Jump to content

ரஷியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – வெளியுறவுத்துறை மந்திரி டுவிட்டால் பரபரப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – வெளியுறவுத்துறை மந்திரி டுவிட்டால் பரபரப்பு

6-23.jpg

ரஷியாவில் வசிக்கும் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அமெரிக்க குடியுரிமைப் பத்திரிக்கையாளரை கைது செய்த ரஷியாவின் அறிவிப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீங்கள் ரஷியாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமகனாக இருந்தால்.. தயவுசெய்து உடனடியாக வெளியேறவும்” என்று அதில் ஆண்டனி பிளிங்கன் பதிவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கும் ரஷியாவிற்கும் இடையே ஒரு முக்கிய மோதல் புள்ளியாக பார்க்கப்படுகிறது. ரஷியா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து இரு வல்லரசு நாடுகளுக்கு இடையேயான உறவில் கசப்பு அதிகரித்து வருகிறது.

முன்னதாக, ஜனாதிபதி ஜோ பைடன் பிப்ரவரி 20, 2023 அன்று உக்ரைனுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது ரஷியாவை எரிச்சலூட்டியது. அப்போதிருந்து, உக்ரைனுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் போர் அதிகரிக்கும் என்று அமெரிக்காவை ரஷியா மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
https://akkinikkunchu.com/?p=242209

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை பிரச்சனைகளுக்குள்ளும் அமெரிக்க பிரசைகள் ரஸ்யாவில் வசிக்கிறார்களா ? ஆச்சரியம்தான் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசியாவை விட்டு  அமெரிக்கர்களை வெளியேறும்படி அமெரிக்கா  சொல்லவேண்டியுள்ளதற்கும்

அமெரிக்காவிலுள்ள  ரசியர்கள்  பற்றி ரசியா எதுவும்  சொல்லாமல்  இருப்பதிலும்  தான்

ஐனநாயகமும்  தனி மனித சுதந்திமும்  தங்கி இருக்கிறது

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

ரசியாவை விட்டு  அமெரிக்கர்களை வெளியேறும்படி அமெரிக்கா  சொல்லவேண்டியுள்ளதற்கும்

அமெரிக்காவிலுள்ள  ரசியர்கள்  பற்றி ரசியா எதுவும்  சொல்லாமல்  இருப்பதிலும்  தான்

ஐனநாயகமும்  தனி மனித சுதந்திமும்  தங்கி இருக்கிறது

இது மிரட்டல், நங்கள் அங்கு ஏதாவது செய்யப்போகின்றோமென்று. மடியில் கனமுள்ளவன்தான் இப்படி கத்துவான் பயத்தில், ரசியாவிற்கு பயிமல்லை நிதாடமாக நடை போடுகின்றது,

வன்னியில் இருந்து Red Cross, UNCHR, etc வெளியேறிய மாதிரியில்லையா இந்த மிரட்டால்

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

Wall Street jiurnal  நிருபர் உளவாளியாக செயற்பட்டார் என கூறி அவரை  Russia கைது செய்தது. இதன் எதிரொலியாக அமெரிக்கா அமெரிக்கர்களை ரஸ்யாவில் இருந்து வெளியேறும்படி கூறுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, உடையார் said:

இது மிரட்டல், நங்கள் அங்கு ஏதாவது செய்யப்போகின்றோமென்று. மடியில் கனமுள்ளவன்தான் இப்படி கத்துவான் பயத்தில், ரசியாவிற்கு பயிமல்லை நிதாடமாக நடை போடுகின்றது,

வன்னியில் இருந்து Red Cross, UNCHR, etc வெளியேறிய மாதிரியில்லையா இந்த மிரட்டால்

“அமெரிக்க குடியுரிமைப் பத்திரிக்கையாளரை கைது செய்த ரஷியாவின் அறிவிப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீங்கள் ரஷியாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமகனாக இருந்தால்.. தயவுசெய்து உடனடியாக வெளியேறவும்” 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

அமெரிக்க குடியுரிமைப் பத்திரிக்கையாளரை கைது செய்த ரஷியாவின் அறிவிப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்

குடிமகனா or உளவாழியா🤣 ஆழ்ந்த கவலை கொள்ள

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

குடிமகனா or உளவாழியா🤣 ஆழ்ந்த கவலை கொள்ள

24 minutes ago, உடையார் said:

இது மிரட்டல், நங்கள் அங்கு ஏதாவது செய்யப்போகின்றோமென்று. மடியில் கனமுள்ளவன்தான் இப்படி கத்துவான் பயத்தில், ரசியாவிற்கு பயிமல்லை நிதாடமாக நடை போடுகின்றது,

வன்னியில் இருந்து Red Cross, UNCHR, etc வெளியேறிய மாதிரியில்லையா இந்த மிரட்டால்

அப்படியானால்  எனக்கு டி. சிவராமிலிருந்து .......?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

அப்படியானால்  எனக்கு டி. சிவராமிலிருந்து .......?????

***  நீங்கள் உங்கள் நிலையில் இருந்து எங்கிருந்தும் ஆரம்பிக்கலம், இங்கு சிவராமை அழைப்பதன் உங்கள் நோக்கம் என்னவோ😎

Edited by இணையவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, உடையார் said:

***  நீங்கள் உங்கள் நிலையில் இருந்து எங்கிருந்தும் ஆரம்பிக்கலம், இங்கு சிவராமை அழைப்பதன் உங்கள் நோக்கம் என்னவோ😎

சிவராமும் ஒரு பத்திரிகையாளர் தானே??  ஏன் கொல்லப்பட்டார்?? உங்கள் மொழியில் உளவாளி????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவில் அமெரிக்க, ஐ.ஒ பிரஜைகளும், அமெரிக்கா/ஐ.ஓ வில் ரஷ்ய பிரஜைகளும் வசிக்கிறார்கள் என்பது தெரியாமலா இவ்வளவு  insight?😂

மற்றபடி இது அமெரிக்க வெளிநாட்டமைச்சு அமெரிக்க பிரஜைகளைப் பாதுகாக்க எந்த நாட்டையும் பற்றி வெளியிடும் சாதாரண பாதுகாப்புப் பற்றிய பட்டியலின் ஒரு அங்கம் - travel warning. இதை ஏனைய மேற்கு நாடுகளும் செய்கின்றன - இத்தகைய மேற்கு நாடுகள் வழங்கும் பாதுகாப்பைப் பயன்படுத்தித் தான் இங்கே மேற்கு எதிர்ப்புக் காட்டும் உறவுகளும் சிறிலங்கா போய் சுற்றுலா செய்கின்றனர் (சிறிலங்கா மட்டுமன்றி, பெல்ஜியம், ஜேர்மனி கூட அமெரிக்க பிரஜைகளுக்கு லெவல் 2  எச்சரிக்கை - exercise increased caution; ரஷ்யா, பெலாறஸ், ஆப்கானிஸ்தான், வெனிசுவெலா, லெவல் 4 - Do Not Travel ) இதெல்லாம் பழைய நியூஸ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா தொடங்கி பிரான்ஸ் பிரித்தானியா கனடா அமெரிக்கா வரை உள்ள சுதந்திர நாடுகள், அது பேன்ற நாடுகளை சேர்ந்த மக்கள் யாராவது ரஷ்யாவிற்கு சென்றிருந்தால் அங்கிருந்து உடனே வெளியேறுவது தான் அவர்களுக்கு பாதுகாப்பானது. இதில் புதின் ஆதரவு இலங்கை தமிழர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை கவனத்தில் கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பை தரும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க கோடிஸ்வரர்கள் அதிகமாக ரஷ்யாவில் வசிக்கின்றார்கள். அல்லது அவர்களின் இரண்டாவது வதிவிடம் ரஷ்யா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

சிவராமும் ஒரு பத்திரிகையாளர் தானே??  ஏன் கொல்லப்பட்டார்?? உங்கள் மொழியில் உளவாளி????

இலங்கையில் தமிழ் சிங்கள பத்திரிகையாளர்கள் பலர் காணாமல் போய்யுள்ளார்கள், நான் கேட்ட கேள்வி சிவராமை ஏன் இதற்கு புகுத்துகின்றீர்கள்?, சிவராமிற்கும் இந்த திரிக்கும் ஏதாவது தொடர்பிருக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, உடையார் said:

இலங்கையில் தமிழ் சிங்கள பத்திரிகையாளர்கள் பலர் காணாமல் போய்யுள்ளார்கள், நான் கேட்ட கேள்வி சிவராமை ஏன் இதற்கு புகுத்துகின்றீர்கள்?, சிவராமிற்கும் இந்த திரிக்கும் ஏதாவது தொடர்பிருக்கா

உங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை

மேலே முதலில் வன்னியை இதற்குள் இழுத்தது நீங்கள் தான். 

வன்னிக்கும் இந்த திரிக்கும் தொடர்பு இருப்பதாக நீங்கள் நினைத்தால் பத்திரிகையாளர் கைது சம்பந்தப்பட்ட இந்த திரியில் டி. சிவராமும் பேசப்படுவது சாத்தியமே. 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.