Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் தேசத்தின் தலைவனுக்கும் மக்களுக்கும் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறுதிப் போரில் மரணித்த போராளிகளுக்கும் மக்களுக்கும் வீரவணக்கம்.💐 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னுயிரை ஆகுதி ஆக்கிய போராளிகளுக்கும் மக்களுக்கும் வீரவணக்கம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்பு கிரானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Published By: VISHNU

18 MAY, 2023 | 04:56 PM
image

மட்டக்களப்பு கிரான் பிள்ளையார் ஆலய முன்றில் 'கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்'  எனும் தலைப்பில் வியாழக்கிழமை (18) முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

WhatsApp_Image_2023-05-18_at_00.11.30.jp

தமிழரசு கட்சி கிரான் கிளை தலைவர் சி.சண்முகநாதன்  ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் ஆலய குரு, கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு உயிர்நீத்தவர்களுக்கு  ஆத்மசாந்திவேண்டி சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் கஞ்சி வழங்கிவைத்தனர்.

WhatsApp_Image_2023-05-18_at_00.11.29_-_

WhatsApp_Image_2023-05-18_at_00.11.31.jp

https://www.virakesari.lk/article/155616

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Text: First Tamil Genocide Remembrance Day

 

மே 18, 2023
ஒட்டாவா, ஒன்டாரியோ
தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“இன்று, இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை நாம் சிந்திக்கிறோம். முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர், மேலும் பலர் காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தனர். இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழும் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன.

"மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனடியர்களின் கதைகள் - நான் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் சந்தித்த பலர் உட்பட - மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை ஒரு நிலையான நினைவூட்டல். அதனால்தான் மே 18 ஐ தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக ஆக்குவதற்கான பிரேரணையை நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகவும், அத்துடன் இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா வாதிடுவதை நிறுத்தாது.

“அக்டோபர் 2022 இல், நாட்டில் மனித உரிமைகள், பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்தை அழைக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில் நாங்கள் எங்கள் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்தோம். இலங்கையில் மதம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவ சுதந்திரம் - வரும் காலங்களில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான இன்றியமையாத கூறுகள் - மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எங்கள் பணியைத் தொடரும். உலகம் முழுவதும். மேலும் 2023 ஜனவரியில், தீவில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில், நான்கு இலங்கை அரசு அதிகாரிகளுக்கு எதிராக எங்கள் அரசாங்கம் தடைகளை விதித்தது.

“தமிழ்-கனடியர்கள் நம் நாட்டிற்கு ஆற்றி வரும் - மற்றும் தொடர்ந்து செய்து வரும் பல பங்களிப்பை அங்கீகரிக்க கனடியர்கள் அனைவரையும் கனடா அரசாங்கத்தின் சார்பாக அழைக்கிறேன். இலங்கையில் ஆயுதப் போரின் தாக்கம் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும், பாதிக்கப்பட்ட அல்லது இழந்த அன்புக்குரியவர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைவரையும் ஊக்குவிக்கிறேன்.

##################################################################

May 18, 2023
Ottawa, Ontario
The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on Tamil Genocide Remembrance Day:

“Today, we reflect on the tragic loss of life during the armed conflict in Sri Lanka, which ended 14 years ago. Tens of thousands of Tamils lost their lives, including at the massacre in Mullivaikal, with many more missing, injured, or displaced. Our thoughts are with the victims, survivors, and their loved ones, who continue to live with the pain caused by this senseless violence.

“The stories of Tamil-Canadians affected by the conflict – including many I have met over the years in communities across the country – serve as an enduring reminder that human rights, peace, and democracy cannot be taken for granted. That’s why Parliament last year unanimously adopted the motion to make May 18 Tamil Genocide Remembrance Day. Canada will not stop advocating for the rights of the victims and survivors of this conflict, as well as for all in Sri Lanka who continue to face hardship.

“In October 2022, we joined our international partners in adopting an United Nations Human Rights Council (UNHRC) resolution that calls on the Sri Lankan government to address the human rights, economic, and political crises in the country. Canada has been a global leader in the adoption of other UNHRC resolutions calling for freedom of religion, belief, and pluralism in Sri Lanka – essential elements to secure peace and reconciliation in the years to come – and we will continue our work to safeguard human rights across the world. And in January 2023, our government imposed sanctions against four Sri Lankan government officials in response to human rights violations on the island.

“On behalf of the Government of Canada, I invite all Canadians to recognize the many contributions that Tamil-Canadians have made – and continue to make – to our country. I also encourage everyone to learn more about the impact of the armed conflict in Sri Lanka, and express solidarity to all those who suffered or lost loved ones.”

https://pm.gc.ca/en/news/statements/2023/05/18/statement-prime-minister-first-tamil-genocide-remembrance-day

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Published By: VISHNU

18 MAY, 2023 | 06:43 PM
image

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வியாழக்கிழமை (18) மதியம் 2:30 மணியளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இடம்பெற்றது.

01__17_.jpg

இதன் பொழுது பொதுசுடர் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராமினால் ஏற்றிவைக்கப்பட்டது.

01__18_.jpg

தொடர்சியாக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

01__15_.jpg

இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் , பேராசிரியர்கள், கலைப்பீட பீடாதிபதி எஸ் ரகுராம் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

01__16_.jpg

01__13_.jpg

01__14_.jpg

01__10_.jpg

01__12_.jpg

01__8_.jpg

01__6_.jpg

01__7_.jpg

01__4_.jpg

01__5_.jpg

01__1_.jpg

01__2_.jpg

https://www.virakesari.lk/article/155637

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முள்ளிவாய்க்காலில் சாவடைந்தை அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கண்ணீர் நினைவு வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளிநொச்சியில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Published By: VISHNU

18 MAY, 2023 | 06:48 PM
image

கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (18) பிற்பகல் 4மணிக்கு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வு  நடைபெற்றுள்ளது.

 இதில் மத்த தலைவர்கள் பொது மக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

IMG20230518163735.jpg

IMG20230518165009.jpg

IMG20230518164941.jpg

IMG20230518164908.jpg

IMG20230518164709.jpg

https://www.virakesari.lk/article/155641

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போரில் மரணித்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நினைவஞ்சலிகள்.......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தன் இனத்துக்காக மரணித்த மா வீரர்களுக்கும் அவலச்சாவடைந்த   பொது ஜனங்களுக்கும் அஞ்சலிகள். இருந்தால் தலைவன் .மறைந்தால் இறைவன்.(கடந்து வந்த பாதையை   நினைத்து மனம் வலிக்கிறது வலியால் வந்த வடுக்கள் மறைவதில்லை )

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடிப்பிற்கும்  நிஜத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்.

 

2 பேர் இன் படமாக இருக்கக்கூடும்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகத்தை மீட்கும் கனவுடன் வீரச்சாவடைந்த போராளிகளுக்கும், அவர்களை முன்னின்று தலைமைதாங்கி தன்னையும், தன் குடும்பத்தினரையும் ஆகுதியாக்கிய தலைவருக்கும் வீரவணக்கங்கள். சிறிலங்கா அரசின் இனவழிப்பு போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனவுகளுடனும், வலிகளுடனும், தாகத்துடனும் உயிர்நீத்த, வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்து உறவுகளுக்கும், மத போதகர்களுக்கும் இதயம் கனிந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இறுதிப்போரில் மரணித்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்களும் பொதுமக்களுக்கு நினைவஞ்சலிகளும்....

.

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து உலகம் முழுவதும் பரவி புலிகள் என்றால் தமிழர்கள் என்ற காலத்தை கடந்து தமிழர் என்றால் புலிகள் என்ற மாபெரும் மாற்றத்தை தொட்டு  பெரும் உயரத்தை அடைய போகிறோம் என்று எத்தனை ஆனந்த கனவு கண்டுகொண்டிருதோம், எல்லாமே கருகி புறப்பட்ட புள்ளியிலேயே மீண்டும் வந்து முடிந்ததை  13  வருடங்கள் கடந்தாலும்  இன்றுவரை நம்பவே முடியவில்லை, மனதால் ஏற்கவும் முடியவில்லை.

கைகால்கள் நலமாக இயங்கி சுயநினைவுடன் இந்த பூமியில் வாழும் கடைசி நாள்வரை கெளரவ வாழ்வு வாழ நினைத்த ஒவ்வொரு தமிழனும் அந்த வரலாற்று பேரழிவை நினைத்து நேற்று நடந்ததுபோன்றதொரு உணர்வில்  தலையில் அடித்து அழுவான்.

அனைவருக்கும் அஞ்சலி. அவருக்கு மட்டும் அஞ்சலிகள் இல்லை.

சராசரி மனிதர்களுக்குத்தான் அஞ்சலிகள் பொருந்தும், அவதாரங்களுக்கு அஞ்சலிகள் பொருந்தாது..  அவதாரங்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாது செலுத்தினால் அதன் மகிமை கேலிக்குரியதாகிடும்.

இனி உள்ள பிரச்சனை ஒன்றேதான் 

கி.பி ,கி.முபோல

பிரபாகரன் காலம் பிரபாகரனுக்கு அப்புறமான காலம்.

பிரபாகரன் காலம் சிங்களவனிடமிருந்து தமிழர்களை காப்பாற்ற போராடிய காலம்.

பிரபாகரன் காலத்தின் பின்னரான காலம் தமிழர்களிடமிருந்து தமிழர்களை காப்பாற்ற வழி தெரியாத காலம்.

ஆம் எதிர்கால சந்ததிகள் தமிழர்களிடமிருந்து தமிழர்களை காப்பாற்றவே மிகவும் கஷ்டபடபோகிறது.

மீண்டும் அனைவருக்கும் அஞ்சலிகள் அவரை தவிர.

  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.