Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஏராளன் said:

நிலைமை கடினமானதாக உள்ளதாக மொஸ்கோ மேயர் அறிவிப்பு – நகரில் பயங்கரவாத எதிர்ப்பு நிலை பிரகடனம்

Published By: RAJEEBAN

24 JUN, 2023 | 09:59 PM
image
 

நிலைமை கடினமாக உள்ளது என மொஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார்

டெலிகிராமில் வெளியிட்டுள்ள தகவலில் சொபையானின் இதனை தெரிவித்துள்ளார்.

நகரத்தின் வீதிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனஅவர் தெரிவித்துள்ளார்.

moscow3.jpg

மொஸ்கோவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அறிவி;க்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள மேயர் சேர்கேய் சொபையானின் ஆபத்துக்களை குறைப்பதற்காக திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மொஸ்கோவில் வசிப்பவர்கள் முடிந்தளவிற்கு பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் நகரசேவைகள் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

மொஸ்கோவில் பொதுமக்களினதும் போக்குவரத்தையும் கட்டுப்படுத்துவதற்கான  அதிகாரமும் தொடர்பாடல்களை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான அதிகாரமும் பொதுமக்களை வாகனங்களை  சோதனையிடுவதற்கான மற்றும் அவசியம் ஏற்பட்டால் மக்களை வெளியேற்றுவதற்கான அதிகாரமும் அதிகாரிகளிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மொஸ்கோவில் ஒரு வாரகாலத்திற்கு பொதுநிகழ்ச்சிகளிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/158512

 

ஆமா

புட்டின் எங்க??

தன்  நகரத்தை நோக்கியே  அணுஆயுதத்தை  அழுத்துவாரா???

  • Replies 231
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, விசுகு said:

 

ஆமா

புட்டின் எங்க??

தன்  நகரத்தை நோக்கியே  அணுஆயுதத்தை  அழுத்துவாரா???

காதல் கேட்பதும் பொய்யாகலாம்  தீர விசாரித்து ஆராய்ந்து உணர்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்னரின் கூலிப்படையினர் ரஸ்ய நேரப்படி சனிக்கிழமை மாலைக்குள் மொஸ்கோவை நெருங்கிவிடுவார்கள் - பாதுகாப்பு ஆய்வாளர்கள்

Published By: RAJEEBAN

24 JUN, 2023 | 10:19 PM
image
 

வாக்னரின் கூலிப்படையினர் ரஸ்ய நேரப்படி சனிக்கிழமை மாலைக்குள் மொஸ்கோவை சென்றடைந்துவிடுவார்கள் என கார்டியன் தெரிவித்துள்ளது.

wagner_troops.jpg

வாக்னர் கூலிப்படையினர் வடக்குநோக்கி பயணிக்கின்றனர் லொறிகள் டாங்கிகள் காலட்படை வாகனங்கள் என்பவற்றுடன் செல்லும் வாகனத்தொடரணி ரஸ்யாவின் பாரிய படையணியொன்று இடைமறிப்பதற்கு முன்னர் மொஸ்கோவை சென்றடைய முயல்கின்றது என ஆய்வாளர்களும் ரஸ்ய புளொக்கர்களும் தெரிவித்துள்ளனர்.

மொஸ்கோவிற்கு தெற்கேயுள்ள லிப்ஸ்டெக் பிராந்தியத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு கூலிப்படையினரின் தொடரணி செல்வதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

 

FzZvXtvaQAAuLMK.jpg

ரஸ்ய அரசாங்கம் அவசரஅவசரமாக தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது டாங்கிகள் செல்வதை தடுப்பதற்கான குழிகளை அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

மொஸ்கோவின் தென்பகுதி புறநகர்பகுதிகளில் சோதனைசாவடிகள் அமைக்கப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன-

FzZvXS1WcAYqJaJ.jpg

https://www.virakesari.lk/article/158513

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, ரஞ்சித் said:

ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?

IMG-4158.jpg

  • Like 2
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக பிந்திய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்.

1. பெலரூஸ் அதிபர் முயற்சியில் புட்டின்-பிரிகோசின் இடையே மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஏற்பாடு.

2. மாஸ்கோ நகர்வை கைவிட்டு உக்ரேன் திரும்புவதாக பிரிகோசின் அறிவிப்பு

3. ஆனால் இப்படி ஏதும் நடக்கவில்லை பிரிகோசின் மறுத்துள்ளதாயும் சொல்ல படுகிறது.

4. முன்னரங்கில் உக்ரேன் தாக்குதலை தீவிரபடுத்தியுள்ளதாம். டினிப்ரோ நதியை தாண்டி, 3 தாங்கிகள் முதற்கட்டமாக தெற்கு கெசோனில் இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் இவை 

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாஸ்கோ நோக்கி 'வாக்னர்' படைகள் அணிவகுப்பு - என்ன செய்யப் போகிறார் புதின்?

புதினுக்கு எதிராக புரட்சியா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பால் கிர்பி
  • பதவி,பிபிசி செய்திகள்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ரஷ்யா - யுக்ரேன் போரில் திடீர்  திருப்பமாக ரஷ்ய ஆதரவு கூலிப்படையான ‘வாக்னர்’ அந்நாட்டுக்கு  எதிராகவே திரும்பி உள்ளது. யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துள்ள இந்த கூலிப்படையினர் தலைநகர் மாஸ்கோவை நோக்கி அணிவகுக்க தயாராகி வருவதாக அதன் தலைவர் பிரிகோஸின் தெரிவித்துள்ளார்.

பிரிகோஸின் இந்த செயலை தேசத்துரோகம் என்று கண்டித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், ‘இது முதுகில் குத்தும் செயல்’ எனவும் விமர்சித்துள்ளார்.

 புதின் குற்றச்சாட்டை மறுத்துள்ள வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஸின்,  “ராணுவத்துக்கு எதிராக சதி செய்வது தங்களின் நோக்கம் அல்ல என்றும், இது நீதிக்கான அணிவகுப்பு” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

வாக்னர் குழுவில் என்ன நடக்கிறது?

சில மாதங்களாகவே யுக்ரேனில், ரஷ்ய ராணுவம் தொடர்பான பிரசாரங்களில் பிரிகோஸின் முக்கியப் பங்கு வகித்து வருகிறார். குறிப்பாக ரஷ்ய சிறைகளில் உள்ளவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரை தமது தலைமையிலான வாக்னர் கூலிப்படையில் அவர் சேர்த்து வருகிறார்.

 

யுக்ரேனுக்கு எதிராக போரை நடத்தி வரும் ரஷ்யாவின் ராணுவ உயரதிகாரிகளுடன் பிரிகோஸின் நீண்ட நாட்களாகவே மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தற்போது அது கிளர்ச்சியாக மாறி உள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு யுக்ரைனில் இருந்து தெற்கு ரஷ்யாவில் உள்ள பெரிய நகரமான ரோஸ்டோவ் - ஆன்-டானுக்குள் நுழைந்துள்ள வாக்னர் கூலிப்படை, அங்கு ராணுவத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

இது மிகவும் கடினமான சூழல் என்று கூறியுள்ள ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

ரஷ்ய கிளர்ச்சி

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

யுக்ரேனில் போரிடும் வாக்னர் கூலிப்படையிடருடன் பிரிகோஸின் (கோப்பு படம்)

புதின் அரசைக் கவிழ்க்க சதியா?

"எனது தலைமையிலான வாக்னர் படையின் தற்போதைய அதிரடி நடவடிக்கை நீதிக்கான அணிவகுப்பு. இதை ராணுவத்துக்கு எதிரான சதி அல்லது புரட்சி என்று கூறுவது அபத்தமானது" என்று விளக்கம் அளித்துள்ளார் பிரிகோஸின்.

ஆனால், " யுக்ரேன் போரில் தங்களின் கூலிப்படைக்கு தேவையான ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்க ராணுவம் தவறியதால் தான்  தற்போது தலைநகரை நோக்கி அணிவகுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  தங்களை இப்படியொரு இக்கட்டான நிலைக்கு தள்ளிய  நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான செர்ஜி  ஷோய்கு, ஆயுதப் படைகளின் தலைவரான வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் எங்களின் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது" என்றும் வாக்னர் படையின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார் பிரிகோஸின்.

 வாக்னர் படையின் கிளர்ச்சி ரஷ்யாவின் ஆட்சி, அதிகாரத்தில் உயர்நிலையில் இருப்பவர்களை கவிழ்க்கும் சதியாகவும் பார்க்கப்படுவதால், அதிபர் புதினின் அதிகாரத்துக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவிவரும் சூழலை ரஷ்ய அரசு மிகவும் தீவிரமாக கருதுவதால், தலைநகர் மாஸ்கோ நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரஷ்ய கிளர்ச்சி

பட மூலாதாரம்,CONCORD PRESS SERVICE

 
படக்குறிப்பு,

ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகள் குறித்து ஆவேசமாக பேசும் பிரிகோஷின்

பிரிகோஸின் விருப்பம் என்ன?

வாக்னர் படையினரின் கிளர்ச்சியை நீதிக்கான அணிவகுப்பு என்று பிரிகோஸின் நியாயப்படுத்துவதில் அவர் எந்த அளவுக்கு தெளிவாக இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், ரஷ்ய ராணுவ தலைமை உடனான அவரது மோதல் போக்கு வேகமாக அதிகரித்துள்ளதும்,  தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களை அவர் வெளியேற்ற விரும்புகிறார் என்பதும் தற்போது தெளிவாகி உள்ளது.

ராணுவ துணை அமைச்சரிடமும், ராணுவ ஜெனரல் ஒருவரிடமும் ரோஸ்டோவ் நகரில் பிரிகோஸின் வெள்ளிக்கிழமை பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் ரஷ்ய ராணுவத்தின் உயர் பொறுப்பில் உள்ள இரண்டு முக்கிய அதிகாரிகள் தன்னிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை,  தலைநகர் மாஸ்கோ நோக்கிய தனது படையின் அணிவகுப்பு தொடரும் என்று அந்த வீடியோவில் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தங்களின் கிளர்ச்சி யுக்ரேனில் போரிட்டு  வரும் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு எதிரானது அல்ல. ஆனால், ராணுவத்தை வழிநடத்தி வரும் சில கோமாளிகளுக்கு எதிரானது என்று பிரிகோஸின் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். அவரை அமைதி காக்கும்படி ராணுவ தளபதிகள் பலர் வேண்டுகோள் விடுத்தாலும் அவற்றை கேட்டும் நிலையில் பிரிகோஷின் இருப்பதாக தெரியவில்லை. 

இதனிடையே,   ரோஸ்டோவின் வடக்கே வோரோனேஸ் பகுதியில் ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அந்த பகுதியில் அமைந்துள்ள M4 நெடுஞ்சாலையில் வாக்னர் படையின் அணிவகுப்பு சென்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

புதின் - பிரிகோஸின் என்ன உறவு?

ரஷ்ய அதிபர் புதினின் நீண்டகால கூட்டாளியாக பிரிகோஸின் அறியப்படுகிறார். ஒரு தொழிலதிபராக புதினுக்கு அறிமுகமானவர்,  பின்னர் அவரது ஆதரவின் கீழ் கூலிப்படை தலைவராக வளர்ந்துள்ளார்.

கிழக்கு உக்ரைனில் பாக்முட் பகுதியை கைப்பற்றும் முயற்சியின்போது, வாக்னர் படையை சேர்ந்த போராளிகள் அதிக எண்ணிக்கையில் இறந்தனர். இந்த மோசமான நிகழ்வுக்கு ரஷ்ய ராணுவத்தின் உயர் நிலையில் உள்ள அதிகாரிகள் தான் காரணம் என்று பிரிகோஸின் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக  சமூக ஊடகங்களில் அவர் வீடியோவும் வெளியிட்டிருந்தார். அப்போதில் இருந்து அவருக்கும்,  ரஷ்ய  ராணுவ தலைமைக்கு இடையேயான மோதல் போக்கு நீடித்து வந்தது. தற்போது அது கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது.

ராணுவ உயர் அதிகாரிகள் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டும் பிரிகோஸின், அதிபர் புதினை இதுவரை நேரடியாக விமர்சிக்கவில்லை. இருப்பினும் அவரை ‘மகிழ்ச்சியான தாத்தா’ என்று சமீபத்தில் பிரிகோஸின் குறிப்பிட்டிருந்தது புதின் மீதான அவரது மறைமுக விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது,

ரஷ்யாவில் உள்ள அனைத்து கூலிப்படைகளும் வரும்  ஜூலை 1 ஆம் தேதிக்குள் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இந்த மாத தொடக்கத்தில் அதிபர் புதின் கூறியிருந்தார். பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக அதிபர் புதின் விடுத்த வேண்டுகோளை பிரிகோஸின் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய கிளர்ச்சி

பட மூலாதாரம்,GOOGLE

ராணுவ தளங்களை கைப்பற்றிய வாக்னர் படை

இதனிடையே, யுக்ரேனில் தங்களது படை சேர்ந்தவர்கள் மீது ரஷ்ய ராணுவம் கொடிய  ஆயுத தாக்குதலை நடத்தியது என்று பிரிகோஸின் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்த ராணுவம், தங்கள் மீது  சுமத்தும் இதுபோன்ற குற்றச்சாட்டை  நிரூபிக்க பிரிகோஸின் தவறிவிடுகிறார் என்று ராணுவ  உயரதிகாரிகள் பதிலடி கொடுத்திருந்தனர்.

 இந்த நிலையில், வாக்னர் படை தமது கிளர்ச்சியை கைவிட வேண்டும் என்று ராணுவ தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை பிரிகோஸின் மறுத்துவிட்டார்.  ஆயிரக்கணக்கான படையினருடன்  மாஸ்கோவை நோக்கி தங்களது அணிவகுப்பின் முக்கிய முன்னேற்றமாக,  ரோஸ்டோவ் நகரை அடைந்து விட்டதாகவும், அங்கு ராணுவ தலைமையகத்துக்குள் இருப்பதாகவும்  வாக்னர் படையினர் இன்று காலை அறிவித்திருந்தனர்.

அத்துடன், மற்றொரு முக்கிய அம்சமாக வோரோனேஸ் நகரில் உள்ள ராணுவ தளத்தையும் கைப்பற்றிவிட்டதாகவும் வாக்னர் படையினர் தெரிவித்துள்ளனர்.

 

ரஷ்யாவுக்கும் புதினுக்கும் சவாலான காலகட்டம்

வாக்னர் படைகளின் கிளர்ச்சி யுக்ரேனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள போருக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்காது. அதிபர் புதினின் தலைமையில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று பிரிகோஸின் கூறுகிறார்.

ஆனால், ரஷ்ய அதிபர் புதின் 5 நிமிடங்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றியிருப்பதன் மூலம், இதனை அவர் மிக தீவிரமான ஒன்றாகவே எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.

அவரது நிபந்தனைகள் ஏற்கப்படாவிட்டால் மாஸ்கோவை நோக்கி வாக்னர் படைகள் அணிவகுக்கும் என்று பிரிகோஸின் மிரட்டியுள்ளார். அந்த திட்டத்தை தொடர்ந்து அவர் முன்னெடுக்கும் பட்சத்தில் என்ன நடக்கும்?

மிகக் குறைந்த வாய்ப்பாக, வேகமாக மாறி வரும் சூழலில் புதின் போன்ற தலைவர்கள் ஆட்சி, அதிகாரம் மீது முழு கட்டுப்பாட்டை இழந்துவிடக் கூடும்.

பிரிகோஸினுக்கு ரஷ்யாவில் கணிசமான மக்கள் ஆதரவும் உள்ளது. அவரது சவால் முறியடிக்கப்பட்டாலும் கூட, யுக்ரேனில் அவரது கூலிப்படையை நம்பியிருக்கும் இராணுவத்திற்கு இது நெருக்கடியான தருணமாக மாறியுள்ளது.

இது புதினின் தலைமையை தீர்மானிக்கும் ஒரு தருணம். அதேபோல், ரஷ்யர்கள் விழித்துக் கொள்வதற்கான அழைப்பும் இதுதான். இது எவ்வாறு முடிவுக்கு வரும் என்பது மிக விரைவில் தெரிந்துவிடும்.

https://www.bbc.com/tamil/articles/clkdj7jkv12o

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, goshan_che said:

 

வணக்கம் கோசான்.

மிக நீண்ட நாட்களின் பின் களத்தில் கண்டது மிக்க மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, goshan_che said:

1. பெலரூஸ் அதிபர் முயற்சியில் புட்டின்-பிரிகோசின் இடையே மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஏற்பாடு.

2. மாஸ்கோ நகர்வை கைவிட்டு உக்ரேன் திரும்புவதாக பிரிகோசின் அறிவிப்பு

எல்லாம் பிசுபிசுத்துவிட்டது!

மாஸ்கோவில் சண்டை வராதாம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, goshan_che said:

மிக பிந்திய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்.

1. பெலரூஸ் அதிபர் முயற்சியில் புட்டின்-பிரிகோசின் இடையே மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஏற்பாடு.

2. மாஸ்கோ நகர்வை கைவிட்டு உக்ரேன் திரும்புவதாக பிரிகோசின் அறிவிப்பு

3. ஆனால் இப்படி ஏதும் நடக்கவில்லை பிரிகோசின் மறுத்துள்ளதாயும் சொல்ல படுகிறது.

4. முன்னரங்கில் உக்ரேன் தாக்குதலை தீவிரபடுத்தியுள்ளதாம். டினிப்ரோ நதியை தாண்டி, 3 தாங்கிகள் முதற்கட்டமாக தெற்கு கெசோனில் இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் இவை 

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்.

கண்டது மகிழ்ச்சி கோஷான் - சே .........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, கிருபன் said:

எல்லாம் பிசுபிசுத்துவிட்டது!

மாஸ்கோவில் சண்டை வராதாம்!

பிரிகோஜின் ஒரு முடிவெடுத்தால் அதை எந்தப் புழுகர்களினாலும் தடுக்கேலா. சாரி புளக்கர்களினாலும் தடுக்கேலா!😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 minutes ago, கிருபன் said:

எல்லாம் பிசுபிசுத்துவிட்டது!

மாஸ்கோவில் சண்டை வராதாம்!

மஸ்கோவில் சண்டை வராது என்பது கொஞ்சம் ஏமாற்றம்தான்.

ஆனால் 400 வாகனத்தில், மிக சொற்ப நேரத்தில் மாஸ்கோ வாசல் வரை வந்து மிரட்டியதும், இப்போ ரஸ்யாவின் படைகளை தலைமை வகிக்கும் ஷிகோ போன்றோரை விலக்க புட்டின் ஒப்பு கொண்டதாக சொல்லப்படுவதும், புட்டின் மாஸ்கோவை விட்டு சென் பீட்டர்ஸ்பர்க் ஓடினார் - அல்லது அப்படியான விம்பம், உக்ரேன் யுத்தம் ரஸ்யாவின் பாதுகாப்புக்கு தொடங்கவில்லை என்ற பிரிகோசினின் வாக்குமூலம்…

புட்டின் ஒரு அசகாய சூரர் என்ற விம்பத்தை ரஸ்யாவில் சுக்கல் சுக்கல் ஆக்கி விட்டுள்ளது.

அதே போல் இனி புட்டின் ரஸ்யாவுக்குள் ஒரு பொம்மை அதிபர் மட்டும்தான். அதிகாரம் பிரிகோசினிடம்தான் மறைமுகமாக குவியும்.

இது மேலும் ரஸ்யாவின் தலைமையை பிளவு படுத்தும்.

இப்போ ஒரு ஒப்பீடு.

எந்த நிலையிலும் தலைவர் கருணாவோடு ஒரு சமரச பேச்சையும் நடத்தவில்லை. ஆயர்கள் போனபோது, விட்டு விட்டு போக சொல்லுங்கள் என்பது மட்டுமே பதிலாக இருந்தது.

காரணம் - கலகம் தொடங்கிய பின்…கலகாரனுடன் ஒப்பந்தம் செய்வது - எப்படி பார்த்தாலும் தலைமைக்கு ஆப்பாகவே முடியும். ஒன்றில் கலகம் அடக்கப்பட்டு, கலககாரன் அழிக்கப்பட வேண்டும் அல்லது தலைமை அழிய வேண்டும்.

பிகு

@இணையவன், @குமாரசாமி @விசுகு @ஏராளன் @ஈழப்பிரியன் @suvy தனித்தனியே பதில் போடாமைக்கு மன்னிக்கவும். 

6 minutes ago, வாலி said:

பிரிகோஜின் ஒரு முடிவெடுத்தால் அதை எந்தப் புழுகர்களினாலும் தடுக்கேலா. சாரி புளக்கர்களினாலும் தடுக்கேலா!😂

தானைத்தலைவன், அஞ்சா நெஞ்சன், புட்டினுக்கு புடனியில் போட்டவன் - பிரிகோசின் வாழ்க!

Edited by goshan_che
  • Like 3
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரிகோசின் புட்டின் ஒப்பந்தம் என சொல்லப்படுவன (உறுதிபடுத்தபடாத தகவல்).

1. பிரிகோசின், வாக்னர் கூலிபடைக்கு பூரண வழக்கு விலக்கு (immunity)

2. இவர்களை ஆபிரிக்கா திரும்ப அனுமதிப்பது

இவைதான் பிரிகோசினின் கோரிக்கைகள் என்றால் - அவர் வாக்னரை பூரணமாக ரஸ்யா/ உக்ரேனில் இருந்து விலக்கி - ஆபிரிக்கா போக விழைவதாக எண்ணுகிறேன்.

இதுவரைக்கும் ஓரளவு உக்ரேனில் ஒழுங்காக போரிட்ட குழு என்றால் அது வாக்னர்தான். அவர்களின் வெளியேற்றம் நல்லதே.

 

  • Thanks 1
Posted

பிரிகோசினின் கதையை முடிக்க புதின் தீர்மானித்ததை எப்படியோ தெரிந்துகொண்டதால்தான் முந்திக் கொண்டு இந்த மொஸ்கோ மீதான நகர்வு நடத்தப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.

புதினை எதிர்த்துப் பேசியவர்கள் சிறைக்குள் இருப்பார்கள் அல்லது தீர்த்துக் கட்டப் படுவார்கள் என்பதுதான் சரித்திரம். இராணுவத்தையே மொஸ்கோவுக்குத் திருப்பியவர் இன்னும் சேவையில் உள்ளார் என்றால் பிரிகோசினின் தேவையைப் புரிந்து கொள்ளலாம்.

இனி பிரிகோசினின் ஆபிரிக்காவுக்குச் அனுப்பப்பட்டு வழக்கம்போல் அங்கு குழப்பம் விளைவிக்கவும் அங்குள்ள தங்கத்தைக் கொள்ளையடிக்கவும் பயன்படுத்தப்படுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சே..! இப்பிடி அவமானப் படுத்திப் போட்டாங்களே புட்டினை! இனி எப்பிடி அந்த மனுசன் பப்ளிக்கில தலை காட்டுறது? சோ ஷேம்!🥲

1 hour ago, goshan_che said:

பிரிகோசின் புட்டின் ஒப்பந்தம் என சொல்லப்படுவன (உறுதிபடுத்தபடாத தகவல்).

1. பிரிகோசின், வாக்னர் கூலிபடைக்கு பூரண வழக்கு விலக்கு (immunity)

2. இவர்களை ஆபிரிக்கா திரும்ப அனுமதிப்பது

இவைதான் பிரிகோசினின் கோரிக்கைகள் என்றால் - அவர் வாக்னரை பூரணமாக ரஸ்யா/ உக்ரேனில் இருந்து விலக்கி - ஆபிரிக்கா போக விழைவதாக எண்ணுகிறேன்.

இதுவரைக்கும் ஓரளவு உக்ரேனில் ஒழுங்காக போரிட்ட குழு என்றால் அது வாக்னர்தான். அவர்களின் வெளியேற்றம் நல்லதே.

 

இந்த வாக்னர் கூத்தில ஒரு சில்வர் லைன் கோசான் சே மௌனம் கலைத்தது! அப்பிடியே நிண்டு களமாடுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இவர்களை ஆபிரிக்கா திரும்ப அனுமதிப்பது

வாக்னர் கூலிப்படையினர் பேலரஷ்யாவுக்கு போகின்றார்களாம். அவர்கள் மீது ரஷ்யா எந்த நடவடிக்கையும் எடுக்காதாம். 

எந்தப் பாதையால் போவார்கள்?🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, Justin said:

இந்த வாக்னர் கூத்தில ஒரு சில்வர் லைன் கோசான் சே மௌனம் கலைத்தது! அப்பிடியே நிண்டு களமாடுங்கோ!

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியது தவறு என்று யுகே மக்கள் இப்போது நினைக்கிறார்கள் என்ற செய்தியை படித்த போதே கோஷான் சேயை நினைத்தனான். இப்போது நற்செய்தியோடுவந்து புல்லுஅரிக்க வைக்கிறார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போர்களை போராடி வெல்வதைவிட துரோகிகளை உருவாக்கி வெல்வது இலகுவானது.

அதற்கு நல்ல உதாரணம் இலங்கை.

இப்போது ரஷ்யாவா?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதின் அரசு  பிரிகோசியுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி பிரிகோசி தனது கூலிபடையுடன் பெலருஸ்சுக்கு செல்கிறார். அவர் மீதான, கூலிபடை மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படும்.  அவர் மீதும் அவரது கூலிப்படையினர் மீதும் எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாது. அவர்களது வீரச் செயல்களை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம் என்று புதின் அரசு செய்தி துறை அதிபர் Peskov தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்த முயற்ச்சியில் பெலருஸ் சர்வாதிகாரியும் பங்குபற்றியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, விசுகு said:

 

சமர்ப்பணம்...

"இந்த போர் தேவைப்பட்டது. அதன் மூலம் ஷோய்கு மார்ஷலாக முடியும். அதன் மூலம் இரண்டாவது நாயகனாக உருவெடுக்க முடிந்தது. யுக்ரேனை நாஜிமயமாகாமல் தடுப்பதற்கோ, ராணுவமயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கோ இந்த போர் நடக்கவில்லை. ஒரு கூடுதல் நட்சத்திரத்திற்காகவே இந்த போர் தேவைப்பட்டது." என்கிறார் பிரிகோஸின். இது யுக்ரேன் மீதான தாக்குதலைத் தொடங்க ரஷ்யா முன்வைத்த காரணங்களுக்கு முரண்பாடாக இருக்கிறது.

எனக்கென்னமோ இது staged coup ஆகத் தோன்றுகிறது. 

10.5 லட்சம் படைகளைக் கொண்ட உலகின் பெரும் இராணுவத்திற்கெதிராக 30,000 படைகளை மட்டுமே கொண்ட ஒரு கூலிப் படையினர் கிளர்ச்சி செய்கிறார்களென்றால் நம்பக்கூடியதாக இருக்கிறத#தா? 

புடினை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒருவரும் விமர்சிக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். அனேகமாக கூலிப்படையினருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக இருக்கும்.

பிரிகொஸினுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால் அவர் ரஸ்யாVல் இருக்க முடியாது

 அப்படியானால் அவர் எங்கே போவார் அல்லது அனுப்பப்படுவார். அங்கிருந்துகொண்டு அந்த ஆள் எப்படிச் செயற்படுவார் ?  முடிவு எவ்வாறானதாக  இருக்கும் ? 

எதற்கும் அவசரப்படாமல் கூர்மையாகக் கவனியுங்கள். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kapithan said:

எனக்கென்னமோ இது staged coup ஆகத் தோன்றுகிறது. 

10.5 லட்சம் படைகளைக் கொண்ட உலகின் பெரும் இராணுவத்திற்கெதிராக 30,000 படைகளை மட்டுமே கொண்ட ஒரு கூலிப் படையினர் கிளர்ச்சி செய்கிறார்களென்றால் நம்பக்கூடியதாக இருக்கிறத#தா? 

புடினை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒருவரும் விமர்சிக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். அனேகமாக கூலிப்படையினருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக இருக்கும்.

பிரிகொஸினுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால் அவர் ரஸ்யாVல் இருக்க முடியாது

 அப்படியானால் அவர் எங்கே போவார் அல்லது அனுப்பப்படுவார். அங்கிருந்துகொண்டு அந்த ஆள் எப்படிச் செயற்படுவார் ?  முடிவு எவ்வாறானதாக  இருக்கும் ? 

எதற்கும் அவசரப்படாமல் கூர்மையாகக் கவனியுங்கள். 

😉

எதுவாக இருந்தாலும் இனி புட்டின் அல்ல ரசிய தலைவர்

போர் உக்ரைனால் இல்லை 

அப்படியே போர் தொடர்ந்தாலும் உக்ரைன் போரில் இனி புட்டின் வெல்லவே முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது. நம்பிக்கை துரோகத்தால் வீழ்ந்தது  எமது விடுதலையும் போராட்டங்களும். அதே போல்  ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பின் சரி பிழைகளுக்கப்பால்  நம்பிக்கை துரோகம் பொல்லாதது.

இங்கே விடுதலைப்புலிகள் வீழ்ச்சியை கொண்டாடியவர்கள் வாக்னர் குழுவின் நடவடிக்கையை ஆதரிக்கின்றார்கள் சரி. விடுதலைப்புலிகள் சார்பு ஆதரவாளர்கள் ஏன் வாக்னர் குழுவின் நடவடிக்கைகளை கண்டு சந்தோசப்படுகின்றனர் என விளங்கவில்லை.
யாராக இருந்தாலும் நம்பிக்கை துரோகம் பொல்லாதது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரிகிஷனுக்கு - ருஷ்யா கருணா என்று பெயர் இன்னும் சரியாக இருக்கும்.

கனவுனுக்கு நடந்ததாய் ஒத்ததே - பிரிகோசினுக்கும் - ருஸ்சிங் மரபு வழி  படைக்குள் வாக்னர் உள்வாங்கப்படுதல் - பிரிகோஷினுக்கு சுளையாக காசு பார்க்க முடியாத நிலை உருவாகும் - அப்படியே புலிகள் -கருணாவை அச்சடித்த நிலை.

வேறுபாடு - பிரிகோஸின் நேட்டோ இடம் ஓடவில்லை - ஷ்ய எட்டப்பர், காக்கை வன்னியனாக மாறவில்லை - தன்மானம், நாட்டுப் பற்று உள்ளவர். 

இங்கே சிலர் பதிவதை பார்த்து நான் யோசித்து இருக்கிறேன் - எட்டப்பன், காக்கை வன்னியன் எல்லாம் அப்போதைய சநாயக சீர்திருத்த வாதிகளோ என்று?  


தமிழனுக்கு, நாயே உனக்கும் ஒரு நாடா என்பது இன்னமும் நன்றாக பொருந்தி வருகிறது, மற்றவர்களோடு ஒப்பிடும் பொது.

 

17 minutes ago, விசுகு said:

போர் உக்ரைனால் இல்லை 

எப்போது எவர் சொன்னது போர் உக்ரைனால் என்று?

போர்  நேட்டோ, us  ஆல்   ஏற்பட்டது. ருசியா, அதை ராணுவ நடவடிக்கை மூலம் எதிர்கிறது.  

https://www.facebook.com/watch/?v=3059178937676678

https://thepeoplesvoice.tv/mccain-graham-ukraine-russia/

இது 2016 இல், இதை அறிந்து விட்டு நேட்டோ பக்கத்தில் வருவதை இருந்து இருந்தால் புடினை மட்டும் அல்ல, வேறு எவரையும் ரஷ்யா வரலாறு மன்னிக்காது.  

 

1 hour ago, Kapithan said:

10.5 லட்சம் படைகளைக் கொண்ட உலகின் பெரும் இராணுவத்திற்கெதிராக 30,000 படைகளை மட்டுமே கொண்ட ஒரு கூலிப் படையினர் கிளர்ச்சி செய்கிறார்களென்றால் நம்பக்கூடியதாக இருக்கிறத#தா? 

 

பிபிசி, புடம் போடப்பட்ட Frank Gardener ஆய்வு சரியாக இருக்கிறது https://www.bbc.co.uk/news/live/world-europe-66006142

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, இணையவன் said:

இனி பிரிகோசினின் ஆபிரிக்காவுக்குச் அனுப்பப்பட்டு வழக்கம்போல் அங்கு குழப்பம் விளைவிக்கவும் அங்குள்ள தங்கத்தைக் கொள்ளையடிக்கவும் பயன்படுத்தப்படுவார்.

ரஷ்யாவில் தேவையான அளவிற்கு தங்க வயல்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல ரஷ்யா தங்க ஏற்றுமதியும் செய்கின்றது.

ஆனால்....

தங்க வளங்களே இல்லாத ஜேர்மனி,பிரான்ஸ்,பெரிய பிரித்தானியா போன்ற நாடுகள் எப்படி அளவிற்கு அதிகமான தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கின்றன?

காசு கொடுத்து வாங்கியிருந்தால் அந்த நாடுகளும் செல்வச்செழிப்பில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு எரிபொருளை உற்பத்தி செய்யும் அரபு நாடுகளைப்போல்........

Was vom Gold bleibt – DW – 05.08.2011

Afrika: Das schmutzige Geschäft mit dem Gold

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1. பிரிகோசினும், புட்டினுன் அழிய வேண்டிய கிருமிகள், தீய சக்திகள். சொந்த நாட்டை அதன் வலங்களை கொள்ளை அடித்த நாட்டு, இனத்துரோகிள். தமது நாட்டை விட்டு, அயல் நாட்டிலும் கொள்ளை அடித்தவர்கள்.

தலைவர் ஒரு அடக்குமுறைக்குள்ளான இனத்துக்காக, அதன் நிலத்தில் நின்று போராடியவர். போராட்டத்தின் போது கூட அந்த நிலத்தின் வளங்களை காத்து நின்றவர்.  

அவரை இங்கே சிலர் புட்டினுடன் ஒப்பிடுவது, தமிழினம் ஏன் இன்னும் நாயிற்கிடையாய் கிடக்கிறது என்பதற்கு நல்ல விளக்கம்.

2. புலிகள் - சாதாரண மனிதர்கள், அசாதாரண சூழலில் இனத்தை தற்காக்க என கட்டி எழுப்பிய கட்டுக்கோப்பான இயக்கம்.

வாக்னர் ஒரு கூலிப்படை. கொள்ளையர்கள், பாலியல் வன்முறையாளர்கள், சிறையில் இருந்து எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்ட அமைப்பு.

இந்த ஒப்பீடும் மிக தவறானது.

3. கருணா கூட - ஆரம்பத்தில் ஒரு இனவிடுதலை போராளியே. பின்னர் தடம் மாறினார்.

ஆனால் பிரிகோசின் ஒரு contract killer. கூலிக்கு மாரடிக்கும் கூலிப்படையினன்.

தலைவர், கருணாவை போல் ஒரு உயரிய நோக்கில் இணைந்தோர் அல்ல புட்டினும், பிரிகோசினும். 

ஆகவே இந்த கொள்ளையருக்கு இடையான சண்டையில் துரோகம் என்பதே இல்லை. இவர்கள் இருவரினதும் தொழிலுமே துரோகம், மக்கள் விரோதம்தான்.

இரெண்டு கிருமியில் எந்த கிருமி அழிந்தாலும், பாதிக்கப்பட்டாலும் நன்மையே.

 

 

 

 

1 hour ago, விசுகு said:

எதுவாக இருந்தாலும் இனி புட்டின் அல்ல ரசிய தலைவர்

போர் உக்ரைனால் இல்லை 

அப்படியே போர் தொடர்ந்தாலும் உக்ரைன் போரில் இனி புட்டின் வெல்லவே முடியாது 

சொந்த செலவில் சாணியை கிலோ கணக்கில் எடுத்து முகத்தில் தனது முகத்தில் அடித்து, கேவலம் தனது நாட்டின் உள்நாட்டு பிரச்சனையை தீர்க்க வழியில்லாமல், சுண்டங்காய் பலரூஸ் நாட்டின் அதிபர் தலையிட்டு மாஸ்கோவை காப்பாற்றினார் என்ற அளவுக்கு இறங்கி விட்ட புட்டினை இனி ஒரு ஆம்பிளையாக யாரும் ரஸ்யாவில் கருத மாட்டார்கள் என்பதே உண்மை. 

சில வேளை இது எமக்கு எல்லாம் பிடிபடாத பெரிய உளவு ஆப்பரேசனாக இருக்கலாம்🤣.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

புலிகள் - சாதாரண மனிதர்கள், அசாதாரண சூழலில் இனத்தை தற்காக்க என கட்டி எழுப்பிய கட்டுக்கோப்பான இயக்கம்.

இதை உங்கள் அன்பு உறவு ஜஸ்ரின் ஏற்றுக்கொள்வாரா? :rolling_on_the_floor_laughing:

@Justin :cool:

  • Like 1
  • Haha 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.