மூன்றாம் ஈழப்போரில் சிங்கள வான்படையின் யாழ். குடாநாட்டிற்கான வான்வழி வழங்கல்கள் இரு அவ்ரோ வானூர்திகளின் சுட்டுவீழ்த்தலுடன் முடக்கப்பட்டதால் விரைவான வழங்கலுக்கு வழியற்றுப் போனது. இந்த நிலைமையில் தான் கடல்வழி வழங்கல் அனுப்ப முடிவெடுக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்றன.
அதன் போது, 1996, 1997 ஆண்டு காலத்தில், யாழ் குடாநாட்டில் தரிபெற்றுள்ள சிங்களப் படைக்கான கடல் வழி வழங்கலையும் நிறுத்தும் நோக்கோடு கடற்புலிகள் கடலில் பயணித்த சிங்களக் கடற்படையின் வழங்கல் சரக்குக் கப்பல்களைக்