Jump to content

ராமர் பாலம் கட்டவில்லை.....மத்திய தொல்பொருள் ஆரய்ச்சியாளர் துறை அறிவிப்பு !!!


narathar

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் நீங்கள் கருத்தாடிய சமயம் என்ற வட்டத்துக்குள் நின்றே தற்போதும் கருத்தாடல் செய்வதால்.. உங்களின் கருத்துக்களுக்கு மேலதிக ஆழமான பார்வை அவசியமானதாக நான் கருதவில்லை. நீங்கள் சமயம் தான் மக்களின் பிரச்சனைக்குக் காரணம் என்ற அடிப்படைக்குள் இருந்து வெளிவராமல் விடயங்களை அறிவுபூர்வமான அணுக முடியும் என்று நான் கருதவில்லை. அந்த வகையில் எனது நேரத்தைச் செலவிட்டு.. உங்கள், சமயத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் அறிவு விளக்கத்துக்கு விரிவான பதில் தேடுவதால் தீர்வு கிட்டும் என்று நான் கருதவில்லை. காரணம்.. நீங்கள் நடைமுறை உலக ஒழுங்குக்கு வெளியில் நின்று உலகை தரிச்சிக்க விரும்புகிறீர்கள். அது கூட ஒருவகை.. அறிவுபூர்வமற்ற நிலைதான்.

மிகவும் நல்லது. சமூகத்தின் மிக ஆழமாக வேரூண்டியுள்ள பிரச்சனைகளின் மொத்த உருவத்தின் ஒரு பகுதியை சுட்டிக் காட்டினேன். ஏற்பது, ஏற்காமல் விடுவது, அதைப்பற்றி சிந்திப்பது எல்லாம் தனிமனிதர்களை பொறுத்தது.

ஒரு பகுதியை அல்ல. உங்களின் "ஆழ்ந்த" சிந்தனையில்.. சமயம் தான் எல்லாப் பிரச்சனைகளின் மூலம் எங்கிறீர்கள். மனித வரலாற்றில் சமயம் என்பது எப்போது அவனால் அவனுக்கு என்று இயம்பப்பட்டது.. அதன் தேவை என்ன..??! அப்போதைய மனிதன் சந்தித்துக் கொண்டிருந்த பிரச்சனை என்ன..??! இப்படி ஆரம்ப அடிப்படைகளை நீங்கள் இனங்கண்டு.. இதைப் பற்றிக் கதைத்திருக்கிறீர்களா...??!

நீங்களே உங்களவில் தீர்மானித்தவைகளைக் கொண்டு ஆழநோக்குகிறோம் எங்கிறீர்கள்.. இரண்டு ஆங்கிலப் பதத்தை பாவித்து எழுதுவது ஆழ நோக்குதல் என்று அர்த்தமா..??.. இதுவல்ல... ஆழ நோக்குதல். இது தான் மக்கள் நோக்கி மாயைத்தனமாக ஒரு உலகை அறிவியல் என்று இனங்காட்டிக் கொண்டு..வழமையில் இருந்து நாம் மாறுபட்டவர்கள் என்ற தோற்றப்பாட்டைக் காட்டுவது. இதை யாழில் இன்னும் சிலரும் செய்கின்றனர். இவை ஆழ்ந்து நோக்குதலாக நான் காணவில்லை. காரணம்.. நீங்கள் எடுத்தாளும் விடயங்கள் ஒரு சில பதங்களைச் சுற்றிச் சுழங்கின்றதே தவிர அடிப்படைகளை நோக்கி ஆழ்ந்து நோக்கி காரணங்களைத் தேடுவதாகத் தெரியவில்லை. இதை வைத்தே உங்களின் கருத்துக்களைப் பற்றிய மதிப்பீட்டை செய்கிறேன். இதுவரை அதுதான் உங்கள் நிலை.

உங்களுக்கு சமயம் என்ற ஒரு வெறுப்புணர்வு ஆழமாக இருக்கிறதே தவிர.. எந்த விதமான நுட்பமான பார்வையும் இல்லை என்பதை நீங்கள் எடுத்ததற்கெல்லாம் சபேசன் போல சமயத்தைச் சாடுவது எடுத்துக் காட்டுகிறது.

இது என்னைப்பற்றிய உங்கள் சொந்த முடிவு. இதைத்தான் "உண்மையை" தெரியாமல் "ரியாலிட்டி"யில் வாழ்வதென்பது. என்னைப் பற்றிய அத்தனை முடிவுகளும் உங்களளவில் வைத்து எடைபோடுவதே அன்றி வேறேதும் இல்லை. மற்றது சமயம் என்பதன் மீது எனக்கு வெறுப்போ அல்லது ஆசையோ இல்லை. சமயம் என்பதை எந்தவித திரிபுகளும் அல்லாமல் "அது எப்படி இருக்கிறதோ அப்படியே" பார்க்கிறேன்.

நீங்கள் வரையறுக்கும் உண்மைக்குள் மற்றவன் வாழ்வதுதான் அவனின் றியாலிட்டி என்பதும் தவறானது. உண்மைக்கு இதுதான் என்று ஒரு வரைவிலக்கணம் அறுதியிட்ட வடிவில் இல்லை. ஏலவே இதைப் பற்றி சுட்டிக்காட்டிய பின்னும். மனிதனைச் சுற்றி உண்மை என்பது காட்டப்படுகின்றனவே தவிர.. அறிவியலால் கூட.. அதுதான் அறுதியிட்ட உண்மை என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை. நீங்கள் இந்த உலகில் தரிசித்த அல்லது அறிவியல் கொண்டு விளங்கிய அறிதியிட்ட உண்மை என்ன... என்பதைச் சொல்லும் போது உங்களின் நிலையை மற்றவர்கள் விளங்கிக் கொள்ள முனைவார்கள். இதற்கு இரசாயனத் தாக்கம் நடத்த வேண்டிய தேவையில்லை. ஒரு மனிதனை அளவிடுதல் என்பது அவனின் உயரைத்த அளத்தல் அல்ல. அவன் வெளியிடும் கருத்தில் இருந்து அவனின் சிந்தனைப் போக்கை.. கண்டறிதல். உங்கள் கருத்துக்கள் உங்கள் கருத்துக்கள் பற்றிய அளவிடப் போதுமான காரணி என்று நான் நினைக்கிறேன். அதென்ன.. "நான்" என்பதால் நீங்கள் வரையறுத்துள்ளது...???! நீங்களும் இந்த பிரபஞ்சத் இந்த தொகுதியில் ஒரு கூறு. நான் " தனி மனிதன்" என்பதில்.. "தனி" என்பது கூட ஒரு எல்லை வரைதான். அதற்குமேல்.. நீங்கள் ஒரு பொதுக் கூறு. உலகில் உள்ள ஒரு பொதுக்கூறைப் பற்றி விளங்கிக் கொள்வது கடினமல்ல.

நான் சமயங்களுக்கு அப்பால் மனித சமூகத்தின் பிரச்சனைகளுக்கு வேறு காரணிகளும் இருக்கின்றன என்பதில் தெளிவானவன். நீங்கள் அறிவுபூர்வமாகக் கதைகிறேன் என்ற அடிப்படையைக் கொண்டு சுற்றிச் சுழன்று சமயத்துக்குள் தான் நிற்கிறீர்களே தவிர உலக மக்கள் எந்த வகைகளில் எல்லாம் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர் என்பதை அறிய முற்படுகிறீர்கள் இல்லை. நீங்கள் இங்கு கருத்தாடியது முதல் எதற்கு எடுத்தாலும் சமயம் சமயம் சமயம் என்றுதான் சமயத்தை வைத்து மனித சமூகத்தை எடைபோடை விளைகிறீர்களே தவிர.. இன்னுமொருவன் போன்றவர்கள் சுட்டிக்காட்டியது போல மனித சமூகம் சந்திக்கும் பல்வேறு அடக்குமுறை வடிவங்களை நீங்கள் இனங்காணவோ.. சுட்டிக்காட்டவோ இல்லை. மாறாக உங்கள் சிந்தனை என்பது சமயம் என்பதை பொய்ப்பிப்பது என்ற குறுகிய எல்லைக்குள் தான் சுழன்று கொண்டிருக்கிறது.

நல்லது. அனைத்துப் பிரச்சனைகளையும் மேம்போக்காக பார்க்காமல் அதன் அடிவரை சென்று பாருங்கள். அங்கு "சமயம்" என்பதும் இருக்கும். அப்படி இதுவரை பார்க்க முடியவில்லையானால் உங்களை நீங்கள் இன்னமும் கேள்விகளால் துளைக்கவில்லை என்று அர்த்தம். சமூகத்தின் பல்வேறு அடக்குமுறைகளையும், வாழ்க்கைமுறைகளின் குருட்டுத்தனமான கொள்கைகளையும் அடையாளம் கண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு நம்பிக்கை தரும்படி, இதில் நுணுகி ஆராயும்படியான "சீரியஸான" நபர்களை இன்னமும் சந்திக்கவில்லை. குறுக்ஸ், இன்னுமொருவன் போன்றவர்கள் இதில் ஆர்வமாக கருத்தாட தொடங்கினர். ஆனால் இந்த சமூகத்தின் பிறழ்வும், அதன் அதிமுக்கியத்துவமும் அவர்கள் மனதில் ஆழமாக தைத்திருக்குமானால் ஒன்றில் அவர்களாகவே அதன்மூல காரணங்களை நோக்கி சிந்திக்க தொடங்கியிருப்பர் அல்லது கேள்விகளால் என்னை துளைத்திருப்பர்.

இதற்கான உங்களின் முரண்பாடுகள் நீங்கள் எழுதிய இப்பந்தியிலேயே அமைகிறது. பாருங்கள்.

மிகவும் நல்லது. சமூகத்தின் மிக ஆழமாக வேரூண்டியுள்ள பிரச்சனைகளின் மொத்த உருவத்தின் ஒரு பகுதியை சுட்டிக் காட்டினேன். ஏற்பது, ஏற்காமல் விடுவது, அதைப்பற்றி சிந்திப்பது எல்லாம் தனிமனிதர்களை பொறுத்தது.

உங்களைப் போன்று சமயத்தைக் கொண்டு சமூகத்தை அளவிடுவதை சீரியஸாக நோக்க வேண்டிய தேவை உங்களைத் தவிர வேறு எந்த மனிதனுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. மனிதன் எந்தனையோ விடயங்களில் நிச்சயமற்ற, ஆனால் நம்பிக்கைக்குரிய இலக்கை நோக்கித்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறான். அந்த வகையில் அவனுக்கு சமயங்கள் பற்றிய தாக்கம் என்பது ஒரு வரையறைக்கு உட்பட்டதுதான். சமய எண்ணங்கள் மனித இயற்றுகைகள். அந்த வகையில் அவற்றின் ஆழ்ந்த நோக்கல் என்பது மனிதப் புலனுக்குள் உள்ள ஒன்றுதான். ஒரு கணணியை வடிவமைத்த மனிதன் அதனைப் பற்றி 100% அறிந்திருப்பது சாத்தியம். ஆனால் இயற்கையாக வடிவமைக்கப்பட்ட மனித உடலைப் பற்றி மனிதன் 100% அறிய முடியாதுள்ளது. சமயத்தின் ஆழம், பரிமானம்.. தாக்கம் இவை அனைத்தும் மனித திட்டமிட்டவை. உங்களின் முயற்சி என்பது மனிதன் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியதன் தாக்கத்தை ஆழ நோக்குதல் என்பது. மனிதன் திட்டமிடாத இயற்கையின் தாக்கமும் மனிதனை ஆளுமை செய்கிறது. அதை நீங்கள் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. அதனால் தான் உலகில் முக்கிய விஞ்ஞானியான அயன்ஸ்ரைன் கடவுள் என்பதை இயற்கைக்குள் வரையறுக்க முயற்சித்தார். கடவுள் என்பதை தனி ஒரு வடிவமாக அவர் காண மறுத்தார். காரணம்.. இயற்கைக்குள் தான் மனித அறிவியலுக்கு எட்டாத அம்சங்கள் இன்னும் நிறைந்திருக்கின்றன. கடவுள் என்பதும்.. அதற்குள் தான் பொதிந்திருக்கிறது. கடவுள் என்பது வேறு சமயம் என்பது வேறு. நீங்கள் இரண்டையும் ஒன்றாக்கி குழப்பிக் கொள்கிறீர்கள்.

சமயம் என்பது மனித கோட்பாட்டு வகுப்பில் இருந்து பிறந்தவை. கடவுள் என்பது மனிதனால் விளங்க முடியாத தன்மையை அடையாளமிட வைத்துக் கொண்ட ஒரு பதநிலை. அவ்வளவும் தான். மனிதக் கோட்பாடுகளின் தாக்கம் ஒரு வரையறைக்குள் தான் அமையும். அதன் தாக்கப் பரிமானம் ஒரு எல்லைக்குள் தான் இருக்கும். அதை விளங்கிக் கொள்வது கடினமல்ல. அதை தடுப்பதும் கடினமல்ல. ஆனால் அது உலகில் ஊக்கிவிக்கப்படுகிறது காரணம் தற்கால உலகில் மனிதனின் தேவைகள்.. அதனை மூலதனமாக்கின்ற போதும் நிறைவடைவதால் ஆகும். இது இலகுவாக விளங்கக் கூடிய ஒன்று.

சமயத்தை பொய்ப்பித்து மக்களின் எண்ணங்களில் இருந்து சமய நம்பிக்கைகளை தகர்த்துவிட்டால்.. உலகில் எந்தப் பிரச்சனையும் தோன்ற மூலம் கிடைக்காது என்பது போலத்தான் உங்கள் வாதம். இதில் நீங்கள் எந்த அறிவியல் நுட்பத்தை பாவித்துக் கருத்துரைக்கிறீர்களோ தெரியவில்லை. ஆனால்.. உங்களுக்கு சமயங்கள் மீதுள்ள வெறுப்புணர்வே.. காரணங்களை சரியாகத் தேடல் செய்ய விடாமல் தடுக்கிறது என்பது எனது பார்வை.

சமயம் என்பதே ஒரு பொய்தான். அதை எப்படி பொய்ப்பிக்க முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால், உங்களளவில் என்னை எடைபோடுவது. சரி. நான் திரும்பத் திரும்ப எழுதிவருவது "சமயம் என்பதில் இருக்கும் பொய்மையை பாருங்கள்" என்பதையே. நீல்ஸ் போர் போன்ற மிகப் பெரும் விஞ்ஞானிகள் இந்த "கடவுள்" கொள்கைகளில் இருந்து மீண்டு இருக்கிறார்கள். இத்தருணத்தில் ஐன்ஸ்டைன்னுக்கும் நீல்ஸ் போர்க்கும் இடையில் நடைபெற்ற ஒரு விவாதத்தை கூறவேண்டும். குவாண்டம் கொள்கையின் தந்தை நீல்ஸ்போர், ஐன்ஸ்ட்டைனிடம் கூறியது "ஐன்ஸ்டைன், தயவுசெய்து உம்முடைய கடவுள் என்பதை விஞ்ஞானத்தினுள் கொண்டுவராதையும்". தன் இறுதிக் காலத்தில் ஐன்ஸ்டைன் குவாண்டம் கொள்கையை ஏற்றுக் கொண்டார். அதாவது "கடவுள் கூட தாயம் விளையாடுகிறார்". :):lol:

சக்திச் சொட்டுக் (குவாண்டம்) கொள்கைக்கும்.. கடவுள் இல்லை என்பதற்கும் உள்ள தொடர்பு என்ன...???! அணுவில் உள்ள கூறுகளின் சக்தி நிலைகளைப் பற்றிப் பேசுவது அது. சக்தியின் மூலம் என்ன என்பதை அறிய முடியாத நிலையில் மனிதன் கடவுளை உருவகித்து வைத்திருக்கிறான். இது தொடர்பில் மீள விவாதிப்பது என்பது மீண்டும் முடிவிலிக்கு எது எல்லை என்று வரையறுக்கிறீர்கள் என்ற கேள்வியில் போய் முடியும். உங்களால் அல்லது போரின் சக்திச் சொட்டுக் கொள்கையால் முடிவிலி என்ற "சிந்தனை தூரத்துக்கு" முடிவை இட முடிந்தால் நானும் அதை ஏற்றுக் கொள்வேன்.. நீங்கள் சொல்லும் விடயத்தில் கடவுள் என்ற உருவகிப்புக்கு இடமே இல்லை என்று. அதுவரை நான் கடவுள் தொடர்பில் "பொய்" என்பதைக் கொண்டு மக்கள் அணுக முடியாது.. அவர்களின் நம்பிக்கைக்குள் உள்ள போலித்தனத்தை நிறுவ முடியாது.

அறிவு என்பது உண்மை என்பதை அறிதல் எங்கிறீர்கள். நான் சொல்கிறேன் உண்மை என்பதை மனிதர் நாம் எமது அறிவுக்கு உட்பட்டு வரையறுக்கிறோமே தவிர.. இவைதான் உண்மைகள் என்று அறுதிட்டுக் கூற முடியாத நிலையில் தான் இன்றும் உள்ளன. உண்மைகள் நிலைமாறிக் கொண்டிருக்கின்றனவே தவிர நிலல பெற்று நின்றிடவில்லை. உங்கள் விவாதங்கள் சுற்றிச் சுழன்று ஒரே வட்டத்துக்குள் அறிவு.. உண்மை.. நுட்பம்.. நுணுக்கம்.. ஆழம்.. சமயம் என்று சுற்றுகிறதே தவிர நடைமுறை உலகில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் வடிவங்களை ஆராயவோ.. அவற்றிற்கான காரணிகளை சரிவர இனங்காணவோ தீர்வுகளை முன்வைக்கவோ.. செய்யவில்லை என்பதில் இருந்து.. உங்களின் வாதங்கள் அறிவு பூர்வமானவை என்பதற்கான அடிப்படைகளை இழந்து நிற்பதாகவே நான் காண்கிறேன்.

Non verbal thoughts என்பன பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கூகிள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்க்கவும். அதன் பிறகு தேவையானால் மேலே தொடரலாம்.

கூகிள் என்பது இலத்திரனியல் உலகில் முக்கியமான ஒரு தேடல் சாதனம். இன்று உலகம் இலத்திரனியல் பிரதிகள் (Electronic documents) மற்றும் அச்சு (print documents) பிரதிகள் என்று இரு பிரதான தளத்தில் தகவல்களைச் சேமித்து வைத்திருக்கின்றன. நீங்களும் சரி பிறரும் சரி இவை இரண்டையும் இன்றைய உலகில் பாவிப்பது தவிர்க்க முடியாதது. நீங்கள் வெறுமனவே அச்சு வடிவ தகவல் திரட்டுக்களையே பாவித்து கருத்துரைப்பது போல தோற்றம் காட்டுவது தவறானது. அதுபோல கூகிள் மீது பாய்வதும் அறிவு பூர்வமான சிந்தனையல்ல. தகவல் திரட்டுக்கள் இரண்டு வடிவிலும் உள்ள போது.. தேவைக்கேற்ப அவற்றைப் பாவித்து விடயங்களை அறிதல் தெளிவுறுதல் சிறப்பே. உங்களைப் போல எல்லோரும் "நான் அனைத்தும் அறிந்த அறிஞன்" என்ற நிலையில் இல்லை. நாம் இந்தப் பாரிய முடிவற்ற பிரபஞ்சத்தில் (இதுவரை பிரஞ்சத்துக்கு எல்லை இடமுடியவில்லை) எங்கோ ஓர் மூலைக்குள் இருந்து கொண்டு அங்குள்ள இயற்கையைக் கூட இன்னும் சரி வர விளங்க முடியாத நிலையில்.. உண்மை என்பதன் இறுதி வடிவத்தை காண்பது உடனடிச் சாத்தியமல்ல. என்பது எனது சிந்தனைக்கு தெளிவாகத் தெரிகிறது.

உங்களின் எடுகோளான... நான் சமயத்தில் ஊறித்திழைத்தவன் என்பதே மிகத் தவறானது. கடவுளை நான் என்னுள் காண்பவன் என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். நான் கடவுளையோ மனிதனையோ வேறெங்கும் தேடுபவனல்ல. என்னை நானே கடவுளாகக் காண்கிறேன். அப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே கடவுளாகக் காணலாம். அது ஒன்றும் பெரிய சமூக கொடுமைகயைச் செய்யப்போவதில்லை. என்னை நான் மனிதன் என்று வரையறுக்க முடியும் என்றால் ஏன் கடவுள் என்றும் வரையறுக்க முடியாது. மனிதன் என்பது உண்மையா..??! மனிதன் என்பதை நாம் தான் அறிமுகம் செய்தோமே தவிர.. அது தான் உண்மை என்பது எப்படியாகும்...??! இப்போ அதுவல்ல பிரச்சனை. சமூகத்தில் பிரச்சனைகளுக்கு பல காரணிகள் இருக்க.. சுற்றிச் சுற்றி மதங்களுக்குள் நிற்பது அறிவுபூர்வமான அணுகுமுறையாக எனக்குப் புலப்படவில்லை என்பதை உங்களுக்கு தெளிவாக உணர்த்த விரும்புகிறேன்.

முதலில் எது "ரியாலிட்டி", எது "இல்லூஷன்" என்பது பற்றி உணர்ந்துகொள்ளவும். மதங்கள் மனிதருக்கு செய்த, செய்துகொண்டிருக்கும் மிகப் பெரும் பேரழிவின் தாக்கத்தை உணர்ந்து கொண்டபடியினாலே முதலில் மதம் என்பதுபற்றி பேசுகிறேன்.

நான் மதங்கள் மனிதனைப் பேரழிவில் தள்ளியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. மதங்களின் அடிப்படையில் மனிதன் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறானே தவிர.. மதங்கள் பேரழிவுகளை தருகின்றன என்பது தவறான எண்ணக்கரு. மதங்கள் மனிதனின் பண்பாட்டு உலகோடு சம்பந்தப்பட்டதே அன்றி.. அது மனிதனின் இதர இயக்க நிலைகளில் செல்வாக்குச் செய்யும் என்பது போலித்தனமான குற்றச்சாட்டு. மதம் என்பது மனிதன் உருவாக்கியது. உங்கள் கருத்துப்படி நோக்கின்.. நான் சொல்வேன்.. மனிதன் உருவாக்கிய கணணியும் மனிதரில் பேரழிவுத்தாக்கங்களை உண்டு பண்ணி வருகிறது என்று. நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு.. உலகில் கணணிகளை அழிக்க உத்தரவு பிறப்பிக்க சொல்வீர்களா...??! மனிதனின் ஆக்கங்களில் நன்மையும் தீமையும் உண்டு. அதனை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியது மனித ஆளுமையே அன்றி திட்டுதல் செய்தல் அல்ல.

நீங்கள் இந்த சமயம் என்ற எல்லைக்குள் நின்று பிரச்சனைகளுக்கான காரணங்களை தேடின் நிச்சயம்.. அதில் அறிவுபூர்வமான தன்மை முற்றுப்பெறும் என்று நான் கருதவில்லை என்பதை தெளிவுறுத்த விரும்புகிறேன். அப்படியான ஒரு வழி விவாதப் போக்கில் பயனேதும் இல்லை.

நீங்கள் இன்னமும் மிகமேலோட்டமாக் பார்க்கிறீர்கள். வற்புறுத்த வேண்டிய தேவை எனக்கு இருப்பதாக தெரியவில்லை.

மேலோட்டம் என்று உச்சரிப்பது இலகு. குறித்த மேலோட்டத்துக்கான உங்களின் "ஆழ்ந்த" விளக்கம் என்ன என்று சொன்னால் தானே நாங்கள் உங்களின் "ஆழ்ந்த" சிந்தனையின் ஆழத்தை அளவிட முடியும். குறித்த விடயங்கள் தொடர்பில் உங்கள் "ஆழ்ந்த" சிந்தனைகளை வெளியிடாமலே இது மேலோட்டம் என்று வரையறுப்பது நீங்கள் உங்களுக்குள் உள்ள கருத்து "ஆழமானது" என்ற ஒரு தோற்றப்பாட்டூடே வளர்த்து வரும் போலியான மேலாதிக்க தன்மையோடு கருத்துரைப்பதாகவே நான் கருதுகின்றேன். உங்கள் "ஆழ்ந்த " சிந்தனைகளை மூடி வைச்சிராமல்.. அடுத்தவர்களை எதிர்பார்த்து பொத்தி வைச்சிராமல்.. வெளியிடுங்கள். அப்போதுதான் அவை அடுத்தவர்களுக்கு தெரியவரும். அதுமட்டுமன்றி அதன் ஆழத்தை தீர்மானிக்க வசதி அளிக்கும். வெளியிடப்படாத சிந்தனையை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை நோக்கி மேலோட்டம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அது மேதாவித்தனமான கருத்தியல் அணுகுமுறை. அது மிகத் தவறான அணுகுமுறை.

நாம் நால்வர் சமயங்களைத் தூற்றிக் கொண்டு இருப்பதை.. அல்லது சமயங்கள் போலி என்று அறிவு விளக்கம் கொடுப்பதால்.. சமயங்களால் தான் பிரச்சனைகள் தோன்றுவிக்கின்றன என்று நிறுவிக் கொண்டு.. அதுவே உண்மை என்று.. சொல்லிக் கொண்டிருப்பதால்.. உலகில் அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்களிற்காக விடிவு கிடைத்திடுமா...??! அடக்குமுறைக்கான வடிவங்களில் சமயமும் ஒன்றாக இருக்கலாம். அதைத்தான் சில நாட்டுத் தலைவர்களும் சில சமூகங்களும் செய்யகின்றன. ஆனால் அதுவே முடிந்த முடிவல்ல. ஒரே காரணியும் அல்ல. ஒரு அறிவுபூர்வமான அணுகுமுறையாளன் அடக்குமுறைகள் சமயம் என்ற எல்லைக்குள் தான் அடங்கி நிற்கின்றன என்பதாக மட்டும் கருதி கருத்துரைக்கமாட்டான். :3d_019:

முதலில் மக்களை விடுவிப்பது என்ற போலியான கருத்துக்களில் இருந்து எப்போது தெளிவடைய போகிறீர்கள் என தெரியவில்லை. மக்கள் தாங்களாகவே தம்மை பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க வேண்டும். இன்னொருவர் அவர்களை விடுவிக்க முடியாது. முதலில் இதை புரிந்துகொள்ளுங்கள். மக்களை விடுவிக்க புறப்பட்ட பலர் அவர்களை இன்னும் புதிய பிரச்சனைகளில் தள்ளிவிட்டதையே கண்டிருக்கிறோம்.

இதில் போலியாக உள்ளது உங்கள் பக்க நிலைதான். மனிதன் ஒவ்வொருவருக்கும் என்று தனிச் சூழல் என்ற ஒன்றுண்டு. அதன் பின்னர்தான் பொதுச் சூழல். மனிதர்கள் தங்களின் தனிச் சூழலில் உள்ள தாக்கத்தின் விளைவுக்கும் ஆளாகின்றனர். பொதுச் சூழலின் தாக்கத்துக்கும் ஆளாகின்றனர். தனிச் சூழலில் உள்ள தாக்கங்களின் பரிமானம் வேறுபட்டது. அதில் தனி மனிதர்கள் தான் சிந்தித்து தீர்வு தேட வேண்டும். ஆனால் சமயம்.. மதம் போன்ற பொதுச் சூழல் காரணிகளும் கூட தனிச் சூழலில் செய்யும் தாக்கங்களில் இருந்து மனிதனை விடுவிக்க வேண்டியது என்பது மாறுபட்ட பரிமானத்தைக் கொண்டது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான அணுகுமுறை என்பது திட்டித்தீர்த்தலோ.. அல்லது.. கடவுள் மறுப்போ.. மத எதிர்ப்புப் பிரச்சாரமோ அல்ல. பிரபஞ்சம் பற்றிய அறுதியான உண்மையை நோக்கி மக்களை இட்டுச் செல்லுதல். அதை இன்றைய அறிவியல் உலகால் பூரணமாக வழங்க முடியும் என்ற நிலை இன்னும் இல்லை.இதை அறிவியல் உலகமும் இன்றைய அதன் நிலையில் இருந்து ஏற்றே கொள்கிறது.

Link to post
Share on other sites
 • Replies 85
 • Created
 • Last Reply

இன்றைக்கு உலகில் நடக்கின் பெரும்பாலான யுத்தங்களுக்கு மதம் என்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

அது மட்டுமன்றி மதம் சார்ந்து நடக்கின்ற யுத்தங்கள் ஒரு முடிவின்றி தொடர்ந்து நடந்து வருகின்றன.

உலகின் பிரதான பிரச்சனை என்பது மதம்தான்

மதம் என்பதில் நல்ல விடயம் என்று இன்றைக்கு எதுவும் இல்லை. மக்கள் உருவாக்குகின்ற அரசுகள் இருக்கின்ற இன்றைய காலத்தில் மதங்களின் தேவையும் மனிதர்களுக்கு இல்லை.

இருக்கின்றதா இல்லையா என்று தெரியாத ஒரு விடயத்திற்காக மனிதர்களை கொலை செய்யத் தூண்டுவதுதான் இன்றைக்கு மதங்கள் செய்கின்ற பணியாக இருக்கின்றது.

மக்கள் மதத்தை கைவிட்டு மனிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு ராமர்பால விவகாரத்தில் மதம் என்ன செய்கிறது. தமிழ்நாட்டு மக்கள் பெறுகின்ற நன்மையை தடுக்கின்ற அளவிற்கு மதம் செயற்படுகிறது. ஒரு அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை மிரட்டி தடுக்கிறது.

குறிப்பிட்ட மணற்திட்டை இடித்தால், இயற்கை வளம் அழியும் என்று போராடுவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எவ்வித ஆதாரமும் அற்ற ஒன்றைக் காட்டி ஒரு அரசை மிரட்ட முடிகிறது என்றால், இது மதத்தால் ஏற்பட்ட நன்மையா தீமையா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேலம், செப். 16: ÔÔ

சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் மதவாதிகளுக்கும் எங்களுக்கும்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதே தவிர, மத்திய அரசுடன் இல்லை. இந்த பிரச்னையில் மதவாத சக் திகளுக்கு மத்திய அரசு பணிந்து விடக்கூடாதுÕÕ என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சேலத்தில் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, அன்று இரவு ஏற்காட்டில் தங்கினார். அங்கு, நேற்று அவர் அளித்த பேட்டி:

சேலத்தில் நடைபெற்ற அரசு விழா, மாநாடு போல் நடந்துள்ளதே?

மக்கள் எழுச்சியை அது காட்டுகிறது. சேலம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உழைப்பை காட்டுகிறது.

சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக உங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா?

எங்களுக்கும் மதவாதிகளுக்கும்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மதத்தை பயன்படுத்தும் நாட்டில், மூட நம்பிக்கைகளை விதைத்து தங்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என எண்ணும் ஆதிக்க சக்திகளுடன்தான் எங்களுக்கு வேறுபாடு. மத்திய அரசுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆதிக்க சக்தியான மதவாதிகளுக்கு தலை வணங்கக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைபாடு.

ராமர் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய தனது கருத்தை திரும்ப பெற்றுள்ளதே?

நீதிமன்றம் கூறியதால் மத்திய அரசு சற்று தணிந்துபோய் உள்ளது. இதனால், சேது சமுத்திர திட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் இருந்து வாபஸ் ஆகி விடுகிறோம் என பொருள் அல்ல. அப்படி வாபஸ் பெறுவதை, பகுத்தறிவு இயக்கமாக இந்த உலகத்தில் வளர்ந்திருக்கிற, விஞ்ஞான ரீதியான முற்போக்கு எண்ணங்களுக்கு மேலும் மேலும் வலு தேடும் தி.மு.க. போன்ற இயக்கங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது.

சேலத்தில் நேற்று நடந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர் விழாவில் பேசிய நீங்களும் ஓய்வு பெற விரும்புவதாக கூறினீர்களே?

ஓய்வு பெற்றவர்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள் என்பதை விளக்கமாக சொல்லி, ஓய்வு பெற்ற உங்களை பார்த்து பொறாமைப்படுகிறேன் என்றேன். அதற்காக பொதுவாழ்வில் இருந்து நான் ஓய்வு பெறுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

கூட்டணி கட்சிகள் இடையே பிளவு இல்லைஎன்று கூறியிருக்கிறீர்கள். இது தொடருமா?

தொடர வேண்டும் என விரும்புகிறோம்.

திமுக, பாமக இடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படுகிறது. மேல் மட்டத்தில் தலைவர்கள் நன்றாக உள்ளனர். கீழ் மட்டத்திலுள்ள இந்த பிரச்னைகளை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் தீர்க்க வேண்டும் என சேலத்தில் ராமதாஸ் கூறியுள்ளாரே?

அது தானாகவே தீர்ந்துவிடும்.

தி.மு.க. கூட்டணியை உடைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுவதாக கருதுகிறீர்களா?

கூட்டணி உருவானதில் இருந்தே, அதை உடைக்கும் முயற்சியிலும், கூட்டணி கட்சிகளிடையே சிறுசிறு சலசலப்புகளை உண்டாக்க வேண்டும் என்ற திட்டமிட்ட செயல்களும் தொட ர்ந்து நடக்கின்றன.

வரப்பில் நடந்து செல்லும்போது நெரிஞ்சிமுள் குத்துகிறது என்பதற்காக, வரப்பில் நடந்து வயலில் விளைச்சலை எப்படி ஒரு உழவன் கவனிக்காமல் இருக்க முடியாதோ, அதுபோலத் தான், கூட்டணி கட்சி தலைவர்களாகிய நாங்களும் இருக்கிறோம்.

விவசாயத்துக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் வேண்டும் என ராமதாஸ் கேட்டுள்ளாரே?

எல்லாவற்றுக்கும் சிறப்பு பொருளாதாரம் வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். குறிப்பாக, தொழில் துறையில் அப்படியரு பொருளாதார மண்டலத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். இதேபோல் ஒவ்வொரு துறைக்கும் வரும்.

சேலம் ரயில்வே கோட்டம் எப்போது துவங்கும்?

விரைவில் துவங்கும்.

அதிமுக & பாஜ நெருக்கம் அதிகரிக்கிறதே?

அதில் ஆச்சரியமில்லை.

லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் வருமா?

விரைவில் தேர்தல் வருகிறதோ, இல்லையோ லோக்சபாவில் அமைதி வேண்டும்.

துணை முதல்வர் நியமிக்கும் திட்டம் உள்ளதா?

இல்லை.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் உண்டா?

வெளியிடப்படும், மாற்றம் இருந்தால் வெளியிடப்படும்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

http://www.dinakaran.com/slideshow/default.asp

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேதுசமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம். நிறைவேறினால் பொருளாதார ரீதியாக தமிழகம் வளம் பெறும். தற்போது கடலில் இலங்கையை சுற்றி செல்லும் கப்பல்கள், சேது சமுத்திர கால்வாய் வழியே வரும்போது நேரமும் மிச்சமாகும். பொருளாதாரமும் மிச்சமாகும். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் பொருளாதார ரீதியாக வளம் பெறும் என்று பொருளாதார நிபுணர்கள், வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இத்தகைய திட்டத்தை ராமர் பாலத்தை சொல்லி, கடவுளின் பெயரால் எதிர்க்கிறார்கள். 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமாயண காலத்தில் கட்டப்பட்ட ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்கிறார்கள்.

வாபஸ் பெறுவதா?

அது தொடர்பாக மத்திய அரசு ராமாயணம் என்பதே கற்பனைக்கதை, ராமர் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரம் கிடையாது என்று நேற்று கோர்ட்டில் கூறிய மத்திய அரசு இன்று அதை வாபஸ் வாங்கிக்கொள்கிறது.

ஆட்சிக்காக இதை எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்? கேவலம் ஆட்சிக்காக நாம் ஏற்றுக் கொண்ட சுயமரியாதை கொள்கை என்ன ஆவது.

ராமாயணம் நடந்த கதை அல்ல. அப்போது ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த மோதலை அடிப்படையாக கொண்டு உருவான கற்பனை என்று பண்டித ஜவகர்லால் நேருவே கூறி இருக்கிறார்.

பேரம் பேசுகிறார்கள்

இந்த நிலையில் நேற்று ஒருவர் என்னை சந்தித்து ராமர்பாலத்தை உடைக்கக்கூடாது, அது உண்மையிலேயே பாலம் அல்ல, அதில் கந்தகம் இருக்கிறது. அணுகுண்டு தயாரிக்க தேவையான மருந்து இருக்கிறது. அது இருந்தால் ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவை பாதுகாக்க முடியும் என்று என்னிடம் கூறினார்.

நான் உடனே அவரிடம் அப்படியானால் இந்த உண்மையை உலகறிய ஊரறிய மேடை போட்டு கூறுங்கள், ராமர் பாலம் பிரச்சினையை நான் பேசவில்லை என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும், அவர் அப்படியானால் நாங்கள் கட்சி நடத்த வேண்டாமா? என்று என்னை கேட்கிறார்.

அவர்கள் கட்சி நடத்த வேண்டுமாம், அதற்கு நாம் என்ன இளித்த வாயர்களா? பாரதிய ஜனதா கட்சியினர் கட்சி நடத்த தி.மு.க., பா.ம.க., கம்ïனிஸ்டு கட்சியினர் என்ன இளித்தவாயர்களா? ராமர் பாலம் பெயரால் போராட்டத்தை அவர்கள் தொடங்கி விட்டார்கள். அதை முடிக்க தெரியாமல் நம்மிடம் வந்து பேரம் பேசுகிறார்கள்.

வழக்கு

சேது சமுத்திர திட்டத்தை தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவர்கள், சேது சமுத்திரம் திட்டம் நிறைவேற வேண்டும் நம்மைவிட வேகமாக வலியுறுத்திவர்கள், இப்போது சேது சமுத்திரம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

அதே அடிப்படையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று வழக்கு போட்டு இருக்கிறார். இவருடைய கட்சி அண்ணாவின் பெயரில் உள்ளது. அண்ணாவின் பெயரில் கட்சியை நடத்திக்கொண்டு இப்படி ஒரு வழக்கு போடுகிறார்.

பகுத்தறிவுக்கொள்கையை வலியுறுத்திய அண்ணாவே இந்த நேரத்தில் உன்னை நினைத்து நான் வருத்தப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். நான் இருக்கும் இந்த காலத்திலேயே உன்னை இந்த அளவு இழிவுபடுத்துகிறார்களே என்று வேதனைப்படுகிறேன்.

இந்த விழாவில் இதை நான் தெரிவிப்பதால், அரசு விழாவில் அரசியல் பேசுகிறேன் என்று கூறுவார்கள். நான் அரசியல் பேசுவதாக நினைத்துவிடக்கூடாது. இது சமுதாய பிரச்சினை, இதை வலியுறுத்தியே ஆக வேண்டும். நாம் திருந்துவதோடு நாட்டையும் திருத்த வேண்டும். அந்த உறுதியை நாம் இங்கு மேற்கொள்ள வேண்டும். சேலத்தில் நாம் இந்த உறுதியை மேற்கொள்வதால், அது மாறாத உறுதியாக இருக்கும். யாரும் மாற்ற முடியாத உறுதியாக இருக்கும் என்று கூறி விடை பெறுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

http://www.dailythanthi.com/article.asp?Ne...2007&advt=1

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு உலகில் நடக்கின் பெரும்பாலான யுத்தங்களுக்கு மதம் என்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

அது மட்டுமன்றி மதம் சார்ந்து நடக்கின்ற யுத்தங்கள் ஒரு முடிவின்றி தொடர்ந்து நடந்து வருகின்றன.

உலகின் பிரதான பிரச்சனை என்பது மதம்தான்

மதம் என்பதில் நல்ல விடயம் என்று இன்றைக்கு எதுவும் இல்லை. மக்கள் உருவாக்குகின்ற அரசுகள் இருக்கின்ற இன்றைய காலத்தில் மதங்களின் தேவையும் மனிதர்களுக்கு இல்லை.

இருக்கின்றதா இல்லையா என்று தெரியாத ஒரு விடயத்திற்காக மனிதர்களை கொலை செய்யத் தூண்டுவதுதான் இன்றைக்கு மதங்கள் செய்கின்ற பணியாக இருக்கின்றது.

மக்கள் மதத்தை கைவிட்டு மனிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு ராமர்பால விவகாரத்தில் மதம் என்ன செய்கிறது. தமிழ்நாட்டு மக்கள் பெறுகின்ற நன்மையை தடுக்கின்ற அளவிற்கு மதம் செயற்படுகிறது. ஒரு அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை மிரட்டி தடுக்கிறது.

குறிப்பிட்ட மணற்திட்டை இடித்தால், இயற்கை வளம் அழியும் என்று போராடுவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எவ்வித ஆதாரமும் அற்ற ஒன்றைக் காட்டி ஒரு அரசை மிரட்ட முடிகிறது என்றால், இது மதத்தால் ஏற்பட்ட நன்மையா தீமையா?

யுத்தங்கள் சண்டைகள் மனிதருக்கு மட்டுமானதல்ல. சிம்பன்சி குரங்குகள் மத்தியிலும் சண்டைகள் படுகொலைகள் யுத்தங்கள் நிகழ்கின்றன. இனவிடைப் போட்டி என்பது உயிர்கள் அனைத்திலும் இயற்கையான நிகழ்வு. அதுதான் உயிர் வாழ்த்தலை தீர்மானிக்கிறது. மதங்கள் இல்லாத காலத்திலும் மனிதப் பேரவலங்கள் நிகழ்ந்துதான் உள்ளன. மதங்களே யுத்தங்களுக்குக் காரணமல்ல. இன்றைய உலகில் மதங்களைக் கொண்டு மனிதர்கள் வளர்த்துள்ள தவறான எண்ணப்பாடுகளின் அடிப்படையில் எழுந்த போட்டிகளால்.. யுத்தங்களுக்கான காரணிகள் உருவாக்கப்படுகின்றனவே தவிர.. மதங்களைக் காக்க என்று யுத்தங்கள் என்பது அர்த்தமற்றவையாக்கப்பட்டுள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக்காக இதை எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்? கேவலம் ஆட்சிக்காக நாம் ஏற்றுக் கொண்ட சுயமரியாதை கொள்கை என்ன ஆவது.

சுயமரியாதைக் கொள்கை.. பகுத்தறிவுக் கொள்கை.. என்ற விசித்திரமான கொள்கைகளோடு.. மஞ்சள் காவியும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்து.. குடும்ப அரசியல் கொண்டு..பார்க்க மறுத்த.. சாதிச் சான்றிதழ்களும்.. சாதியக் கட்சிகளும்.. கூட்டணிகளும்.. சாயி பாபாவின் பாதார விந்தங்களை தடவிப் பார்த்து மகிழ்ந்த போது எழுந்த பெருமிதமும்.. கோவில்கள் எங்கும் திமுக தொண்டர்கள்.. அரோகரோ கோசம் எழுப்புவதும்.. உண்டியல் பணத்தில் கட்சிக் கொடி நாட்டுவதும்... கண்ணகிக்கு.. சிலை நாட்டிப் பத்தினித் தெய்வத்தை வைத்துப் பெருமைப்பட்டதும்.. கொள்கைப் பிடிப்பின் உச்சத்தின் விளைவுகளா..??!

திராவிடம் என்ற போலியான அடையாளத்தினூடு தமிழரின் தேசிய அடையாளத்தையே.. இருப்பையே அழிக்க நினைத்த... திமுகவும் பெரியார் வாரிசிகளும்.. இன்று இராமர் பாலம் தொடர்பில்.. முதலைக் கண்ணீர் வடிப்பது.. திட்டங்களூடு சுருட்டப்படும் கோடிகளுக்காகவே அன்றி.. தமிழக முன்னேற்றத்துக்கல்ல..! தமிழகம் முன்னேற வேண்டின் இராமர் பாலம் மட்டுமல்ல.. கருணாநிதி ஐயாவின் குடும்பக் கோட்டைக்குள் சிக்கிக் கிடக்கும் கோடிகளும் கோட்டைகள் உடைக்கப்பட்டு... ஏழை மக்கள் அள்ளிப் போக வகை செய்யப்பட வேண்டும். சாதிச் சான்றிதழ்களைக் கிழித்தெறிந்து கறுப்புக் கண்ணாடியைப் புடுங்கி எறிய வேண்டும்...செய்வார்களா.. பகுத்தறிவுச் சிங்கங்கள்...???! சுயமரியாதை பொறிகள்....??!

சுய நல அரசியலுக்காய் கூட வளர்ந்த தொண்டனையே பலியிடத் துணிந்த சாமானியன்.. பகுத்தறிவுவாதி.. சுயமரியாதை..சிங்கங்கள்..! போலி மனிதர்களுக்கு.. சோடிக்க போலிப் பதங்கள்..! :huh: B)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இராமர் பற்றிய அறிக்கை. இந்திய கலாசார அமைச்சர் இராஜினாமா செய்யத் தயார்.

Gods row minister offers to quit

Hindu devotees believe the bridge was built by Lord Ram

India's culture minister has offered to resign in a row over whether Hindu gods are mythological figures.

Officials had presented the argument in court to support construction plans for an area devotees believe has remnants of a bridge built by the Hindu god Ram.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6996621.stm

Link to post
Share on other sites

எனவே பொய்களையும் புரட்டுக்களையும் இங்கே விதைத்து கொண்டிருக்காமல் நேர்மையாக கருத்தாடவும்.

மற்றவர்களை மடையராக்கும் எண்ணத்தில் அதி மேதாவித்தனமாக இப்படி எழுதுவதால் உங்களை எல்லோரும் நகைப்பிக்கிடமான வகையிலேயே பார்க்க வேண்டி இருக்கும்.

திராவிடரின் சரித்திரத்தை ஆரியரின் இராமயணப் புனைகதையை வைத்து எவரும் நிறுவி விடவில்லை.எவ்வாறு இலங்கையில் தமிழரின் சரித்திரம் மகாவம்சத்தால் எழுதப்பட முடியாதோ அதே போல் திராவிடரின் சரிதிரத்தை இராமாயணம் சொல்ல முடியாது.இராமயணம் ஆரியரின் சூழ்ச்சியைப் பறை சாற்றும் ஒரு ஆதாராம் மட்டுமே.

அடிப்படை எதுவும் இல்லாமல் நகைப்பத்து சாதனை அல்ல.. கேவலம்... உங்களுக்கு மரபணு புரிந்ததாகவும் தெரிய வில்லை.. அந்த அடிப்படையும் தெரிய வில்லை...

நீங்கள் சொல்லும் திராவிடம் என்னும் சொல் கூட தமிழ் கிடையாது,...

எதையும் அடிப்படையில் இருந்து தெரிந்து வந்து உங்களது வாதங்களை வையுங்கள்..... Race என்னும் வர்ணங்களும் உலகபரம்பல்களும், எதன் அடிப்படையில் அவை ஏழுந்தன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்...

மனித குலத்தை நான்கு இனங்களாக ஆராட்ச்சியாளர்கள் பிரிக்கிறார்கள்... அதில் (( இப்போ ஐந்தாம் அதை பிறக்கு பார்க்கலாம்))

Australoid ,Mongoloid ,Caucasoid , Negroid

http://en.wikipedia.org/wiki/Race_%28histo..._definitions%29

என்பன பற்றியும் அவர்களின் ஆங்கிலத்தனமான ஆராட்சியாளர்களின் பெயரிடுதல்களையும் ஆராயுங்கள்.... இதன் அடிப்படையில் தான் உங்களின் மரபணு ஆராட்சி முடிவுகள் இருக்கின்றன...

இந்தியர்களை Australoid எண்று ஆராய்ந்தவர்கள் சொன்னார்கள்... ஆனால் இப்போ Carleton S. Coon என்னும் அமெரிக்கர் இந்தியர்களை Caucasoid ( நான் இதை இப்போதான் கேள்வி ப்படுகிறேன் ஆகவே என்னால் கருத்து கூற முடியாது) ஆனாலும் மனிதன் பரவல் என்பது ஆண்டு களாக நடப்பவை...

ஆகவே

இந்த இனங்களின் கலப்பை உறுதி செய்ய மரப்பணு தேஎவையா....??

அந்த இனம் கலப்பில்லாமல் வர்ணத்தை இந்தியாவில் காப்பத்தியவாறு இருக்கிறது என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வெடிக்கும் ராமர் பால சர்ச்சை: அமைச்சர்கள் மோதல் - சங்கடத்தில் காங்.!

ராமர் பாலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், தொல்பொருள் துறை தாக்கல் செய்த தவறான அறிக்கைக்கு பொறுப்பேற்று கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ராமர் பாலம் தொடர்பான வழக்கில் மத்திய கலாச்சாரத்துறைக்கு உட்பட்ட மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், ராமர் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. ராமாயணத்தில் நடந்தவை உண்மை என்பதற்கான ஆதாரங்களும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.

பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த சர்ச்சைக்குரிய அறிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற்றது. இந்த நிலையில், காங்கிரஸ் அமைச்சர்களுக்குள் தற்போது மோதல் மூண்டுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், நான் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்திருந்தால், எனது பதவியை ராஜினாமா செய்திருப்பேன். எங்கேயோ அரியலூரில் நடந்த ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அப்படிப்பட்ட நிலையில் இதுபோன்ற முக்கியமான விஷயத்தில் மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டதற்காக கலாச்சாரத் துறை அமைச்சர் ஏன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது.

இது ஒரு சமூக மக்களின் உணர்வுகளை கடுமையாக பாதித்துள்ளது. இது தவறான அறிக்கை என்று கோபமாக கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், மத்திய அமைச்சரவையிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ரமேஷின் இந்த பேச்சு குறித்து கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், நான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமரும் உத்தரவிட்டால் அடுத்த நிமிடமே அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.

ஜெயராம் ரமேஷ் சொல்வதற்காக எல்லாம் ராஜினாமா செய்ய முடியாது. இந்த விஷயத்தில் எனது துறை தவறு செய்யவில்லை. பதில் அறிக்கை தொடர்பாக 3 திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் 2 செய்யப்பட்டன. ஒன்று விட்டுப் போய் விட்டது.

இந்த பதில் அறிக்கையை தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனுப்பினார். தவறு காரணமாக ெதால்பொருள் துறை அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட முக்கியமான திருத்தத்தை செய்யாமல் விட்டதுதான் தவறாகி விட்டது. இது மிகப் பெரிய தவறு. கவனக்குறைவு. இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இந்தத் தவறு காரணமாக துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தரப்பட்டுள்ளது என்றார் சோனி.

இதற்கிடையே, சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தி வரும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தான் இந்தப் பிரச்சினையை கையாண்டிருக்க வேண்டும் என தொல்பொருள் ஆய்வுத் துறை கூறுகிறது.

காங்கிரஸ் அமைச்சர்கள் இருவர் ராமர் பாலம் தொடர்பாக மோதிக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சினை மேலும் சூடு பிடித்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/09...mbika-soni.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராமர் பாலம் சர்ச்சை

[17 - September - 2007] [Font Size - A - A - A]

மன்னார்க்குடாவை பாக்கு நீரிணையுடன் இணைக்கும் கால்வாயை ஆழமாக்கும் சேது சமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இருவருடங்களுக்கு முன்னர் தீர்மானித்தபோது அத்திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் குறித்து பரந்தளவிலான ஆய்வுகளும் விவாதங்களும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று தமிழகத்திலும் இலங்கையிலும் சுற்றாடலியல் ஆர்வலர்கள் வலியுறுத்திக் கேட்டிருந்தனர். அவ்வேளையில் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பெருமளவுக்கு அக்கறை காட்டாமல் எடுத்த எடுப்பிலேயே சுற்றுச் சூழலுக்கோ அல்லது மீனவர்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்ற பதிலே இந்திய அரசாங்கத்தின் தரப்பிலிருந்து வந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியும் மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலுவும் சுற்றாடலியல் ஆர்வலர்களின் அக்கறைகளுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது என்று மறுதலித்து பேசியவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் குறித்து வெளிப்படுத்தப்பட்ட நியாயபூர்வமான அக்கறைகளை அலட்சியம் செய்து அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்த இந்திய அரசாங்கம் இப்போது புராண இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு கிளப்பப்பட்டிருக்கும் ஆட்சேபங்கள் காரணமாக பெரும் சஞ்சலத்துக்குள்ளாகியிருக்க

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியும் இராமர் பாலமும்..

கருணாநிதி மீது வழக்கு- பிரவீன் தொகாடியா

ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியிருக்கும் முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடருவோம் என்று விஷ்வ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது,

தமிழக முதலமைச்சர் கருணாநிதி ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் 1972ம் வருடம் முதல்வராக இருந்தபோது வெளியிட்ட ராமநாதபுரம் மாவட்ட கெஜட்டில், அவர் எழுதிய முன்னுரையில் ராமர் பாலம் இருந்ததை ஒத்துக் கொண்டுள்ளார்.

ஆனால் ஈரோட்டில் நடந்த விழாவில் ராமர் பாலம் கிடையாது, அதெல்லாம் சதிகாரர்களின் கூற்று என்று கூறியுள்ளார். கெஜட்டில் எழுதியதை அவர் மறுத்ததால் அவர் மீது வழக்கு தொடரப்படும்.

இந்தப் பிரச்சனைக்கு குறிப்பிட்ட மத்திய அமைச்சரை மட்டும் பொறுப்பாக்குவது பெரிய தவறு. மத்தியில் அங்கம் வகிக்கும் முழு அமைச்சரவையும் இதற்கு ஒட்டுமொத்த பொறுப்பு. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் தொகாடியா.

பாஜக மூத்தத் தலைவரான வெங்கையா நாயுடு கூறுகையில்,

ராமர் பாலம் குறித்து நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு மத்திய மந்திரிகள் பரத்வாஜ், டி.ஆர்.பாலு, அம்பிகா சோனி ஆகிய 3 பேரும் தான் முழு பொறுப்பு. எனவே அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ராமர் பால விவகாரத்தில் சாதாரண அதிகாரிகளை பலிகடா ஆக்கிவிட்டு மந்திரிகள் தப்பிக்கவிடக் கூடாது. மத்திய மந்திரிகள் 3 பேர் பதவி விலக வேண்டும் இல்லையெனில் அவர்களை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கோடிக்கணக்கான இந்து மக்களின் மனதை புண்படுத்தியதற்காக பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

--------------------

ராமர் பாலம்-ஜெவிடம் இருந்து ஒதுங்கும் வைகோ

மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு தமிழகத்துக்கு நன்மை பயக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பதை ஏற்க முடியாது என மதிமக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதன்மூலம் தனது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நிலையில் இருந்து வைகோ விலகியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்தை பாஜகவுடன் இணைந்து தீவிரமாக எதிர்த்து வருகிறார் ஜெயலலிதா. ஆனால், இத் திட்டத்தை மிகத் தீவிரமாக ஆதரித்து அதற்காக பல போராட்டங்களையும் நடத்திய வைகோ இதுவரை இந்த விஷயத்தில் கருத்து கூறாமல் அமைதி காத்தார்.

இந் நிலையில் இன்று பெரியாரின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்த வைகோ பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

நான் எந்த மதத்துக்கும் எதிரானவன் அல்ல. எத்தா மதங்களையும் உணர்வுகளையும் மதிப்பவன்.

சேது சமுத்திரத் திட்டம் அண்ணாவின் கனவு. ஆனால், ஆதாம் பாலம் (ராமர் பாலம்) இடிக்கப்படுவதாகக் கூறி அதைத் தடுக்க பாஜக மற்றும் மதவாத அமைப்புகள் முயல்வதை ஏற்க முடியாது. இதற்காக மத உணர்வுகளைத் தூண்டி விட முயல்வது சரியல்ல.

இத் திட்டத்தை நிறைவேற்ற அண்ணா பாடுபட்டார். ஆனால், முதல்வர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாய்ப்புகள் வந்தபோது கூட அமைதி காத்தார்.

ஆனால், இத் திட்டத்துக்காக நான் அயராது பாடுபட்டேன் என்றார் வைகோ.

அதிமுக கூட்டணிக்குப் போனதில் இருந்து முக்கிய விவகாரங்களில் ஜெயலலிதாவின் நிலையே தனது நிலை என்ற வகையில் முடிவெடுத்து வந்த வைகோ முதன் முறையாக தனி நிலையை எடுத்துள்ளார்.

இதற்கு ஜெயலலிதாவிடம் இருந்து எப்படி ரியாக்ஷன் இருக்கப் போகிறதோ தெரியவில்லை.

தற்ஸ்தமிழ். கொம்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வெளிநாடு, பணம் இருக்கிறது,   என்று சொல்லி இவற்றை (கை விசேடம் ..)  கைவிடாதீர்கள். ஈழத்தமிழரின் தேசத்தின் முக்கிய  அடையாளம்.
  • இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு    20 Views இலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று புதன்கிழமை, ஏப்ரல் 13 நள்ளிரவு வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த வாரம் வழங்கியிருந்த நிலையிலேயே, தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடைசெய்யப்படுவதாக, அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள் 1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ) 2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ) 3. சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ) 4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ) 5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் – ஈ – அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா 6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா 7. சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா 8. இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் – தௌலா அல் – இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா 9. அல்கய்தா அமைப்பு 10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம் 11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு ஆகியவை நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன. நாட்டின் சமாதானத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்நோக்குடனும் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனிலும் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதில், மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இஸ்லாமியவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.   https://www.ilakku.org/?p=47290  
  • 2021ஆம் ஆண்டு ஐ.நா.மனிதஉரிமைகள் சபைத் தீர்மானப் பலன் – சூ.யோ.பற்றிமாகரன் April 14, 2021     Share      82 Views சிறீலங்காவின் இறைமை இழப்பு பயன்படுத்தி உரிமைபெற ஈழத்தமிழர்க்குப் புதியவழி இது ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சியின் மூலம் உலகநாடுகள் அவர்களுக்கான பாதுகாப்பான அமைதியை சிறீலங்காவிடம் பெற்றுக் கொடுக்க இயலாத நிலையின் வெளிப்பாடு. ஆதலால் இது ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையினை உலகநாடுகள் ஏற்று, அவர்களுக்கான அரசியல் எதிர்காலத்தை அவர்களே அமைத்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்க வைப்பதற்கான திறவுகோலாக அமைகிறது. இப் பெருங்கலக்கத்தில் சிறீலங்கா உள்நாட்டுத் தூண்டுதல்கள், அயல்நாட்டுத் துணைகள் மூலம் தீர்மானத்தைச் செயலிழக்கவைக்க தனது முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இதனை எதிர்த்து தீர்மானத்தை உறுதியாகச் செயற்பட வைக்க வேண்டிய புலம் பதிந்த தமிழர்களோ, தீர்மானம் தமக்கு முழுஅளவில் சாதகமில்லையென விமர்சித்துக் காலத்தை வீணடிக்கின்றனர். இந்த நடைமுறைத் தன்மையை உணர்ந்து ஈழத்தமிழர்கள் தாயகத்திலும், புலத்திலும் சிறீலங்காவிடம் மண்டியிட்டு உரிமை கோரும் அரசியலை விடுத்து, உலகத்திடம் வெளியக தன்னாட்சி உரிமையை ஏற்கக் கோரும் ஒன்றுபட்ட முயற்சிகளை காலதாமதமின்றி வேகப்படுத்த வேண்டும். “2.8 மில்லியன் டொலரைச் செலவழித்து சிறீலங்காவின் முப்படையினரையும் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் செயல், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறும் என ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகம் கருதுகிறது. சிறீலங்காவிற்கான சட்டங்களை உருவாக்குவது, அரசியல் அமைப்பில் மாற்றங்களைக் கோருவது முப்படையினரதும் நியமனங்களை விமர்சிப்பதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுகிறது. இதனை அனுமதிக்க வேண்டுமா? இது குறித்து நாடாளுமன்றத்தின் பங்களிப்பு என்ன? இவைகளைப் பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்” என சிங்கள மக்களிடம் ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானத்தை இலங்கைக்கு எதிரான தீர்மானமாக மடைமாற்றுச் செய்து காட்டி பௌத்த சிங்கள பேரினவாதத்தைத் தூண்டி அதன்வழி கட்சி பேதமற்ற முறையில் தீர்மானத்திற்கு எதிரான சிங்கள பௌத்த நிறவெறியைக் கட்டியெழுப்பும் பேருரையைச் சிறீலங்காவின் கல்வி அமைச்சரும் சட்டத்துறைப் பேராசிரியருமான ஜி. எல். பீரிஸ் சிங்கள பௌத்தத்தின் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் கண்டியில் வைத்து நிகழ்த்தியுள்ளார். சட்டரீதியாக அனைத்துலக சட்டங்களுக்கு எதிராகக் குற்றமிழைத்தவர்களை சிங்கள மக்கள் சக்தியைக் கொண்டும், பாராளுமன்ற சட்டவாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியும் பாதுகாப்பதற்கான சூழ்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை, இவ்வகையில் சிறீலங்காவின் கல்வி அமைச்சர் திரிபுவாதம் செய்துள்ளார். கூடவே இது குறித்து நாடாளுமன்றத்தின் பங்களிப்பு என்னவெனக் கேள்வியும் எழுப்பிப் பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தினை சிறீலங்காவின் ஆதிபத்திய இறைமையுள்ள இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தப்படாது தடுக்கக் கூடிய வகையில் அரச அதிபருக்கு அரசியலமைப்பால் அளிக்கப்பட்டுள்ள தண்டனை விலக்குப் பாதுகாப்பை படையினருக்கும் வழங்குவதற்கு புதிய அரசியலமைப்பு ஆவன செய்ய வேண்டும் என்னும் அரசகொள்கை உருவாக்கத் திட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனெனில் ஐ.நா. தீர்மானத்தின்படி இனஅழிப்புச் செய்த தனி ஆட்கள் மேலேயே அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை நெறிப்படுத்தப்படும். ஆகவே தங்களது படையினரைப் பாதுகாக்க ஜி எல். பீரிஸ் படையினருக்கும் தண்டனை விலக்களிக்கும் முறைமையை அரசியலமைப்புச் சட்டமாக்க முயல்கின்றார். மேலும் மனித உரிமைகள் ஒழுங்காற்றலுக்கான நெறிப்படுத்தலை சிறீலங்காவின் இறைமையுள் தலையிடுவதாக மடைமாற்றம் செய்து, அதன்வழியாக ஐக்கியநாடுகள் சபை ஒரு நாட்டின் இறைமைக்குள் தலையீடு செய்யக் கூடாதென்ற இறைமைப் பாதுகாப்பு விலக்கை சிறீலங்காவுக்குச் சாதகமாகப் பயன்படுத்தவும் சட்டத்துறைப் பேராசிரியரான ஜி.எல். பீரிஸ் முயற்சிக்கின்றார். இதன்வழி சிறீலங்கா மனித உரிமை வன்முறைகள் மீறல்கள், யுத்தக்குற்றங்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்பு என்பவற்றையயே தனது அரசியல் நோக்காகவும், நிர்வாகப் போக்காகவும்,  சட்ட அமுலாக்கச் செயலாகவும் கொண்டு செயற்பட்டுத்  தானே தனது இறைமையை இழக்க வைத்துள்ளது என்ற உண்மையை முழுப்பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைப்பது போல ஜி. எல். பீரிஸ் அவர்கள் சிங்களப் பேரினவாதம் என்னும் தனக்கு உணவளிக்கும் சோற்றுக்குள் புதைத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை இறைமை இழப்பை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்ட முற்பட்டுள்ளார். சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சோ கலக்கத்தில் ஒருபடி மேலே போய்,  ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபைத் தீர்மானத்தை நிறவெறியாகவும், ஆசிய ஊடுருவலாகவும் காட்டி ஈழத்தமிழர்களின் மனித உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளைப் பகிரங்கமாகக் கொச்சைப்படுத்தி வருகின்றது. “வெள்ளையினத்தவர்கள் வாழும் 35 நாடுகளை ஒன்றிணைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இந்தியாவின் பிரதிநிதி நாடுகளை இலக்கு வைக்கும் தீர்மானமென இதனைத் தெரிவித்து வாக்கெடுப்பைத் தவிர்த்துக் கொண்டார்” என்னும் சிறீலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகேயின் யேர்மன் தொலைக்காட்சிக்கான செவ்விப் பேச்சு இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு நாட்டின் பொறுப்புமிகு பதவியில் உள்ளவர் வெள்ளையின முயற்சி எனப் பச்சை நிறவாதத்தைக் கக்கி, ஆசிய மேற்குலகப் பகைமையை உருவாக்கி உலகின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் ஊறுவிளைவிக்க – வளர்க்க முயற்சிப்பதை உலகு கூர்மையாக அவதானிக்கிறது. அதேவேளை பௌத்த சிங்கள நாட்டை வெள்ளையர்கள் நடத்த முற்படுகிறார்கள் என்ற சிங்கள பௌத்த இனவெறியைச் சிங்களர்களிடை தூண்டி, தீர்மானத்தின் நடைமுறைச் செயலாக்கத் திறனை இலங்கைக்குள் தடுக்க முயற்சிக்கும் இக்கூற்றுக்கள் எந்த அளவுக்குச் சிறீலங்கா ஐ.நா. தீர்மானத்தால் கலங்கிப் போயுள்ளது என்பதை உலகுக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதேவேளை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியப் பிரதிநிதி நாடுகளை இலக்கு வைக்கும் தீர்மானம் எனக் கூறியிருப்பதாக ஜயநாத் கொலம்பேயின் கூற்று ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானத்தை ஆசிய நாடுகளாக உள்ள இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், யப்பான், இரஸ்யா, சீனா போன்றனவும் மற்றும் சில ஆபிரிக்க நாடுகளும் ஏன் எதிர்த்தும், நடுநிலையாக வாக்களிக்காமல் விட்டும் எதிர் கொண்டன என்பதற்கான அவரின் விளக்கமாக அமைகிறது. இந்த விளக்கத்தின் மூலம் ஆசிய, ஆபிரிக்க நாடுகளைத் தன் சிங்கள பௌத்த பேரினவாதக் கோட்டையின் முன்னரங்கக் காவற்காரர்களாக வைத்துத், தங்களின் ஈழத்தமிழினத்தின் மீதான இனஅழிப்பை முன்னெடுப்பதே இதன் பின்னணியாக உள்ளது. உண்மையில் இங்குதான் உலகத் தமிழர்கள் இந்தியா உட்பட்ட ஆசிய நாடுகளுடனும், ஆபிரிக்க நாடுகளுடனும் சரியான முறையில் ஈழத்தமிழர்கள் இனங்காணக் கூடிய அச்சத்திற்குள் சிறீலங்காவால் நாளாந்த வாழ்வில் வாழவைக்கப்பட்டு, உயிருக்கும், உடைமைகளுக்கும், நாளாந்த வாழ்வுக்கும்  பாதுகாப்பு ஏதுமற்ற முறையில் வாழ்ந்து வரும் அவல வாழ்வை வெளிப்படுத்தத் தவறியதன் விளைவாகவே இனஅழிப்புக்குள்ளாகும் மக்களை இந்நாடுகள் தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்குள் மேற்குலகத் தலையீட்டிற்கான வழியாக அமைந்து விடும் என அச்சப்படுகின்றன என்கிற உண்மை தெளிவாகிறது. அத்துடன் சிறீலங்கா செய்தது போன்ற மனிதத்துவத்தையே தலைகுனிய வைக்கும் செயற்பாடுகளை எந்த நாடு செய்தாலும் அதன் விளைவை அவர்கள் அனுபவிக்க வேண்டி வருமே தவிர, ஈழமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சி எவ்வாறு அந்த நாடுகளை இலக்காக்கும் எனக் கூற முடியுமென்ற கேள்வியை உலகத் தமிழர்கள் இந்த நாடுகளிடம் சரியான முறையில் முன்வைக்கத் தவறிவிட்டனர் என்பதே உண்மை. இதனை உணர்ந்து உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சினையில் அவர்களின் அச்சங்களைச் சந்தேகங்களைப் போக்கக் கூடிய வகையில் இந்நாடுகளுடன் தோழமையை வளர்க்கக் கூடிய ஓரு உயராய்வு மையத்தை நிறுவ வேண்டிய காலமாக இது உள்ளது. அதேவேளை  உள்நாட்டு மனித உரிமைப் பிரச்சினைகளுள் அனைத்துலகத் தலையீட்டை விரும்பாத இந்தியாவின் போக்குத்தான் ஈழத்தமிழர்களின்  பிரச்சினையை மனித உரிமை மீறல் விசாரணையாக அனைத்துலக நாடுகளால் முன்னெடுக்க விடாது, தமிழரின் அரசியல் பிரச்சினையாக அதனை வெளிப்படுத்தி, இதற்கு அரசியல் தீர்வு காணப்பட்டாலே மனித உரிமைகள் ஒழுங்காற்றப்படுமென்னும் தனது கொள்கையை வெளியிட வைத்துள்ளது.  இதன்வழி ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய சிறீலங்காவின் பொறுப்புத் தான் இந்தியப் பிரதிநிதியின் பேச்சில் முதன்மைப்படுத்தப்பட்டது. தமிழர்களைச் சமத்துவமும் கண்ணியமுமாக வாழ வைத்தல் என்பதை முதலிலும்  சிறீலங்காவின் ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பேண உதவுதல் என்பதை அடுத்தும் எடுத்துக்கூறி இவ்இருதளப் பொறுப்புக்கள் தங்களுக்கு உண்டெனவே இந்தியப்பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையில் விளக்கம் அளித்தார். ஆனால் சிறீலங்கா தனக்களிக்கப்பட்ட, தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்பதே, இந்தியா சிறீலங்காவின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பேணுவதற்கான உதவிக்கான முன்நிபந்தனை என்பதை கவனத்தில் கொள்ளாது, இந்தியா வெறுமனே தன்னை ஆதரிப்பதாக உலகிற்குக் காட்ட முற்படுவதை ஜயநாத் கொலம்பகேயின் கூற்றுக்கள் நிரூபிக்கின்றன. சிறீலங்காவின் இந்த இலங்கைத்தீவின் இன்றைய அரசு என்ற பதவி வழி அதிகாரப்போக்கை ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் நிலையை மாற்றி, ஈழத்தமிழர்களின் இலங்கைத்தீவில் உள்ள சமவலுத்தன்மையை உலகறிய வைப்பதாயின், ஈழத்தமிழர்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகளுடன் தங்களுக்கு தாங்கள் ஆசியாவின் தொன்மையும் தொடர்ச்சியுமான குடிகள் என்ற வகையில் அமைந்துள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான பண்பாட்டு வர்த்தகத் தொடர்புகளை மீள்வாசிப்புச் செய்து கட்டி எழுப்பி,  அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் கோரிக்கை அவர்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்கள் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளுடன் வாழ்வதற்கான அவர்களின் தேசிய விடுதலைப் போராட்டமே தவிர, இவர்களுக்கு இந்தச் சூழ்நிலையின் அடிப்படையில் அனைத்துலக மட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் இந்த ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட இடமளிக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும். ஈழத்தமிழர் இந்தியா உட்பட ஆசிய, ஆபிரிக்க மக்களுடனான தங்கள் உறவாடல்களையும், உரையாடல்களையும் வளர்க்கக் கூடிய பண்பாட்டுப் பேரவைகளை உருவாக்கல், எல்லா மக்களும் ஒருங்கிணைந்து அவரவர்களின் சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மிக வளர்ச்சிகளை வேகப்பட வைக்கக் கூடிய கலைத்துவ பண்பாட்டு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும். இதுவே ஈழத்தமிழர்களின் தாயகத்தின் கரையாக நீண்டு கிடக்கும் இந்துமா கடல் பிரதேசத்தையும் அமைதிப்பகுதியாக உலகில் நிலைநிறுத்த உதவும். இவை எல்லாமே ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சியை இந்நாடுகளும் தங்களது கட்டமைப்புக்களுக்கு ஊறுவிளைவிக்காது என்ற நிலையில் ஏற்பதிலேயே வளமும் பலமும் பெறும். இந்தப் பெரும் தாயகக் கடமையை இன்றைய காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பில் உள்ள ஈழத்தமிழினத்தின் உலகப் பரம்பலாக உள்ள புலம்பதிந்த தமிழர்கள், இதனை எதிர்த்து தீர்மானத்தை உறுதியாகச் செயற்பட வைக்க வேண்டிய புலம் பதிந்த தமிழர்களோ, தீர்மானம் தமக்கு முழுஅளவில் சாதகமில்லையென விமர்சித்துக் காலத்தை வீணடிக்கின்றனர். இதனை விடுத்து எந்த நாடாயினும் தனது சந்தை இராணுவ நலன்களின் பின்னணியிலேயே எந்தப் பிரச்சினையையும் அணுகும் என்னும் நடைமுறைத் தன்மையை உணர்ந்து, இந்தச் சூழலுள் எமக்கான ஆதரவாக அவர்களை எவ்வாறு செயற்பட வைப்பது என்ற தந்திரோபாய அணுகுமுறைகளை புலம்பதிந்த தமிழர்கள் அந்த அந்த நாட்டுச் சட்டங்கள் ஒழுங்குகள் முறைமைகளுக்குள் எடுக்க வேண்டும். இவ்விடத்தில் ஈழத்தமிழர்கள் தாங்கள் தங்களுக்குத் தன்னாட்சி உரிமையுண்டு என்றாலே மற்றவர்களும் அதுகுறித்துச் சிந்திப்பர். எனவே ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் புலத்திலும் சிறீலங்காவிடம் மண்டியிட்டு உரிமை கோரும் அரசியலை விடுத்து, உலகத்திடம் வெளியக தன்னாட்சி உரிமை தங்களுக்கு இருக்கும் இயல்புநிலையை விளக்கி அந்த தன்னாட்சி உரிமையின் உள்ளகத் தன்னாட்சியை சிறீலங்கா மறுத்து அதனை உலகநாடுகளும் அமைப்புக்களும் பெற்றுத்தர இயலாதநிலையில், வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்கக் கூடிய அனைத்துலக சட்டங்கள், ஒழுங்குகளின் வழி தங்களுடைய சனநாயக உரிமையை நல்லாட்சியை வளர்ச்சியை ஏற்படுத்த உதவக் கோரும் ஒன்றுபட்ட முயற்சிகளை காலதாமதமின்றி வேகப்படுத்த வேண்டும். இதுவே ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீளவும் நிலைபெறுவதற்கான ஒரே வழியாக இன்று உள்ளது. சூ.யோ. பற்றிமாகரன்: BA (Political Science), Special Dip. (Politics & Economics), BSc (Politics), MA (Politics of Democracy).     https://www.ilakku.org/?p=47289  
  • கை விசேடம்  கொடுப்பதற்கான நேரம் UK இல் எவை? 
  • ஆயர் இராயப்பு யோசேப்பும், தமிழ்த் தேசியமும் – எழில்    56 Views பின் முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு யோசேப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைத்துவத்தை மறைந்த ஆயர் கொண்டிருந்தார். ஆயரை வெறுமனே சமயத் தலைவராக மட்டும் பிரதிபலிக்க முற்படுவது அவரது தமிழினத்துக்கான தூர தரிசனத்தை சமய வில்லைகளுக் கூடாக மட்டும் பார்ப்பதான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. தமிழ்த்தேசியம் ஒருபோதும் மதவரையறைகளுக்குட்பட்டது அல்ல, மத வரையறைகளைக் கடந்து ஈழத்தழிழினத்தை, ‘ஈழத்தமிழ்த்தன்மை’யின் அடிப்படையில் அடக்முறைக்கெதிராக அணிதிரட்டுகின்ற இயங்கு சக்தியாக இருக்கின்றது. ஆயரின் சர்ச்சைத் தன்மை எல்சல்வடோரில் பேராயர் ஒஸ்கார் றொமேரோ பற்றிய பொதுச் சொல்லாடல் அவருடைய திருப்புமுனையிலிருந்து, அரசியல் தலைமைத்துவத்தைக் கொடுக்க முனைந்ததிலிருந்து, முற்போக்கான பேராயராக பிரதிபலிக்கப்படுகின்றார். எல்சல்வடோர் விவசாயிகளை, அடித்தட்டு மக்களைப் பொறுத்தவரையில் பேராயர் வேறும் மதத் தலைவரல்ல, மதங்களைக் கடந்து, அடக்குமுறைக்குட்பட்ட மக்களை விடுதலையை நோக்கி அணிதிரட்டிய ஒரு தலைவராகவே நோக்கப்படுகின்றார். மறைந்த முன்னாள் ஆயரின் சர்ச்சைத் தன்மை பற்றிய கட்டமைப்பு பற்றி சுருக்கமாக நோக்கினால் ஆயரும் அவருக்குரிய பேசுபொருளும் சர்ச்சைக்குரியவைகள் அல்ல, ஆனால் அவை சர்ச்சைக்குரியவைகளாக கட்டமைக்கப்பட்டன. எல்சல்வடோரைப் பொறுத்தவரையில் அரச அடக்குமுறைக்கு எதிராகப்  போராடுகின்ற குருக்களை அந்த அரசு சர்ச்சைக்குரியவர்களாக சித்தரிக்க முயன்றது. ஆனால் இது சர்ச்சைக்குரிய குருக்கள் பற்றியது அல்ல. அடக்குமுறையும் அதற்கேற்றதான எதிர்ப்பும், மக்களின் அரசியல் அணிதிரட்டலும் தொடர்பானது. அரச அடக்குமுறை இருக்கும் வரை அடக்குமுறைக்கு எதிரான விடுதலை வேட்கை இருந்துகொண்டே இருக்கப்போகின்றது. அரசின் அடக்குமுறையை சவாலுக்குட்படுத்தி நீதியை நிலைநாட்டுவதற்கு பதிலாக தனது குற்றத்தை அரசு இடம்பெயர்த்தி சர்ச்சைக்குரியவர்களாக சித்தரிப்பவர்கள் மீது பழியைச் சுமத்துகின்றது. ஆயர் இராயப்பு யோசேப்பின் கூற்றுகளில் சர்ச்சைக்குரியவைகள் என்று எதுவும் இல்லை. அரச அடக்குமுறைக்கெதிராக மக்களை அணிதிரட்டுவது சர்ச்சையல்ல, அரச அடக்குமுறை அசாதாரணமானது. அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு சாதாரணமானது. இதில் சர்ச்சை எனப்படுவது அசாதாரணமான அரச ஒடுக்குமுறையே தவிர அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு அணிதிரட்டல் அல்ல. அரசு தன்னுடைய அடக்குமுறையை  நியாயப்படுத்துவதற்காக சர்ச்சைக்குரிய பலிக்கடாக்களை கட்டமைக்கின்றது. இவ்வாறான பலிக்கடா கட்டமைப்பு ஒரு சமூக- அரசியல் கட்டமைப்பு. சிறீலங்கா அரசு இவ்வாறான கட்டமைப்பை வெற்றிகரமானதாக முன்னெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவியாக அமைவது சிங்கள பௌத்த இருப்பிற்கெதிரான அச்சுறுத்தல். அவ்வாறான ஒரு அச்சுறுத்தலாகத்தான் ஆயரைச் சிங்கள-பௌத்த ஊடகங்களின் துணையோடு அரச இயந்திரம் ஆயருக்கெதிரான பரப்புரையை தென்னிலங்கையில் முன்னெடுத்தது. அதன் விளைவாக ஆயரை சிங்கள பௌத்த இருப்பிற்கெதிரானவராகக் கட்டமைத்தது. ஓரு இனம் அரச அடக்குமுறையால் பாதிக்கப்படுகின்றது அதற்கெதிராக குரல் கொடுப்பது என்பது பொது அறம் சார்ந்தது. சர்ச்சைக்குரியது அல்ல. ஆயரின் தமிழினத்திற்கான கூட்டுரிமைக் கோரிக்கை ஆயர் தனது பொதுப்பணியை அரசு அடக்குமுறை சமூக-அரசியல் சூழ்நிலையில் தான் ஆரம்பிக்கின்றார். அவருடைய பட்டறிவும், அவர் சார்ந்த இனத்தின் கட்டமைப்பும் வெவ்வேறாக இருந்ததில்லை. அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் அடக்குமுறைக்கெதிரான பயணத்தில் அவர் தன்னை ஒருபோதும் அந்நியப்படுத்தியதில்லை. ஒரு இனத்தின் உரிமை மீறப்படுகின்றது, மறுக்கப்படுகின்றது என்பதைத் தனிநபர் சார் உரிமைமீறல் சொல்லாடல் வில்லைகளுக்குட்பட்டு பார்க்க முனைவது உண்மையை மறைத்தலும், மறுத்தலும் ஆகும். தனிநபரின் உரிமை மறுப்பும், மீறலும் தனி நபர் என்பதற்காகச் செய்யப்பட்டது அல்ல, தனிநபர் ஒரு இனக்குழும அடையாளத்தைக் கொண்டவர் என்பதால், இனக்குழும அடையாளத்தைக்கொண்டு கட்டமைக்கப்படுகின்ற இனப்பாகுபாடு ஏலவே திட்டமிடப்பட்டு வினைத்திறனோடு செயன்முறைப்படுத்தப்படுவது. அரச அடக்குமுறைக்கெதிரான ஆயரின் தமிழின கூட்டுரிமைக்கோரிக்கையை இனத்தின் சார்பாக அவர் முன்வைத்தது வரலாற்றுக்கு முரணானது அல்ல. அந்த கூட்டுரிமைக்கோரிக்கை அரசியல் தீர்வு தொடர்பிலும் சரி தமிழினப் படுகொலைக்கான நீதி கோருவதிலும் சரி தமிழினத்தின் கூட்டுரிமையை முன் நிறுத்தியே குரல் கொடுத்தார். சிறீலங்காவில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என தனது நியாயப்பிரச்சாரத்தை உள்ளுரிலும், சர்வதேசத்திலும் மேற்கொண்டார். பின்முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றில் சிறீலங்காவில் வேறு எந்த ஆயராலும் முன்வைக்கப்படாத கோரிக்கையாக அது இருந்த போதிலும் மறைந்த ஆயர் தமிழினக் கோரிக்கையை முன்வைத்து, உலக விசாரணையில் எந்தவிதமான நம்பிக்கையும் தமிழர்களுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, சிறீலங்கா நீதித்துறை நிறுவனம் தமிழர்களுக்கு நீதியை ஒருபோதும் வழங்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டார். உள்ளக விசாரணையை விசாரிக்கையில் குற்றவாளிகளிடமே நீதி கோருதலின் அபத்தத்தைப் பற்றித் தனது சந்திப்புக்களில் விளக்கத்தைக் கொடுத்தார். LLRCY  நிராகரித்து வெளியேறியது சிறீலங்கா அரசின் உள்ளகப் பொறிமுறையின் அறத்தையும் சட்ட வலுத்தன்மையையும் சிக்கலுக்குட்படுத்தியது. இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய சர்வதேச விசாரணையில் சிறீலங்கா அரசு, தமிழினத்தை அதனுடைய இன அடையாளத்தை மையப்படுத்தியே இன அழிவை மேற்கொள்கின்றது. ஆகவே சிறீலங்கா அரசின் இனப்படுகொலை உள்நோக்கம் விசாரிக்கப்படுவது அவசியம் எனக்குறிப்பிட்டதோடு தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற சிறீலங்கா அரசின் உள்நோக்கம் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்து, தமிழினத்துக்குரிய அரசியல் தீர்வாக திம்பு கோட்பாட்டின் அடிப்படையிலமைந்த (தாயகம், தேசியம், சுயநிர்ணயம்) தீர்வை முன்வைத்தார். வடக்கு- கிழக்கு நில, ஆட்புலக் கட்டுறுதியின் இணைப்பு தமிழின அரசியல் தீர்வில் மிக அவசியமானதென குறிப்பிட்டதோடு அல்லாமல் தமிழர்கள் ஒரு தேசத்துக்குரியவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்களின் சுயாட்சி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதில் அவருடைய தெளிவு பல உரைகளில் வெளிவந்தது. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் சாட்சியாக இருந்து, உண்மையை எடுத்துரைத்து, நீதிகோரியது அவரது பொதுப்பணியின் சூழமைவு சார்ந்த புரிதலை வெளிக்காட்டியது. அவருடைய எழுத்துக்களில் விடுதலை இறையியலின் தீவிரத் தன்மை வெளிப்படாவிட்டாலும் கூட, அவருடைய வாழ்தல், விடுதலை இறையியலின் அடிப்படையான (TRAXIS)  முன்னிலைப்படுத்தியது. ஒஸ்கார் றொமேறோவினுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனைபோன்றதொரு திருப்புமுனை குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்தது என இதுவரைக்கும் யாரும் குறிப்பிடவில்லை, ஆனால் அந்த திருப்புமுனை வரலாற்றில் வாழ்தலினூடு ஏற்பட்டது என நம்புகின்றேன். சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளூடான பயணமும், அனுபவமும் தனிநபர் சார்ந்த பயணம் அல்ல ஒரு கூட்டுப்பயணம். ஓரு இனத்தினுடைய கூட்டு அனுபவப்பயணமே அவரை மக்கள் இயக்க அரசியலின் தலைமைத்துவத்தை ஏற்கவேண்டிய காலகட்டாயத்திற்குள் அவரை நிர்ப்பந்தித்தது எனலாம். மாற்று அரசியல் பிரதிநிதித்துவமும் மக்கள் இயக்க அரசியலின் தலைமைத்துவமும் பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு சமாந்தரமாக மாற்று அரசியல் பிரதிநிதித்துவம் வடக்கு- கிழக்கில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். சிவில் சமூக அமைப்புக்ளை உருவாக்கி வலுப்படுத்தியதோடு அவற்றை ஒருங்கிணைப்பதில் மிக முக்கிய பங்காற்றினார். தமிழ்த்தேசியசபை தொடர்பிலான முன்னெடுப்புக்களுக்கு ஆர்வம் காட்டி அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளைத் தொடக்கி வைத்தது வரலாற்றில் நினைவிருக்கும். வடக்கு- கிழக்கில் சிவில் சமூக அமைப்புக்களையும், தமிழ்த்தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவ்வாறான சந்திப்புக்களுக்கு வரையறையின்றி காலத்தையும் வளங்களையும் முதலீடு செய்ததை அதில் பங்குபற்றிய அனைவரும் அறிவர். ஆயர் மறைந்த பின்னர் வெளிவந்த இரங்கல் உரைகளும், அவர் தொடர்பான எழுத்துக்களும் அவருடைய தமிழினத்துக்கான தீர்க்க தரிசன நோக்கை மத வரையறைகளுக்குட்பட்டே பார்க்க விரும்பின. தமிழ்த்தேசியம் மத வரையறைகளைக் கடந்தது என்பதை தமிழ்த்தேசியத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர்கள் அறிவார்கள் எனும் ஆழ்ந்த நம்பிக்கை ஆயருக்கு இருந்தது. அந்த நம்பிக்கையின் புரிதலில் தான் ஆயரின் முன்னெடுப்புக்கள் அமைந்திருந்தன. மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்தை முன்னெடுப்பதற்குரிய காரணங்கள் அவருக்கு இருந்தன. ஒற்றையாட்சிப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் அவருக்கிருந்த அதிருப்தியும், ஒற்றையாட்சிக்குள் தமிழினத்துக்கான நீதி கிடைக்கப்போதில்லை என்ற மன உறுதியும் அவரை மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்தை, பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சமாந்தரமாக கட்டமைக்க முற்பட்டதில் இருந்து தெளிவாகின்றது. ஆயர் கட்டமைக்க முன்னெடுத்த மாற்று அரசியல் பிரதிநித்துவம் தமிழ்த்தேசிய வெளிக்குள்ளே மட்டுமே கட்டமைக்க முடியும் என நம்பியதால் தான் மத வரையறைகளைக் கடந்து மாற்றுப் பிரதிநிதித்துவத்திற்காக எல்லோரையும் ஒன்றிணைக்க முற்பட்டதை வரலாறு சொல்லும். மக்கள் சக்தியின் இயங்குதலில் நம்பிக்கை கொண்ட ஆயர், தமிழ்த்தேசியம் நாளாந்த இயங்கு தளத்தின் இயக்கமாக்கப்பட வேண்டும் என விரும்பியதால் தான, தமிழ் மக்களைப் பாதிக்கும் எல்லா அரச நெருக்கீடுகளையும் கண்டித்து வந்தார். குறிப்பாக, செறிவாக இராணுவ மயமாக்கப்படும் வடக்கு- கிழக்கு சிங்கள-பௌத்த மயமாக்கம், அதன் விளைவான நில அபகரிப்பு, வரலாற்றுத் திரிபு, அரசியல் கைதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என பட்டியல் நீண்டுகொண்டே போனது. சிறீலங்கா அரசு ஆயுதமற்ற போரை  வடக்கு- கிழக்கில் ஒவ்வொரு வாசலண்டையும்  திணித்தது. அப்போரின் பரிமாணங்கள் வெவ்வேறு வடிவில் உருப்பெற்றன, தொல்லியல், வனஇலாகா, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தமிழினப்படுகொலை மறுப்பு, தமிழின படுகொலைக்கான நீதி மறுப்பு, உண்மை மறுப்பு. எண்ணிக்கை தொடர்பில் 2008 ஒக்ரோபர் தொடக்கம் 2009 மே வரைக்கும் விளக்கப்பட முடியாது புதிராகிப்போன 146,479 என முன்மொழிந்த போது இதுவரைக்கும் அந்த எண்ணிக்கையை சிறீலங்கா அரசு மறுத்ததாகவோ, நிராகரித்தாகவோ எந்த உத்தியோகபூர்வ அறிவித்தலையும் வெளியிடவில்லை. ஆயரினுடைய தலைமைத்துவத்தை வெறுமனே மதம்சார்ந்து கட்டமைப்பது அவருடைய மக்கள் இயக்க அரசியல் தலைமைத்துவத்தை வலுவிழக்கச் செய்வதாகும் அல்லது தலைமைத்துவம் தொடர்பான அறத்தை சவாலுக்குட்படுத்துவதாகும். அவருடைய மக்கள் இயக்க அரசியல் தலைமைத்துவம் மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான அற ஒழுக்கத்தையும், அற நியாயத்தையும்  சட்ட வலுவையும் வழங்கியது. அவ்வாறான தலைமைத்துவத்திற்கூடாக அவருக்கிருந்த அரசியல் செயலாண்மை முகவர் தன்மையை (Political Agency) இடம்பெயர்த்துவதாகவே அரசியல் தலைமைத்துவத்தை சிக்கலுக்குட்படுத்தல் இட்டுச்செல்கின்றது. அரசியல் செயலாண்மை முகவர் தன்மையை இடம்பெயர்த்தல் அவருடைய அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றது. அல்லது அவரை மத வரையறைகளுக்குட்படுத்தல் அவருடைய அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தலை சிதைக்கின்றது. ஆயர் குறிப்பிட்ட மதவரையறைகளுக்குள் நின்று தமிழினத்தின் அரசியல் கோரிக்கைகளைப் பிரதிபலித்து பிரநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக ஒட்டுமொத்த அரசியல் கோரிக்கைகளை மாற்று அரசியல் பிரதிநிதித்துவ வெளிக்கூடாக தமிழினத்தின் பிரதிநிதியாக நின்று வெளிப்படுத்தியவர். ஆயரும் தமிழ்த்தேசியமும் 2009 ற்கு பின்னரான தமிழ்த்தேசிய வெளியின் அரசியல் வரலாற்றுப் பின்புலம் மாற்றமடைந்த சூழமைவில் தமிழ்த்தேசிய அரசியலின் புரிதல் பற்றிய கேள்விகள் பொதுவெளியில் எதிர்மறையாக எழுப்பப்பட்டது. தமிழ்த்தேசிய வெளியை சிதைப்பதற்கான உத்தியாக அது கையாளப்பட்ட போதும் அவ் உத்திகள் தமிழ்த்தேசிய அணுகுமுறைகள் சார்ந்ததே தவிர தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளை ஒருபோதும் கூறுபோட்டதில்லை. வரலாற்றில் தமிழ்த்தேசியம் பல்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியது, அந்த அணுகுமுறைகளைச் சுய விமர்சனத்திற்குட்படுத்தல் தமிழ்த்தேசியத்தின் அடிப்படைத்தன்மைக்கு வலுச்சேர்க்குமே தவிர அடிப்படைத்தன்மையிலிருந்து விலகப்போவதில்லை. தமிழ்த்தேசியம் பிரத்தியேக அல்லது தவிர்த்தல் தன்மையை( மற்றவர்களின் இருப்பைத் தவிர்த்து அல்லது நிராகரித்து தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்படவில்லை) கொண்டதல்ல என்பதற்கு உதாரணமாக வடக்கிலிருந்த முஸ்ஸிம்களை வெளியேற்றியதை தவறென்று சுட்டிக்காட்டினார், அதேபோல் வடக்கு- கிழக்கில் பாரம்பரியமாக முஸ்ஸிம்கள் இருந்த இடத்தில் அவர்கள் மீள் திரும்ப வேண்டும் என்பதற்காக உழைத்த அதே நேரத்தில் முஸ்ஸிம்களின் நில ஆக்கிரமிப்பை கண்டிக்கவும் தவறவில்லை. வடக்கு- கிழக்கில் பாரம்பரியமாக இருந்த சிங்கள மக்களை வரவேற்றார். ஆனால் வடக்கு- கிழக்கு சிங்கள மயப்படுத்தலை தவிர்த்தார். தமிழ்த்தேசியத் தன்மை இன்னொரு குழுமத்தின்  கூட்டுரிமையை மறுப்பதாகவோ, நிராகரிப்பதாகவோ இல்லை என்பதோடு மட்டுமல்ல அவற்றை வலுவூட்டுவதாகவும் அமைந்திருந்தது. தமிழ்த்தேசியத்தை பிரச்சினைக்குரிய அடிப்படைக் காரணியாக அரசியல் கட்டமைப்புச் செய்ய முற்பட்ட போது தமிழ்த்தேசியம் அடக்குமுறைக்கெதிர்வினையாக எழுச்சி பெற்றதே எனவும் தமிழ்த்தேசியம் சிங்கள-பௌத்த மக்களுக்கெதிரானதும் அல்ல, முஸ்ஸிம் மக்களுக்கும் எதிரானது அல்ல, சிங்கள-பௌத்த அடக்குமுறைக்கெதிரானது. ஆனால் சிறீலங்காவின் தேசிய ஊடகங்கள் அவ்வுண்மைகளை மழுங்கடித்து மறைந்த ஆயரை சிங்கள, முஸ்ஸிம் மக்களினங்களுக்கு எதிராக கட்டமைத்ததை வரலாறு ஒருபோதும் மறக்காது. உண்மை, நீதி மறுக்கப்படும் போது குரல் கொடுத்ததை விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொள்வர். விடுதலைப்புலிகள் தொடர்பில் அவர்களுடைய அணுமுறை தொடர்பான விமர்சனத்தை முன்வைத்து அவர் எழுதிய கடிதங்கள் சாட்சியம் கூறும். தீவிரவாதியாக, பயங்கரவாதியாகச் சித்தரித்து மக்களிடமிருந்து ஆயரை அந்நியப்படுத்துவதற்கான முயற்சியை சிறீலங்கா அரசு மேற்கொண்டிருந்ததை மக்கள் அனைவரும் அறிவர். பல்சமய உரையாடல் முன்னெடுப்புக்கள் மூலம் ஏனைய இன, மதங்களுக்கிடையே தமிழின ஆதரவு அலையை திரட்டுவதன் மூலம் தமிழின அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை முன்னெடுக்க முடியும் என நம்பினார். பல தெற்கு முற்போக்கு சக்திகளுடனான உரையாடல்களிலிருந்து, முற்போக்குச் சிந்தனையுள்ள சக்திகளின் கூட்டிணைவு தமிழின விடுதலைக்கு இன்றியமையாதது எனக்கூறி வந்ததும் அவற்றை ஒருங்கிணைத்துத் தமிழின அழிப்பு பற்றியும், தமிழின அரசியல் தீர்வு பற்றியும் கலந்துரையாடல்களை ஒருங்கிணைத்தார். ஆயரின் தமிழினப் படுகொலைக் கோரிக்கையை சர்ச்சைக்குரியதாக்கி அதிலிருந்து அரசியல் இலாபம் தேட முற்பட்டவர்களை அறிந்திருந்தும், தமிழினப் படுகொலைக் கோரிக்கையையும் சர்வதேச விசாரணையூடு மாத்திரமே நீதி கிடைக்க முடியும் என்பதிலே உறுதியாய் இருந்தமை விமர்சனத்திற்குரியதாய் இருந்தும் இறுதிவரைக்கும் தனது முடிவிலே உறுதியாய் இருந்தமை அவரைக் காணச் சென்ற பலருக்கு தெரிந்திருக்கும். தமிழ்த்தேசிய அடிப்படைப்பண்புகளை வலுப்படுத்திக்கொண்டே தமிழின விடுதலையை அடைய முடியும் என கருத்தாய் இருந்தது மட்டுமல்லாமல், வடக்கு- கிழக்கு ஒன்றிணைந்த தாயகம் பற்றிய கனவை பல்வேறு ஒருங்கிணைக்கும் முயற்சிகளுக்கூடாக செயற்படுத்த முயன்றார். ஓருங்கிணைக்கப்பட்ட தேசத்திலிருந்து  தமிழின அரசியல் தீர்வு அணுகப்பட வேண்டும் எனவும், ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு முற்றாகச் சாத்தியமற்றது என இடித்துரைத்து, சமஸ்டி முறையினூடான அவசியத்தை முன்வைத்தார். ஒற்றையாட்சி சனநாயக முறைமையின் ஒவ்வாத்தன்மையையும், அதன் தோல்வியையும், கொழும்பு மையத்தில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளதையும் பெரும்பான்மைவாத சனநாயகத் தன்மைமையையும் சிக்கலுக்குட்படுத்தி சிறீலங்கா பல் தேசிய சனநாயக முறைமையை நோக்கி நகர வேண்டிதன் அவசியத்தை வலியுறுத்தினார்.  ‘ஈழத்தமிழ் தன்மைதான் தமிழின அடையாள கட்டமைப்புக்கு அடிப்படை நாதமாக உள்ளதென நம்பிக்கை கொண்டு அந்த அடையாள அடிப்டைத் தன்மை வலுவிழந்துவிடாது தக்க வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதால் அவரை அடையாள அரசியல் செய்கின்றார் என பழி சுமத்தப்பட்டதும் நினைவில் இருக்கும். ஆயரைத் தமிழ்த்தேசியத்தில் இருந்து அந்நியப்படுத்த வேண்டும் என்ற சிறீலங்கா அரசின் செயற்றிட்டத்துக்கான ஒரு உதாரணத்தை மட்டும் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன். ஆயரின் உடல் ஆயர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது ஆயரில்லத்துக்கு வெளியே சிவப்பு, மஞ்சள் வர்ணத்தில் வீதி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவருடைய இறுதி ஊர்வலமான திங்கட்கிழமை இராணுவ வாகனத்தில் வந்த இராணுவத்தினரால் அவை அகற்றப்பட்டதற்குப் பலர் சாட்சி.  அவருக்காக வழங்கப்பட்ட இரங்கல் உரைகள் பெரும்பாலுமே அவரைத் தமிழ்த்தேசியத்திலிருந்து அந்நியப்படுத்தி குறிப்பிட்ட மதத்தலைவராக கட்டமைக்கப்பட்ட சொல்லாடல் பயன்படுத்தல்களையும், அவர் முதன்மையாக முன்வைத்த ஈழத்தமிழ்த் தன்மை அடையாளத்தை முன்வைத்து சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்புக்கோரிக்கை ஒரேயொரு தடவை மட்டும் உச்சிரக்கப்பட்டதையும் தமிழ்த்தேசிய நீக்க அரசியலினுடைய பிரதிபலிப்பாகவே கொள்ள வேண்டியிருக்கும். அரசியல் கதாநாயகத் தன்மையை கட்டவிழ்த்தல் 2009ற்குப் பின்னர் அரசியல் கதாநாயக தன்மை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தோடு  ஒன்றிக் கட்டமைக்கப்பட்டு, பிரதிநிதியைச் சுற்றித் தொண்டர், பின்பற்றுபவர் வட்டத்தை உருவாக்குகின்ற தன்மை தோற்றம் பெறுவதை அவதானிக்கலாம். தலைமைத்துவத்திற்கும் கதாநாயகத் தன்மை உருவாக்குகின்ற கதாநாயகர்களில் தங்கியிருக்கின்ற தொண்டர் தன்மைக்குமிடையே பாரிய வெளி இருக்கின்றதை அறிகின்ற போது கதாநாயகர்கள் தலைவர்களாக இருக்க முடியாது. என்பதை தீர்மானிக்கலாம். அதேவேளை தலைமைத்துவம் தொண்டர்களை உருவாக்க முடியாது. அரசியல் கதாநாயகத் தன்மையில் மேலோங்கியிருப்பது ‘விரைவான பழுது நீக்கும் தன்மை’ (Quick repair). அது பெரும்பாலும் மீட்பர் மனப்பான்மையில் கட்டமைக்கப்பட்டதாய் அமைந்திருக்கும். மீட்பர் மனப்பாங்கு அடிப்படையில் காலனித்துவ தன்மை கொண்டது. மேலிருந்து கீழ் நோக்கிய அணுகுமுறையில் மக்களுக்கும் கதாநாயகனுக்குமிடையிலான அந்நியத் தன்மை அவர்களை கதாநாயகர்களாகக் கட்டமைக்கின்றது. அரசியல் கதாநாயகத் தன்மை, தமிழ்த் தேசியத்துடன் முரண்பாட்டைக் கொண்டிருக்கின்றது. விடுதலைப்போராட்டத்தில் நீண்ட கால அர்ப்பணிப்பு அவசியமாகின்றது, கதாநாயகத் தன்மையில் அப்படியில்லை. தமிழ்த்தேசிய வெளியில் அரசியல் கதாநாயகர்களின் உடனடிப் பழுது நீக்கும் முறைமை செல்லுபடியற்றது. ஆயர் நீண்ட கால அர்ப்பணிப்புடனான தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொண்டவராதலால் தான் அரசியல் கதாநாயகத் தன்மையை கட்டவிழ்க்க முற்பட்டார்.   https://www.ilakku.org/?p=47294  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.