Jump to content

பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் !!!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் !!!

பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் !!!

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், வடமனான பர்வத விகாரை என பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் அங்கிருந்த மக்கள் வெளியேறியதால் அவ் ஆலயத்திற்குச் சென்று வழிபட முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.

பின்னர் மீண்டும் அவ்விடத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதன் பிற்பாடு மக்கள் இம் மலைக்குச் சென்று சிவமூர்த்திகளை வழிபட தொடங்கியிருந்தனர்.

இந்நிலையில் அங்கு வழிபாடுகளை மக்கள் மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பல காரணங்களை கூறி தடைவிதித்திருந்த போதும் அத்தடைகளை தாண்டி மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் 2018 ல் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் மீண்டும் மக்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட தடைவிதித்திருந்தனர்.

இருந்தும் மக்களின் தொடர் எதிர்ப்பினால் தொல்பொருட் திணைக்களத்தினர் தற்காலிகமாக தடையினை நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்காள்ள அனுமதித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை குறித்த ஆலயத்திற்கு மக்கள் சென்ற போது சிவலிங்கம் மற்றும் ஏனைய விக்கிரகங்கள் தூக்கியெறியப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருந்தது.

இந்நிலையில் குறித்த இடத்தின் பெயரும் வட்டமான பர்வத விகாரை என பௌத்த விகாரையின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1328628

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு கிடைக்கும் வரை இருந்துவிட்டு, தங்கள் குணத்தை காட்டும் சிங்களம், தொடர்ந்து சிங்களத்திடம் ஏமாறும் கிந்தியா😂, கிந்தியாவோ அமெரிக்காவோ ஒன்றும் செய்ய முடியாது இலங்கையில் சீனாவின் ஆதிக்கமிருக்கும் வரை, அதை வைத்தே சிங்களம் இவர்களை உருட்டும்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

காசு கிடைக்கும் வரை இருந்துவிட்டு, தங்கள் குணத்தை காட்டும் சிங்களம், தொடர்ந்து சிங்களத்திடம் ஏமாறும் கிந்தியா😂, கிந்தியாவோ அமெரிக்காவோ ஒன்றும் செய்ய முடியாது இலங்கையில் சீனாவின் ஆதிக்கமிருக்கும் வரை, அதை வைத்தே சிங்களம் இவர்களை உருட்டும்👍

நாம் இங்கிருந்து கவலைப் பட்டாலும், அங்கே நிலைமை வேறு.

முதலாவது, ஆட்களே இல்லை. இரண்டாவது, இன்றில்லாவிடில் நாளை, பிளேன் ஏறுவேன் மனநிலை. இது பெரியவரிடம் கூட, மகன் / மகள் ஸ்போன்சரில கூப்பிடுகினம் கதை.

ஆக, இது நம்மதல்ல என்ற தாமரை இலை தண்ணீர்நிலைப் பாடு தான் எதிர்ப்பின்மைக்கு காரணம்

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.