Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Unfall in Köln: Auto fährt gegen Baum – Baby schwer verletzt

 

குடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் 
ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் .
இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது 
நண்பர்கள் வீட்டில் தங்கும்போது ஓட்டுனருக்கு தங்குவதற்கு 
நல்ல ஒரு இடம் நாம் அமைத்து கொடுப்பது குறைவு .
அப்படி இருக்கும் பட்சத்தில் ஓட்டுநர் அவரது வாகனத்திலேயே 
படுத்து தூங்கும் நிலைமை தான் உருவாகிறது. 

ஒருசில தங்கும் விடுதிகளில் மட்டுமே ஒட்டுநர்களுகான ஓய்வு அறை உள்ளது. 
பெரும்பாலான விடுதிகளில் அதுபோல் இல்லை.
ஓட்டுனருக்கு குறைந்தபட்சம் ஒரு 300 ரூபாய்க்கு அல்லது 500 ரூபாய்க்கு 
அறையெடுத்து கொடுத்து அந்த ஓட்டுநர் நிம்மதியாக தூங்குவதற்கு 
நாம் வழி செய்வது குறைவு .

அடுத்த நாள் நமக்கு நெருங்கியவர்கள் கூட சுகமாக பயணிக்கும்போது 
முதல் நாள் இரவு சரியாக தூங்கி இருப்பாரா நமது ஓட்டுநர் என்று 
சிந்தித்து கூட பார்ப்பதில்லை நாம்.
 
அந்த வாகனத்தில் பயணிக்கும் அத்தனை பேருடைய உயிரும் 
ஓட்டுநர் கையில் என்று தெரிந்தும்... ஒரு 500 ரூபாய் லாபம் பார்த்து 
ஓட்டுநருக்கு அறை ஒதுக்கிக் கொடுக்காததற்கு நாம் கொடுக்கும் விலை 
ஒரு நிமிடம் தூக்கத்திற்கு தழுவி விழும் ஓட்டுனரின் தவறுதலால் 
நாம் நஷ்டப்படுவது நமக்கு பிரியமானவர்களின் உயிரை மட்டுமல்லாமல் 
நம்மளையும் தான்.

சிறு குழந்தைகளைக் கொண்டு முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கும் 
நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா அபாயத்தின் முன்னேதான் 
அமர்ந்திருக்கிறோம் என்று இனி இருக்கும் யாத்திரையில் சிந்திப்பீர்.

நமக்கு நெருக்கமானவர்களை போல நம்முடைய ஓட்டுனரையும் நேசியுங்கள்...

The Times Of Tirupathur

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓட்டுனரையும் நேசியுங்கள்  

தங்கள் ஆக்கத்துக்கு நன்றி. மிகவும் சரியே 

  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.