Jump to content

தவறு செய்யவில்லையெனில் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுங்கள் : இன அழிப்புக்கு உள்ளானவர்களின் ஆத்மா நிம்மதியாக வாழ விடாது - சிறிதரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தவறு செய்யவில்லையெனில் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுங்கள் : இன அழிப்புக்கு உள்ளானவர்களின் ஆத்மா நிம்மதியாக வாழ விடாது - சிறிதரன்

Published By: Digital Desk 5

24 May, 2023 | 10:20 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்க்கப்படவில்லை,இரசாயன குண்டு தாக்குதல் நடத்தப்படவில்லை என்றால் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு தாராளமாக முகம் கொடுக்கலாம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் மார்புத்தட்டிக் கொள்கிறது.

கடந்த 14 ஆண்டுகளில் நிம்மதியாக வாழ்கின்றீர்களா. இன அழிப்புக்கு உள்ளான எமது உறவுகளின் ஆத்மா நிம்மதியாக இருக்க இடமளிக்காது.

சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ள கூடிய நீதியான தீர்வினை வழங்க  அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற பந்தய,சூதாட்ட  விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம்  மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சிங்கள பெரும்பான்மையின அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இன்றும் இந்த நாட்டில் நீதி கிடைக்கப் பெறவில்லை.

நாட்டை பொருளாதார ரீதியில்  முன்னேற்ற வேண்டுமாயின் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு ஊடாக தீர்வு வழங்க வேண்டும்.

நடைமுறையில் உள்ள இனப்பிரச்சினைக்கு  சிறந்த தீர்வு கிடைக்காவிட்டால் இந்த நாடு தொடர்ந்து அதளபாதாளத்துக்கு செல்லும் என்பதில் மாற்றமில்லை.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து  கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை.கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்,குழுக்கள் நியமிக்கப்பட்டன.இருப்பினும் எந்த ஆணைக்குழுவாலும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கப் பெறவில்லை.

உள்ளக பொறிமுறை ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்று கொடுப்பதாக 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியது.

ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.ஆகவே இந்த நாட்டில் நீதி இல்லை.யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள்.யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழர்கள் கட்டவிழ்க்கப்பட்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

யுத்தம் முடிவடைந்த 14 ஆண்டு காலங்கள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில்  கனடாவின் பிரதமர் குறிப்பிட்ட கருத்தை இலங்கை அரசாங்கம் மறுதழித்துள்ளது.

ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.உண்மையை கண்டறிவதாக இலங்கை சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியது.அதனையே சர்வதேசம் இன்று கோருகிறது.

யுத்த குற்றம் இடம்பெறவில்லை,தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு அச்சப்பட வேண்டிய தேவையில்லை.

கனடாவின் பிரதமர் வெளியிட்ட கருத்து தொடர்பில் இலங்கையில் உள்ள உயர்ஸ்தானிகரிகரிடம் வெளிவிவகாரத்துறை அமைச்சர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நாட்டில்  தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் இன முரண்பாடு உள்ளது என்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சர்  ஏற்றுக்கொண்டுள்ளார்.இராணுவத்தினரிடம் பிள்ளைகளை ஒப்படைத்தோம்,எமது பிள்ளைகளை தாருங்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் கோருவது நியாயமானதே இதனை எவ்வாறு பிரிவினைவாதம் என்று குறிப்பிட முடியும்.

காணாமல் போனார் விவகாரத்திற்கு ஒரு சிறந்த தீர்வை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.இதனையே ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் குறிப்பிடுகிறார்கள்.இலங்கை ஆட்சியாளர்கள் சர்வதேசத்தை ஏமாற்றுகிறார்கள்.இதன் காரணமாக சர்வதேசம் இலங்கையை தொடர்ந்து வலியுறுத்துகிறது.இலங்கை தொடர்பில் கனடாவின் பதிவுகளை மதிக்கிறோம்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் பிரித்தானியா,அமெரிக்கா உட்பட  கரிசனை கொள்ள வேண்டும்.தமிழர்கள் மீது படுகொலை கட்டவிழ்க்கப்படவில்லை,இரசாயன தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் குறிப்பிடுகிறார்கள்.

அவ்வாறாயின் சர்வதேச விசாரணைக்கு தாராளமாக முகம் கொடுக்கலாம் தானே.இறுதிக்கட்ட யுத்தத்தில் பசியால் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் மரணித்ததை ஒருபோதும் மறக்க முடியாது.

இந்த  நாட்டில் பாரிய இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை சர்வதேச ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.ஆனால் அரசாங்கம் மாத்திரம் தான் 2009 ஆம் ஆண்டு முதல் இருந்த இடத்தில் இருந்து நகராமல் இருக்கிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இரசாயன குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பதை பலர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்கள்,பலர் சாட்சியமளித்துள்ளார்கள்.

இரசாயன குண்டு தாக்குதல் பிரயோகிக்கப்படவில்லை என்றால் அரசாங்கம் சர்வதேச பொறிமுறை விசாரணைக்கு கதவு திறக்கலாம்.மறைக்கப்பட்ட உண்மை வெளிக்கொண்டு வர வேண்டும்.

உள்ளக பொறிமுறையில் தீர்வு கிடைக்காது என்பதற்காகவே தொடர்ந்து போராடுகிறோம்.யுத்தத்தால் அழிந்தவர்கள் நாங்கள் எம்மை அழித்தவர்கள் நீதிபதிகளாக இருந்து செயற்படும் போது எவ்வாறு நீதி கிடைக்கும்.

அழிக்கப்பட்ட எம் உறவுகளை நிம்மதியாக வாழ  இடமளிக்காத வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த ஆக்கிரமிப்புக்கள் தீவிரமடைந்துள்ளன.

எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் என்பதையே தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.பாதிக்கப்பட்ட எமக்கு அரசியலமைப்பு ஊடாக தீர்வு தாருங்கள் என்பதையே கோருகிறோம்.

தமிழர்கள் மீது இன அழிப்பு கட்டவிழ்க்கப்பட்டது என்று மன்னிப்பு கோரும் நாளில் தான் இந்த நாட்டில் நீதி நிலைக்கும்.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என மார்பு தட்டுகின்றீர்கள்.

கடந்த 14 ஆண்டுகாலங்களில் நாடு நிம்மதியாக உள்ளதா,பொருளாதாரம் சிறந்த முறையில் உள்ளதா,ஆட்சியாளர்கள் நிம்மதியாக உள்ளார்களா,படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் ஆத்மா நிம்மதியாக வாழ விடாமல் தடுக்கிறது.ஆகவே நீதியான முறையில் செயற்பட்டு தீர்வை தாருங்கள் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/156015

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரவதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணையே போதும் என்று கடந்த ரணில் அரசுடனான தேனிலவுக்காலத்தில் கூட்டமைப்பு கூறியது ஞாபகமிருக்கா?இங்கு நடந்த குற்றங்களுக்கு கியுPபாவிலா விசாரணை நடத்துவார்கள என்று சுமத்திரன் எகத்தாளமாகக் கேட்டார். அப்போது அவருக்கு அமாம் என்று தலையாட்டிவிட்டு இப்போது  தேர்தல் வரும் என்று உணர்ந்து  பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது. இனப்படு கொலை நடந்தது என்பதை  நிரூபிப்பதற்கு ஆதாரங்கள்  போதாது இது சாதரண போர்க்குற்றம்தான் என்று சுமத்திரன் கூறிய போது காதில் பங்சை வைத்துக் கொண்டா இருந்தீர்கள். . அவரை  தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தை விட விண்ணன் என்று பாரட்டியதெல்லாம் தமிழ்மக்கள் மறந்து விடவில்லை. உண்மையில்  இனப்படுகொலை விசாணை தாமவதற்கு கூட்டமைப்பு எம்பிக்களே  முக்கிய காரணம்.இரண்டு தடவை கால அவகாசம் கொடுத்து கையெழுத்து போட்டு கடிதம் எழுதியது எல்லாம் மறந்து போய் விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேர்தல் வருவதனால் சவுண்டு அதிகமாக இருக்கிறது. சம்பந்தன் வெருட்டுறார், சுமந்திரன் சட்டத்தை விளக்குகிறார், இவர் கண்டிக்கிறார் இன்னும் என்னென்ன விந்தையெல்லாம் காட்டுவினம்.

Posted

ரனிலுடனான பேச்சுவார்த்தைக்கு என்ன நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, nunavilan said:

ரனிலுடனான பேச்சுவார்த்தைக்கு என்ன நடந்தது?

அது ஒரு தொடர் கதை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

தேர்தல் வருவதனால் சவுண்டு அதிகமாக இருக்கிறது. சம்பந்தன் வெருட்டுறார், சுமந்திரன் சட்டத்தை விளக்குகிறார், இவர் கண்டிக்கிறார் இன்னும் என்னென்ன விந்தையெல்லாம் காட்டுவினம்.

சிறிதரன்ர பேச்சு வாசிக்க நல்லாயிருக்கு. :beaming_face_with_smiling_eyes:

Quote

இன அழிப்புக்கு உள்ளானவர்களின் ஆத்மா நிம்மதியாக வாழ விடாது - சிறிதரன்

ஆன்மா ஒரு புறம் இருக்கட்டும். முதல்ல நீங்கள் களத்தில இறங்குங்கோ :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, nunavilan said:

ரனிலுடனான பேச்சுவார்த்தைக்கு என்ன நடந்தது?

சிறியர், நுணா! ஒருவர், வெளிப்படையாக ஒருவரை கண்டித்துக்கொண்டும் விமர்சித்துக்கொண்டும் மறைமுகமாக அவருக்கு சார்பாக சட்ட ஆலோசனை இன்ன பிற வழிகளில் செயற்படுவர்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

பேச்சு என்பது த .தே .கூட்டமைப்பு, தமிழ் மக்களையும் சிங்களம், சர்வதேசத்தையும் ஏமாற்றும் நாடகம். இனப்பிரச்சினைக்கான தீர்வு சட்டம் வரைந்தாயிற்று என்றார் ஒருவர். இனி அதை நடைமுறைப்படுத்துவதல்லவா பாக்கி? அதற்கல்லவா இவர்கள் வற்புறுத்த வேண்டும். பேச்சுவார்த்தைக்கு ஏன் செல்லவேண்டும்? இதிலெங்கே பேச்சுவார்த்தை இருக்கிறது?  கடந்த எழுபத்தைந்து வருடங்களாக  பேசிக்கொண்டுதானே இருக்கிறார்கள். வெளிநாடுகளில் பேசினார்கள், உள்நாட்டில் பேசினார்கள், பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள், மேடைகளில் பேசுகிறார்கள், பத்திரிகைகளில் பேசுகிறார்கள். ஆனால் என்ன பேசுகிறார்கள் என்றுதான் யாருக்கும் விளங்கவில்லை. அவர்களுக்கு விளங்குகிறதோ என்னவோ மக்களுக்கு விளங்கப்படுத்துவதில்லை. பேசிப்பேசியே ஐயாவின் காலமும் பெலனும் போய்விட்டது. அதுதான் தலைவர்  ஒரு கெடு கொடுத்திருக்கிறார், சிங்களம் யோசிக்குது, ஐயாவை எப்படி சமாதானப்படுத்தி பேச்சுக்கு அழைப்பதென்று.  சுமந்திரனை கேளுங்கள், தான் சொன்னதுதான் சரி என்று பிடிவாதம் பிடிப்பார். தீர்வு சட்டம் வரைந்தாயிற்று என்று அடம்பிடிப்பார். யாருக்கும் தெரியாமல் இவர்களிருவரும் சேர்ந்து வரைந்தது! 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேச்சு என்பது த .தே .கூட்டமைப்பு, தமிழ் மக்களையும் சிங்களம், சர்வதேசத்தையும் ஏமாற்றும் நாடகம்.

 

சரியாக சொன்னீர்கள்  இவ்வளவு   காலமும்   கண்ட தமிழரின் பட்ட்றிவு. 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.