Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, nedukkalapoovan said:

அதுபோக கொலை செய்தவர்.. எப்படி சொறீலங்கா கடற்படைக் கண்காணிப்பை தாண்டி படகில் புங்குடுதீவுக்கு போனார்.. அதுவும் அந்த அதிகாலை வேளை..????!

இது எப்படி சாத்தியம் என விடயம் தெரிந்தவர்கள்தான் விளக்க வேண்டும். கடற்படை உறங்குநிலையில் வைக்கப்பட்டு உள்ளதா அல்லது விழிப்பு நிலையில் உள்ளதா? முன்பும் நடைபெற்ற கொலை ஒன்றில் சந்தேக நபர்கள் தீவுப்பகுதியை விட்டு சென்று விட்டார்கள் கொலை செய்துவிட்டு. நெடுந்தீவு படுகொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் தனி ஆளாக இவ்வளவும் செய்து உள்ளாரா? அதற்குரிய வளங்கள் எப்படி கிடைத்தன? 

  • Replies 98
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாணவி வித்தியாவின் கொலை எப்படி அரசியல் செல்வாக்குடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்ப வைக்கப்பட்டு/ மூடி மறைக்கப்பட்டதோ.....
அது போல் இதுவும் கடந்து போகும்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, valavan said:

ஆதாரங்களே இல்லாமல் அவர்தான் செய்திருக்கவேண்டும், இவர்தான் செய்திருக்கவேண்டும் என்று சொல்லிபோக குற்றங்களே புரியாத அளவிற்கு எம் இனம் யோக்கியமா என்ன?

இது கும்பல் கும்பலாய் பலபேரை படுகொலை செய்துவிட்டு இஸ்ரேல் அமெரிக்க சதி என்று அடுத்தவர்மேல் பழிபோடும் மத பயங்கரவாதிகளின் செயலை ஒத்தது.

நல்ல கருத்து Valavan

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
35 minutes ago, குமாரசாமி said:

மாணவி வித்தியாவின் கொலை எப்படி அரசியல் செல்வாக்குடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்ப வைக்கப்பட்டு/ மூடி மறைக்கப்பட்டதோ.....
அது போல் இதுவும் கடந்து போகும்....

இது பல விடயங்கள் மறைக்கப்படுது சரணடைந்தவர் தான் மாத்திரம் என்று பலரை காப்பாற்றுகிறார் அல்லது உண்மையான . கொலையாளிகளை தப்ப வைக்கிறார்.

மேலும் கனடாவில் இந்த ஐவருக்கும் எவ்வளவு காப்புறுதி செய்ய பட்டுள்ளது என்ற விபரமும் மிக முக்கியம் . 

ஒரு மனிதனால் அதுவும் தப்பிய  இரண்டு பேர் அதிலும் வயதானவர்களை ஓட ஓட வெட்டுவது என்பது முடியாத காரியம் அதிலும் அவர்கள் வீட்டு நாய் போராடியுள்ளது தனி ஒருத்தரால் நாயை கலைத்து அல்லது பயந்து ஓடுவது நாய்க்குரிய குணமல்ல .

Edited by பெருமாள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனால் நாய் இங்கு ஓடியுள்ளது எனவே ஒரு குழுவே சம்பந்த பட்டுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, தமிழ் சிறி said:

என்னைப் பொறுத்தவரை,  ஊருக்கு… சுற்றுலா போவது ஓகே.
நிரந்தரமாக தங்குவதற்கு அது சரியான இடம் அல்ல.

நான் அஞ்சாம் வகுப்பு படிக்கேக்கை கூடப்படிச்ச லேடீஸ்களோட விட்ட சேட்டையளுக்கும் 70/80 வயது போனாலும் வைச்சு பழி தீர்ப்பாங்கள் போல கிடக்கு....???? :thinking_face:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, பெருமாள் said:

இது பல விடயங்கள் மறைக்கப்படுது சரணடைந்தவர் தான் மாத்திரம் என்று பலரை காப்பாற்றுகிறார் அல்லது உண்மையான . கொலையாளிகளை தப்ப வைக்கிறார்.

மேலும் கனடாவில் இந்த ஐவருக்கும் எவ்வளவு காப்புறுதி செய்ய பட்டுள்ளது என்ற விபரமும் மிக முக்கியம் . 

கொல்லப்படடவர்களில் மூவர் சுவிஸ் நாட்டில் இருந்து சென்றவர்கள் என்று சொல்லப்பட்டது . தனி ஒருவர் செய்திருப்பார் என்பது சாத்தியமில்லை. அதிகாலை 4.30   என்றும்  5 00 க்கும்6.00  இடையில் என்றும் சொல்லப்படுகிறது . கைப்பற்ற பட நகைகள் 46பவுன் பெறுமதி என்றும்  பின் போலீஸ் தரப்பில் 26 என்றும் சொல்லப்படுகிறது.  ஊடகங்களின் திரிபு  படுத்தலா ? அல்லது மேலிடத்தின் கபளீகரமா ?   விடயம் மலிந்தால் சந்தைக்கு   வரும் காத்திருப்போம்.   .   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, நிலாமதி said:

இன்றைய காலங்களில் அரசியல் தப்பிக்க......

ஒன்றில் இது திருட்டுக்கான கொலை என்பர்.

இல்லையேல்.

கொலை செய்தவர் ஒரு மனநோயாளி அல்லது ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டவர், வேறொரு நாட்டிலிருந்து திருப்பியனுப்பப்பட்டவர் என செய்த குற்றத்தை சுலபமாக்கி விடுவர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுந்தீவில் ஐவர் படுகொலை ; கத்தி, கொலையாளியின் சாரம் கிணற்றிலிருந்து மீட்பு

Published By: Digital Desk 5

24 Apr, 2023 | 11:04 AM
image

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்று அனுமதியளித்தது.

அதனடிப்படையில் சந்தேக நபர் இன்று (24) அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

100 வயது மூதாட்டி படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுல செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 26 பவுண் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன.

01.jpg

  •  

https://www.virakesari.lk/article/153588

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, விசுகு said:

இவ்வறிக்கைகள் கடற்படையினர் மீது குற்றம் சுமத்தி கொலைகாரரை காப்பாற்றுவதற்கான அறிக்கைகள் போன்று அமைந்திருப்பதாக இன்றைய தினம் பேரினவாதிகளின் கைக்கூலிகளான ஈபிடிபி கும்பலின் கருத்துகள் வெளிப்படுகின்றன

நெடுந்தீவில், தீவுப்பகுதிகளில் கடற்படையோடு சேர்ந்து இந்த ஈ. பி. டி. பி. செய்யாத கொடூரங்களா? அவர் பதைப்பது; இதோடு சேர்ந்து தாங்கள் முன்பு செய்த கொலைகளும் வெளிவந்து மாட்டுப்பட்டுவிடுவோமோ என்பதும், இப்படியான இடங்களில் தான் தலையிட்டு படம் பிடித்துப்போட்டு ஓ..... இவர்தான் சரியான தலைவர் எனும் தோற்றத்தை ஏற்படுத்தி தனது அரசியலை நிலை நிறுத்துவதுமே. கோத்தாவான கோத்தாவே ஓரங்கட்டுப்பட்டுவிட்டார் இவர் எம்மாத்திரம்? அதுவரை குதிக்கட்டும் விடுங்கள்.

13 hours ago, nedukkalapoovan said:

பணத்துக்காக கொலை செய்தேன் அதுவும் பொலிஸ் பிடிக்காது என்று நம்பினேன்

அதாவது தான் கொள்ளைகாரனல்ல, பணத்துக்காக கொலை செய்யவில்லை, நீண்டநாள் பகையே கொலைக்கான காரணம் என நிஞாயப்படுத்தி, திசை திருப்ப முயன்றுள்ளார். போலீஸ் பிடிக்காது என நம்பியதற்கான காரணம்; வடமாகாண பொலிஸ்மா அதிபர் நேரடியாக அங்கு நின்று போலீசாருக்கு அறிவுறுத்தல் வழங்கியதால் என நினைக்கிறன். நின்று நிதானமாக பதட்டமில்லாமல் ஆறுபேரை தனியொருவனாக வெட்டிக்கொலை செய்து அவர்களது உடமைகளை எடுத்துச் சென்றிருக்கிறான் என்பது நம்பக்கூடியதாக இல்லை. ஒவ்வொருவராக வெட்டும்போது மற்றவர்கள் கத்தி கூப்பாடு போட்டிருப்பார்கள், கடற்படைக்கு கேட்க்காமல் காதில என்ன பஞ்சா அடைத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்? கொலையை தடுக்க, அவனை தாக்க  முயற்சித்திருப்பார்கள், அவனுக்கு காயமேற்படாமல் இருந்திருக்குமா? என்பது அடுத்த சந்தேகம். ஒரே நேரத்தில் எல்லோரும் தாக்கப்பட்டனரா? ஒருவனால் அது முடியுமா? நாங்கள் பழைய அனுபவங்களை வைத்து கருத்தெழுதினாலும், நியாயமாக எழக்கூடிய கேள்விகள் இவை. எங்கள் கருத்துக்களை வாசித்து போலீசார் கொலைகாரரை தேடுவதில்லை, அதனால் எங்கள் கருத்துக்கள் அவர்கள் கொலைகாரரை தேடுவதை தடுக்கவோ திசைதிருப்பவோ மாட்டாது என நான் உறுதியாக நம்புறேன்.  போக, நான் குற்றஞ்சாட்டும் எவரும் கடந்தகாலங்களில் நீதிமான்களாக இருக்கவில்லை. பல கொலைகாரர் தாங்களும் போலீசாரோடு சேர்ந்து தாங்கள் செய்த கொலை கொள்ளைகளை  தேடிய சம்பவங்களும் நிறைய உண்டு. போலீசார் தம் கடமையை செய்வார்கள், அவர்களுக்கு வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்க பொலிஸ்மா அதிபர், நீதித்துறை உண்டு இவருக்கு அங்கு என்ன வேலை? யார் இவர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்க? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுந்தீவு கொலை – கத்தி மீட்பு

நெடுந்தீவு கொலை – கத்தி மீட்பு

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) அனுமதியளித்தது.

அதனடிப்படையில் சந்தேக நபர் இன்றைய தினம் அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐவரின் சடலங்கள் கடந்த சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

100 வயது மூதாட்டி படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த மூதாட்டி வைத்திய சாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 51 வயதுடைய நபரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்களுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

https://athavannews.com/2023/1330720

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/4/2023 at 15:12, கிருபன் said:

உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வரும்போது சகல உண்மைகளும் வெளிவரும்தானே. வரும் செய்திகளைப் பார்த்தால் இந்த அப்பாவி முதியவர்களின் படுகொலைகள் தனிப்பட்ட பகையால் நடந்தது மாதிரி உள்ளது. அதுவும் புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்தான் சந்தேகநபர்.  வயதான காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் ஒருவருடனும் பகைவளர்க்கக்கூடாது.

பகை வளர்க்காவிட்டாலும், ஊரில் பணத்திற்காக கொலையோ அல்லது தனியா இருக்கும் வயோதிபவர்கள் தாக்கப்படுவதை நீங்கள் அறியவில்லையா?

நீங்கள் இப்ப யாழில் அடக்கி வாசிப்பதன் சூட்சுமம் இப்ப விளங்கிவிட்டது😂, தம்பி பழைய பகை மாறது🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வளவு விசயங்கள் நடந்து இருக்கு ... வழமை போல சிறிலங்கா கடற்படை செய்த செயல் என்ற பாணியிலேயே நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
அதற்காக நேவிகாரங்கள் ஒன்றும் நல்லவங்கள், நேர்மையானவர்கள் இல்லை.
6 மாதத்திற்கு முன்னம் இலங்கை போயிருந்தேன். யாழ் இந்து நண்பர்கள் குழு ஒன்று ஒரு இரவுப் பொழுதை கழிப்பத்திரக்காக நெடுந்தீவு போய் தங்கியிருந்தார்கள். என்னால் முதல் நாள் அவர்களுடன்  கலந்து கொள்ள முடியவில்லை அடுத்தநாள் காலை யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தில் இருந்து (குறிகாட்டுவான் பஸ்) என்று நினைக்கிறன் அதில் பயணம் செய்து  பண்ணை பாலம் ஊடாக அல்லைப்பிட்டி, வேலணை, புங்குடுதீவு, குறிகாட்டுவான் வந்தடைந்தால் நான் போகவேண்டிய நெடுந்தீவு படகு ஏற்கனவே சென்றாகி விட்டது. 
அடுத்த படகுசேவை இனிமேல் இல்லையென்றும், சிலவேளைகளில் பின்னேரம் ஒரு படகு போகலாம் என்றும்  அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அங்கிருந்த கடற்படை சிப்பாய்களும் மக்களோடு சாமானியமாக பேசி பழகியதை காணக்கூடியதாக இருந்தது. 
நெடுந்தீவு சென்றிருந்த நண்பர்களும் பிரத்தியேகமாக ஒரு speed boat  ஒன்றை 12 ஆயிரம் ரூபாய்க்கு ஏற்பாடுசெய்திருந்தார்கள் (அவர்களே எங்களை திரும்பவும் நெடுந்தீவில் இருந்து பின்னேரம் கூட்டி வருவதாக ஏற்பாடு) ஒரு முழுப்பொழுதையும் நெடுந்தீவில் தான் கழித்தோம்.
படகு பயணம், புவியியல் அமைப்பு, அங்கிருக்கும் வசதிகளை வைத்து பார்க்கும் போது இனிவரும் காலங்களில் பெரிதாக இளையவர்கள் அங்கே தங்கி வசிப்பார்களா என்பதே கேள்விக் குறியாகத்தான் எனக்கு தெரிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இது எப்படி சாத்தியம் என விடயம் தெரிந்தவர்கள்தான் விளக்க வேண்டும். கடற்படை உறங்குநிலையில் வைக்கப்பட்டு உள்ளதா அல்லது விழிப்பு நிலையில் உள்ளதா? முன்பும் நடைபெற்ற கொலை ஒன்றில் சந்தேக நபர்கள் தீவுப்பகுதியை விட்டு சென்று விட்டார்கள் கொலை செய்துவிட்டு. நெடுந்தீவு படுகொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் தனி ஆளாக இவ்வளவும் செய்து உள்ளாரா? அதற்குரிய வளங்கள் எப்படி கிடைத்தன? 

6 மாதங்களுக்கு முன்னம் நான் முதல் முறையாக நெடுந்தீவு போகும் போது தனியார் படகு ஒன்றில் தான் இருவழி பாதை பயணத்தையும் செய்தேன். 
போகும் போதும் சரி வரி,  திரும்பி வரும் பொழுதும் சரி எந்த வித கடற்படை ஏறு / இறங்கு தளங்களை பாவிக்கவில்லை. என்னை ஏற்றிய படகு ஜெட்டிக்கு குறிகாட்டுவான் கடைத்தெரு அருகிலேயே இருக்கும் கரையில் வைத்து தான் ஏற்றியது. இறக்கும் போதும் கூட நண்பர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு அருகில் பொதுவான ஒரு இடத்தில் தான் இறங்கிவிட்டார்கள். அரச படைகள் யாரையும் காணக்கூடிய மாதிரி இருக்கவில்லை.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, Sasi_varnam said:

6 மாதங்களுக்கு முன்னம் நான் முதல் முறையாக நெடுந்தீவு போகும் போது தனியார் படகு ஒன்றில் தான் இருவழி பாதை பயணத்தையும் செய்தேன். 
போகும் போதும் சரி வரி,  திரும்பி வரும் பொழுதும் சரி எந்த வித கடற்படை ஏறு / இறங்கு தளங்களை பாவிக்கவில்லை. என்னை ஏற்றிய படகு ஜெட்டிக்கு குறிகாட்டுவான் கடைத்தெரு அருகிலேயே இருக்கும் கரையில் வைத்து தான் ஏற்றியது. இறக்கும் போதும் கூட நண்பர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு அருகில் பொதுவான ஒரு இடத்தில் தான் இறங்கிவிட்டார்கள். அரச படைகள் யாரையும் காணக்கூடிய மாதிரி இருக்கவில்லை.

நன்றி அனுபவ விளக்கத்திற்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, உடையார் said:

நீங்கள் இப்ப யாழில் அடக்கி வாசிப்பதன் சூட்சுமம் இப்ப விளங்கிவிட்டது😂, தம்பி பழைய பகை மாறது🤣

அதுக்கு வேறு காரணம்!

கருத்து எழுதுபவர்களுக்கு அறிவூட்ட எழுதுவதில்லை. கருத்து எழுதாமல் வாசிப்பவர்களுக்கு தெளிவூட்ட எழுதுவேன். ஆனால் இப்போது வாசிப்பவர்களும் குறைவு. 

அத்தோடு எழுதுபவர்களில் அதிகம் பேர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் எழுதுகின்றார்கள். வாயில் நுரைதள்ளாவிட்டாலும், கைவிரல்கள் வலிக்க எழுதுகின்றார்கள். அந்தத் தன்னம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்றால் அவர்கள் தங்களைப்பற்றி வைத்திருக்கும் சில வகையான பாவனைகளால்தான். அவற்றை ஏன் குலைக்கவேண்டும்?

5 hours ago, உடையார் said:

பகை வளர்க்காவிட்டாலும், ஊரில் பணத்திற்காக கொலையோ அல்லது தனியா இருக்கும் வயோதிபவர்கள் தாக்கப்படுவதை நீங்கள் அறியவில்லையா?

அறிந்தவைதான். ஆனால் நான் இருக்குமிடத்தில் அடிக்கடி கொலைகள் நடக்கின்றன. அதையெல்லாம் பார்த்தால் நிலவுக்குப் பயந்து பரதேசம் போன கதையாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/4/2023 at 18:59, nedukkalapoovan said:

தீவகத்திற்குள் எவர் புதிதாக நுழைந்தாலும் சில மணித்துளிகளுக்குள் சொறீலங்கா கடற்படைக்கு விபரமான விடயம் போய்விடும். தீவகம் முழுவதும் ஈபிடிபி ஒட்டுக்குழு ஆதரவோடு சொறீலங்கா கடற்படைக்கு உளவு சொல்ல ஆக்கள் இருக்கினம்.

மேலும்.. நெடுந்தீவுக்கு போகும் வழி எங்கும் தடை முகாம்கள் உள்ளன. மண்டைதீவில் ஆரம்பித்து கடைசி இறங்கு துறை வரை. 

சகோ நீங்கள் சொல்லும் கருத்துக்கு எதிர் கருத்து எழுதுகிறேன் என்று பார்க்காதீர்கள். என்னுடைய அனுபவத்தை பதிவிடுகிறேன். 
சில மாதங்களுக்கு முன்னேயான என்னுடைய நெடுந்தீவு பயண அனுபவத்தில் நீங்கள் கூறியதைப்போல பல விடயங்கள் இருக்கவில்லை.

யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்தில் இருந்து குறிகாட்டுவான் ஜெட்டி போகும் வரையிலும் பஸ் வண்டியை மறித்து சோதனை செய்யவோ, நெடுஞ்சாலை வழியே முகாம்லோ  இருக்கவில்லை. ஆனால் ஓரிரண்டு மினி முகாம்கள் (பெரிய வீடுகளை கொண்டதாக) காணக்கூடியமாதிரி இருந்தது.  

குறிக்கட்டுவான் ஜெட்டியில் கடற்படை ராணுவமும், ஒரு சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். அங்கு ஒன்றும் அடையாள அட்டை பரிசோதனை, உடல், பை  பரிசோதனை என்று எதுவும் இருக்கவில்லை. அவர்கள் அங்கே நின்று மக்கள் கிரமமாக படகினுள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் உதவியாக நிட்கிறார்கள். சிறுவர்கள் தாமரை மலர்கள் விற்கிறார்கள். சுவையான சைவ சாப்பாட்டு கடையும், தொப்பிகள் விற்கும் ஒரு முஸ்லீம் சகோதரரும் இன்னும் ஒரு சில கடைகளும் இயங்கிக்கொண்டு இருந்தன. சைவ சாப்பாட்டு கடை கல்லாவில் வேலை செய்யும் இளம் பெண் வனப்புடன் கூடிய கிராமத்து அழகு தேவைதை. நான் டிப்ஸ் காசு கொடுத்ததையும் எடுக்கவில்லை.  🥰
அதே போல அங்கிருந்து சற்று முன்னால்  குறிக்கட்டுவான் பஸ் நிலையம் அருகே ஒரு போலீஸ் நிலையம் இருக்கிறது. யாரும் யாரையும் பொருட்படுத்தியதாக எனக்கு ஞாபகம் இல்லை.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"இது நேவிக்காரன் வேலை, பொலிஸ்காரன் வேலை, டக்ளஸ் குழுவின் வேலை" என்று உறுதியாக வாதாடும் அப்புகாத்து மாரைப் பார்க்கையில், இன்னும் ஊரில் வசிக்கும் நம்மவர், தாம் விட்டு விட்டு வந்த நிலையிலேயே உறைந்திருப்பதான கற்பனையை அப்புகாத்து மார் கொண்டிருப்பது தெரிகிறது.

போய் வந்தவர்களின் தகவல்களின் படி, ஊர் மாறி விட்டது. எங்கள் தாயக/ஊரக மக்களில் சிலர் ஒட்டுண்ணிகளாகவும், சிலர் கொல்லும் இரை கௌவிகளாகவும் இருக்கின்றனர். இந்த நிலைக்கு பிரதான காரணம், "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற எளிமையான உண்மையை மறந்து, எல்லாவற்றுக்கும் "சிங்களவன் தான் காரணம்" என்ற அர்த்தமற்ற கோஷம்!

நோயின் தோற்றுவாயையே இனங்காண இயலாமல், அரசியல் நோக்கத்திற்காக smoke screen போட்டு  வாதிட்டுக் கொன்டிருந்தால், தாயக தமிழர்களின் நிலை இன்னும் கீழே செல்லும்!

  • Like 3
  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, கிருபன் said:

அத்தோடு எழுதுபவர்களில் அதிகம் பேர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் எழுதுகின்றார்கள். வாயில் நுரைதள்ளாவிட்டாலும், கைவிரல்கள் வலிக்க எழுதுகின்றார்கள். அந்தத் தன்னம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்றால் அவர்கள் தங்களைப்பற்றி வைத்திருக்கும் சில வகையான பாவனைகளால்தான். அவற்றை ஏன் குலைக்கவேண்டும்?

அது ! 😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, Sasi_varnam said:

சகோ நீங்கள் சொல்லும் கருத்துக்கு எதிர் கருத்து எழுதுகிறேன் என்று பார்க்காதீர்கள். என்னுடைய அனுபவத்தை பதிவிடுகிறேன். 
சில மாதங்களுக்கு முன்னேயான என்னுடைய நெடுந்தீவு பயண அனுபவத்தில் நீங்கள் கூறியதைப்போல பல விடயங்கள் இருக்கவில்லை.

யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்தில் இருந்து குறிகாட்டுவான் ஜெட்டி போகும் வரையிலும் பஸ் வண்டியை மறித்து சோதனை செய்யவோ, நெடுஞ்சாலை வழியே முகாம்லோ  இருக்கவில்லை. ஆனால் ஓரிரண்டு மினி முகாம்கள் (பெரிய வீடுகளை கொண்டதாக) காணக்கூடியமாதிரி இருந்தது.  

குறிக்கட்டுவான் ஜெட்டியில் கடற்படை ராணுவமும், ஒரு சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். அங்கு ஒன்றும் அடையாள அட்டை பரிசோதனை, உடல், பை  பரிசோதனை என்று எதுவும் இருக்கவில்லை. அவர்கள் அங்கே நின்று மக்கள் கிரமமாக படகினுள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் உதவியாக நிட்கிறார்கள். சிறுவர்கள் தாமரை மலர்கள் விற்கிறார்கள். சுவையான சைவ சாப்பாட்டு கடையும், தொப்பிகள் விற்கும் ஒரு முஸ்லீம் சகோதரரும் இன்னும் ஒரு சில கடைகளும் இயங்கிக்கொண்டு இருந்தன. சைவ சாப்பாட்டு கடை கல்லாவில் வேலை செய்யும் இளம் பெண் வனப்புடன் கூடிய கிராமத்து அழகு தேவைதை. நான் டிப்ஸ் காசு கொடுத்ததையும் எடுக்கவில்லை.  🥰
அதே போல அங்கிருந்து சற்று முன்னால்  குறிக்கட்டுவான் பஸ் நிலையம் அருகே ஒரு போலீஸ் நிலையம் இருக்கிறது. யாரும் யாரையும் பொருட்படுத்தியதாக எனக்கு ஞாபகம் இல்லை.

நீங்கள் சொல்லும் அணைத்தும் சரியாயினும் யாழ் குடாநாடு ஒருவித இறுக்ககமான கண்காணிப்பினுள் உள்ளது. நீங்கள் சொன்ன அழகுதேவதை கூட கண்காணிகளில் ஒருவராக இருக்கலாம்.

இறுக்கமான கண்காணிப்பில் இருப்பதை விடுமுறையில் போகும் நாம் அறியோம். அந்த கண்காணிப்பு வலையில் உள்ள அதீத நம்பிக்கை காரணமாக, சிங்கள பாதுகாப்பு படை அலட்டிக் கொள்ளாதது போல் காட்டிக் கொள்கிறது.

புலிகள் சார்பாக ஒரு கருத்து வைத்தால், கண்காணிப்பு வலையின் வீரியம் உணர்வீர்கள். நண்பர்கள் கொழும்பில் சொல்லியே அனுப்புவார்கள், வாயை திறவாதே என்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Nathamuni said:

இருக்கலாம் நாதம்ஸ் 👍, நான் மறுக்கவில்லை. ஆனால் அங்கே போய் நின்று யாரும் புலிகளின் போராட்ட ஞாயங்களை கதைப்பார்களா தெரியவில்லை. தவிர எனக்கு இன்னுமே இந்த செய்திகளின் தகவல்கள் சரியாக தெரியவில்லை...
இந்த திரிகளில் சுவிஸ், கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளின் பெயர் அடிபட்டது. பிறகு அநேகர் உள்ளூர் வயோதிபர்கள் என்று செய்தி, கனடாவில் காப்புறுதி செய்த கோஷ்டி என்று ஒரு செய்தி!!
ஆளை ஆள் சளைக்காமல் கேட்டது, கேட்காதது என்று எல்லாவற்றையும் பதிந்து தள்ளுகிறார்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Sasi_varnam said:

கருத்துக்களம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதை புரிந்து அதற்கமைய நமது கருத்துகளை வைப்போம் அல்லது தவிர்ப்போம்.

ஆனால் அவர்கள் கருத்தை சிறுமைப்படுத்த, நான் பெரிய பிஸ்தா இல்ல என்பதே எனது நிலைப்பாடு.

நான் தவறாயின், அறியத்தாருங்கள், திருத்திக் கொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Sasi_varnam said:

 கனடாவில் காப்புறுதி செய்த கோஷ்டி என்று ஒரு செய்தி!!

கொலைக்கு 

தற்கொலைக்கு

காப்புறுதிப்பணம் எட்டாக்கொம்பு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

நீங்கள் சொல்லும் அணைத்தும் சரியாயினும் யாழ் குடாநாடு ஒருவித இறுக்ககமான கண்காணிப்பினுள் உள்ளது. நீங்கள் சொன்ன அழகுதேவதை கூட கண்காணிகளில் ஒருவராக இருக்கலாம்.

இறுக்கமான கண்காணிப்பில் இருப்பதை விடுமுறையில் போகும் நாம் அறியோம். அந்த கண்காணிப்பு வலையில் உள்ள அதீத நம்பிக்கை காரணமாக, சிங்கள பாதுகாப்பு படை அலட்டிக் கொள்ளாதது போல் காட்டிக் கொள்கிறது.

புலிகள் சார்பாக ஒரு கருத்து வைத்தால், கண்காணிப்பு வலையின் வீரியம் உணர்வீர்கள். நண்பர்கள் கொழும்பில் சொல்லியே அனுப்புவார்கள், வாயை திறவாதே என்று.

நீங்கள் சொல்வது அத்தனையும் சரியே.
ஊரிலில் இருந்து புலம்பெயர் நாடுகளுக்கு விருந்தினனர்களாக வந்து செல்பவர்கள் கூட இராணுவவிடயமாக ஏதாவது கேட்டால் வாயே திறக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Sasi_varnam said:

ஒரு முழுப்பொழுதையும் நெடுந்தீவில் தான் கழித்தோம்.
படகு பயணம், புவியியல் அமைப்பு, அங்கிருக்கும் வசதிகளை வைத்து பார்க்கும் போது இனிவரும் காலங்களில் பெரிதாக இளையவர்கள் அங்கே தங்கி வசிப்பார்களா என்பதே கேள்விக் குறியாகத்தான் எனக்கு தெரிந்தது.

நான் குழுவாக இலங்கை சென்றிருந்த போது நானும் சிலரும் நெடுந்தீவுக்கு கடற்பயணம் செய்து பார்க்க ஆசைபட்டோம். ஆனால் பெரும்பான்மையினர் இலங்கை படகு பயணம் பாதுகாப்பானது இல்லை என்று பயந்ததினால் போக முடியவில்லை.
இலங்கையில் படகு பயணம் செய்வதற்கு பாவிக்கபடுபவை ரஷ்ய தயாரிப்பு படகுகளாக இருக்கலாம்

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.