Jump to content

புறம் கூறுதல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் விட்டா நீங்கள் வள்ளுவனுக்கே பாடம் எடுப்பீர்கள் போல இருக்கே.. :lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

நானும் கோள் சொல்வதும் புறங்கூறுவதும் வெவ்வேறு அர்த்தம் உடையவை என்று நினைக்கின்றேன்.

புறங்கூறுவது என்பது கூடுதலாக ஒருவருடன் நன்றாக பழகுவது போல் நடித்துகொண்டு அவருக்கு தெரியாமல் அவர்முதுகில் குத்துவது இல்லையா?

கோள் சொல்லுவது என்பது வெளிப்படையாக எதிரியாக இருக்கும் ஒருவரை பற்றி கூட முறைப்பாடு செய்வதையும் குறிக்கும் அல்லவா?

Link to comment
Share on other sites

பொதுவாக பேச்சு வழக்கில் புறம் கூறல் என்பது ஒருவர் போகவிட்டு அவரை பற்றி பிழையாக கூறுதல்

என பொருள் படும் (talk behind someone's back)என்பது எனது அபிப்பிராயம். கோள் மூட்டுதல் இல்லாதது பொல்லாததை கூறுதல் நேரடியாக அல்லது மறைமுகமாக இடம் பெறலாம்.உதாரணமாக ஒருவரின் பொஸ்ஸை பற்றி ஒருவர் புறம் கூறலாம் அவர் இல்லாத போது ஆனால் கோள் மூட்ட முடியாது என நினைக்கின்றேன்.

இலக்கணம் எனில் "இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ" படிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாயின் ஒருவரை போகவிட்டு அவரைப்பற்றி நல்லவிதமாக கூறினால் அதை எப்படி சொல்வது? :rolleyes: கோள் மூட்டுவது,புறம் சொல்லுதல் இவையிரண்டிற்கும் வெவ்வேறு அர்த்தங்கள்.

Link to comment
Share on other sites

புறங்கூறுதல் என்பதற்கு நுணாவிலான் தந்த ஆங்கில மொழி பெயர்ப்பு இங்கே தந்துள்ளேன்.

அத்துடன் ஜேர்மன் மொழியிலும் தந்துள்ளேன்.

நான் அறிந்த வகையில் பெரும்பாலான மொழிகளிலும், ஒருவருடைய முதுகுக்குப் பின்னால் பேசுவது பற்றிய சொல்லில் "குறை" என்ற சொல் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.

தமிழிலும் அது குறிப்பிடப்படவில்லை. தமிழிலும் புறம் என்ற சொல் முதுகுக்குப் பின்னால் என்ற அர்த்தத்திலேயே வருகிறது. அது "குறை" என்ற பொருளில் வரவில்லை.

ஆனால் புறம்கூறுதல் என்று வருகின்ற போது, அது முதுகுக்குப் பின்னால் குறை கூறுவதை மட்டுமே குறிக்கின்றது. பாராட்டுவதை அல்ல.

இது காரணஇடுகுறிச் சொல் போன்று அமைகின்றது.

Link to comment
Share on other sites

அப்பிடீனா.. புறம்போக்கு எண்டதுக்கு என்ன மீனிங்க்கோ?

Link to comment
Share on other sites

நர்மதாவின் தமிழ் அகராதில புறம் என்றால் முதுகு, தோல்வி, கோள் , இடம், இறையிலி நிலம், காலம், உடம்பு, வீரம், மதில், பின்புறம் என்று போட்டு இருக்கு

புறங்கூறல் - கோள்சொல்லுதல் , தூற்றுதல், இரகசியங்களை வெளியாக்குதல்

Link to comment
Share on other sites

:blink: இங்க சிலபேருக்கு இந்த "புறம்" பிரச்சனை எங்க இருந்து வந்தது என்று தெரியாது. அதால...

"புறக்கணிப்பதே மேல்" என்பதை நீங்கள் தவறான பொருளில் உள்வாங்கிவிட்டீர்கள். புறக்கணிப்பு என்பதை Ignorance என்று நீங்கள் நினைத்திருந்தால் அது உங்கள் அப்போதைய மனோநிலையைக் கொண்டு கற்பித்த பொருளாகவே இருக்கும். நான் இங்கே சொல்லியிருப்பது "புறத்தை கணித்தல்", "புறத்தின் கணிப்பு", "புறம் கணிப்பு" "judgement" என்கிற பொருளிலேயே. (இலக்கணப்பிழை, சொற்பிழை இருக்கலாம்... ஆனால் சொல்ல வந்த கருத்து அதுதான் ).

ஏனெனில் உங்கள் புறக்கணிப்புக்கு.. புறம் - குறை கணித்தல் (குறை பிடித்தல்) என்பதாகவும் ( புறங் கூறாதே என்பார்கள்) பொருள்படும்.

இதுதான் வில்லங்கம் தொடங்கின இடம் (http://www.yarl.com/forum3/index.php?showtopic=28095&st=60). இங்கு "புறக்கணிப்பு (புறம்+கணிப்பு)" என்பதில் வருகிற "புறம்" என்ற சொல்லுக்கு "குறை" என்கிற பொருளை நெடுக்காலபோவான் கொடுத்திருந்தார். அதற்கு எடுத்துக்காட்டா "புறங் கூறாதே" என்பதையும் எழுதியிருந்தார்.

"புறங்கூறல் (புறம்+கூறல்)" என்ற சொல்லுக்கு மறைமுகமாக குறைகூறல் என்று வரும். "புறங்கூறல்" என்ற சொல்லை முழுமையாகப் பார்க்கும் போதுதான் இந்த அர்த்தமும் வரும். "புறங்கூறல்" என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு சபேசன் சொன்னதுபோல் "(முதுகுக்கு) பின்னால் கூறுதல்" என்றே வரும். காலப்போக்கில் எப்படி "நாற்றம்" என்கிற சொல் "கெட்ட வாடையைக்" குறிப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டதோ அதுபோல "புறங்கூறல்" என்பதும் "குறைசொல்லல்" என்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருவதாக இருக்கலாம்

ஆனால் "புறக்கணிப்பு" என்பதில் வருகிற "புறம்" என்பதற்கு குறை என்று பொருள் வருமா? அதில் வருகிற "கணிப்பு" என்ற சொல்லுக்கு கணித்தல் (to judge, to estimate, to calculate, to guess,) என்று பொருள். எடுத்துக்காட்டு: "எனது கணிப்பு என்னென்றால்", "கருத்துக்கணிப்பு (opinion)". "கணக்கிடுதல்", "அளவைக் கணித்தல்", "சோதிடக் கணிப்பு". நெடுக்காலபோவான் சொல்வது போல் "புறக்கணிப்பு" என்பதற்கு "குறை கணித்தல்" என்று தான் பொருளா?

நான் அறிந்து "புறக்கணிப்பு" என்பது நான் அந்தத் தலைப்பில் குறிப்பிட்டிருந்தது போல் "ஒன்றை ஒதுக்கிவைத்தல், விலக்கிவைத்தல், கண்டுகொள்ளாமல் இருத்தல்" போன்றவற்றுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் "கண்டுகொள்ளாமல் இருத்தல்" என்பது நெருக்கமான பொருளாக இருக்கிறது. எப்படியென்றால், நாம் ஒன்றைக் கவனிக்காமல் இருக்க வேண்டுமென்றால் எனது கவனம் வேறு ஒன்றில் இருக்குவேண்டும். அதாவது நாம் "புறத்தை (வெளியை, வேறு பக்கத்தை)" "கணிப்பதால் (கவனிப்பதால்)" இந்நிலை ஏற்படும். இதன் நேரடிப் பொருளாக Ignorance என்பது இல்லாவிட்டாலும், நாம் ஒன்றைக் கவனிக்காமல் வேறொன்றில் கவனம் செலுத்துவது Ignorance ஆக மட்டுமே உணரப்படுவதால் காலப்போக்கில் இதுவும் "நாற்றம்" என்கிற சொல்போல் Ignorance ஐ மட்டும் குறிக்கவே பயன்படுத்தப்பட்டு வருவதாக இருக்கலாம். புறக்கணிப்புக்கு ஒத்தபொருளுடைய சொற்களாக ஒத்துழையாமை, கண்டுகொள்ளாமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

நான் சொல்வது சரியோ தெரியாது... நமக்கு இலக்கணமும் தெரியாது இலக்கியமும் தெரியாது... :rolleyes:

இன்னொரு கேள்வி என்னென்றால்... "புறம்" என்ற தமிழ்ச் சொல்லுக்கும் "from" என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் ஏதாவது தொடர்பிருக்கா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீன தமிழ் அருஞ்சொற்பொருளில் இவ்வாறு கூறப்படுகிறது.

BACKBITING - புறங்கூறல்

http://www.thozhilnutpam.com/chollagaraathi1.htm

Link to comment
Share on other sites

கேள்வியை விளங்காதவர்களுக்காக மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்

"புறங்கூறுதல்" என்றால் என்ன என்பது குறித்து நானும் நெடுக்காலபோவானும் தெளிவாகவே இருக்கிறோம். பிரச்சனை அது அல்ல.

"புறம் கூறுதல்" என்ற வார்த்தையில் வருகின்ற "புறம்" என்பது எதைக் குறிக்கிறது?

"குறை" என்பதையா? "முதுகுக்குப் பின்னால்" என்பதையா?

அகராதி என்ன சொல்லுதோ தெரியாது. நான் "புறம் கூறுதல்" இல் வரும் "புறம்" என்ற சொல்லை "குறை" என்ற அர்த்தத்தில்தான் பாவிக்கின்றேன். "புறம்" என்பதற்க்கு 100 அர்த்தம் இருக்கலாம். இச்சொற் தொடரில் வரும் புறத்துக்கு "குறை" என்றே நான் அர்த்தம் காணுறேன்.

Link to comment
Share on other sites

;ஆரம்பத்தில் நெடுக்காலபோவான் "புறம்" என்ற சொல் நேரடியாக "குறை" என்ற அர்த்தத்தை குறிக்கும் என்று சொன்ன போது, அவர் வேண்டுமென்றே என்னுடைய விளையாடுகிறார் என்றுதான் நினைத்தான்.

மிக இலகுவாக பின்னால், வெளியே, முதுகு போன்ற நேரடியான அர்த்தங்களை கொண்டிருக்கும் "புறம்" என்ற சொல் பற்றிய தெளிவு நிச்சயமாகவே அனைவருக்கும் இருக்கும் என்று நம்பினேன்.

இங்கே இந்தத் தலைப்பை ஆரம்பித்த போது கூட அனைவரும் ஒரு மனதோடு "புறம்" என்பதற்கு நேரடியான அர்த்தம் "குறை" அல்ல என்று தெளிவாக சொல்வார்கள் என்றுதான் நினைத்தேன்.

இந்தச் சொல் பற்றி இத்தனை பேர் தெளிவில்லாமல் இருப்பார்கள் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை.

ஒரு தமிழ் சொல் காலப் போக்கில் எவ்வாறு பொருள் மாறிப் போகும் என்பதற்கு இந்தச் சொல்லே கண்முன்னால் சாட்சியாக நிற்கிறது.

இந்தச் சொல் பற்றி சுப வீரபாண்டியன் அவர்களிடம் கருத்துக் கேட்டேன். அவருடைய தமிழறிவை நீங்கள் யாரும் சந்தேகிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

சுப வீரபாண்டியன் அவர்களுடைய விளக்கம்:

புறம் கூறுதல் என்பது ஒருவர் இல்லாத அவரைப் பற்றி குறையாகச் சொல்வது

இதிலே இருக்கின்ற புறம் என்ற வார்த்தை ஒருவர் இல்லாத போது, முதுகுக்குப் பின்னால் போன்ற பொருள்களில் வருகிறது.

"புறம்" என்ற வார்த்தை நேரடியாக "குறை" என்ற பொருளைத் தராது.

ஆனால் புறம்கூறுவது என்பது குறைகூறுவதுதான். பாராட்டுவது அல்ல. ஆனால் குறை என்ற சொல் அதில் இல்லை.

இப்படி அவர் கூறினார்.

நீங்கள் வேண்டுமென்றால் "புறம்" என்று சொல் குறித்து அவருடன் தொடர்பு கொண்டோ அல்லது வேறு தமிழறிஞர்களுடன் தொடர்பு கொண்டோ உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.

அவருடன் "கோள் சொல்லுதல்" என்பதில் வருகின்ற "கோள்" என்ற சொல் பற்றியும் பேசினேன். நான் இங்கே தெரிவித்தது போன்றே, அவரும் "கோள்" என்பது பேச்சு வழக்கில் இருக்கின்ற ஒரு சொல் என்றே கூறினார்.

ஆனால் "குறள்" (சிறிது) என்ற சொல்லில் இருந்து "கோள்" என்பது திரிந்ததா என்ற கேள்விக்கு "அப்படி இருக்கலாம், ஆனால் அதை உறுதியாக தன்னால் சொல்ல முடியாது" என்று கூறினார்.

எது எப்படியோ "புறம்" என்ற சொல் பற்றிய சந்தேகம் இதன் மூலம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இந்தத் தலைப்பை ஆரம்பித்த போது கூட அனைவரும் ஒரு மனதோடு "புறம்" என்பதற்கு நேரடியான அர்த்தம் "குறை" அல்ல என்று தெளிவாக சொல்வார்கள் என்றுதான் நினைத்தேன்.

இந்தச் சொல் பற்றி இத்தனை பேர் தெளிவில்லாமல் இருப்பார்கள் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை.

தெளிவுள்ள படியால் தான் பலர் வந்து கருத்தை முன்வைத்திருக்கிறாங்க சபேசன்

எது எப்படியோ "புறம்" என்ற சொல் பற்றிய சந்தேகம் இதன் மூலம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்

நான் அப்படி நம்பவில்லை.

Link to comment
Share on other sites

கறுப்பி!

லண்டனில் தமிழ் படித்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்

நீங்கள் அப்படியானவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் நெடுக்காலபோவான் "புறம்" என்ற சொல் நேரடியாக "குறை" என்ற அர்த்தத்தை குறிக்கும் என்று சொன்ன போது, அவர் வேண்டுமென்றே என்னுடைய விளையாடுகிறார் என்றுதான் நினைத்தான்.

புறம் என்பதற்கு நேரடியாக குறை என்று அர்த்தம் படும் என்று நெடுக்காலபோவன் எங்கே சொல்லி இருக்கிறேன் சார். கனவா காண்கிறீர்கள். புறம் கணித்தல் புறம் - குறை கணித்தல் என்றும் ( குறை காணுதல் ) பொருள் படும் என்று எழுதினேன். நான் ஆரம்பந் தொட்டு தெளிவாகவே சொல்லி இருக்கிறேன்.

புறம் சொல்லல்.. குறை சொல்லல் தான்.. ஆனால் புறம் குறை என்று நேரடியா வராது.. இந்த சுற்றிவளைப்புகளுக்கு எனக்கு தேவை இருக்கல்ல.அதனால் புறம் கணித்தல்.. குறை கணித்தல்.. (குறை காணுதல்) என்றும் குறிப்பிட்டு.. புறஞ்சொல்லாதே என்ற நடைமுறைப் பாவனைச் சொல்லையும் இனங்காட்டி இருந்தேன். எனது முதல் பதிவிலேயே இதைக் கூறிவிட்டேன்.

நெடுக்காலபோவனில்.. புறங்கூறப் போய்.. இறுதியில்.. இப்படி ஆகி நிற்கிறீர்கள். இந்த விடயத்தை தனித் தலைப்புக்கு கொண்டு வந்ததும் தாங்கள்.

நெடுக்காலபோவன்.. புறம் = குறை தான் என்று எங்கும் குறிப்பிடல்ல...!

நீங்கள் உங்கள் கற்பனைல.. நினைக்கிறதுக்கு நான் பொறுப்பாக முடியாது சபேசன்..! :P :D

Link to comment
Share on other sites

புறம் என்பது சாதரணநிலையில் கண்களுக்கு புலப்படாத பக்கம்...

ஆக சாதரணமக்களுக்கு எப்படி அதன் அர்த்தம் புரியும்..

அகராதி என்பது.. சொல்லுக்கு றேர் அர்த்தத்தை கூறுவதோடு அது வேறு சொற்களோடு இணையும்போது வரும் அர்த்தத்தையும் கூறும்..

புறம்-வெளியே..

புறங்கூறல்-ஒருவர் இல்லாதவிடத்து அவர் பற்றிக்குறைகூறல்

புறம்நோக்கல்-முகத்தை திருப்பிக்கொள்ளல்

புறம்படபேசல்-எதிர்மறையான கருத்தைக்கூறல்..

புறங்காட்டுதல்-முதுகு காட்டுதல்....

அப்புறம் ...என்னால முடியல.... :D

Link to comment
Share on other sites

அப்பொழுது நான் இரண்டு நாட்களாக உங்களை தவறாக புரிந்து கொண்டிருக்கிறேனா?

சரி! அப்படியே இருக்கட்டும்.

ஆனால் இந்தத் தலைப்பில் கூட நான் தெளிவான கேள்வியை எழுப்பவில்லையா?

புறம் கூறதல் என்ற வார்த்தையில் இருக்கும் "புறம்" என்ற சொல்லிற்கு நேரடியான அர்த்தம் என்ன?

"குறை" என்பதா?

"முதுகுக்குப் பின்னால்" என்பதா?

என்று கேட்டேன். அப்பொழுதும் இங்கே சிலர் "குறை" என்று சொன்னார்கள்.

சரி! பறவாயில்லை. இப்பொழுது அனைவருக்கும் விளங்கியிருக்கும்.

"புறங்கூறுதல்" என்ற வார்த்தையில் "குறை" என்ற சொல்லோ அல்லது அதற்கு ஒத்த சொல்லோ இடம்பெறவில்லை. இங்கே உள்ள இரண்டு சொற்களும் (புறம் மற்றும் கூறுதல்) "குறை" என்ற பொருளில் நேரடியாக வரவில்லை.

"புறம்" என்ற சொல் பின்னால், வெளியில் போன்ற அர்த்தங்களை தருகிறது. ஒருவரைப் போகவிட்ட பின்னால் பேசுவது. ஒருவர் பற்றி வெளியில் பேசுவது. "புறங்கூறுதல்" என்பதை பேச்சுவழக்கில் "முதுகுக்குப் பின்னால் பேசுதல்" என்பார்கள்.

;ஆனால் "புறங்கூறுதல்" தருகின்ற பொருள் "புறமாக" (அதாவது சம்பந்தப்பட்டவர் இல்லாத போது) குறை கூறுவது என்பதுதான்

இங்கே "குறை" என்ற சொல் நேரடியாக பாவிக்கப்படவில்லை. குறையைத்தான் புறங்கூறுவார்கள் என்பதால் "குறை" என்ற சொல்லை குறிப்பிட வேண்டிய தேவை எழவில்லை.

மொத்தத்தில் "புறங்கூறுதல்" என்ற சொல் தருகின்ற பொருளில் குறை கூறுவது என்பதும் இருந்தாலும், "புறங்கூறுதல்" என்ற அந்தச் சொல்லில் "குறை" என்பதைக் குறிக்கின்ற எந்தச் சொல்லும் இடம்பெறவில்லை.

அத்துடன் "புறம்" என்ற சொல்லிற்கு "குறை" என்று பொருள் இல்லை என்பதால் "புறக்கணிப்பு" என்ற சொல் "குறைக் கணிப்பு" என்ற பொருளைத் தராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புறம் என்பதற்கு வெளியில்.. முதுகு என்பன மட்டுமல்ல.. பொருள். அதற்கு நேரடியான பல பொருட்கள் உண்டு. நாம் இங்கு எடுத்தாண்டது புறம் கணித்தல் என்பதாகும். புறம் கணித்தலில்.. முதுகு கணித்தல் என்பது வருமா சார். கொஞ்சம் என்றாலும் சிந்தியுங்க சார் எழுத முதல்.

புறம் கூறல் என்பது ஒருவர் முன்னிலையில் இல்லாத வேளையில் குறை கூறல் என்பதாகவும் கொள்ளப்படுகிறது. உங்களின் கருத்துப்படி கூட முதுகுக்குப் பின்னால் பேசுவது.. என்றால்.. எதைப் பேசுறது என்ற வினா இயல்பாக எழுகிறது. அந்தப் பேசுவதற்குள் நீங்கள் மறைத்து வைத்திருக்கும் சொல்.. குறை என்பது. அதை நேரிடையாக சொல்கின்ற போது.. இல்லை அது தவறு இதுதான் சரி எங்கிறீர்கள். பின்னர் நீங்களே முதுகுக்குப் பின்னால் குறை பேசுறது என்றீங்கள். எதுஅப்படியோ.. புறங்கூறல் .. ஒருவர் இல்லாத போது அல்லது ஒரு வரைப் போகவிட்டு.. குறை கூறல் என்பதின் படி... புறம் கணித்தல் என்பதில் குறை கணித்தல் என்றும் பொருள் கொள்ளும்..!

தமிழில் இப்படிப் பல சொற்கள் உள்ளன.

நயம் கூறல் அல்லது நயமுரைத்தல். நயம் - இலாபம் என்றும் பொருள் படும். இலாபம் உரைத்தல், நயமாகச் சொல்லுதல் என்பது ரசிக்க சொல்லுதல். நயம் என்பது ரசிப்பு என்று நேரிடையாக அர்த்தம் பெறாது... அப்படித்தான் இதுவும். நயம் உரைத்தல் பொருளுரைத்தல் என்பதாகவும் கருதப்படலாம்..! இப்படிப் பல பொருள் அமையும் அது வாக்கியத்தில் அமையும் இடத்தைப் பொறுத்து. பெயாராக ஒரு நிலை.. வினையாலணையும் போது இன்னோர் நிலை.. இப்படி சொற்களின் பொருட்கள் மாறுபடும். :P

Link to comment
Share on other sites

"புறம் கூறுதல்" என்ற சொல்லில் "குறை" என்ற சொல் இடம்பெறவில்லை

"புறம்" என்ற சொல்லிற்கு "குறை" என்ற அர்த்தம் இல்லை.

இதிலே "புறம்" என்பதும் "கூறுதல்" என்பதும் இணைந்து "புறங்கூறுதல்" என்று வருகின்ற போது மட்டுமே, அது தருகின்ற மறைமுகப் பொருளில் "குறை" வருகிறது.

ஆகவே நீங்கள் "புறங்கூறுதல்" என்ற வார்த்தையை புறம் என்றும் கூறுதல் என்றும் பிரித்துவிட்டால் , அப்பொழுது மறைமுகமாகக் கூட "குறை" என்ற பொருள் வராது.

ஆகவே நீங்கள் இப்படிப் பிரித்து "புறம்" என்றால் குறை என்றும் அதை இன்னொரு வார்த்தையோடு இணைத்து "குறைக்கணிப்பு" என்று அர்த்தம் தருவதும் மிகப் பெரும் தவறு ஆகும்.

நீங்கள் "புறம்" என்று சொல்லிற்கு "குறை" என்று அர்த்தம் கண்டுபிடித்தால், இன்னொருவர் "கூறுதல்" என்று சொல்லிற்கும் "குறை" என்று அர்த்தம் கண்டுபிடிக்கலாம்

ஆகவே இப்படிச் செய்வது சரியல்ல.

இப்பொழுது "புறக்கணித்தல்" என்றால் என்ன என்ற கேள்வி வருகிறது.

"புறம்" என்பதன் அடிப்படை அர்த்தம் ஒன்றுதான். புறம் என்ற சொல் எங்கே வந்தாலும் அது இடம் ஒன்றை சார்ந்துதான் வருகிறது.

புறம் என்பதற்கு பின்னால், வெளியே என்று இடம் சார்ந்த பொருட்கள்தான் உள்ளன.

பின்னால் இருப்பதாற்தான் முதுகையும் "புறம்" என்று சொல்கிறோம். வெளியே போவதுதான் "புற"ப்படுவது. ஒருவரைப் பற்றி வெளியே பேசுவதுதான் "புறங்கூறுதல்".

உள்ளே இருக்கின்ற ஒருவரை வெளியே இருப்பவராக கணித்து விலக்கிவைப்பதுதான் புறக்கணிப்பது.

நீங்கள் "புறம்" என்ற சொல்லை எங்கு தேடிப்பார்த்தாலும், அது தருகின்ற அர்த்தம் ஒன்றுதான்.

காரணம் காலம் சொற்களின் அர்த்தத்தை பலவாறு திரித்துவிட்டாலும் அடிப்படையாக உள்ள சொல்லின் அர்த்தம் மாறுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"புறம் கூறுதல்" என்ற சொல்லில் "குறை" என்ற சொல் இடம்பெறவில்லை

"புறம்" என்ற சொல்லிற்கு "குறை" என்ற அர்த்தம் இல்லை.

இதிலே "புறம்" என்பதும் "கூறுதல்" என்பதும் இணைந்து "புறங்கூறுதல்" என்று வருகின்ற போது மட்டுமே, அது தருகின்ற மறைமுகப் பொருளில் "குறை" வருகிறது.

ஆகவே நீங்கள் "புறங்கூறுதல்" என்ற வார்த்தையை புறம் என்றும் கூறுதல் என்றும் பிரித்துவிட்டால் , அப்பொழுது மறைமுகமாகக் கூட "குறை" என்ற பொருள் வராது.

ஆகவே நீங்கள் இப்படிப் பிரித்து "புறம்" என்றால் குறை என்றும் அதை இன்னொரு வார்த்தையோடு இணைத்து "குறைக்கணிப்பு" என்று அர்த்தம் தருவதும் மிகப் பெரும் தவறு ஆகும்.

நீங்கள் "புறம்" என்று சொல்லிற்கு "குறை" என்று அர்த்தம் கண்டுபிடித்தால், இன்னொருவர் "கூறுதல்" என்று சொல்லிற்கும் "குறை" என்று அர்த்தம் கண்டுபிடிக்கலாம்

ஆகவே இப்படிச் செய்வது சரியல்ல.

இப்பொழுது "புறக்கணித்தல்" என்றால் என்ன என்ற கேள்வி வருகிறது.

"புறம்" என்பதன் அடிப்படை அர்த்தம் ஒன்றுதான். புறம் என்ற சொல் எங்கே வந்தாலும் அது இடம் ஒன்றை சார்ந்துதான் வருகிறது.

புறம் என்பதற்கு பின்னால், வெளியே என்று இடம் சார்ந்த பொருட்கள்தான் உள்ளன.

பின்னால் இருப்பதாற்தான் முதுகையும் "புறம்" என்று சொல்கிறோம். வெளியே போவதுதான் "புற"ப்படுவது. ஒருவரைப் பற்றி வெளியே பேசுவதுதான் "புறங்கூறுதல்".

உள்ளே இருக்கின்ற ஒருவரை வெளியே இருப்பவராக கணித்து விலக்கிவைப்பதுதான் புறக்கணிப்பது.

நீங்கள் "புறம்" என்ற சொல்லை எங்கு தேடிப்பார்த்தாலும், அது தருகின்ற அர்த்தம் ஒன்றுதான்.

காரணம் காலம் சொற்களின் அர்த்தத்தை பலவாறு திரித்துவிட்டாலும் அடிப்படையாக உள்ள சொல்லின் அர்த்தம் மாறுவதில்லை.

உங்கள் விளக்கம் ஏற்கும் படியாக இல்லை என்பதால் முற்றாக நிராகரிக்கிறேன்.

காரணம்.. புறங்கூறல் என்பதை புறம் + கூறல் என்று எழுதுவது தவறே அல்ல. புறங்கூறுதலில்.. எப்படி குறை கூறல் உள்ளடங்கிறதோ அப்படியே புறம் கூறுதலிலும் அது அடங்கும். புறம் கூறல் என்று வருகையில் கோள் கூறல்.. குறை கூறல் என்பது அமைந்தால் அன்றி வேறு பொருள் அமையாது. எனவே உங்கள் விளக்கங்கள் உங்களுக்கு மட்டும் பொருந்தும். தமிழுக்குப் பொருந்தாது.

இதுதான் எனது நிலைப்பாடு. இதில் மாற்றம் நிகழக் கூடிய அளவுக்கு உங்கள் விளக்கங்கள் தமிழறிவு சார்ந்து இல்லை..! :P :D

Link to comment
Share on other sites

முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன்.

நான் சுப வீரபாண்டியனோடு பேசுகின்ற போது, "புறக்கணித்தல்" என்பதை "குறைக்கணித்தல்" என்று பொருள் கொள்ள முடியுமா என்றும் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார்.

உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற அளவிற்கு என்னுடைய தமிழறிவு போதாது என்பதால், நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்று தனிமடலில் அறியத் தாருங்கள். அந்த நாட்டில் இருக்கின்ற தமிழறிஞர் ஒருவருடைய தொடர்பை ஏற்படுத்தி தருகிறேன். அவரிடம் இது பற்றி விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன்.

நான் சுப வீரபாண்டியனோடு பேசுகின்ற போது, "புறக்கணித்தல்" என்பதை "குறைக்கணித்தல்" என்று பொருள் கொள்ள முடியுமா என்றும் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார்.

உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற அளவிற்கு என்னுடைய தமிழறிவு போதாது என்பதால், நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்று தனிமடலில் அறியத் தாருங்கள். அந்த நாட்டில் இருக்கின்ற தமிழறிஞர் ஒருவருடைய தொடர்பை ஏற்படுத்தி தருகிறேன். அவரிடம் இது பற்றி விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள்.

நான் தமிழ் ஆசிரியரோடு பேசுகின்ற போது.. புறம் கூறல் என்பது ஒருவரைப் பற்றி அவர் முன்னிலையின்றி குறை கூறல் என்ற அடிப்படையிலும் கருத்து அமையும் என்பதால்.. புறம் கூறல்.. குறை கூறலாகக் கொள்ளலாம் என்று விளக்கினார்.

தமிழ் ஆசிரியரையும் சு ப வீயையும் பேச விடுவம். ஒரு முடிவுக்கு வரட்டும்..! இல்ல மாறி மாறி சிரிக்கட்டும். மற்றும்படி எனது நிலைப்பாட்டுக்கு.. என்னளவில் தெளிவான விளக்கம் இருப்பதால்.. மேற்கொண்டு எந்த அறிஞர் பெருமானையும் சந்தித்து தரிசனம் பெற வேண்டும் என்ற தேவையில்லை. :D:D

Link to comment
Share on other sites

உங்கள் தமிழாசிரியர் புறக்கணித்தால் என்றால் குறைக்கணித்தல் என்பதையும் ஏற்றுக்கொண்டாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தமிழாசிரியர் புறக்கணித்தால் என்றால் குறைக்கணித்தல் என்பதையும் ஏற்றுக்கொண்டாரா?

குறைக்கணித்தல் என்று ஒரு தனிப் பதம் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு பதம் பாவனையில் இருந்தால் காட்டுங்கள். நான் கேட்டுச் சொல்கின்றேன்.

குறை கணித்தல் என்பது ஒரு பத நிலை அல்ல. குறையைக் கணித்தல் என்பதில்.. ஐ உருவு மறைந்த நிலை. குறைகூறல் என்பது தனிப்பதமாகவும் பொருள் அமையும். குறையைக் கூறல் என்றும் அமையும்.

இரண்டுக்கும் வேறுபாடுண்டு.

இல்லாத பதத்தோடு போய் நான் ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு.. அவமானப்பட உங்களுக்கு என்ன ஆசையா..??! :3d_019: :D

புறக்கணிப்பு.. என்பதில்.. புறம் + கணிப்பு என்று எடுத்து வெளியைக் கணித்தல்.. முதுகைக் கணித்தல் கோளைக் கணித்தல் என்பதையெல்லாம் சு ப வீ ஏற்றுக் கொள்கிறாரா...???!

சாறி சு ப வீ..யை இதுக்குள்ள கொண்டு வந்ததால அவரிடமும் கேள்வி கேட்க வேண்டி வருகுது..??! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.