Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத், கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகனும், பட்டத்துக்கு இளவரசருமான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார்.

அவர் மன்னராக முடிசூட்டும் விழா அடுத்த மாதம் 6 ஆம் திகதி லண்டனில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்விழாவில் அரசு குடும்பத்தினர் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2ஆவது மகனும், இளவரசருமான ஹாரிக்கு 10 ஆவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர் அரச குடும்பத்தினரில் 10ஆவது வரிசைக்கு பின்னால் அமர்ந்திருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை சார்லஸ், சகோதரரான இளவரசர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகிய ஹாரி, தனது மனைவி மேகன், குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிசூட்டு விழா 3 நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இளவரசர் ஹாரி, தந்தையின் முடிசூட்டு விழாவில் மட்டும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/250803

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு கறுப்பு ஆடு இன்னொரு கறுப்பு ஆட்டுடன் சேர்ந்து ஆடுது! பாவம் இந்தக் கறுப்பு ஆடு இருக்கவேண்டிய இடம் வேறு. மற்றக் கறுவல் ஆடு தன் புத்திய காட்டும்போது இந்தக் கறுப்பு ஆட்டுக்கு புரியும்.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த உலகில் மன்னர் முறையே இருக்கூடாது என நினைப்பவன் நான்...மக்கள் வரிப்பணத்தில் மன்னர்,மகாராணி முடிசூட்டு என ஆடம்பர விழாக்கள் இருப்பின் ஜனநாயகம் ஏன்,எதற்கு?

நிற்க......

எனது மண்ணிலும் இந்திய மண்ணிலும் ஏனைய ஆசிய நிலப்புகளை நல்லாட்சி செய்த  மாமன்னர்களை அழித்து நாசம் செய்து சூறையாடி , தனி இன,தனிமனித உரிமைகளை அடக்க வழி செய்து விட்டு இன்று தனக்கென அரச முடி சூட்டு விழா செய்கின்றீர்களோ????

நாசமாய் போக......:upside_down_face:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்

Published By: NANTHINI

30 APR, 2023 | 09:33 AM
image

 

(லியோ நிரோஷ தர்ஷன்)

3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை பிரித்தானியா செல்கிறார்.

சுமார் 70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையை அலங்கரித்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆவது சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார். 

இதன் பிரகாரம், 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்வரும் சனிக்கிழமை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

முடிசூட்டு விழாவின் பின்னர், ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மன்னராக 3ஆவது சார்ள்ஸ் மற்றும் ராணியாக அவரது மனைவி கமிலாவும் திகழ்வார்கள். எவ்வாறாயினும், இந்த முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் பிரித்தானியா செல்லவுள்ள நிலையில் பக்க நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் உட்பட நிகழ்வில் கலந்துகொள்ளும் பிற நாட்டு தலைவர்களையும் சந்தித்து, இதன்போது ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/154122

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முடிசூட்டு விழாவில் மன்னர் சார்லஸ் அணியவிருக்கும் தங்க ஆடை !

பிரிட்டன் மன்னர் சார்லஸ், முடிசூட்டு விழாவின் போது அணியவிருக்கும் நூற்றாண்டு பாரம்பரியமிக்க தங்கத்திலான ஆடைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வருகிற 6ஆம் திகதி முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. அதில் மன்னர் சார்லஸ் இரண்டு வரலாற்று சிறப்பு மிக்க ஆடைகளை அணியவிருக்கிறார்.

King to be covered in golden robes weighing 4kg for moment of crowning | The  Independent

இதில் ஒரு ஆடை 1821ஆம் ஆண்டு அப்போதைய மன்னர் 4ஆம் ஜார்ஜுக்காகவும், மற்றொன்று 1911ஆம் ஆண்டு மன்னர் 5ஆம் ஜார்ஜுக்காகவும் வடிவமைக்கப்பட்டது.

இந்த ஆடைகளை ராணி எலிசபெத் அவரது முடிசூட்டு விழாவின் போது அணிந்திருந்த நிலையில், 70 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஆடைகள் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பயன்படுத்த தயாராகி வருகின்றன.

When was Queen Elizabeth II's coronation and what happened on the day? | UK  News | Metro News

https://thinakkural.lk/article/251756

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோஹினூர் வைரம் பிரிட்டன் அரசர் முடிசூட்டு நிகழ்வில் பயன்படுத்தப்படாது - ஏன் தெரியுமா?

Queen Mary's Crown

பட மூலாதாரம்,ROYAL COLLECTION TRUST

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஷான் காக்லன்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் பயன்படுத்தப்படாது என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக, அரசரின் மனைவி கமீலாவுக்கு அரசி மேரியின் கிரீடம் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த கிரீடம் லண்டன் டவரில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு முடிசூட்டு விழாவுக்காக அளவு மாற்றப்படுகிறது.

சமீபகாலத்தில் இப்படி கிரீடம் அளவு மாற்றப்படுவது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது. அரசி இரண்டாம் எலிசபெத்தின் வைரங்களும் இதில் சேர்க்கப்படுகின்றன. கமீலா வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் அரசருக்கு அருகில் முடி சூட்டப்படுவார்.

அரசர் அரசி அணியும் கிரீடங்கள்

மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், அவருடைய அணிகலன்களில் உள்ள வைரங்களைக் கொண்டு அரசி கமீலா சூடும் கிரீடம் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட குல்லினன் III, IV, V என்னும் வைரங்கள் ஆகும்.

முடி ஆபரணங்களில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை அரசர் மூன்றாம் சார்ல்ஸ் அணிந்திருப்பார். 1661-இல் அரசர் இரண்டாம் சார்ல்ஸ் அணிந்திருந்த கிரீடம் உள்நாட்டுப் போரால் அழிந்துபோன பின் அவருக்காக உருவாக்கப்பட்ட கிரீடம் இது.

அவருக்குப் பின் மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத் இதை அணிந்து வந்தார். ஆனால் அவருக்குப் பின் வரும் அரசர்கள் தங்களுக்குப் பொருந்தும் வகையில் கிரீடங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

Koh-i-Noor diamond set in the crown

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட இந்த கிரீடம் முடி சூட்டு விழாவில் பயன்படுத்தப்படாது

கோஹினூர் வைரத்தின் சர்ச்சை

உலகிலேயே அதிக விலைமதிக்கத்தக்க வைரக்கற்களில் ஒன்றான கோஹினூர் வைரக்கல் இந்த முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்படவில்லை.

அதற்குக் காரணம், இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்னும் சர்ச்சை அரசி எலிஸபெத் முடிசூட்டிய காலத்தில் இருந்தே நிலவி வருகிறது. இதற்குப் பதிலாகத்தான் கமீலாவுக்கு அரசி மேரியின் கிரீடம் சூட்டப்படுகிறது.

கோஹினூர் வைரம் உலகின் மிகப் பழைமையான வைரம் அல்ல. இருந்தும் அதைச் சுற்றி சர்ச்சைகள் இன்றளவும் சுழன்று வருவதற்குக் காரணம் இருக்கிறது. இந்த வைரம் இந்தியாவில் இருந்து நாதர்ஷா என்னும் இரானிய மன்னனால் 1739ஆம் ஆண்டில் எடுத்துச் செல்லப்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

The St Edward's Crown

பட மூலாதாரம்,REUTERS / HIS MAJESTY KING CHARLES III

 
படக்குறிப்பு,

முடி ஆபரணங்களில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை அரசர் மூன்றாம் சார்ல்ஸ் முடி சூட்டு விழாவில் அணிந்திருப்பார்

அதன் பிறகு பல படையெடுப்புகளையும் சூறையாடல்களையும் கண்ட கோஹினூர் வைரம் இறுதியாக 1849இல் பஞ்சாப் இணைப்பின்போது பிரிடிஷ் கவர்னர் ஜெனரலின் கைகளுக்கு வந்தது.

அப்போது இந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றியிருந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு, வீழ்த்தப்பட்ட ஓர் இளம் மன்னன் இதைப் பரிசாக அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் கோஹினூர் பற்றிய ஒரு புத்தகத்தின் இணை எழுத்தாளரும் பிபிசி செய்தியாளருமான அனிதா ஆனந்த் கூறும்போது, “ஈட்டிமுனையில் இருக்கும்போது வழங்கப்படுவதை எல்லாம் பரிசு என்று எடுத்துக் கொள்ளலாமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று கூறுகிறார்.

1850களில் இளவரசர் ஆல்பர்ட் இந்த வைரத்தை பளபளப்பாக்கி அரசி இரண்டாம் எலிசபெத்தின் ஆபரணத்தில் பதித்தார். அதிலிருந்து பட்டத்து ஆபரணங்களுள் ஒன்றாக கோஹினூர் வைரம் கருதப்படுகிறது. பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும்கூட இந்த வைரத்தை தங்களுடையது என்று உரிமை கோரி வருகின்றன.

https://www.bbc.com/tamil/articles/cx04le8jwpjo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரித்தானிய உறவுகளே…
நாளைக்கு மன்னரின் முடி சூட்டு விழாவுக்கு எத்தனை பேரும்,
ரணிலுக்கு கறுப்புக் கொடி காட்ட எத்தனை பேரும் செல்கிறீர்கள் என்று
முன்பே சொன்னால்…. எல்லாருக்கும், சுடச் சுட கொத்து ரொட்டி அனுப்பி வைக்கப் படும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு ஜனநாயக நாட்டில் ஏன் முடி சூட்டு விழா?
இந்த அரச பரம்பரையை போற்றி  புகழ்ந்து உச்சத்தில் வைத்திருப்பதால் நாடு என்ன நன்மையை பெறுகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா !!

இன்று மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா !!

கடந்த செப்டம்பரில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின்னர் வேல்ஸ் இளவரசரான மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.

74 வயதான மூன்றாம் சார்லஸ் மன்னர் இன்று (சனிக்கிழமை) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் முடிசூடப்படவுள்ளார்.

இந்த ஆண்டு முடிசூட்டு விழாவில் அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 100 அர தலைவர்கள் உட்பட சுமார் 2,200 அழைக்கப்பட்ட விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர்.

மன்னன் சார்லஸின் இரண்டாவது மகனான சசெக்ஸ் பிரபு இளவரசர் ஹரி, முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் இருந்து பிரிட்டன் வந்தடைந்தார்.

அரச குடும்பத்தின் தற்போதைய பங்கை பிரதிபலிக்கும் வகையில் முடிசூட்டு விழாவின் சில அம்சங்கள் நவீனப்படுத்தப்பட்டாலும், 1953 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் காணப்பட்ட நீண்டகால மரபுகள் இம்முறையும் தொடரும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

கிங் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து சிறப்பு ஊர்வலமாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு வர உள்ளனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஏற்கனவே வீதியின் இருபுறங்களிலும் பெருந்திரளான மக்கள் திரண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2023/1331442

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முடிசூட்டு விழாவில் மன்னர் சார்ள்ஸ் அணியவிருக்கும் தங்க ஆடைகள் தயார் -  Tamilwin

animiertes-musik-bild-0061.gifanimiertes-musik-bild-0126.gif animiertes-musik-bild-0095.gif animiertes-musik-bild-0211.gif

ராஜாதி ராஜ, ராஜ குலோத்துங்க... ராஜ மார்த்தாண்ட... 
ராஜ கம்பீர... சார்ள்ஸ் மன்னர் வருகிறார்... பராக், பராக், பராக். 

அந்தப்புர  அழகிகளை... மேடைக்கு வரும் படி, அழைக்கின்றோம். 😂 🤣  animiertes-lachen-bild-0116.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு  விழா. நேரடி ஒளிபரப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முடிசூட்டும் கீதம் இசைக்க மன்னர் சார்ல்ஸ் வெஸ்ட்மினிஸ்டர் அபேய்க்குள் சென்றுள்ளார்

Published By: RAJEEBAN

06 MAY, 2023 | 03:50 PM
image

1902ம் ஆண்டு ஏழவாது எட்வேர்ட் மன்னரின் முடிசூட்டும் நிகழ்வின்போது ஹபேர்ட் பரி என்பவரால் எழுதப்பட்ட முடிசூட்டும் கீதம்  ஒலிக்க மன்னர் சார்ல்ஸ் மகாராணி கமீலாவுடன் வெஸ்ட்மினிஸ்டர் அபேய்க்குள் சென்றுள்ளார்  

af240a85-6a00-4211-ac6d-4999c069be08.jpg

நான் மகிழ்ச்சியடைந்தேன் என்ற இந்த கீதம்  1902 முதல் அனைத்துமுடிசூட்டும் நிகழ்வுகளிலும் பாடப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/154655

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னர் சார்ல்ஸ் முடிசூடினார்

Published By: RAJEEBAN

06 MAY, 2023 | 04:52 PM
image

வெஸ்ட் மினிஸ்டர்அபேயில் இடம்பெற்ற நிகழ்வில் மன்னர் சார்ல்ஸ்   முடிசூடினார்.

FvcPMiMXoAEre0h.jpg

FvcPMiNXsAIpcqR.jpg

FvcPPLOXsAEpUJF.jpg

ஏழுதசாப்தத்தின் பின்னர் பிரிட்டனின்புதிய மன்னர் முடிசூடிக்கொண்டுள்ளார்.

கன்டபெரி பேராயர் ஜஸ்டின் வெல்பே செயின்ட் எட்வேர்ட்டின் கிரீடத்தை மூன்றாவது சார்ல்ஸ் மன்னரின் தலையில் வைத்தார்.இதுவே முடிசூடும் நிகழ்வின் மிகவும் முக்கியமான பகுதி

இதன்போது  பேராயர் அரசர்களின் ராஜாவும், பிரபுக்களின் ஆண்டவருமே, இந்த கிரீடமே, உங்களை ஆசீர்வதிப்பாயாக, நாங்கள் உம்மை மன்றாடுகிறோம், அதனால் உமது அடியான் சார்லஸைப் பரிசுத்தப்படுத்துங்கள், உங்கள் கிருபையினால் முடிசூட்டப்படுவதற்காக, அரச மாட்சிமையின் அடையாளமாக அவரது தலையில் இன்று வைக்கிறீர்கள். அபரிமிதமான கிருபையினாலும், சகல பிரபுத்துவ நற்பண்புகளினாலும் நிரம்பியவர்; அவர் மூலமாக எல்லாவற்றின் மீதும் மேன்மையாக வாழ்ந்து, முடிவற்ற உலகம், ஒரே கடவுள், ஆமென் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/154666

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கமீலாவும் முடிசூடினார்

Published By: RAJEEBAN

06 MAY, 2023 | 04:56 PM
image

மகாராணி கமீலாவிற்கு மூடிசூடும் நிகழ்வுகள் தற்போது இடம்பெறுகின்றன.

கமிலாவிற்கு மேரிமகாராணியின் கிரீடத்தை பயன்படுத்தி முடிசூட்டியுள்ளனர்.

முதல்தடவையாக இந்த நிகழ்விற்கு புதியகிரீடம் பயன்படுத்தப்படாதமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/154670

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தையின் முடிசூட்டும் நிகழ்வில் இளவரசர் ஹரி

Published By: RAJEEBAN

06 MAY, 2023 | 03:28 PM
image

மன்னரின் முடிசூட்டும் நிகழ்வில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளவரசர் ஹரியும் கலந்துகொண்டுள்ளார்.

மனைவி மேகன் இல்லாமல் வெஸ்ட்மினிஸ்டர் அபேய்க்கு ஹரிவருகை தந்துள்ளார்.

ஹரி மகிழ்ச்சியுடன் பதற்றமற்றவராக காணப்படுகின்றார் .

fba8fba3-f5c4-4805-bb20-389fb72af80e.jpg

https://www.virakesari.lk/article/154650

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1000 Years-ஆக முடிசூட்டு விழா நடக்கும் இடம் இதுதான்; Coronation Function எப்படி நடக்கும்? Explained

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

image

பாவம் தாயில்லா பிள்ளை.
தனிச்சுப் போனான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, குமாரசாமி said:

image

பாவம் தாயில்லா பிள்ளை.
தனிச்சுப் போனான்.

சேர்ந்த கூட் டாளிகள் சரியில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, நிலாமதி said:

சேர்ந்த கூட் டாளிகள் சரியில்லை. 

அப்படி பார்த்தால் தகப்பன் சார்ள்ஸ் இன்னும் மோசமானவரெல்லோ.....? :rolling_on_the_floor_laughing:

சார்ள்ஸ்ன் அந்தக் காலத்து "ஆபிரிக்கன் நியூஸ்" போடவா? :alien: :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild

கூர்கொண்ட வேலனைப் போற்றாம லேற்றங்கொண் டாடுவிர்காள்
   
போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவுந்
      
தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிைகையும்
         
ஆர்கொண்டு போவரை யோகெடு வீர்நும் மறிவின்மையே. 

Gerührt, aber gefasst: Charles ist der neue König von England

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழாவுக்கு இளவரசர் ஹாரியுடன் இளவரசி மேகன் வராதது ஏன்?

பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்ற இளவரசர் ஹாரி தனியாக புறப்பட்டு அமெரிக்காவுக்கு சென்றார்.

இளவரசர் ஹாரியின் தந்தையும் அரசருமான மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தனியாக வந்த இளவரசர் ஹாரி, அவரது சகோதரர் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து இரண்டு வரிசைகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார்.

அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வரும் இளவரசர் ஹாரி, தனது மனைவி மேகனை இந்த விழாவுக்கு அழைத்து வரவில்லை. மேலும் லண்டனில் முடிசூட்டு விழா முடிவடைந்த உடனேயே அவர் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

முடிசூட்டு விழா முடிவடைந்த பின், பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் அரசர் தோன்றும் நிகழ்ச்சிக்கு அவர் அழைக்கப்படவில்லை என்பதை பிபிசி புரிந்துகொள்கிறது.

தனி காரில் புறப்பட்ட இளவரசர் ஹாரி

அவர் சர்ச்சைக்குரிய வகையில் எழுதி வெளியிட்ட சுயசரிதையில், அவருக்கு அரச குடும்பத்தில் நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்த நிலையில், அந்த சுயசரிதை வெளியான பிறகு பொதுவெளியில் குடும்ப உறுப்பினர்களுடன் அவர் தற்போதுதான் முதன்முதலாகத் தென்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை பிரிட்டனுக்கு வந்த இளவரசர் ஹாரி, சனிக்கிழமை இரவே அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜலெஸ் நகருக்குச் சென்றடைந்தார்.

அவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதாக பி.ஏ. செய்தி முகமை தெரிவித்தது.

முடிசூட்டு நிகழ்ச்சி நடைபெற்ற சிறிது நேரத்திலேயே வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு வெளியில் அவர் தனியாக ஒரு காரில் புறப்பட்டுச் சென்றதை காண முடிந்தது.

அதன் பின் ஒன்றரை மணிநேரம் கழித்து, அரசர் சார்ல்ஸ், அவரது மனைவி, வேல்ஸ் இளவசரர், அவரது குழந்தைகள் மற்றும் அரச குடும்பத்தினர் அனைவரும் பங்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் தோன்றி அந்த அரண்மனையின் முன்பாகக் குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைச் சந்தித்தனர்.

பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முடிசூட்டு விழாவின்போது இளவரசர் ஹாரி மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தார்

இளவரசர் ஹாரியின் மனைவியும், இளவரசியுமான மேகன், அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜலெஸ் நகரில் உள்ள அவரது வீட்டில், தனது மகனும் இளவரசருமான ஆர்ச்சியின் நான்காவது பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தார்.

ஆர்ச்சியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இளவரசர் ஹாரி அவசர அவசரமாக பிரிட்டனில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவுக்கு வந்ததாக பேஜ் சிக்ஸ் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

முடிசூட்டு விழாவின்போது அந்த விழாவுக்குப் பொருத்தமான ஆடைகள் மற்றும் மெடல்களை அணிந்துகொண்டிருந்த இளவரசர் ஹாரி. தனது சித்தப்பா மகளும், இளவரசியுமான யூஜீன் மற்றும் அவரது கணவர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்குடன் அமர்ந்திருந்தார். அவர்களுடன் இளவரசர் ஆண்ட்ரூவும் அமர்ந்திருந்தார்.

பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா
 
படக்குறிப்பு,

1. இளவரசர் வில்லியம் 2. இளவரசி கேத்தரீன் 3. இளவரசர் ஆண்ட்ரூ 4. இளவரசர் எட்வர்ட் 5. இளவரசி ஆன் 6. இளவரசி ஹாரி

அங்கிருந்து இரண்டு வரிசை முன்புறமாக வேல்ஸ் இளவரசர், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இளவரசி சார்லட், இளவரசர் லூயிஸ் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இளவரசர் எட்வர்டும் அவர்களுடன் அமர்ந்திருந்தார்.

கடந்த ஆண்டு நடந்த அரசி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் நேரடியாக அரசருக்குப் பின்னால் இருந்த வரிசையில் இளவரசர் ஹாரி அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் அரச குடும்பத்தில் எந்தப் பதவியைவும் வகிக்காததால், அரசருக்கான முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹாரி முறைப்படி செய்யவேண்டிய எந்தப் பணியும் இல்லை என்ற நிலையில், அவர் இந்த விழாவில் தனியாகத்தான் பங்கேற்கப் போகிறார் என்பது அனைவரும் ஏற்கெனவே அறிந்த செய்தியாகவே இருந்தது.

இளவரசர் ஆண்ட்ரூவின் நிலையும் இதுதான்.

அரச குடும்பத்தினருடனான இளவரசர் ஹாரியின் உறவுகள், அவர் சுயசரிதையை வெளியிட்ட பின் கசப்பான நிலைக்குச் சென்றன.

பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹாரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தும் வகையில் பல தகவல்களை அந்தப் புத்தகத்தில் தெரிவித்திருந்த ஹாரி, அதன்பின் அரச குடும்பத்தினரின் எண்ணங்களில் இருந்து வேறுபட்ட கருத்துகளையே தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

இதுபோன்ற கசப்பான உறவுநிலையின் காரணமாகவே இந்த விழாவுக்காக வழங்கப்பட்ட அழைப்பிதழை இளவரசி மேகன் நிராகரித்துவிட்டார் எனக் கருதப்படுகிறது.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து இளவரசர் ஹாரி நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகளைக் கைவிடுமாறு அரசர் சார்ல்ஸ் வலியுறுத்தியதாக அப்போதே தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளித்த இளவரசர் ஹாரி, அவரை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வரவழைத்து, குடும்பத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையிலான அந்த வழக்கை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாகவும் நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/cge49e7zqzgo

Posted
2 hours ago, ஏராளன் said:

முடிசூட்டு விழாவின்போது இளவரசர் ஹாரி மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தார்

 

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா: இளவரசர் ஹரிக்கு 10ஆவது வரிசையில் இடம்

___\_\__\\_____\\\
மேற்படி முடிசூட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/5/2023 at 14:29, ஏராளன் said:

 

image

மகாராணி கமீலாவிற்கு மூடிசூடும் நிகழ்வுகள் தற்போது இடம்பெறுகின்றன.

 

On 6/5/2023 at 14:37, கிருபன் said:

spacer.png


ஆரம்பத்தில்… சில மாதங்களுக்கு முன்பு, சார்ள்சுக்கு மட்டுமே முடி சூட்டப் படும் என்று விட்டு
 நேற்று, சந்தடி சாக்கில், சைக்கிள் காப்பிலை… கமீலா அம்மையாருக்கும் முடி சூட்டி விட்டார்கள். 😂
அரச குடும்பம், மக்கள் காதில்… கிலோ கணக்கில் பூ சுற்றுகிறார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

ஆரம்பத்தில்… சில மாதங்களுக்கு முன்பு, சார்ள்சுக்கு மட்டுமே முடி சூட்டப் படும் என்று விட்டு
 நேற்று, சந்தடி சாக்கில், சைக்கிள் காப்பிலை… கமீலா அம்மையாருக்கும் முடி சூட்டி விட்டார்கள். 😂
அரச குடும்பம், மக்கள் காதில்… கிலோ கணக்கில் பூ சுற்றுகிறார்கள். 🤣

ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி
வேக வேக
மாக வந்த நாகரீக
ராணி

நேற்று வரை
வீதியிலே நின்றிருந்த
ராணி நிலைமைகளை
மறந்து விட்ட தலைகனத்த
ராணி...... :rolling_on_the_floor_laughing:



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.