Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

IMG-4147.jpg

மேல் ஆடை இல்லாமல் வெறும் பிக்னி மட்டும்  அணிந்து கொண்டு பொது நீச்சல் தடாகத்தில் நீந்துவதற்கு அவளுக்குப் போதுமான துணிவு இருந்ததுமேலாடை இல்லாமல் நீந்த முயற்சித்ததைப் பற்றி  எதிரான கருத்துகள் வந்த போது அவள் அவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

அவளுக்கு கொலை அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கிய பொழுதுதான் அவள் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தாள்.

“சிலர் என்னை பலாத்காரம் செய்யக் கூடத் தயங்க மாட்டார்கள்இப்படிச் சொன்னவர் 33 வயதான லொற்றே மீஸ்

“இங்கே என்ன பிரச்சனை இருக்கிறது? எல்லோருக்கும் ஒரே மார்பகம்தானே. நாங்கள் இந்த வருட கடும் கோடையில் பிக்னி மட்டுமே அணிந்து கொண்டு  நடைப் பயணம் செல்லலாம் என்று  தீர்மானித்திருக்கிறோம்என்று லொற்றே மீஸ் சொல்கிறார்.

கடந்த வருடம் மார்கழி மாதம் பேர்லினில் உள்ள ஹவுள்ஸ்டோர்ப்  நீச்சல் தடாகத்தில் மேல் ஆடை இன்றி   பிக்னி மட்டுமே அணிந்து கொண்டு லொற்றே மீஸ் நீந்த எத்தணித்த போது , அங்கிருந்த பணியாளர்கள் அவரை நீச்சல் செய்ய அனுமதிக்கவில்லை. “ஆண் பெண் என்று பாகுபாடு பார்க்கக் கூடாது எல்லோரும்  சமமாக நடத்தப்பட்ட வேண்டும்”  என்று  லொற்றே மீஸ் அங்கே வாதம் செய்ய ஆரம்பித்தார். அவரின் விவாதம் நீச்சல் தடாகத்து நீரில் கரைந்து போனது. நிர்வாகிகளால்  அவர் நீந்துவதற்கு அனுமதிக்கப் படவேயில்லை.

“மேலே ஆடை அணியாமல்  இருப்பது ஒரு பிரச்சனையில்லை. அடிப்படையில் அது தடை செய்யப் படவும் இல்லை  ஆனால் ஆடை வடிவமைப்பாளர்கள் ஏன் பெண்களுக்கான நீச்சல் உடைகளை  அப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்பதை  லொற்றே மீஸ் புரிந்து கொள்ள வேண்டும்என நீச்சல் தடாக நிர்வாகிகள் பதில் தந்திருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில்  இது ஒரு பேசும்  பொருளாக வந்த போது   ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் வைக்கப்படுகின்றன.

எங்களுக்குத் தைரியம் இல்லை. ஆனால் உங்களுக்கு எங்கள் ஆதரவு இருக்கிறதுஎனப் பல பெண்கள் என்னை பாராட்டி எனக்கு எழுதியிருக்கிறார்கள் என லொற்றே மீஸ் கூறுகிறார்.

“பெண்கள் உடலை மையப்படுத்தியிருக்கும்  பாலியல் பார்வையை இன்று நாளை என ஒரு நாளிலேயே தீர்த்து விடலாம்  என்பது ஒரு கற்பனை வாதம். ஆனால்  பலர் பாதிக்கப்பட்ட பெண்களின்   பின்னால் நிற்பது எங்களுக்கு நல்லதொரு அறிகுறிஇப்படிச் சொல்லும் லொற்றே மீஸின் பெண்ணியம் பற்றிய எழுத்துக்களுக்கு பல  புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அவர் எழுதும் பெண்ணியம் பற்றிய புத்தகத்தை வெளியிட அவர்கள்  பெரிதும் ஆர்வமும் காட்டி வருகிறார்கள்.

யூலை 1ந் திகதி, ‘ எல்லோருக்கும் ஒரே மார்பு’   என்ற கோசத்துடன் ஒரு  தெளிவான எதிர்ப்புப் போராட்டத்தை டிறேஷ்டன் நகரத்தில் நடாத்த  லொற்றே மீஸ் தீர்மானித்திருக்கிறார். நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் இடுப்புக்கு மேலே ஏதும் அணியாமல் நான்கு மணி நேரம் சைக்கிள் பவனி வரப் போகிறார்கள். ஊர்வல அமைப்பாளர்கள் நிதானமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஊர்வலம் டிறேஷ்டன் நகரப் புதிய சந்தை, தேவாலயங்கள் அதுவும் பெண்கள் தேவாலயம் எல்லாவற்றையும் சுற்றி  நான்கு மணி நேரம் நடக்கப் போகிறது என்பதில்  டிறேஷ்டன் நகரசபைதான் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது.

இன்னும் என்ன என்ன உரிமைகள் இவர்கள் கேட்கப் போகிறார்களோ தெரியாது.  

யூலை 1ந் திகதி  டிறேஷ்டன் நகரத்துக்குப் போனால்பார்க்கலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

🏃‍♂️எலே… சண்முகம், வுட்றா வண்டிய டிறேஸ்டனுக்கு… 🛺 🥸

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

🏃‍♂️எலே… சண்முகம், வுட்றா வண்டிய டிறேஸ்டனுக்கு… 🛺 🥸

குசாவை காணவில்லை, முதலே போய்விட்டாரா🤣

நல்ல வருமானம் டிறேஸ்டனுக்கு

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, உடையார் said:

குசாவை காணவில்லை, முதலே போய்விட்டாரா🤣

நல்ல வருமானம் டிறேஸ்டனுக்கு

ஊரிலை… 🚲சைக்கிளுக்கு, 🩴செருப்புக்கு காவல் காக்கிற மாதிரி..
டிறேஸ்டனிலை 💃🏼அவை… கழட்டிப் போடுற 👙மேலாடைக்கு🩱,
கு.சா.தான் காவல் என்ற படியால்…  வேளைக்கே போயிட்டார். 😂 🤣
 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு பொதுவாக வருடாந்தம் நடக்கும் கார்னிவெலில் குழுக்கள் குழுக்களாக இசைக்கருவிகளுடன் ஊர்வலமாகப் போவார்கள்......எப்படியும் அவற்றுள் ஓரிரு குழு மேலாடையின்றி போவது வளமை.....அதுக்கெல்லாம் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோமா என்ன .......அப்படி இவர்களும் போகட்டுமே.....!  😁

ஓவியத்துக்கு பாராட்டுக்கள்.......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kavi arunasalam said:

இன்னும் என்ன என்ன உரிமைகள் இவர்கள் கேட்கப் போகிறார்களோ தெரியாது.  

கனடாவில் இதை சட்டம் அங்கீகரித்திருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனாலும் நடைமுறையில் இருக்கா தெரியவில்லை.

@நிழலி    க்கு இதுபற்றி தெரிந்திருக்கலாம்.

2 hours ago, தமிழ் சிறி said:

ஊரிலை… 🚲சைக்கிளுக்கு, 🩴செருப்புக்கு காவல் காக்கிற மாதிரி..
டிறேஸ்டனிலை 💃🏼அவை… கழட்டிப் போடுற 👙மேலாடைக்கு🩱,
கு.சா.தான் காவல் என்ற படியால்…  வேளைக்கே போயிட்டார். 😂 🤣
 

நானும் சும்மா தான் சுற்றிக் கொண்டிருக்கிறன்.

ஏதாவது உதவி தேவையெனில் சொல்லுங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் சும்மா தான் சுற்றிக் கொண்டிருக்கிறன்.

ஏதாவது உதவி தேவையெனில் சொல்லுங்கப்பா.

உங்களுக்கு, 👙கீழாடைக்கு…. காவல் இருக்க விருப்பமா? 
சிலவேளை ஆண்களின் 🩲ஜட்டியும்… மாறிக் கீறி வரும்.
பறவாயில்லை என்றால் சொல்லுங்கோ.
உடனே… அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை போட்டுடலாம் 😂 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

உங்களுக்கு, 👙கீழாடைக்கு…. காவல் இருக்க விருப்பமா? 
சிலவேளை ஆண்களின் 🩲ஜட்டியும்… மாறிக் கீறி வரும்.
பறவாயில்லை என்றால் சொல்லுங்கோ.
உடனே… அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை போட்டுடலாம் 😂 🤣

 

சில கீழாடைகள் மணம் தாங்கோலாது.

அது தான் யோசிக்க வேண்டியிருக்கு.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடவுளை தேடி கோடி கோடி பக்தர்கள் பூசைகள் அர்ஜனைகள் செபம் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக 
வேண்டுதல் செய்து திரிகிறார்கள் 
ஒருவேளை கடவுள் பூமிக்கு போன போகட்டும் என்று வந்தால் 
கடவுளை போட்டு தள்ள ஒரு கூட்டமும் .....
எனக்கும் இவரின் எல்லா கொள்ளகையிலும் உடன்பாடு இல்லை என்று 
அடி பக்கதர்களும் மாறிவிடுவார்கள் 
கடவுளை ஒழித்து வைத்திருப்பதால்தான் ஆயிரம் வருடமாக மக்களுக்கு தேடுதல் எனும் 
தீண்டல் இருந்துகொண்டு இருக்கிறது 


எப்போதும் மறைவில் இருப்பதுக்கு மவுசு அதிகம் 
ஆடைகளை அவிழ்த்து போடுவதில் பிரச்னை இல்லை 
ஆண்கள் மோகத்தில் இருந்து விலகி நேரடியாக காமத்திற்குள் சென்றுவிடுவார்கள் 
காலப்போக்கில் அதில் இருந்தும் விலகிப்போனால் (முன்னைய சித்தர்கள் காலம்போல) 

பெண்களுக்கான மரியாதை என்பது இல்லாமல் போய்விடும். 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, உடையார் said:

குசாவை காணவில்லை, முதலே போய்விட்டாரா🤣

ஒம்.....முருகா....ஓம் முருகா.....:rolling_on_the_floor_laughing:

9 hours ago, தமிழ் சிறி said:

கு.சா.தான் காவல் என்ற படியால்…  வேளைக்கே போயிட்டார். 😂 🤣

நான் இஞ்சை தான் நிக்கிறன்....இஞ்சை தான் நிக்கிறன்...:smiling_face_with_hearts:

Bild

  • Haha 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/6/2023 at 11:08, தமிழ் சிறி said:

எலே… சண்முகம், வுட்றா வண்டிய டிறேஸ்டனுக்கு…

 

On 18/6/2023 at 22:39, குமாரசாமி said:

நான் இஞ்சை தான் நிக்கிறன்....இஞ்சை தான் நிக்கிறன்

இரண்டு பேரும் டிறேஷ்டனில் எந்தப் பக்கம் நின்றீர்களோ தெரியவில்லை. ஒருவேளை வீட்டில் உசாராகித் தடை போட்டு விட்டார்களோ தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று linkஐ அனுப்பி இருக்கிறேன்.

https://www.bild.de/video/clip/dresden-regional/nippel-alarm-in-dresden-oben-ohne-demo-durch-die-innenstadt-84533294.bild.html

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, Kavi arunasalam said:

 

இரண்டு பேரும் டிறேஷ்டனில் எந்தப் பக்கம் நின்றீர்களோ தெரியவில்லை. ஒருவேளை வீட்டில் உசாராகித் தடை போட்டு விட்டார்களோ தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று linkஐ அனுப்பி இருக்கிறேன்.

https://www.bild.de/video/clip/dresden-regional/nippel-alarm-in-dresden-oben-ohne-demo-durch-die-innenstadt-84533294.bild.html

ஆகா.... ஞாயிற்றுக் கிழமை காலையில், கண் கொள்ளா காட்சி. 😁
உங்கடை வாயிலை  சர்க்கரை போட வேணும். 😂
நன்றி கவி அருணாசலம். 🤣

Edited by தமிழ் சிறி


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.