Jump to content

காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் (KKS) இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29, 2023 முதல் தொடங்கும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கே.கே.எஸ் துறைமுகத்துக்கு ஏப்ரல் 29-ம் தேதி புதிய படகு சேவையின் முதல் கப்பல் போக்குவரத்து வரும் என்றார். 

அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

படகு சேவை உரிமையாளர்களின் கூற்றுப்படி, ஒரு பயணத்திற்கு ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படும் மற்றும் 100 கிலோ சாமான்கள் அனுமதிக்கப்படும். 
 
ஒரு படகு ஒரு நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து KKS க்கு சுமார் 4 மணி நேரம் பயணம் செய்யும் மற்றும் முதல் கட்ட நடவடிக்கைகளின் போது பகல் நேர செயல்பாடுகள் மட்டுமே நடத்தப்படும்.

படகுச் சேவை திறக்கப்பட்டுள்ளதால், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு தொழில்முனைவோரும் இந்த வாய்ப்பில் இணைய முடியும் என்றும் அமைச்சர் கூறினார். 

KKS துறைமுகத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இந்த கட்டுமானங்களுக்கு தற்போது இந்தியாவினால் வழங்கப்படும் கடன் மானிய வசதி போதுமானதாக இல்லாததால், இந்தியன் எக்சிம் வங்கியிடம் கூடுதலாக 16 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதி கோரப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கூறினார். (அஜித் சிறிவர்தன)

https://www.dailymirror.lk/breaking_news/Karaikkal-KKS-Ferry-service-to-commence-on-April-29-Minister/108-256557#.ZCAmve8qry4.whatsapp

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

படகு சேவை உரிமையாளர்களின் கூற்றுப்படி, ஒரு பயணத்திற்கு ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படும் மற்றும் 100 கிலோ சாமான்கள் அனுமதிக்கப்படும்

சரக்கும் அடக்கமா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல்

இதன்படி..வடக்கும் கிழக்கும் இந்தியாவுடன் ..இணைந்து விட்டது...கப்பலும் பிளே னும் ஓடினால்  யாரு சிங்கள ஏரியாவாலை கொழும்புக்கு போய்  கஸ்டப்படப்போகினம்...சாட்டோடை சாட்டு புதுப்படமும் பார்த்துப் போட்டு வரலாம்...இந்த ஜெல்தலை காலை ஆட்டிக்கொண்டு முகட்டைப் பார்த்துக்கொண்டு கிடக்க வேண்டியதுதான்..கப்பலோடை இனி  மானாட மயிலாட தொடங்கி சகலதும் வரும்..கெதியிலை கப்பலை ஓட விடுங்கப்பா..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு வடகிழக்கு 83 கலவர  விதைவகளுக்கு குடும்ப சுமையை குறைத்தது இந்த வழி  பயணம்களே பார்ப்பம் இம்முறை கஞ்சா வருதா கான்ஸிபுரம்  புடவை வருதா என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு ஏப்ரல் 29 முதல் பயணிகள் கப்பல் சேவை - கட்டண விபரங்கள் !

Published By: Digital Desk 5

27 Mar, 2023 | 10:59 AM
image

இந்தியாவின் பாண்டிச்சேரி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு முதலாவது பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி வருகை தர உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

பயணிகள் படகுச் சேவையினை ஆரம்பிப்பது தொடர்பாக அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சேவையினை ஆரம்பிக்கும்போது காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் கீழ் புதிய பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்படுகிறது. 

இதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை 144 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொடுத்துள்ளதுடன் அதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படுகிறது.

தற்போது இலங்கை கடற்படையினரால் முனையத்தின் ஆரம்ப நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு ஏப்ரல் மாதம் 02ஆவது வாரத்துக்குள் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு இலங்கை துறைமுக அதிகார சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதால் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள எந்தவொரு வியாபாரிக்கும் இந்த சேவையுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இச்சேவைக்கு மேலதிகமாக காங்கேசன்துறை துறைமுகம் விரிவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இதற்காக தற்போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கடன் தொகை போதுமானதாக இல்லை என்பதால் இன்னும் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை இந்திய எக்சிம் வங்கியிடமிருந்து கோரப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பயணிகள் படகு உரிமையாளர்கள் ஒரு பயண வழிக்கு பிரயாணி ஒருவரிடம் 50டொலர்கள் அறவிடுவதுடன் 100கிலோகிராம் பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்று குறிப்பிட்டனர்.

கப்பல் சேவையினூடாக ஒரு தடவைக்கு 150 பயணிகளை கொண்டு செல்ல முடியும் என்றும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை பயணிப்பதற்கு 04 மணித்தியாலங்கள் எடுப்பதுடன், முதலில் பகல் வேளையில் மட்டுமே பயணச் செயற்பாடுகளை நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

 

https://www.virakesari.lk/article/151465

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/3/2023 at 22:25, நியாயத்தை கதைப்போம் said:

படகில் பயம் இல்லாமல் நம்பி ஏறலாமோ. 

நம்பி ஏறலாம்👍; இதை நடத்துபவர் எமது ஆள், இது முன்னரே நடக்க வேண்டிய விடயம், இன்னும் இழுபடுவதிற்கு காரணம் தமிழ்நாடு அல்ல, நமது நாடுதான், வெளிப்படையாக பல விடயங்களை கூற முடியாது,

தீவு பகுதியில் இந்திய உதவியுடன் விரைவில் சூரிய மின்கலத்தால் மின்சார Projects வரும் 🤞

Edited by உடையார்
  • Like 4
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்திய பயணிகள் படகுச்சேவை : காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் கடற்படை

Published By: NANTHINI

12 APR, 2023 | 02:52 PM
image

(எம்.மனோசித்ரா)

லங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பாண்டிச்சேரி வரை பயணிகள் படகுச் சேவையை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை நிறைவு செய்வதற்காக காங்சேகன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சொந்தமான கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கடல் வழியூடாக முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பதற்கு நிலையான கடல் வலயத்தை உருவாக்குவதற்கும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு திறமையாகவும், திறம்படவும் களமிறங்குவதற்கும் கடற்படை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

அதற்கமைய, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சினால் கடற்படையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய, காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மூலம் இடம்பெறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் குடிவரவு, குடியகல்வு செயற்பாடுகள், சுங்க அனுமதிக்கு தேவையான பயணிகள் முனையத்தை நிர்மாணித்தல் என்பன கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும். இதற்கு தேவையான மூலப்பொருட்கள் இலங்கை துறைமுக அதிகார சபையால் வழங்கப்பட்டதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடற்படையின் பங்களிப்பின் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு ரீதியான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் கடற்படை அதன் முழுமையான பங்களிப்பை வழங்கும் என்று கடற்படை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/152741

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே 15ல் இலங்கை - இந்திய கப்பல் சேவை: முழுமையான விபரம் வெளியீடு..!

காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக படகுச் சேவையை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் (IndSriFerry Services Pvt Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே 4 மணி நேரங்களைக் கொண்ட இந்தப் படகு சேவை மே 15 ஆம் திகதியளவில் ஆரம்பமாகும். காரைக்கால் துறைமுகத்தின் ஒப்புதலுக்காக தற்போது காத்திருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் கப்பல் சேவையில் பணியாற்றவுள்ள கப்பல் கப்டன் மற்றும் ஆறு பணியாளர்கள் அனைவரும் இந்தியர்களாவர். கப்பல் சேவை இந்தியக் கொடியின் கீழ் நடத்தப்படும். சேவையில் ஈடுபடவுள்ள கப்பல் சிங்கப்பூரில் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் சர்வதேச கடல்சார் தர நிர்ணயங்களைக் கொண்டது எனவும் நந்தகோபன் குறிப்பிட்டார்.

50 அமெரிக்க டொலர் மற்றும் வரி

 

 

மே 15ல் இலங்கை - இந்திய கப்பல் சேவை: முழுமையான விபரம் வெளியீடு..! | Shipping Service Between Sri Lanka And India

பயணிகள் கப்பல் சேவை கட்டணமாக 50 அமெரிக்க டொலர் மற்றும் வரி வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 120 முதல் 150 பேர் வரை பயணிக்கக் கூடிய இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள் தலா 100 கிலோ பொருட்களைக் கொண்டு செல்ல முடியும்.

இந்தப் படகில் பயணிகளுக்கான உணவகம் ஒன்றும் இயங்கும். கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு முதல் மூன்று மாதங்களுக்கு வரி இல்லாத பயணிகள் சேவையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, படகு சேவையை தொடங்குவதற்கு தேவையான அனுமதியை இலங்கை அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. படகு சேவையை தொடங்குவது இந்தியாவே என இலங்கைதுறை முகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சி டி ல்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கப்பல் சேவையை தொடங்குவதற்கு ஏதுவாக காங்கேசன்துறை துறைமுகத்தில் சுங்கம், குடிவரவு திணைக்களம் ஆகியவற்றுக்குத் தேவையான கட்டங்களை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றன.

பயணிகள் தங்குவதற்கு வசதியாக துறை முகம் மேம்படுத்தப்படுகிறது. இவற்றுக்காக இலங்கை அரசு 150 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 14. கூறியுள்ளார்.

விசேட சொகுசு தொடருந்து சேவை

 

 

மே 15ல் இலங்கை - இந்திய கப்பல் சேவை: முழுமையான விபரம் வெளியீடு..! | Shipping Service Between Sri Lanka And India

காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை இயக்கப்படும் நிலையில் கப்பல் சேவையை பயன்படுத்துவோர் வசதி கருதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விசேட சொகுசு தொடருந்து சேவை இடம் பெறும். பௌத்த யாத்ரீகர்கள் கூட படகில் இந்தியாவுக்குச் சென்று புத்த கயாவை சென்றடைய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

காங்கேசன்துறை - காரைக்கால் இடையேயான இந்த படகு சேவையை இயக்குவது குறித்த திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்னர் உதித்தது. இப்போதே அது சாத்தியமாகவுள்ளது.

முதலில் சிதம்பரம் உள்ளிட்ட இந்துக் கோவில்களை தரிசிக்க யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு இந்து பக்தர்களை அழைத்துச் செல்வதற்கான திட்டங்களை வகுக்கப்பட்டன.

எனினும் விசேட சேவைகளை நடத்துவது அதிக செலவீனத்தை ஏற்படுத்தும். எனவே தான் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே நிரந்தர கப்பல் சேவையை நிறுவ நான் முன்மொழிந்தேன் என நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

8 மணி நேரத்தில் சென்னை

 

 

மே 15ல் இலங்கை - இந்திய கப்பல் சேவை: முழுமையான விபரம் வெளியீடு..! | Shipping Service Between Sri Lanka And India

இந்தக் கப்பல் சேவைக்காக இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணம் வருவோர் தங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் ஏராளமான விடுதிகள் உள்ளன. யாழ்.நகரில் இருந்து காங்கேசன்துறைக்கு 20 நிமிடங்களில் செல்ல முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கையில் இருந்து கப்பலில் காரைக்கால் செல்வோர் அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு இரண்டு மணி நேரங்களில் செல்ல முடியும். சென்னைக்கு 8 மணி நேர பயணத்தில் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://ibctamil.com/article/shipping-service-between-sri-lanka-and-india-1681621230?itm_source=parsely-top

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் (Ferry) சேவையா? படகு சேவையா?  வாகனங்கள் கொண்டு செல்லலாமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

கப்பல் சேவையை பயன்படுத்துவோர் வசதி கருதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விசேட சொகுசு தொடருந்து சேவை இடம் பெறும்.

2024 வரை தொடரூந்து ஓடாதாமே?

இங்கு புகைவண்டி தடைப்பட்டால் பேரூந்து சேவையை இலவசமாக அந்த இடைப்பட்ட தூரத்துக்கு விடுவார்கள்.

இலங்கையில் தொடராந்து சேவையால் மக்கள் மிகவும் கஸ்டப்படுவதாகவும் அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் போவதற்கு அதுவும் சிங்களம் தெரியாதவர்களை ஓட்டோகாரர் பல மடங்கு பணம் அறவிடுவதாகவும் கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

2024 வரை தொடரூந்து ஓடாதாமே?

இங்கு புகைவண்டி தடைப்பட்டால் பேரூந்து சேவையை இலவசமாக அந்த இடைப்பட்ட தூரத்துக்கு விடுவார்கள்.

இலங்கையில் தொடராந்து சேவையால் மக்கள் மிகவும் கஸ்டப்படுவதாகவும் அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் போவதற்கு அதுவும் சிங்களம் தெரியாதவர்களை ஓட்டோகாரர் பல மடங்கு பணம் அறவிடுவதாகவும் கூறுகிறார்கள்.

ஓமண்ணை, மே மாதம் வரை திருத்தவேலைகள் என முதலில் கூறினார்கள். இப்ப அடுத்த வருடம் தான் முடியுமாம்.
கொழும்பு யாழுக்கு அரச ஊழியர்களைத் தவிர(வரன்ற்/3 இலவச அனுமதி) ஏனையோர் சொகுசு பேரூந்துகளைப் பாவிக்கலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி யாழ் வந்த இடத்தில் சந்தித்து சில பிரச்சனைகளை கதைத்து தீர்த்திருப்பார் போல, விரைவில் இந்த பயணம் ஆரம்பிக்க வாழ்த்துகள் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இதில் கொஞ்சம் இடிக்குது..

இந்தியா வற்புறுத்தித் தான் இந்த படகு சேவை நடைபெறுகிறது. இலங்கை அரசுக்கு இதில் எப்பனும் விருப்பம் இல்லை. வேண்டா வெறுப்பா ஒத்துக்கொண்டு விட்டது. குழப்ப என்ன வேண்டும் என்றாலும் நடக்க சான்ஸ் உண்டு. எல்லோரும் குடும்பமாக ஒன்றாகப் போகாமல் விடுவது கொஞ்சப் பேரை ஆவது குடும்பத்தில் மிச்சம் வைக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பகிடி said:

எனக்கென்னவோ இதில் கொஞ்சம் இடிக்குது..

இந்தியா வற்புறுத்தித் தான் இந்த படகு சேவை நடைபெறுகிறது. இலங்கை அரசுக்கு இதில் எப்பனும் விருப்பம் இல்லை. வேண்டா வெறுப்பா ஒத்துக்கொண்டு விட்டது. குழப்ப என்ன வேண்டும் என்றாலும் நடக்க சான்ஸ் உண்டு. எல்லோரும் குடும்பமாக ஒன்றாகப் போகாமல் விடுவது கொஞ்சப் பேரை ஆவது குடும்பத்தில் மிச்சம் வைக்கும் 

இல்லை இது தனிப்பட்ட ஒரு முதலாளியால் தொடங்கப்பட்டது, வியாபர நோக்கோடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தக துறைமுகமாக தரமுயர்த்தப்படும் காங்கேசன்துறை துறைமுகம்!

படகு சேவையை தொடங்குவதற்கான இந்தியாவின் அனுமதியில் தாமதம் !

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் காரைக்கால் துறைமுகத்துக்கும் இடையிலான படகு சேவையை தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2023/1330427

Link to comment
Share on other sites

On 28/3/2023 at 07:32, உடையார் said:

நம்பி ஏறலாம்👍; இதை நடத்துபவர் எமது ஆள், இது முன்னரே நடக்க வேண்டிய விடயம், இன்னும் இழுபடுவதிற்கு காரணம் தமிழ்நாடு அல்ல, நமது நாடுதான், வெளிப்படையாக பல விடயங்களை கூற முடியாது,

தீவு பகுதியில் இந்திய உதவியுடன் விரைவில் சூரிய மின்கலத்தால் மின்சார Projects வரும் 🤞

இவற்றால் எமது மக்களுக்கு நன்மை நடந்தால் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசின் அனுமதி கிடைத்ததும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் !

news-01-1.jpg

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கத்தின் சில அனுமதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்தவுடன், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், காங்கேசன்துறையிலிருந்து பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இம்மாதம் நடுப்பகுதியில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஒரு வழி போக்குவரத்திற்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

65 கடல் மைல் தூரம் கொண்ட இந்த பயணத்திற்கு சுமார் 4 மணித்தியாலங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை காலை 8 மணிக்கு காரைக்காலில் பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையவுள்ளதுடன், மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் மாலை 6 மணிக்கு காரைக்காலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/251824

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

ஒரு வழி போக்குவரத்திற்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

65 கடல் மைல் தூரம் கொண்ட இந்த பயணத்திற்கு சுமார் 4 மணித்தியாலங்கள் 

ஒரு வழிப்பாதைக்கு இலங்கை பணத்திற்கு 15,800 ரூபா அறவிடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஒரு வழிப்பாதைக்கு இலங்கை பணத்திற்கு 15,800 ரூபா அறவிடுகிறார்கள்.

அண்ணை 100kg எடையுடைய பொதிகள் கொண்டு வரலாமாம். வியாபாரிகளுக்கு நன்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை 100kg எடையுடைய பொதிகள் கொண்டு வரலாமாம். வியாபாரிகளுக்கு நன்மை.

இந்தியாவுக்கு போகும் போது….
இலங்கையிலிருந்து.. 100 கிலோ அளவிற்கு என்ன பொருள் கொண்டு போகலாம்.
அங்கிருந்து வரும் போது… 100 கிலோ அளவில் என்ன பொருள் கொண்டு வரலாம்.
அந்தப் பொருட்களின் பட்டியலை… ஆராவது தயாரித்து தாங்கோ. 🤣

முன்பு…. சவர்க்காரம், நைலோன் சேர்ட்டுகள் கொண்டு போவார்கள்.
வரும் போது… காஞ்சிபுரம் பட்டுப் புடவை, வேட்டிகள், சாரம், ஸ்ரிக்கர் பொட்டு  போன்றவை  கொண்டு வருவார்கள். 😂
இப்போ… நிலைமை மாறி இருக்கும் என நம்புகின்றேன். 🙂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இந்திய அரசு அனுமதி அளிக்கவில்லையா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - காரைக்கால் கப்பல் சேவைக்கு அனுமதி

boaaaaaaaaa_02062023_LNN_CMY.jpg?itok=uI

ஜூன் 10 முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கு இலங்கையின் ஹேலீஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இந்த சேவையை நடத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் - கே.கே.எஸ். இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது.

இதன்போது இந்தியத் தரப்பிலிருந்தே அதற்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கவில்லையென அறியமுடிகின்றது.

இதேவேளை, பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.thinakaran.lk/2023/06/03/உள்நாடு/99258/யாழ்ப்பாணம்-காரைக்கால்-கப்பல்-சேவைக்கு-அனுமதி

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்தியாவுக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதம்?

05.jpg
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் படகு சேவைக்காக தேர்வு செய்யப்பட்ட துறைமுகம் மாற்றப்பட்டதால், இந்த பயணிகள் கப்பல் சேவை தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயணிகள் கப்பல் சேவைக்காக, தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் வசதிகளை அதிகரிக்க இந்தியா மேலும் கால அவகாசத்தை கோரியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/261104

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.