Jump to content

500 தூண்களில் மற்றும் 7 கோபுரங்களுடன் பெரும் பொருள் மற்றும் ஆட்செலவில் இலங்கையில் முதன் முதலாக கட்டப்பட்ட புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம். ...

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் காண வாரீர் வாரீர் 

பேழையில் வந்த தாய்த்தெய்வமே ..

எங்கள் கண்ணகித்தாயவளே..

   25.06.2023 ….

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0PRyaECs4iv4XPf3hWsCRUswU9FwBv9RQ56YobxSfevRQDq1NXYbaW3ouEoXQBbcCl&id=100063741202580

Edited by விசுகு
  • Like 1
  • விசுகு changed the title to 500 தூண்களில் மற்றும் 6 கோபுரங்களுடன் பெரும் பொருள் மற்றும் ஆட்செலவில் இலங்கையில் முதன் முதலாக கட்டப்பட்ட புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம். ...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் காண வாரீர் வாரீர் 

அது ஏன் 'கண்ணகை அம்மன் ஆலயம்' என்று அழைக்காது சமஸ்கிருதப்பெயரில் வழங்கப்படுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
44 minutes ago, nochchi said:

அது ஏன் 'கண்ணகை அம்மன் ஆலயம்' என்று அழைக்காது சமஸ்கிருதப்பெயரில் வழங்கப்படுகின்றது. 

எதில பெயர் வைச்சால் என்ன, பூசை சமஸ்கிருதத்திலை தான் நடக்கப்போகுது!

இப்ப இந்தியாவும் வடக்கில இருக்குதெண்டு கதைக்கிறாங்கள்... அப்ப தமிழ் என்ன அவ்வளவு பெரிசோ, சமஸ்கிருதத்தை விட... 😏

மற்றது எங்கடையளும் சமஸ்கிருதத்தில பெயர் வைச்சால் இந்தியச் சுற்றுலாவிகளை ஈர்க்கலாம் என்று எண்ணியிருக்கலாம் என்றும்  எண்ணுகிறேன். எல்லாம் வணிக நோக்கமே.

  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nochchi said:

அது ஏன் 'கண்ணகை அம்மன் ஆலயம்' என்று அழைக்காது சமஸ்கிருதப்பெயரில் வழங்கப்படுகின்றது. 

நான் பிறந்த போதே அது தான் பெயர்

அதற்கான காரணத்தை தேடி வாசியுங்கள். நன்றி 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
  • விசுகு changed the title to 500 தூண்களில் மற்றும் 7 கோபுரங்களுடன் பெரும் பொருள் மற்றும் ஆட்செலவில் இலங்கையில் முதன் முதலாக கட்டப்பட்ட புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம். ...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நன்னிச் சோழன் said:

எதில பெயர் வைச்சால் என்ன, பூசை சமஸ்கிருதத்திலை தான் நடக்கப்போகுது!

இப்ப இந்தியாவும் வடக்கில இருக்குதெண்டு கதைக்கிறாங்கள்... அப்ப தமிழ் என்ன அவ்வளவு பெரிசோ, சமஸ்கிருதத்தை விட... 😏

மற்றது எங்கடையளும் சமஸ்கிருதத்தில பெயர் வைச்சால் இந்தியச் சுற்றுலாவிகளை ஈர்க்கலாம் என்று எண்ணியிருக்கலாம் என்றும்  எண்ணுகிறேன். எல்லாம் வணிக நோக்கமே.

தனிப்பட்ட ரீதியில் எனக்கு இவற்றில் உடன்பாடு இல்லை

ஆனால் எந்த வழியிலாவது என் ஊர் நோக்கி பணமும் ஆட்களும் போவதை தட்டி விடுவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
5 minutes ago, விசுகு said:

தனிப்பட்ட ரீதியில் எனக்கு இவற்றில் உடன்பாடு இல்லை

ஆனால் எந்த வழியிலாவது என் ஊர் நோக்கி பணமும் ஆட்களும் போவதை தட்டி விடுவதில்லை. 

சிறப்பு

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நன்னிச் சோழன் said:

 https://fb.watch/lo2qULbWKx/

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
2 minutes ago, விசுகு said:

கோபுரத்தை இன்னும் கொஞ்சம் நெடுத்திருக்கலாம், பிரமாண்டமாய் இருந்திருக்கும். 500 தூண்களுடன், சிறப்புக் கூடியிருக்கும். 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, நன்னிச் சோழன் said:

கோபுரத்தை இன்னும் கொஞ்சம் நெடுத்திருக்கலாம், பிரமாண்டமாய் இருந்திருக்கும். 500 தூண்களுடன், சிறப்புக் கூடியிருக்கும். 

ம்ம்

ஒரு தூணுக்கு 5லட்சம் ரூபாய் படி சேர்த்தார்கள். தூணுக்கு மட்டும் 25 கோடி. 

அத்துடன் 7 கோபுரங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இத்தனை கோடி செலவா? புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகிலான்ட கோடி பிரமாண்ட நாயகிக்கு ஒரு அழகான ஆலயம்........அரோகரா ........!  🙏

சம்பந்தப் பட்டவர்களுக்கு பாராட்டுக்கள் ......! 

பகிர்வுக்கு நன்றி விசுகர் ......! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/6/2023 at 14:57, விசுகு said:

நான் பிறந்த போதே அது தான் பெயர்

அதற்கான காரணத்தை தேடி வாசியுங்கள். நன்றி 

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகிலான்ட கோடி பிரமாண்ட நாயகிக்கு ஒரு அழகான ஆலயம்........அரோகரா ........!  🙏

சம்பந்தப் பட்டவர்களுக்கு பாராட்டுக்கள் ......

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, suvy said:

அகிலான்ட கோடி பிரமாண்ட நாயகிக்கு ஒரு அழகான ஆலயம்........அரோகரா ........!  🙏

சம்பந்தப் பட்டவர்களுக்கு பாராட்டுக்கள் ......! 

பகிர்வுக்கு நன்றி விசுகர் ......! 

ஒருவகையில் பார்த்தால் இப்படிப் பிரமாண்டமான செலவுகள் ஏனென்றபோதும், சிலவகை ஆக்கிரமிப்புகளிற்கு எதிர்வினையாக இதுபோன்றனவும் தேவைபோலவே தோன்றுகிறது. புக்கையூர் மக்களின் ஒன்றிணைந்த முயற்சி தெரிகிறது. பாராட்டுகள்.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nochchi said:

ஒருவகையில் பார்த்தால் இப்படிப் பிரமாண்டமான செலவுகள் ஏனென்றபோதும், சிலவகை ஆக்கிரமிப்புகளிற்கு எதிர்வினையாக இதுபோன்றனவும் தேவைபோலவே தோன்றுகிறது. புக்கையூர் மக்களின் ஒன்றிணைந்த முயற்சி தெரிகிறது. பாராட்டுகள்.

அதே. நன்றி சகோ. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, nochchi said:

ஒருவகையில் பார்த்தால் இப்படிப் பிரமாண்டமான செலவுகள் ஏனென்றபோதும், சிலவகை ஆக்கிரமிப்புகளிற்கு எதிர்வினையாக இதுபோன்றனவும் தேவைபோலவே தோன்றுகிறது. புக்கையூர் மக்களின் ஒன்றிணைந்த முயற்சி தெரிகிறது. பாராட்டுகள்.

இதை ஏன் உலகின் தலைசிறந்த தமிழ் மொழி பல்கலை ஆராச்சி மையமா கட்டி இருக்க கூடாது?
உலக சைவ- கலாச்சார கல்வி கூடமாக கட்டி உலக மக்களுக்கு சைவமதம் பற்றி போதித்து இருக்க முடியாது? 

இதன் ஊடாக புங்கிடுதீவை ஒரு சுற்றுலா நகரமாக மாற்றி 
பல உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பை பெற்று கொடுத்திருக்க முடியும். 

சமயத்துக்கும் தொண்டாக ஆகியிருக்கும் ...

ஏனைய செம்மறி ஆடுகள் எந்த பாதாளம் நோக்கி நகருகிறதோ 
அந்த செம்மறி ஆட்டு கூடத்தில் மணி கட்டிய ஆடாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தண்டி இதில் எந்த 
வேறு எண்ணமும் இருக்கப்போவதில்லை. 

ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு கோவிலையும் வீண் செலவையும் பார்க்கும் போது 
மனசு பொறுப்பதில்லை ........ ஒரு பக்கம் போரால் அழிவுண்டு ஏழையான மக்கள் வாழ்வோடு போராடடம். 

ஒரே ஒரே புத்த கோவிலை கட்டினால் எத்தனை கோவில் இருந்தாலும் ஒரு குழப்ப நிலைக்கும் வரலாற்று திரிப்புக்கும் அது போதுமானது  

  • Like 1
  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Maruthankerny said:

இதை ஏன் உலகின் தலைசிறந்த தமிழ் மொழி பல்கலை ஆராச்சி மையமா கட்டி இருக்க கூடாது?
உலக சைவ- கலாச்சார கல்வி கூடமாக கட்டி உலக மக்களுக்கு சைவமதம் பற்றி போதித்து இருக்க முடியாது? 

இதன் ஊடாக புங்கிடுதீவை ஒரு சுற்றுலா நகரமாக மாற்றி 
பல உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பை பெற்று கொடுத்திருக்க முடியும். 

சமயத்துக்கும் தொண்டாக ஆகியிருக்கும் ...

நன்று, வரவேற்க வேண்டிய சிந்தனை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருக்கும்  சைவ கோவில்களை தக்க வைத்துக்கொண்டு......மருதங்கேணி கூறியது போல் சைவ நன்னெறி கல்விக்கூடங்களையும்,சைவ/தமிழ் ஆராய்ச்சி கூடங்களையும் நிறுவியிருந்தால் தமிழர்களுக்கு ஒரு மைல் கல்லாக இருந்திருக்கும். அத்துடன் எந்த பெரிய கோவில்களாக இருந்தாலும் தமிழில் பூஜைகள் ஆராதனைகளை முன்னெடுக்க ஆவன செய்ய வேண்டும். 

ஏனென்றால் பார்ப்பனர்கள் தான் சாதி மற்றும் சமத்துவ மனித இயல்பு வாழ்க்கைக்கு எதிரிகள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

ஏனென்றால் பார்ப்பனர்கள் தான் சாதி மற்றும் சமத்துவ மனித இயல்பு வாழ்க்கைக்கு எதிரிகள்.

நிச்சியமாக  ...அதன் பிறகே விடுதலை கிடைக்கும்  ......இல்லை அது வேணும் என்றால்    விடுதலை...சுதந்திரம்   வேண்டாம் என்பதாகும்.  

2 hours ago, Maruthankerny said:

இதை ஏன் உலகின் தலைசிறந்த தமிழ் மொழி பல்கலை ஆராச்சி மையமா கட்டி இருக்க கூடாது?
உலக சைவ- கலாச்சார கல்வி கூடமாக கட்டி உலக மக்களுக்கு சைவமதம் பற்றி போதித்து இருக்க முடியாது? 

இதன் ஊடாக புங்கிடுதீவை ஒரு சுற்றுலா நகரமாக மாற்றி 
பல உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பை பெற்று கொடுத்திருக்க முடியும். 

சமயத்துக்கும் தொண்டாக ஆகியிருக்கும் ...

ஏனைய செம்மறி ஆடுகள் எந்த பாதாளம் நோக்கி நகருகிறதோ 
அந்த செம்மறி ஆட்டு கூடத்தில் மணி கட்டிய ஆடாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தண்டி இதில் எந்த 
வேறு எண்ணமும் இருக்கப்போவதில்லை. 

ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு கோவிலையும் வீண் செலவையும் பார்க்கும் போது 
மனசு பொறுப்பதில்லை ........ ஒரு பக்கம் போரால் அழிவுண்டு ஏழையான மக்கள் வாழ்வோடு போராடடம். 

ஒரே ஒரே புத்த கோவிலை கட்டினால் எத்தனை கோவில் இருந்தாலும் ஒரு குழப்ப நிலைக்கும் வரலாற்று திரிப்புக்கும் அது போதுமானது  

வரவேற்க வேண்டிய கருத்துகள்    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kandiah57 said:

நிச்சியமாக  ...அதன் பிறகே விடுதலை கிடைக்கும்  ......இல்லை அது வேணும் என்றால்    விடுதலை...சுதந்திரம்   வேண்டாம் என்பதாகும்.  

பார்ப்பனியன் எனும் ஐயரை தேரில் இருக்க விட்டு......மற்ற சாதிக்காரன் தேர் இழுக்கக்கூடாது என்று புல்டோசர்கள் மூலம் தேர் இழுத்த மதிப்பிற்குரிய இனமெல்லவா என் தமிழினம். :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

பார்ப்பனியன் எனும் ஐயரை தேரில் இருக்க விட்டு......மற்ற சாதிக்காரன் தேர் இழுக்கக்கூடாது என்று புல்டோசர்கள் மூலம் தேர் இழுத்த மதிப்பிற்குரிய இனமெல்லவா என் தமிழினம். :rolling_on_the_floor_laughing:

ஏதோ ஒரு கோவிலில்…. ஆமிக்காரனை வைத்து தேர் இழுத்த படங்களும் வந்தது.
அச்சுவேலியில் உள்ள கோவில் என நினைக்கின்றேன்.
அவனும் தனது சீருடையில்… மேலாடையை கழட்டி விட்டு, பச்சை கால் சட்டையுடன் 
தேர் இழுத்த காட்சி… மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூச்சொரியும் கண்கொள்ளா   காடசி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, தமிழ் சிறி said:

ஏதோ ஒரு கோவிலில்…. ஆமிக்காரனை வைத்து தேர் இழுத்த படங்களும் வந்தது.
அச்சுவேலியில் உள்ள கோவில் என நினைக்கின்றேன்.
அவனும் தனது சீருடையில்… மேலாடையை கழட்டி விட்டு, பச்சை கால் சட்டையுடன் 
தேர் இழுத்த காட்சி… மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

அவனுக்கு உள்ள பயபக்தி எங்கடையளுக்கு இல்லை.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.