Jump to content

75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

75 ஆண்டுகளுக்கும் மேலாக  கற்றுக்கொண்ட பாடம் என்ன?

லூசியன் அருள்பிரகாசம்

0000000000000000000000000000000000000

எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள்

பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால்  மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ] ஆய்வுகள் (த  ஐலண்ட்  இல் பெப்ரவரி 2019  யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை. மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்களவர்கள் இந்தியாவின் வடகிழக்கிலுள்ள வங்காளிகளிலும் பார்க்க  (25.41%) தென்னிந்தியத் தமிழர்களிடமிருந்து (69.86%) அதிக பங்களிப்பைப் பெற்றுள்ளனர், அதேசமயம், இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய தமிழர்களுடன் (16.63%) ஒப்பிடும்போது இலங்கையின் சிங்களவர்களிடமிருந்து (55.20%) அதிக பங்களிப்பு உள்ளது”. இதிலிருந்து மூன்று முடிவுகள் வெளிவருகின்றன. முதலாவதாக, சிங்களவர்களும் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள், பெரும்பாலானவர்கள் திராவிட வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (69.8%). இரண்டாவதாக, இலங்கைத் தமிழர்கள் மிக நீண்ட காலமாக இலங்கையில் உள்ளனர் – ஏனெனில், “இலங்கைத் தமிழர்கள் இந்தியத் தமிழர்களை விட சிங்களவர்களுடன் நெருங்கிய மரபியல் பிணைப்பை கொண்டுள்ளனர் ” என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மூன்றாவதாக, இலங்கைத் தமிழர்கள் மரபணு ரீதியாக சிங்களவர்களைப் போலவே இலங்கையர்களாகும் . இலங்கைத் தமிழர்களை தென்னிந்தியத் தமிழர்களுடன் அரசியல் உள்நோக்கத்துடன் பிணைப்பதனால் இந்த உண்மையை மாற்ற முடியாது.

மேற்கூறிய மரபியல் ஆய்வுகளின் முடிவுகள் (இலங்கையில் பிறந்த) மானுடவியலாளர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) மானுடவியல் பேராசிரியர் கணநாத் ஒபேசேகரே பின்வருமாறு கூறுகிறார்:

“கிமு 500 க்கு முன்னர் குடியேறிய பழமையான குடியேற்றங்களைத்தவிர , இலங்கையில் குடியேறியவர்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள், பெரும்பாலும் தமிழ்நாடு, ஒரிசா, மற்றும் கேரளத்திலிருந்து வந்தவர்கள் என்பதுடன்,விரைவில் சிங்களமயமாக்கப்பட்டவர்கள். உண்மையில், சிங்களவர்களிடையே மிகவும் கூச்சலிடும் தமிழ் விரோத சாதிகளில் சிலர் பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் தென்னிந்தியாவிலிருந்து குடியேறியவர்கள். இதற்கு நேர்மாறாக, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குக் கரையோரத்  தமிழர்கள் குறைந்தது கி.பி பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இலங்கையில் இருந்துள்ளனர். இதே கருத்தை வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் (அமெரிக்கா) மானுடவியல் ஓய்வுநிலை பேராசிரியர்  எச்.எல். செனவிரத்னவும் எதிரொலிக்கிறார், மேலும் அவர் கூறுகையில் : “பரந்த கண்ணோட்டத்தில், துணைக் கண்டத்தில் உள்ள மக்களின் இன-மக்கள் தொகை பரம்பலைப் பற்றிய  பார்வையில் ,தென்னிந்தியாவின் ஏனைய இன மற்றும் மொழிக் குழுக்களைப் போலவே சிங்களவர்களும் பலவகையான தமிழர்கள் என்பது மிகவும் வெளிப்படையானது. குறிப்பாக, வடக்கில் இருந்து மறைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பௌத்தம் பிழைத்திருப்பது தென்னிந்தியாவில்தான் என்ற உண்மையை சிங்கள பௌத்தர்கள் மறந்துவிட்டமை வியக்கத்தக்கது” என்று கூறியுள்ளார் . (தி ஐலண்ட், ஜனவரி 2014). இலங்கையில் உள்ள பல தமிழர்கள் குறைந்தது கிபி 500 வரை பௌத்தர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய ஆய்வுகளின் அடிப்படையில்  தனி சிங்கள பௌத்தர்களால் ‘தங்கள் நாட்டிற்கு’ திரும்பிச் செல்லுமாறு கோரப்பட்ட மூன்று வெவ்வேறு இலங்கைத் தமிழர்களிடமிருந்து எழுத்தாளர் அறிந்திருப்பது விந்தையானது.பௌத்தத்தின் உன்னத மதம்/தத்துவத்தை தழுவி சிங்களவர்கள் தங்களை வேறுபடுத்திக் கொண்டனர். இருப்பினும், இனம் பற்றி மட்டும் பேசினால், சிங்களவர்களும் ‘தங்கள் நாட்டுக்கு’ திரும்பச் சொல்ல வேண்டும். தீவின் மீதான அவர்களின் இன மற்றும் மத உரிமையானது பலரால் சர்ச்சைக்குரிய மகாவம்சத்தின் சந்தேகத்திற்குரிய உரையில் மட்டுமே உள்ளது.

இந்தக் கட்டுரையின் எஞ்சிய பகுதி, சிறுபான்மையினருக்கு இலங்கையின் பரம்பரை உரிமையை மறுத்து, பெரும்பான்மைச் சமூகம் இந்த நாட்டை தனக்கு மட்டுமே சொந்தமானது என்று எவ்வாறு எடுத்துக்கொள்ள முயல்கிறது என்பதைக் காட்ட முயல்கிறது. இலங்கைத் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தீவில் உள்ளனர். அவர்கள் தென்னிந்தியாவில் இருந்து பின்னர் சிங்களமயமாக்கப்பட்ட மக்களைக் கொண்டுவந்த அதே குடியேற்றத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது.

இலங்கைக்கு யார் முதலில் வந்தார்கள் என்பது பற்றி நாங்கள் பேசவில்லை. தீவில் ஏற்கனவே உள்ள இரண்டு சமூகங்கள்/ தேசங் களுடனான விடயங்கள் பற்றியதாகும்  – அவற்றுக்கிடையே எத்தகைய உறவு இருக்க வேண்டும். தமிழர்களை சிங்களவர்களுடன் சேர்த்து ஒரு ஒற்றையாட்சியில் அமர்த்திய ஆங்கிலேயர்கள்தான், அனைத்து அரசியல் அதிகாரங்களையும் ஒரு சமூகத்தின் (மட்டும்) கைகளுக்கு வழங்கியமையே , உண்மையில் எங்களைப் பிரித்தெடுத்தது.

இலங்கை ஒரு தேசம் என்ற நம்பிக்கையில் செயற்பட்ட பிரித்தானியர்கள், சிங்கள-பௌத்த பெரும்பான்மையினருக்கு அரசைக் கைப்பற்றுவதற்கு எளிதான வழியை ஏற்படுத்திக் கொடுத்து, பாராளுமன்ற முறைமையுடன் இணைந்து ஒற்றையாட்சியின் வரையறைகளை அமைத்தனர். திசராணி குணசேகர அவர்கள் தனது  கட்டுரையில் “சிங்கள-பௌத்தத்திற்கு நாம் இழந்த நாடு” என்ற தலைப்பில் சரியான  பிரதிமையை வரைந்துள்ளார் (கிரவுண்ட்வியூஸ், 7,பெப்ரவரி , 2023). அவர் நாடளாவிய கண்ணோட்டத்தில் எழுதுகிறார், இது மிகவும் தேவை:நான் சிறுபான்மையினர் கண்ணோட்டத்தில் எழுதுகிறேன். ஆங்கிலேயர்கள் சிறுபான்மையினரை சிங்களவர்களைப் போன்ற அதே காலனித்துவக் கூண்டில் (ஒற்றையாட்சி) வைத்ததுடன், ,தமிழர்களை விடுவிக்காமல் சிங்களவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்.

சுதந்திரமும் ஒரு அரசியல் சித்தாந்தமாக சிங்கள-பௌத்தத்தின் எழுச்சியும்

ஐரோப்பிய அரசுகளில் அவை தேசிய அரசுகளாக மாறுவதற்கு முன்பு, இன மற்றும் மதப் போட்டிகள் 300 ஆண்டுகளுக்கும் மேலாக போர்கள் மற்றும் இரத்தக்களரிகளால் தீர்க்கப்பட்டன. அதன் பிறகு ஜனநாயகம் தோன்ற 300 ஆண்டுகள் ஆனது. இலங்கையைப் பொறுத்தவரை, தற்போதுள்ள இன மற்றும் மத வேறுபாடுகள் விரிவடைந்து, ஒரு ‘தேசிய அரசு’ பிரகடனப்படுத்தப்பட்டு, ஜனநாயகத்தால் முடிசூட்டப்பட்டது. இலங்கை ஒரு மதச்சார்பற்ற அரசாக இருக்கும், சட்டத்தின் ஆட்சி மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்ற .டி.எஸ்.சேனாநாயக்கவின் உறுதிமொழியின் பேரில் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. சிங்கள-பௌத்தம் ஒரு அரசியல் சித்தாந்தமாக அந்த உறுதிமொழியை கைவிட்டுவிட்டது. இது சிங்கள-பௌத்த பெரும்பான்மையினரின் அரசியலமைப்பு சதி, மதச்சார்பற்ற அரசு என்ற வாக்குறுதியை மறுத்து, தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களுக்கு சொந்தமானது என்று அழைக்கும் அரசை எடுத்து செல்கிறது. உண்மையில், ஆங்கிலேயர்கள் தமிழர்களை சிங்களவர்களுடன் ஒரே காலனித்துவக் கூண்டில் (ஒற்றையாட்சி  அரசில் ) அடைத்து அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினர்! சிங்கள மக்கள் வாக்காளர்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது, ஒற்றையாட்சியின் காலனித்துவக் கூண்டு ஒருபோதும் திறக்கப்படாது என்பதை உறுதிப்படுத்தும். எமது சொந்த வரலாறு எமக்கு வேறுவிதமாக கற்பிக்க வேண்டும் என்றாலும் ஆங்கிலேயர்கள்  விட்டுச்சென்ற ஒற்றையாட்சி அரசின் அனுமானத்துடன் தான் நாம் எப்போதும் தொடங்குகிறோம்.

காலனித்துவ வரையறைகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன

ஆங்கிலேயர்கள் எமது தற்போதைய எல்லைகளுடன் எம்மை விட்டுச்சென்றனர் – அதை நாம் அனைவரும்  எடுத்துக்கொண்டுள்ளோம். இருப்பினும் ஒரு காலத்தில், சிலோன் இந்தியாவின் மெட்ராஸ் பிரசிடென்சியின் (இன்று தமிழ்நாடு) ஒரு பகுதியாக இருந்தது. ஆங்கிலேயர்கள் எம்மை அப்படியே விட்டுவிட்டிருந்தால், எமது ஆட்சி மொழி தமிழாகவும், இந்தி எமது தேசிய மொழியாகவும் இருக்கும்! அதை சிங்களவர் யாராவது ஏற்றுக் கொண்டிருப்பார்களா? ஆங்கிலேயர்கள் எங்களிடம் விட்டுச் சென்ற ஒரு ஒற்றையாட்சியில் இருந்து ஆரம்பிக்கிறோம். எவ்வாறாயினும், சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தின் எழுச்சியைக் கருத்தில் கொண்டு, தீவின் முதல் காலனியாதிக்கவாதிகள் (போர்த்கேயர்கள்) வந்தபோது எங்கள் எல்லைகள் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நிச்சயமாக நன்றாக இருந்திருப்பார்கள். ஏன் எப்போதும் ஆங்கிலேயர்கள் எம்மை விட்டுச்சென்ற ஒற்றையாட்சியின் எல்லையில் இருந்து தொடங்குவது – வேறு எதுவுமில்லை?

சிங்கள-பௌத்த ஆதிக்கத்திற்கான நிபந்தனைகளை உருவாக்குதல்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வெளியேறும் அவசரத்தில், பிரித்தானியர்கள் இலங்கையில் ஒரு தேசிய அரசை விட்டுச் செல்கிறார்கள் என்று நம்புவதற்கு விரும்பினர். அவ்வாறு செய்ய அவர்கள் வேண்டுமென்றே தங்கள் வரலாற்றைத் தவறாகப் புரிந்து கொண்டனர்.

இரண்டாவதாக, ஆங்கிலேயர்கள்  ஒரு ஒற்றையாட்சி அரசை விட்டுச் சென்றனர், அதை அவர்கள் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு மற்றும் நிர்வாக வசதிக்காக விரும்பினர். மறுபுறம், நாம் அமெரிக்க செல்வாக்கின் கீழ் இருந்திருந்தால், லத்தீன் அமெரிக்காவில் உள்ள சில நாடுகளைப் போலவே, நாங்கள் மிகவும் பரவலாக்கப்பட்ட அரசியலமைப்பை – அல்லது ஒரு சமஷ்டி அரசியலமைப்பைப் பெற்றிருப்போம்.

மூன்றாவதாக, பிரித்தானியர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தங்களுடைய சொந்த மாதிரியான பாராளுமன்ற அரசியலமைப்பை விட்டுச் சென்றனர். இலங்கையில், பெரும்பான்மையான சிங்கள-பௌத்தர்கள் பாராளுமன்றத்தை கைப்பற்றுவதற்கும், சிங்களம் மட்டும் சட்டம் (1956) மூலம் நாட்டைப் பிரிப்பதற்கும் சிறிது காலம் எடுத்தது. 1972 அரசியலமைப்பானது ,சிங்களவர்கள் நிரந்தர மற்றும் ஏகபோக பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றத்தில் இறைமை தங்கியிருக்க வேண்டும் என்று கட்டளையிட்டது.

நான்காவதாக, பிரித்தானிய அரசியலமைப்பில் உரிமைகள் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், எமது அரசியலமைப்பின் கீழ் சிறுபான்மையினருக்கான பாதுகாப்புகள் பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையால் இரத்து செய்யப்படலாம், அது எப்போதும் சிங்கள-பௌத்த குரலை எழுப்புவதன் மூலம் உருவாக்கப்படலாம். மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையினால் இன்னும் அதிகமாகச் சாதிக்க முடியும் என்றால், அரசியலமைப்பு ரீதியான  பாதுகாப்புகளால் என்ன பயன்?

இறுதியாக, ஆங்கிலேயர்கள் ஒரு ஒற்றையாட்சி எல்லைகளை உருவாக்கினர்.

எமது அரசியலமைப்பில் உள்ள மேற்கண்ட பாதிப்புகள், அரசின்  இயல்பை அதன் சொந்த உருவத்திற்கு (மட்டும்) மாற்றியமைக்க தேர்தல் பெரும்பான்மையால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது இலங்கை தேசத்தை இன மற்றும் மத அடிப்படையில் பிளவுபடுத்தும் விளைவை ஏற்படுத்தியுள்ளது.

‘தேர்தல் ஜனநாயகம்’

எமது அரசியலமைப்புச் சட்டங்கள் அனைத்தும் ஜனநாயக செயல்முறையால் எழுகின்ற  வகுப்புவாத வேறுபாடுகளைத் தீர்க்க முடியும் என்று மறைமுகமாக கருதுகின்றன. மாறாக, ஒவ்வொரு பொதுத் தேர்தலும் எமது வகுப்புவாத வேறுபாடுகளை அதிகப்படுத்தியிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, நாம் தேர்தல் ஜனநாயகத்தை மட்டுமே அடைந்துள்ளோம் – ஏனைய ஜனநாயகத்தை அல்ல.

அனைத்து சிறுபான்மையினரும் எதிராக வாக்களித்த போதிலும், ஜனாதிபதி கோத்தாபய தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்திய ஜனாதிபதித் தேர்தலின் மூலம் சிறுபான்மை வாக்குகளின் பயனற்ற தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, சிறுபான்மையினர் வாக்களித்தால் கேடு – இல்லை என்றால் அழிவு! கடந்த ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு முடிவுகள் எமது தீவில் வாழும் இரு தேசியங்களுக்கும் இடையிலான பிரிவினையை உறுதியாகக் காட்டியது தற்செயல் நிகழ்வு அல்ல. உண்மையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு ஜனாதிபதி கோத்தாபயவுக்கு எதிராக உறுதியுடன் வாக்களித்தது. தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் 75 வருடங்களுக்கு மேலாக ஒற்றையாட்சியில் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்த போதிலும் சிங்கள ஆட்சியின் கீழ் வாழ விரும்பவில்லை என்பதையும் இது காட்டுகிறது.

சரியாகச் சொல்வதானால், மேலே உள்ள யாவற்றுக்கும் நேர்மாறானதாக நாம் வாதிடலாம். தற்செயலாக, தமிழர்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருந்தால், அவர்களும் சிங்களவர்களைப் போலவே செய்திருப்பார்கள்: எல்லா அதிகாரங்களையும் தங்களுக்குள் குவித்து, அரசையும் அவர்களைப் போல தோற்றமளிக்க வேண்டும். எனவே, இது ஒரு வகுப்புவாத பிரச்சனை மட்டுமல்ல, அரசியலமைப்பு பிரச்சனையும் கூட.

எமது ‘தேசிய அரசில் ’ வெவ்வேறு தேசங்கள்

சிறுபான்மையினரிடமிருந்து வேறுபட்ட இனம், மதம், மொழி, கலாசாரம், பழங்கால பௌத்த பாரம்பரியம் கொண்ட இனம், வேறு தேசம் என்று முதலில் கூறிக் கொண்டவர்கள் சிங்களவர்கள். சிங்கள- பௌத்த தேசியவாதத்தின் அரசியல் ஆதிக்கம் மூன்று நிலைகளில் முன்னேறியுள்ளது. முதலாவது சிங்கள-பௌத்த தேசியவாதத்தை இலங்கை தேசியவாதத்துடன் சமன்படுத்துவது. இரண்டாவது கட்டம் சிங்கள-பௌத்த தேசியவாதத்தை இலங்கை அரசுடன் சமன்படுத்துவது. மூன்றாவது கட்டம் சிங்கள – பௌத்தம், தமிழ் பேசும் வடக்கு, கிழக்கைக் கைப்பற்றுவதற்கு அரசின் பெயரால் செயற்படுவது. இதன் விளைவாக, நிலைகொண்டுள்ள  இராணுவம் வேறு இனத்தைச் சேர்ந்தவர் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறது, ஆளப்படுவோரின் மொழியைப் பேசுவதில்லை, அதன் மதத்தைப் பின்பற்றுவதில்லை, மேலும் ஆளப்படுபவர்களின் விருப்பத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பலவற்றை விட்டுக்கொடுத்த சிங்களவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

இலங்கையில் சிங்கள பௌத்த தேசம் மட்டுமன்றி,  இனம், மதம், மொழி, கலாசார வேறுபாடுகள் கொண்ட இலங்கைத் தமிழர் தேசமும் இருப்பதுதான் பிரச்சினை. இந்த இலங்கைத் தமிழ்த் தேசியவாதம்  25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போரினால்வலியுறுத்தப்பட்டது. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் வாக்களிப்பதன் மூலம் (தமிழ் எம்.பி.க்கள் எப்பொழுதும் வாக்களிக்காதவர்களாகவே இருப்பார்கள்) அரசியலமைப்பு முறைமையினால் ஆளப்படுவதை தமிழர்கள் விரும்பவில்லை. கிழக்கு மாகாணத்தில் பலத்த பிரசன்னத்துடன் தனித்துவமான மதம் மற்றும் கலாசாரம் கொண்ட முஸ்லிம் சமூகமும் உள்ளது. புலிகளால் வெட்கக்கேடான முறையில் பாதிக்கப்பட்ட இந்தச் சமூகம் இப்போது சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் தாக்கத்தை உணர்ந்துள்ளது. இலங்கையின் சோகம் என்னவென்றால் எமது பன்மைதன்மை வாய்ந்த  சமூகத்தின் யதார்த்தத்தை மறுப்பது மற்றும் இந்த வேறுபாடுகளை இராணுவ பலம் அல்லது கும்பல் வன்முறை மூலம் தீர்க்க முடியும் என்று நினைப்பதுதான்.

சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தின் கொள்கைகளும்  அரசியலும்

அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பிரிவின் பிரதம குருமார்கள் அதிகாரப் பகிர்வுக்கான எந்தவொரு முயற்சியையும் வீட்டோ செய்துள்ளனர். சிங்கள-பௌத்தத்தின் அரசியல் சித்தாந்தம் அரசியல் ரீதியாகவும் இன ரீதியாகவும் ‘மத ரீதியாகவும்’ செயற்படுவதாகத் தெரிகிறது. ஜனரஞ்சகவாதம், சர்வாதிகாரம், இனவாதம் மற்றும் வெளிப்படையான இராணுவவாதம் ஆகியவற்றின் கலவையானது, மதகுருமார்களின் ஆதரவுடன், ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜேர்மனியில் பாசிசத்தின் எழுச்சியைக் குறிப்பிடுகிறது .

சமஷ்டி அல்லது அதிகாரப் பகிர்வைகூட  நிராகரிப்பதற்கு  சிங்கள பெரும்பான்மையினரை சிங்கள அரசியல்வாதிகள் நம்ப வைத்துள்ளனர். எவ்வாறாயினும், எமது ஒற்றையாட்சி அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்த மட்டுமே உதவியது. ஒரு ஒற்றையாட்சிஅரசாக போரினால் பிரதேசம் ‘ஒருங்கிணைக்கப்பட்ட’ போதிலும், பிளவுபட்ட மக்கள் அதிகளவுக்கு ஒருபோதும் ஒன்றுபடவில்லை. எமது ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 75 ஆண்டுகளுக்குப் பின்னராக இது இருக்கின்றது .

ஜனநாயகத்தின் கீழ் நாட்டை ஒன்றாக வைத்திருப்பதற்கான ஒரே வழிமுறை அதிகாரப் பகிர்வு அல்லது சமஷ்டி முறைமையினால்  மட்டுமேயாகும். இதை இராணுவம் ஒன்றாக வைத்திருக்க முடியும் – ஆனால் எவ்வளவு காலத்திற்கு? இக்கட்டுரையின் முழு வாதமும் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் கடவுள் கொடுத்த உரிமை சிங்கள மக்களுக்கு இல்லை என்பதேயாகும். ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற அதிகாரம், சுதந்திரத்தின் போது அளித்த வாக்குறுதியின் துரோகம் மற்றும் சமீபத்திய உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றதன் மூலம் – அரசின் உள் மற்றும் வெளி வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே அவர்களுக்கு இந்த அதிகாரம் உள்ளது.

கொழும்பு  டெலிகிராப்

https://thinakkural.lk/article/245677

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

கேரளத்திலிருந்து

கேரளம் வந்ததே 500 ஆண்டுகள் தானே என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கேரளம் வந்ததே 500 ஆண்டுகள் தானே என்கிறார்கள்.

அண்ணை சிங்கள பெண்களதும் கேரள பெண்களதும் ஆடை அணிதலும், கலை நடனங்களிலும் சில ஒற்றுமை தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை சிங்கள பெண்களதும் கேரள பெண்களதும் ஆடை அணிதலும், கலை நடனங்களிலும் சில ஒற்றுமை தெரிகிறது.

சிலவேளை மலையாளம் பிறந்து 500 வருடங்ளாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

அண்ணை சிங்கள பெண்களதும் கேரள பெண்களதும் ஆடை அணிதலும், கலை நடனங்களிலும் சில ஒற்றுமை தெரிகிறது.

ஏன் யாழ்ப்பாண மக்களுக்கும் கேரளத்துக்குமே பல ஒற்றுமைகள் உண்டு.  உடை, உணவு, பேச்சுவழக்கு என பல உண்டு.  தமிழ் நாட்டில் போய் யாழ்பாணத்தமிழில் உரையாடினால் கேரளத்துகாரரோ என்று கூறுமளவுக்கு ஒற்றுமை உண்டு. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

அண்ணை சிங்கள பெண்களதும் கேரள பெண்களதும் ஆடை அணிதலும், கலை நடனங்களிலும் சில ஒற்றுமை தெரிகிறது.

ஓம் தெரியுது.....தெரியுது...:cool:

கேரள உடையில் கவர்ச்சி பொங்க ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோஷூட் - இணையத்தை  கலக்கும் வீடியோ!! - EnewZ - Tamil

Pin on Sri Lankan Actress Models And Sexy Girls

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஓம் தெரியுது.....தெரியுது...:cool:

கேரள உடையில் கவர்ச்சி பொங்க ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோஷூட் - இணையத்தை  கலக்கும் வீடியோ!! - EnewZ - Tamil

Pin on Sri Lankan Actress Models And Sexy Girls

பகிரங்கப்படுத்தீட்டியளே!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.