைத்தும் இனி அவரது வார்த்தைகளில்...

 

வட சென்னையை பூர்வீகமாகக் கொண்டவராக என் அப்பாவின் குடும்பப் பின்னணி வசதியானதாக இருந்தாலும், அவரது வாழ்க்கை வசதியானதாக அமையவில்லை. எட்டாம் வகுப்பு வரை படித்திருந்த அவர் லாரி டிரைவராக பணிபுரிந்தார். அம்மா, தம்பி என்று எங்களுடையது சிறிய, நடுத்தர குடும்பம்.

கல்லூரிப் படிப்பை முடித்தபோதே நான் அரசியல் தெளிவு பெற்றுவிட்டேன். என் அரசியல் களத்தையும், இயங்கு தளத்தையும் தீர்மானித்துக் கொண்டுவிட்ட நான், அதற்கான என்னுடைய சுதந்திரத்தையும் இயங்கும் வெளியையும் எதற்காகவும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

எனக்கு 26 வயதாக இருக்கும் போது, வீட்டில் திருமணம் முடித்தே தீர வேண்டும் என்று என்னை நிர்பந்தித்தார்கள். உறவுகள், தெரிந்தவர்கள் மூலம் மட்டுமின்றி, மேட்ரிமோனி மூலமாகவும் வரன் பார்த்தார்கள். ஆனால், எனக்கோ யார், எப்படிப்பட்டவர் என்று தெரியாத ஒருவரை எப்படித் திருமணம் செய்வது என்ற எண்ணம் இருந்தது.

என் நட்பு வட்டத்தில் 10 ஆண்டுக்கும் மேலாக இருந்தவரும் கிட்டத்தட்ட அதே எண்ணத்துடன்தான் இருந்தார். வெறும் நட்பு மட்டுமல்ல, எங்களுக்குள் காதலும் இருந்தது. ஒரே பள்ளி, கல்லூரியில் பழகிய எங்களுக்கு ஒருவரை ஒருவர் நன்கு தெரியும். காதலில் இருந்த நாங்கள் இருவரும் பிரிந்திருந்த கால கட்டம் அது. ஆனாலும்கூட எங்களிடைய ஆரோக்கியமான நட்பு தொடரவே செய்தது.

ஒரே எண்ணத்துடன் இருந்த நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்யக் கூடாது என்று நண்பர்கள் வற்புறுத்தினர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். எங்கள் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அந்த மணவாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை. எங்களுக்குள் புரிதல் இருந்தாலும், திருமணம் என்ற அமைப்பில் குடும்பம், உறவுகள், சமுகத்தின் தலையீடுகள் அதிகம் இருந்தன.

இவையே, என் சுதந்திரத்தையும் என் இயக்கத்தையும் தடுத்தன. குடும்ப அமைப்பின் அழுத்தத்தால் ஒரு கட்டத்தில் என் கணவரும் கட்டுப்பாடுகளை விதிக்க முற்பட்டதால் இருவருக்கும் இடையே கருத்து முரண்கள் எழுந்தன.

கவிதா கஜேந்திரன்

பட மூலாதாரம்,KAVITHA GAJENDRAN

இருவரும் சுமூகமாகப் பிரிவது என தீர்மானித்தோம். நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றோம். மூன்றே ஆண்டுகளில் எங்கள் மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது. என்னுடைய சான்றிதழ்கள், சில ஆடைகள், 1,500 ரூபாய் பணத்துடன் வீட்டில் இருந்து வெளியேறினேன்.

முதலில் ஒரு மாதம் என்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருந்த நான், பின்னர் சில பெண் நட்புகளுடன் சேர்ந்து அபார்ட்மென்ட்டில் வீடு எடுத்து தங்கினேன். சென்னையில் வசித்தாலும் பெற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் தனித்தே வாழ்ந்தேன். சுமார் 2 ஆண்டு காலம் நீடித்த இந்த வாழ்க்கையே நான் யார் என்பதைப் புரிய வைத்தது.

எனக்கு விருப்பமான இடதுசாரி அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த எனக்கு அதே தளத்தில் இயங்கிய, ஒத்த கருத்து கொண்ட எழுத்தாளர் ராஜசங்கீதனின் அறிமுகம் சமூக ஊடகம் வாயிலாகக் கிடைத்தது.

பெரியார் பிறந்தநாளன்று இருவரும் முதன் முறையாக நேரில் சந்தித்துக் கொண்டோம். அது முதல் சுமார் ஒரு வார காலம் நிறைய பேசினோம். அதன் பிறகு 2 - 3 மாதங்கள் வட இந்தியாவில் பயணம், பிரசாரம் என்று எனக்குக் கழிந்தது. அப்போதும் அவ்வப்போது அவர் நேரில் வந்து சந்தித்தார்.

இருவரும் ஒரே அரசியல் சித்தாந்த பின்புலம் கொண்டிருந்ததால் புரிதல் எளிதில் நிகழ்ந்தது. நான் தான் முதலில் விருப்பத்தைத் தெரியப்படுத்தினேன். முந்தைய கசப்பான அனுபவங்களால் கல்யாணம் வேண்டாம், அது தேவைப்படவில்லை என்றும் அவரிடம் நான் தெளிவுபடுத்தினேன்.

சுமார் 4 ஆண்டுகள் லிவிங் டுகெதர் முறையில் விரும்பியபடி வாழ்க்கையைச் செலுத்தினோம். நாங்கள் சேர்ந்து வாழ காதல் இருந்தது. ஆனால் திருமணம் தேவைப்படவில்லை.

பிறகு, பாஸ்போர்ட், விசா தேவைகளை முன்னிட்டு கடந்த ஆண்டு பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். இது எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை எந்தவிதத்திலும் மாற்றிவிடவில்லை.

கவிதா கஜேந்திரன்

பட மூலாதாரம்,KAVITHA GAJENDRAN

திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தது ஏன்?

திருமணம் என்பது பெண்களை ஒடுக்கும் இடமாகவே இருக்கிறது. ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும் என்று அது வரையறுக்கிறது. திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றுமே, இந்த ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணின் காலை கட்டி அதல பாதாளத்தில் இறக்குவதாகவே அமைந்துள்ளன.

ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒட்டுமொத்த குடும்பமுமே கட்டுப்படுத்த அல்லது தீர்மானிக்க முயல்கிறது. ஆயிரம் பேர் முன்பு கோலாகலமாக நடந்தேறும் திருமணங்கள், நம்மைச் சேர்ந்து வாழ அழுத்தம் கொடுக்கின்றன; நிர்பந்திக்கின்றன. இதில் நமக்கான வாழ்வு காணாமல் போய் விடுகிறது. நான் மனுஷியாக இயங்குவதை அது தடுக்கிறது.

ஆண்-பெண் சேர்ந்து வாழும் வாழ்க்கையை ஒரு கயிறோ, பேப்பரோ, கையெழுத்தோ தீர்மானித்துவிட முடியாது. வயது வந்த ஆண்-பெண் இடையே நல்லதொரு உரையாடல் நிகழ வேண்டும். இருவருக்கும் இடையிலான ஆத்மார்த்தமான புரிதலும், நெருக்கமுமே அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.

'ஓ பக்கங்கள்' என்ற எழுத்தாளர் ஞானியின் படைப்பால் கவரப்பட்டு, அவருடைய பரீக்ஷா நாடக அமைப்பில் இணைந்து பணியாற்றினேன். 10 ஆண்டுகள் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்த பிறகு வெறும் சம்பிரதாயத்திற்காக மாலை மாற்றிக் கொண்டவர் அவர். அவரது எழுத்துகளும் வாழ்க்கை முறையும் என்னில் தாக்கத்தை ஏற்படுத்தின.

கல்லூரி முடித்ததுமே அரசியல் தெளிவு பெற்றுவிட்ட நான், எனக்கு விருப்பமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள திருமணம் என்ற அமைப்பு தடைக்கல்லாக இருப்பதை உணர்ந்து கொண்டேன். என்னுடைய சுதந்திரத்திற்கும், தடையற்ற இயக்கத்திற்கும் சரியான புரிதலுடன் கூடிய பார்ட்னருடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.

கவிதா கஜேந்திரன்

பட மூலாதாரம்,KAVITHA GAJENDRAN

ஒதுக்கி வைத்த உறவுகளும் நட்புகளும்

முன்னாள் கணவரை 10 ஆண்டு காலம் காதலித்திருக்கிறேன். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. அதற்காக, வீட்டிற்குள் நிறைய சண்டை நடந்திருக்கிறது. குடும்பத்தினர், உறவினர்கள் கூடி பஞ்சாயத்து செய்துள்ளார்கள். நான் பலமுறை அடி வாங்கியிருக்கிறேன்.

அப்போதெல்லாம் என் அம்மாவுடன் அமர்ந்து நிறைய பேசுவேன். காதல் தப்பில்லை என்று அவருக்குப் புரிய வைத்தேன். அது முதல் என் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களையும் அம்மாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். என் காதல், திருமணம், மணமுறிவு என அனைத்தையும் என் அம்மா அறிவார். நான் பட்ட கஷ்டங்களை அவர் அறிந்து கொண்டிருந்தார். என்னையும் அவர் நன்றாகப் புரிந்து கொண்டார்.

தனியாக இருக்கவும் முடியாது, அதேநேரத்தில் திருமணம் செய்து கொள்ளவும் முடியாது என்பதை அவரிடம் புரிய வைத்தேன். நம் வாழ்க்கையில் யார் முக்கியம், யார் நம்முடன் இருக்கப் போகிறார்கள் என்பது குறித்து அவரிடம் விளக்கினேன்.

நான் விரும்பியபடி மேற்படிப்பைத் தொடர விடாததாலும், என் மண வாழ்க்கை வெற்றிகரமாக அமையாததாலும் வருத்தத்தில் இருந்த என் அம்மா, "அவளுக்குப் பிடித்த வாழ்க்கையை நல்ல ஒழுக்கத்தோட நடத்துறா" என்று கூறி எனக்கு ஆதரவாக இருந்தார்.

என் அம்மா மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுமே குழந்தைகளின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டவர்கள்தான். ஆனால், உறவுகளும் சமூகமும் கொடுக்கும் அழுத்தமே அவர்களை வாய் மூடி மௌனமாக இருக்கச் செய்துவிடுகின்றன.

ஆனால் என் அம்மாவோ துணிச்சலாக எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் இப்போதும் என்னுடனே இருக்கிறார். என்னுடை லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த என் தம்பி, இப்போது என்னைப் புரிந்துகொண்டு ஆதரவாக இருக்கிறான்.

உறவுகளும், நட்புகளும் என் முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை ஆதரித்தமைக்காக, என் அம்மாவையும் அவர்கள் புறக்கணித்தார்கள். அவருடன் பேசுவதைத் தவிர்த்தார்கள். அது மட்டுமே என் அம்மாவுக்கு வருத்தமாக இருந்தது. என் வீட்டில் இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக என் அம்மாவை அவரது நெருங்கிய உறவினர்கூட பார்க்க மறுத்துவிட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது.

லிவிங் டுகெதர் தம்பதியராக நாங்கள் வீடு பார்க்கச் செல்கையில் எந்தவொரு புறக்கணிப்பையும் சந்திக்கவில்லை. அதுகுறித்துப் பல விஷயங்களைக் கேள்விப்பட்டிருந்தாலும், என் நண்பர் ஒருவருக்கே மோசமான அனுபவம் ஏற்பட்டிருந்தாலும்கூட எனக்கு அதுபோன்ற அனுபவம் இல்லை. நாங்கள் தம்பதியராகச் சென்று வீடு கேட்டபோது யாரும் மறுப்பு சொல்லவில்லை.

10 ஆண்டு கால காதல் தராத புரிதலை லிவிங் டுகெதர் உறவு கொடுத்தது

மண வாழ்க்கையில் என்னுடைய இயக்கத்தைத் தடை செய்வதாக குடும்ப அமைப்பு இருந்தது. ஒரு பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சமூக அழுத்தம் என் மீது திணிக்கப்பட்டது. குடும்பம், உறவுகள், சமூகத்தின் அழுத்தத்தைத் தாண்டி என்னுடைய கணவரும் என்னுடைய சுதந்திரமான இயக்கத்திற்குத் தடை போடத் தொடங்கியதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மனிதர்கள் எப்போதும் இப்படித்தான் இருப்பார்கள் என்று கணிக்க முடியாது அல்லவா!

கவிதா கஜேந்திரன்

பட மூலாதாரம்,KAVITHA GAJENDRAN

ஆகவே, இது இனிமேல் சரிப்பட்டு வராது, இந்தக் கட்டத்தைக் கடந்தே தீர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் எந்தவொரு கசப்புணர்வும் இல்லை. ஆனால், எங்களுக்குள் ஒத்துவரவில்லை என்பதே பிரிவுக்குக் காரணமாகிவிட்டது.

நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றதும், இருவரும் நேரே ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டே வந்தோம். இன்றும் நல்ல நண்பர்களாகவே தொடர்கிறோம்.

லிவிங் டுகெதர் உறவில் புரிதலுடன் கூடிய இணை கிடைப்பது கடினம். ஆனால், எனக்கு அப்படிப்பட்ட ஓர் இணையர் கிடைத்தார். என்னுடைய சுதந்திரம், சுய மரியாதை, அரசியல் சித்தாந்தம் ஆகியவை குறித்துப் புரிந்து கொண்டவராக இருக்கிறார்.

எனக்கான இயங்கு வெளியைத் தடை செய்யாதவராக அவர் உள்ளார். இதுவே எங்களுக்குள் ஆத்மார்த்தமான அன்பையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது. "We have to grow old together(நாம் ஒன்றாகவே இறுதிவரை வாழவேண்டும்)" என்று அவரிடம் நான் கூறினேன்.

இத்தகைய புரிதலை 10 ஆண்டு காதல் எனக்குத் தரவில்லை. ஆனால், லிவிங் டுகெதர்கல் சேர்ந்து வாழும்போது கிடைத்தது.

லிவிங் டுகெதர் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய என்ன செய்யவேண்டும்?

லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இணைந்து வாழும் ஆண்-பெண் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பது அவசியம். இருவருமே தனிப்பட்ட முறையில் பொருளாதார சுதந்திரத்துடன் இருக்க வேண்டியதும் அவசியம். குறிப்பாக, பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கண்டிப்பாகத் தேவை. யாரையும் நம்பியிருக்காமல் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு அவர் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

இதனால்தான், லிவிங் டுகெதர் வாழ்க்கை என்பது நமது சமூகத்தில் மேல்தட்டு வர்க்கத்தினருக்கே உரித்தான ஒன்றாக இருந்து வந்தது. என்னைப் பொருத்தவரை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், என்னுடைய வேலை இப்படித்தான் இருக்கப் போகிறது.

கவிதா கஜேந்திரன்

பட மூலாதாரம்,KAVITHA GAJENDRAN

நான் யாரையும் சார்ந்திருக்கவில்லை என்பதில் தெளிவாக இருந்தேன். அதுவே, என்னை நம்பிக்கையுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை முன்னெடுக்க உதவியது.

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையை நம் சமூகம் மோசமான ஒன்றாகவே அணுகுகிறது. மேற்கத்திய கலாசாரம் என்று கூறி அதற்கு எதிராக கலாசார காவலர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் கிளம்பி இருக்கிறார்கள்.

ஆனால், குடும்பம் என்ற அமைப்பின் வாயிலாகவே சாதியும் மதமும் தங்களை நிறுவிக் கொள்கின்றன. அந்தக் குடும்பத்திற்கு பெண்ணே அடிப்படையாக இருக்கிறாள். அவளை கற்பு, கலாசாரம் என்று கட்டுப்படுத்துவதன் மூலம் குடும்பமும் அதன் வாயிலாக சாதி, மதம் ஆகியவையும் நிலைபெற்றிருக்க வேண்டும் என்று பிற்போக்குவாதிகள் விரும்புகிறார்கள்.

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை அந்தக் குடும்ப அமைப்பே வேண்டாம் என்று ஒதுக்கி விடுவதால், எங்கே தங்களது இருப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் காரணமாகவே அவர்கள் இதை எதிர்க்கிறார்கள்.

என்னுடைய இளம் வயதில் காதலுக்காகவே நான் பெரிய அளவில் போராட வேண்டியிருந்தது. என் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நெருங்கிய உறவினர்கள் பலருமே பின்னாளில் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒன்றிரண்டு துயர நிகழ்வுகள் நடந்தேறினாலும், ஒப்பீட்டளவில் காதல் திருமணம் இன்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே மாறி வருகிறது.

அதேபோல், லிவிங் டுகெதர் வாழ்க்கையும்கூட ஏற்றுக் கொள்ளப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை. லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்த என்னை இந்த சமூகம் அடங்காத ஆளாகவே பார்த்தது. கல்யாணம் செய்தவர்களை மட்டுமே பெண்ணாகப் பார்க்கும் பார்வை இருக்கிறது.

இன்று பிறந்ததுமே செல்போனை கையில் எடுத்துவிடும் குழந்தைகளுக்கு எல்லாமே வெகு சீக்கிரத்தில் கிடைக்கிறது. 20 வயதிற்குள்ளாகவே, உலகம் குறித்த புரிதலும், வாழ்க்கையைப் பற்றிய தெளிவும் அவர்களுக்கு வந்துவிடுகிறது. அதனால், லிவிங் டுகெதர் வாழ்க்கையை அவர்கள் தீண்டத்தகாத ஒன்றாகப் பார்க்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

https://www.bbc.com/tamil/articles/cq5z2071r22o

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி......நாய், பூனை, மிருகங்கள், பறவைகள் எல்லாம் மோதிரம் மாற்றி சத்தியகடதாசி முடித்துக்கொண்டா வாழ்கை நடத்துகின்றன? :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த முடிவு. சிறப்பான அனுபவப் பகிர்வு. வாழ்த்துகள். 

   குடும்ப, உறவு அமைப்புகள் பெரும்பாலும் எல்லைக்கோடுகளை மதிப்பதில்லை. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதும்,  ஒருவருக்கு எதிர்பாராத இன்னல் வரும்போது இயன்றவரை மற்றவர்கள் தாங்கிப் பிடிப்பதுமே உறவுமுறை; மற்றபடி ஒருவர் வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும் என்று மற்றவர்கள் தீர்மானிப்பதற்காக அல்ல. நம் வாழ்க்கை தொடர்பான முடிவுகளை நம் மீதே திணிக்கும் உறவுகளைத் தூக்கி எறிவதே அமைதியான வாழ்க்கைக்கு வழிகோலும்.

       மேலும் சமூகக் கட்டமைப்பிற்காக முற்றிலும் பொருந்தாத திருமண பந்தத்தில் வாழ்ந்து தொலைப்பது கூட யாருக்கும் பலன் தராது.   

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

நாங்கள் இணைந்து வாழ கல்யாணம் தேவையில்லை, காதல் போதும்"

மேற்கு நாடுகளை விட இந்தியாவில் இந்த எண்ணங்கள் இளைஞோரிடம் கூடிக் கொண்டே போகிறது என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடெல்லாம் சென்று சம்பாதித்து - பணபலத்தை வைத்து ஒரு  பெண்ணை திருமணம் செய்து - குழந்தைக்கு தகப்பனாகி - சம்பாத்தியம் நோக்கி ஓடி - மனைவி வேறோர் உறவுக்கு செலகிறாள் - விவகாரத்து  - ஜீவனாம்சம் - என்கிற பெயரில் கனவனின் சம்பாத்தியம் சுரண்டப்படுகிறது - 

சரி, தவறு என்பதற்கப்பால் திருமணம் என்கிற தோற்றுப்போன அமைப்பை நோக்கி ஆண் வர்க்கம் தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதிலிருந்து விடுபட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. 

ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் குறை சொல்வதனால் எந்த பயனும் இல்லை. 

ஒருவேளை திருமணம் செய்துகொண்டால், வரதட்சணை வாங்காமல் - எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்து கொண்டு -  எதிர்காலத்தில் இந்த உறவு சலித்து வேறோர் உறவுக்கு செல்வதென்றால் ஜீவனாம்சம் என்கிற பெயரில் சம்பாத்தியத்தை சுரண்டாமல் நேர்மையாக பிரிய வேண்டுமென கையெழுத்து ஒப்பந்தம் செய்து கொண்டுதான் வாழ வேண்டும்.

எப்படியும் இன்னொருத்தியை/இன்னொருத்தனை வைத்துக்கொள்வார்கள் என அப்பட்டமாக  தெரிந்தும் திருமணம் செய்துகொள்வது நல்லதற்கல்ல. சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைத்துக்கொண்டு, வலுவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும் சேமித்துக்கொண்டு ஜாலியாக வாழ்வதுதான் சரி...

- Rama Lingam

பதிவுத் திருமணம் செய்வது ஆணுக்கு ஆபத்தானது என்பதைத் தவிர ராமலிங்கம் சொல்லும் வேறு கருத்துக்களை ஏற்கிறேன். முதலில் குடும்பநல சட்டம் துவங்கி பெண்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு சட்டம், 498A ஆகியவை ஒழிய வேண்டும் அல்லது பாலின சமத்துவம் கொண்டவையாக மாற வேண்டும். கூடுதலாக, மனைவி கணவனை அடித்தாலோ மனதளவில் துன்புறுத்தினாலோ வழக்குத் தொடுக்க ஒரு சட்டம் வர வேண்டும். வலுவான ஆதாரம் இல்லாமல் வரதட்சிணை தடுப்பு சட்டத்தில் குற்றத்தை பதிவு பண்ணுவதைத் தடுக்கும் சட்டத்திருத்தம் வர வேண்டும்.

இந்த திருமண சட்டம் வரும் முன்பு நம் உலகம் (ஆண்களின் உலகமே) எவ்வளவோ நியாயமாக அழகாக இருந்தது. இந்த நேரு குடும்பத்தினர் வந்து அதை கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டனர்! அதன் பலனையே பய்ஜூ போன்று பலரும் அனுபவித்துள்ளார்கள்!

- ஆர். அபிலாஷ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே வரியில் சொல்வதென்றால் “மெண்டல்ஸ்” - பைத்தியங்கள்! 😡🤫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் செய்வதற்கு பணம் பெண்ணிடம் சீதனம் என்று கொள்ளை அடிக்கும் நாடுகளில் லிவிங் டுகெதர் புதுமையாக பார்க்கபடுகின்றது. மேற்குநாடுகளில் இந்தியர் இலங்கையினரும் கூட இந்த முறையில் வாழ்கின்றார்கள்.

On 27/3/2023 at 01:47, சுப.சோமசுந்தரம் said:

சிறந்த முடிவு. சிறப்பான அனுபவப் பகிர்வு. வாழ்த்துகள். 

   குடும்ப, உறவு அமைப்புகள் பெரும்பாலும் எல்லைக்கோடுகளை மதிப்பதில்லை. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதும்,  ஒருவருக்கு எதிர்பாராத இன்னல் வரும்போது இயன்றவரை மற்றவர்கள் தாங்கிப் பிடிப்பதுமே உறவுமுறை; மற்றபடி ஒருவர் வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும் என்று மற்றவர்கள் தீர்மானிப்பதற்காக அல்ல. நம் வாழ்க்கை தொடர்பான முடிவுகளை நம் மீதே திணிக்கும் உறவுகளைத் தூக்கி எறிவதே அமைதியான வாழ்க்கைக்கு வழிகோலும்.

       மேலும் சமூகக் கட்டமைப்பிற்காக முற்றிலும் பொருந்தாத திருமண பந்தத்தில் வாழ்ந்து தொலைப்பது கூட யாருக்கும் பலன் தராது.   

நல்லதொரு கருத்து அய்யா.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிவ்-இன் ஜோடிகளின் பதிவேடு அவசியமா? பெண்ணின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?

லிவ்-இன் தம்பதியர் பதிவேடு அவசியமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 21 மார்ச் 2023

லிவ்-இன் ஜோடிகளின் பதிவேட்டை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று புதிய விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. அவ்வாறான பதிவேடு அவசியமா? லிவ்-இன் உறவில் பெண்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லையா? அந்த உறவில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

காலத்திற்கேற்ப மாறி வரும் கலாசார சூழலில், நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் தாண்டி இன்று லிவ்-இன் தம்பதியர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

திருமணம், குடும்பம் போன்றவற்றில் கிடைக்காத சுதந்திரம் 'லிவிங் டுகெதர்' வாழ்க்கையில் கிடைப்பதாக அதில் இருக்கும் ஆண் - பெண் ஆகிய இரு பாலருமே எண்ணுகின்றனர். இந்த சுதந்திரமே லிவ்-இன் வாழ்க்கையின் அடிப்படை.

90-களின் மத்தியில் காதலை வெளிப்படுத்தக் கூட தயங்கிய இளைய சமூகம் இன்று மேற்கத்திய கலாசாரமான 'டேட்டிங்', 'லிவிங் டுகெதர்' வரை வந்து விட்டது என்றால் அது நவீன மாற்றமா அல்லது கலாசார சீரழிவா? என்று பட்டிமன்றமே நடக்கிறது.

 

கலாசார காவலர்கள் என்று தங்களை கருதிக் கொள்ளும் ஒரு பிரிவினர், "பிடித்தால் வாழ்கிறோம், இல்லை என்றால் பிரிந்து செல்கிறோம்" என்ற பாணியிலான வாழ்க்கை முறை நமது கலாசாரத்திற்கு ஏற்றதா? என கேள்வி எழுப்புகிறார்கள்.

இவ்வாறான விவாதம் தொடந்தாலும், திருமணமாகாத 'மேஜர்' இருவர் 'லிவிங் டுகெதர்' முறையில் வாழ சட்ட அங்கீகாரம் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. மாறி வரும் வாழ்க்கை சூழலில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் பலரும் இருக்கின்றனர்.

திருமண உறவைப் போலவே, அவ்வாறான உறவில் எழும் முரண்பாடுகளால் சில நேரங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறுவதும் உண்டு. அதற்கான உதாரணம் தான், டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு.

இதுபோன்ற நிகழ்வுகளை குறிப்பிட்டு, லிவிங் டுகெதர் ஜோடிகளின் பதிவேட்டை உருவாக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு, விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

"உடன்பாடே இல்லை"

இதுகுறித்து எழுத்தாளரும் பெண்ணியலாளருமான நிவேதிதா லூயிஸிடம் கேட்ட போது, "லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் விவரங்களை பராமரிக்கும் பதிவேட்டை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எனக்கு உடன்பாடே இல்லை. அதற்குத்தான் பதிவுத் திருமணம் என்ற ஏற்பாடு இருக்கிறதே. பிறகு எதற்கு லிவ்-இன் உறவில் ஒருவர் இருக்க வேண்டும்?" என்று பதில் அளித்தார்.

"திருமணம், குடும்பம் என்பது போன்ற சமூக ஏற்பாடுகள் பிடிக்காதவர்கள் தானே லிவ்-இன் உறவில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களது விவரங்களை அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்பதில் நியாயமே இல்லை. அது மட்டுமின்றி, சமூகத்தில் தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ பிரச்னைகள் இருக்க லிவ்-இன் உறவாளர்கள் பட்டியலை பராமரிப்பதா அரசின் வேலை? அரசாங்கம் கல்யாண தரகர் வேலையையும் செய்ய வேண்டுமா என்ன?

இந்த பதிவேடு என்பதே ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பது போன்றது தான். ஒருவரின் படுக்கையை அறையை எட்டிப் பார்ப்பதற்கு ஒப்பானது இது. லிவ்-இன் உறவாளர்களின் பதிவேடு என்றால் அதில் என்னென்ன விவரங்கள் சேகரிக்கப்படும்? ஒருவரின் கல்வித் தகுதி, ஊதியம், பொருளாதார நிலை போன்ற விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று மனுதாரர் விரும்புகிறாரா? அந்த விவரங்களை வைத்துக் கொண்டு அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?" என்று அவர் மேலும் கூறினார்.

லிவ்-இன் தம்பதியர் பதிவேடு அவசியமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

லிவ்-இன் உறவில் பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளதா?

லிவ்-இன் உறவில் உள்ள பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை நிவேதிதா லூயிஸிடம் முன்வைத்தோம். "லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் பலரும் கூட பிற்காலத்தில் வெளிநாட்டு வேலை, விசா போன்ற தேவைகள் ஏற்படும் போது பதிவுத் திருமணம் செய்து கொள்வதும் நடக்கவே செய்கிறது. பெண்கள் பொதுவாகவே பாதுகாப்பு நாடக் கூடியவர்கள். எந்தவொரு உறவிலும் ஈடுபடும் முன்பு, சம்பந்தப்பட்டவர் குறித்த விவரங்களை தெரிந்து கொண்ட பிறகே பெண்கள் அந்த உறவை தொடங்குவார்கள்.

பாதுகாப்பு என்ற அம்சத்தைப் பொருத்தவரை, மனுதாரரைக் காட்டிலும் லிவ்-இன் உறவில் ஈடுபடும் பெண்களுக்கு அதிக அக்கறை உண்டு. அதுதவிர, லிவ்-இன் உறவில் சேர்ந்து வாழ்வதும், திருமண வாழ்க்கைக்கு ஒப்பானதுதான், திருமணம் என்று மட்டுமல்லாது ஒரே வீட்டில் சம்மதத்துடன் லிவ் இன் உறவில் இணைந்து வாழும் பெண்களுக்கும் குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம் பொருந்தும்." என்று அவர் பதிலளித்தார்.

லிவ்-இன் உறவில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எப்படி?

ஷ்ரத்தா வாக்கர் கொலை போன்ற துயர நிகழ்வுகளைக் குறிப்பிட்டு பெண்களின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த கேள்வி எழுப்பிய போது, "இதையெல்லாம் தாண்டி கொலை, பாலியல் துன்புறுத்தல் போன்ற மோசமான நிகழ்வுகள் நடந்தால் அதுகுறித்து துப்பு துலக்க வேண்டியது காவல்துறையின் வேலை. பாரம்பரியமாக நடக்கும் திருமணங்களில் அதுபோன்ற குற்றங்கள் நடப்பதில்லையா? அந்த வழக்குகளைப் போலவே இதையும் சட்ட அமலாக்க அமைப்புகள் கையாள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசுப் பதிவேட்டில் சேகரிக்கப்படும் தகவல்களே, லிவ்-இன் உறவில் உள்ள ஆண்-பெண் ஆகிய இருவருக்கும் ஆபத்தாக முடியும் வாய்ப்புகளும் அதிகம்" என்று அவர் எச்சரிக்கவும் தவறவில்லை.

லிவ்-இன் தம்பதியர் பதிவேடு அவசியமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உச்சநீதிமன்றத்தில் தாக்கலான பொதுநல வழக்கு என்ன?

லிவிங் டுகெதர் தம்பதியர் பதிவேட்டை உருவாக்கவும், அதற்கான விதிகளை உருவாக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மம்தா ராணி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

"லிவ்-இன் உறவில் உள்ள ஆண், பெண், அதன் விளைவாக பிறக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஆனால், லிவ்-இன் உறவை வரையறுக்க விதிகளோ, வழிகாட்டும் நெறிமுறைகளோ இல்லை. லிவ்-இன் உறவுகளில் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் கணிசமாக அதிகரித்துவிட்டது. ஷ்ரத்தா வாக்கர் வழக்கு போன்ற சில நிகழ்வுகளில் பெண்கள் தங்களது லிவ்-இன் இணையரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

லிவிங் டுகெதர் உறவை பதிவு செய்வதன் மூலம், லிவ்-இன் உறவில் உள்ள இருவருமே ஒருவர் மற்றொருவர் குறித்த மணவாழ்க்கை நிலை, குற்றப் பின்னணி உள்ளிட்ட முழு விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். லிவ்-இன் உறவுக்கு சட்ட விதிகளை வகுக்கவும், லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக அறியவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய லிவிங் டுகெதர் தம்பதியர் பதிவேட்டை உருவாக்க வேண்டும். அதில் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்" என்று அந்த மனுவில் மம்தா ராணி குறிப்பிட்டிருந்தார்.

லிவ்-இன் தம்பதியர் பதிவேடு அவசியமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்டிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அவசர கதியில் பதிவு செய்யப்பட்ட கண்மூடித்தனமான வழக்கு என்று சாடிய நீதிபதிகள், "என்ன இது? இங்கு எதை வேண்டுமானாலும் கொண்டு வருவதா? யாரிடம் பதிவு செய்வது? மத்திய அரசிடமா? லிவ்-இன் உறவு குறித்து மத்திய அரசு என்ன செய்ய முடியும்? இதன் மூலம் லிவிங் டுகெதர் தம்பதியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கிறீர்களா? அல்லது லிவிங் டுகெதர் உறவில் அவர்கள் ஈடுபடுவதை தடுக்க விரும்புகிறீர்களா?" கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

https://www.bbc.com/tamil/articles/cpvqyx2r3d4o

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுயநலத்தின் உச்சம் தான் இது.

பிரிட்டனில், மிக சிறந்த கல்வியாளர்கள் என்று முதலில், சீனர்களையும், பின்னர் இந்தியர்களையும் சொல்வார்கள். 

வெள்ளையின மாணவர்கள் அடுத்ததாக தான் வருகிறார்கள்.

உலகின் மிகசிறந்த கண்டுபிடிப்பாளர்களையும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் உருவாக்கிய நாடு.

காரணம். குடும்ப உறவுகளில் அண்மையில் நடக்கும் சீரழிவு.

லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து, பிள்ளைகளை பெற்று விட்டு இருவருமே நழுவிச்செல்ல பிள்ளைகள், எப்படி படிக்க முடியும்.

அதனாலேயே வெள்ளைகள் பின் தங்குகிறார்கள். சீனர்கள், இந்தியர்கள் முன்னேறிச்செல்ல, உறுதியான குடும்ப அமைப்பு என்று ஒத்துக்கொள்கிறார்கள் பிரிட்டிஷ் கல்வியாளர்கள்.

ஆக, இந்த முறை ஓக்கேதான் குழந்தைகள் பெறாதவரை. பெறுவதனால், குழைந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.