Jump to content

ராமர் பாலம் கட்டவில்லை.....மத்திய தொல்பொருள் ஆரய்ச்சியாளர் துறை அறிவிப்பு !!!

narathar

Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

90% சதவீதமல்ல.. 99% வீதம் ஒற்றுமையுள்ளவை. Marker Matching இல்லாமல் எப்படி டி என் ஏ பகுப்பாய்வை செய்ய முடியும். அதில் தான் சார் டி என் ஏ பகுப்பாய்வின் அடிப்படையே தங்கி இருக்கு. இதில நீங்கள் என்னத்தை புதிசா சொல்லுறீங்க என்று எனக்குப் புரியல்ல...! நான் இத்துறையில் ஈடுபட்டவன் என்ற வகையில்.. நீங்கள் சொன்னதில எனக்கு பெரிசா அறியிறத்துக்கு எதுவும் இருக்கல்ல..! :P :rolleyes:

//எத்தனை நாடுகள். அதற்காக அவர்கள் மரபணு ரீதியில் முற்றாக ஒன்றில் இருந்து அடுத்தவர் வேறுபட்டவர் என்பதல்ல அர்த்தம்.///

நீங்கள் என்ன துறையோ எனக்குத் தெரியாது,மேல எழுதினதுக்குத் தான் விளக்கம்.மரபணுவுக்கும் மரபணு மாக்கருக்குமான வித்தியாசம்.இனங்கள் மரபணு ரீதியா வேறுபடுவதாக நான் கூறியதாக எழுதி உள்ளிளீர்கள் அதனால் தான் அந்த விளக்கம்.

Link to post
Share on other sites
 • Replies 85
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

தமிழர் என்று ஒரு நாடு ஐனா விதிக்கமைவாக இல்லை.அப்போ நீக்கள் எப்படி உங்களைத் தமிழர் என்னும் கற்பனை எல்லைக்குள் நின்றா சொல்கிறீர்கள்? ஆரியரும் திராவிடரும் இருந்த போது ஐ நா எங்க இருந்திச்சு? நெடுக்கலாபோவான் நீங்கள் நல்ல உடல் நிலையோடா எழுதுகிறிர்கள்?

அதைத் தானே நானும் கேட்கிறேன் நீங்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்தவரானால் எப்படி உங்களைத் தமிழர் என்று அழைகிறீர்கள்? நீங்கள் எப்போது தமிழர் ஆனீர்கள்? தமிழ் மொழி எப்போது தோன்றியது?தமிழ் மொழி தோன்ற முதல் நீங்கள் என்ன மொழி பேசினீர்கள்? நீங்கள் திராவிட பிரம்மி மொழியையை அதன் முன்னர் பேசினால் எப்படி தமிழராக இருந்தீர்கள்? தமிழ்மொழி தோன்றி இருக்காத நேரத்தில் நீங்கள் எப்படித் தமிழராக உங்களை அடையாளம் காணுவீர்கள்?

வரலாற்றை தலை கீழாக நின்று கற்பனை என்று நெடுக்கலபோவான் என்பவர் யாழ்க் களத்தில் எழுதுவதால் மாற்றி எழுதி விட முடியாது.ஆரியர் - திராவிடர் என்பதற்கான மரபணுவியல்,தொல்பொருள்,மொழியி

??ல்,பண்பாட்டு ஆதாரங்கள் உலக அரங்கில் அறிவியற் தளத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.

திராவிடர் என்பது கற்பனை எனில் தமிழர் என்பதுவும் கற்பனை தான். :rolleyes:

அங்க ஒரு அறிவியல் தளமும் திராவிட இருப்பை வலியுறுத்தல்ல. திராவிட நாடு ஒன்றை பிரகடனம் செய்யக் கூட முடியாது. ஆனால் தமிழர்களால் தமிழ் நாட்டை... தமிழீழத்தை பிரகடனம் செய்ய முடியும். அதேபோல் ஆரிய நாட்டை பிரகடனம் செய்ய முடியாது. ஆதாரங்கள் இருந்தா செய்யச் சொல்லுறது. ஏன் இந்தியாவில் தமிழர்கள் தனித் தமிழ்நாடு கோரினர்.. தனித் திராவிட நாடு கோரல்ல...???!

நெடுக்காலபோவன் திராவிடத்துக்கு வெளில.. தமிழர்களை இனங்காணுறன். நீங்கள்.. திராவிடம் என்ற கற்பனைக்குள்ள நின்று.. தமிழர்களின் தனித்துவத்தை புதைக்கப் பார்கிறீங்க. அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு. :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

//எத்தனை நாடுகள். அதற்காக அவர்கள் மரபணு ரீதியில் முற்றாக ஒன்றில் இருந்து அடுத்தவர் வேறுபட்டவர் என்பதல்ல அர்த்தம்.///

நீங்கள் என்ன துறையோ எனக்குத் தெரியாது,மேல எழுதினதுக்குத் தான் விளக்கம்.மரபணுவுக்கும் மரபணு மாக்கருக்குமான வித்தியாசம்.இனங்கள் மரபணு ரீதியா வேறுபடுவதாக நான் கூறியதாக எழுதி உள்ளிளீர்கள் அதனால் தான் அந்த விளக்கம்.

Y நிறமூர்த்தத்திலும் மாறல்கள் நிகழும் அதற்கான சந்தர்ப்பம் உண்டு. ஆனால் அதன் வேகம்.. மற்றைய நிறமூர்த்தங்களில் நிகழ்வதை விட மிகக் குறைவு என்பதால் அதை மனித பாரம்பரிய வரலாற்றைப் படிக்கப் பாவிக்கின்றனர். இருந்தாலும் அங்கு கூட 100% திருத்தமான முடிவை எட்ட முடியாது. இருந்தாலும் வலுவான, வரலாற்றை மாற்றி எழுதத்தக்க முடிவுகளை எட்ட முடியும்.

மரபணு மாக்கர் என்பது ஏதோ புதிச விசயம் என்பது போல கதைகிறீர்கள். அதுவும் Y நிறமூர்த்ததில் உள்ள ஒரு பகுதிதான். அந்தப் பகுதி அதிகம் மாறலடையாமல் தந்தை வழி கடத்தப்படுவதால்.. டி என் ஏ பகுப்பாய்வின் போது அந்தப் பகுதிகளை மையமாகக் கொண்டு ஒற்றுமைகளை.. பாரம்பரியத் தொடர்புகளை இனங்காண முடியும். அது Y நிறமூர்த்தத்தில் மட்டும் தான் இருக்கென்றல்ல. பிறவற்றிலும் உண்டு. ஆனால் அவை அதிகம் மாறல்களுக்கு இலக்காவதால்.. அவற்றை இவ்வகைப் பகுப்பாய்வில் பயன்படுத்துவது திருத்தமாக அமையாது.

ஆகவே.. ஆய்வுகள் சரியான திருத்தங்களூடா நகர்ந்தன என்பதைக் கண்ணுற்ற பிந்தான் இறுதி முடிவுக்கு வர முடியும். இந்திய ஆய்வுகள் பல... அரசியல் மற்றும் சமூகத் தேவைகளுக்காக சோடிக்கப்படுபவையும் கூட..! இதை நீங்களே முன்னர் உங்களுக்காக ஒரு விவாதத்தின் போது எமக்குச் சொன்னீர்கள்...! இப்ப அதுவே உங்களையும் நோக்கி வருகிறது...! :P :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
அங்க ஒரு அறிவியல் தளமும் திராவிட இருப்பை வலியுறுத்தல்ல. திராவிட நாடு ஒன்றை பிரகடனம் செய்யக் கூட முடியாது. ஆனால் தமிழர்களால் தமிழ் நாட்டை... தமிழீழத்தை பிரகடனம் செய்ய முடியும். அதேபோல் ஆரிய நாட்டை பிரகடனம் செய்ய முடியாது. ஆதாரங்கள் இருந்தா செய்யச் சொல்லுறது. ஏன் இந்தியாவில் தமிழர்கள் தனித் தமிழ்நாடு கோரினர்.. தனித் திராவிட நாடு கோரல்ல...???!நெடுக்காலபோவன் திராவிடத்துக்கு வெளில.. தமிழர்களை இனங்காணுறன். நீங்கள்.. திராவிடம் என்ற கற்பனைக்குள்ள நின்று.. தமிழர்களின் தனித்துவத்தை புதைக்கப் பார்கிறீங்க. அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு. :P
நெடுக்கால போவான், மனித இனக் குழுக்கள் வெவ்வேறு காலகட்டங்களிலையே தோற்றம் பெறுகின்றன.இப்போது இருக்கும் இனக்குழுக்கள் தான் எப்போதும் உலகில் இருந்தன என்றால் உலகத்தில் மனிதன் ஒரு மூதாதையரிடம் இருந்துதோன்றி இருக்கமுடியாது.இனக்குழு அடையாளம் தனித்துவம் என்பதெல்லாம் காலத்தால் உருவாவன, வெறு படுவன .முன்னர் திராவிட இனக்குழுவாக இருந்தது பின்னர் தமிழர் தெலுங்கர் மலையாளிகள் என்று தனித் தனி மொழி வழி தேசிய இன அடையாளங்களைப் பெற்றன.மொழியியல் ரீதியாக இந்த மொழிகள் எல்லாம் ஒரு திராவிட மொழியில் இருந்தே உருவாகின என்பதே மொழியியாளர்களின் கூற்று.அதேபோல் சமஸ்கிரதம் கிந்தி என்பன ஒரே ஆரிய இன மொழிக் குழுமத்தில் இருந்து வந்தவை.இங்கே திராவிடம் என்னும் தமிழரின் ஆதி இனக்குழு அடையாளத்திப் பேசுவதால் இப்போதைய தமிழ் அடையாளம் இல்லாது போய் விடாது.இனக் குழு அடையாளம் என்பது மக்களால் உணரப்படுவது அல்லது மற்றவர்களால் அவர்களுக்கு உணர்த்தப்படுவது.இனக்குழு அடையாளங்கள் பிரிந்து தனித் தனிக்குழுமங்கள் உருவாவதுவும் ஒரு இனக்குழுமதுக்குள் இன்னொரு இனக்குழுமம் கலந்து தனது தனிதுவத்தை இழப்பதுவும் வரலாற்றில் நடக்கும் நடந்த நிகழ்வுகள் தான்.அன்றைய ஆரிய திராவிட வரலாறு இன்று பேசப்படுவதற்கான அடிப்படை காரணம் ஆரியர் கொண்டு வந்த வேதாகம மதமும் அதன் சாதிய அடகு முறையயும் தான். நீ சாதியில் குறைந்தவன் நான் கடவுளின் தூதுவன் என்று கூறிய சமயம் மனிதர்களை அடக்கி ஆளப் பயன் படுததப்பட்டதால் தான், மக்களால் ஆரிய திராவிட கருதியல் நிலையின் பாற்பட்டு எழுந்த அரசியல் இயக்கம் செல்வாக்குப் பெற்று தமிழ் நாட்டில் திராவிட அரசுகளின் ஆட்சி உருவாவதற்கான ஏது நிலை தோன்றியது.சாதியமும் அதனை முன்னிறுத்தும் மதமும் இருக்கு வரை ஆரிய திராவிடக் கோட்பாடும் வாழும்.எவ்வாறு சிங்கள பேரினவாதாம் தமிழர் என்னும் அடையாளத்தை தமிழர்களிடை வலிந்து திணித்ததோ அதே போல் திராவிடர் என்னும் அடையாளமும் திணிக்கப்பட்டது.இங்கே 'உங்கள் இந்து மதம்' இந்த ஆரிய மையக் கருத்தியலில் இருப்பதே உங்களின் பிரச்சினை.உங்கள் மதம் என்னும் சட்டகத்திற்குள் நிற்காமால் மனிதர்கள் மேல் இழைக்கப்பட்ட ஒரு வரலாற்று களங்கத்தைக் களைவோம் என்னும் எண்ணத்தை ஏற்படுத்னீர்கள் என்றால் உங்களால் இந்தச் சட்டகத்திற்க்கு அப்பால் சுதந்திரமாக சிந்திக்கக் கூடியதாக இருக்கும்.
Y நிறமூர்த்தத்திலும் மாறல்கள் நிகழும் அதற்கான சந்தர்ப்பம் உண்டு. ஆனால் அதன் வேகம்.. மற்றைய நிறமூர்த்தங்களில் நிகழ்வதை விட மிகக் குறைவு என்பதால் அதை மனித பாரம்பரிய வரலாற்றைப் படிக்கப் பாவிக்கின்றனர். இருந்தாலும் அங்கு கூட 100% திருத்தமான முடிவை எட்ட முடியாது. இருந்தாலும் வலுவான, வரலாற்றை மாற்றி எழுதத்தக்க முடிவுகளை எட்ட முடியும்.ஆகவே.. ஆய்வுகள் சரியான திருத்தங்களூடா நகர்ந்தன என்பதைக் கண்ணுற்ற பிந்தான் இறுதி முடிவுக்கு வர முடியும். இந்திய ஆய்வுகள் பல... அரசியல் மற்றும் சமூகத் தேவைகளுக்காக சோடிக்கப்படுபவையும் கூட..! இதை நீங்களே முன்னர் உங்களுக்காக ஒரு விவாதத்தின் போது எமக்குச் சொன்னீர்கள்...! இப்ப அதுவே உங்களையும் நோக்கி வருகிறது...! :P :rolleyes:
மேற் காட்டிய ஆய்வுகள் ஒரு ஆய்வு மையத்தால் மட்டும் செய்யப் படவில்லை என்பதை ஏற்கனவே சுட்டிக் காட்டி உள்ளேன்.மீண்டும் மீண்டும் இந்திய ஆய்வு மையம் என்று எழுது சலிப்படைய வைக்காதீர்கள். ஆய்வு சோடிக்கப்படிருப்பதாக நீங்கள் கருதுவதற்கான ஆதாராம் என்ன? உங்கள் துறை மரபணுவியல் என்றால் நீங்கள் அந்த ஆதாராத்தைக் கூறலாமே?
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எதைச் சொல்லி நின்றாலும்.. நான் நவீன அறிவியலின் கீழ் எனது நிலைப்பாட்டில் உறுதியானவன்.

தொன்று தொட்டுத் தொடரும்.. ஆரிய - திராவிட கற்பனை..வரலாறு மாற்றப்படும் போது எல்லாம் உணர்வீர்கள்..! :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எதைச் சொல்லி நின்றாலும்.. நான் நவீன அறிவியலின் கீழ் எனது நிலைப்பாட்டில் உறுதியானவன்.

தொன்று தொட்டுத் தொடரும்.. ஆரிய - திராவிட கற்பனை..வரலாறு மாற்றப்படும் போது எல்லாம் உணர்வீர்கள்..! :P

நவீன அறிவியல் தான் சொல்கிறது மனித குடிப்பரம்பலில் வெவ்வேறு காலா கட்டகங்களில் இரு வேறு இனக்குழுக்கள் இந்திய உபகண்டதிற்க்குள் உட் புகுந்தன என்று .மொழியியல், தொல் பொருள் அறிவியல் ஆய்வுகளும் இதனைத்தான் சொல்கின்றன.இதனை விட வேறு என்ன அறிவியற் சான்றை இது வரை முன் வைத்து நீங்கள் கருத்தாடி உள்ளீர்கள்?

நீங்கள் எதைச் சொன்னாலும் நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான் என்றால் ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது.இரவு வணக்கம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நவீன அறிவியல் தான் சொல்கிறது மனித குடிப்பரம்பலில் வெவ்வேறு காலா கட்டகங்களில் இரு வேறு இனக்குழுக்கள் இந்திய உபகண்டதிற்க்குள் உட் புகுந்தன என்று .மொழியியல், தொல் பொருள் அறிவியல் ஆய்வுகளும் இதனைத்தான் சொல்கின்றன.இதனை விட வேறு என்ன அறிவியற் சான்றை இது வரை முன் வைத்து நீங்கள் கருத்தாடி உள்ளீர்கள்?

நீங்கள் எதைச் சொன்னாலும் நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான் என்றால் ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது.இரவு வணக்கம்.

இதை முறியடிக்கும் வகையில் இன்று கூட கேம்பிரிஜ் பல்கலைக்கழக ஆய்வு தரப்பட்டது. அது தொல்பொருள் ரீதியிலும்.. மரபணு ரீதியிலும்.. ஒரே குழுமத்தில் இருந்துதான் இடம்பெயர் நடந்தது..! அது 60 - 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்று தெளிவுறுத்தியுள்ளது. அதுதான் முக்கியமான ஆய்வும்.. சான்றும். உப இடம்பெயர்கள்... இதனைத் தொடர்ந்தமைந்தவை..! இருவேறு என்பது... டிஸ் மிஸ் ஆகிட்டுது. :P :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை முறியடிக்கும் வகையில் இன்று கூட கேம்பிரிஜ் பல்கலைக்கழக ஆய்வு தரப்பட்டது. அது தொல்பொருள் ரீதியிலும்.. மரபணு ரீதியிலும்.. ஒரே குழுமத்தில் இருந்துதான் இடம்பெயர் நடந்தது..! அது 60 - 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்று தெளிவுறுத்தியுள்ளது. அதுதான் முக்கியமான ஆய்வும்.. சான்றும். உப இடம்பெயர்கள்... இதனைத் தொடர்ந்தமைந்தவை..! இருவேறு என்பது... டிஸ் மிஸ் ஆகிட்டுது. :P :rolleyes:

உப இடம் பெயர்வு என்றால் என்ன? சும்மா திருப்பித் திருப்பி ஒரே வட்டதுக்க நிண்டு கருதாடுவதில் பிரயோசனமில்லை.இரு வேறு காலகட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்த இனக்குழுமங்கள் வெவ்வேறு இன அடையாளங்களை உடையவை.அதுவும் ஏறக்குறைய அய்பதினாயிரம் வருட வித்தியாசத்தில் இடம் பெயர்ந்தவை நிச்சயமாக வெவ்வேறு தனித்துவமான இனக்குழு அடையாளங்களையே கொண்டிருக்கும்.ஆகவே இங்கே டிஸ்மிஸ் ஆனாது யார் என்பது எல்லோருக்கும் மிகத் தெளிவாக விளங்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உப இடம் பெயர்வு என்றால் என்ன? சும்மா திருப்பித் திருப்பி ஒரே வட்டதுக்க நிண்டு கருதாடுவதில் பிரயோசனமில்லை.இரு வேறு காலகட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்த இனக்குழுமங்கள் வெவ்வேறு இன அடையாளங்களை உடையவை.அதுவும் ஏறக்குறைய அய்பதினாயிரம் வருட வித்தியாசத்தில் இடம் பெயர்ந்தவை நிச்சயமாக வெவ்வேறு தனித்துவமான இனக்குழு அடையாளங்களையே கொண்டிருக்கும்.ஆகவே இங்கே டிஸ்மிஸ் ஆனாது யார் என்பது எல்லோருக்கும் மிகத் தெளிவாக விளங்கும்.

இதெப்படி இருக்கென்றால்.. உங்கள் பெற்றோரில் இருந்தும் வேறுபட்டுள்ளதால்.. நீங்கள் தனி ஒரு மனித இனத்துள் அடங்குகின்றீர்கள் என்பது போல் உள்ளது உங்கள் வாதம். நீங்கள் உருவத்தை தோற்றத்தை வைத்து இனப்பாகுபாடு செய்கிறீர்கள். அது திருத்தமானதல்ல என்பதைத்தான் அவர்கள் தெளிவுறுத்தியுள்ளனர்.

ஈழத்தில் இருந்து இன்று ஐரோப்பா வந்துள்ளவர்களின் சந்ததிகள்.. இன்னும் 2000 வருடங்களுக்குப் பிறகு.. ஈழத்துக்குப் போனால்.. அவர்கள் " தனி இனமாகப்" போவார்கள் என்பது உங்கள் வாதம். மரபணு சொல்கிறது அப்படியல்ல.. அவர்கள் ஈழத்தில் இருந்து வந்தோரின் வாரிசுகளே என்று. இதில் எது அறிவியல் மயமானது என்பதை தீர்மானிக்க வேண்டியது.. இங்குள்ள மக்கள்..! :lol::rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராமர் தொடர்பான சத்தியக்கடதாசி வாபஸ்

* இந்திய அரசாங்கம் தீர்மானம்

இந்துக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த இதிகாசமான இராமாயணத்தின் பிரதான பாத்திரமான இராமரினதோ அல்லது ஏனைய பாத்திரங்களினதோ இருப்பை கேள்விக் குறியாக்கிய இந்திய உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த சான்றிதழை (சத்தியக் கடதாசி) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் வாபஸ் பெறுவதென நேற்று வியாழக்கிழமை தீர்மானித்திருக்கிறது.

இந்து தேசிய வாதிகளின் கடுமையான எதிர்ப்பையடுத்தே அரசாங்கம் இந்தத் தீர்மானத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த சான்றிதழை ஆட்சேபனைக்குரிய விடயங்களை வாபஸ் பெறுவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் துரித தலையீட்டையடுத்தே அரசு இந்தத் தீர்மானத்திற்கு வந்திருக்கிறது.

இது தொடர்பாக சடுதியாக செய்தியாளர் மாநாட்டை நேற்று புதுடில்லியில் கூட்டிய இந்திய சட்டத்துறை அமைச்சர் எச்.ஆர். பரத்வாஜ் ஆட்சேபனைக்குரிய பந்திகள் நீக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

நாளை (இன்று) குறை நிரப்பு சான்றிதழ் ஒன்றை நாங்கள் உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம் உயர் நீதிமன்றத்திற்கு இராமாயணத்தில் வரும் இராமரோ அல்லது ஏனைய பாத்திரங்களோ இருந்ததற்கான வரலாற்று ரீதியான அல்லது விஞ்ஞான பூர்வமான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று தெரிவித்திருந்தது. இதனையடுத்து பாரதீய ஜனதா உட்பட இந்து தேசியவாதக் கட்சிகள் போர்க்கொடி தூக்கியதுடன் `மதநிந்தனை' என்று கடுமையாக சாடின. பாரதீய ஜனதாவின் சிரேஷ்ட தலைவர் எல்.கே. அத்வானி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ் ஆகியோரை சந்தித்து ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் சான்றிதழில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த விடயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சோனியா காந்தியும் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கலாசாரத்துடன் ஒன்றிணைந்தவர் இராமர்பிரானாகும். ஆதலால் இந்த விடயம் விவாதத்திற்கு எடுக்கப்பட முடியாத ஒன்று என்று சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ் நேற்று கூறினார். அரசாங்கம் இந்த விடயம் குறித்து எத்தகைய திட்டத்தை கொண்டுள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது;

எமது இதிகாசங்களில் இத்தகைய பாத்திரங்கள் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று சத்தியக்கடதாசியில் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பாகவே எமது உறுதிக் கூற்று இருக்கும் என்று அவர் கூறினார். சத்தியக்கடதாசி தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்பட்டவை தவறான அபிப்பிராயம் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை இந்திய தொல்பொருள் மதிப்பீட்டு திணைக்களம் ராமர் சேது அணை மனிதனால் உருவாக்கப்பட்டதென்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லையென்று இந்திய உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இராமர் அணையானது கற்பாறைகள், மண்திட்டுகளால் இயற்கையாக உருவானதொன்று என்றும் பல மில்லியன் வருடங்களாக அலைகள் மற்றும் நீருக்குள் உள்ள மண்படைகளால் ஏற்பட்ட மாற்றம் என்றும் தெரிவித்திருந்தது.

கடந்த புதன்கிழமை சேதுசமுத்திர கால்வாய் திட்டத்திற்கு எதிரான வழக்கின்போதே இதனை தொல்பொருள் மதிப்பீட்டு திணைக்களம் கூறியிருந்தது. சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்குதல் செய்திருந்த ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் ஏனைய மனுதாரர்களும் ராமர் சேதுபாலத்திற்கு ஊறுவிளைவிக்கக் கூடாதெனவும் வால்மீகி இராமாயணத்திலும் ஏனைய ஐதீக காப்பியங்களிலும் இந்த அணை பற்றி குறிப்பிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால் இது இந்திய புராதன இலக்கியத்தின் ஓரங்கமே என்றும் இதனை வரலாற்று சான்றாக நிரூபிக்கமுடியாதென்றும் தொல்பொருள் மதிப்பீட்டு திணைக்களம் தெரிவித்திருந்தது.

-தினக்குரல்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த சத்திய கடதாசியை வாபஸ் வாங்கவைச்சதே அந்த ராமர் தான் இதில் இருந்து என்ன விளங்குகிறது என்றால் ராமர்தான் அந்தபாலத்தை கட்டியுள்ளார் என்று,ஆகவே யாழ் களமும் இந்த தலைப்புக்கு ராமர் சார்ப்பக ஒரு பெறிய பூட்ட்டை போட்டால் நல்லம் .......ராம் ராம் சீதாராம்.......

Link to post
Share on other sites

இந்துக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த இதிகாசமான இராமாயணத்தின் பிரதான பாத்திரமான இராமரினதோ அல்லது ஏனைய பாத்திரங்களினதோ இருப்பை கேள்விக் குறியாக்கிய இந்திய உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த சான்றிதழை (சத்தியக் கடதாசி) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் வாபஸ் பெறுவதென நேற்று வியாழக்கிழமை தீர்மானித்திருக்கிறது.

அதானே... இவர்கள் தங்களின் சுயநல அரசியலுக்காக எங்களின் இந்துமதக் கடவுளை இல்லையென்று சொல்கிறார்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் இராமரின் சாபத்துக்கு உள்ளாகிவிட்டது. விரைவில் இராமரே வந்து ஆட்சியைக் கவிழ்க்கப் போகிறார் பாருங்கள் ;)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த சத்திய கடதாசியை வாபஸ் வாங்கவைச்சதே அந்த ராமர் தான் இதில் இருந்து என்ன விளங்குகிறது என்றால் ராமர்தான் அந்தபாலத்தை கட்டியுள்ளார் என்று,ஆகவே யாழ் களமும் இந்த தலைப்புக்கு ராமர் சார்ப்பக ஒரு பெறிய பூட்ட்டை போட்டால் நல்லம் .......ராம் ராம் சீதாராம்.......

எல்லாம் இராமரின் திருவிளையாடல்கள்..! திருவிளையாடல் புரிந்துதான் கடவுள் தன் இருப்பை நிலை நிறுத்திறவர்... திருவிளையாடல் படம் பார்க்கல்லையா. அதில மூழ்கிப்போன கப்பல்கள் தான் இந்தியக் கலாசாரம். :D:D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இராமரின் திருவிளையாடல்கள்..! திருவிளையாடல் புரிந்துதான் கடவுள் தன் இருப்பை நிலை நிறுத்திறவர்... திருவிளையாடல் படம் பார்க்கல்லையா. அதில மூழ்கிப்போன கப்பல்கள் தான் இந்தியக் கலாசாரம். :D:D

இராமரின் பெயரை சொன்னவுடன் எங்கள் எல்லோருக்கும் ஒரு சாந்தியும்,சமாதானமும் கிடைத்தது போல் ஒரு மன உணர்வு வருகிறது அல்லவா நெடுக்ஸ் B)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இராமரின் பெயரை சொன்னவுடன் எங்கள் எல்லோருக்கும் ஒரு சாந்தியும்,சமாதானமும் கிடைத்தது போல் ஒரு மன உணர்வு வருகிறது அல்லவா நெடுக்ஸ் B)

இராம நாமத்தின் தெய்வீகத்தன்மை அது. அதை எல்லோரும் உணர முடியாது. இராமரை நெருங்கினவை தான் உணரலாம். நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் இராமரை நெருங்கிட்டீங்க.. இன்னும் முயலுங்கள். சொர்க்கத்துக்கு விரைவில் வழி கிடைக்கும். :3d_039:

Link to post
Share on other sites

இந்தியா மீண்டும் ஒருமுறை "மதம் சார்ந்த நாடு" என நிரூபித்துள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மீண்டும் ஒருமுறை "மதம் சார்ந்த நாடு" என நிரூபித்துள்ளது.

அங்கால புஷ் கிறிஸ்தவ மத ரட்சகராக இருக்கிறார்...

இதோ மகிந்த இப்படி இருக்கிறார்...

முல்லைத்தீவில் பௌத்த சின்னங்களை தரிசிக்கும் நிலையை உருவாக்குவது கடமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

வரலாற்று ரீதியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பௌத்த புராதனச் சின்னங்களை எமது மக்கள் தரிசிக்கும் நிலைமை உருவாக்க வேண்டியது எமது கடப்பாடாகும். எந்த நிலையிலிருந்து முட்டுக்கட்டைகள் வந்தாலும் நாட்டையும் மதத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மகிந்த மட்டுமல்ல.. நம்மவர்களும் தான் பெளத்ததுக்காக குரல் கொடுத்து.. சைவத்தை.. இந்துவை நசுக்கனும் என்றிருக்கினம். அப்படி நசுக்கினால் தானாம்.. தமிழரின்ர அறிவு முடிவிலியைத் தொடும்..!

மகிந்தவன் வழியில்.. யாழிலும் இருக்கினம்.... பெளத்த மத விசுவாசிகள்.

வத்திகான்.. அப்படி இருக்குது..

நாங்க மட்டும் தான் விண்வெளில.. தமிழருக்கு தாயகம் படைக்க.. தீவிரமா முயன்று கொண்டிருக்கிறம்...! ஏன்னா நமக்கு எல்லாமே அதிகமாப் போச்சு...!

ஒன்றுமில்ல.. நமக்கு நாடு தேவையில்ல.. நமக்கென்று எதுவும் தேவையில்ல.. அந்நிய நாட்டில பிச்சையெடுக்க விசாக் கொடுத்தால் போதும்.. உரிமை கொண்டாடிட்டு.. சுதந்திரம் காப்பம். :3d_019: :ph34r:

Link to post
Share on other sites

அங்கால புஷ் கிறிஸ்தவ மத ரட்சகராக இருக்கிறார்...

இதோ மகிந்த இப்படி இருக்கிறார்...

முல்லைத்தீவில் பௌத்த சின்னங்களை தரிசிக்கும் நிலையை உருவாக்குவது கடமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

வரலாற்று ரீதியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பௌத்த புராதனச் சின்னங்களை எமது மக்கள் தரிசிக்கும் நிலைமை உருவாக்க வேண்டியது எமது கடப்பாடாகும். எந்த நிலையிலிருந்து முட்டுக்கட்டைகள் வந்தாலும் நாட்டையும் மதத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வத்திகான்.. அப்படி இருக்குது..

நாங்க மட்டும் தான் விண்வெளில.. தமிழருக்கு தாயகம் படைக்க.. தீவிரமா முயன்று கொண்டிருக்கிறம்...! ஏன்னா நமக்கு எல்லாமே அதிகமாப் போச்சு...! :3d_019: :ph34r:

அப்படியானால் இந்தியா "மதம் சாரா நாடு" என்ற வீண்பேச்சை நிறுத்த வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட அனைவரும், வத்திக்கான் உட்பட, உலகின் போர்களுக்கும் மக்களின் அவல வாழ்வுக்கும் காரணகர்த்தாக்களாக இருப்பதை தெரிந்துகொள்ளுங்கள். இவை அனைத்துக்கும் காரணம் மதங்களே.

தயவுசெய்து "இல்லை, மதங்கள் அப்படி சொல்லவில்லை; இவை எல்லாம் அதை பிழையாக பின்பற்றுபவர்கள் பிரச்சனை" என சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இந்தியா "மதம் சாரா நாடு" என்ற வீண்பேச்சை நிறுத்த வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட அனைவரும், வத்திக்கான் உட்பட, உலகின் போர்களுக்கும் மக்களின் அவல வாழ்வுக்கும் காரணகர்த்தாக்களாக இருப்பதை தெரிந்துகொள்ளுங்கள். இவை அனைத்துக்கும் காரணம் மதங்களே.

தயவுசெய்து "இல்லை, மதங்கள் அப்படி சொல்லவில்லை; இவை எல்லாம் அதை பிழையாக பின்பற்றுபவர்கள் பிரச்சனை" என சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்.

மதங்களில் குறைபிடிக்கிறதே தொழிலாப் போச்சு நமக்கு. அவர்கள் மதங்களை வைச்சு.. தேசங்களையே ஆக்கிரமிக்கிறார்கள். அதை நிறுத்த உங்கள் மத எதிர்ப்பு என்னத்தை வெட்டி விழுத்திட்டுது. சப்பைக் கட்டு அல்ல.. நடைமுறை உலகுக்கு எது அவசியமான அணுகுறையோ அதைத்தான் தேடனும். நாங்க வார்த்தையில் வெட்டி விழுத்திட்டா.. எல்லாம் பத்திரமா இருக்கும் என்று கனவு காண்கிறமே தவிர.. சாதிப்பது எதுவுமில்ல. இப்படி.. எடுப்பார் பேச்சைக் கேட்டு.. நாமே நம்மளைக் குழப்பி.. அதில அறிவு மிகுதி என்று பொய்த்தோற்றம் காட்டி சாதித்தது என்ன....??! சப்பைக் கட்டு என்று கதை சொல்ல முதல் அதை கொஞ்சம் பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.

சும்மா.. அறிவு.. ஆழ்ந்து நோக்கி.. உள்ளதையும் பறிகொடுத்திட்டு.. அமெரிக்காவில.. லண்டனில பிச்சை எடுக்கிறதுதான் வாழ்வு என்றால்... நீங்கள் மதத்தை ஏற்றால் என்ன விட்டால் என்ன யாருக்கு என்ன நட்டம்...??! பெறுமதியற்ற மனிதர்களாகிக் கொண்டிருக்கின்றனர்.. தமிழர்கள்..! அதில இந்த அதீத அறிவுக் கூட்டம் எது உலக இயக்கத்தோடு இயக்க அவசியமோ அதை விட்டிட்டு.. ஏதோ பேசி அறிவு என்று பொய்த்தோற்றம் காட்டிட்டு.. இருக்குது. பறிபோறதும் தெரியாமல்...???! :3d_019: :)

நெடுக்ஸ்..

நான் சொல்ல வரும் விடயம் உங்களுக்கு புரியவில்லை என நினைக்கிறேன். எதையாவது எழுதுவதற்கு முதலில்

"என்ன எழுதப் போகிறேன்" என சிறிது சிந்தித்துவிட்டு எழுதுங்கள்.

1. இன்றைய காலகட்டத்தில் "போர்களை ஏவும் நாடுகள் சமயம்" என்பதை முன்னிலைப்படுத்தியே தம் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என ஒப்புக்கொண்டீர்கள். இதற்கெல்லாம் காரணம் "சமயம்" என்ற உண்மையை நான் எழுதியபோது, "சமயத்தில் பிழை பிடிப்பதாக" உடனே திரும்பி விடுகின்றீர்கள். நீங்கள் மட்டுமல்ல, சமயத்தினுள் அமிழ்ந்துபோய் இருக்கும் அனைவரும் கையாளும் முறை இது. உங்களால் சமயத்தை விட்டு வெளியேறவும் முடியாது. அது தரும் அவலங்களை தாங்கவும் முடியாது. சமயம் நல்லது, மனிதனை மேம்பட வைப்பது என கூறுபவர்கள் அது பரிசளிக்கும் அவலங்களை "குறைகூறாமல்" நேர்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. எது "உண்மை" என்பதை அறிந்துகொள்வது அறிவு. பிரச்சனைகளில் இருந்து விடுபட முதலில் தேவை "பிரச்சனைகளுக்குள் அகப்பட்டிருக்கிறோம்" என அறிந்துகொள்வதே. நடைமுறைக்கு உகந்தது எது என பார்த்து நடந்ததன் விளைவே இந்த துன்ப துயரங்கள். நாம் "உண்மை" என்பதில் இருந்து விலகி, "நடைமுறை" என்பதில் வாழ்வதால் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுகின்றன. இதை தனியொரு இனத்திற்காக நான் எழுதவில்லை. உலகின் மக்கள் அனைவரும் பின்பற்றும் முறை இதுதான்.

3. லண்டன், அமெரிக்காவில் பிச்சை எடுப்பவர்கள் தவிர மற்றவர் எல்லாம் "வாழ்க்கையை வாழ்கின்றனரா?" முதலில் வாழ்க்கை என்றால் என்ன என்பதை மேம்போக்காக பார்க்காமல் அதன் அர்த்தத்தை பாருங்கள்.

4. அறிவு என்று பொய்த்தோற்றம் காட்டுவது நானல்ல. இதை ஏற்கெனவே கூறிவிட்டேன்.

ஆரம்பத்தில் நீங்கள் கருத்தாடிய சமயம் என்ற வட்டத்துக்குள் நின்றே தற்போதும் கருத்தாடல் செய்வதால்.. உங்களின் கருத்துக்களுக்கு மேலதிக ஆழமான பார்வை அவசியமானதாக நான் கருதவில்லை. நீங்கள் சமயம் தான் மக்களின் பிரச்சனைக்குக் காரணம் என்ற அடிப்படைக்குள் இருந்து வெளிவராமல் விடயங்களை அறிவுபூர்வமான அணுக முடியும் என்று நான் கருதவில்லை. அந்த வகையில் எனது நேரத்தைச் செலவிட்டு.. உங்கள், சமயத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் அறிவு விளக்கத்துக்கு விரிவான பதில் தேடுவதால் தீர்வு கிட்டும் என்று நான் கருதவில்லை. காரணம்.. நீங்கள் நடைமுறை உலக ஒழுங்குக்கு வெளியில் நின்று உலகை தரிச்சிக்க விரும்புகிறீர்கள். அது கூட ஒருவகை.. அறிவுபூர்வமற்ற நிலைதான்.

உங்களுக்கு சமயம் என்ற ஒரு வெறுப்புணர்வு ஆழமாக இருக்கிறதே தவிர.. எந்த விதமான நுட்பமான பார்வையும் இல்லை என்பதை நீங்கள் எடுத்ததற்கெல்லாம் சபேசன் போல சமயத்தைச் சாடுவது எடுத்துக் காட்டுகிறது.

நான் சமயங்களுக்கு அப்பால் மனித சமூகத்தின் பிரச்சனைகளுக்கு வேறு காரணிகளும் இருக்கின்றன என்பதில் தெளிவானவன். நீங்கள் அறிவுபூர்வமாகக் கதைகிறேன் என்ற அடிப்படையைக் கொண்டு சுற்றிச் சுழன்று சமயத்துக்குள் தான் நிற்கிறீர்களே தவிர உலக மக்கள் எந்த வகைகளில் எல்லாம் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர் என்பதை அறிய முற்படுகிறீர்கள் இல்லை. நீங்கள் இங்கு கருத்தாடியது முதல் எதற்கு எடுத்தாலும் சமயம் சமயம் சமயம் என்றுதான் சமயத்தை வைத்து மனித சமூகத்தை எடைபோடை விளைகிறீர்களே தவிர.. இன்னுமொருவன் போன்றவர்கள் சுட்டிக்காட்டியது போல மனித சமூகம் சந்திக்கும் பல்வேறு அடக்குமுறை வடிவங்களை நீங்கள் இனங்காணவோ.. சுட்டிக்காட்டவோ இல்லை. மாறாக உங்கள் சிந்தனை என்பது சமயம் என்பதை பொய்ப்பிப்பது என்ற குறுகிய எல்லைக்குள் தான் சுழன்று கொண்டிருக்கிறது.

சமயத்தை பொய்ப்பித்து மக்களின் எண்ணங்களில் இருந்து சமய நம்பிக்கைகளை தகர்த்துவிட்டால்.. உலகில் எந்தப் பிரச்சனையும் தோன்ற மூலம் கிடைக்காது என்பது போலத்தான் உங்கள் வாதம். இதில் நீங்கள் எந்த அறிவியல் நுட்பத்தை பாவித்துக் கருத்துரைக்கிறீர்களோ தெரியவில்லை. ஆனால்.. உங்களுக்கு சமயங்கள் மீதுள்ள வெறுப்புணர்வே.. காரணங்களை சரியாகத் தேடல் செய்ய விடாமல் தடுக்கிறது என்பது எனது பார்வை.

அறிவு என்பது உண்மை என்பதை அறிதல் எங்கிறீர்கள். நான் சொல்கிறேன் உண்மை என்பதை மனிதர் நாம் எமது அறிவுக்கு உட்பட்டு வரையறுக்கிறோமே தவிர.. இவைதான் உண்மைகள் என்று அறுதிட்டுக் கூற முடியாத நிலையில் தான் இன்றும் உள்ளன. உண்மைகள் நிலைமாறிக் கொண்டிருக்கின்றனவே தவிர நிலல பெற்று நின்றிடவில்லை. உங்கள் விவாதங்கள் சுற்றிச் சுழன்று ஒரே வட்டத்துக்குள் அறிவு.. உண்மை.. நுட்பம்.. நுணுக்கம்.. ஆழம்.. சமயம் என்று சுற்றுகிறதே தவிர நடைமுறை உலகில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் வடிவங்களை ஆராயவோ.. அவற்றிற்கான காரணிகளை சரிவர இனங்காணவோ தீர்வுகளை முன்வைக்கவோ.. செய்யவில்லை என்பதில் இருந்து.. உங்களின் வாதங்கள் அறிவு பூர்வமானவை என்பதற்கான அடிப்படைகளை இழந்து நிற்பதாகவே நான் காண்கிறேன்.

உங்களின் எடுகோளான... நான் சமயத்தில் ஊறித்திழைத்தவன் என்பதே மிகத் தவறானது. கடவுளை நான் என்னுள் காண்பவன் என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். நான் கடவுளையோ மனிதனையோ வேறெங்கும் தேடுபவனல்ல. என்னை நானே கடவுளாகக் காண்கிறேன். அப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே கடவுளாகக் காணலாம். அது ஒன்றும் பெரிய சமூக கொடுமைகயைச் செய்யப்போவதில்லை. என்னை நான் மனிதன் என்று வரையறுக்க முடியும் என்றால் ஏன் கடவுள் என்றும் வரையறுக்க முடியாது. மனிதன் என்பது உண்மையா..??! மனிதன் என்பதை நாம் தான் அறிமுகம் செய்தோமே தவிர.. அது தான் உண்மை என்பது எப்படியாகும்...??! இப்போ அதுவல்ல பிரச்சனை. சமூகத்தில் பிரச்சனைகளுக்கு பல காரணிகள் இருக்க.. சுற்றிச் சுற்றி மதங்களுக்குள் நிற்பது அறிவுபூர்வமான அணுகுமுறையாக எனக்குப் புலப்படவில்லை என்பதை உங்களுக்கு தெளிவாக உணர்த்த விரும்புகிறேன்.

நீங்கள் இந்த சமயம் என்ற எல்லைக்குள் நின்று பிரச்சனைகளுக்கான காரணங்களை தேடின் நிச்சயம்.. அதில் அறிவுபூர்வமான தன்மை முற்றுப்பெறும் என்று நான் கருதவில்லை என்பதை தெளிவுறுத்த விரும்புகிறேன். அப்படியான ஒரு வழி விவாதப் போக்கில் பயனேதும் இல்லை.

நாம் நால்வர் சமயங்களைத் தூற்றிக் கொண்டு இருப்பதை.. அல்லது சமயங்கள் போலி என்று அறிவு விளக்கம் கொடுப்பதால்.. சமயங்களால் தான் பிரச்சனைகள் தோன்றுவிக்கின்றன என்று நிறுவிக் கொண்டு.. அதுவே உண்மை என்று.. சொல்லிக் கொண்டிருப்பதால்.. உலகில் அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்களிற்காக விடிவு கிடைத்திடுமா...??! அடக்குமுறைக்கான வடிவங்களில் சமயமும் ஒன்றாக இருக்கலாம். அதைத்தான் சில நாட்டுத் தலைவர்களும் சில சமூகங்களும் செய்யகின்றன. ஆனால் அதுவே முடிந்த முடிவல்ல. ஒரே காரணியும் அல்ல. ஒரு அறிவுபூர்வமான அணுகுமுறையாளன் அடக்குமுறைகள் சமயம் என்ற எல்லைக்குள் தான் அடங்கி நிற்கின்றன என்பதாக மட்டும் கருதி கருத்துரைக்கமாட்டான். :3d_019:

Link to post
Share on other sites

இராமாயணம் என்பது வால்மீகியால் இயற்றப்பட்ட ஒரு காவியம் மட்டுந்தான். அதில் வரலாற்றுச் சம்பவங்கள் என்று கருதக் கூடியவைகள் இணைக்கப்பட்டிருக்கலாம். இராமர் பிறந்த இடமான அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் அதை அண்டிய பகுதியில் தோண்டி ஆராய்ந்தபோது கிடைத்தது நாயின் எலும்புத் துண்டுகள்தான். இயற்றப்பட்ட ஒரு விடயம் மக்களை ஒழுங்கு படுத்துவதற்காக தெய்வீகத்தன்மையுடையதாக்கப்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

//என்னை நானே கடவுளாகக் காண்கிறேன்- நெடுக்ஸ்//

கடவுள் சொன்ன எல்லாரும் கேக்க வேணும், கடவுள் சொன்னா எல்லாம் சரியாத் தான் இருக்கும்.

கடவுள் விரும்பியதை விரும்பியவாறு நேரத்திற்குத் தகுந்த மாதிரிச் சொல்லுவார்,மானிடப் பிறவிகள் எல்லாம் அதை கேட்டுத் தெளிய வேணும்.

கடவுள் எல்லாம் அறிந்தவர் வல்லவர், நல்லவர், அதிமேதாவி.

கடவுள் அறிவு தேவையேற்படும் போது அறிவுள்ளவராகவும், தேவை இல்லாத போது அறிவற்றவராகவும் வெவ்வேறு அவதாரங்களை வெவ்வேறு நேரங்களில் எடுப்பார்.

நானே கடவுள்..... :3d_039:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

//அடக்குமுறைக்கான வடிவங்களில் சமயமும் ஒன்றாக இருக்கலாம்//

இருக்கலாம் அல்ல இருக்கிறது.அது தான் இந்தத் தலைப்பில் விவாதிக்கப்படும் விடயம்.அதை மறுதலிப்பவர் நீங்கள்.இங்கே எவரும் வேறு அடக்குமுறை வடிவங்கள் இல்லை என்று வாதாடவில்லை.உலகில் இருக்கும் மிக முக்கியமான அடக்குமுறைக் கருத்தியல் சமயம், அதை முதலில் நேர்மையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பவர் நீங்கள்.இன்னுமொருவனுக்கும் அதனைத் தான் கூறி இருக்கிறேன்,ஏன் உங்களால் முதலில் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது?

மிகச் சுலபம் இந்து மதம் மக்களின் முன் நேற்றதிற்குத் தடையாக, அறிவியலுக்கு எதிராக ,அவர்களை அடக்குகிறது என்பதை எற்றுக் கொள்ள உங்களால் முடியாமல் இருக்கிறது.அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த இந்தியத் தொல் பொருட் திணைக்களத்தின் அறிக்கையை முதலில் வரவேற்ற நீங்கள் இப்போது நடைமுறை என இந்துதுவ வாதிகளின் கேடு கெட்ட அரசியலை ஆதரிப்பது உங்களின் மத வெறியின் உச்சம். மதம் எவ்வாறு அரசியலிலும்,அறிவியலிலும், மக்களின் வாழ்விலும் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதை இந்த நிகழ்ச்சி பட்டவர்த்தனமாக் காட்டி உள்ளது. உங்கள் மதம் மேல் உங்களுக்கும் இன்னுமொருவனுக்கும் இருக்கும் பற்றுதல்.நீக்காமல் உங்களால் எந்தச் சுதந்திரமான அறிவுபூர்வமான உரையாடைலையும் மேற் கொள்ள முடியாது என்பதை இந்தக் கருத்தாடலில் நீங்கள் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக்காட்டி இருக்கிறீர்கள்.

மதம் என்பது மக்களை மயக்கி அவர்களை அறிவு பூர்வமாகச் சிந்திக்க விடாமற் செய்கிறது என்பதை உணர்த்தும் இடமாக இந்தக்கருதாடல் இருக்கிறது.அதற்கான ஆதரவை வழங்குவதன் மூலம் நீங்கள் உங்கள் மத வெறியை வெளிச்சம் போட்டுக்காட்டி உள்ளீர்கள்.மரபணு உங்கள் துறை என்று சொல்வது வெட்கக் கேடான விடயம்.ஏனெனில் அறிவைப் பாவிப்பது தான் அறிவியல்.அறிவைப்பாவிக்காதே உன் மத வெறியின் பாற்பட்டு ,அறிவைப்பூட்டி வை என்று சொல்வது ஒரு அறிவியலாளன் சொல்ல முடியாத விடயம்.

மதம் என்பது மக்களை அடக்குகிறது என்பதை முதலில் நேர்மையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆனால் நீங்கள் அதைச் செய்யப்போவதில்லை ஏனெனில் நிங்கள் தான் கடவுள் ஆச்சே....

நெடுக்ஸ் பதீஸ்வரருக்கு சுவாகா......எல்லாரும் விழுந்து கும்புடுங்கோ. :3d_039:

Link to post
Share on other sites

ஆரம்பத்தில் நீங்கள் கருத்தாடிய சமயம் என்ற வட்டத்துக்குள் நின்றே தற்போதும் கருத்தாடல் செய்வதால்.. உங்களின் கருத்துக்களுக்கு மேலதிக ஆழமான பார்வை அவசியமானதாக நான் கருதவில்லை. நீங்கள் சமயம் தான் மக்களின் பிரச்சனைக்குக் காரணம் என்ற அடிப்படைக்குள் இருந்து வெளிவராமல் விடயங்களை அறிவுபூர்வமான அணுக முடியும் என்று நான் கருதவில்லை. அந்த வகையில் எனது நேரத்தைச் செலவிட்டு.. உங்கள், சமயத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் அறிவு விளக்கத்துக்கு விரிவான பதில் தேடுவதால் தீர்வு கிட்டும் என்று நான் கருதவில்லை. காரணம்.. நீங்கள் நடைமுறை உலக ஒழுங்குக்கு வெளியில் நின்று உலகை தரிச்சிக்க விரும்புகிறீர்கள். அது கூட ஒருவகை.. அறிவுபூர்வமற்ற நிலைதான்.

மிகவும் நல்லது. சமூகத்தின் மிக ஆழமாக வேரூண்டியுள்ள பிரச்சனைகளின் மொத்த உருவத்தின் ஒரு பகுதியை சுட்டிக் காட்டினேன். ஏற்பது, ஏற்காமல் விடுவது, அதைப்பற்றி சிந்திப்பது எல்லாம் தனிமனிதர்களை பொறுத்தது.

உங்களுக்கு சமயம் என்ற ஒரு வெறுப்புணர்வு ஆழமாக இருக்கிறதே தவிர.. எந்த விதமான நுட்பமான பார்வையும் இல்லை என்பதை நீங்கள் எடுத்ததற்கெல்லாம் சபேசன் போல சமயத்தைச் சாடுவது எடுத்துக் காட்டுகிறது.

இது என்னைப்பற்றிய உங்கள் சொந்த முடிவு. இதைத்தான் "உண்மையை" தெரியாமல் "ரியாலிட்டி"யில் வாழ்வதென்பது. என்னைப் பற்றிய அத்தனை முடிவுகளும் உங்களளவில் வைத்து எடைபோடுவதே அன்றி வேறேதும் இல்லை. மற்றது சமயம் என்பதன் மீது எனக்கு வெறுப்போ அல்லது ஆசையோ இல்லை. சமயம் என்பதை எந்தவித திரிபுகளும் அல்லாமல் "அது எப்படி இருக்கிறதோ அப்படியே" பார்க்கிறேன்.

நான் சமயங்களுக்கு அப்பால் மனித சமூகத்தின் பிரச்சனைகளுக்கு வேறு காரணிகளும் இருக்கின்றன என்பதில் தெளிவானவன். நீங்கள் அறிவுபூர்வமாகக் கதைகிறேன் என்ற அடிப்படையைக் கொண்டு சுற்றிச் சுழன்று சமயத்துக்குள் தான் நிற்கிறீர்களே தவிர உலக மக்கள் எந்த வகைகளில் எல்லாம் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர் என்பதை அறிய முற்படுகிறீர்கள் இல்லை. நீங்கள் இங்கு கருத்தாடியது முதல் எதற்கு எடுத்தாலும் சமயம் சமயம் சமயம் என்றுதான் சமயத்தை வைத்து மனித சமூகத்தை எடைபோடை விளைகிறீர்களே தவிர.. இன்னுமொருவன் போன்றவர்கள் சுட்டிக்காட்டியது போல மனித சமூகம் சந்திக்கும் பல்வேறு அடக்குமுறை வடிவங்களை நீங்கள் இனங்காணவோ.. சுட்டிக்காட்டவோ இல்லை. மாறாக உங்கள் சிந்தனை என்பது சமயம் என்பதை பொய்ப்பிப்பது என்ற குறுகிய எல்லைக்குள் தான் சுழன்று கொண்டிருக்கிறது.

நல்லது. அனைத்துப் பிரச்சனைகளையும் மேம்போக்காக பார்க்காமல் அதன் அடிவரை சென்று பாருங்கள். அங்கு "சமயம்" என்பதும் இருக்கும். அப்படி இதுவரை பார்க்க முடியவில்லையானால் உங்களை நீங்கள் இன்னமும் கேள்விகளால் துளைக்கவில்லை என்று அர்த்தம். சமூகத்தின் பல்வேறு அடக்குமுறைகளையும், வாழ்க்கைமுறைகளின் குருட்டுத்தனமான கொள்கைகளையும் அடையாளம் கண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு நம்பிக்கை தரும்படி, இதில் நுணுகி ஆராயும்படியான "சீரியஸான" நபர்களை இன்னமும் சந்திக்கவில்லை. குறுக்ஸ், இன்னுமொருவன் போன்றவர்கள் இதில் ஆர்வமாக கருத்தாட தொடங்கினர். ஆனால் இந்த சமூகத்தின் பிறழ்வும், அதன் அதிமுக்கியத்துவமும் அவர்கள் மனதில் ஆழமாக தைத்திருக்குமானால் ஒன்றில் அவர்களாகவே அதன்மூல காரணங்களை நோக்கி சிந்திக்க தொடங்கியிருப்பர் அல்லது கேள்விகளால் என்னை துளைத்திருப்பர்.

சமயத்தை பொய்ப்பித்து மக்களின் எண்ணங்களில் இருந்து சமய நம்பிக்கைகளை தகர்த்துவிட்டால்.. உலகில் எந்தப் பிரச்சனையும் தோன்ற மூலம் கிடைக்காது என்பது போலத்தான் உங்கள் வாதம். இதில் நீங்கள் எந்த அறிவியல் நுட்பத்தை பாவித்துக் கருத்துரைக்கிறீர்களோ தெரியவில்லை. ஆனால்.. உங்களுக்கு சமயங்கள் மீதுள்ள வெறுப்புணர்வே.. காரணங்களை சரியாகத் தேடல் செய்ய விடாமல் தடுக்கிறது என்பது எனது பார்வை.

சமயம் என்பதே ஒரு பொய்தான். அதை எப்படி பொய்ப்பிக்க முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால், உங்களளவில் என்னை எடைபோடுவது. சரி. நான் திரும்பத் திரும்ப எழுதிவருவது "சமயம் என்பதில் இருக்கும் பொய்மையை பாருங்கள்" என்பதையே. நீல்ஸ் போர் போன்ற மிகப் பெரும் விஞ்ஞானிகள் இந்த "கடவுள்" கொள்கைகளில் இருந்து மீண்டு இருக்கிறார்கள். இத்தருணத்தில் ஐன்ஸ்டைன்னுக்கும் நீல்ஸ் போர்க்கும் இடையில் நடைபெற்ற ஒரு விவாதத்தை கூறவேண்டும். குவாண்டம் கொள்கையின் தந்தை நீல்ஸ்போர், ஐன்ஸ்ட்டைனிடம் கூறியது "ஐன்ஸ்டைன், தயவுசெய்து உம்முடைய கடவுள் என்பதை விஞ்ஞானத்தினுள் கொண்டுவராதையும்". தன் இறுதிக் காலத்தில் ஐன்ஸ்டைன் குவாண்டம் கொள்கையை ஏற்றுக் கொண்டார். அதாவது "கடவுள் கூட தாயம் விளையாடுகிறார்". :):lol:

அறிவு என்பது உண்மை என்பதை அறிதல் எங்கிறீர்கள். நான் சொல்கிறேன் உண்மை என்பதை மனிதர் நாம் எமது அறிவுக்கு உட்பட்டு வரையறுக்கிறோமே தவிர.. இவைதான் உண்மைகள் என்று அறுதிட்டுக் கூற முடியாத நிலையில் தான் இன்றும் உள்ளன. உண்மைகள் நிலைமாறிக் கொண்டிருக்கின்றனவே தவிர நிலல பெற்று நின்றிடவில்லை. உங்கள் விவாதங்கள் சுற்றிச் சுழன்று ஒரே வட்டத்துக்குள் அறிவு.. உண்மை.. நுட்பம்.. நுணுக்கம்.. ஆழம்.. சமயம் என்று சுற்றுகிறதே தவிர நடைமுறை உலகில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் வடிவங்களை ஆராயவோ.. அவற்றிற்கான காரணிகளை சரிவர இனங்காணவோ தீர்வுகளை முன்வைக்கவோ.. செய்யவில்லை என்பதில் இருந்து.. உங்களின் வாதங்கள் அறிவு பூர்வமானவை என்பதற்கான அடிப்படைகளை இழந்து நிற்பதாகவே நான் காண்கிறேன்.

Non verbal thoughts என்பன பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கூகிள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்க்கவும். அதன் பிறகு தேவையானால் மேலே தொடரலாம்.

உங்களின் எடுகோளான... நான் சமயத்தில் ஊறித்திழைத்தவன் என்பதே மிகத் தவறானது. கடவுளை நான் என்னுள் காண்பவன் என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். நான் கடவுளையோ மனிதனையோ வேறெங்கும் தேடுபவனல்ல. என்னை நானே கடவுளாகக் காண்கிறேன். அப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே கடவுளாகக் காணலாம். அது ஒன்றும் பெரிய சமூக கொடுமைகயைச் செய்யப்போவதில்லை. என்னை நான் மனிதன் என்று வரையறுக்க முடியும் என்றால் ஏன் கடவுள் என்றும் வரையறுக்க முடியாது. மனிதன் என்பது உண்மையா..??! மனிதன் என்பதை நாம் தான் அறிமுகம் செய்தோமே தவிர.. அது தான் உண்மை என்பது எப்படியாகும்...??! இப்போ அதுவல்ல பிரச்சனை. சமூகத்தில் பிரச்சனைகளுக்கு பல காரணிகள் இருக்க.. சுற்றிச் சுற்றி மதங்களுக்குள் நிற்பது அறிவுபூர்வமான அணுகுமுறையாக எனக்குப் புலப்படவில்லை என்பதை உங்களுக்கு தெளிவாக உணர்த்த விரும்புகிறேன்.

முதலில் எது "ரியாலிட்டி", எது "இல்லூஷன்" என்பது பற்றி உணர்ந்துகொள்ளவும். மதங்கள் மனிதருக்கு செய்த, செய்துகொண்டிருக்கும் மிகப் பெரும் பேரழிவின் தாக்கத்தை உணர்ந்து கொண்டபடியினாலே முதலில் மதம் என்பதுபற்றி பேசுகிறேன்.

நீங்கள் இந்த சமயம் என்ற எல்லைக்குள் நின்று பிரச்சனைகளுக்கான காரணங்களை தேடின் நிச்சயம்.. அதில் அறிவுபூர்வமான தன்மை முற்றுப்பெறும் என்று நான் கருதவில்லை என்பதை தெளிவுறுத்த விரும்புகிறேன். அப்படியான ஒரு வழி விவாதப் போக்கில் பயனேதும் இல்லை.

நீங்கள் இன்னமும் மிகமேலோட்டமாக் பார்க்கிறீர்கள். வற்புறுத்த வேண்டிய தேவை எனக்கு இருப்பதாக தெரியவில்லை.

நாம் நால்வர் சமயங்களைத் தூற்றிக் கொண்டு இருப்பதை.. அல்லது சமயங்கள் போலி என்று அறிவு விளக்கம் கொடுப்பதால்.. சமயங்களால் தான் பிரச்சனைகள் தோன்றுவிக்கின்றன என்று நிறுவிக் கொண்டு.. அதுவே உண்மை என்று.. சொல்லிக் கொண்டிருப்பதால்.. உலகில் அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்களிற்காக விடிவு கிடைத்திடுமா...??! அடக்குமுறைக்கான வடிவங்களில் சமயமும் ஒன்றாக இருக்கலாம். அதைத்தான் சில நாட்டுத் தலைவர்களும் சில சமூகங்களும் செய்யகின்றன. ஆனால் அதுவே முடிந்த முடிவல்ல. ஒரே காரணியும் அல்ல. ஒரு அறிவுபூர்வமான அணுகுமுறையாளன் அடக்குமுறைகள் சமயம் என்ற எல்லைக்குள் தான் அடங்கி நிற்கின்றன என்பதாக மட்டும் கருதி கருத்துரைக்கமாட்டான். :3d_019:

முதலில் மக்களை விடுவிப்பது என்ற போலியான கருத்துக்களில் இருந்து எப்போது தெளிவடைய போகிறீர்கள் என தெரியவில்லை. மக்கள் தாங்களாகவே தம்மை பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க வேண்டும். இன்னொருவர் அவர்களை விடுவிக்க முடியாது. முதலில் இதை புரிந்துகொள்ளுங்கள். மக்களை விடுவிக்க புறப்பட்ட பலர் அவர்களை இன்னும் புதிய பிரச்சனைகளில் தள்ளிவிட்டதையே கண்டிருக்கிறோம்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.