Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,STALIN TWITTER

14 ஜூன் 2023, 00:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

தலைமைச் செயலக அலுவலகத்தில் நடத்தப்பட்ட நீண்ட சோதனைகளுக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நெஞ்சுவலிப்பதாக கதறி அழுத அமைச்சர் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளை ஏ என் ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது எனவும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

 

“செந்தில் பாலாஜி குறிவைக்கப்பட்டுள்ளார், சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்” என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ரகுபதி கூறினார்.

மதுவிலக்கு, மின்சாரம், ஆயத்தீர்வை ஆகிய துறைகளுக்கான அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார்.

முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்தனர்.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,ANI

நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி - மு.க.ஸ்டாலின்

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின்அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

"அமைச்சர்செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி- அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள்நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்றபெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள்." என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள்: உதயநிதி

“பாஜக அரசின் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது” என உதயநிதி கூறினார். செந்தில் பாலாஜி நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள்; சட்டப்படி சந்திப்போம்" என்று உதயநிதி ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியிருக்கும் நிலையில், அது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் நேற்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

இரவில் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது செந்தில் பாலாஜி கதறி அழுது துடித்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனைக்கு திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

தற்போது மருத்துவமனையைச் சுற்றியுள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி கைது

செந்தில்பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கிறது?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையின் நோடல் அதிகாரி மருத்துவர் ஆனந்த் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது இதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர் ரத்த அழுத்தம், இசிஜியில் ஏற்பட்ட மாறுதல்களைத் தொடர்ந்து, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கண்காணிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜி

மனித உரிமை மீறல் - அமைச்சர் ரகுபதி

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விதம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று மாநில சட்ட அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "செந்தில் பாலாஜியை குறிவைத்து சித்ரவதை செய்துள்ளனர். அவரிடம் சுமார் 24 மணி நேரம் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இது மனித உரிமைகளை மீறிய செயல். இதற்காக மக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும்." என்று கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி கைது

பட மூலாதாரம்,ANI

பா.ஜ.க. அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக அவரது சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த காவல் நிலையங்களில் போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறித்து டிஐஜி சரவண சுந்தர் ரோந்து பணி மூலம் கண்காணித்து வருகிறார்.

செந்தில் பாலாஜி

"அமைச்சர் செந்தில்பாலாஜியை டிஸ்மிஸ் செய்க" - பா.ஜ.க.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனே தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.

ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "இது முழுக்க முழுக்க திமுக அரங்கேற்றும் நாடகம். இதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல். அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அமலாக்கத்துறை அழைத்தது. அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பது அவரது கடமை.

அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன. அவரை தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு செந்தில் பாலாஜியை அவர் கேட்டுக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,ANI

பழிவாங்கும் நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி விமர்சனம்

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பார்க்க சக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. மேற்குவங்கம், டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் என பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு தொடர்ச்சியாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.

செந்தில் பாலாஜி கைது

பட மூலாதாரம்,ANI

மு.க.ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்? - ஜெயக்குமார் கேள்வி

செந்தில் பாலாஜி மீது ஏற்கெனவே புகார் கூறிவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்ப்பது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

செந்தில் பாலாஜி செய்துள்ள முறைகேடுகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியின்போது தலைமைச் செயலகத்தில் வருமானவரிச் சோதனை நடந்தபோது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அதை ஆதரித்தார் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

ஒரு ஒன்றிய கவுன்சிலராக தி.மு.கவில் தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய மீண்டும் திமுகவிலேயே இணைந்து ஒரு முழுச் சுற்றை முடித்தவர் செந்தில் பாலாஜி.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டபோது, அவரது அமைச்சரவையில் இருந்த ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொருவிதமாக தன் விசுவாசத்தை நிரூபிக்க முயன்றுகொண்டிருக்க, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியோ பல கோவில்களில் அங்கப்பிரதட்சணம், அம்மன் கோவில் ஒன்றில் காவடி என பலரையும் பிரமிக்கவைத்தார்.

ஓ. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து இவர்தான் என்றெல்லாம் மற்ற அமைச்சர்களே மிரண்டுபோய் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2015 மே மாதம் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா ஜூலை மாதம் செந்தில் பாலாஜியின் பதவியைப் பறித்தார். அவரிடமிருந்த கரூர் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

ஆனால், அசராமல் அமைதியாக இருந்தார் செந்தில் பாலாஜி. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தார் ஜெயலலிதா.

கரூரில் உள்ள ராமேஸ்வரப் பட்டியைச் சேர்ந்த வி.செந்தில் குமார் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படிக்கும்போது, படிப்பை பாதியில் விட்டுவிட்டு அரசியலில் குதித்தவர். 1996ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 2000வது ஆண்டில் அ.தி.மு.கவில் சேர்ந்தார். பிறகு நியூமராலஜிப்படி தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார்.

செந்தில் பாலாஜி

அதற்குப் பிறகு அமைச்சராகும்வரை அ.தி.மு.கவில் அவரது பயணம் தொடர்ந்து மேல் நோக்கியதாகவே இருந்தது. கட்சியில் சேர்ந்த ஆறு மாதங்களிலேயே மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளரானார். 2004ல் மாவட்ட மாணவரணி செயலாளரானவர் 2006ல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, சட்டமன்றத்திற்குள்ளும் நுழைந்தார். 2007ல் கரூர் மாவட்டச் செயலாளராகவும் ஆனார்.

இதற்குப் பிறகு, ஜெயலலிதா மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தினருடனும் மிகவும் செல்வாக்கான நபராக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி. இதையடுத்து 2011லும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா.

2015ஆம் ஆண்டுவரை பல முறை அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றியபோதும், செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவில்லை.

கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தனது செல்வாக்கை வளர்த்துவந்ததோடு, அதைத் தக்கவைக்க மாவட்டத்தில் இருந்த தனது அரசியல் எதிரிகளையும் மெல்லமெல்ல ஓரம்கட்ட ஆரம்பித்தார் செந்தில் பாலாஜி.

அ.தி.மு.கவில் இருந்த முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி தி.மு.கவுக்குச் சென்றார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தம்பிதுரைக்கு பல இடங்களில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்குப் பின்னால், செந்தில் பாலாஜியின் கரம் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

கட்சி சசிகலா - ஓ.பி.எஸ் என இரு தரப்பாக இரண்டாகப் பிளவுபட்டபோது, சசிகலா பிரிவுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் அந்த நேரத்திலும்கூட, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக ஒரு அதிரடியைக் கிளப்பினார் செந்தில் பாலாஜி.

அந்த நேரத்திலேயே அதாவது 2017 ஏப்ரலிலேயே அவர் தி.மு.கவுக்கு வரப்போவதாக செய்திகள் அடிபட்டன. அவர் மேலும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தி.மு.கவுக்கு அழைத்துவருவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பிலிருந்து டிடிவி தினகரன் ஒதுக்கிவைக்கப்பட்டபோது அவர் பக்கம் சென்றார் செந்தில் பாலாஜி.

ஆனால், டிடிவி தரப்பிலிருந்து அவருக்கு பல்வேறு விதங்களில் தொடர்ச்சியாக அழுத்தங்கள் இருந்த நிலையிலேயே அவர் தி.மு.க பக்கம் சென்றார் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு முக்கியத் தேர்தல்களில் தனது பலத்தை அவர் நிரூபித்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,TNDIPR

செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் - பின்னணி என்ன?

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

2014ஆம் ஆண்டில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெற்றது.

இந்தப் பணி நியமனங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட துறை அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர்.

காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார்.

வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் ஆட்சேர்ப்பு பட்டியல் வந்தபோது தங்களின் பெயர் வராததால் அதிருப்தியடைந்து புகார் அளித்துள்ளனர்.

முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சுமத்தப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு இந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் விசாரணை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,TNDIPR

இந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுகவில் இணைந்திருந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.

இந்நிலையில், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் சாட்சியங்கள் 13 பேரும் சமரசத்தை எட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கின் விசாரணை நிறுத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கில் பணமோசடி நடைபெற்றதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை அனுப்பியிருந்தது.

அதை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அழைப்பாணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அதேசமயம், செந்தில் பாலாஜி மீதான முந்தைய வழக்குகளில் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,TNDIPR

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதே சமயம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மேல்முறையிடு செய்யப்பட்டது.

இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் உத்தரவிட்டது.

மேலும் வழக்கு விசாரணையின் போக்கை பொறுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பான கோரிக்கை எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

https://www.bbc.com/tamil/articles/czkn9v9r88lo

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அமைச்சர்கள்,  அளவுக்கு மீறிய கொள்ளை அடிப்பது….  பிடிபட்டு விசாரணை என்று வந்தவுடன், நெஞ்சுவலி என்று வைத்தியசாலையில் போய் படுப்பது எல்லாம்… செய்த குற்றத்தில் இருந்து தப்பிக்க… தமிழக அரசியல் வரலாற்றில் காலம் காலமாக நடந்து வரும் ஏமாற்று வேலைகள்.

மத்திய அரசு..  இவற்றை கணக்கில் எடுக்காது, மக்களின் பணத்தை கொள்ளை அடித்த தி.மு.க. அமைசர்கள் அத்தனை பேரையும் ஜெயிலுக்கு அனுப்பி, அந்தப் பணத்தை இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ய வேண்டும்.

செந்தில் பாலாஜி மருத்துவ மனையில் போய் படுத்தவுடன்… முதலமைச்சர் ஸ்ராலின் தனது வேலை எல்லாத்தையும் விட்டு விட்டு… ஆஸ்பத்திரிக்கு போய் பார்க்கும் அளவிற்கு…
பாலாஜி அடிக்கும் கொள்ளையில்… இவர்களுக்கும் பங்கு போகின்றது என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது.

அதற்குள்… ரெடிமேட் அமைச்சராக அரசியலுக்குள் நுளைந்த  உதயநிதி என்ற சின்னவர்…
தாங்கள் மிசாவையே பார்த்தவர்கள், இதற்கு அஞ்ச மாட்டோம் என்று அறிக்கை விடுகிறார்.
முதலில்… இவரின் வீட்டை சோதனை போடுங்கள். இரண்டாவது மாடியில் கட்டி வரும் நீச்சல் தடாகம் உட்பட… பல கள்ளப் பணம் வெளி வரும்.
கொள்ளை அடிக்க வந்த கூட்டத்தை… அரசியலை விட்டே அகற்ற வேண்டும்.

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பணச்சலவை வழக்கில் கைது 

Published By: SETHU

14 JUN, 2023 | 09:07 AM
image
 

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று அதிகாலை மத்திய அரசின் அமலாக்த்துறையினால் கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல்  இன்று அதிகாலை வரை சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் இச்சோதனைகள் நடைபெற்றன. 

இந்நிலையில். இன்று புதன்கிழமை அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 காலை முதல் அமைச்சர் செந்தில்பாலாஜியை திமுக உறுப்பினர்கள் யாரும் சந்திக்க அமலாக்கத் துறையினர் சந்திக்க அனுமதிக்கவில்லை. 

இந்நிலையில். அமைச்சர் செந்தில்பாலஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் சென்னை - ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவதாக கூறிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

செந்தில்பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் மருத்துவமனைக்குச்  அவருக்கு மருத்துவர்கள் வழங்கி வரும் சிகிச்சை குறித்து விசாரித்து உள்ளதாகவும் தகவல். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜி சுயநினைவின்றி இருக்கிறார். அவர் மயங்கிய நிலையில் உள்ளார். அவரது பெயரை சொல்லி அழைத்த போதும் பதில் தரவில்லை. அவரது ஈசிஜி பரிசோதனை முடிவுகள் இயல்பு நிலையில் இல்லை. அவர் துன்புறுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

பணச்சலவை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஏஎன்ஐ செய்திச் சேவை தெரவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/157653

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Enforcement Department investigation completed: Senthil Balaji admitted to  hospital due to chest pain | அமைச்சர் செந்தில் பாலாஜி கைது; நெஞ்சு வலி  ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி ...

செந்தில் பாலாஜி

 

Image

பாய்ந்த அமலாக்கத்துறை.!  படுத்த செந்தில் பாலாஜி.!!

ஸ்ராலின் வந்து பார்த்தவுடன்.... நெஞ்சசுவலி போய், துள்ளி எழுந்த...  செந்தில் பாலாஜி.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Image

”செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்வருக்கு பிரச்னை” - எடப்பாடி பழனிசாமி!

 

 

 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அமைச்சர் செந்தில் பாலாஜியை.. அமுலாக்கத் துறை கைது செய்து,
நுங்கம்பாக்கம் அழைத்துச் செல்லும் போதுதான், அவருக்கு... நெஞ்சுவலி வந்ததாம்.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

செந்தில் பாலாஜி இதயத்தில் 3 அடைப்புகள்... விரைவில் சத்திரகிசிச்சை ... மருத்துவமனை பரிந்துரை

14 JUN, 2023 | 12:45 PM
image
 

தமிழக மின்சாரத் துறை அமைச்சர்செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அவர் இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை  நள்ளிரவில் கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு 160ஃ100 என்ற அளவில் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இதனையடுத்துதீவிரகிசி;ச்சை பிரிவில்  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவர் இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அதில் ‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ( வயது 47) ரத்தநாள பரிசோதனை இன்று காலை 10.40 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது” என ஓமந்தூரார் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

மறுத்துவமனை  அறிக்கை

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கோவையில் நாளை மறுநாள் 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/157686

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image

அமைச்சர் செந்தில் பாலாஜியை, வரும் 28ம் தேதி வரை 
நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – நேற்று இரவு முதல் இப்போதுவரை நடந்தது என்ன?

செந்தில் பாலாஜி, தி.மு.க., ஸ்டாலின், பா.ஜ.க
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த அமலாக்கத்துறை இப்போது அவரைக் கைது செய்திருக்கிறது. இவ்விஷயத்தில் நேற்று இரவிலிருந்து பரபரப்பான பல காட்சிகள் அரங்கேறின. அவை இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன.

  • ஜூன் 13, செவ்வாய்க்கிழமை காலை: சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
  • ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல இருந்த நிலையில் காரில் இருந்த செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாகக் கூறி, கதறி அழுது துடித்ததால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
செந்தில் பாலாஜி, தி.மு.க., ஸ்டாலின், பா.ஜ.க
  • ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.
  • இதைத்தொடர்ந்து, ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.
 
  • ஜூன் 14, புதன்கிழமை காலை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார். இதன்பிறகு, ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டார்: “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? … சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”
செந்தில் பாலாஜி, தி.மு.க., ஸ்டாலின், பா.ஜ.க

பட மூலாதாரம்,M.K.STALIN/TWITTER

  • ஜூன் 14, புதன்கிழமை காலை: சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய ரத்தநாளப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு மூன்று ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாகவும் ஒரு அறிக்கையை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வெளியிட்டது. மேலும் அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைத்தது.
  • ஜூன் 14, புதன்கிழமை மதியம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அளித்த அறிக்கையில் “இது விசாரணை அல்ல; பழிவாங்கும் நடவடிக்கை,” என்று கூறினர்.
  • ஜூன் 14, புதன்கிழமை மதியம்: செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்றுவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி வந்து விசாரணை நடத்தினார்.
  • ஜூன் 14, புதன்கிழமை மாலை: அமலாகத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
  • ஜூன் 14, புதன்கிழமை மாலை: ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மனு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க கோரிய செந்தில் பாலாஜி தரப்பிலான மனு உட்பட, மூன்று மனுக்களின் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. இவற்றின்மீதான தீர்ப்பை நீதிமன்றம் நாளைக்கு (ஜூன் 15, வியாழக்கிழமை) ஒத்திவைத்தது.

யார் இந்த செந்தில் பாலாஜி?

ஒன்றிய கவுன்சிலராக தி.மு.கவில் தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய மீண்டும் திமுகவிலேயே இணைந்து ஒரு முழுச் சுற்றை முடித்தவர் செந்தில் பாலாஜி.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டபோது, அவரது அமைச்சரவையில் இருந்த ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொருவிதமாக தன் விசுவாசத்தை நிரூபிக்க முயன்றுகொண்டிருக்க, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியோ பல கோவில்களில் அங்கப்பிரதட்சணம், அம்மன் கோவில் ஒன்றில் காவடி என பலரையும் பிரமிக்கவைத்தார்.

ஓ. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து இவர்தான் என்றெல்லாம் மற்ற அமைச்சர்களே மிரண்டுபோய் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2015 மே மாதம் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா ஜூலை மாதம் செந்தில் பாலாஜியின் பதவியைப் பறித்தார். அவரிடமிருந்த கரூர் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

 

ஆனால், அசராமல் அமைதியாக இருந்தார் செந்தில் பாலாஜி. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தார் ஜெயலலிதா.

கரூரில் உள்ள ராமேஸ்வரப் பட்டியைச் சேர்ந்த வி.செந்தில் குமார் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படிக்கும்போது, படிப்பை பாதியில் விட்டுவிட்டு அரசியலில் குதித்தவர். 1996ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 2000வது ஆண்டில் அ.தி.மு.கவில் சேர்ந்தார். பிறகு நியூமராலஜிப்படி தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார்.

அதற்குப் பிறகு அமைச்சராகும்வரை அ.தி.மு.கவில் அவரது பயணம் தொடர்ந்து மேல் நோக்கியதாகவே இருந்தது. கட்சியில் சேர்ந்த ஆறு மாதங்களிலேயே மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளரானார். 2004ல் மாவட்ட மாணவரணி செயலாளரானவர் 2006ல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, சட்டமன்றத்திற்குள்ளும் நுழைந்தார். 2007ல் கரூர் மாவட்டச் செயலாளராகவும் ஆனார்.

இதற்குப் பிறகு, ஜெயலலிதா மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தினருடனும் மிகவும் செல்வாக்கான நபராக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி. இதையடுத்து 2011லும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா.

2015ஆம் ஆண்டுவரை பல முறை அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றியபோதும், செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவில்லை.

கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தனது செல்வாக்கை வளர்த்துவந்ததோடு, அதைத் தக்கவைக்க மாவட்டத்தில் இருந்த தனது அரசியல் எதிரிகளையும் மெல்லமெல்ல ஓரம்கட்ட ஆரம்பித்தார் செந்தில் பாலாஜி.

அ.தி.மு.கவில் இருந்த முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி தி.மு.கவுக்குச் சென்றார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தம்பிதுரைக்கு பல இடங்களில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்குப் பின்னால், செந்தில் பாலாஜியின் கரம் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

கட்சி சசிகலா - ஓ.பி.எஸ் என இரு தரப்பாகப் பிளவுபட்டபோது, சசிகலா பிரிவுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் அந்த நேரத்திலும்கூட, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக ஒரு அதிரடியைக் கிளப்பினார் செந்தில் பாலாஜி.

அந்த நேரத்திலேயே, அதாவது 2017 ஏப்ரலிலேயே, அவர் தி.மு.க.வுக்கு வரப்போவதாக செய்திகள் அடிபட்டன. அவர் மேலும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தி.மு.க.வுக்கு அழைத்துவருவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பிலிருந்து டிடிவி தினகரன் ஒதுக்கிவைக்கப்பட்டபோது அவர் பக்கம் சென்றார் செந்தில் பாலாஜி.

ஆனால், டிடிவி தரப்பிலிருந்து அவருக்கு பல்வேறு விதங்களில் தொடர்ச்சியாக அழுத்தங்கள் இருந்த நிலையிலேயே அவர் தி.மு.க பக்கம் சென்றார் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு முக்கியத் தேர்தல்களில் தனது பலத்தை அவர் நிரூபித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cw4v0wvvl27o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூத்த ஊடகவியலாளர் மணி அவர்களின் பேட்டி.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மருத்துவ மனையில்,,, திருவிழாவுக்கு நின்ற ஆட்கள் மாதிரி குவிந்து இருக்கிறார்கள். இதனால்... மற்ற உண்மையான  நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஒருத்தனும் சிந்திக்கவில்லை.

5 hours ago, ஏராளன் said:

செந்தில் பாலாஜி இதயத்தில் 3 அடைப்புகள்... விரைவில் சத்திரகிசிச்சை ... மருத்துவமனை பரிந்துரை 

Image

அமலாக்கத் துறை,  அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்திருக்கா விட்டால்,
செந்தில் பாலாஜியின்  இதயத்தில் இருந்த  3 அடைப்புகள் கண்டு பிடிக்கப் படாமல் இருந்து,
அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். 

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியொரு நக்கல் மன்னனை இன்றுதான் பாரத்தேன். செமபேட்டி;

  • Haha 1
Posted

நடிகர் திலகத்தை கைது செய்ததை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

353002487_2342496735930044_4803088337213

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செந்தில் பாலாஜி கைது: திமுகவுக்கு என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்?

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,SENTHIL BALAJI/TWITTER

3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், அமலாக்கத் துறை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன் ஆஜர் படுத்தினர். சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்ய அமலாக்கத்துறை வாதிட்ட நிலையில், பிணையில் விடுவிக்க செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கோரிய மனு தொடர்பாக வாதாடிய என்.ஆர். இளங்கோ, சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர். நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதமானது. மனைவியிடம் உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்த வேண்டும் அதை செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.

 

காவலில் எடுப்பது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வாதம் செய்த ஏ.ஆர்.எஸ். சந்தரேசன், "விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. கைது காரணங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டன. கைது மெமோவை பெற மறுத்தார். கைது செய்யப்படுவோம் என தெரிந்தே அதை பெற மறுத்து விட்டார். ரிமாண்ட் செய்யப்பட்டு விட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது" என்று தெரிவித்தார்.

 

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கேட்டு அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மனு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க கோரிய செந்தில் பாலாஜி தரப்பிலான மனு ஆகிய மனுக்களின் மீதான விசாரணை இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,ANI

"செந்தில் பாலாஜி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்"

செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ செந்தில் பாலாஜி உத்தமர் என்பது போல் ஸ்டாலின் புலம்பி வருகிறார். வேண்டுமென்று பொருளாதார குற்றப்பிரிவும், வருமானவரித் துறையும் ரெய்டு நடத்துவதாகக் கூறி வருகிறார். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசுவது ஒன்று, இப்போது பேசுவது வேறு. முதலமைச்சர் இரட்டை வேடம் போட்டு வருகிறார்.

30 ஆயிரம் கோடி குறித்து ஏதாவது செந்தில் பாலாஜி பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில் அனைவரும் சென்று பார்க்கின்றனர். செந்தில் பாலாஜி மீது அக்கறை இல்லை இவர்களுக்கு, வெறும் பயம்தான். செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் தார்மீக பொறுப்பேற்று ராஜிநாமா செய்ய வேண்டும்” என்று கூறினார்.

செந்தில் பாலாஜி திமுகவின் கருவூலம் - அண்ணாமலை

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்பேரில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகு, தலைமைச் செயலகம் மற்றும் செந்தில் பாலாஜி வீடு அலுவலகங்களில் சோதனை நடந்தது எப்படி அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகும்? செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுகவின் கருவூலமாக செந்தில் பாலாஜி மாறிவிட்டார் என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள், முதலமைச்சர் அவரை போய் பார்த்து சந்தித்து இதனை உறுதிப்படுத்திவிட்டனர். உடனடியாக செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவியை வேறு யாருக்காவது முதலமைச்சர் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்ன?

2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்த போது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்ட போது முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர். காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார். முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சுமத்தப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

மோசடியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியது. மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்யும்படியும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதில், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதே சமயம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,STALIN TWITTER

திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

செந்தில் பாலாஜிக்கு எதிரான நடவடிக்கை திமுகவுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மூத்த ஊடகவியலாளர் கார்த்திகேயன் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் அமைச்சராக இருக்கும் ஒருவர், அமலாக்கத்துறை சோதனையில் கைதாவது என்பது இதுதான் முதல்முறை. எனவே, திமுகவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது அளவிட முடியாததாக இருக்கிறது" என்றார்.

மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம் பேசும்போது, “ இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி திமுக சரியாக கையாளவில்லை. இதே போன்ற சூழலை ஆம் ஆத்மி கட்சி கையாண்டதற்கும் திமுக கையாண்டதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவர்கள் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கைது செய்ய விட்டுவிட்டு அதன் பின்னர் அரசியல் ரீதியாக அதை எடுத்து செல்கின்றனர். ஆனால், திமுகவினர் கைது செய்வதற்கே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ” என்றார்.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிரான வாக்கு திமுகவுக்கு தான் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் சராசரி மக்களிடம் இந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தராசு ஷ்யாம் குறிப்பிட்டார்.

ஊழலுக்கு எதிரான கட்சி என்று பாஜக தங்களைக் கூறி வருகிறது. தங்கள் கூற்றுக்கு வலு சேர்க்க இந்த விவகாரத்தை பாஜக பயன்படுத்திக்கொள்ளும் என்று கார்த்திகேயன் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி
 
படக்குறிப்பு,

தராசு ஷ்யாம்

அமலாக்கத்துறையின் அதிகாரம் குறித்த பேசிய தராசு ஷ்யாம், “எந்த அரசாக இருந்தாலும் விசாரணை அமைப்புகளை தவறாக நடத்தி வருகிறது என்பதை நாம் பார்த்துத்தான் வருகிறோம். ஆனால், அதிகாரிகள் சட்டப்படிதான் நடக்கின்றனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்திருக்கக் கூடாது என்பதே தவறு. மத்திய அரசின் கீழ் வருமானம் தொடர்பான வழக்கில் கைது செய்யும் அதிகாரம் உள்ள ஒரே அமைப்பு அமலாக்கத்துறைதான். 1956ல் அமலாக்கத்துறை ஆரம்பிக்கப்பட்டபோது , அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தை (FERA) மட்டும்தான் அது கவனித்து வந்தது. தாராளமயமாக்கலுக்கு பின்னர் இது fema ஆக மாறியது. 2002க்கு பிறகு பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) கொண்டு வரப்பட்டது. அமலாக்கத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. "

"2011-2015ல் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அதன் பின்னர் 5 ஆண்டுகளுக்கு அமைச்சராக இல்லை. தற்போது வேறு துறைக்கு அமைச்சராக இருக்கிறார். அப்படியிருக்கும்போது, பழைய ரெக்கார்டு எப்படி புதிய அறையில் கிடைக்கும். நிச்சயமாக எதுவும் கிடைக்காது. செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்பதுதான் தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட ரெய்டின் நோக்கம்.” என்றார்.

இந்த நடவடிக்கையில் அதிமுகவுக்கு எதிரான மிரட்டலும் இருக்கலாம் என்று கூறும் கார்த்திகேயன், கூட்டணியில் தனது பிடியை இறுக்குவதற்கு இந்த நடவடிக்கையை பாஜக பயன்படுத்துக்கொள்ளும். தங்களுக்கு எதிராக செயல்படுவது, கூட்டணியை விட்டு வெளியே வர முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முயன்றால் இதுபோன்ற நிலையை சந்திக்க நேரிடும் என்ற மறைமுக எச்சரிக்கையும் இதன் பின்னால் இருக்கலாம் என்றார்.

டாஸ்மாக் விவகாரமும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துமா?

போக்குவரத்துத்துறையில் பணி வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தார் என்று செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டப்பட்டாலும், தற்போது டாஸ்மாக்கில் நடைபெற்று வரும் விவகாரங்களும் செந்தில் பாலாஜிக்கு எதிராக திரும்பக் கூடும் என்பது ஊடகவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இது தொடர்பாக ஷ்யாம் பேசும்போது, “ செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வாங்கிய லஞ்சத்திற்கான நடவடிக்கையாக இதை பார்க்கவில்லை. பணி நியமனதுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கை விசாரிக்க எல்லாம் அமலாக்கத்துறை வருமா? இந்த நடவடிக்கைகளை செந்தில் பாலாஜியும் திமுகவும் எதிர்பார்க்கவும் இல்லை, அவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவில்லை."

"தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் குவார்ட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவது அனைவருக்குமே தெரியும். இந்த பணம் தினமும் வசூலிக்கப்படுகிறது. அந்த தொகை ஒட்டுமொத்தமாக சேர்க்கப்படுகிறது. சார்ஜ் சீட் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு கால அவகாசம் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக்கிற்கு சரக்கு விநியோகம் செய்கின்ற லாரி ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. எனவே, டாஸ்மாக் மோசடி குறித்த விவகாரத்தை இதில் சேர்க்க வாய்ப்பு இருக்கிறது. ” என்று அவர் தெர்வித்தார்.

“டாஸ்மாக்கில் நிதி வசூலிப்பதில் செந்தில்பாலாஜி ஈடுபடத் தொடங்கியபோதே அதனை கண்டித்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது, தற்போது, டாஸ்மாக் நிதி வசூல் விவகாரமும் இதனுடன் சேர வாய்ப்பு இருக்கிறது” என்று கார்த்திகேயனும் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cmjvkdg3n6lo

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, புலவர் said:

 

 

9 hours ago, புலவர் said:

இப்படியொரு நக்கல் மன்னனை இன்றுதான் பாரத்தேன். செமபேட்டி;

இவரின் பேட்டியை...  முதன் முதலாக கேட்டேன்.
ஆள் நோகாமல் நொங்கு எடுத்து இருக்கிறார்.  😂

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஈழப்பிரியன் said:

நாளைக்கே பிஜேபியில் சேர்ந்தால் தலைவராகிவிடுவார்.

இவரின் கட்டுப்பாட்டில் 40 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
அவர்களையும் அழைத்துக் கொண்டு பா.ஜ.க.வில் சேர அழுத்தம் கொடுக்கலாம்.
இப்படித்தான்... வடக்கில் பல மாநிலங்களில் அரசை, கவிழ்த்து இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திமுக வையும் திமுககாரனையும் சீண்டிப் பார்க்காதீங்க.  
சீண்டிப் பார்த்தா தாங்க மாட்டீங்க. - ஸ்ராலின்.-

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடிவேலு மரண காமெடி 100% சிரிப்பு உறுதி || Vadivel comedy - YouTube

Timepass #vadivel #epic #comedy #gurunadha Adithya TV | By Adithya TV |  Facebook

Gurunatha vadivel comedy - WhatsApp Status Video

என் தலைவன் வந்திட்டான். 
உங்களுக்கு துணிவு இருந்தால்..  இப்ப வந்து, என் தலைவன் மேல் கை  வைத்து பாருங்க(டா)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

திமுக வையும் திமுககாரனையும் சீண்டிப் பார்க்காதீங்க.  
சீண்டிப் பார்த்தா தாங்க மாட்டீங்க. - ஸ்ராலின்.-

இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.

ஐயா சம்பந்தனோ?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

செந்தில் பாலாஜியை தீவிரவாதியை போல அடைத்து விசாரிக்க என்ன அவசியம்? - மு.க. ஸ்டாலின்

செந்தில் பாலாஜி
15 ஜூன் 2023, 05:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

நீதிமன்றக் காவலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது. அவர் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் இருப்பார் என்றும் அமலாக்கத் துறையின் மருத்துவர்கள் அவரை சென்று பார்க்கலாம் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, இது சட்டவிரோத கைதா என்பது தொடர்பான விசாரணை ஜூன் 22ஆம் தேதி நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை நெருக்கடி அளிப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் வழங்கக்கோரி அளிக்கப்பட்டிருக்கும் மனு, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அளிக்கப்பட்டிருக்கும் அமலாக்கத்துறையின் மனு மற்றும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வழங்கப்பட்டிருக்கும் மற்றொரு மனு ஆகிய இரண்டு மனுக்களும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் இன்று நடக்கவிருக்கிறது.

இதில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய வழக்கு, நீதிமன்றத்தில் 19வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை நண்பகல் 12 மணிக்கு மேல் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,TNDIPR

செந்தில் பாலாஜியை தீவிரவாதியை போல அடைத்து விசாரிக்க என்ன அவசியம்? - மு.க. ஸ்டாலின்

செந்தில் பாலாஜியை தீவிரவாதியைப் போல அடைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் காணொளியில், "பாஜகவுக்கு எதிரான 3000 பேர் மீது சோதனை நடத்தப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"பத்து ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும் - உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"கருத்தியல் ரீதியாக, அரசியல்ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ- என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பா.ஜ.க.வின் பாணி! அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி! இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள்." என்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

"தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் தந்த உள்ளவுறுதி நமக்கு இருக்கிறது. எதையும் தாங்கும் இதயம் உண்டு. இதையும் தாங்கிக் கடந்து செல்வோம்!" என்று குறிப்பிட்டு அந்த காணொளியை முடித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முந்தைய விசாரணையில் என்ன நடந்தது?

நேற்று நடைபெற்ற ஜாமின் மனு மீதான விசாரணையில்,

"செந்தில் பாலாஜி கைதில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதமானது . மனைவியிடம் உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்த வேண்டும் அதை செய்யவில்லை" என என். ஆர். இளங்கோ தனது வாதங்களை முன் வைத்தார்.

அதற்கு பதிலளித்து அமலாக்கத்துறை சார்பில், “விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர் தற்போது உடல் நலக்குறைவு என கூறுகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம்.” என ஏ.ஆர்.எஸ் சுந்தரேசன் தனது வாதத்தை முன் வைத்தார்.

மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கப்பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மூன்று மனுக்களும் இன்று விசாரிப்பதற்கு பட்டியலிடப்பட்டன.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,STALIN/TWITTER

மாநில மனித உரிமை ஆணையர் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார். செந்தில் பாலாஜி மிகவும் சோர்வாக இருப்பதாக தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்ன?

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

2014ஆம் ஆண்டில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெற்றது.

இந்தப் பணி நியமனங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட துறை அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர்.

காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார்.

வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் ஆட்சேர்ப்பு பட்டியல் வந்தபோது தங்களின் பெயர் வராததால் அதிருப்தியடைந்து புகார் அளித்துள்ளனர்.

முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சுமத்தப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு இந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் விசாரணை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,TNDIPR

இந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுகவில் இணைந்திருந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.

இந்நிலையில், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் சாட்சியங்கள் 13 பேரும் சமரசத்தை எட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கின் விசாரணை நிறுத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கில் பணமோசடி நடைபெற்றதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை அனுப்பியிருந்தது.

அதை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அழைப்பாணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அதேசமயம், செந்தில் பாலாஜி மீதான முந்தைய வழக்குகளில் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதே சமயம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மேல்முறையிடு செய்யப்பட்டது.

இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் உத்தரவிட்டது.

மேலும் வழக்கு விசாரணையின் போக்கை பொறுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பான கோரிக்கை எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

https://www.bbc.com/tamil/articles/cp0z929774vo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின்அமலாக்கத்துறை நடந்து கொண்டது

 

அதென்னடா, அரசியல் வாதி திருடர்களுக்கு மாத்திரம் விசாரணை என்றால் மட்டும் இதயத்தில் பிரச்சனை வருகிறது....

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெஞ்சுவலி எனக்கூறியும் அதிகாரிகள் கீழே தள்ளி கைது செய்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்” – மனித உரிமை ஆணைய உறுப்பினர் பேட்டி

15 JUN, 2023 | 12:26 PM
image
 

நெஞ்சுவலி எனக்கூறியும் அதிகாரிகள் கீழே தள்ளி கைது செய்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்” என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று அதிகாலை 1.39  மணிக்கு கைது செய்தனர்.

 

அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை  நிறைவடைந்ததையடுத்து, அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். 

 

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார் எனவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளும், மருந்து மாத்திரைகளும் எடுத்துக்கொண்டார் எனவும், அவருக்கு கட்டாயமாக விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாகவும், காவேரி மருத்துவமனையில் ஸ்டண்ட் கருவி பொருத்துவதற்கான ஆலோசனைகளையும் ஓமந்தூரர் மருத்துவர்கள் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

விசாரணை கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் பதிவேட்டு எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றிலும் ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், விசாரணைக் கைதியாக உள்ள செந்தில் பாலாஜிக்கு சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும் என்பதால், அவரை பார்வையாளர்கள் பார்க்க அனுமதி இல்லை. இருப்பினும், அவ்வாறு அவரை பார்க்க வேண்டும் என்றால், சிறைத் துறை அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்புதான் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையின் சென்று சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கண்ணதாசன் தெரிவித்ததாவது..

“ அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்தேன் அவர் சோர்வாக காணப்பட்டார். அவரை கைது செய்யப்பட்டபோது கடுமையாக நடத்தப்பட்டதாகவும், அவருக்கு இருக்கக்கூடிய இதய நோய் பற்றியும் என்னிடம் தெரிவித்தார்

மேலும் கைது செய்த் பொழுது தனக்கு தொந்தரவு கொடுத்த அதிகாரிகளின் பெயரை என்னிடம் கூறினார். புகார் கொடுக்கப்பட்டதன்  அடிப்படையில்தான் நான் இங்கு வந்தேன். இதைப்பற்றி மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும்

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தும் அவரை கடுமையான முறையில் கைது செய்துள்ளனர். அவருக்கு காது அருகே வீக்கம் அதிகமாக உள்ளது.  தனக்கு நெஞ்சு வலி எனக் கூறியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் தன்னை கீழே தள்ளி கைது செய்ததாக கூறினார்.” என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/157763



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.