Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 நியூயோர்க் நகரத்தை சூழ்ந்த ஆரஞ்சு புகை; அச்சமடைந்த மக்கள்: பின்னணி என்ன?

Digital News Team  
1006606.jpg ஆரஞ்சு நிற புகை சூழ்ந்த  நியூயோர்க் நகரம்
 

 நியூயோர்க் நகரம் சில மணி நேரங்கள் ஆரஞ்சு நிற புகையால் மூடப்பட்டதால் மக்கள் குழப்பமும் பீதியும் அடைந்தனர்.

கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் தாக்கத்தினால் உருவான நச்சுப் புகைகள்தான் வட அமெரிக்காவின்  நியூயோர்க் நகரில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் விளக்கிய நிலையில் மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பினர்.

இந்தப் புகையினால்  நியூயோர்க்கில் காற்று மாசு அளவு அபாயகரமான அளவை எட்டியது, அதனால் அன்றைய நாளில் உலகளவிலான காற்றின் தரத்தின் அடிப்படையில் மிக மோசமான நகரங்களில் ஒன்றாக நியூயோர்க் அடையாளப்படுத்தப்பட்டது.

இது குறித்து  நியூயோர்க் வானிலை மையம் கூறும்போது, “வயதானவர்கள் மற்றும் சிறு குழந்தைகள், மோசமான காற்றின் தரத்தால் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் வெளியே வருவதை குறைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளது.

1686213970355.jfif

மேலும்  நியூயோர்க் நகரம் சில நொடிகளில் ஆரஞ்சு நிறமாக மாறிய வீடியோ பதிவையும்  நியூயோர்க் வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பூமியின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளம், காட்டுத் தீ, மலையின்மை, வறட்சி போன்ற தீவிர இயற்கை பேரிடர்களை உலக நாடுகள் சந்தித்து வருகின்றனர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பை உலகெங்கிலும் இலட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரவத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது என்ற எச்சரிக்கையை சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

 

https://thinakkural.lk/article/257457

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்கனை, திரும்பவும்... வானத்தை அண்ணாந்து பார்க்க வைச்சிட்டாங்களே.
சீனாக்காரன்...  திரும்பவும், பலூனில்... மஞ்சள்  புகை  அனுப்பியும்  இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழப்பிரியன் நலமாக இருக்கின்றீர்களா? 

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கும் இந்த புகை மண்டலத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நேற்றும், இன்றும் அவசிமற்று குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்ட கால நோய் தொற்க்கு உள்ளானவர்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறும் அறிய முடிந்தது...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, குமாரசாமி said:

ஈழப்பிரியன் நலமாக இருக்கின்றீர்களா? 

 

என்ன இருந்தாலும் பக்கம் பக்கமாய் நின்ற பாசம் பிரியனைத் தேட வைக்குது......சரி ....சரி நாங்களும் தேடுகிறோம் .......!  😁

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, குமாரசாமி said:

ஈழப்பிரியன் நலமாக இருக்கின்றீர்களா? 

 

 

42 minutes ago, suvy said:

என்ன இருந்தாலும் பக்கம் பக்கமாய் நின்ற பாசம் பிரியனைத் தேட வைக்குது......சரி ....சரி நாங்களும் தேடுகிறோம் .......!  😁

ஆமா ஆமா பூட்டிய வீட்டுக்குள் மனைவியும் நானும் ஓடிப்பிடித்து விளையாடுகிறோம்.

செவ்வாய் வடகரோலினா பயணம்.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஈழப்பிரியன் said:

செவ்வாய் வடகரோலினா பயணம்.

கிட்டத்தட்ட உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி வந்துட்டியள்.....எஞ்ஜோய்....:thumbs_up:

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

கிட்டத்தட்ட உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி வந்துட்டியள்.....எஞ்ஜோய்....:thumbs_up:

பயணங்கள் எல்லாமே இன்னும் கொஞ்ச காலங்கள் தானே.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுகமாக இருந்தால் மனைவியை இந்திய கோவில்களுக்கு கூட்டிப் போகணும்.

ஐரோப்பாவை ஒரு தடவையாகிலும் சுற்றிப் பார்க்கணும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, கிருபன் said:

மலையின்மை

இதன். பொருள் என்ன    ?????....மழையின்மை என்பதா. ???. தமிழ் தெரியாது....தமிழ் பத்திரிகையில்   வேலை செய்கிறார்கள்......ஏன ?.  ஆட்கள் இல்லையா  ??



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.