Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

ஏமாற்றாதே ஏமாறாதே ? 

 

ரிங் ...டிங்  டிங் .......ஹலோ....தம்பி  மணியோ பேசுறது ...ஓம் அக்கா ...அங்க எத்தனை மணி ? ....விடியபுரம்   3.00   சொல்லக்கா  என்ன விஷயம்.  

அக்கா :  நித்திரையை   குழப்புகிறேன்  என்று குறை நினைக்கதை . இவள் கடைக்குட்டி நிலாக்கு     இரண்டு  பிள்ளைகளாச்சு   ரெண்டும் பெடடக் குட்டிகள். மருமோனுக்கும் முன்தினமாதிரி ..கமத்தில் வருமானம் இல்லை மழையும் பொய்த்து போயிற்று ...அது தான்  மருமகனை ஒருக்கா கனடாவுக்கு எடுத்து விடுறியே ?  

மணி ..: அக்கா இப்ப  முந் தினமாதிரி இல்லையக்கா    சரியான காசு செலவு .எழுபது எண்பது கேட்க்கிறாங்கள். அதுவும் வந்து சேர்ந்தால் தான் சரி இல்லையேல் உல்ளதும்போச்சு. கப்பலில் தாண்ட கதை தெரியும் தானே. 

 

.அக்கா : எட தம்பி உனக்கு விஷயம் தெரியாதே ..இவள் கமலம் நேற்று கொழும்புக்குப்போய் வந்தவள் சொன்னாள்.  (Tourist work permit ) )குடுக்கிறாங்களாம். ஒரு நல்ல ஏஜெண்டை பிடிச்சு  விபரங்கள் எல்லாம் கொடுத்து  பின் கொஞ்சம் காசு ஒரு பத்து ஐஞ்சு ஆயிரம் டொலர் )  அக்காவுக்கு ஆயிரம் டொலர்   கொஞ்சக் காசு 😟.(mind voice).. யார் வியர்வை சிந்தி உழைத்ததோ?   கொடுத்து  விடடால் அவங்கள் கை அடையாளம் எடுக்க கூப்பிடு வாங்கலாம்.  எதோ bio    metic  என்னவோ சொன்னாள். பிறகு எல்லா   அலுவல் முடிய மறுமொழி வருமாம். 

மணி :  விசாரிச்சுப்பார்க்கிறேன் அக்கா. ( மனுஷன் நித்திரையும் போச்சு, பிள்ளைகளை   பள்ளிக்கு அனுப்ப ஏழு மணிக்கு எழும்ப வேணும்.  ) முருகா !.  

அக்கா : மணி ...காசுக்கு பிரச்சினையில்ல அவற்ர   ஒன்று விடட மாமா சுவிஸில் இருக்கிறார் இது தான் விஷயம்  இப்படி என்று சொன்னால் அனுப்புவார்.( ?) சரி அக்கா  பை ....

மணி :  கடவுளே ..இண்டைக்கு ரெஸ்டாரண்ட் காரன் பர்தேர்ஸ் டே  ( Fathers  day )எண்டு  முறி முறி என்று முறிச்சுப்போட டான்  .  இப்பதான் ரெண்டுமணிக்கு வந்துபடுத்தேன். ம்  ம்ம்ம் ...ஊரார் பேச்சைக்கேட்டு இதுகள் நின்று ஆடுதுகள்.

 ( மறுநாள்  மாணிக்கம் ஐயா  போய் பார்த்தான்  . இவர் லோயருக்கு  உதவியாக   பகுதி நேர வேலைசெய்யும் அனுபவம் வாய்ந்த வர். ஊரில் ஹெட்மாஸ்டர் )

மாணிக்கம் ஐயா : தம்பி மணி என்ன விஷயம் ? இந்தப் பக்கம்  கண்டு கன  காலம் 

மணி : இரவு வேலை ஐயா  ஓழுங்க   நித்திரையிம் இல்லை. நேரம்  காலம்  தெரியாம  அடிச்சு எழுப்பி கேட்க்கினம். விடயத்தை சொன்னார்.

 மாணிக்கம் : தம்பி  மணி சொல்லுறன் எனறு குறை விளங்காத   ....க னடா   வர்த்த மானி யில்   ஒன்றுமே போடவில்லை அறிவிக்க வில்லை . உனக்கு தெரியும் தானே   ஏஜென்ட் என்றால் மறுபெயர் ஏமாற்றுக் காரன்.நம்பி ஏமாறாதேங்கோ .  

இன்னும்  தான் ஜனங்கள்  திருந்தவே இல்லை  காசுகட்டி ஏமாறுகிறேன் என்று அலையுது .விதி யாரை விட்ட்து.  கனடா   என்றால் சொர்க்கமாம்   அதுகளை சொல்லி குற்றமில்லை நம் இனம்  அங்கு   கொலிடே சென்று காட்டும் " படங் கள்   " பகட்டுகள் இருக்கே. போன தடவை நண்பன் போய் வந்து சொன்னான்  அக்கா சொன்னவாம் நீ கனடாவிலிருந்து   வந்தவன்  மாதிரி இல்லயாம். சந்தையில  சாரத்தோடு நிண்டனியாம்.  .கொடிய வெயிலுக்கு கண்ணுல சண் கிளாஸ் கூட இல்லையாம். 

நம் இனம்  பட்டும் பட்டும் திருந்தாதது .visit  டு work  என்று ஒரு   விஷயம்  இருக்குது தான். அதை பிழையாக விளங்கி ....அதுக்கு 

ஒரு தொழில் துறை சிறந்த திறமை, சித்தியடைந்த பத்திரம் ,வேலை அனுபவங்கள். வங்கியில் "இருப்பு" ... அனுபவம்  இங்கு தொழில் கொடுப்போரின் உண்மை ...விபரம். தொழில் நிலையம் பதிவு செய்யப்படட ஆவணங்களும்  வரவேற்கும் கடிதம் ( invitation  letter )   இப்படி ...சகலதும் கொடுத்து  அதிஷ்டமும் கை கொடுத்தால் தான் பயணம் சத்தியம்.  ஏஜென்ட்  தேவையில்லை கணனியில் விண்ணப்ப  படிவம் நிரப்பி இங்கிருந்து  அனுப்பும் திறமையுள்ளவர் கிடைத்தால் ,  விமான டிக்கட்டுடன் பிளேன் ஏறலாம். 

 என் இனமே   தமிழ் ஜனங்களே   ஏமாறாதீர்கள் .  சட்ட்படி   நேர்மையாக வரும் வழி வகை தெரிந்தால்  துணிந்து இறங்குங்கள்  . மீண்டும் மீண்டும் சேற்றில் , முக நூல் , புளுகு பேப்பர் ..என்பவற்றி நம்பி ஏமாறாதீர்கள்.  ஏமாற்றப் படுவோம்  எனதெரிந்தும் ஏமாறலாமா? பட்டுத் தெளிய (தெரிய) வேண்டுமா ?  உறவுகளுக்கு சொல்லுங்கள். சடடப்படி    நேர்மையாக செய்யுங்கள் எதுவும் சாத்தியமே.

அண்மையில்  ஒரு அழைப்பு  வந்த போது ....ஏற்படட அனுபவம்  தற்போது  இலங்கையில் உள்ள தமிழ்ஸ் இக்கு நடக்கும்   கனடாக் காய்ச்சல் விழிப்பாய் (அவதானமாக ) இருங்கள் காசு கட்டி ஏமாறாதீர்கள் எனும் நல்ல நோக்கத்துக்காக எழுதப்பட்ட்து. ஏதும் பிழை இருப்பின் மன்னிக்கவும்,  தெரியப்படுத்தவும்.  என் அனுபவ பதிவு. .      

Edited by நிலாமதி
spelling mistake
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு பிழையுமில்லை ...ஆனால் ஒரு சொற் பிழையுண்டு.......அது....பிலி.    யை   பிழை     என்று    மாத்தி விடவும்    😄 நிலாமதி   

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களின் அனுபவப் பகிர்வில் பிழையில்லை......ஆனால் சொன்னால் யார் கேட்கிறார்கள்.......!  😁 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புளுகுசிறியும்...ம்மூஞ்சிபுத்தகமும் குடுக்கிற பொய்செய்திகளால் ..சனம் கனடாக் காய்ச்சலில் திரியுது..ஒருஆள்பத்துப்பேருக்கு கடிதம் கொடுக்கலாமாம்..குடும்பத்தில் சேர்த்தால் மற்றவரும் 10 பேருக்கு கொடுக்கலாமாம்...இனி வடக்கு கிழக்கில் சனம் இருக்கமாட்டுது .6 மாதத்தில் அனைவரும் கனடாவில்..எனக்கும் போன் தொல்லைதான்...என்னுடையபதில் ...விசயம் உண்மையாயின் ..நான் உதவுவேன்....அதுக்குபிறகு கொஞ்சம் தொல்லை குறைவு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, alvayan said:

புளுகுசிறியும்...ம்மூஞ்சிபுத்தகமும் குடுக்கிற பொய்செய்திகளால் ..சனம் கனடாக் காய்ச்சலில் திரியுது..ஒருஆள்பத்துப்பேருக்கு கடிதம் கொடுக்கலாமாம்..குடும்பத்தில் சேர்த்தால் மற்றவரும் 10 பேருக்கு கொடுக்கலாமாம்...இனி வடக்கு கிழக்கில் சனம் இருக்கமாட்டுது .6 மாதத்தில் அனைவரும் கனடாவில்..எனக்கும் போன் தொல்லைதான்...என்னுடையபதில் ...விசயம் உண்மையாயின் ..நான் உதவுவேன்....அதுக்குபிறகு கொஞ்சம் தொல்லை குறைவு..

அல்வாய்யன்..   விசயம் உண்மை என்று நினைக்கிறேன்...ஆனால் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு தான்   வாய்ப்புகள் கிடைக்கலாம்......அவர்களாக விண்ணப்பம் செய்து   தொழில்....வேலையை எடுத்து    விசா பெற்று வரலாம்   ..இங்கே இருப்பவர்கள் ஏதும் செய்ய வேண்டியதில்லை.....தகமை அற்றவர்கள்.  வரமுடியாது..அது சரி   யார் அந்த புளுகர். ?? எந்த  நாட்டில் இருக்கிறார்       ..??. இருட்டு அடி போட்டால்   அமைதியாக   இருப்பார் 🤣😄



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.